புதிய பதிவுகள்2

வாழ்வோரும் இறந்தோரின் எலும்புகளும்  நீதியையே, மாற்றத்தையே   விரும்புகின்றன — கருணாகரன் —

1 month 3 weeks ago
வாழ்வோரும் இறந்தோரின் எலும்புகளும் நீதியையே, மாற்றத்தையே விரும்புகின்றன August 3, 2025 — கருணாகரன் — யாழ்ப்பாணம் – செம்மணிப்பகுதியில் அகழப்படும் மனிதப்புதைகுழிகளிலிருந்து இதுவரை(30.07.2025) 115 க்கு மேற்பட்டமனித எலும்புக்கூடுகள்(எச்சங்கள்) மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் பெண்கள், குழந்தைகள் அல்லது சிறார்களின் எலும்புத் தொகுதிகளும் இனங்காணப்பட்டுள்ளன. இதயத்தை உலுக்கும் விதமாக இருப்பது, இந்த எலும்புக்கூடுகளோடு குழந்தைகளின் பாற்புட்டிகளும் விளையாட்டுப்பொருட்களும் சேர்ந்து கிடப்பது. அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன. இன்னும் இன்னும் என்னென்னவெல்லாம் மீட்கப்படுமோ? என்று தெரியவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் உண்மை. இந்த மீட்பில் ஒரு கூட்டுக் கொலை நடந்திருக்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது. இருந்தாலும் இதையிட்டு அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் நாம் உடனடியாக வந்து விடமுடியாது. காரணம், இது முறைசார் ஆராய்ச்சிக்குரியது. முறையான ஆராய்ச்சிக்குப் பின்னரே தெளிவான முடிவுகளை- தீர்வை நோக்கிச் செல்லமுடியும். மட்டுமல்ல, சட்டம், நீதி, நீதிகோரல் எனப் பல அடுக்குகளோடு தொடர்புபட்டது. என்பதால் நிதானமாகவே இதைக் கையாள வேண்டும். இதுவரையில் மீட்கப்பட்ட எலும்புத் தொகுதிகள் சில உண்மைகளைச் சொல்லவிளைகின்றன. சம நேரத்தில் சில கேள்விகளையும் எழுப்புகின்றன. உண்மைகள்: 1. குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். செம்மணியில் பலர் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர் என்று நீண்டகாலமாகவே தெரிவிக்கப்பட்டு வந்த உண்மை நிரூபணமாகியுள்ளது. 2. மீட்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளோடு அடையாளம் காணப்பட்டுள்ள உடை, பிள்ளைகளின் விளையாட்டுப்பொருட்கள் போன்றவை எந்தக் காலகட்டத்துக்குரியவை என்பதைச் சொல்கின்றன. அல்லது அவற்றை வைத்து காலகட்டத்தை ஓரளவு தீர்மானிக்கலாம். முறைசார் ஆய்வுகளுக்கு இவையும் வலுச்சேர்க்கக்கூடியன. ஆகவே கொலைகள் நடந்த காலத்தைத் தெளிவாக அடையாளம் காண முடியும். 3. இவை அரசியல் ரீதியான படுகொலைகள். 4. இந்தக் கொலைகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். 5. மிகப் பெரிய துயரம். மிகப் பெரிய அநீதி. மிகப்பெரிய அவலம். மிகக்கொடிய செயல். மனச்சாட்சியை உலுக்கும் இந்த விடயம். 6. கொல்லப்பட்டவர்களை வெறுமனே இறந்தவர்கள் என்ற கணக்கில் சேர்க்க முடியாது. அப்படிச்சேர்த்தால், அப்படிச் சேர்ப்பதற்கு அனுமதித்தால் அது கொல்லப்பட்டோருக்கு இழைக்கும் அநீதியாகும். கொலைகளுக்கு உடந்தையாகும். 7. இது மிக மோசமானமனித உரிமை மீறல் செயல். மக்களின் வாழும் உரிமை மறுதலிக்கப்பட்டுள்ளது. ஆகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் வழங்க வேண்டும். இப்படி இந்த உண்மைகளின் பட்டியல் நீள்கிறது. அடுத்த்தாக இது குறித்து எழுகின்ற கேள்விகள் – 1. இந்தப் புதைகுழிகளைக் குறித்து சமூகத்தின் புரிதல் என்ன? இந்தக் கேள்வி ஏன் எழுகின்றதென்றால், தினமும் மீட்கப்படும் எலும்புக்கூடுகள் வெறுமனே புள்ளிவிவரங்களாக முடிந்து விடுவதாகவே தெரிகிறது. அதைக் கடந்து, இவை சமூகத்தில் வேறு எத்தகைய உணர்வலைகளையும் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. அரசியற்கட்சிகள், ஊடகங்கள், மனிதஉரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் போன்ற தரப்புகளும் சரியான அவதானத்தைக் கொள்ளாமலே உள்ளன. அல்லது இது குறித்து எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது? இந்தப்பிரச்சினையை எப்படிக்கையாள்வது என்பது தொடர்பில் அவற்றுக்குக் குழப்பங்கள் இருக்கலாம். ஆனாலும் இந்தத் தடுமாற்றமும் குழப்பமும் தாமதமும் ஏன்? 2. புதைகுழிகளில் மீட்கப்படும் என்புக்கூடுகள் சொல்லுகின்ற சேதிகளின் அடிப்படையில் நோக்கினால், இவற்றில் குடும்பங்களாகக் கொல்லப்பட்டிருக்கக் கூடிய சூழலும் உண்டு. அல்லது, தாய் அல்லது தந்தை அல்லது கொல்லப்பட்டோருடன் கூட இருந்த சிறுவர்கள், குழந்தைகளும் சேர்த்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாம். அப்படியென்றால், அது யார்? அதைக் கண்டறிவதில் ஏன் தாமதங்கள்? குடும்பங்களாகக் கடத்தப்பட்ட, கைது செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட விவரங்களைத் தேடினால் இதைக் கண்டறியக்கூடியதாக இருக்கும். ஆனால், அப்படியான சம்பவங்கள் கடந்த காலத்தில் பெருமளவில் நடந்திருக்கிறதா? அதற்கான முறைப்பாடுகள் எங்காவது பதிவு செய்யப்பட்டுள்ளனவா? என்பது பற்றிச் சரியாகத் தெரியவில்லை. அப்படியில்லை என்றாலும், அவ்வாறு காணாமலாக்கப்பட்டோர் அல்லது கைது செய்யப்பட்டோர் பற்றி சம்மந்தப்பட்ட உறவினர்கள் எவராவது இப்போது கூட முறையிடலாம். விவரங்களை வெளியிடலாம். அது ஏன் நிகழாதிருக்கிறது? 3. இந்தப் புதைகுழி விடயம்1996 லிருந்து நீடிக்கிறது. அதாவது, செம்மணிப்பகுதியில் 600 க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டது. ஏறக்குறைய அது மெய்யென இன்றைய இந்த எலும்புத்தொகுதிகளின் மீட்புகள் உரைக்கின்றன. என்றால், இதைச் சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் நீதிக்கான கோரிக்கையாக ஏன் முன்னிறுத்த முடியாமலுள்ளது? 4. 100 க்கு மேற்பட்ட மனித எலும்புத்தொகுதிகளும் அவற்றோடான எச்சங்களும் மீட்கப்பட்டன என்ற சேதிக்கு அப்பால், இது தொடர்பாக அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் என்னவாக இருக்கவுள்ளது? இந்த அகழ்வுக்கு அரசாங்கம், நீதி அமைச்சின் வழியாக ஒரு தொகை பணத்தை உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளது. என்றால், இந்த அகழ்வை அரசாங்கம் ஆதரிக்கிறது என்றே அர்த்தமாகும். அப்படியென்றால், அடுத்த கட்டமாக இதைப்பற்றிய முறைசார் ஆய்வுக்கும் அரசாங்கம் ஒத்துழைக்கும் எனத் தெரிகிறது. அந்த முறைசார் ஆய்வு சர்வதேச நிபுணத்துவத்துடன் நடக்குமா? உள்நாட்டு மட்டத்தில் நடக்குமா? என்பது கேள்வியே! சரி, அப்படித்தான் ஆய்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வந்தால், அடுத்த கட்டமாக இவற்றோடு தொடர்பான ஏனைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும். முக்கியமாக கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது எந்தளவுக்குச் சாத்தியமாகும்? இதைச்சாத்தியப்படுத்துவது எப்படி? அதில் எத்தகைய பங்களிப்புகளை – தூண்டல்களை – யாரெல்லாம் செய்யவேண்டும்? 5. செம்மணிப் புதைகுழியை மட்டும் கவனப்படுத்தப்பட வேண்டுமா? மன்னார், கொக்குத்தொடுவாய் மற்றும் கிழக்குமாகாணத்தில் பல்வேறு இடங்கள் என அடையாளம் காணப்பட்ட – சந்தேகிக்கப்படும் புதைகுழிகளைப் பற்றிய கரிசனைகள் எந்தளவுக்கு உள்ளன? அவற்றில் புதைக்குப்பட்ட உண்மைகளுக்கும் புதைக்கப்பட்டோருக்குமானா நீதி என்ன? அதை எப்படிப் பெறுவது? அதற்கான குரல்கள் ஏன் கூட்டாக முன்னெடுக்கப்படாமல் உள்ளன? 6. இந்த மாதிரியான புதைகுழிகளைக் குறித்து சிங்கள, முஸ்லிம், மலையக மக்களின் புரிதல் – அக்கறைகள் என்ன? சிங்கள, ஆங்கில ஊடகங்களின் கவனம் எப்படியுள்ளது? ஏன் இவை கவனிக்கப்படாமல் உள்ளன? அல்லது மந்தமாக இருக்கின்றன? 7. சர்வதேச சமூகம் என்று சொல்லப்படும் தரப்புகள் இவற்றைக் குறித்து எந்தளவுக்கு அக்கறை கொள்கின்றன? அந்த அக்கறையின் அளவும் பயனும் என்ன? இப்படிப் பல கேள்விகள்எழுகின்றன. இப்பொழுது நம்முன்னுள்ள பிரச்சினை, இந்த உண்மைகளை நாம் எப்படி முன்கொண்டு செல்லப்போகிறோம்? அதாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியாக இதை எப்படி மாற்றப்போகிறோம்? இரண்டாவது, இந்தக் கேள்விகளுக்கான பதிலை எப்படிக் காணப்போகிறோம்? இதற்கு ஏனைய தரப்புகளை எப்படி ஒருங்கிணைக்கலாம்? அதற்கான பொறிமுறைகள், செயற்பாட்டுத்திட்டங்கள் என்ன? போர் முடிந்து விட்டது. ஆட்சிகள்பல மாறி விட்டன. காலம் நீண்டு 15 ஆண்டுகள் கடந்து விட்டன. தீர்வுக்கான பரிந்துரைகள் பல தரப்புகளாலும் முன்வைக்கப்பட்டன. பல்வேறு யோசனைகள் பரிசீலிக்கப்பட்டன. ஆனாலும் துயரும் பிரச்சினைகளும் முடியவில்லை. போர் முடிந்தால் நாட்டின் பிரச்சினைகள் எல்லாம் தீரும் என்றே பெரும்பாலான மக்களும் நம்பினார்கள். அல்லது அப்படி நம்ப வைக்கப்பட்டனர். குறிப்பாக தென்பகுதி மக்களின் நம்பிக்கை அதுவாகவே இருந்தது. ஆனால், போர் முடிந்த பிறகும் பிரச்சினைகள் தீரவில்லை. எல்லாமே கொதிநிலையில்தான் உள்ளன. குண்டுகளும் துப்பாக்கிகளும் வெடிக்கவில்லை. கொலை மற்றும் உயிர் பற்றிய அச்சம் குறைந்துள்ளதே தவிர, இதற்கு அப்பால் வேறெதுவும் நடக்கவில்லை. பொருளாதார நெருக்கடி தணியவே இல்லை. அரசியற் பிணக்குகள் – அதிகாரப் போட்டிகள், அதிகாரப் பகிர்வுப் பிரச்சினைகள் அப்படியேதான் உள்ளன. அப்படியென்றால், அடிப்படையில் பெருங்கோளாறு இருக்கிறது என்றுதானே அர்த்தம்? உண்மையும் அதுதான். இலங்கையை மீட்க வேண்டுமானால், இலங்கையை சரியாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்றால், அடிப்படைகளைச் சரியாக்க வேண்டும். அடிப்படைகள் பல வழிகளிலும் தகர்க்கப்பட்டுள்ளன. அதைச் சரிப்படுத்தாத வரையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்றம் – முன்னேற்றம் – தீர்வு எதுவும் கிட்டப்போவதில்லை. செம்மணிப் புதைகுழி உள்ளிட்ட விடயங்கள் அப்படிச் சீர்ப்படுத்த வேண்டியவற்றில் ஒன்று. இப்படி ஒவ்வொன்றாகச் சீர்ப்படுத்தினால்தான் நாட்டில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக நீதியுணர்ச்சி வலுத்து, நடைமுறையாக வேண்டும். அரசியலில் நீதியுணர்ச்சி என்பதற்கு ஏராளம் வியாக்கியானங்கள் உண்டு. அப்படி ஒன்று இல்லை என்ற கருத்தும் உண்டு. ஆனாலும் சட்டமும் நீதியும் மக்களின் நம்பிக்கையோடும் நாட்டின் நலனோடும் சம்மந்தப்பட்டது. அதை நோக்கிச் செல்ல வேண்டும் என்றே செம்மணி என்புக்கூடுகளும் வலியுறுத்துகின்றன. ஆம், உயிரோடு உள்ளவர்கள் மட்டுமல்ல, இறந்தவர்களின் (கொல்லப்பட்டவர்களின்) எலும்புக்கூடுகளும் நீதியை – மாற்றத்தை – யே விரும்புகின்றன. அதுவே தேவை. https://arangamnews.com/?p=12224

'ஒருவனுக்கு ஒருத்தி' மனிதனின் இயல்பான குணமா? கலாசாரங்களில் பலதார மணம் எப்படி இருந்தது?

1 month 3 weeks ago
கலாசாரங்களில் பலதார மணம் எப்படி இருந்தது? பலதார மணம் நறுமணமா? நாற்றமா?? 😌😮‍💨

வனவிலங்கு திணைக்களத்திற்குச் சொந்தமான காணியினை சீதையம்மன் ஆலயத்திற்கு வழங்கத் தீர்மானம்!

1 month 3 weeks ago
வனவிலங்கு திணைக்களத்திற்குச் சொந்தமான காணியினை சீதையம்மன் ஆலயத்திற்கு வழங்கத் தீர்மானம்! வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதையம்மன் ஆலையத்திற்கு வனவிலங்கு திணைக்களத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணியினை ஆலயத்திற்கு பெற்றுக்கொடுக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்தஹேரத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தியானசாலை மண்டபத்தை திறந்து வைத்து உறையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இந்த சீதையம்மன் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்கது. இந்தியாவிலிருந்து அநேகமான பக்த அடியார்கள் வழிபாடுவதற்காக இந்த ஆலயத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். நாளுக்கு நாள் இங்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இன்று இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டு பயணிகைளை எடுத்துகொண்டால் இந்தியாவில் இருந்து தான் அதிகமான பயணிகள் வருகை தருகிறார்கள். வழிபாட்டுத் தலங்களை பார்வையிடவே அதிகமானோர் நாட்டுக்கு வருகின்றார்கள். அதிலும் சீதையம்மன் ஆலயம், கோணேஸ்வர ஆலையம், கதிர்காமம், போன்ற புனித ஸ்தலங்களுக்கு வழிபாடுகளை மேற்கொள்ள அதிகளவில் வருகை தருகின்றனர். எமது பொருளாதார நிலையை மாற்றியமைக்க வேண்டுமானால் வெளிநாட்டு பயணிகள் வருவதை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டும். இவ் வருடத்தில் 30 இலட்சம் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்க வேண்டும் என்பதே எமது இலக்காகும். தற்பொழுது 1.3சதவீதமான வெளிநாட்டு பயணிகள் வருகை தந்துள்ளனர் அதிலும் அதிகமாக வருகின்றவர்கள் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள். வெளிநாட்டு பயணிகளின் வருகையால் கடந்த ஆறு மாதகாலப்பகுதியில் 3.7 பில்லியன் டொலர்கள இலாபமாக கிடைத்துள்ளது. இந்த வருடத்திற்குள் பில்லியன் 7.5 டொலர் இலாபத்தை பெற்றால் பொருளாதாரத்தை அதிகரித்து கொள்ள முடியும். அதிகமான அடியார்களை இந்தியாவிருந்து இந்த சீதையம்மன் ஆலையத்திற்கு அழைத்து வரும் நோக்கில் இந்த ஆலயத்தினை மேலும் அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளோம். அத்தோடு இந்த பகுதியில் அதிகமான சுற்றுலா விருந்தகங்கள் அமைந்துள்ளது இந்த பிரதேசத்தை பிரதிநிதித்துவம் படுத்தி இராமயண வரலாற்றை இனைத்த வெளிநாட்டவர்கள் எதிர்வரும் காலங்களில் இங்கு வருகை தருவார்கள். மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை நுவரெலியா பிரதேசத்தி்ற்கு மேற்கொள்ளும் போது இந்த பிரதேச மக்களின் பொருளாதாரத்தை அதிகரிக்க முடியும்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1441658

வடக்கின் கல்வித் துறை பின்னடைய நிர்வாக பிரச்சனையே காரணம்!

1 month 3 weeks ago
வடக்கின் கல்வித் துறை பின்னடைய நிர்வாக பிரச்சனையே காரணம்! adminAugust 4, 2025 வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணமாக இருப்பதாக தெரிவித்த, பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருப்பதாகவும் தெரிவித்தார். வவுனியா மாவட்ட கல்வி நிலைமை மற்றும் கல்வி மறு சீரமைப்பு தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு நேற்று (03.08.25) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட கல்விசார் திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது. ஆசிரியர்கள், அதிபர்கள் பற்றாக்குறை அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆசிரியர் தொழிற்சங்கங்கள், அதிபர் தொழிற்சங்கங்கள், கல்வி நிர்வாக அதிகாரிகள் சங்கம் மற்றும் பாடசாலை மட்டங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் சிலரும் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இக்கருத்துக்களை செவிமடுத்த பிரதமர் கருத்து தெரிவித்த போது, “ஆசிரியர் நியமனங்கள் கடந்த ஐந்து வருடங்களாக வழங்கப்பட முடியாமல் இருப்பதற்கு அபிவிருத்தி உத்தியோதர்களாக உள்வாங்கப்பட்டவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அவ் வழக்கு விசாரணையில் இருப்பதே காரணம். விரைவில் இதற்கான தீர்ப்பு கிடைக்கும் என நம்புகின்றேன். அதன் பின்னர் ஆசிரியர் நியமனங்களை வழங்கவுள்ளோம். 2 “கல்வி மாணவர்களுக்கானது. அதனை நாம் சரியாக வழங்க வேண்டும். 50 மாணவர்களுக்கு குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக கவனம் செலுத்தப்படும். வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணம். விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருக்கின்றேன் எனத் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/218785/

செம்மணி மனிதப் புதைகுழியின் சர்வதேச விசாரணைக்கு சோமரத்ன ராஜபக்ச தயார் : அநுரவிற்கு பறந்த கடிதம்

1 month 3 weeks ago
சோமரத்ன ராஜபக்ச மனைவியின் கோரிக்கையை ஏற்று, அனுர தன்னை நிரூபிக்க வேண்டும்..! மனோ கணேசன் தெரிவிப்பு! “..கிருஷாந்தி குமாரசுவாமி மட்டும் அல்ல, இன்னமும் பல நூற்று கணக்கானோர் கொலை செய்யப்பட்டனர். இதை நான் 1998ம் வருடமே என் சாட்சியத்தில் சொன்னேன். இன்று ஐந்து அல்லது ஆறு மனித புதை குழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நான் சொன்னது உண்மை ஆகி உள்ளது.” “மொத்தமாக 250 முதல் 300 பேர் வரை சித்திரவதைக்கு உள்ளாகி கொன்று புதைக்க பட்டார்கள். இன்று தண்டனைக்கு உள்ளாகி இருக்கும் நானும், ஏனைய நால்வரும் மட்டும் இத்தனை பேரை கைது செய்து, சித்திரவதை செய்து, கொன்று, குழி வெட்டி, புதைக்க முடியுமா?” “யாழ்ப்பாணத்துக்கு செல்லும் பிரதான, சாலையில் அமைந்துள்ள, செம்மணி காவல் சாவடியில், பகல் நேரங்களில், அடையாளம் காட்டப்படுவோர், உடன் கைது செய்ய பட்டு, இராணுவ வாகனத்தில் , ஏற்றப்பட்டு, 7ம் இராணுவ படை தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விசாரணை என்ற பெயரில், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டு, சடலங்களாக இரவு மீண்டும் செம்மணி காவல் சாவடிக்கு கொண்டு வரப்படுவர். மேலதிகாரிகளின் கட்டளை படி நாம் அந்த சடலங்களை அங்கே புதைப்போம். தொடர்ந்து புதைத்தோம். இதுதான் நடந்தது. கொலை செய்த மேலதிகாரிகள் தப்பி விட்டனர். புதைத்த நாம் தண்டனைக்கு உள்ளாகி உள்ளோம். சில மேலதிகாரிகள் கைதாகி வழக்கு தொடரப்பட்டு, பின் அந்த வழக்கு நின்று போய் விட்டது. அதிகாரிகள் தப்பி விட்டார்கள். நாம் அகப்பட்டுள்ளோம். இது அநீதி. சர்வதேச விசாரணை நடக்கும் பட்சத்தில் நான் சாட்சியம் அளித்து குற்றம் இழைத்த அதிகாரிகளின் பெயர்களை வெளி படுத்த தயாராக உள்ளேன்” லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்கிரம மூலம் இவ்வாறு கூறி உள்ளதாக தெரிவித்த, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இவ்விதம், வெளி கொணர பட்டுள்ள கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் புதிய திருப்பம் தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது, கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை குற்றவாளியான, லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் மனைவி திருமதி எஸ்.சி.விஜேவிக்கிரம, ஜனாதிபதி அனுர குமாரவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் நகல்களை பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் அனுப்பி உள்ளார். ஐ.நாவுக்கும் அனுப்பி உள்ளார். அக்கடிதத்தில் அவரது கணவர் அவரிடம் கூறிய மேற்கண்ட விடயங்களை, அவர் எழுதியுள்ளார். ஆகவே இன்று இந்த கடிதம், அனுரகுமார திசாநாயக்கவின் “கோர்ட்டில்” நிற்கிறது. சர்வதேச கண்காணிப்பு விசாரணைக்கு ஜனாதிபதி அனுர உடன் பட வேண்டும். அதில் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச சுதந்திரமாக சாட்சியம் அளிக்க வேண்டும். ஆனால், இவற்றுக்கு முன், இன்று சிறையில் இருக்கும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவுக்கு, உடனடியாக அங்கே அதி உயர் விசேட பாதுகாப்பு வழங்க பட வேண்டும். இது தொடர்பில், அரசியல் சிவில் சமூகமாக நாம் கூட்டு மேல் நடவடிக்கைக்கு தயார் ஆவோம். ஐநா மனித உரிமை ஆணையர் வொல்கர் டர்க்கிடம் நாம் அதிகார பூர்வமாக கோரிக்கை விடுப்போம். பிரசித்தி பெற்ற சித்திரவதை, பாலியல் வல்லுறவு, படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, தனக்கு ஆணை இட்ட மேலதிகாரிகளை அடையாளம் காட்ட தயார் என்கிறார். இலங்கை வரலாற்றில் இதுவரை, இப்படி ஒரு இராணுவத்தை சேர்ந்த நபர் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்து, தனக்கு ஆணை இட்ட மேலதிகாரிகளை அடையாளம் காட்ட தயார் என கூறவில்லை. ஆகவே, இதை ஏற்று மேல் நடவடிக்கை எடுக்க அனுர குமார அரசாங்கம் முன் வர வேண்டும். சர்வதேச நெருக்குதல்களை முறையாக தர ஐநா மனித உரிமை ஆணையகமும் முன் வர வேண்டும். இதை செய்ய முடியா விட்டால், இது ஒரு அரசாங்கமாகவோ, அது ஒரு ஐநா சபையாகவோ இருக்க முடியாது. இது இன்று சர்வதேச விவகாரம் ஆகி விட்டதை அனுர குமாரவும், வொல்கர் டர்க்கரும் உணர வேண்டும். அதனால்தான், அனுரவுக்கு செம்மணி விவகாரம் ஒரு அக்னி பரீட்சை என்று அன்றே சொன்னேன். இன்று மீண்டும் கூறுகிறேன். https://athavannews.com/2025/1441628

பிரித்தானிய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நூல்களை வன்பிரதியாகப் யாழ். நூலகத்திற்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை!

1 month 3 weeks ago
பிரித்தானிய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நூல்களை வன்பிரதியாகப் யாழ். நூலகத்திற்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை! adminAugust 4, 2025 யாழ்ப்பாண நூலகம் தொடர்பில் தான் முன் வைத்த வேண்டுகோள்களை செயற்படுத்தத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள பிரதமர் பூரண சம்மதத்தை வழங்கியுள்ளார் என யாழ் . மாநகர சபை உறுப்பினர் சு. கபிலன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிராந்தியங்கள் சார்ந்து 1800 கள் தொடக்கம் 1950 வரையான காலப்பகுதிக்குட்பட்டு வெளியிடப்பட்ட அல்லது சேகரித்து பாதுகாக்கப்பட்டு தற்போது பெரிய பிரித்தானியாவினுடைய நூலகத்தில் இலத்திரனியல் பிரதியாக்கம் செய்யப்பட்டுள்ள நூல்களை யாழ்ப்பாண நூலகத்திலிருந்தும் கையாளக்கூடிய வகையில் இணையவழியில் இணைப்பித்தல். மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிராந்தியங்கள் சார்ந்து 1800 கள் தொடக்கம் 1950 வரையான காலப்பகுதிக்குட்பட்டு வெளியிடப்பட்ட அல்லது சேகரித்து பெரிய பிரித்தானியாவினுடைய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நூல்களை வன்பிரதியாகப் பெற்றுக்கொள்ளல் அல்லது வன்பிரதியாக்கம் செய்து பெற்றுக்கொள்ளல். அத்துடன் நெதர்லாந்து பல்கலைக்கழகங்களிலும் எமது நூல்கள் இருப்பதாக அறியக்கிடக்கிறது. அவை தொடர்பிலும் உரிய தகவல்கள் ஆதார பூர்வமாகக் கிடைக்கப்பெற்றதும் கவனம் செலுத்தப்படும். இவற்றின் மூலமாக எமது யாழ்ப்பாண நூலகத்தில் 1981 ல் எரித்து அழிக்கப்பட்ட சில அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்திருந்த பிரதமரிடம் கோரியுள்ளார். https://globaltamilnews.net/2025/218779/

ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!

1 month 3 weeks ago
சுற்றுலா பயணிகளின் வருகை மூலம் $3.7 பில்லியன் வருமானம்! கடந்த 06 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் உள்ள சீதைஅம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த ஆறு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் $3.7 பில்லியன் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு அடுத்த சில மாதங்களில் மேலும் $3.7 பில்லியன் வருவாய் இலக்கை எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார். இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகள் முன்னணியில் உள்ளனர். மேலும் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மத சுற்றுலாப் பயணிகளில் முன்னணியில் உள்ளனர். எனவே மதப் பயணத்தை ஊக்குவிக்கும் நம்பிக்கையில் அரசாங்கம் ஆலயத்துக்கு மேலும் ஒரு ஏக்கர் நிலத்தை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க மற்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுரா செனவிரட்ன ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://athavannews.com/2025/1441652

சூட்கேஸுக்குள் இருந்து 2 வயது குழந்தை மீட்பு; நியூஸிலாந்தில் சம்பவம்!

1 month 3 weeks ago
சூட்கேஸுக்குள் இருந்து 2 வயது குழந்தை மீட்பு; நியூஸிலாந்தில் சம்பவம்! பேருந்து ஒன்றிலிருந்த சூட்கேஸுக்குள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு வயது குழந்தை ஒன்று உயிருடன் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் நியூஸிலாந்தில் பதிவாகியுள்ளது. குறித்த குழந்தையை கைவிட்ட குற்றச்சாட்டில் நியூசிலாந்து பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை ஆக்லாந்திலிருந்து 60 மைல் வடக்கே உள்ள கைவாகாவில் திட்டமிடப்பட்ட ஒரு நிறுத்தத்தின் போது, ஒரு பயணி லக்கேஜ் பெட்டியை அணுக அனுமதி கேட்டதை அடுத்து, பேருந்து சாரதி பைக்குள் அசைவு ஒன்று ஏற்படுதை கவனித்தார். சாரதி, சூட்கேஸைத் திறந்தபோது, அவர்கள் அந்த 2 வயது பெண் குழந்தையை கண்டுபிடித்தனர். இதன்போது, குழந்தையின் உடல் சூடாக இருந்ததாகவும், உடல் ரீதியாக எந்தப் பாதிப்பும் இல்லாமல் தோன்றியதாகவும் அதிகாரிகள் கூறினர். மீட்பின் பின்னர், குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், அங்கு விரிவான மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டது. குறித்த குழந்தை சூட்கேஸில் எவ்வளவு நேரம் இருந்தாள், அல்லது பேருந்து எந்த நகரங்களுக்கு இடையே பயணித்தது என்பது குறித்து அதிகாரிகள் எந்தக் கருத்தையும் கூறவில்லை. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெயர் குறிப்பிடப்படாத 27 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குழந்தையை மோசமாக கையாண்டமை அல்லது புறக்கணித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார். அந்தப் பெண் திங்கட்கிழமை (04) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். https://athavannews.com/2025/1441659

ஏமன் கடற்பகுதியில் படகு விபத்து; 68 பேர் மரணம், 74 பேர் மாயம்!

1 month 3 weeks ago
ஏமன் கடற்பகுதியில் படகு விபத்து; 68 பேர் மரணம், 74 பேர் மாயம்! ஏமன் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (03) 154 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 74 பேர் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் ஏமனுக்கு அருகில் நடந்த தொடர்ச்சியான கப்பல் விபத்துக்களில் அண்மைய நிகழ்வாகும். ஏமனில் உள்ள சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் தலைவரான அப்துசாட்டர் எசோவ் கூறுகையில், 54 எத்தியோப்பிய குடியேறிகளுடன் சென்ற கப்பல், தெற்கு யேமன் மாகாணமான அப்யானில் இருந்து ஏடன் வளைகுடாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூழ்கியது. கான்ஃபார் மாவட்டத்தில் கரை ஒதுங்கிய 54 புலம்பெயர்ந்தோரின் உடல்களும், மேலும் 14 பேரின் உடல்களும் இறந்து கிடந்ததுடன் ஏமனின் தெற்கு கடற்கரையில் உள்ள அப்யானின் மாகாண தலைநகரான ஜிஞ்சிபாரில் உள்ள மருத்துவமனையின் பிரேத ‍அறைக்கு அவை கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். அதேநேரம், கப்பல் விபத்தில் 12 புலம்பெயர்ந்தோர் மட்டுமே உயிர் பிழைத்தனர். ஏனையவர்கள் காணாமல் போயுள்ளனர் அல்லது இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது என்றும் எசோவ் கூறினார். இதற்கிடையில், அப்யான் பாதுகாப்பு பணியகம் ஏராளமான இறந்த மற்றும் காணாமல் போன புலம்பெயர்ந்தோரை கருத்தில் கொண்டு ஒரு பெரிய தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையை விரிவுபடுத்தியுள்ளது. ஒரு தசாப்தத்திற்கும் மேலான உள்நாட்டுப் போர் இருந்தபோதிலும், கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் பகுதியிலிருந்து வேலைக்காக வளைகுடா அரபு நாடுகளை அடைய முயற்சிக்கும் குடியேறிகளுக்கு ஏமன் ஒரு முக்கிய பாதையாகும். செங்கடல் அல்லது ஏடன் வளைகுடா முழுவதும் பெரும்பாலும் ஆபத்தான, நெரிசலான படகுகளில் புலம்பெயர்ந்தோர் கடத்தல்காரர்களால் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அண்மைய மாதங்களில், ஏமனுக்கு அருகில் நடந்த கப்பல் விபத்துகளில் பல புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர். மார்ச் மாதத்தில் ஏமன் மற்றும் ஜிபூட்டிக்கு அருகில் நான்கு படகுகள் கவிழ்ந்ததில் இரண்டு புலம்பெயர்ந்தோர் இறந்தனர் மற்றும் 186 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2025/1441648

கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரி பேரணி

1 month 3 weeks ago
அது சரி ..... கிழக்கிலிருந்து தமிழர்கள் தங்கள் சொந்த வீடுகள் பிரதேசங்களை விட்டு விரட்டப்பட்டார்கள், அவர்களின் கோயில்கள், காணிகளை பறித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதியை தனது அதிகாரத்தினால் மாற்றி, முஸ்லீம் வியாபார நிலையங்களை அமைத்தேன் என்று வீராப்பு பேசுகிறார் ஹிஸ்புல்லா. அங்கே முஸ்லீம் ஊர்காவற் படை, சிங்கள இராணுவப்படை இவ்வளவையும் தாண்டி முஸ்லிம்களை புலிகள் தாக்கினார்கள் என்றால் இவர்களது இராணுவப்படை, பலம் என்ன செய்தது? ஏன் அவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டார்கள் என்றொரு கேள்வி எழுகிறது. புலிகளை சீண்டி மிகுதியை எதிர்பார்த்தபடி தாம் அரங்கேற்றி, புலிகளின் தலையில் கட்டி புலிகளை பெலவீனப்படுத்தும் செயல் இது. சியா முஸ்லிம்கள் இராணுவத்தோடு செய்த அடடூழியம். தமிழரை கொன்ற ஊர்காவற் படையினர் இன்னும் உலாவருகின்றனர், அவர்களை பிடித்து விசாரித்தால் உண்மை வெளிவரும். இரண்டு போலீசாரை சுட்டும் வெட்டியும் ஆயுதங்களை எடுத்து விட்டு புலிகளின் தலையில் கட்டியவர்கள். ஏன் பலரை கொன்று விட்டு புலிகளின் தலையில் இராணுவமே போட்டது. எல்லாம் வெளிவரத்தான் போகுது. வெளிப்படாமல் மறைந்திருக்கும் இரகசியம் ஒன்றுமில்லை. உண்மைகள் வெளிவரும் காலமிது.

செம்மணி மனிதப் புதைகுழியின் சர்வதேச விசாரணைக்கு சோமரத்ன ராஜபக்ச தயார் : அநுரவிற்கு பறந்த கடிதம்

1 month 3 weeks ago
ம், செம்மணியில் வெளிவரும் எலும்புத்தொகுதிகள் இராணுவத்தினரதும் சிங்கள, முஸ்லிம்களினதும் உடல்கள் என கொக்கரித்தவர்கள், ஐ. நா. மனித உரிமையாளர் தங்களை சந்திக்கவில்லையென குறை கூறியவர்கள், புலம்பெயர் புலிகள் விடுதலைப்புலிகளால் அடைய முடியாததை அடைய முயற்சிக்கிறார்கள், புலம்பெயர் புலிகள் சர்வதேசத்திற்கு நாட்டை காட்டிக்கொடுக்கிறார்கள் என்றெல்லாம் ஊழையிட்டவர்கள் இப்போ, என்ன சொல்லப்போகிறார்கள்? சோமரத்ன ராஜபக்ச பொய் சொல்கிறார் என்று சொல்வார்களா அல்லது நாட்டை காட்டிக்கொடுக்கிறார் என்று சொல்வார்களா? யார் அந்த உத்தியை எடுத்தார்கள் என்றும் சொல்லலாமே? அப்போ, இந்தக்கொலைகளை ஜனாதிபதிகளின் பணிப்பின் பேரில் இராணுவத்தினர் செய்தார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறாரா? பொதுமக்களையே அதிலும் குழந்தைகளை இராணுவம் கொன்றுள்ளது. இதற்கிடையில் புலிகளையே கொன்றோம், மக்களை பாதுகாத்தோம் என்று பொய் வேறு. உலகம் நம்பி விட்டது என இவர் இன்னும் நம்புகிறார். ஐ. நா. மனித உரிமையாளர் ஏன் செம்மணிக்கு போனார் என்றாவது இந்த மடையனுக்கு புரியுமா? அப்படி ஒன்றும் நடக்கவேயில்லை என்று வாதாடியவர் இப்போ இப்படி கூறுகிறார். அதை சொல்ல இவர் யார்? ஏன் அதை செய்வதற்கு இவ்வளவு காலம்? எதுவுமே நடைபெறவில்லையென இழுத்தடித்தார்கள். உவன் ஒரு ரோஷமுள்ளவன் என்றால் உதோடு வாயை பொத்திக்கொண்டு இருப்பான். இல்லை அடிவாங்கியே தீருவேனென அடம்பிடித்தால், யாரும் ஒன்றும் செய்ய இயலாது. எங்கே விமல், உதயன் கம்மன்பில இன்னும் தூக்கம் கலையவில்லையோ? இப்படியான கூட்டத்தொடர் தொடங்கினாற்தான் நீங்களும் பரபரப்பாகிறீர்கள். அப்படியேதும் நடைபெறவில்லையென்றால் ஏன் இவ்வளவு பரபரப்பு, பயம்? இது ஒன்றும் இன்றைய நேற்றைய குற்றச்சாட்டல்ல சரத் வீரசேகர அவர்களே! இருபத்தொன்பது ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, நிரூபிக்கப்பட்ட, ஒத்துக்கொண்ட குற்றம். ஆனால் குற்றம் செய்தவர் யாரோ, தண்டிக்கப்படுபவர் வேறொருவர். அதனாற் தான் உண்மையை வெளிக்கொணர முன்வந்துள்ளார். சோமரத்ன ராஜபக்சவுக்கு பாதுகாப்பளிக்க வேண்டியது ஜனாதிபதியின் முக்கிய கடமை. அப்போதான் தெருத்தெருவாக ஊழையிட்டு கூட்டம் சேர்க்கலாம். இந்தமுறை உதெல்லாம் நடவாது. எதுக்கும் இவர் இராணுவப்பாதுகாப்பு பெறுவது நல்லது. அப்படி யாரும் இருக்கிறார்களா?

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

1 month 3 weeks ago
தலைவரின் திருவுருவப் படத்தினை தாயகத்தில் எவர் வைத்து வணக்கம் செலுத்தினாலும் நிச்சயமாக அரசு அவர்மீது தனது கவனத்தைத் திருப்பும். தலைவர் வாழ்ந்த வீட்டினை முற்றாக இடித்தழித்து, அவரது வாழ்வுகுறித்த சிறிய அடையாளங்கள் கூட தாயகத்தில் இருக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அரசு, அவரது திருவுருவப் படத்தினை வெளிப்படையாகவே வைத்து கெள‌ரவிக்க அனுமதியளிக்கப்போவதில்லை என்பது திண்ணம். ஆகவேதான் தாயகத்தில் இதுகுறித்த முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை ரகுநாதன் உங்களிற்கான பதிலை வழங்கியுள்ளார் வாசித்து புரிந்துகொள்ளுங்கள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி; எச்சங்கள், பொருட்கள் தொடர்பில் தகவல் தாருங்கள் - காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் பொதுமக்களுக்கு பகிரங்க அழைப்பு

1 month 3 weeks ago
ஒருவரின் கருத்தையும் காணவில்லை. கொக்குதொடுவாய் 1994 - 1996 கால பகுதியில் எவர் கட்டுப்பாட்டில் காணப்பட்டது?

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

1 month 3 weeks ago
தலைவருக்கு வீரவணக்கம் செய்வது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அவர் இப்போது உயிருடன் இல்லை. நானும் புலிகள் தொடர்பில் எழுதத்தொடங்கிய போது - ஆவணங்களில் - 2021ம் ஆண்டு அதைத்தான் எழுதினேன். கோராவில் திரு. சாத்திரியாரின் 2011ம் ஆண்டு தலைவர் வீரவணக்க படத்தை பாவித்து செய்தேன். யாழ் எழுத்தாளர் நேசக்கரம் சாந்தி அவர்கள் செய்த நிகழ்விற்கு ஆதரவு நல்கினேன். இவர்கள் தலைவரின் வீரவணக்க நிகழ்வை செய்த திகதி பற்றி எனக்கு கவலை இல்லை. செய்ய வேண்டும் - செய்தார்கள். நல்லம். எனினும் இவர்கள் செய்த நிகழ்வில் சில செயல்களில் எனக்கு உடன்பாடு இல்லை. குறிப்பாக மக்களும் போராளிகளும் புனிதமாக பார்க்கும் வரிப்புலியை சிறார்களுக்கு அணிவித்து அதனைக் கொண்டு அணிநடை போட விட்டது மிகவும் இழிவான செயலாகும். அவ்வாறு செய்திருக்கக் கூடாது. வரிப்புலி கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மாவீரர்கள் உயிர்விட்டனர். ஆனால் இவர்களோ அதை இவ்வாறு பாவிப்பது ஏற்க முடியாத செயலாகும். அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் மே 18ம் திகதி செய்யப்போவதாக அறிவித்திருப்பது உண்மையில் மனமெரிய வைக்கும் செயலாகும். மே 18 என்பது இனப்படுகொலை நாளாகும். அதில் இதைக் கொண்டுவந்து செய்தால் - நாளை அது ஓர் பயங்கரவாதி உயிர்நீத்த நாள் என்று உலக நாடுகளாலும் இந்திய சிங்கள கூட்டுக் களவாணிகளாலும் ஒத்தூதப்படும். பின்னர் அந்நாள் தடை செய்யப்படும். இவர்கள இதை சிந்தித்தார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை தலைவரும் ஆயிரமாயிரம் மாவீரர்கள் போன்று ஓர் மாவீரர்தான். அதே போன்று தான் தலைவருக்கும் நவ. 27இல் தான் ஆண்டாண்டு வீரவணக்கம் இனி செய்ய வேண்டும். மே 18 இல் செய்தால் அது எல்லாவற்றையும் திசை மாற்றி விடும். எனவே மே 18இல் செய்யாமல் நவம் 27இல் ஆண்டுதோறும் செய்வது சாலச் சிறந்தது. மாறி செய்தால் இந்த இவர்களும்*** புலனாய்வுத்துறைகளின் நிகழ்ச்சி நிரலில் இயங்குவது உறுதியாகிவிடும்.

கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரி பேரணி

1 month 3 weeks ago
எப்போழுதெல்லாம் தமிழர்களுக்கு சாதகமான சூழல் உருவாகிறதோ அப்பொழுதெல்லாம் இந்த *** ****** தமது சுயரூபத்தை காட்ட தொடங்கி விடுவார்கள்.....

ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)

1 month 3 weeks ago
இதை வாசிக்கும் போது இப்பாடல் வரிகள் தான் நினைவிற்கு வந்தன: "கண்ணீரில் காவியங்கள், செந்நீரில் ஓவியங்கள்! தண்ணீரில் ஓடம் போல் தமிழீழக் கோலங்கள்!" இறுதிப் போர் தொடர்பில் எழுதப்பட்ட மிகச் சிறந்த வரலாற்றுப் பதிவுகளில் இதுவும் ஒன்றாகும். இதே போன்று இன்னொன்று 60 தொடர் கொண்டது- 2015ம் ஆண்டளவில் ஒருவரால் எழுதப்பட்டிருந்தது. இவையிரண்டும் புத்தகங்களாக வரவேண்டும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம்: கையெழுத்து விவகாரம் குறித்து தமிழரசுக்கட்சியின் தீர்மானம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

1 month 3 weeks ago
அநுரா அரசாங்கத்திற்கும் கால அவகாசம் பெற்றுக்கொடுக்கப் போகிறீர்களா அதுதானே உங்கள் வழக்கம்.
Checked
Mon, 09/29/2025 - 00:45
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed