புதிய பதிவுகள்2

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

1 month 3 weeks ago
04 Aug, 2025 | 07:12 PM மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தற்போது மன்னார் - மதவாச்சி பிரதான வீதியூடாக கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மன்னார் மக்கள் திங்கட்கிழமை (4) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்றுகூடினர். மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளாரின் அழைப்பிற்கு இணங்க அருட்தந்தையர்கள், மூர்வீதி ஜும்மா பள்ளி பிரதம மௌலவி, பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (4) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்றுகூடினர். இந்த நிலையில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசன் அடிகளார் ஆகியோர் சென்று மாவட்ட அரசாங்க அதிபர் கா.கனகேஸ்வரனுடன் கலந்துரையாடினர். இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நிர்வாகம் எம்.பிரதீப் கலந்துகொண்டிருந்தார். இதன்போது தற்போது மன்னார் நகர பகுதியில் சில கிராமங்களில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களுக்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை (3) மன்னார் நகருக்குள் கனரக வாகனங்களில் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருந்த காற்றாலை மின் கோபுரம் அமைப்பதற்கான பாரிய பொருட்கள் மடு பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பொருட்களை மன்னாருக்குள் கொண்டு வர மக்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற நிலையில் குறித்த விடயங்கள் குறித்தும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. குறித்த கலந்துரையாடலின் போது குறித்த மின் திட்ட நடவடிக்கைக்கான அமைச்சரவை அனுமதி பெற்றுக் கொள்ளப் பட்டமை தெரியவந்துள்ளது.குறித்த வேலைத்திட்டத்தை அரச அதிகாரிகள் தடுத்து நிறுத்தும் பட்சத்தில் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் மேலதிக செலவீனங்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்ற விடையமும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் ஒன்றுகூடிய மக்களுக்கு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டமையினால் சட்ட ரீதியாக குறித்த விடயத்தை அணுக வேண்டி இருக்கின்றது. இவ்விடயம் தொடர்பாக நாங்கள் ஏனைய சட்டத்தரணிகளுடனும் உரையாடி இருக்கின்றோம். இவ்விடயம் தொடர்பாக எதிர் வரும் புதன்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை வழக்கு ஒன்றை தாக்கல் செய்து சில கட்டளைகளை பெற்றுக்கொள்ள உள்ளோம். எவ்வித ஆவணங்களும் இல்லாமல் உடனடியாக மாவட்ட நீதிமன்றத்தை நாடுகின்ற போது எமக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தும். எனவே எதிர்வரும் புதன்கிழமை வரை மக்களின் எதிர்ப்பை முன்னெடுக்கவேண்டிய தேவை உள்ளது. குறித்த நடவடிக்கைகளுக்கு எதிராக நீதி மன்றத்தின் கட்டளையை பெற்றுக் கொள்ளும் வரை எமது நடவடிக்கைகளை தொடர வேண்டும். குறித்த திட்டங்களினால் எதிர்கால சந்ததிகள் பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க உள்ளனர்.இந்த நிலையிலே குறித்த விடயம் தொடர்பாக சட்ட ரீதியாக சில நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட ரீதியில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் குறுகிய நேரத்தில் அதனை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலின்போது மன்னாருக்கு வருகை தந்து கூறியிருந்தார். மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை மின் உற்பத்தி திட்டம் முன்னெடுக்கப்படாது என்று குறித்த திட்டத்திற்கு தடை விதிக்கப்படும் என கூறி இருந்தார். இந்த நிலையிலே குறித்த திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் மக்களின் ஒத்துழைப்பு எமக்கு தேவை என தெரிவித்தார். இந்த நிலையில் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்றுகூடியவர்கள் மன்னார் நகர சுற்று வட்ட பகுதிக்குச் சென்று ஒன்றுகூடினர். எதிர்வரும் புதன்கிழமை வரை தொடர்ச்சியாக ஒன்றுகூடி தமது எதிர்ப்பை தெரிவிப்பது என்றும் மன்னார் நகருக்குள் குறித்த காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்காக கொண்டு வரும் பொருட்களை நகருக்குள் கொண்டுவர அனுமதிப்பதில்லை என்றும் மக்கள் தெரிவித்தனர். மக்களுக்கு ஆதரவாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221820

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month 3 weeks ago
வணக்கம் வாத்தியார் . ........... ! ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசை பார்த்திருந்து ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் சோறு தண்ணி வேணுமுன்னு தோணல ஆண் : என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடி வந்து தூதாக போக வேணும் அக்கரையில ஆண் : நான் உண்டான ஆசைகள உள்ளார பூட்டி வச்சி ஒத்தையில வாடுறேனே இக்கரையில பெண் : { நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடி போன பின்னும் வீடு போயி சேர்ந்திடத்தான் தோணல } (2) ஆண் : தூரக் கிழக்கு கரை ஓரம் தான் தாழப் பறந்து வரும் மேகம் தான் ஆண் : உன்கிட்ட சேராதோ என் பாட்ட கூறாதோ ஒண்ணாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ பெண் : உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே செந்நாரை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே ஆண் : கண்ணாலம் காட்சி எப்போது எந்நாளும் என் நேசம் தப்பாது பெண் : மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான் மாசக் கணக்கில் கொண்ட நோயிதான் மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும் தீராதோ அக்காளின் பொண்ணுக்கோர் பொற்காலம் வாராதோ ஆண் : கையேந்தும் ஆட்டு குட்டி கன்னிப் பெண்ணாய் மாறாதோ மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீர பேசாதோ பெண் : உன்னாலே தூக்கம் போயாச்சு உள்ளார ஏதேதோ ஆயாச்சு ....... ! --- நான் ஏரிக்கரை மேலிருந்து ---

புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்

1 month 3 weeks ago
ஏழாவது(July) மாதச் செலவுகள் மூன்றாவது மாதத்தில் இருந்து புதிதாக காரைநகரைச் சேர்ந்த இரண்டு விசேட தேவையுடையவர்களுக்கு மாதாந்த உதவி வழங்க தொடங்கி உள்ளோம் மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படுவோரின் விபரங்கள் 1) செல்வி இரட்சகன் நிவேதா (வயது 25) (காளுவன், சுழிபுரம் கிழக்கு) 5000 ரூபா இவருடைய தாயார் திருமதி இ.சுதாரஞ்சினி அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 2) திரு ஏரம்பு கண்ணதாசன் (வயது 34) 3) திரு ஏரம்பு கரிதாசன் (வயது 33) (பொன்னாலை மேற்கு, (ஒரே குடும்பம்) 10000 ரூபா இவர்களுடைய தாயார் திருமதி ஏ.பராசக்தி அவர்களுடைய தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 4) செல்வன் மங்களேஸ்வரன் டினுசாந்த் (வயது 13) (பொன்னாலை மேற்கு) 5000 ரூபா செல்வன் ம.டினுசாந்த் அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 5) செல்வன் பாலசுப்ரமணியம் சுலக்சன் (வயது 20) (சுழிபுரம் மேற்கு) 5000 ரூபா இவர்களுடைய தாயார் திருமதி பா.சந்திரகலா அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 6) செல்வி ஜசிந்தன் பவன்யா (வயது 16) (சுழிபுரம் மத்தி) 5000 ரூபா இவர்களுடைய தாயார் திருமதி ஜ.சுபாஜினி அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 7) செல்வி மகாலிங்கம் நிரோஜினி (வயது 25) (தொல்புரம் மேற்கு) 5000 ரூபா இவர்களுடைய தாயார் திருமதி ம.சரோஜினி அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 8) செல்வி சாந்தகுமார் கோபிசா (வயது 10) (பாண்டவெட்டை சுழிபுரம் கிழக்கு) 5000 ரூபா இவர்களுடைய தாயார் திருமதி சா.ரஞ்சினி அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 9) செல்வி ஐங்கரன் கருண்யா (வயது 8) (விக்காவில், காரைநகர்) 5000 ரூபா இவர்களுடைய தாயார் திருமதி ஐ.ரதிலேகா அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 10) செல்வி நாகராசா சசிகலா (வயது 36) (அல்வின் வீதி, காரைநகர்) 5000 ரூபா இவர்களுடைய சகோதரி செல்வி நா.மஞ்சுளாதேவி அவர்களின் இலங்கை வங்கிக் கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. மாதாந்தக் கொடுப்பனவிற்காக 50000 ரூபா 22/07/2025 அன்று மீளப்பெறப்பட்டு அன்றே தபாலக சேமிப்புக் கணக்குகளில் 9 பேருக்கு வைப்புச் செய்யப்பட்டது. ஒருவருக்கு 23/07/2025 இலங்கை வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டது. எமது புலர் அறக்கட்டளைக்கு உதவ விரும்பும் கருணை உள்ளம் கொண்ட உறவுகள் +94 77 777 5448 அல்லது +94 77 959 1047 என்ற இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு உதவலாம். மூவர் இணைந்த வங்கி விபரம் K BALAMURUGAN R PARANEETHARAN S THEVAKUMARAN A/C NO: 107250178888 National Savings Bank Chankanai Jaffna Sri Lanka SWIFT CODE - NSBALKLX

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 month 3 weeks ago
இந்திய அணி தொடரையே வென்றது போன்ற மகிழ்ச்சியுடன் மைதானத்தை விட்டு வெளியேறும் படத்தை பார்த்தேன். மிகவும் சிரமப்பட்டு உள்ளார்கள் போலும். என்னதான் ஐபில் ஆட்டத்தை மாத கணக்கில் விளையாடினாலும் இந்திய மண்ணிற்கு வெளியில் போட்டி என வந்தால் இவர்களிற்கு போராட்டம் தான். ஐபிஎல் இல் அதிக ஓட்டங்கள் குவித்த சாய் சுதர்சனால் சோபிக்க முடியவில்லை. இவர் இந்திய மண்ணில் ஐபிஎல் விளையாடவே தகுதியானவர் போலும்.

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 month 3 weeks ago
இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டெஸ்டில் 6 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா தொடரை 2 - 2 என சமப்படுத்தியது Published By: Digital Desk 3 04 Aug, 2025 | 05:19 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிராக கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் இன்று நிறைவடைந்த ஐந்தாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 ஓட்டங்களால் மிகவும் பரபரப்பான வெற்றியை இந்தியா ஈட்டியது. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா 2 - 2 என சமப்படுத்திக்கொண்டது. கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ஓட்டங்களும் இந்தியாவின் வெற்றிக்கு 4 விக்கெட்களும் தேவைப்பட்டதால் போட்டியில் எதுவும் நிகழலாம் என்ற நிலை உருவானது. கடைசி நாள் ஆட்டத்தை 6 விக்கெட் இழப்புக்கு 339 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து மேலதிக 28 ஓட்டங்களுக்கு கடைசி நான்கு விக்கெட்களை இழந்து தோல்வியைத் தழுவியது. முதலாம் நாளன்று இடது தோற்பட்டையில் கடும் உபாதைக்குள்ளான கிறிஸ் வோக்ஸ் அடுத்த 3 நாட்களும் விளையாடாமல் ஓய்வுபெற்று வந்தார். ஆனால், இங்கிலாந்தின் வெற்றிக்கு மேலும் 17 ஓட்டங்கள் மாத்திரம் தேவைப்பட்டதால் கிறிஸ் வோக்ஸ் இடது கையில் பண்டேஜ் போட்டவாறு ஒற்றைக் கையுடன் துடுப்பெடுத்தாட 11ஆவது வீரராக களம் புகுந்தார். கிறிஸ் வோக்ஸை ஒரு பக்கத்தில் வைத்துக்கொண்டு 13 பந்துகளை எதிர்கொண்ட கஸ் அட்கின்ஸன் மொத்தமாக 29 பந்துகளை எதிர்கொண்டு 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மொஹம்மத் சிராஜினால் போல்ட் செய்யப்பட இந்தியா 6 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது. லீட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்களாலும் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 22 ஓட்டங்களாலும் இங்கிலாந்து வெற்றிபெற்றிருந்தது. பேர்மிங்ஹாமில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 336 ஓட்டங்களால் இந்தியா வெற்றிபெற்றிருந்தது. போட்டியில் இரண்டு நாட்கள் முழுமையாக இருந்தபோது 3ஆம் நாள் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அன்றைய தினம் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. நான்காம் நாளன்று தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 3 விக்கெட்களை இழந்து 301 ஓட்டங்களைப் பெற்று மிகவும் பலமான நிலையில் இருந்ததுடன் நான்காம் நாளன்றே வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்தின் அடுத்த 3 விக்கெட்களை 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியதால் போட்டியில் எந்த அணியும் வெற்றிபெறலாம் என்ற நிலை உருவானது. இங்கிலாந்து 6 விக்கெட்களை இழந்து 339 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதால் அது இந்தியாவுக்கு சாதகமாக மாறியது. ஹெரி ப்றூக், ஜோ ரூட் ஆகிய இருவரும் மிகத் திறமையாக இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு நான்காம் நாளன்று குவித்த சதங்கள் இறுதியில் வீண் போயின. கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா அதன் முதல் இன்னிங்ஸில் 224 ஓட்டங்களையும் இங்கிலாந்து 247 ஓட்டங்களையும் இந்தியா 2ஆவது இன்னிங்ஸில் 396 ஓட்டங்களையும் பெற்றன. எண்ணிக்கை சுருக்கம் இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 224 (கருண் நாயர் 57, சாய் சுதர்சன் 38, வொஷிங்டன் சுந்தர் 26, கஸ் அட்கின்சன் 33 - 5 விக்., ஜொஷ் டங் 57 - 3 விக்.) இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 247 (ஸக் க்ரோவ்லி 64, ஹெரி ப்றூக் 53, பென் டக்கெட் 43, ஜோ ரூட் 29, ப்ரசித் கிரிஷ்ணா 62 - 4 விக்., மொஹம்மத் சிராஜ் 86 - 4 விக்.) இந்தியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 396 (யஷஸ்வி ஜய்ஸ்வால் 118, ஆகாஷ் தீப் 66, ரவிந்த்ர ஜடேஜா 53, வொஷிங்டன் சுந்தர் 53, த்ருவ் ஜுரெல் 34, ஜொஷ் டங் 125 - 5 விக்., கஸ் அட்கின்சன் 127 - 3 விக்., ஜெமி ஓவர்ட்டன் 98 - 2 விக்.) இங்கிலாந்து வெற்றி இலக்கு 374 ஓட்டங்கள் - 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 367 (ஹெரி ப்றூக் 118, ஜோ ரூட் 103, பென் டக்கெட் 54, மொஹமத் சிராஜ் 104 - 5 விக். , ப்ரதிஷ் கிரிஷ்ணா 126 - 4 விக்., ) ஆட்டநாயகன்: மொஹமத் சிராஜ் (86 - 4 விக்., 104 - 5 விக்.) இந்தியாவுக்கான தொடர்நாயகன்: ஷுப்மான் கில் ( 4 சதங்களுடன் 754 ஓட்டங்கள்) இங்கிலாந்துக்கான தொடர்நாயகன்: ஹெரி ப்றூக் (2 சதங்களுடன் 481 ஓட்டங்கள், 14 பிடிகள்) https://www.virakesari.lk/article/221803

முஸ்லிம்களின் இழப்புகளும் நீதிக்கான கோரிக்கைகளும்

1 month 3 weeks ago
1990ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி, காத்தான்குடியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது பயங்கரவாதிகள் நடாத்திய தாக்குதலில் 103 முஸ்லிம்கள் மரணமடைந்தனர். இந்தக் கொடூரச் சம்பவத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் “தேசிய ஷுஹதாக்கள் தினம்” அனுஷ்டிக்கப்படுகிறது. அதற்கமைய, இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) 35வது ஷுஹதாக்கள் தின நிகழ்வுகள், ஹுஸைனியா மற்றும் மீரா ஜும்ஆ மஸ்ஜித்களில் நடைபெற்றன. இதன்போது, கத்தமுல் குர்ஆன் மற்றும் துஆ பிரார்த்தனைகள் இடம்பெற்றது. இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், பிரதித் தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் அப்துல் வாசித், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள், ஷுஹதாக்களின் குடும்பத்தினர், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். அத்தோடு, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை காத்தான்குடி கிளை, வர்த்தக சங்கம், தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் மற்றும் இரு பள்ளிவாயல்களின் நிர்வாகம் ஆகியன இணைந்து ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர். அப்பிரகடனத்தில் 1985ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரையான யுத்த காலப் பகுதியில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் காணி இழப்புகள் தொடர்பில் ஒரு நீதியானதும் நியாயமானதும் சுதந்திரமானதுமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் ஏழு கோரிக்கைகளை முன்வைத்து காத்தான்குடி பிரதேச செயலாளரிடம் மஹஜர் கையளிக்கப்பட்டது. அவ்வாறே, இன்று காத்தான்குடியில், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. – ஊடகப்பிரிவு https://madawalaenews.com/25792.html முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரனைகள் – சர்வதேச மயமாக்கப்பட வேண்டும் என ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி. முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்த வேண்டுமென காத்தான்குடியில் இன்று (03) அனுஷ்டிக்கப்பட்ட 35வது தேசிய ஷுஹதாக்கள் தின நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஊடகங்களிடம் தெரிவித்தார். 1990ம் ஆண்டு ஆகஸ்ட் 03ம் திகதி ஹுஸைனியா பள்ளிவாயலிலும், மீரா ஜும்ஆ பள்ளிவாயலிலும் நடந்த படுகொலைச்சம்பவங்களில் ஷஹீதாக்கப்பட்ட 103 ஷுஹதாக்கள் நினைவாக இன்று துஆப்பிரார்த்தனை காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலாமா சபை மற்றும் ஊர் ஜமாஅதார்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே மேற்படி கருத்தைத் தெரிவித்தார். அத்துயர நினைவுகளை மீட்டிக்கொள்வதற்கும் ஷுஹதாக்களுக்காக பிரார்த்தனை செய்வதற்குமான ஒரு சந்தர்ப்பமாக இது வாய்த்ததையிட்டு பெருமகிழ்வுறுகிறோம். இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான சம்பவங்களின் படிப்பினைகளை சரிவர உணர்ந்து இனங்களுக்கிடையிலான உறவை மீளக்கட்டியெழுப்புவதில் எமது கட்சியும், கட்சித்தொண்டர்களும் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டும். அத்திடசங்கர்ப்பத்தை நாம் இந்த ஷுஹதாக்கள் நினைவு நாளில் உறுதி பூணுவது மாத்திரமல்லாமல், இத்துன்பியல் சம்பவங்கள் குறித்த வரலாற்றையும் சரிவர தொடர்ந்தும் மனதிலிருத்தி முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்த வேண்டியது முக்கியமானதாகும் எனத்தெரிவித்தார். https://madawalaenews.com/25780.html

செம்மணி மனித புதைகுழி: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

1 month 3 weeks ago
செம்மணி புதைகுழிகளை உருவாக்கியது யார்………மூச்……. அது மிகவும் இரகசியமாகவே பாதுகாக்கப்படும்.🤫

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

1 month 3 weeks ago
உங்கள் பிரச்சினை என்னவென்று புரியவில்லை😂. ரஞ்சித் விளக்கமாக எழுதியிருக்கிறார், அதற்கு விருப்பக் குறி இட்டிருக்கிறீர்கள். ரஞ்சித் எழுதிய அதே விடயத்தை ஏனையோர் சுருக்கமாக எழுதியிருக்கிறார்கள். அவர்கள் சொல்வது புரட்டு என்று வாதிடுகிறீர்கள்! நான் நினைக்கிறேன், இன்னும் நீங்கள் பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டுமென்ற விருப்பத்தில், வெளியே இருந்து வரும் உங்கள் விருப்பத்திற்கு மாறான தரவுகளை உதாசீனம் செய்து விட்டு ஒரு குமிழிக்குள் அமர்ந்திருக்கிறீர்கள்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம்: கையெழுத்து விவகாரம் குறித்து தமிழரசுக்கட்சியின் தீர்மானம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

1 month 3 weeks ago
புலவர், கஜேந்திரகுமார் பா.உவுக்குத் தான் தன் ஆசனத்தைக் காப்பாற்றும் "தமிழரசு எதிர்ப்பு" அரசியல் இந்த நேரம் தேவைப்படுகிறதென்றால், அரசியல் வாதியல்லாத உங்களுக்கும் அதே பிரச்சினையா? கடிதத்தை தமிழரசுக் கட்சியின் பங்களிப்பில்லாமலே அனுப்பலாம். விளைவில் மாற்றம் இருக்காது. இங்கிலாந்தில் (பெயரளவிலாவது) பரிஸ்ரரான கஜேந்திரகுமார் அவர்கள், இதை முன்னின்று இயக்கி, றோகிங்கியாக்கள் பாவித்த மாற்று வழி மூலம் ICJ முன் இலங்கையின் வழக்கைக் கொண்டு செல்ல என தடை இருந்தது/ இப்போது இருக்கிறது என்று சொல்லுங்கள்?

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம்: கையெழுத்து விவகாரம் குறித்து தமிழரசுக்கட்சியின் தீர்மானம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

1 month 3 weeks ago
ஒற்றுமையாக இருந்து, இனத்துக்கு நன்மை செய்ய மாட்டோம். மறு பக்கம் அன்றைய தலையாட்டிகளான.... டக்ளஸ் மற்றும் சந்திரகுமாரோடு கூட்டணி அரசியல் செய்வோம். - சுமந்திரனின் தமிழரசு கட்சி. - அடுத்த தேர்தலுக்கு... ஊருக்குள் வருகின்ற தமிழரசு கட்சிகாரனுக்கு... செருப்பு பிய்ய, சம்பவம் காத்திருக்கு.

செம்மணி மனித புதைகுழிகளை அடையாளம் காண நவீன கருவிகள்!

1 month 3 weeks ago
செம்மணி புதைகுழி பகுதிகளில் ஸ்கேன் ஆய்வு பணிகள் இன்று முதல் ஆரம்பம்! செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கேன் நடவடிக்கைகள் இன்றைய தினம் (04) முன்னெடுக்கப்பட்டது. ஜி.பி.ஆர். ஸ்கேனர் (தரையை ஊடுருவும் ரேடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்கப்பெறவில்லை அந்நிலையில், ஶ்ரீஜெயவர்வத்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கேனர் கருவியை யாழ் பல்கலைகழகம் ஊடாக பெற்று அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்நடவடிக்கையை அடுத்து , இன்றைய தினம் குறித்த ஸ்கேனரை பயன்படுத்தி ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களான ஆடைகள் மற்றும் பிற பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காட்டும் வகையில் நாளைய தினம் (05)செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் மதியம் 1.30 மணி முதல் , மாலை 5 மணி வரையில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சான்று பொருட்களை பார்வையிட வருபவர்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441747

செம்மணி மனித புதைகுழி: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

1 month 3 weeks ago
செம்மணி அகழ்வுப் பணிகளில் திருப்தி உள்ளது!- ஜகன் குணத்திலக. ”இதுவரை நடைபெற்ற செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் திருப்தி உள்ளது” என மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் ஜகன் குணத்திலக தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழிகள், அமைந்துள்ள சித்துபாத்து மயானத்தினை இன்று நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் இன்று செம்மணிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். மேலும் செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருடனும் குறித்த குழுவினர் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர். அத்துடன் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளுடனும் மற்றும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான நிலையத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகள் இன்று இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் இது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் ஜகன் குணத்திலக கருத்துத் தெரிவிக்கையில் ” செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டோம். அகழ்வு பணிகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டுள்ளோம். இன்று நாம் அவதானித்த விடயங்களை நாம் அறிக்கையாக வெளியிடுவோம். கொழும்பு சென்ற பின்னர் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவருடனும் ஏனைய ஆணையாளர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இந்த வார இறுதிக்குள் செம்மணி தொடர்பான அறிக்கையை நாம் வெளியிடுவோம். இதுவரை நடைபெற்ற அகழ்வுப்பணிகளில் திருப்தி உள்ளது. எனவே அதனை நாம் அறிக்கையில் சுட்டிக்காட்டவுள்ளோம். இங்கு நடைபெறுகின்ற வியடம் உணர்வு சார்ந்த விடயமாக காணப்படுகின்றது. எனவே ஊடகங்கள் இதனை அறிக்கையிடும்போது இதனை உணர்வு ரீதியாக அறிக்கையிடாது, யாதார்த்தமாக செய்திகளை அறிக்கையிடுமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம். யாழ்ப்பாணத்தில் 1996ஆம் ஆண்டு தொடக்கம் 1997 ஆம் ஆண்டு கால பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு 2003ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையை மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணைத்தளத்தில் பதிவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். செம்மணி தொடர்பாக இதுவரையில் எம்மால் எந்த அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே மிக விரைவில் அனைத்து அறிக்கைகளையும் வெளியிடுவதற்கு நாம் தயாராகவுள்ளோம் ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1441775

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும் - அருட்தந்தை மா.சத்திவேல்

1 month 3 weeks ago
செம்மணி புதைகுழி நீதிக்காக பிளவுகளை உண்டு பண்ணும் அரசியலை தவிர்த்து தமிழ் தேச மக்களாக எழுந்து நிற்க அரசியல் தலைமைகள் ஒன்று பட வேண்டும் - அருட்தந்தை மா.சத்திவேல் 04 Aug, 2025 | 02:31 PM செம்மணி புதைகுழி நீதிக்காக பிளவுகளை உண்டு பண்ணும் அரசியலை தவிர்த்து தமிழ் தேச மக்களாக எழுந்து நிற்க அரசியல் தலைமைகள் ஒன்று பட வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று திங்கட்கிழமை (04) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செம்மணி சமூக புதைகுழியில் இருந்து தினமும் அகழ்ந்தெடுக்கப்படும் மனித எச்சங்கள் மனித உள்ளம் கொண்டவர்களை அதிர்ச்சிகுள்ளும் ஆழ்ந்த வேதனைக்குள்ளும் தள்ளுவதோடு படுகொலை செய்யப்பட்டோரின் அவல குரல் நீதியை தேடும் மக்களின் இதயத்தை தட்டிக் கொண்டிருக்கையில் கிரிசாந்தி குமாரசாமி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் சோம ரத்தின ராஜபக்சவின் மனைவி ஜனாதிபதி, பிரதம மந்திரி, நீதி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள சர்வதேச விசாரணைக்கான கடிதம் பேரினவாத இன அழிப்பிற்கும் இனப்படுகொலைக்கும் துணை நிற்கும் இலங்கையின் நீதித் துறை, அரசியல் அதிகாரம், அரசியல் கட்டமைப்பு தமிழர்களுக்கு நீதியை நிலைநாட்டப் போவதில்லை என்பதை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தி உள்ளது. கடந்த காலங்களில் நாட்டின் அரசியல் அவலங்களையும், அரசியல்வாதிகளின் அதிகார துஸ்பிரயோகங்களையும் மட்டும் அல்ல யுத்த அவலங்களையும் வெளிக்கொண்டு வந்து தமிழர்களுக்கு நீதிக்கான குரலாக உண்மையை வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளர்கள், சாட்சிகள், சட்டத்தரணிகள் காணாமலாக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்டனர். விசேடமாக கிரிசாந்தி கொலை வழக்கின் சட்டத்தரணியாக முன் நின்ற குமார் பொன்னம்பலம் அவர்கள் பட்ட பகலில் நடுவீதியில் கொலை செய்யப்பட்டமை உலகமே அறிந்த விடயம்.அதற்கான நீதி விசாரணையை பேரினவாத ஆட்சியாளர்கள் புதைகுழியில் தள்ளியுள்ள நிலையிலேயே கிரிசாந்தி கொலை வழக்கில் குற்றவாளியாய் சிறை தண்டனை அனுபவிக்கும் சோம ரத்தின ராஜபக்ச 400க்கு அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் விதைக்கப்பட்டுள்ளமைக்கு சாட்சியாக இன்றும் உள்ளதோடு தற்போது சர்வதேச விசாரணை வேண்டும் என மனைவி மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கும் நிலையில் அக் குற்றவாளியின் உயிர் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு நீதிக்கான மக்கள் ஆட்சியாளர்களுக்கு வேண்டுகோள் விடுகின்றனர். தமிழின படுகொலையோடும் யுத்த குற்றங்களோடும் தொடர்புபட்ட படைத்தரப்பின் உயர் மட்ட அதிகாரிகள் கடந்த கால ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாக பாதுகாக்கப்பட்டதோடு கௌரவ பட்டம் பதவி உயர்வு வழங்கப்பட்டதையும் இராஜதந்திர அந்தஸ்தோடு வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டதையும் நாம் அறிவோம். இந்தப் பின்னணியில் கொலை குன்றத்தண்டனை கைதியான சோமரத்தின தனது மனைவி மூலம் தமக்கு நீதி கிட்டவில்லை. தண்டிக்கப்பட வேண்டிய உயர் அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை. இலங்கையின் நீதி விசாரணையில் நம்பிக்கை இல்லை. சர்வதேச விசாரணை வேண்டும். அங்கு நான் சாட்சி கூற ஆயத்தமாக உள்ளேன்" என கூறியுள்ளமை இதுவரை காலமும் இலங்கை அரசின் மீது நம்பிக்கை இழந்து சர்வதேச நீதி விசாரணையை கோரி நிற்கும் தமிழர்களின் குரலுக்கு வலு சேர்பதாகவே உள்ளது. கறுப்பு ஜூலை 83 இனப்படுகொலை நினைவு நாளில் குத்தாட்டத்தோடு உல்லாச பயணம் மேற்கொள்ள அரச ஆதரவளித்த தற்போதைய ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மேடைகளில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடக்கும் ஆனால் எவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்தவர் சோம ரத்னவின் மனைவியின் கடிதத்திற்கு உண்மை உள்ளவராக இருப்பாரா? இனப்படுகொலையாளிகளான முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கர், மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு ஆதரவளித்து இனப்படுகொலையை அங்கீரத்ததோடு படையினரின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்தவர்கள் சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்பது தெளிவு.எனினும் இக் கடிதம் ஆட்சியாளர்களுக்கு சவாலே.பதில் கொடுக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.நாங்களும் அதனை உறுதி படுத்துகிறோம். தமிழ் அரசியல் தலைமைகள் சர்வதேச விசாரணைக்கான ஒரு துரும்புச் சீட்டாக சோமரத்னவின் மனைவி ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தை பாவித்து சர்வதேசத்திற்கு ஒருமித்த குரலோடு அழுத்தம் கொடுக்க வேண்டும்.செம்மணி சமூக புதைகுழி இனப்படுகொலையின் கொடூரத்தை மறந்தவர்களாக இருந்த எம்மை எம் ஈழ மண் தாய் எழுச்சி யுற்று உண்மைகளை வெளிக்கொணர்ந்து நீதிக்கான குரலாக நாம் ஒன்று திரள அழைக்கையில் பிளவுகளை உண்டு பண்ணும் அரசியலை தவிர்த்து தமிழ் தேச மக்களாக எழுந்து நிற்க அரசியல் தலைமைகள் ஒன்று பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம். https://www.virakesari.lk/article/221780

பணயக்கைதிகளை பாதுகாக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடிய இஸ்ரேல்.

1 month 3 weeks ago
நிபந்தனைகளை இஸ்ரேல் பூர்த்தி செய்தால் பணயக்கைதிகளுக்கு உதவ தயார் – ஹமாஸ் தெரிவிப்பு! இஸ்ரேல் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், காசாவில் வைத்திருக்கும் பணயக்கைதிகளுக்கு உதவி வழங்க செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக ஹமாஸ் ஞாயிற்றுக்கிழமை (04) தெரிவித்துள்ளது. 2023 அக்டோபர் 7 முதல் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதி எவியதார் டேவிட்டின் இரண்டு காணொளிக்களை வெளியிட்டதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஹமாஸ் குழுவின் இந்த அறிக்கை வந்துள்ளது. காணொளியில் தற்போது 24 வயதான பணயக்கைதி எலும்புக்கூடு போல் தோற்றமளிக்கிறார். அவரது தோள்பட்டையில் காயத்தின் தழும்புகள் காணப்படுகின்றன. இந்த காட்சிகள் பெரும் விமர்சனத்தைத் தூண்டின, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் இந்த காணொளிகள் “பயங்கரமானவை” என்று முத்திரை குத்தினார். மேலும் அவை “ஹமாஸின் காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்துகின்றன” என்று கூறினார். இதனிடையே ஞாயிற்றுக்கிழாமை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பணயக்கைதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரியுள்ளார். இந் நிலையில் இது குறித்து பதிலளித்துள்ள ஹமாஸின் இராணுவ செய்தித் தொடர்பாளர் அபு ஒபெய்தா, எதிரி கைதிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதற்காக செஞ்சிலுவைச் சங்கத்தின் எந்தவொரு கோரிக்கைக்கும் நேர்மறையாக ஈடுபடவும் பதிலளிக்கவும் தயாராக உள்ளோம். ஆனால், இஸ்ரேல் நிரந்தரமாக ஒரு மனிதாபிமான வழித்தடத்தைத் திறப்பது, உதவி விநியோகிக்கப்படும்போது வான்வழித் தாக்குதல்களை நிறுத்துவது உள்ளிட்ட சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் பட்டினி அல்லது ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் ஆறு பேர் இறந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர் தொடங்கியதிலிருந்து இந்த எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது. இதில் 93 சிறுவர்களும் அடங்குவர். பல சர்வதேச நிறுவனங்கள் பிரதேசம் முழுவதும் பஞ்சம் பரவி வருவதாக எச்சரித்துள்ளன. இஸ்ரேலிய முற்றுகை காரணமாக கடந்த மார்ச் 2 முதல் மே 19 வரை காசாவிற்குள் எந்த உதவியும் வரவில்லை – அன்றிலிருந்து உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பொருட்களை வழங்குவது குறைவாகவே உள்ளது. இதற்கிடையில், பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் நேற்று காசாவில் குறைந்தது 80 பேர் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களால் இறந்ததாகவும் கூறினர். https://athavannews.com/2025/1441727

செம்மணி மனித புதைகுழி: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

1 month 3 weeks ago
செம்மணிக்கு மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளர்கள் விஜயம் Published By: Digital Desk 2 04 Aug, 2025 | 02:33 PM செம்மணி மனித புதைகுழிகள் அகழ்வு பணிகளை மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளர்கள் நேரில் பார்வையிட்டனர் மற்றும் மனித புதைகுழிகள் தொடர்பிலான சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைக்குழு தயார் என்று தெரிவித்துள்ளனர். மனித உரிமை ஆணைக்குழுவின் கலாநிதி ஜகன் குணத்திலாக, பேராசிரியர் தை. தனராஜ் மற்றும் பேராசியர் பாத்திமா பர்ஷான ஹனீபா ஆகியோர் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் உட்பட குழுவினர் சமீபத்தில் செம்மணி பகுதியில் அகழ்வு பணிகளை ஆய்வு செய்தனர். புதைகுழிகளை நேரில் பார்வையிட்டு ஊடகவியலர்களிடம் கருத்து தெரிவித்த ஆணையாளர்கள், அகழ்வு பணிகள் தொடர்பிலும் விசாரணைகள் தொடர்பிலும் தகவல் பெற்றுள்ளோம் என்று கூறினர். கிருஷாந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராஜபக்சே செம்மணி புதைகுழிகள் தொடர்பான சாட்சியங்களை வழங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, சிறையில் அவனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மனித உரிமை ஆணைக்குழு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என உறுதி தெரிவித்தனர். மேலும், 1996-97 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் விசாரணைகள் குறித்து 2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை மனித உரிமை ஆணைக்குழு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/221779

19 வருடங்களிற்கு முன்னர் அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்ட அக்சன்பாம் மனிதாபிமான பணியாளர்கள்

1 month 3 weeks ago
மூதூரில் தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு 19 ஆண்டுகள் பூர்த்தி 04 Aug, 2025 | 01:14 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை மூதூர் பகுதியில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி நடந்த தாக்குதல் சம்பவத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனமான அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (4) 19 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்நிலையில், தங்களுடைய உறவுகள் படுகொலை செய்யப்பட்டு, 19 வருடங்களாகியும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றார்கள். 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி வழமை போல் கடமையின் நிமித்தம் மூதூரில் உள்ள அலுவலகத்துக்குச் சென்றிருந்த பணியாளர்கள், மூதூர் பகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலையின் காரணமாக அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத காரணத்தால், அலுவலகத்திலேயே தங்கியிருந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மூதூர் பொது வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் இயங்­கி­வந்த அக்ஷன் பாம் எனும் சர்­வ­தேச தொண்டர் நிறு­வ­னத்தில் கட­மை­யாற்றிக்கொண்­டி­ருந்த 17 பணி­யா­ளர்­க­ளையும் ஆயுதம் தரித்த சீரு­டைக்காரர்கள் நிறு­வன வளா­கத்­துக்குள் நுழைந்து, பணியாளர்களை நிலத்தில் ­குப்புறப்ப­டுக்கச் செய்து, அவர்களை, பின்பக்கத் தலை­யில் சுட்டுப் படு­கொ­லை­ செய்ததாக அன்­றைய செய்­திகளில் குறிப்பிடப்பட்டன. இந்த சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 17 உள்ளூர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு: 1. ரிச்சட் அருள்ராஜ் (வயது – 24) 2. முத்துலிங்கம் நர்மதன் (வயது – 23) 3. சக்திவேல் கோணேஸ்வரன் (வயது – 24) 4. துரைராஜா பிரதீபன் (வயது – 27) 5. சிவப்பிரகாசம் ரொமிலா (வயது – 25) 6. கணேஷ் கவிதா (வயது – 27) 7. எம். ரிஷிகேசன் (வயது – 24) 8. அம்பிகாவதி ஜெசீலன் (வயது – 27) 9. கனகரத்தினம் கோவர்த்தனி (வயது – 27) 10. வயிரமுத்து கோகிலவதனி (வயது – 29) 11. ஏ.எல்.மொகமட் ஜௌபர் (வயது – 31) 12. யோகராஜா கோடீஸ்வரன் (வயது – 30) 13. சிங்கராஜா பிறீமஸ் ஆனந்தராஜா (வயது – 32) 14. ஐ. முரளிதரன் (வயது – 33) 15. கணேஷ் ஸ்ரீதரன் (வயது – 36) 16. முத்துவிங்கம் கேதீஸ்வரன் (வயது – 36) 17. செல்லையா கணேஷ் (வயது – 54) https://www.virakesari.lk/article/221770

செம்மணி மனித புதைகுழிகளை அடையாளம் காண நவீன கருவிகள்!

1 month 3 weeks ago
செம்மணியில் மேலும் மனிதப் புதைகுழிகளா? ; கணிப்பீடு செய்ய ஸ்கேன் நடவடிக்கை 04 Aug, 2025 | 01:25 PM செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கான் நடவடிக்கைகள் திங்கட்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டது. ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்கப்பெறவில்லை அந்நிலையில், ஶ்ரீஜெயவர்வத்தன புர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கானர் கருவியை யாழ் பல்கலைகழகம் ஊடாக பெற்று அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்நடவடிக்கையை அடுத்து , திங்கட்கிழமை (04) குறித்த ஸ்கானரை பயன்படுத்தி ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களான ஆடைகள் மற்றும் பிற பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காட்டும் வகையில் செவ்வாய்க்கிழமை (05) செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் மதியம் 1.30 மணி முதல் , மாலை 5 மணி வரையில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சான்று பொருட்களை பார்வையிட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221771

தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தித் தொழிற்சாலை திறப்பு!

1 month 3 weeks ago
தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தித் தொழிற்சாலை திறப்பு! தூத்துக்குடியில் 1119.67 கோடி இந்திய ரூபாய் செலவில் 114 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் 16 ஆயிரம் கோடி இந்திய ரூபாயின் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ரூ.1119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் வி.எப்-6, வி.எப்-7 ஆகிய வகை கார்கள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில், வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை இன்று திறக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார். மேலும், கார் முதல் விற்பனை தொடக்க விழாவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, கனிமொழி எம்.பி. , வின்பாஸ்ட் கார் நிறுவன நிர்வாகிகள், அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441711

பணயக்கைதிகளை பாதுகாக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடிய இஸ்ரேல்.

1 month 3 weeks ago
பணயக்கைதிகளை பாதுகாக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடிய இஸ்ரேல். ”காசாவில் சிறைபிடிக்கப்பட்ட தங்கள் நாட்டு பணயக் கைதிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்து கொடுக்க, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of the Red Cross) முன்வர வேண்டும்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். கடந்த இரண்டரைக்கு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர் பலரை சுட்டுக் கொன்றதுடன், 250 பேரை பணயக் கைதிகளாக பிடித்து சென்றுள்ளனர். இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்ட பயணக் கைதிகளில் பலர் இறந்து விட்ட நிலையில், சிலர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 49 பேர் ஹமாஸ் படையினரின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் பணயக் கைதிகளை விடுவிக்கக் கோரி ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, இஸ்ரேலை அடிபணிய வைக்கும் விதமாக, தங்களது பிடியில் உள்ள இஸ்ரேல் பணயக்கைதி ஒருவரின் வீடியோவை ஹமாஸ் வெளியிட்டுள்ள நிலையில் குறித்த வீடியோவானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் அந்த நபர், மண்வெட்டியுடன் தனக்கு தானே புதைக்குழியை வெட்டிக் கொள்ளும் காட்சிகள் குறித்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், ஹமாஸ் பிடியில் இருக்கும் பணயக்கைதிகளுக்கு உதவ சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தலையிட வேண்டும் என்றும், அங்குள்ள தங்கள் நாட்டு பணயக் கைதிகளுக்கு தேவையான உணவு, மருத்துவ சேவை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, சிறைபிடிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை சந்திக்க ஹமாஸ் அனுமதிக்க வேண்டும் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441722
Checked
Mon, 09/29/2025 - 00:45
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed