1 month 3 weeks ago
யாழில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற வடக்கின் கல்வி அதிகாரிகளுடனான வடக்கின் கல்வி நிலை பற்றிய கலந்துரையாடல். வடக்கு மாகாண கல்வியை எவ்வாறு முன்னேற்றுவது என்பது தொடர்பில் பிரதமர் கலந்துகொண்ட கலந்துரையாடலில் வடக்கு அதிகாரிகள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் வடக்கு மாகாணம் பின் தள்ளப்பட்டமை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில் சில கல்வி உயர் அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தில் பிரதமர் வடக்கு கல்வி நிலை பின்னோக்கி செல்வதற்கு அதிகாரிகளின் அசம்பந்தப் போக்கே காரணம் என குறிப்பிட்ட நிலையில் அதிகாரிகள் இவ்வாறு நித்திரை செய்துள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம்.com
1 month 3 weeks ago
பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது புலிகள் முஸ்லிம்கள் போல் வந்து கொலைசெய்தனராம். புலிகள் ஏன் அப்படி வரவேண்டும்? ஏன் முஸ்லிம்களை கொல்ல வேண்டும்? புலிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் என்ன பிரச்சனை? சிரியா முஸ்லிம்களுக்கும் சுதேச முஸ்லிம்களுக்கும் இடையிலேயே பிரச்சனை. அவர்களுடைய கொள்கைகளை பின்பற்றாதவர்கள் முஸ்லிம்களே இல்லை என்று பிரச்சாரம் செய்து, அந்த மக்களை வற்புறுத்தி, துன்புறுத்தியவர்கள் அவர்களே. 2020 அப்துல் பாஹிர்என்பவர் காணாமற் போய் விட்டார், புலிகள் அவரை கடத்தி விட்டார்கள் என்று வதந்தியை பரப்பி முறுகல் நிலையை ஏற்படுத்தினர். அவரை தேடி போலீசார் நடத்திய தேடுதலில் அவர் தனது வீட்டிலே சாவகாசமாக மறைந்து இருந்திருக்கிறார். இவர் ஈ பி டி யை சேர்ந்தவர். பொலிஸாரின் விசாரணையில், தான் வெளிநாடு செல்வதற்கு பணம் தேவைப்பட்டதாகவும் இந்த நாடகத்திற்கு சம்மதித்தால் பணம் தருவதாக கூறப்பட்டதாகவும் அதற்கு தான் சம்மதித்தே இந்த வேலையை செய்ததாகவும் கூறியிருக்கிறார். இதன் பின்னணியில் ஈ பி டி பி, முஸ்லீம் குழு, இராணுவ புலனாய்வு இருந்ததாக கூறப்படுகிறது. ஓட்ட மாவடியில் மணாளன் மகேசன் எனும் தமிழர் கொல்லப்பட்டு முஸ்லீம் பிரதேசத்தில் போடப்பட்டார், அதே நேரம் குசேன் உயிரற்ற உடல் வீசப்பட்டதற்கு கப்டன் ஹைஜி என்பவருக்கு சம்பந்தம் என்றும், நிந்தவூர் விடுதலைப்புலி உறுப்பினர் பூவண்ணன் வெட்டப்பட்டு முஸ்லீம் பிரதேசத்தில் ஈ பி டி பியால் போடப்பட்டதும் முஸ்லீம், தமிழர் கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி வேண்டுமென்றே திணித்து புலிகளை வலிந்து இழுத்து முஸ்லிம்களை எதிரிகளாக்கினர். இதற்கு முஸ்லிம் ஊர்காவற் படை, ஈ பி டி பி, இராணுவ புலனாய்வுமே காரணம். நல்ல வேளையாக வடக்கிலிருந்து உயிரிழப்பில்லாமல் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையால் இந்த கலவரம் அங்கு தோன்ற வாய்ப்பிருக்கவில்லை. இல்லையேல் அங்கும் பல நாடகங்கள் அரங்கேறியிருக்கும். தமிழரின் காணிகளை பறித்து, முஸ்லீம் வியாபார தலங்களை அமைத்தேன், பேருந்து தரிப்பிடங்களை அமைத்தேன், எதிர்ப்பு தெரிவித்த நீதிபதியை எனது அதிகாரத்தை கொண்டு மாற்றினேன், கிழக்கு முஸ்லீம் மாகாணமாக மாற்ற வேண்டுமென்றால் ஒரு முஸ்லீம் முதலமைச்சராக வேண்டுமென்று ஹிஸ்புல்லா சவால் விட்டார். இப்போ கக்ஹீம் கூறுகிறார். அப்படியிருக்க முஸ்லிம்கள் நிலங்களை இழந்தனராம் நம்பக்கூடியதாகவா இருக்கிறது? வி. முரளிதரன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்கள் இருபத்திநான்கு மணித்தியாலங்களுக்குள் வெளியேற வேண்டுமென கட்டளை இட்டபோது, யாழ்ப்பாணத்தாரின் வியாபார நிலையங்களை முஸ்லிம்களே குறைந்த விலையில் பெற்றுக்கொண்டனர். தமிழரை விரட்டிவிட்டு அவர்களின் நிலங்களை அடாத்தாக பிடித்து குறைந்த விலையிலும் பயமுறுத்தியும் பிடித்துள்ளனர். இவர்களுடன் எந்தக்காலத்திலும் தமிழர் இணைந்து வாழ முடியாது. தமிழர் இவர்களை கழட்டி விட்டால், இவர்களை சிங்களம் கூட மதிக்காது.
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
🎶 🎵 🎵 🎵 சின்னத் தம்பி...சின்னத் தம்பி.... நித்திரையோ... நித்திரையோ.... 🎵 🎵 🎵 மணி அடிக்கிறது, எழும்புங்கோ... எழும்புங்கோ... 🎶 🎵 🎵 😂 🤣
1 month 3 weeks ago
நலமுடன் நாம் வாழ இவர் சொல்வதையும் சும்மா கேட்டு வைப்போம் ....... ! 🙏
1 month 3 weeks ago
(மதினாவில் மார்க்கக்கல்வியை திறன்படக்கற்று, மௌலவியாக வெளியேறி அரசியலுக்குள் தள்ளப்பட்ட ஓர் ஊடகவியலாளனின் அரசியல் வரலாறு) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மதீனாவுக்கான இணைப்பாளராக 1989ம் ஆண்டு மறைந்த தலைவர் அஷ்ரபினால் முபாறக் அப்துல் மஜீத் நியமிக்கப்பட்டார். அது முதல் அக்கட்சியை அரபு நாடுகளில் உள்ள இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். அத்துடன் "முஸ்லிம் காங்கிரஸ்" என்ற பத்திரிகையை அம்மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி அதற்கு கணிசமான சந்தாக்களை சேர்த்துக்கொடுத்தார். அந்த காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு தலைமை காரியாலயம் வாடகை கட்டிடத்தில் இயங்கியதாலும் அங்கு பணி புரிவோருக்கு சம்பளம் கொடுக்கவும் கஷ்டமாக உள்ளது என்ற தலைவரின் கூற்று காரணமாக சவூதியில் உள்ள முஸ்லிம்களிடையே பாரிய நிதித்தேடலை முபாறக் அப்துல் மஜீத் மௌலவி முயற்சித்தார். அதன் பலனாக பல லட்சம் நிதி சேகரித்து கட்சிக்கு அனுப்பினார். இவ்வாறு இருக்கும் நிலையில் 1990ம் ஆண்டு அஷ்ரப் ஆதரித்து ஜனாதிபதியான, ஆர். பிரேமதாசாவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டு முழு கிழக்கு மாகாண நிர்வாகத்தையும் புலிகளிடம் ஒப்படைத்தார். பிரேமதாச. புலிகள் தாம் விரும்பியவாறு செயற்படவும் விரும்பியவர்களை கைது செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. புலிகளின் விடயத்தில் பொலிசாரோ, இராணுவமோ தலையிடக்கூடாது என்று கட்டளையிடப்பட்டிருந்தது. இத்தனைக்கும் பிரேமதாசவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய தீர்க்கமான வாக்குகளை கிழக்கு முஸ்லிம்களிடம் பெற்றுக்கொடுத்தது முஸ்லிம் காங்கிரசே. அக்கட்சி ஜனதிபதியின் பங்காளி கட்சியாக, அஷ்ரபின் ஆலோசனைபடி நடக்கும் பிரேமதாசவின் துணையாக இருந்தது. இந்த நிலையில் கல்முனையில் பாரிய முகாம் அமைத்திருந்த புலிகள் முஸ்லிம் இளைஞர்களை கைது செய்யத்தொடங்கினர். இதனை அஷ்ரப் வெளிப்படையாக கண்டித்து அரசியல் செய்தாரே தவிர தனது அபிமானத்துக்குரிய பிரேமதாசவை அணுகி இதனைக்கட்டுப்படுத்த முணையவில்லை. இந்த நேரத்தில் அன்றைய ஜனாதிபதி பிரேமதாசவின் பாதுகாப்பு அமைச்சரான ரஞ்சனிடம் முஸ்லிம்களின் கைது பற்றி ஊடகங்கள் முறையிட்ட போது "காட்டுக்குள்ளிருந்து வந்த புலிகள் புல்லையா திண்பது" என கூறி முஸ்லிம்களின் கைதையும் சித்திரவதை செய்யப்படுவதையும், பணம் பறித்த பின் விடுவதையும் நியாயப்படுத்தினார். இவருக்கெதிராக பிரேமதாச மூலம் அஷ்ரப் நடவடிக்கை எடுக்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸின் தேவையை கிழக்கு முஸ்லிம்களுக்கு உணர்த்துவதற்காக முஸ்லிம் காங்கிரஸ் இதனை திட்டமிட்டு மறை முகமாக ஆதரவு வழங்குகின்றதோ என்ற சந்தேகம் முபாறக் மௌலவிக்கு ஏற்பட்டது. இந்த அசாதாரண சூழலில் முபாறக் மௌலவியின் சகோதரர் அக்ரம் ரிழா புலிகளால் கைது செய்யப்பட்டு கல்முனை முகாமில் அடைக்கப்பட்டார். சுமார் 40 நாட்கள் அவர் அடைக்கப்பட்டிருந்தார். அவரை விடுவித்து தரும்படி சுமார் மூன்று தடவைகள் அவரின் தந்தை வை. அப்துல் மஜீத் மௌலவி தலைவர் அஷ்ரபை சந்திக்க கொழும்பு சென்று வந்தார். ஆனாலும் அஷ்ரப் அவரை கணக்கில் எடுக்கவில்லை என்றும் இதையெல்லாம் பார்க்கவா நான் இருக்கிறேன் என சொன்னதாகவும் மௌலவி தன் பிள்ளைகளிடம் சொல்லியிருந்தார். 40 நாட்களில் புலிகள் கல்முனை பொலிசாரை தாக்கியதை தொடர்ந்து ராணுவத்துக்கும் புலிகளுக்குமிடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதனால் புலிகள் கல்முனை முகாமை கைவிட்டு தாம் பிடித்து வைத்திருந்த முஸ்லிம்களையும் எடுத்துக்கொண்டு மட்டக்களப்பு பக்கம் தப்பி ஓடினர். அவ்வாறு ஓடும் போது ஓரிரு முஸ்லிம் இளைஞர்களை அவர்களின் உறவினர் மூலம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு புலிகல் விடுவித்தனர். குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை செயற்பாட்டாளர்கள் மூலம். இந்த உதவி அப்துல் மஜீத் மௌலவிக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் கல்முனையில் இருந்து கொண்டு செல்லப்பட்டவர்கள் மட்டக்களப்பு முகாமில் வைக்கப்பட்டிருப்பதாக வெளிவந்த வாய்த்தகவலை நம்பிய மௌலவி, காத்தான்குடியில் உள்ள தனது நண்பர் ஒருவர் மூலம் தனது மகனை விடுவிக்கலாம் என எண்ணி கொழும்பிலிருந்து வந்து கல்முனை ஊடாக காத்தான்குடி போன வாகனத்தில் ஏறி பயணமானார். இடையில் குருக்கள் மடம் என்ற இடத்தில் அந்த வாகனத்தொடர் மறிக்கப்பட்டு அப்துல் மஜீத் மௌலவி உட்பட சுமார் 125 முஸ்லிம்கள் தமிழ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். அவர்கள் எவரின் உடல்களும் இன்று வரை கிடைக்கவில்லை. அதே போல் புலிகளால் பிடித்து செல்லப்பட்ட இன்றைய உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீதின் சகோதரருக்கும் என்ன நடந்தது என்று இன்று வரை தெரியவில்லை. இதுவெல்லாம் தான் நம்பிய முஸ்லிம் காங்கிரஸ் இந்தவிடயத்தில் உதவாததே காரணம் என்பதை முபாறக் மௌலவி புரிந்து கொண்டார். அஷ்ரப் முயற்சி செய்திருந்தால் அந்த 40 நாட்களுள் புலிகளுடன் தேனிலவு கொண்டாடிய பிரேமதாச மூலம் அவர் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நிச்சயம் விடுவிக்கப்பட்டிருப்பார் என்று தெரிந்தது. முஸ்லிம் சமூகத்துக்கான விடுதலைக்குரல் என நினைத்து தான் உதவி செய்த முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் இளைஞர்கள் கைதுக்கு மறைமுகமாக துணை போனதன் மூலம் முஸ்லிம்களை உணர்ச்சியூட்டி அக்கட்சி, தனக்குரிய வாக்குகளை அதிகரிக்க முயற்சி செய்துள்ளது என்பதை முபாறக் மௌலவி புரிந்து கொண்டார். புலிகள் முஸ்லிம்கள் மீது பாய்ந்ததை பிரேமதாச மூலம் தடுக்க வாய்ப்பு இருந்தும் தனது அரசியல் நலனுக்காக முஸ்லிம் இளைஞர்களை பலிகொடுத்தமை மூலம் முஸ்லிம் காங்கிரஸ் பிழையான பாதையில் போகிறது என்பது தெளிவாக புரிந்தது. ஆனாலும் முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சி தேவை என்பதை முபாறக் மௌலவி புரிந்திருந்தார். அதனால் அக்கட்சியிடன் இணைந்து செயற்படுவதை தவிர்த்து அக்கட்சிக்கு ஆதரவாக தொடர்ந்தும் பல பத்திரிகைகளில் எழுதி வந்தார். அஷ்ரபின் நல்ல விடயங்களை பாராட்டுவதுடன் தவறுகளையும், சமூக தேவைகளையும் சுட்டிக்காட்டி அவருக்கு கடிதங்கள் எழுதினார். 1993ம் ஆண்டு சேகு இஸ்ஸதீன் போன்றோர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டு "ஸ்ரீ லங்கா முஸ்லிம் கட்சி" என்ற கட்சியை ஆரம்பித்த போது, இது முபாறக் மௌலவிக்கு பிடிக்கவில்லை. காரணம் முஸ்லிம் காங்கிரஸ் என்ற தனிக்கட்சி முஸ்லிம்களுக்கு போதும் என கருதினார். அதனால் முஸ்லிம் கட்சிக்கு எதிராக இன்னொரு கட்சியை ஆரம்பித்து அதன் மூலம் ஊடக அறிக்கை விடுவதன் மூலமே அதனை ஊடகங்கள் ஏற்றுக்கொள்ளும் என்ற யதார்த்தத்தை புரிந்தார். அத்துடன் முஸ்லிம் காங்கிரஸின் உயர்சபை, பிரதிநிதிகள் ஊழல் நிறைந்தவர்களாக இருந்ததால் இந்த சமூகத்துக்கு உலமாக்கள் தலைமையிலான அரசியல் கட்சி அவசியம் என்பதை முபாறக் அப்துல் மஜீத் புரிந்தார். அதனால் 1993 ம் ஆண்டு உலமாக்கள் தலைமையிலான "முஸ்லிம் மக்கள் கட்சி" என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்தார். இக்கட்சியின் பிரதான நோக்கம் மு.காவுக்கு பக்க பலமாக இருப்பதும் அக்கட்சியை நெறிப்படுத்துவதும், உலமாக்கள் தலைமையிலான அரசியலை ஊக்குவிப்பதுமாகவே இருந்தது. அதன் பின் 1994ம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் சந்திரிக்கா அரசாங்கத்தை கொண்டு வந்து தலைவர் அஷ்ரப், கப்பல், கப்பற்துறை புனர்வாழ்வு அமைச்சரானார். அவர் அமைச்சராகி ஒரு வருடம் ஆகு முன் அவரின் கப்பல் அமைச்சை பிரதமர் சந்திரிக்கா பறித்தெடுத்தார். இதற்கு காரணம் கப்பல் அமைச்சில் ஊழல் என்று சொல்லப்பட்டது. அப்படியல்ல ஒரு முஸ்லிமிடம் நாட்டின் முக்கியமான கப்பல் அமைச்சு இருக்க கூடாது என்ற இனவாதிகளின் கருத்தை சந்திரிக்கா ஏற்றார் என்ற கருத்தும் நிலவியது. எது எப்படியிருந்த போதும் சந்திரிக்காவை பிரதமராக்கிய அஷ்ரபை இவ்வாறு அவமதித்ததை முபாறக் மௌலவியால் ஜீரணிக்க முடியவில்லை. கப்பல் அமைச்சை பறித்த போது அனைத்து அமைச்சுக்களையும் தூக்கி வீசிவிட்டு வரும் வீரத்தளபதியாகவே அவர் தலைவரை பார்த்தார். ஆனால் அவர் இது பற்றி எந்த எதிர்ப்பும் இல்லாமல் அமைதியானது முபாறக் மௌலவிக்கு பிடிக்கவில்லை. பதவிகளுக்கு மு.கா அடிமையாகிவிட்டதாகவே நினைத்தார். இந்த நிலையில் 1995ம் ஆண்டு ஜனதிபதி தேர்தல் வந்தது. 1995ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அன்றைய பிரதமர் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார். மு.கா தலைவர் அஷ்ரப் அவரது அமைச்சரவை அமைச்சராக இருந்ததால் சந்திரிக்காவுக்கே தமது ஆதரவு என அறிவித்தார். இந்த திடீர் அறிவிப்பு தலைவர் அஷ்ரபின் இமேஜுக்கு மாற்றமானதாகவே முபாறக் அப்துல் மஜீத் கண்டார். அவர் சந்திரிக்காவை பிரதமர் ஆக்கியிருந்தும் கப்பல் அமைச்சை பறித்த சந்திரிக்கா விடயத்தில் மீண்டும் தவறு செய்வதாகவே உணர்ந்தார். மீண்டும் கப்பல் அமைச்சை எடுத்துக்கொண்டு ஆதரவளித்திருக்கலாம் என்பதே முபாறக் மௌலவியின் நிலைப்பாடு. அஷ்ரப் அமைச்சரானது முதல் அவருக்கும் முபாறக் மௌலவிக்கும் எந்த நேரடி தொடர்பும் இருக்கவில்லை. அமைச்சரான பின் அவரை எதிர்த்த பலர் அவரோடு ஒட்டிக்கொண்டதால் அமைச்சர் அழைக்காமல் அவரை சந்திக்க செல்வதில்லை என்ற வைராக்கியம் காரணமாக அவரை நேரடியாக கண்டு தனது கருத்தை சொல்ல முடியாத நிலை. அப்போதெல்லாம் கைபேசி இல்லாத காலம். அதனால், இந்த ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்காவுக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க முடியாது என்றும் சந்திரிக்காவை முஸ்லிம்கள் நம்ப முடியாது எனவும் முபாறக் அப்துல் மஜீத் ஊடக அறிக்கை வெளியிட்டார். பிரபல தமிழ் பத்திரிகைக்கு இவ்வறிக்கை அனுப்பப்பட்ட போது அதன் ஆசிரியர் அல்லது பிரதானி அந்த அறிக்கையை தலைவர் அஷ்ரபின் பார்வைக்கு அனுப்பியுள்ளார். சில நாட்களில் அஷ்ரபின் கல்முனை இணைப்பாளர் மசூத் ஆசிரியர் முபாறக் மௌலவியின் கல்முனை வர்த்தக நிலைய தொலை பேசிக்கு தொடர்பு கொண்டு, இப்படி ஒரு அறிக்கையை நீங்கள் விட்டுள்ளீர்களாம், என்ன காரணம் என தலைவர் உங்களிடம் கேட்க சொன்னார் என்றார். "தலைவருக்கு என்னை தெரியும், அவரது காரியாலயத்தில் இருந்து கூப்பிடு தொலைவில் உள்ள எனது வீடும் தெரியும். அதனால் என்னை நேரடியாக சந்திக்க சொல்லுங்கள் நான் அவரிடம் காரணத்தை கூறுகிறேன்" என்றார் முபாறக் அப்துல் மஜீத். இது விடயம் தலைவரிடம் சொல்லப்பட்டிருக்கலாம். ஆனாலும் அவர் தொடர்பு கொள்ளவில்லை. அத்துடன் முபாறக் மௌலவியின் அறிக்கை பத்திரிகையில் வெளிவராமல் தடுக்கப்பட்டது. தன் கடமை சொல்வது மட்டுமே என முபாறக் மௌலவி அத்தோடு விட்டு விட்டார். ஆனாலும் அறிக்கையில் இருந்த விடயம் கல்முனை முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கு தெரிந்திருந்தது. அந்த தேர்தலில் யாருக்கும் வாக்களிப்பதில்லை என முடிவு செய்தார் முபாறக் மௌலவி. அதன் பின் முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவாக செயற்படுவதை முபாறக் மௌலவி குறைத்துக்கொண்டாலும் அக்கட்சியை விட்டும் விலகவில்லை. ஆனாலும் முஸ்லிம் மக்கள் கட்சி என்ற பெயரில் அஷ்ரப் பற்றியும் முஸ்லிம் காங்கிரஸின் தவறான பாதைகள் பற்றியும் விமர்சிக்கத்தொடங்கினார். இது மு.காவினருக்கு அதிருப்தியை தந்தாலும் அறிக்கையில் உள்ள நியாயத்தை புரிந்திருந்தனர். இதனை மௌலவியை கொழும்பில் சந்தித்த மருதூர் கணி பின்வருமாறு அவரிடம் கூறினார், உங்களின் அறிக்கைகளுக்கு நான் பதில் அளிக்க நினைப்பதுண்டு. ஆனால் அதில் பல நியாயங்கள் இருப்பதால் பதில் அறிக்கை விடவில்லை என்றார். இதன் மூலம் முஸ்லிம் மக்கள் கட்சியின் தேவை உறுதிப்பட்டுள்ளதுடன் அக்கட்சி பெயரில் வெளிவரும் அறிக்கைகள் முஸ்லிம் காங்கிரசை புடம் போடுகிறது என்பது தெரிந்தது. சந்திரிக்காவை நம்ப முடியாது என்று முபாறக் அப்துல் மஜீத் 1995ம் ஆண்டு சொன்னது 2000ம் ஆண்டளவில்தான் தலைவர் அஷ்ரபுக்கு சந்திரிக்கா பற்றி தெரிந்து கொண்டார். கடைசியில் மக்காவுக்கு சென்று "அந்த 52 நாட்கள்" என்ற புத்தகத்தை எழுதினார். 2000ம் ஆண்டு தலைவர் அஷ்ரபுக்கு ஜனாதிபதி சந்திரிக்கா மன உளைச்சலை கொடுத்தமை வேதனையான விடயம். அது மட்டுமின்றி 1994ம் ஆண்டு சந்திரிக்காவுடன் இணையும் போது முஸ்லிம்களின் எந்த தேவையையும் முன் வைத்து அஷ்ரப் ஒப்பந்தம் பண்ணவில்லை என்பதை அந்த நூலில் அவர் தெரிவித்திருந்ததன் மூலம் மு.கா பிழையான வழியில் செல்கின்றது என்ற தனது குற்றச்சாட்டு சரியானது என்பதை முபாறக் மௌலவி புரிந்து கொண்டார். தான் சமூகத்தளபதியாக மிகவும் கனவு கண்ட துரோணர் தன் கண் முன்பே துவண்டு போனதாக கண்டார். ஆனாலும் அஷ்ரப் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக இன்னொரு முஸ்லிம் கட்சி தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார். இதன் காரணமாகவே தனது முஸ்லிம் மக்கள் கட்சியை பதிவு செய்ய அவர் ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. அதனால் 1999ம் ஆண்டு அஷ்ரபால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணி கட்சியின் முதன்மை அங்கத்தவராகவும் இணைந்து கொண்டார். அதே போல் 2000ம் ஆண்டு அஷ்ரபின் மறைவின் பின் நடை பெற்ற பொதுத்தேர்தலில் மு.காவுக்கே முபாறக் அப்துல் மஜீத் தலைமையிலான முஸ்லிம் மக்கள் கட்சி பகிரங்கமாக ஆதரவளித்தது. தலைவரின் மரணத்தை தொடர்ந்து ரவூப் ஹக்கீம் தலைவராக நியமிக்கப்பட்ட போது முஸ்லிம் காங்கிரசின் இணைப்பாளர் என்ற வகையில் ஹக்கீம் தலைமைத்துவத்தை முபாறக் மௌலவி ஏற்றுக்கொண்டு ஹக்கீமுக்கு வாழ்த்து தெரிவித்து கவிதையும் எழுதினார். இது நவமணி பத்திரிகையிலும் வெளி வந்தது. ஹக்கீம், பேரியல் கூட்டுத்தலைமை பிரச்சினை வந்த போது மு.கா கட்சிக்கு ஒரே தலைமைதான் நல்லது என்பதையும் ஹக்கீமை தலைவர் ஆக்கும்படியும் முதலில் பகிரங்கமாக அறிக்கை விட்டது முபாறக் மௌலவி மட்டுமே. ஹக்கீம் மு.காவின் தனித்தலைமையாக நியமிக்கப்பட்ட பின் அவருடைய நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படத்தொடங்கியது. சந்திரிக்காவின் அமைச்சரவையில் இருந்து கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட தொடங்கினார். இந்த சூழ் நிலையில் மாவனல்லை கலவரம் ஏற்பட்டது. மிக இலகுவாக அக்கலவரத்தை கட்டுப்படுத்த முடியுமாக இருந்தும் ஒரு வாரத்துக்கு அக்கலவரம் நடக்க சந்திரிக்கா உதவினார். அப்போதும் ஹக்கீம் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்யவில்லை. பின்னர் சில மாதங்களில் ஹக்கீம் அமைச்சரவை உரையாடல்களை ஐ தே கவிடம் கூறுகின்றார் என குற்றம் சாட்டி ஹக்கீமின் அமைச்சர் பதவியை சந்திரிக்கா பறித்தார். என்னதான் இருந்தாலும் இதை முஸ்லிம் சமூகம் ஏற்கவில்லை. முபாறக் அப்துல் மஜீத் ஹக்கீம் சார்பாக நின்றார். அஷ்ரபுக்கே துரோகம் செய்த சந்திரிக்கா ஹக்கீமுக்கு செய்தது பெரிய விசயமில்லை. ஆனாலும் ஹக்கீம் தனித்துவமாக செயற்படாமல் ஐ தே க சார்பாக இருப்பது ஏன் என்றும் அப்போது புரியவில்லை. ஹக்கீமை அமைச்சரவையிலிருந்து நீக்கியதன் காரணமாக பாராளுமன்றத்தில் அரச தரப்பு எண்ணிக்கை குறைந்ததால் சந்திரிக்கா பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவித்தார். அத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் 10 க்கு மேற்பட்ட உறுப்பினரை பெற்று ஐ தே க அரசு வர உதவியது. ஐ தே க அரசாங்கம் உடனடியாக விடுதலைப்புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. 2002ம் ஆண்டு ஐ தே க தலைமையிலான இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் நேருக்கு நேர் ஆரம்பமாகின. எந்த ஆட்சியிலும் முன்னெடுக்கப்படாத அளவு பேச்சுவார்த்தைகள் வேகமாக ஆரம்பிக்கப்பட்டன. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், அதாவுள்ளா உட்பட அக்கட்சியின் உயர் மட்ட தலைவர்கள் வடக்குக்கு சென்று பிரபாகரனை சந்தித்து புரியாணி சாப்பிட்டனர். அத்துடன் திரும்பியிருந்தால் பரவாயில்லை, முஸ்லிம்கள் இந்த நாட்டின் ஒரு குழு என ஹக்கீம் பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்தார். நாட்டில் சுமார் 25 லட்சம் தமிழ் மக்கள் வாழ்ந்த நிலையில் சுமார் 15 லட்சம் முஸ்லிம்களை ஒரு குழு என ஹக்கீம் ஏற்றுக்கொண்டது ஏன் என்ற பலமான கேள்வி எழுந்தது. இதனை முபாறக் மௌலவி கடுமையாக விமர்சித்தார். ஆனாலும் நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதால் அதன் போக்கை கவனித்தார். அதைத்தொடர்ந்து ஒஸ்லோவில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்போவதான செய்திகள் வெளி வந்தன. இங்குதான் பிரச்சினையே ஆரம்பித்தது. இனப்பிரச்சினை என்பது இந்த நாட்டில் முப்பரிமாணம் கொண்டது. ஒரு காலத்தில் தமிழ், சிங்களம் என்றிருந்த போதும் பின்னர் போராட்ட இயக்கங்களால் முஸ்லிம்கள் குறிவைக்கப்பட்டதால் இந்த நாட்டின் மூன்றாவது தேசிய இனம் முஸ்லிம்கள் என்பதை தமிழ் போராட்ட இயக்கங்கள் உறுதிப்படுத்தியிருந்தன. இதனை வலியுறுத்தும் வகையில் விடுதலைப்புலிகள் வட மாகாண முஸ்லிம்களின் அனைத்து உடமைகளையும் பறித்துக்கொண்டு வெளியேற்றியதால் முஸ்லிம்கள் தனியான தேசிய இனம் என்பது நிரூபிக்கப்பட்டிருந்தது. இதனால் ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் முஸ்லிம்கள் மூன்றாவது தரப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்ற குரல்கள் முஸ்லிம் சமூகத்துள் ஒலித்தன. அந்த நேரம் முஸ்லிம் காங்கிரஸ் 11 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்ததால் அக்கட்சி சார்பில் ரவூப் ஹக்கீம் மட்டுமே கெபினட் அமைச்சராக இருந்தார். அதனால் அவர் முஸ்லிம் தனித்தரப்புக்கு தலைமை தாங்க வேண்டும் என்பது முழு சமூகத்தின் கருத்தாக இருந்தது. தனித்தரப்பின் அவசியம் பற்றியும் தனித்தரப்பாக கலந்து கொண்டால்த்தான் இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களுக்குரிய தீர்வை பெற முடியும் என முபாறக் மௌலவி, ஹக்கீமுக்கு கடிதம் எழுதினார். பேச்சுவார்த்தைக்கு செல்லும் திகதியும் வந்தது. ஆனால் ஹக்கீம் முஸ்லிம் தனித்தரப்பாக இன்றி, தான் அரச தரப்பாக செல்வதாக ஊடகங்களுக்கு அறிவித்தார். இது பாரிய சமூகத்துக்கு அதிர்ச்சியை கொடுத்தது ஹக்கீம் ஐ தே கவின் உறுப்பினராக இருந்தால் அவர் அரச தரப்பாக கலந்து கொள்வதில் நியாயம் உண்டு. ஆனால் முஸ்லிம்களின் ஒரே கட்சியின் தலைவராக இருக்கும் நிலையில் அச்சமூகத்தின் தலைவராக கலந்து கொள்ளாமல் அரச தரப்பு வாலாக அவர் கலந்து கொள்வதன் பின்னால் நிச்சயம் முஸ்லிம்களுக்கெதிரான சதி இருப்பது புரிந்தது. இதனை பிழை என சுட்டிக்காட்டக்கூடிய வகையில் முஸ்லிம்களின் வாக்குகளை கொண்ட இன்னொரு முஸ்லிம் கட்சி இல்லாமையின் கைசேதம் அப்போதுதான் புரிந்தது. ஹக்கீம் மிகப்பெரிய தவறை தெரிந்து கொண்டே செய்கிறார் என்பதை முபாறக் மௌலவி புரிந்து கொண்டார். இதன் பின்னால் ஐ தே க, புலிகள், சர்வதேசம் என ஒருங்கிணைந்த சதி இருப்பது தெரிந்தது. ஹக்கீம் அவற்றோடு இணைந்து திட்டமிட்டே தனித்தரப்பை மறுத்து, அரச தரப்பாக கலந்து கொண்டு முஸ்லிம்களின் இனத்துவ அடையாளத்தை அழிக்க துணை போகிறார் என்பது தெரிந்தது. இந்த சூழ் நிலையில் கிழக்கு மாகாண உலமாக்களின் மாநாடு காத்தான்குடியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முபாறக் அப்துல் மஜீத் மௌலவி உரையாற்றும் போது ஹக்கீம் தனித்தரப்பாக கலந்து கொள்ளாமல் அரச தரப்பாக கலந்து கொண்டதன் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு துரோகம் செய்து விட்டார் என தெரிவித்தார். இக்கருத்தை பெரும்பாலான உலமாக்கள் அப்போது ஏற்கவில்லை. அப்போது முபாறக் மௌலவியின் கருத்தை எதிர்த்த உலமாக்கள் பலர் பல வருடங்களின் பின் அவர் சொன்னது உண்மை என ஏற்றுக்கொண்டனர். உலமா கட்சியின் வரலாறு என்பது முஸ்லிம் மக்கள் கட்சி என்றே ஆரம்பிக்கப்பட்டது. முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக இல்லாமல் அக்கட்சியை நெறிப்படுத்தும் கட்சியாகவே முதலில் இயங்கியது. மு.காவின் தலைமையினதும் உறுப்பினர்களின் தவறுகளையும் சுட்டிக்காட்ட அதன் உறுப்பினர்கள் பெரிதும் அச்சப்பட்டனர். எங்கே தமக்கு தலைவரின் கடாட்சம் கிடைக்காமல் போய் விடுமோ என்று அஞ்சினர். முபாறக் மௌலவி முஸ்லிம் காங்கிரசின் இணைப்பாளராக இருந்த போதும் அதன் உயர் பீட உறுப்பினர் இல்லை என்பதால் அவரால் தலைமைக்கு அனுப்பப்படும் ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. இதுவும் முஸ்லிம் மக்கள் கட்சியை ஆரம்பிப்பதற்கான காரணமாகும். இன்னொரு முஸ்லிம் கட்சியின் அறிக்கை வருவதன் மூலம் எங்கே கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வந்து விடுமோ என்ற அச்சத்தில் மு.கா, மக்களுக்கு சேவை செய்யும் என்பதற்காக முஸ்லிம் மக்கள் கட்சியை முபாறக் மௌலவி ஆரம்பித்து, அதனை வெறும் அறிக்கை அரசியலுக்கு மட்டும் பாவிக்கும் கட்சியாகவே செயற்படுத்தி வந்தார். அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் பேசப்பயந்த பல விடயங்களை முஸ்லிம் மக்கள் கட்சி கொண்டு வந்தது. பத்திரிகைகளில் வெளிவந்த மு. ம. கட்சியின் அறிக்கைகள் சில கீழே தரப்படுகிறது. 2001ம் ஆண்டு முபாறக் அப்துல் மஜீத் தலைமையிலான முஸ்லிம் மக்கள் கட்சியின் ஆலோசனை. அரசியலில் வெறும் பார்வையாளராக அல்லது எடுபிடியாக இருக்காமல் தன் கருத்தை நேரடியாக சொல்லியிருந்தார். அக்கருத்துக்களை முஸ்லிம் காங்கிரஸ் கேட்டிருந்தால் முஸ்லிம் சமூகம் மிகப்பெரும் நன்மைகள் பெற்றிருக்கும். பேரின கட்சிகளுடன் மு.கா. செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் எழுத்து மூலம் இருக்கவேண்டும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் மக்கள் கட்சி கடந்த காலங்களில் தேர்தல் கூட்டுகளின் போது வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் பேரின கட்சிகளுடன் கூட்டு வைத்தது போன்ற தவறுகளை இனியும் செய்யக்கூடாதென முஸ்லிம் மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது . மறைந்த மு.கா. தலைவர் அஷ்ரப் இலங்கை முஸ்லிம்களின் தனித்துவ அரசியலின் தந்தை என்பதிலும், மிக நுட்பமான அறிவு படைத்த மாமனிதர் என்பதிலும் கருத்து வேறுபாடு இருக்க முடியாதெனினும் அத்தகைய சிறப்பு மிக்க தலைவர் விட்ட சில அரசியல் தவறுகள் போன்று இன்றைய தலைமைத்துவமும் தவறிழைத்து விடக்கூடாது . 1994 ஆம் ஆண்டு சந்திரிகா அஷ்ரப் எனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மு.கா. வுக்கும் பொதுசன முன்னணிக்கும் இடையில் கூட்டு ஏற்பட்டது . இதற்கான ஒப்பந்தம் எழுத்து மூலம் உருவாக்கப்பட்டு ஒப்பமிடப்பட்டதா ? அவற்றில் என்னென்ன அம்சங்கள் இருந்தன என்பன பற்றி குறைந்தது மு.கா அங்கத்தவர்களிடையேயாவது பகிரங்கப்படுத்தப்படவில்லை. இது தலைவர் அஷ்ரப்பினால் விடப்பட்ட முதல் தவறாகும். அதன் பின்னர் ஆட்சி அமைக்கப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே தலைவருக்கு வழங்கப் பட்டிருந்த அமைச்சுப் பதவிகளில், கப்பல் பறி முதல் செய்யப்பட்ட போது இதற்கு எதிராக தலைவர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை . குறைந்தது தான் மட்டுமாவது எதிரணியில் உட்காரப் போவதாக அரசை பயமுறுத்தி இருக்கலாம் . தனக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுப்பதவியில் சில பறி போன பின்பும் அவர் அரசுக்கும் ஜனாதிபதித் தேர்தலில் சந்திரி காவின் வெற்றிக்கும் உழைத்ததானது பேரினவாதிகளைப் பொறுத்தவரை மு.கா வையும் அதன் தலைமைத்துவத்தையும் சிறுமைப்படுத்திக்காட்டியது . அதன் பின் 2000 ஆம் ஆண்டு அமைச்சர் பௌசியுடனான மோதலில், அவர் பேசியது தவறாக இருந்தும் பொதுசன முன்னணி முக்கியஸ்தர்கள் நீதியாக சிந்திக்காமல் நடந்து கொண்டபோதும் தலைவர் அஷ்ரப் தனது சவாலை விட்டுக்கொடுத்ததன் மூலம் மிக மோசமாக தலை குனிந்தார் . இது அவரது ஆளுமைக்கு பெரிதும் களங்கம் ஏற்படுத்தியது . அவ்வேளையில் கடினமான பிடிவாதத்தைக் கொள்ளாதது பெருந்தவறாகும் . நியாயம் தம்பக்கம் இருக்கும்போது அதற்கான போராட்டம் அவசியமாகும் . .............. பொது ஜன முன்னணியுடன் அரசியற் கூட்டை ஏற்படுத்திக்கொண்டது மிகப்பெரிய தவறாகும் என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் றிஸ்வியின் இடத்துக்கு மு.கா.வால் ஒருவரை நியமிக்க முடியாமைக்கு இதுவே காரணமாகும் . ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போ தைய தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை இந்த அரசில் சேருவ தில்லை என மிகவும் இறுக்கமான பிடிவாதத்தில் இருந்தபோது அதனை வரவேற்ற ஐ.தே.க. வினர் , தேர்தல் கூட்டு சம்பந்தமாக அவரின் பிடிவாதம் கண்டு அதனை ஜனநாயக விரோதம் என சொல்வது அவர்களின் சுய நலத்தைக் காட்டுகிறது . இப்போதே ஐ.தே.க.வின் முஸ்லிம் அங்கத்த வர்கள் மு.கா. தலைவருக்கு முட்டுக்கட்டை போட ஆரம்பித்தால் அக்கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மேலும் பல நெருக்குதல்களுக்கு மு.கா. தலைவர் முகம் கொடுக்க நேரிடலாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி அச்சம் கொள்கிறது . ஆகவே, எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது பேரின கட்சிகளுடன் கூட்டுச்சேர்வதாயின் எழுத்து மூலமான மிக இறுக்கமான முறையில் ஒப்பந்தம் செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது . வீரகேசரி. 22. 10. 2001 2002ம் ஆண்டில் ஹக்கீம் ஒஸ்லோ பேச்சுவார்த்தைக்கு அரச தரப்பாக போன காரணத்தால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் உட்பூசல் அதிகரித்தது. ஹக்கீமுக்கு எதிரான அதாவுள்ளா அணி, ஆதரவான அணி என இரண்டு அணிகள் உருவாகி மு. காவின் புதிய உயர் பீடம் கூடுவதாக அதன் செயலாளர் டொக்டர் ஹப்ரத் அறிவித்தார். இதை கேள்வியுற்ற ஹக்கீம் ஒஸ்லோ பேச்சுவார்த்தையை கைவிட்டு இடையில் நாடு வந்தார். அதற்கிடையில் தாருஸ்ஸலாமில் உயர் பீட கூட்டம் நடைபெறாமல் புத்தளம் பாயிஸ், பாதாள உலகம் போன்றவற்றை பயன்படுத்தி கூட்டத்துக்கு வந்தோர் அடித்து விரட்டப்பட்டனர். ஹக்கீம் தனது ஆதரவு ஹசனலி அணியுடன் மீண்டும் உயர் பீடம் கூடி தலைமையை தக்க வைத்தார். ஆனாலும் அன்று ஒஸ்லோவில் அவர் விட்ட முஸ்லிம் தனித்தரப்பு என்பதை இன்று வரை மு. காவால் எந்தவொரு பேச்சு வார்த்தையிலும் பெற முடியவில்லை. 2002ம் ஆண்டு ஐ தே க தலைமையிலான இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் நேருக்கு நேர் ஆரம்பமாகின. எந்த ஆட்சியிலும் முன்னெடுக்கப்படாத அளவு பேச்சுவார்த்தைகள் வேகமாக ஆரம்பிக்கப்பட்டன. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், அதாவுள்ளா உட்பட அக்கட்சியின் உயர் மட்ட தலைவர்கள் வடக்குக்கு சென்று பிரபாகரனை சந்தித்து புரியாணி சாப்பிட்டனர். அத்துடன் திரும்பியிருந்தால் பரவாயில்லை, முஸ்லிம்கள் இந்த நாட்டின் ஒரு குழு என ஹக்கீம் பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்ததாக ஊடகங்கள் கூறின. நாட்டில் சுமார் 25 லட்சம் தமிழ் மக்கள் வாழ்ந்த நிலையில் சுமார் 15 லட்சம் முஸ்லிம்களை ஒரு குழு என ஹக்கீம் ஏற்றுக்கொண்டது ஏன் என்ற பலமான கேள்வி எழுந்தது. இதனை முபாறக் மௌலவி விமர்சித்தார். ஆனாலும் நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதால் அதன் போக்கை கவனித்தார். அதைத்தொடர்ந்து ஒஸ்லோவில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்போவதான செய்திகள் வெளி வந்தன. இங்குதான் பிரச்சினையே ஆரம்பித்தது. இனப்பிரச்சினை என்பது இந்த நாட்டில் முப்பரிமாணம் கொண்டது. ஒரு காலத்தில் தமிழ், சிங்களம் என்றிருந்த போதும் பின்னர் போராட்ட இயக்கங்களால் முஸ்லிம்கள் குறிவைக்கப்பட்டதால் இந்த நாட்டின் மூன்றாவது தேசிய இனம் முஸ்லிம்கள் என்பதை தமிழ் போராட்ட இயக்கங்கள் உறுதிப்படுத்தியிருந்தன. இதனை வலியுறுத்தும் வகையில் விடுதலைப்புலிகள் வட மாகாண முஸ்லிம்களின் அனைத்து உடமைகளையும் பறித்துக்கொண்டு வெளியேற்றியதால் முஸ்லிம்கள் தனியான தேசிய இனம் என்பது நிரூபிக்கப்பட்டிருந்தது. இதனால் ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் முஸ்லிம்கள் மூன்றாவது தரப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்ற குரல்கள் முஸ்லிம் சமூகத்துள் ஒலித்தன. அந்த நேரம் முஸ்லிம் காங்கிரஸ் 11 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்ததால் அக்கட்சி சார்பில் ரவூப் ஹக்கீம் மட்டுமே கெபினட் அமைச்சராக இருந்தார். அதனால் அவர் முஸ்லிம் தனித்தரப்புக்கு தலைமை தாங்க வேண்டும் என்பது முழு சமூகத்தின் கருத்தாக இருந்தது. தனித்தரப்பின் அவசியம் பற்றியும் தனித்தரப்பாக கலந்து கொண்டால்த்தான் இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களுக்குரிய தீர்வை பெற முடியும் என முபாறக் மௌலவி, ஹக்கீமுக்கு கடிதம் எழுதினார். பேச்சுவார்த்தைக்கு செல்லும் திகதியும் வந்தது. ஆனால் ஹக்கீம் முஸ்லிம் தனித்தரப்பாக இன்றி, தான் அரச தரப்பாக செல்வதாக ஊடகங்களுக்கு அறிவித்தார். இது பாரிய அதிர்ச்சியை கொடுத்தது ஹக்கீம் ஐ தே கவின் உறுப்பினராக இருந்தால் அவர் அரச தரப்பாக கலந்து கொள்வதில் நியாயம் உண்டு. ஆனால் முஸ்லிம்களின் ஒரே கட்சியின் தலைவராக இருக்கும் நிலையில் அச்சமூகத்தின் தலைவராக கலந்து கொள்ளாமல் அரச தரப்பு வாலாக அவர் கலந்து கொள்வதன் பின்னால் நிச்சயம் முஸ்லிம்களுக்கெதிரான சதி இருப்பது புரிந்தது. இதனை பிழை என சுட்டிக்காட்டக்கூடிய வகையில் முஸ்லிம்களின் வாக்குகளை கொண்ட இன்னொரு முஸ்லிம் கட்சி இல்லாமையின் கைசேதம் அப்போதுதான் புரிந்தது. ஹக்கீம் மிகப்பெரிய தவறை தெரிந்து கொண்டே செய்கிறார் என்பதை முபாறக் மௌலவி புரிந்து கொண்டார். இதன் பின்னால் ஐ தே க, புலிகள், சர்வதேசம் என ஒருங்கிணைந்த சதி இருப்பது தெரிந்தது. ஹக்கீம் அவற்றோடு இணைந்து திட்டமிட்டே தனித்தரப்பை மறுத்து, அரச தரப்பாக கலந்து கொண்டு முஸ்லிம்களின் இனத்துவ அடையாளத்தை அழிக்க துணை போகிறார் என்பது தெரிந்தது. இந்த சூழ் நிலையில் கிழக்கு மாகாண உலமாக்களின் மாநாடு காத்தான்குடியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முபாறக் மௌலவி உரையாற்றும் போது ஹக்கீம் தனித்தரப்பாக கலந்து கொள்ளாமல் அரச தரப்பாக கலந்து கொண்டதன் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு துரோகம் செய்து விட்டார் என தெரிவித்தார். இக்கருத்தை பெரும்பாலான உலமாக்கள் அப்போது ஏற்கவில்லை. அப்போது முபாறக் மௌலவியின் கருத்தை எதிர்த்த உலமாக்கள் சிலர் பல வருடங்களின் பின் அவர் சொன்னது உண்மை என ஏற்றுக்கொண்டனர். இந்த சந்தர்ப்பத்தில் மு. காவில் இருந்து விலகிய அதாவுள்ளா அணி தேசிய காங்கிரஸ் என்ற கட்சியாக 2005ல் உருவெடுத்தது. அதே போல் அதே காலப்பகுதியில் ஏற்கனவே சேகு இஸ்ஸதீன், ரசூல் ஆகியோரால் அஷ்ரப் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் கட்சியை ஹாபிஸ் நசீர் அஹமத் விலை கொடுத்து வாங்கியிருந்தார். அதே போல் அக்கரைப்பற்று பௌசர், காத்தான்குடி ஹாரிஸ், கொழும்பு நிசார் மௌலானா போன்றவர்களால் ஐக்கிய முஸ்லிம் மக்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் கட்சி பதிவு செய்யப்பட்டது. அதே போல் எம் ஐ எம் முஹிதீன் தலைமையில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற கட்சியும் இயங்கியது. ஆனாலும் முபாறக் மௌலவி தனது முஸ்லிம் மக்கள் கட்சியை பதிவு செய்யாமல் முஸ்லிம் காங்கிரசையே ஆதரித்தார். ஆனாலும் ரவூப் ஹக்கீமின் தொடர்ச்சியான தவறுகளாலும் கண்ணை மூடிக்கொண்டு மடையர்கள் ஆகி விட்டோம் என சொல்லும் ஹக்கீமின் மடத்தனங்களாலும் அவசியம் முஸ்லிம் காங்கிரசுக்கு மாற்றீடாக நேர்மையான, உண்மை பேசும் முஸ்லிம் கட்சி தேவை என்பதை உணர்ந்தார். இந்த சூழ்நிலையில் ஹக்கீம் குமாரி பிரச்சினை ஏற்பட்டு முஸ்லிம் காங்கிரசுக்குள் ரிசாத் பதியுதீன் தலைமையில் மற்றுமொரு பிளவு ஏற்பட்டது. தானும் தண்ணீர் ஊற்றி வளர்த்த முஸ்லிம் காங்கிரஸ் ஹக்கீமின் தவறுகளால் தன் கண்முன்னே சிதறுவதை கண்ட போது சமூகத்துக்கான தனது விமர்சன அரசியலுடன் பிரதிநிதித்துவ அரசியலை தீர்மாணிக்கும் சக்தியாக தனியான இன்னொரு கட்சி அதுவும் உலமாக்கள் தலைமையில் தேவை என்பதை முபாறக் மௌலவி உறுதியாக உணர்ந்தார். இதன் படி 2004 பொதுத்தேர்தல் வந்த போது ஐக்கிய முஸ்லிம் மக்கள் கூட்டமைப்புடன் இணைந்து அத்தேர்தலில் முதலாவதாக களமிறங்கினார். அத்தேர்தலில் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரசில் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்டார். மறு பக்கம் அதாவுள்ளா, கல்முனை ஹரீஸ், பேரியல் அஷ்ரப் ஆகியோரும் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்டனர். இரண்டு பக்கமும் பெரும் கட்சிகள். இவ்விரண்டையும் எதிர்த்து முபாறக் மௌலவியை முதன்மை வேட்பாளராக கொண்ட சிறிய கட்சி. மறு முணையில் மு. காவில் இருந்த ஹரீஸ் அதாவுள்ளாவின் பக்கம் மாறியதால் அவரை தோற்கடிப்பதற்காக ஹக்கீம் கல்முனை சார்பாக களத்தில் இறங்கினார். முஸ்லிம் கட்சி ஒன்றின் மாற்றீடு தேவை என்பது உணரப்பட்டு மக்களின் சிறிய செல்வாக்கு ஐக்கிய முஸ்லிம் மக்கள் கூட்டமைப்பின் இரட்டை இலை சின்னத்தின் பால் திரும்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் அக்கட்சி முக்கியஸ்தர்கள் மயோன் முஸ்தபாவின் முயற்சி மூலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு விலை போய் அக்கட்சிக்கு ஆதரவளிப்பதாக ஊடகத்தில் தெரிவித்தனர். இதனால் முபாறக் மௌலவியின் ஐ தே கவுக்கெதிரான பிரச்சாரம் பிசு பிசுத்து வாக்குகள் குறைந்து விட்டன. ஆனாலும் இந்த துரோகங்களுக்கு மத்தியில் அந்த தேர்தலில் கட்சிகள், சுயேற்சைகள் என 35 அரசியல் கட்சிகள் களம் கண்ட திகாமடுல்ல மாவட்டத்தில் முபாறக் மௌலவி போட்டியிட்ட கட்சி 7வது இடத்துக்கு வந்தது. இத்தேர்தலில் ஹக்கீம், அதா, பேரியல் ஆகியோர் வெற்றி பெற்றனர். ஐ .மு. ம. கூட்டமைப்பு கட்சி விலை போனதால் அதிருப்தியுற்ற அக்கட்சியில் போட்டியிட்ட முபாறக் மௌலவி, அட்டாளைச்சேனை அமீர் இப்ராகீம் மௌலவி ஆகியோர் கொழும்பில் சந்தித்து தேர்தலில் போட்டியிடக்கூடியவாறு உலமாக்கள் தலைமையிலான கட்சியின் தேவை பற்றி ஆலோசித்தனர். அவர்களுடன் எலபடகம மௌலவி பதுர்தீன் கபூரி, அநுராதபுரம் பௌசான் மௌலவி, ஏறாவூர் முஸம்மில் மௌலவி ஆகியோரும் இணைந்தனர். ஈற்றில் "உலமாக்கள் தலைமையிலான ஐக்கிய முஸ்லிம் கட்சி" சுருக்கமாக உலமா கட்சி என்ற கட்சி 2005ம் ஆண்டு ஜூன் மாதம் பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் தலைவராக முபாறக் அப்துல் மஜீத், செயலாளராக மௌலவி அமீர் இப்ராகீம், கொள்கை பரப்பு செயலாளராக மௌலவி முஸம்மில் ஆகியோரும் உபதலைவர்களாக பதுருத்தீன் கபூரி, மௌலவி பௌசான், பிபிலை மௌலவி அப்துர்ரவூப் ஆகியோரும் மௌலவி அல்லாத சிலரும் நிர்வாகத்தில் இணைக்கப்பட்டனர். உலமா கட்சி முகம் கொடுத்த முதலாவது தேர்தல். உலமா கட்சியின் உருவாக்கம் நாட்டில் பாரிய அதிர்ச்சியை அரசியலில் ஏற்படுத்தியது. அக்கட்சியை வளரவிடாமல் தடுப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் பாரிய தடை போட்டது. இல்லாத, பொல்லாத கதைகளை பரப்பினர். இந்நிலையில் 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வந்தது. அப்போது ஹாபிஸ் நசீர் அஹமதிடம் இருந்து உலமா கட்சி தலைவருக்கு அழைப்பு வந்தது. உலமா கட்சியும் இணைந்து கூட்டாக செயற்படுவோம் என்றார். இதன் படி உலமா கட்சி அவரை சந்தித்து உரையாடி முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு என்ற கூட்டமைப்பை உருவாக்கினர். இதில் உலமாக்களின் ஐக்கிய முஸ்லிம் கட்சியும் இடம் பெற்றது. தேர்தலில் ஒரு பக்கம் மஹிந்த ராஜபக்ச மறுபக்கம் ரணில் விக்ரமசிங்ஹ. மு. தே. கூட்டமைப்பும் உலமா கட்சியும் சேர்ந்து இரு வேட்பாளர்களையும் கண்டு பேசியது. ஆனாலும் ரணில் மூலம் ஏற்கனவே சமூகம் பல வஞ்சகங்களை கண்டிருந்ததால் ரணிலை ஆதரிப்பதில் முபாறக் மௌலவிக்கு விருப்பம் இருக்கவில்லை. ஆனாலும் கூட்டுக்கட்சி பொறுப்பு காரணமாக அமைதியாக இருந்தார். ரணிலை ஆதரிப்பதாக மு. தே. கூட்டமைப்பு ஊடகங்கள் முன்பு கூறியது. அதன் பின் கிண்ணியாவில் நடைபெற்ற ஐ தே க பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட ஹாபிஸ் ஓரம் கட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். அவர் முபாறக் மௌலவியை தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஐ தே க சரி வராது என்றார். அப்படியாயின் மஹிந்தவை ஆதரிப்போம், அவர் புலிகளுக்கு எதிரானவர் என்றார் முபாறக் ஏ மஜீத். மஹிந்த வெல்லமாட்டார் என்றார் ஹாபிஸ். வெல்வாரா இல்லையா என்பதை விட புலிகளை ஒழிப்பாரா இல்லையா என்பதையே நான் சிந்திக்கிறேன் என்றார் முபாறக் மௌலவி. ஆனாலும் ஹாபிஸ் முடிவுக்கு வரவில்லை. அதனால் உலமா கட்சி மஹிந்தவைக்கண்டு அவரோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து அவரை ஆதரிப்பதாக அறிவித்தது. ரணிலை ஆதரிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருந்தது. தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக இருந்த போது முபாறக் மௌலவியை தொடர்பு கொண்ட ஹாபிஸ் மஹிந்த வெல்வாரா என அடிக்கடி கேட்டார். வெல்வாரா என்று தெரியாது. ஆனால் எமக்கு இறைவன் உதவி செய்வான் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். பின்னர் சில வாரங்களில் தானும் மஹிந்தவை ஆதரிப்பதாக ஹாபிஸ் அறிவித்தார். அத்தேர்தலில் மஹிந்த ராஜ்பக்ஷ வென்றதன் மூலம் உலமா கட்சி முதலில் களமிறங்கிய ஜனாதிபதி தேர்தலில் உலமா கட்சி ஆதரித்த ஜனாதிபதி வெற்றி பெற்றமை சிறந்த சிந்தனைக்கும் நம்பிக்கைக்கும் வெற்றியாக அமைந்தது. கட்சி ஆரம்பித்து அதன் முலம் தனக்கென எந்த பதவியும் பெறாமல் சமூகத்தின் குரலாக மட்டும் செயற்படுத்துவதில் முபாறக் அப்துல் மஜீத் மிகப்பெரிய வெற்றி பெற்றார் என்றுதான் சொல்ல வேண்டும். ImportMirror - No 1 leading Tami...முபாறக் அப்துல் மஜீதின் அரசியல் வரலாறு!ImportMirror - No 1 leading Tamil News website delivers Tamil News, Sri Lanka News, Latest Tamil News, Tamil News Paper Online,Tamil News.
1 month 3 weeks ago
சோமரத்னவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால், அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி தெரிவிப்பு. செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷவின் உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால், அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் ”தமிழ் மக்களின் மனங்களில் அழியா இடம் பிடித்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் ஏற்கனவே குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். செம்மணி பகுதியில் சுமார் அறுநூறு உடல்கள் வரை புதைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே அவரால் வழங்கப்பட்ட வாக்குமூலம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரின் மனைவியால் ஜனாதிபதிக்கு எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதம் தற்போது மற்றுமொரு திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. செம்ணியில் சுமார் 300 பேர் வரையில் புதைக்கப்பட்டதாகவும், சிறையில் உள்ள தனது கணவருக்கு அதற்கான உத்தரவுகளை பிறப்பித்த நபர்கள் தொடர்பில் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. இந்த நிலையில், சோமரத்ன ராஜபக்ஷ ஒரு குற்றவாளியாக காணப்பட்டாலும், அவர் சில விடயங்களை கூறப்போவதாக, அவரின் மனைவி கூறுவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். ஆகவே, சோமரத்ன ராஜபக்ஷ என்ன கூற போகிறார் என்பதை அறிய வேண்டும் எனவும், சிறையில் உள்ள நிலையில் அவருக்கு ஏதாவது உயிர் ஆபத்துக்கள் ஏற்படுமானால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441918
1 month 3 weeks ago
இலங்கையில் இஸ்ரேலியர்களுக்கு சிறப்பு பாதுகாப்பா? – அரசாங்கம் விளக்கம்! இலங்கையில் சுற்றுலாப் பயணிகளாக தற்போது இருக்கும் இஸ்ரேலிய பிரஜைகளுக்கு எந்த சிறப்புப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (05) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், அறுகம்பை விரிகுடா பகுதியில் இஸ்ரேலியர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும், அவர்கள் சுற்றுலாப் பயணிகள் என்பதால் மாட்டுமே பொலிஸ் மற்றும் முப்படை வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இஸ்ரேலிய பிரஜைகள் கூடும் இடங்கள் இருந்தால், அவர்கள் பொதுவான சுற்றுலாப் பயணிகளாகக் கருதப்படுவதால், அரசாங்கம் நிலையான பாதுகாப்பை வழங்கும் என்றும், இது எந்த வகையான சிறப்புப் பாதுகாப்பும் அல்ல என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் வலியுறுத்தினார். சுற்றுலாப் பயணிகள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ இருந்தாலும் அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினருக்கும், அவர்களின் பூர்வீக நாட்டைப் பொருட்படுத்தாமல், பாதுகாப்பை வழங்குவதற்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம் என்று அவர் மேலும் கூறினார். https://athavannews.com/2025/1441948
1 month 3 weeks ago
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற ரஷ்யா முடிவு! அமெரிக்கா ரஷ்யாவுக்கு இடையில் கடந்த 1987 இல் கையெழுத்தான இடைநிலை அணுசக்தி (INF) ஒப்பந்தத்திற்கு இனி கட்டுப்படப் போவதில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது. மேற்கு நாடுகளின் செயல்கள் தங்கள் பாதுகாப்புக்கு “நேரடி அச்சுறுத்தலை” உருவாக்கியதாக கூறியுள்ள ரஷ்யா இந்த முடிவை எடுத்துள்ளது. ரஷ்யாவின் இந்த முடிவு அணு ஆயுத வல்லமை கொண்ட இருநாடுகளுக்கும் இடையே ஆயுத போட்டியை அதிகரிக்க கூடும் என்ற கவலையை சர்வதேச அளவில் எழுப்பியுள்ளது. இணக்கத்திற்கு வராமல் ரஷ்யா – உக்ரைன் மோதல் தொடர்ந்து நீடித்து வருவதால், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப், ரஷ்யாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளிலும் நடக்கும் மோதலை நானே நிறுத்தினேன் என கூறிவரும் ட்ரம்பின் பேச்சை ஏற்க ரஷ்யா மறுத்து வருவதால் ரஷ்ய ஜனாதிபதி மீது அமெரிக்க ஜனாதிபதி கடும் கோபத்தில் உள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றால் ஒரே நாளில் உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்துவேன் என கடந்த ஆண்டு டொனால் ட்ரம்ப் கூறியிருந்தார். ஆனால், ஜனாதிபதியாக பதவியேற்று சுமார் 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் ரஷ்யா- உக்ரைன் போரை ட்ரம்பால் நிறுத்த முடியவில்லை. ட்ரம்ப்அவ்வப்போது ரஷ்யாவை எச்சரிக்கும் விதமாக பேசினாலும், நாங்கள் ஒன்றும் ஈரான், ஈராக் இல்லை என்று ரஷ்யா பதிலடி கொடுத்து வருகிறது. சிறப்பு தூதர்களை கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியும் ரஷ்ய ஜனாதிபதி இறங்கி வரவில்லை. இதனால், கடும் கோபம் அடைந்த ட்ரம்ப், ரஷ்யாவை பொருளாதார ரீதியாக முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில்,ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு மத்தியில் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி திமித்ரியின் மெத்வதேவ் பேச்சால் கோபமடைந்த ட்ரம்ப், இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யா பகுதிகளுக்கு அனுப்ப தான் உத்தரவிட்டிருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை கூறினார். இவ்வாறான நிலையில், உலகின் சக்தி வாய்ந்த நாடுகளாக கருதப்படும் ரஷ்யா- அமெரிக்கா இடையே வலுத்து வரும் மோதல் சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த நிலையில்தான், அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தங்களில் இருந்து வெளியேற போவதாக ரஷ்யா அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ரஷ்யா தரப்பு கூறும் போது, “மேற்கு நாடுகளின் செயல்பாடுகள் தங்கள் நாட்டிற்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், எனவே, அணு ஒப்பந்தத்தை பராமரிப்பதற்கான சூழல் மறைந்துவிட்டதால், ரஷ்யா இனியும் முந்தைய சுயக்கட்டுப்பாடுகளை பின்பற்றாது” என தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா ரஷ்யா இடையிலான உறவில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த 1987 ஆம் ஆண்டு இடைநிலை-தூர அணுசக்தி ஃபோர்ஸ் (INF) ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441905
1 month 3 weeks ago
இலங்கை தமிழர்களை நல்லாட்சி செய்த தமிழ் மாமன்னன் ஜனாதிபதி இராவணன் அவர்களின் பரம எதிரியின் மனைவி சீதையின் கோவிலுக்கு அநுரகுமார திசாநாயக்க அரசு காணியினை வேறு வழங்குகின்றது இதை கண்டிக்கின்றோம். - தமிழர் பாலஸ்தீன நல்லுறவு சங்கம் அதற்கு ஒரு விருப்பு அடையாளமும் தமிழர் வழங்கியுள்ளனர்
1 month 3 weeks ago
நவ.27 அந்த மேதகு பிரபாகரன் என்ற மாபெரும் தலைவனைப் போற்றுவதற்குரிய உலகின் சிறந்த புனிதமான நாட்களில் ஒன்று. இதுதான் என்வரையிலும் ஏற்புடையது. இதைத்தவிர வேறு எந்தநாளைத் தெரிவு செய்தாலும் அது சிலராலோ அன்றிப் பலராலோ தூற்றப்படும் நாளாகவே அமையும்.
1 month 3 weeks ago
வேறு எதற்கு? ஒன்றில் வருவோரிடம் காசு சேர்த்து கும்மாளம் அடிப்பதற்கு! அல்லது ஏற்கனவே ஏமாற்றி சேர்த்த காசை கரியாக்குவதற்கு! வேறு என்ன உருப்படியாக செய்கிறார்கள் இவர்கள்!
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
சுவர் முகம் August 4, 2025 ஷோபாசக்தி பாரிஸ் நகரக் காவல்துறைத் தலைமையகத்தில் அந்தச் சுவர் இருக்கிறது. சுவரோடு சேர்த்து அய்ந்து மனிதர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். ஒவ்வொருவருடைய மேலங்கியிலும் வட்டமாக இலக்கத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. மூன்றாவது இலக்கத்தின் பெயரை ‘டேவிட்’ என வைத்துக்கொள்வோம். வயது 46. கருப்பு நிறம். உயரம் 5 அடி 8 அங்குலம். தலைமுடி படிய வாரப்பட்டுள்ளது. நரையேறிய தாடி. ஒல்லியான உடல்வாகு. இலங்கையைச் சேர்ந்தவர். 2009-இல் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். டேவிட் இதற்கு முன்னரும் சிலதடவை இவ்வாறு சுவரோடு நிறுத்தப்பட்டிருக்கிறார். அவர் பிரான்ஸுக்கு வந்து ஆறு வருடங்கள் முடிந்திருந்தபோது, காவல்துறையிடமிருந்து அவருக்கு ஓர் அழைப்பு வந்திருந்தது. அந்த அழைப்பு தனது அகதி வழக்குச் சம்பந்தமானது என்றுதான் டேவிட் முதலில் நினைத்தார். டேவிட் தன்னுடைய அகதி வழக்கு விசாரணையின்போது, பிரான்ஸில் அகதித் தஞ்சம் கோருவதற்கான காரணங்களை விரிவாகச் சொல்லியிருந்தார். “அய்யா! நான் <அடைக்கலம்> என்ற சிறிய தொண்டு நிறுவனத்தில் தன்னார்வ ஊழியனாகப் பணியாற்றினேன். இந்த நிறுவனத்தைப் பாதிரியார் செபமாலைநாதர் நடத்திவந்தார். இறுதி யுத்தத்தின்போது, நாங்கள் பத்துப் பேர் ‘மோதல் தவிர்ப்புப் பகுதி’ என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பகுதியில் காயமடைந்தவர்களைப் பராமரிக்கும் தொண்டைச் செய்துவந்தோம். அங்கிருந்த மருத்துவமனையின் மீது இராணுவத்தினர் ஏப்ரல் 10-ஆம் தேதி அதிகாலை தொடக்கம் இரவுவரை தொடர்ச்சியாகப் பலநூறு கொத்துக்குண்டு எறிகணைகளை வீசினார்கள். முந்தைய இரவு கடுமையாக மழை பெய்திருந்ததால், அங்கிருந்த பாதுகாப்புப் பதுங்குகுழிகள் எல்லாமே வெள்ளத்தால் நிறைந்திருந்தன. பதுங்குவதற்கு இடமின்றி 317 நோயாளிகள் எறிகணைகளால் கொல்லப்பட்டார்கள். எங்களது தொண்டு அணியிலும் ஏழுபேர் கொல்லப்பட்டார்கள். எல்லாம் முடிந்து இராணுவத்திடம் சரணடையும் நாளும் வந்தது. காயமடைந்திருந்த மூன்று புலிப் போராளிகள் பாதிரியார் செபமாலைநாதர் மூலமாக இராணுவத்திடம் சரணடைய விரும்பினார்கள். அவர்களையும் அழைத்துக்கொண்டு பாதிரியார் தலைமையில் நாங்கள் வெள்ளைக்கொடியை ஏந்தியவாறே இராணுவத்தை நோக்கிச் சென்றோம். எங்களது ஆடைகளைக் களைந்துவிட்டு முழு நிர்வாணமாகச் சரணடையுமாறு இராணுவம் கட்டளையிட்டது. நாங்கள் சரணடையும்போது, சிறு துண்டு வெள்ளைக்கொடியைத் தவிர வேறெந்தத் துணியும் எங்களிடம் இல்லை. நாங்கள் சரணடைந்த இடத்தில் விமானத் தாக்குதலால் இடிந்துபோன வீட்டின் மொட்டைச் சுவர் மட்டுமே இருந்தது. அந்தத் சுவரோடு சேர்த்து நாங்கள் ஆறுபேரும் நிர்வாணமாக நிறுத்தப்பட்டிருந்தோம். பாதிரியார் முதலாவது ஆளாக நின்றிருந்தார். நான் கடைசி ஆளாக நின்றிருந்தேன். எங்கள் மீது பெற்றோல் ஊற்றப்பட்டது. அப்போது எங்களைப் பார்வையிட வந்த இராணுவ அதிகாரி குலத்துங்கே என்னோடு வவுனியாப் பல்கலைக்கழகத்தில் பயின்றவன். அவனால் நான் கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டேன். சுவரோடு நிறுத்தப்பட்டிருந்த மீதி அய்ந்து பேரும் என் கண் முன்னாலேயே உயிரோடு தீவைத்துக் கொளுத்தப்பட்டார்கள். இந்தப் படுகொலைக்கு நான்தான் சாட்சி. அப்போது அதிகாரி குலத்துங்கே என்னைக் காப்பாற்றிவிட்டாலும், பின்னர் யுத்தக் குற்ற விசாரணை அது இதுவென்று ஏதாவது வந்தால் சாட்சியான நானும் நிச்சயமாக அரசாங்கத்தால் தேடிக் கொல்லப்படுவேன். அதுதான் இப்போது இலங்கையில் நடந்துகொண்டிருக்கிறது. யுத்த சாட்சிகள் வெள்ளை வேனில் கடத்தப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். அதனால்தான் நான் இலங்கையிலிருந்து தப்பிவந்து உங்களிடம் அரசியல் தஞ்சம் கோருகிறேன்.” டேவிட் எல்லாவற்றையும் விரிவாகச் சொல்லியிருந்தாலும், அகதி வழக்கு விசாரணை அதிகாரிகள் இவற்றுக்கான ஆதாரங்களைக் கேட்டார்கள். பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அடையாளமும் ஆதாரமும் பதிவும் இல்லாமல்தானே இறுதி யுத்ததத்தில் அழிக்கப்பட்டன. ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் டேவிட்டின் அகதி வழக்கு இன்னும் முடியாமலேயே இருக்கிறது. பிரான்ஸிலிருந்து வெளியேறுமாறு டேவிட்டுக்குக் காவல்துறை எந்த நேரத்திலும் உத்தரவிடக் கூடும். எனவே, பாரிஸ் காவல்துறைத் தலைமையத்திலிருந்து முதற்தடவை அழைப்பு வந்தபோது, டேவிட் நிறையக் குழப்பங்களோடும் சந்தேகங்களுடனும்தான் அங்கே சென்றார். ஆனால், அவர்கள் அழைத்தது அகதி வழக்குக் குறித்தல்ல. காவல்துறைக்கு டேவிட்டிடமிருந்து ஓர் உதவி தேவைப்பட்டது. நகரத்தில் நடந்த ஒரு கொடூரமான குற்றச் செயலில் சந்தேக நபராக ஒரு தென்னாசிய நாட்டவர் கைதாகியிருந்தார். காவல் நிலையத்தில் அந்த நபர் அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்படயிருந்தார். இவ்வாறான அணிவகுப்பில் அவரை ஒத்த உருவமுள்ள நான்கு பேர் அவருடன் நிறுத்தப்படுவார்கள். பொதுவாக அந்த நான்கு பேரும் நாடக நடிகர்கள் அல்லது தன்னார்வலர்களாக இருப்பார்கள். சந்தேக நபர் டேவிட்டை ஒத்த உருவமுள்ளவர் என்பதால், அந்த அடையாள அணிவகுப்பில் கலந்துகொள்ளுமாறு டேவிட்டிடம் காவல்துறை கேட்டுக்கொண்டது. இந்த வேலைக்குச் சிறியதொரு சம்பளமும் உண்டு. விஸாவும் வேலையுமில்லாமல் திண்டாடிக்கொண்டிருந்த டேவிட்டுக்கு அந்தச் சிறிய சம்பளம் பெரும் தொகைதான். ஒரு மாதத்தை ஓட்டிவிடுவார். ஆனால், அதைவிடவும் டேவிட்டுக்கு வேறொரு விஷயமே முக்கியமாகப்பட்டது. காவல்துறைக்கு உதவி செய்தால் அது தனது அகதி வழக்குக்குச் சாதகமாக இருக்கலாம் என டேவிட் நினைத்தார். அகதி வழக்கில் வெற்றி பெற்றால், இலங்கையிலிருக்கும் அவருடைய மனைவியையும் குழந்தைகளையும் பிரான்ஸுக்கு அழைத்துக்கொள்ளலாம். இலங்கையில் இவ்வாறான அடையாள அணிவகுப்புகள் சிறைகளில்தான் நடத்தப்படும். அணிவகுப்புக்குச் சிறைக் கைதிகள்தான் பயன்படுத்தப்படுவார்கள். ஆனால், பிரான்ஸில் அடையாள அணிவகுப்பு முறை வேறாக இருந்தது. என்ன குற்றம், யார் சந்தேக நபர் என எதுவுமே அணிவகுப்பில் கலந்துகொள்பவர்களுக்குச் சொல்லப்படுவதில்லை. ஒரே மாதிரியாக உடைகள் அணிவிக்கப்பட்டு அணிவகுப்பில் நிறுத்தப்படும் அய்வருக்கும் ஒருவரையொருவர் முன்பே தெரிந்திருக்கக்கூடாது. குற்றத்தால் பாதிக்கப்பட்ட தரப்புடனோ அல்லது குற்றவாளியை அடையாளம் காட்ட இருப்பவருடனோ இவர்களுக்கு எந்தத் தொடர்பும் இருந்திருக்கக் கூடாது. முக்கியமாக இந்த நபர்கள் குற்றம் நடந்த எல்லைப் பிரதேசத்திற்கு அப்பால் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். அணிவகுப்பில் இருக்கும் அய்ந்து நபர்களுக்கும் இலக்கம் கொடுக்கப்படும். சாட்சி இவர்களைப் பார்வையிட்டு எந்த இலக்கமுடையவர் குற்றவாளி என நீதிபதியிடம் இரகசியமாக் கூறுவார். திரும்பத் திரும்ப மூன்றுதடவை இந்த அணிவகுப்பு நடைபெறும். ஒவ்வொரு தடவையும் உடைகளும் இலக்கங்களும் மாற்றப்படும். முதல் அணிவகுப்பு நடந்தபோது, டேவிட்டுக்கு நீலக் காற்சட்டையும் வெள்ளைச் சட்டையும் கறுப்புக் காலணிகளும் காவல்துறையால் தனியறையில் வழங்கப்பட்டன. அவற்றை அணிந்ததுகொண்டதும் 5-ஆம் இலக்கம் அவரது சட்டையில் குத்தப்பட்டது. அவரை அதிகாரிகள் அணிவகுப்பு அறைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த சுவரோடு வரிசையாக ஏற்கனவே நான்குபேர் நின்றிருந்தார்கள். அவர்களோடு டேவிட்டும் நிறுத்தப்பட்டார். அணிவகுப்பின் போது உடலை அசைக்கவோ முகத்தில் எந்தவிதப் பாவனையையும் காட்டவோ கூடாது என டேவிட் பலமுறை காவல்துறையால் அறிவுறுத்தப்பட்டிருந்தார். உண்மையில், சுவரில் புதைந்திருந்த அய்ந்து பொம்மை முகங்கள் போலவே அங்கே இவர்கள் இருந்தார்கள். அந்தக் காட்சி டேவிட்டுக்குப் பெரிய பதற்றத்தை உண்டாக்கிற்று. அவரது மனம் பல்வேறு உணர்ச்சிகளால் கொந்தளித்துக்கொண்டிருந்தது. கால்கள் தரையிலிருந்து வழுவி உடல் சரிந்துவிடப் போவது போல அவர் உணர்ந்தார். எனினும், எந்த உணர்ச்சியையும் காட்டாது முகத்தைக் கறுப்புக் காகிதம் போல வைத்திருந்தார். இவர்களுக்கு எதிரே ஒரு கண்ணாடிச் சுவர் இருந்தது. அந்தச் சுவருக்கு அப்பால் இப்போது ஒரு முதிய வெள்ளைக்காரர் தோன்றினார். அவர்தான் குற்றவாளியை அடையாளம் காட்டப் போகிறவர். அந்த முதியவர் அய்ந்து முகங்களையும் பார்ப்பதற்கு நீண்ட நேரத்தை எடுத்துக்கொண்டார். காவல்துறை தலைமையத்தில் கையெழுத்துப் போட்டுச் சம்பளத்தை வாங்கிக்கொண்டு வரும்போது, பெரும் மன உளைச்சலில்தான் டேவிட் வெளியே வந்தார். நேரே மதுச்சாலைக்குச் சென்று மூக்கு முட்டக் குடித்தார். பின்பு ஒரு பை நிறைய மிட்டாய்களை வாங்கிக்கொண்டு போதையில் தள்ளாடியடியே ரயிலைப் பிடித்துத் தனது அறைக்கு வந்து சேர்ந்தார். அவரது அறை பாரிஸின் புறநகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தது. அந்த அறை ஒரு குப்பைத் தொட்டி போலத்தான் இருக்கும். அறைக்கு வந்ததும் உடைகளைக் கூட மாற்றாமல், உடைந்து கிடந்த கட்டிலில் டேவிட் குப்புறப் படுத்துக்கொண்டார். கட்டில் அங்குமிங்குமாக ஆடிக்கொண்டிருந்தது. அவரது மூளையின் இருள் மடிப்புகளுக்குள் எரிந்துகொண்டிருந்த தீ அவரில் இப்போது முழுமையாகப் பற்றிக்கொண்டது. சுவரில் முகங்கள் என்ற படிமம் அவரைப் பெருத்த அச்சத்திற்குள் வீழ்த்தியது. முள்ளிவாய்க்காலின் மொட்டைச் சுவரில் வரிசையாக இருந்த அய்ந்து முகங்கள் இங்கே அடையாள அணிவகுப்பில் இருந்ததுபோல மரத்துப்போய் இருக்கவில்லை. ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு உணர்ச்சியைக் காட்டின. ஒருமுகம் பிரார்த்தித்தது. மறுமுகம் கெஞ்சியது. இன்னொரு முகம் அழுதது, அடுத்த முகம் கசப்பைப் காட்டியது. கடைசி முகம் வேதனையோடு புன்னகைத்தது. அந்த முகங்களில் பெற்றோல் ஊற்றப்பட்டபோது, முகங்கள் ஒருசேரக் கண்களை மூடிக்கொண்டன. நிரம்பிய மதுபோதையில் இருந்த இராணுவவீரன் தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு அய்ந்து முகங்களையும் நெருங்கும்போது அவனின் உதடுகள் ஒரு சிங்களப் பாடலை முணுமுணுத்ததை அந்த அய்ந்து முகங்களும் கேட்டிருக்கலாம். ஒவ்வொரு முகத்திலும் அந்த இராணுவவீரன் கொள்ளி வைத்ததும் எழுந்த கூட்டு ஓலத்தின் போதுகூட அவன் பாடலை முணுமுணுப்பதை நிறுத்தவில்லையே. தீ வைக்கப்பட்டதும் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு திசையாக ஓடிச் செல்லும் என்றுதான் இராணுவத்தினர் நினைத்திருக்க வேண்டும். ஓடுபவர்களின் கால்களில் துப்பாக்கியால் சுடுவதற்கு அவர்கள் தயாராக நின்றார்கள். ஆனால், தீ வைக்கப்பட்டதும் சொல்லி வைத்ததுபோல அந்த அய்ந்து நிர்வாண உடல்களும் ஒரு துயர நடனக் காட்சி போல அசைந்து ஒன்றையொன்று தழுவிக்கொண்டே, அய்ந்து முகங்களும் ஒருமுகமாகி எரிந்தன. கடைசியில் பின்னியிருந்த அய்ந்து கரிக்கட்டைகள் எஞ்சின. அவற்றை இராணுவத்தினரின் நாய்கள் எந்தத் தடயமுமில்லாமல் தின்று முடித்தன. சில வருடங்கள் கழித்துக் காவல்துறையிடமிருந்து மீண்டுமொரு அழைப்பு டேவிட்டுக்கு வந்தது. முதலில் போக வேண்டாம் என்றுதான் நினைத்தார். ஆனால், அவருக்குப் பணம் தேவைப்பட்டது. இந்தமுறை சுவரோடு நிறுத்தப்பட்டபோது, டேவிட் பச்சைச் சட்டையும் வெள்ளைக் காற்சட்டையும் அணிந்து முகத்தை மழுங்கச் சிரைத்திருந்தார். அந்த அணிவகுப்பில் 1-ஆம் இலக்கம் டேவிட்டுக்குக் கொடுக்கப்பட்டது. சாட்சி ஒரு கருப்புப் பெண். அவள் தனது முகத்தை மறைத்திருந்தாள். சுவரில் இருக்கும் பொம்மை முகங்கள் டேவிட்டை அச்சப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. இப்போதெல்லாம் அவர் அச்சத்தைத் தின்று அச்சத்தைக் குடித்து வாழ்க்கிறார். அச்சம் மெல்லிய மனநோயாக மாறிக்கொண்டிருக்கிறது. மூன்றாவது தடவையாக அவர் காவல்துறைத் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டபோது, அவருடைய அகதி வழக்கு விசாரணை முடிவுற்றுத் தீர்ப்புக்காகக் காத்திருந்தார். இந்த முறை அகதி விஸா கிடைத்துவிடும் என்று டேவிட்டின் வழக்கறிஞர் உறுதியாகச் சொல்லியிருந்தார். எனவே, காவல்துறையோடு நெருக்கம் வைத்திருப்பது நல்லது என நினைத்துப் போனதுதான் அவரை உயிர் ஆபத்தில் கொண்டுவந்து நிறுத்தியது. இந்தமுறை சாட்சியாக வந்தவர் ஒரு நடுத்தர வயதுச் சீக்கியர். அவரும் நீண்ட நேரமாகச் சுவர் முகங்களைப் பார்த்தார். அந்தச் சீக்கியரை டேவிட் மறுபடியும் சந்திக்க நேரிட்டது. அந்த அணிவகுப்பு முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு டேவிட்டுக்கு அகதி விஸா கிடைத்தது. வேலை தேடித் திரிந்துவிட்டு அவர் தனது அறையை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தபோது, தன்னை ஒரு வெள்ளை வேன் பின்தொடர்வது போல உணர்ந்தார். டேவிட் வேகமாக நடந்து அடுக்குமாடிக் குடியிருப்பை நெருங்கியபோது, அவருக்குப் பின்னால் வந்த வேன் சட்டென நிறுத்தப்பட்டது. வேனில் இருந்து அந்தச் சீக்கியர் குதித்து இறங்கி ஓடிவந்து டேவிட்டின் சட்டையைப் பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். “வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த எனது சின்னஞ்சிறு மகளை நீதான் கடத்திச் சென்று கொன்றாய். நான் ஜன்னல் வழியாக உன்னைப் பார்த்தேன். முட்டாள் காவல்துறை உன்னை விட்டுவிட்டது. ஆனால் நான் விடமாட்டேன்.” டேவிட் திகைத்துப் போய்விட்டார். குடியிருப்புவாசிகள் அங்கே கூடிவிட்டார்கள். “இவன் சிறுமிகளை நாசம் செய்து கொல்பவன்” என்று அந்தச் சீக்கியர் திரும்பத் திரும்பக் கூச்சலிட்டார். “இல்லை அய்யா… நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். நான் அடையாள அணிவகுப்பில் கலந்துகொள்ளக் காவல்துறையால் அழைக்கப்பட்டவன்” என்று டேவிட் கெஞ்சினர். இதற்குள் யாரோ காவல்துறையை அழைத்துவிட்டார்கள். அவர்கள் வந்து சீக்கியரை எச்சரித்து விலக்கிவிட்டபோது கூட “உன்னைக் கொல்லுவேன்” எனச் சொல்லியவாறேதான் சீக்கியர் அங்கிருந்து சென்றார். குடியிருப்புவாசிகளில் பலர் டேவிட்டைச் சந்தேகத்துடன் பார்ப்பது போலவே டேவிட் உணர்ந்தார். குடியிருப்பு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறார்களுக்கு மிட்டாய் கொடுப்பது டேவிட்டின் வழக்கம். இலங்கையிலிருக்கும் தன்னுடைய மூன்று பெண் குழந்தைகளின் முகத்தைத்தானே இந்தச் சிறுமிகளிடம் அவர் பார்த்தார். இனி எந்த முகத்தோடு அவர் சிறுமிகளுக்கு மிட்டாய் கொடுப்பார்! இவர் கொடுத்தாலும் சிறுமிகள் வாங்க மாட்டார்களே. மூன்று நாட்களாக அவர் அறையைவிட்டு வெளியே வரவேயில்லை. நான்காவது நாள் டேவிட் காவல்துறை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டபோது மிகுந்த பதற்றத்துடனேயே சென்றார். அந்தச் சீக்கியர் விடுத்த கொலை மிரட்டல் ஏற்கனவே பல வருடங்களாக மன உளைச்சலிலும் அச்சத்திலும் இருந்த அவரது நடுமூளையில் கூரிய ஆணியாக இறங்கியிருந்தது. காவல்துறை தலைமையகத்தில் அந்தச் சீக்கியரும் இருந்தார். டேவிட்டுக்கு முன்பாகவே அந்தச் சீக்கியரிடம் காவல் அதிகாரி “இந்த மனிதர் காவல்துறைக்கு நீண்டகாலமாக உதவி செய்பவர். இவர் சந்தேக நபர் கிடையாது. நீங்கள் அடையாள அணிவகுப்பில் தவறாக இவரை அடையாளம் காட்டியிருக்கிறீர்கள்” எனச் சொன்னார். “எனது கண்கள் ஒருபோதும் பொய் சொல்லாது” என்றார் அந்தச் சீக்கியர். “நீங்கள் மறுபடியும் இந்த மனிதரைத் தொந்தரவு செய்தால் உங்கள் மீது வழக்குப் பதிவு செய்வேன்” எனக் காவல் அதிகாரி சீக்கியரை எச்சரித்தார். அப்போது அந்தச் சீக்கியர் டேவிட்டின் கண்களைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டே இகழ்ச்சியான புன்னகையொன்றை வீசியபோது, உண்மையில் டேவிட் அச்சத்தால் உயிரோடு செத்துப்போனார். அவரது மூன்று குழந்தைகளதும் முகங்கள் அவரது இருதயத்தில் வரிசையாகத் தோன்றின. அவரது கண்களில் நீர் கொப்பளித்துச் சிதறியது. தன்னுடைய அறை இருக்குமிடம் சீக்கியருக்குத் தெரிந்திருப்பதால், அறையில் இருப்பதற்கே டேவிட் அஞ்சினார். சீக்கியரின் இகழ்ச்சியான புன்னகை ஒரு பளபளக்கும் கூரிய கத்தி போல அவருக்குத் தோன்றியது. அறையைக் காலி செய்துவிட்டுப் புதிய இருப்பிடம் தேடலாம் என்றால் பணத்திற்கு வழியில்லை. ஆனால், உலகத்தின் எந்த மூலையில் ஒளிந்துகொண்டாலும் சீக்கியரின் கூரிய பார்வை தன்னைக் கண்டுபிடித்துவிடும் என அஞ்சினார். நகரத்தில் அவர் வேலை தேடித் திரிந்தபோது, எங்கேயாவது சீக்கியத் தலைப்பாகை தென்படுகிறதா என்பதே அவரது முதல் கவனமாக இருந்தது. அவ்வாறு தலைப்பாகையோடு யாரைப் பார்த்தாலும் உடனேயே அங்கிருந்து நழுவிச் சென்று குறுக்குச் சந்துகளுக்குள் புகுந்து மறைந்து போனார். ஆனால், பிரான்ஸில் இருக்கும் எல்லாச் சீக்கியர்களும் தலைப்பாகை அணிவதில்லை என்பதையும் அவர்களில் சிலர் மழித்த முகத்தோடு அய்ரோப்பியர்களின் சாயலில் இருப்பதையும் அவர் அறிந்தபோதுதான் தன்மீதும் காவல்துறை மீதும் எல்லாவற்றின் மீதும் அவர் நம்பிக்கையை இழந்தார். தன்னுடைய மரணம் நெருங்கி வருவதை அவர் தெளிவாக உணர்ந்துகொண்டார். மதிய நேரத்தில் லூவர் அருங்காட்சியகத்திற்கு அருகேயுள்ள உணவகங்களில் வேலை கேட்டுத் திரிந்துவிட்டு, எப்போதும் போல ஏமாற்றத்துடன் அருங்காட்சியத்தின் வெளி வாசலருகே நின்றிருந்த டேவிட் தனது இடுப்பின் இடதுபுறத்தில் சுருக்கென வலி தோன்றுவதை உணர்ந்து குனிந்து பார்த்தார். இடுப்பிலிருந்து பலூன் போல ஏதோவொன்று ஊதிக்கொண்டு குபுகுபுவென வெளியே வந்தது. அது அவரது குடல். இரண்டு கைகளாலும் குடலை எந்தியவாறே கீழே விழுந்துவிட்டார். அவரைக் கத்தியால் குத்தியவன் அவரை நோக்கிக் குனிந்து எச்சிலைக் கூட்டி அவரது முகத்தில் உமிழ்ந்தான். அவனது முகத்தை ஒருபோதும் டேவிட்டால் மறக்க முடியாது. தலைமுடி ஒட்டவெட்டப்பட்டு, மழுங்கச் சிரைக்கப்பட்ட முகத்துடன் இருந்தான். அவனுக்கு இருபது வயது இருக்கும். அவனது கண்கள் டேவிட்டைப் பார்த்து இழிவாகப் புன்னகைத்த சீக்கியரின் கண்கள் போலவே இருந்தன. மருத்துவமனையில் டேவிட் ஒன்றரை மாதம் இருந்துவிட்டுத் தனது அறைக்குத் திரும்பியதற்குப் பின்னர் முறை வைத்து மதியத்தில் இரண்டு மணிநேரமும் அதிகாலையில் இரண்டு மணிநேரமும் மட்டுமே தூங்கினார். அது கூட அரை உறக்கம்தான். எந்த நேரமும் தான் கொலை செய்யப்படலாம் என அவர் அஞ்சிக் கிடந்தார். ‘சாவு என்பது ஒரு கடவுள் போன்றது’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். வெளியே செல்லும்போது ஒவ்வொரு முகத்தையும் உற்றுப் பார்த்து விலகி நடந்தார். முதலில் சீக்கிய முகங்களுக்கு அஞ்சியவர் இப்போது உலகிலுள்ள எல்லா முகங்களுக்கும் அஞ்சினார். சுவரில் ஒருமுகம் வரையப்பட்டிருந்தால் கூட அந்தச் சுவரிலிருந்து அச்சத்தோடு விலகி நடந்தார். கொல்லப்பட்ட அந்தச் சீக்கியச் சிறுமியின் மூத்த சகோதரனே டேவிட்டைக் குத்தியிருந்தான். மூன்று மாதங்களுக்குப் பின்பாக அந்த இளைஞன் ஸ்பெயினில் வைத்துக் கைது செய்யப்பட்டுப் பாரிஸுக்குக் கொண்டுவரப்பட்டான். இந்த முறை கண்ணாடிக்கு இந்தப் பக்கமாகச் சாட்சியாக டேவிட் இருந்தார். எதிரே சுவரில் இருந்த அய்ந்து முகங்களை நிமிர்ந்து பார்க்கவே அவர் அச்சப்பட்டுக் கண்களை மூடியிருந்தார். நீதிபதியும் காவல்துறை அதிகாரிகளும் பெரும் பிரயத்தனத்துடன் டேவிட்டுக்குத் தைரியம் ஊட்டினார்கள். உண்மையில் அவர்களது தொந்தரவாலேயே டேவிட் கண்களைத் திறந்தார். அவரது உள்ளம் அச்சத்தால் இருண்டே இருந்தது. எதிரே சுவரில் ஒரே மாதிரியாக அய்ந்து முகங்கள். டேவிட்டால் அய்ந்து விநாடி கூட அந்த முகங்களைத் தைரியமாகப் பார்க்க முடியவில்லை. எனினும், தன்னைக் குத்திய இளைஞனை டேவிட் மூன்று முறையும் சரியாகவே அடையாளம் காட்டினார். தான் அடையாள அணிவகுப்பில் கலந்துகொள்ளவோ சாட்சியாகவோ காவல்துறைத் தலைமையத்திற்கு வருவது இதுவே கடைசி முறை என நினைத்துக்கொண்டு அங்கிருந்து திரும்பினார். சீக்கிரமே தெற்குப் பிரான்ஸிலுள்ள சிறு கிராமத்திற்குக் குடிபெயர்ந்து சென்றுவிட்டார். அந்தக் கிராமத்தில் ஒரேயொரு தென்னாசியர் கூடக் கிடையாது. அங்கே விவசாயப் பண்ணையொன்றில் நல்ல வேலையும் கிடைத்தது. சீக்கிரமே மனைவி, குழந்தைகளைப் பிரான்ஸுக்கு அழைத்துக்கொண்டார். டேவிட் அச்சத்திலிருந்து மெதுவாக வெளியே வந்துகொண்டிருந்த காலத்தில்தான் காவல்துறை டேவிட்டை மறுபடியும் அடையாள அணிவகுப்பில் நிறுத்தியிருக்கிறது. இம்முறை அவருக்கு 3-ஆம் இலக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சுவரோடு நிறுத்தப்பட்டிருந்த அய்ந்து முகங்களும் ஒரேமாதிரியான தோற்றத்துடனும் தாடியோடும் உடைகளோடும் அய்ம்பது வயதை நெருங்கியவர்களாகவும் இருந்தார்கள். நடுமுகம் டேவிட்டுடையது. கண்ணாடிச் சுவருக்கு அந்தப் பக்கத்தில் சாட்சி வரும்போதே டேவிட் சாட்சியின் முகத்தை அடையாளம் கண்டுவிட்டார். அந்த முகம் முள்ளிவாய்க்காலில் பாதிரியார் செபமாலைநாதருடன் இராணுவத்திடம் சரணடைந்து சுவரோரமாக நிர்வாணமாக நிறுத்தப்பட்டிருந்த ஆறாவது முகம். அதிகாரி குலத்துங்கேவால் கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்ட முகம். நடந்த யுத்தக் குற்றத்திற்கு ஒரே சாட்சி. அந்தச் சாட்சி எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் அணிவகுப்பின் நடுமுகத்தையே பார்த்துக்கொண்டிருந்தது. அந்தச் சாட்சியின் முன்னே இரண்டு தடவைகள் அணிவகுப்பு நடந்து முடிந்து மூன்றாவது தடவையாக டேவிட் அணிவகுப்பில் நின்றிருந்தபோது, டேவிட்டின் உதடுகள் ஒரு சிங்களப் பாடலை முணுமுணுத்தன. மொட்டைச் சுவரோடு நிறுத்தப்பட்டிருந்த அய்ந்து முகங்களின் மீதும் டேவிட் பெற்றோலை ஊற்றிக் கொள்ளி வைத்தபோது ‘சாவு ஒரு கடவுள் போன்றது’ என்ற இந்தப் பாடல்தான் டேவிட்டின் நாவில் இருந்தது. (ஆனந்த விகடன் – ஜூலை 2025) https://www.shobasakthi.com/shobasakthi/2025/08/04/சுவர்-முகம்/?fbclid=IwQ0xDSwL9gi9leHRuA2FlbQIxMQABHudbGtZFYAu6hJv3wHzCCn6NODHXoaEHgJ5qf4i5ATO1AKFmzL11sxrNMJ_R_aem__IgadcQPKVZeVUMPtzadqA
1 month 3 weeks ago
சீக்கியர் இந்திய பிரதமரைக் கொன்றனர் என்று யாரும் படம் எடுப்பதில்லை. ஏனெனில் யாராவது ஒரு சீக்கியன் நிச்சயம் அடிப்பான். அந்த அடித்த சீக்கியனை அனைத்து சீக்கியரும் ஆதரிப்பார்கள். ஆனால் எம் தமிழினத்தை இழிவுபடுத்தி யாரும் படம் எடுக்கலாம். ஏனெனில் ஒரு தமிழன்கூட அடிக்க மாட்டான். யாராவது ஒருவன் அடித்தால் உடனே “வன்முறை, பாசிசம்” என்று ஒப்பாரி வைக்க எம்மில் நாலு தமிழன் இருக்கிறான். அதனால்தான் தமிழினத்தை இழிவுபடுத்தி மலையாளிகள் படம் எடுக்கின்றனர். வட இந்தியர் எடுக்கின்றனர். இப்போது தெலுங்கிலும் எடுக்கின்றனர். இப்போது ஈழத்தமிழரை இழிவுபடுத்தி தெலுங்கில் “கிங்டம்” என்று ஒரு படம் வந்துள்ளது. இப் படத்தை எடுத்து வெளியிட்டவர்களுக்கு வன்மையான கண்டனங்கள். வழக்கம்போல "நாம் தமிழர்" சீமான் மட்டுமே ஈழத் தமிழருக்காக இதனை கண்டித்துள்ளார். இப் படத்தை தமிழ்நாட்டில் நிறுத்தாவிடில் பெரும் போராட்டம் செய்வேன் எனவும் அறிவித்துள்ளார். "நான் செத்துக் கொண்டிருந்தேன். யாரோ என் தாய்மொழியில் பேசினார்கள். உயிர்ப்பித்துக் கொண்டேன்" என்றார் ரஸ்ய கவிஞன் ரசூல் கம்சதேவ் ஆம். தமிழ்நாட்டில் ஈழத் தமிழருக்காக சீமான் எழுப்பும் குரல் ஈழத் தமிழர் தம்மை உயிர்பித்துக்கொள்ள உதவுகிறது. தோழர் பாலன்
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
இஸ்ரேலியர்களை கிழக்குப் பகுதிக்கு பெருமளவில் அழைப்பதன் மூலம், நாட்டில் உள்ள சோனகருக்கும், இஸ்ரேலியர்களுக்கும் இடையில்... கலாச்சார பரிமாற்றத்தை செய்ய வேண்டும்.
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது! சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பெப்ரவரி 22 முதல் ஆகஸ்ட் 3 வரை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில், சேவையிலிருந்து தப்பியோடிய 3,504 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டதாக அமைச்சு சுட்டிக்காட்டுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் 2,937 பேர் இராணுவ வீரர்கள். மேலும், 289 கடற்படை வீரர்களும், 278 விமானப்படை வீரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முப்படைகளில் இருந்து சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாத வீரர்கள் இராணுவத்தில் சரணடைவதற்காக கடந்த ஆண்டு பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டது. மேலும் அந்தக் காலகட்டத்தில் சரணடையாதவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் நடந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441860
1 month 3 weeks ago
அமெரிக்க வாகனங்களை வரி இல்லாமல் இறக்குமதி செய்யுங்கள் – இலங்கையிடம் வொஷிங்டன் கோரிக்கை! வர்த்தக இடைவெளியைக் குறைக்கும் முயற்சியில், மின்சார வாகனங்கள் (Electric Vehicles) உள்ளிட்ட அமெரிக்க வாகனங்களுக்கு வரியில்லா அணுகலை வழங்குமாறு அமெரிக்கா, அதன் கட்டணப் பேச்சுவார்த்தைகளில் இலங்கையைக் கோரியதாக, வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நன்கு அறிந்த ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இலங்கை அரசாங்கம் அதற்கு முழுமையான ஒப்புதலை வழங்கவில்லை, ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இதுபோன்ற கோரிக்கைகளை படிப்படியாகக் கருத்தில் கொள்ள ஒப்புக்கொண்டது. மேலும், கட்டணங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் இலங்கையும் அமெரிக்காவும் வர்த்தகப் பேச்சுவார்த்தையைத் தொடரும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைய சுற்று பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கை முதலில் முன்மொழியப்பட்ட 44 சதவீத வரிகளிலிருந்து 20 சதவீதமாகக் குறைக்க முடிந்தது. தற்போதைய விகிதம் அதன் பிராந்திய போட்டியாளர்களான பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் போன்றவற்றுடன் இணையாக இருப்பதால் போட்டித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் மீது விதிக்கப்பட்ட வரிகளும் 20 சதவீதமாகவே உள்ளன. இலங்கையுடனான அமெரிக்காவின் மொத்த பொருட்கள் வர்த்தகம் 2024 இல் 3.4 பில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2024 இல் இலங்கைக்கான அமெரிக்க பொருட்களின் ஏற்றுமதி 368.2 மில்லியன் டொலர்களாக இருந்தது, இது 2023 ஐ விட 4.9 சதவீதம் ($17.1 மில்லியன்) அதிகமாகும். இலங்கையிலிருந்து அமெரிக்க பொருட்களின் இறக்குமதி 2024 இல் மொத்தம் 3.0 பில்லியன் டொலர்களாக இருந்தது, இது 2023 ஐ விட 6.1 சதவீதம் ($173.5 மில்லியன்) அதிகமாகும். இலங்கையுடனான அமெரிக்க பொருட்களின் வர்த்தக பற்றாக்குறை 2024 இல் 2.6 பில்லியன் டாலர்களாக இருந்தது, இது 2023 ஐ விட 6.3 சதவீதம் ($156.4 மில்லியன்) அதிகமாகும். வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கான அதன் திட்டங்களில் ஒன்றாக, விலைகள் போட்டித்தன்மையுடன் இருந்தால் அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து எரிபொருளை வாங்க இலங்கை முன்வந்துள்ளது. தற்போது, அமெரிக்க சந்தையை அடையும் மிகப்பெரிய இலங்கை தயாரிப்புகளில் ஆடைகள் உள்ளன. சீனாவிலிருந்து ஆடைத் தொழிலுக்கு மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை இலங்கை உறுதியாக எதிர்த்தது. எதிர்காலத்தில், சர்வதேச வர்த்தகத்தில் இலங்கை மேலும் சிக்கல்களைத் தாங்க வேண்டியிருக்கும். சீனாவும் அமெரிக்காவும் உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளர்கள். தற்போது, இலங்கை சீனாவிலிருந்து BYD போன்ற மின்சார வாகனங்களை இறக்குமதி செய்கிறது. https://athavannews.com/2025/1441877
Checked
Mon, 09/29/2025 - 00:45
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed