1 month 3 weeks ago
ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட சுதந்திர பலஸ்த்தீனம் உருவாகாமல் ஆயுதங்களைக் கைவிடப்போவதில்லை என்று ஹமாஸ் கூறுவது மிகவும் சிக்கலானது. முதலாவது, ஜெருசலேம் நகரில் இருக்கும் முஸ்லீம்களின் அல் அக்ஸா பள்ளிவாசல் அமைந்திருக்கும் அதேவிடத்தில் யூதர்களின் வணக்கத்தலமும் இருக்கின்றது. இஸ்லாமியர்களுக்கு இப்பகுதி எவ்வளவு முக்கியமானதோ அதேயளவு முக்கியமானது யூதர்களுக்கு. ஆகவே ஜெருசலேத்தைத் தலைநகராகக் கொண்ட சுதந்திர பலஸ்த்தீனம் என்பது ஆரம்பத்திலேயே சிக்கலாகப் போகிறது. அடுத்தது, இராணுவ ரீதியில் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் ஹமாஸினால் சுதந்திரமான பலஸ்த்தீனத்தை ஆயுத ரீதியில் அடைந்துகொள்வது சாத்தியமானதா? இன்று சர்வதேசத்தில் பலஸ்த்தீனர்களுக்குச் சார்பாக திரும்பியிருக்கும் நிலைப்பாடானது அங்கிருக்கும் மக்களின் பட்டிணிச் சாவை ஒட்டிஏற்படுத்தப்பட்டது என்பதே ஒழிய ஹமாஸின் இராணுவ வல்லமையினால் ஏற்பட்டதொன்றல்ல. இன்னும் சொல்லப்போனால் பலஸ்த்தீன மக்கள் தமது உயிர்த் தியாகத்தினாலும், குருதியினாலும் சர்வதேசத்தில் ஏற்படுத்திய இத்திருப்பத்தை ஹமாஸ் தனது பிடிவாதத்தினால் நீர்த்துப் போகச் செய்ய எத்தனிப்பதாகவே எனக்குப் படுகிறது. கிழக்கு ஜெருசலேமில் விட்டுக் கொடுப்புக்களைச் செய்து, சர்வதேசம் விரும்பும் சுதந்திரப் பலஸ்த்தீனம் அல்லது இரு தேசக் கோட்பாட்டினை ஏற்றுக்கொண்டு பலஸ்த்தீனர்களுக்கான தீர்வை வழங்குவதை விடுத்து ஆயுதப் போராட்டத்தினை நீட்டித்து அழிவுகளையே ஹமாஸ் எதிர்ப்பார்ப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
1 month 3 weeks ago
03 Aug, 2025 | 03:39 PM ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களினால் நீர் இறைக்கும் இயந்திரம் பயனாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் நீண்ட நாள் கோரிக்கையின் அவசர அவசியத்தினை கவனத்தில் எடுத்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களால் நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான பா.ஸ்ரீதரன், க.கஜகரன், மற்றும் ஆர்.சுகீர்த்தனா ஆகியோரின் கூட்டு முயற்சியினால் இந்த செயற்றிட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221685 அங்க தடையாம், இங்க உறுப்பினர்களே குழாய்க்கிணற்றில் போட்டு இறைக்க மோட்டர் வழங்குகினமாம்! என்னய்யா நடக்குது அங்க?!
1 month 3 weeks ago
புதிய வரலாறு எழுதிய ஜடேஜா - 23 ஆண்டு கால சாதனை முறியடிப்பு இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சகல துறை துடுப்பாட்ட வீரர் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) இமாலய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்திய அணி வெளிநாடுகளில் ஆடிய ஒரு டெஸ்ட் தொடரில் 6 ஆம் இலக்கத்தில் அல்லது அதற்குக் கீழான துடுப்பாட்ட வரிசையில் களமிறங்கி அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா தன்வசப்படுத்தியுள்ளார். இதன்படி அவர் குறித்த தொடரில் 516 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 5 அரை சதங்களும், ஒரு சதமும் உள்ளடங்கும். அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் முன்னதாக விவிஎஸ் லக்ஷ்மன் கடந்த 2002 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் 474 ஓட்டங்களைப் பெற்றதே சாதனையாக இருந்தது. குறித்த சாதனையை 23 ஆண்டுகளின் பின்னர் ரவீந்திர ஜடேஜா முறியடித்துள்ளார் அத்துடன் SENA டெஸ்டில் 6 வது வரிசையில் களமிறங்கி இரண்டாவது சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் ஜடேஜா படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/indian-cricketer-jadeja-break-world-record-1754192102?itm_source=parsely-top
1 month 3 weeks ago
செம்மணியில் இராணுவத்தினரால் கொன்று புதைக்கப்பட்டிருக்கும் பல நூற்றுக்கணக்கான தமிழர்களின் உடல்களின் எச்சங்கள் இப்போது வெளிவர ஆரம்பித்திருப்பதனால் சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் இது பேசுபொருளாக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, செம்மணி மனிதப் புதைகுழிகள் நீதிமன்ற விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுமிடத்து, தமது உறவுகளுக்கான நீதியும் கிடைக்கப்பெறலாம் என்கிற நம்பிக்கையிலேயே இதனை முஸ்லீம்கள் செய்யலாம். முஸ்லீம்கள் இதனைச் செய்வது செம்மணிக்கான முக்கியத்துவத்தை குறைப்பதற்காக என்று நான் நினைக்கவில்லை. தமக்கும் நீதி கிடைக்கவேண்டும் என்கிற நப்பாசையில்த்தான். அப்பாவிகளைக் கொன்று புதைத்தவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.
1 month 3 weeks ago
செம்மணி மனித புதைகுழி நீதிக்கான பயணத்தில் புதிய கதவுகளை திறந்துவிடும்; அது மனிதபடுகொலை, யுத்த குற்றம் இடம்பெற்ற இடம், இராணுவத்தினரே செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன - சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ் இரத்தினவேல் Published By: Rajeeban 03 Aug, 2025 | 12:33 PM நீதிக்கான பயணத்தில் செம்மணி மனித புதைகுழி புதிய கதவுகளை திறந்துவிடும். இவை பெரியளவில் மக்கள் கொன்று புதைக்கப்பட்ட புதைகுழிகள் - இது மனிதபடுகொலை யுத்த குற்றம் இடம்பெற்ற இடம் - இராணுவத்தினரே செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என தெரிவித்துள்ள சிரேஸ்ட சட்டத்தரணி கேஎஸ் இரத்தினவேல் கடந்தகால அரசாங்கங்களை போலவே தற்போதைய அரசாங்கமும் செயற்படுவதாக தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்ற 'வன்மம்" கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கு நூல் அறிமுகநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கிருஷாந்தி குமாரசுவாமி கொலை செம்மணி என்ற பாரிய புதைகுழியை திறந்துவிட்டது. சோமரத்ன ராஜபக்ச தனது வாக்குமூலத்தின்போது "நான் மாத்திரம் இதில் தொடர்புபட்டிருக்கவில்லை, ஜெனரல்கள் தர அதிகாரிகள் கூட இதில் தொடர்புபட்டிருக்கின்றனர், அவர்கள் வழங்கும் உடல்களை நாங்கள் செம்மணியில் புதைப்போம்" என தெரிவித்திருந்தார். செம்மணி புதைகுழிகளில் 500க்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டன என அவர் வாக்குமூலம் வழங்கியதை தொடர்ந்து இடம்பெற்ற அகழ்வுகளின் போது 1999 இல் 15 உடல்களை மீட்டார்கள். ஆனால் தொடர்ந்து உடல்களை அகழ்வதை ஏதோ ஒரு காரணத்திற்காக நிறுத்திவிட்டார்கள், அரசியல் அழுத்தம் என்றார்கள். எனினும் இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்திருக்கின்றது. சித்துப்பாத்தி இந்துக்களின் மயானம், அங்கு உடல்கள் புதைக்கப்படுவது இல்லை, அங்கு உடல்கள் எரிக்கப்படுகின்றன,சுடுகாடு.. செம்மணி மனித புதைகுழியில் 500க்கும் மேற்பட்ட உடல்கள் இருக்கலாம் என அனுமானிக்கப்படுகின்றது. ஸ்கான் நிறைவடைந்த நிலையில் மேலும் பல பகுதிகளில் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்து. இவை சாதாரண புதைகுழிகள் இல்லை, பெரியளவில் மக்கள் கொன்று புதைக்கப்பட்ட புதைகுழிகள். இதனை செய்தவர்கள் அக்காலப்பகுதியில் சட்டத்திற்கு மேற்பட்டவர்களாக விளங்கியுள்ளனர், தங்களை சட்டத்திற்கு மேற்பட்டவர்களாக கருதியுள்ளனர், சட்டத்தை பற்றி கவலைப்படாதவர்களாக காணப்பட்டுள்ளனர். 1995ம் ஆண்டின் பின்னர் யாழ்குடாநாட்டிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் முற்றாக வெளியேற்றப்பட்ட பின்னரே இது இடம்பெற்றுள்ளது. 1995 முதல் 2009 வரை இராணுவத்தினர் கேட்டுக்கேள்வி இல்லாதவர்கள் போல செயற்பட்டனர். யாழ் குடாநாட்டை முழுமையாக தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். சட்டத்திற்கு மேற்பட்ட அதிகாரங்கள் அவர்களிற்கு காணப்பட்டன. அவர்கள் சட்டத்திற்கு பயப்படாதவர்களாக தான்தோன்றித்தனமாக செயற்படுபவர்களாக காணப்பட்டனர். இராணுவத்தினரே செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. புதிய அரசாங்கம் காரணமாகவே செம்மணி மனித புதைகுழி அகழ்வு சாத்தியமானது என சிலர் தெரிவிக்கின்றனர், காலம்தான் இதற்கு பதில்சொல்லவேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோர்க்கர் டேர்க்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் என தகவல் வெளியானதும் அவர் கட்டாயம் செம்மணி மனித புதைகுழி காணப்படும் பகுதியை சென்று பார்க்கவேண்டும், நேரடியாக சென்று பார்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தோம். இது முக்கியமான விடயம் அவர் செம்மணிக்கு செல்வது குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் கட்டாயம் செம்மணிக்கு விஜயம் செய்யவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம், இலங்கை வெளிவிவகார அமைச்சும் இதற்கு சாதகமான பதிலை வழங்கியிருந்தது. எனினும் பின்னர் திடீர் என செம்மணி புதைகுழி நீதவான்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால் மனித உரிமை ஆணையாளர் அங்கு விஜயம் மேற்கொள்வதற்கு அவருடைய அனுமதி அவசியம் என தெரிவித்தார்கள். அந்த காலப்பகுதியில் அகழ்வுகள் நிறுத்தப்பட்டிருந்ததால் அவரின் அனுமதி அவசியம் என்றார்கள். அனுமதி பெறும் விடயத்தை காணாமல்போனோர் அலுவலகம் செய்யும் என்றார்கள் எனினும் பின்னர் திடீர் என சட்டமா அதிபர் திணைக்களம் கையாளும் என்றார்கள். சட்டமா அதிபர் திணைக்களம் என்றால் இனி ஒன்றும் நடக்காது என்பது எங்களிற்கு தெரியும். அதன் காரணமாக நாங்கள் உடனடியாக நீதவான் நீதிமன்றத்தை நாடி அனுமதியை கோரினோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நேரடியாக சென்று பார்வையிடுவதற்கான அனுமதியை வழங்குமாறு கோரினோம். நீதிமன்றத்தில் அரசாங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி ஆஜராகியிருந்த பொலிஸ் அதிகாரியொருவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மயானத்தின் கேட்டிற்கு வெளியேதான் நிற்கலாம் அவருக்கு உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்தார். எனினும் நாங்கள் இது மிகமுக்கிய - சர்வதேச இராஜதந்திரியை அவமதிக்கும் செயலாக அமையும், இலங்கை அரசாங்கத்துடனான உடன்பாட்டின் அடிப்படையிலேயே வோல்க்கெர் டேர்க் செம்மணிக்கு வருகின்றார் என சுட்டிக்காட்டினோம். அதனை தொடர்ந்து நீதவான் அதற்கான அனுமதியை வழங்கினார். நாடாளுமன்றத்தில் ஒன்றை சொல்கின்றார்கள் வெளியே வேறொன்றை செய்கின்றார்கள். கடந்தகால அரசாங்கங்கள் எப்படி செயற்பட்டனவோ அதேபோன்றே இந்த அரசாங்கமும் செயற்படுகின்றது. நிதி அனுமதியை பெறுவது மிகவும் கடினமான விடயமாக உள்ளது. இது மனிதபடுகொலை யுத்த குற்றம் இடம்பெற்ற இடம், ஒரு அடி தோன்றினாலே உடல்கள் வெளிவருகின்றன. சம்பிரதாய பூர்வமாக அவை புதைக்கப்படவில்லை. இந்த உடல்கள் ஆடைகள் அற்ற விதத்தில் மரியாதை குறைவான விதத்தில்புதைக்கப்பட்டுள்ளன, சிறுவர்களின் உடல்கள் காணப்படுகின்றன. இது யுத்தத்தில் மரணித்தவர்கள் தொடர்பான புதைகுழியில்லை. எங்கள் சரித்திரத்தில், எங்கள் விடயங்களை நீதிமன்றம் மிகவும் குறைவான - வரையறுக்கப்பட்ட விதத்திலேயே அணுகியிருக்கின்றது. எங்கள் மக்களிற்கு நீதிமன்ற கட்டமைப்பில் நம்பிக்கையில்லை, பாதிக்கப்பட்ட மக்கள் காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சர்வதேச விசாரணைகளையே எதிர்பார்க்கின்றனர் நம்புகின்றனர், உள்நாட்டு பொறிமுறையை அவர்கள் நம்புவதற்கான எந்த தடயமும் இல்லை.. சில அரசியல்வாதிகள் கூறுவதற்கு மாறாக எங்களிற்கு வேறு சாத்தியப்பாடுகளும் உள்ளன. வேறு பல நாடுகளில் தற்காலிக தீர்ப்பாயங்களை நிறுவியுள்ளனர். அதற்காக அவர்கள் சர்வதேச சட்டங்களை உருவாக்கியுள்ளனர். செம்மணி மனித புதைகுழி நிச்சயமாக மிகவும் முக்கியமானது நீதிக்கான பயணத்தில் செம்மணி மனித புதைகுழி புதிய கதவுகளை திறந்துவிடும். https://www.virakesari.lk/article/221677
1 month 3 weeks ago
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த 17 வயதான சக்தீஸ்வரன் என்கிற இளைஞர் கடந்த மே 24 ஆம் தேதி அவரது வீட்டில் இருந்தபோது திடீரென மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர காத்திருந்த சக்தீஸ்வரன் உடற்பயிற்சியிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். அவரின் இறப்பு தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சக்தீஸ்வரன் கடந்த சில மாதங்களாக இணையத்தில் அறிமுகமான சில திரவ உணவுமுறையைப் (டயட்) பின்பற்றி வந்ததாக அவர்களின் பெற்றோர் கூறியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, உடல்நலன் சார்ந்த காரணங்களுக்கான உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றுபவர்கள் முறையான ஆலோசனை பெற்று பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். படக்குறிப்பு, சக்தீஸ்வரன் இளைஞர்களிடையே டயட் என்பதைப் பற்றிய தவறான புரிதல் இருப்பதாகக் கூறுகிறார் மூத்த உணவியல் நிபுணரான ரேஷ்மா அலீம். ஒரு மாதத்தில் குறைந்தது 10 பேராவது தவறான டயட் முறையால் ஏற்பட்ட சிக்கல்களுக்கான தன்னிடம் சிகிச்சைக்கு வருவதாக அவர் தெரிவித்தார். "டயட் என்பது உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதோ அல்லது குறைவாக உணவுகளை எடுப்பதோ அல்ல. முறையான டயட் என்றால் சரியான அளவில் உணவுகளை எடுத்துக் கொள்வது" எனத் தெரிவித்தார் ரேஷ்மா. உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் குறிப்பாக உணவுமுறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் உடற்பயிற்சி நிபுணரான சுஜாதா. மருத்துவ சிக்கல்கள் உள்ளவர்களுக்கு சரியாக பின்பற்றப்படாத உணவு முறையால் கூடுதல் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார் இதயநோய் நிபுணரான அசோக் குமார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நிலையான உணவுமுறை தான் ஆரோக்கியமான இயக்கத்திற்கு உகந்தது. கலோரிகள் உட்கொள்வதை நாம் நிறுத்தினால் அது ஆபத்தானது. ஏனென்றால் உடலுக்குத் தேவையான கலோரிகள் உணவு மூலம் உள் எடுப்பது குறைகிறபோது உடலில் கல்லீரல் மற்றும் தசைகளில் உள்ள கலோரிகள் செரிமானம் ஆகத் துவங்கும்." "கார்போஹைட்ரேட்ஸ், கலோரிகள், நுண் ஊட்டச்சத்துக்கள் என அனைத்துமே சரியான அளவுகளில் கிடைக்க வேண்டும். இவைகளில் சமநிலை குறைகிறபோது தசைகள் உடைய ஆரம்பிக்கின்றன. நல்ல கொழுப்பும் சரியான அளவில் உடலில் இருக்க வேண்டும். எடை குறைக்க உடற்பயிற்சி செய்கிறபோது தசையும் குறையும்." "இதய தசைகள் குறைகிறபோது உடலுக்கு ரத்தம் செலுத்தப்படுவது குறையும். இதனால் இதய பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். ஒருவருக்கு ஏற்கெனவே மருத்துவ சிக்கல்கள் (pre-existing conditions) இருந்தால் அவை மேலும் மோசமாக்கும்." என்றார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் (ஐசிஎம்ஆர்) இயங்கும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் இந்தியர்களுக்கு எவ்வளவு ஆற்றல் தேவை என்பதை வகைப்படுத்தி பரிந்துரைக்கிறது. அதன்படி, ஆண்களில் உடல் சார்ந்த வேலைகள் (Sedentary work) அதிகம் செய்யாத பெரிய நபர்களுக்கு நாளொன்றுக்கு 2,110 கிலோ கலோரி தேவைப்படுகிறது. அதுவே, ஓரளவிற்கு உடல் சார்ந்த வேலைகள் (Moderate work) உள்ள ஆண்களுக்கு நாளொன்றுக்கு 2,710 கிலோ கலோரி தேவைப்படுகிறது. கடினமான உடல் சார்ந்த வேலைகள் (Heavy work) செய்பவர்களுக்கு நாளொன்றுக்கு 3,470 கிலோ கலோரி தேவைப்படுகிறது. இதே பெண்களில் பெரியவர்களுக்கு முறையே 1,160, 2,130, 2,720 கிலோ கலோரி என இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து விதமான சத்துக்களும் அடங்கியிருக்க வேண்டும் என்கிறார் ரேஷ்மா. "உடலுக்கு தேவைப்படும் சத்துகள் கார்போஹைட்ரேட், பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், நட்ஸ் வகைகள், புரத உணவான முட்டை அல்லது மாமிசங்கள் போன்ற பல உள்ளன. இவற்றை திரவ உணவுகளால் மட்டும் வழங்க முடியாது" என்றார். படக்குறிப்பு, மருத்துவ வட்டாரங்களில் இணையத்தைப் பார்த்து பின்பற்றும் உணவுப் பழக்கத்தை Fad diet என்று அழைக்கப்படுகிறது. "பழங்களை திரவ உணவாக உட்கொள்கிற போது அதில் உள்ள நார்ச் சத்துகளும் கழிந்துவிடும். ஆகவே இதனை ஃப்ரூட் டயட் எனச் சொல்ல முடியாது. ஜூஸ் டயட் என்று தான் கூற வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார். ஐசிஎம்ஆர் பரிந்துரைக்கும் அளவு காய்கறிகள்: 400 கிராம் பழங்கள்: 100 கிராம் பருப்பு வகைகள், முட்டை அல்லது மாமிசம் - 85 கிராம் நட்ஸ் மற்றும் விதைகள் - 35 கிராம் கொழுப்பு மற்றும் எண்ணெய் - 27 கிராம் தானியங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் - 250 கிராம் சராசரியாக பரிந்துரைக்கப்பட்ட உணவு உட்கொள்ளும் அளவு இது. உடற்பயிற்சியில் ஈடுபடுவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்குப் பொருத்து இவை மாறுபடும் என்று தெரிவித்தார் ரேஷ்மி. இதற்கு ஒரு உதாரணத்தை முன்வைத்த சுஜாதா, தீவிர உடற்பயிற்சியில் ஈடுபவர்களுக்கு புரதச்சத்து அதிகமாக தேவைப்படும் என்பதால் அவர்களுக்கு உணவுமுறையில் புரதங்கள் கூடுதலாக பரிந்துரைக்கப்படும் என்றார். மருத்துவ வட்டாரங்களில் இணையத்தைப் பார்த்து பின்பற்றும் உணவுப் பழக்கத்தை ஃபேடு டயட் (Fad diet) என்று அழைக்கப்படுகிறது. "இரண்டு நாட்கள் திரவ ஆதாரங்களை எடுத்துக் கொண்டால் எடை சற்று குறையவே செய்யும். ஆனால் அதனால் வேறு சில சிக்கல்களும் வரும்" எனக் கூறினார் ரேஷ்மி தொடர்ந்து விவரித்த அவர், "ஒருவரின் ஆரோக்கியமான உடல் இயக்கத்திற்கு திட உணவும், திரவ உணவு என இரண்டுமே அவசியம். திரவ உணவை மட்டுமே எடுத்துக் கொண்டால் மூளை சார்ந்த, உடல் சார்ந்த எந்த வேலைகளையும் செய்வது கடினமாக இருக்கும். திட உணவுகளை ஒருவர் எடுத்துக் கொள்ளவில்லையென்றால் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் தசையின் அளவு குறைந்துவிடும். உடலுக்கு தேவையான வைட்டமின் சி அல்லது பொட்டாசியம் போன்ற சத்துகள் கிடைக்காமல் போய்விடும்." என்று தெரிவித்தார். டயட் மேற்கொள்ள நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒருவரின் உடல்நிலையைப் பொருத்து தான் அவருக்கான உணவுமுறையைப் பரிந்துரைக்க முடியும் என்கிறார் ரேஷ்மா. ஒருவரின் உடல்நிலையைப் பொருத்து தான் அவருக்கான உணவுமுறையைப் பரிந்துரைக்க முடியும் என்கிறார் ரேஷ்மா. "ஒருவரின் ரத்தப் பரிசோதனை, கொழுப்பு அளவு, நுரையீரல், சிறுநீரகத்தின் நிலை, அவருக்கு ஏற்கெனவே உள்ள மருத்துவ சிக்கல்கள், குடும்பத்தில் மரபணு ரீதியாக உள்ள சிக்கல்கள் போன்றவற்றை அறிந்த பிறகே அவருக்கான உணவு முறையைப் பரிந்துரைக்க முடியும்." என்றார் ஒருவர் தனது உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள விரும்பினால் அதற்கு முறையாக பயிற்சி பெற்றவர்கள் மூலம் அறிவுரை பெறுவது தான் சிறந்தது என்றும் தெரிவித்தார். "மனித உடல் அமைப்பிலே திட உணவுகள் உட்கொள்வது என்பது அடிப்படையானது. திட உணவுகள் இல்லையென்றால் உடல் செரிமானம் மேற்கொள்ளாது. இதனால் உடல் திசுக்களையே செரிமானம் செய்யத் தொடங்குகிறது. அப்போது தான் குடலழற்சி போன்ற சிக்கல்கள் எழத் தொடங்குகின்றன." என்றார் அவர். உடற்பயிற்சி செய்பவர்கள் எவ்வாறு டயட் பின்பற்றலாம்? பரிந்துரை இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ளாததைப் போல டயட்டையும் முறையான பரிந்துரை இல்லாமல் பின்பற்றக்கூடாது என்கிறார் சுஜாதா. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சமூக ஊடகங்களைப் பார்த்து உணவு பழக்கங்கள், உணவு முறைகளை மாற்றிக் கொள்வது மிகவும் சிக்கலாக உள்ளது. தற்போது பலரும் இருவேளை உணவு, ஒருவேளை உணவு எனப் பின்பற்றுகிறார்கள். இதனால் பல சிக்கல்கள் எழுகின்றன. இதனுடன் சேர்ந்து தீவிர உடற்பயிற்சியும் மேற்கொள்ளும்போது சிக்கல்கள் அதிகமாகின்றன." என்று தெரிவித்தார் தசை அளவு குறைவதன் ஆபத்தை சுட்டிக்காட்டி பேசிய அவர், "எடையை குறைக்க உணவு உட்கொள்ளும் பழக்கத்தை மாற்றினால் உடலில் தசையின் மற்றும் கொழுப்பின் அளவும் பெருமளிவு குறைகிறது. இதில் இதய தசை குறைவது தான் மிகவும் ஆபத்தானது. அப்போது தான் இதய நோய் வருவதற்கான சிக்கல்களும் அதிகரிக்கின்றன." என்றார். படக்குறிப்பு, டயட் மட்டுமல்ல ஒருவரின் உடற்பயிற்சியும் அவரின் வயது, எடை உடல்நிலை, அவரின் உடல் ஆரோக்கியம் எனப் பலவற்றைப் பொருத்து தான் பரிந்துரைக்கப்படுகிறது டயட் மட்டுமல்ல ஒருவரின் உடற்பயிற்சியும் அவரின் வயது, எடை உடல்நிலை, அவரின் உடல் ஆரோக்கியம் எனப் பலவற்றைப் பொருத்து தான் பரிந்துரைக்கப்படுகிறது என்று கூறியவர், "மனிதர்களின் உடல் பரவலாக மூன்று வகைகளின் கீழ் அடங்கும். மெலிதான உடல்வாகு உடையவர்கள், சிலருக்கு உடலிலே கொழுப்பு இருக்கும், சிலருக்கு தசை அளவு கூடுதலாக இருக்கும். மரபணு ரீதியாக இதய நோய் வருகிறது என்றால் அவருக்கு கார்டியோ சார்ந்து தீவிர உடற்பயிற்சி வழங்க முடியாது. ஒருவரின் முழுமையான உடல்நிலை, அவருக்கு ஏற்கெனவே உள்ள பிரச்னைகள், குடும்பத்தில் பரம்பரை ரீதியாக உள்ள சிக்கல்களைப் பொருத்து தான் தகுந்த உடற்பயிற்சி பரிந்துரைக்கப்படும்." என்று தெரிவித்தார். ஒருவர் எதிர்கொள்ளும் அழுத்தமும் உடற்பயிற்சியை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக விவரித்தவர், "ஒருவருக்கு என்ன மாதிரியான மன அழுத்தம் உள்ளது, அவரின் வேலை அழுத்தம் என்ன மாதிரி உள்ளது, எந்த அளவிற்கு ஆழமான உறக்கம் அவருக்கு கிடைக்கிறது, அவரின் தனிப்பட்ட மனநிலை, சமூக வட்டம் எப்படிப்பட்டதாக உள்ளது என அனைத்துமே இதில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கின்றன" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr5rmmq7j5mo
1 month 3 weeks ago
இவ்வளவு நாளும் பேசாமல்தானே இருந்தனீங்கள்...என்ன இப்ப திடீரென்று..
1 month 3 weeks ago
03 Aug, 2025 | 10:31 AM சுதந்திர பாலஸ்தீன தேசமொன்று உருவாகும் வரை ஆயுதங்களை கைவிடப்போவதில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது. 2007 முதல்; காசாவை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள ஹமாஸ் ஆயுதங்களை கைவிடவேண்டும் என வேண்டுகோள்கள் எழுந்துள்ளன. இதற்கு பதிலளித்துள்ள ஹமாஸ் ஜெரூசலேமை தலைநகராக கொண்ட சுதந்திரமான முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாடு நிறுவப்படாவிட்டால் ஆயுதமேந்திய எதிர்ப்பிற்கான உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளது. இதேவேளை ஹமாஸ் தன்னிடமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதியை காண்பிக்கும் வீடியோவொன்றையும் வெளியிட்டுள்ளது. எவியதார் டேவிட் என்ற பணயக்கைதியின் வீடியோவையே ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது, மிகவும் மெலிந்த நிலையில் காணப்படும் அவர் ஒரு குழியை வெட்டுகின்றார், இந்த குழி எனக்கானது என அவர் தெரிவிக்கின்றார். பணயக்கைதிகளும் பட்டினி கிடக்கின்றார்கள் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/221664
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
மாவீரர் நாளினை அனுஷ்ட்டிப்பதை அரசு நேரடியாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், போரில் கொல்லப்பட்டவர்களை உறவினர்கள் நினைவுகூர்வதைத் தாம் தடுக்கப்போவதில்லை என்றே கூறுகிறது. போரில் கொல்லப்பட்டவர்கள் என்று கூறும்போது பொதுமக்கள், போராளிகள் என்று அனைவரும் உள்ளடக்கப்படுவார்கள் என்பதை அரசு தெரிந்தே வைத்திருக்கிறது. தலைவரின் மறைவு குறித்த தெளிவான, தீர்க்கமான வெளிப்படுத்தலினை சிங்கள அரசைத் தவிர வேறு எவருமே இதுவரை செய்யத் தவறியிருக்கும் நிலையில் அவருக்கான அஞ்சலியினைச் செலுத்துவது குறித்த தயக்கம் தமிழ் மக்களிடையே இருந்து வருகிறது. இது அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று நம்பும் அல்லது அவ்வாறு எண்ண விரும்பும் ஒரு தரப்பினரிடையே இருந்துவரும் அழுத்தங்களினால் ஏனைய தரப்புக்கள் இதுகுறித்து எதுவும் பேசாது மெளனமாகக் கடந்து செல்வது நடக்கிறதாகவே நான் எண்ணுகிறேன். தாயகத்தில் தலைவரின் உருவப்படம் வைப்பதற்கு இருக்கும் அரச எதிர்ப்பு என்பது சாதாரண போராளி ஒருவரின் மறைவினை நினைவுபடுத்த வைக்கப்படும் ஒளிப்படத்திற்கு நிகரானது என்பதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தலைவரின் திருவுருவப் படத்தினை தாயகத்தில் எவர் வைத்து வணக்கம் செலுத்தினாலும் நிச்சயமாக அரசு அவர்மீது தனது கவனத்தைத் திருப்பும். தலைவர் வாழ்ந்த வீட்டினை முற்றாக இடித்தழித்து, அவரது வாழ்வுகுறித்த சிறிய அடையாளங்கள் கூட தாயகத்தில் இருக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அரசு, அவரது திருவுருவப் படத்தினை வெளிப்படையாகவே வைத்து கெளரவிக்க அனுமதியளிக்கப்போவதில்லை என்பது திண்ணம். ஆகவேதான் தாயகத்தில் இதுகுறித்த முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் புலத்திலோ அவ்வாறான அரச அழுத்தங்கள் இல்லாதபோதிலும், நான் மேலே கூறிய அவர் இருக்கிறார் என்று நம்பும், நம்ப ஆசைப்படும் ஒரு தரப்பினரிடமிருந்து வரும் எதிர்ப்பும், அவரது மறைவினை வெளிப்படுத்துவதினால் தனிப்பட்ட நலன்கள் பாதிக்கப்படும் என்று அச்சப்படும் ஒரு குழுவினரும் இதனை வெளிப்படையாக அனுஷ்ட்டிப்பதை எதிர்க்கிறார்கள். தனிப்பட்ட ரீதியில் தலைவருக்கான அஞ்சலியினை ஒவ்வொரு தமிழரும் தமது மனதில் செய்தாலே போதுமானது என்று நான் எண்ணுகிறேன். அவர் எப்போதும் எமது மனங்களில் வாழ்ந்துகொண்டிருப்பார். அவரை நினைவுகூர நாம் நாள்ப்பார்ரபதைத் தவிர்த்து முன்னோக்கிச் செல்வதே அவருக்குச் செய்யும் உயர்ந்த கெளரவிப்பாக இருக்கும்.
1 month 3 weeks ago
மதில்மேல் குப்பை: ஓரு கூட்டுப் பொறுப்பு - நிலாந்தன் நான் வசிக்கும் பகுதியில் கிழமை தோறும் கழிவகற்றும் வண்டி வரும் நாட்களில் சில வீட்டு மதில்களில் குப்பைப் பைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். அல்லது மதிலில் ஒரு கம்பியை கொழுவி அந்த கம்பியில் குப்பைகளைக் கழுவி வைத்திருப்பார்கள். ஏனென்றால்,குப்பை அகற்றும் வண்டி உரிய நேரத்துக்கு வருமா வராதா என்ற சந்தேகம். அது வரத் தவறினால் நிலத்தில் வைக்கும் குப்பைகளை நாய்கள் குதறிவிடும். கட்டாக்காலி நாய்களை இன்றுவரை கட்டுப்படுத்த முடியவில்லை. இது யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள ஒரு பகுதி. இன்னொரு பகுதி குரு நகரில். “தாங்கள் தொழில் செய்யும் கடலிலேயே அப்பகுதி மக்கள் கழிவுகளை கொட்டுகிறார்கள்” என்று ஒரு மதகுரு தெரிவித்தார். அப்பகுதியில் சூழலில் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒருவர் சொன்னார் குருநகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள கடலில் இருந்து தொடங்கி குறிப்பிடத்தக்களவு தூரம் அவ்வாறு கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளும் உட்பட அனைத்து விதமான கழிவுகளையும் காணக்கூடியதாக இருக்கும் என்று. சில சமயம் செத்த நாயை கொண்டு வந்து போடுகிறார்கள். சில சமயம் பழைய ஆடைகள் கடலில் மிதக்கும். இவற்றோடு வழமை போல பிளாஸ்டிக் கழிவுகளும் காணப்படும் என்று. மேற்குறிப்பிட்ட மதகுரு சொன்னார், “கரையோரக் குடியிருப்புகளில் வீடுகளுக்கு முன்னாலும் நிலம் இல்லை பின்னாலும் நிலம் இல்லை. எனவே வீட்டுக் கழிவுகளை அவர்கள் எங்கே கொட்டுவது? சாப்பாட்டுக் கழிவுகளை வீட்டுக்குள் வைத்தால் சில நாட்களில் அவை புழுக்கத் தொடங்கி விடும். எனவே இந்த கழிவுகளை அகற்றுவதற்கு ஒரு பொருத்தமான வழிமுறை வேண்டும். ஒவ்வொரு கிழமையும் ஒரு நாள் தான் கழிவு அகற்றும் வண்டி வரும் என்றால் ஏனைய நாட்களில் கழிவுகளை எங்கே கொட்டுவது? ஏனென்றால் ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்கழிவு வருந்தானே?” என்று. ஒவ்வொரு நாளும் கழிவை அகற்றுவதற்கு போதிய வாகனங்கள் இல்லை என்று மாநகர சபை நிர்வாகம் கூறுகின்றது. மாநகர சபையில் மட்டுமல்ல இந்த பிரச்சினை உள்ள எல்லா உள்ளூராட்சி சபைகளிலும் அதுதான் நிலைமை. போதிய அளவு வாகனங்கள் இல்லை வளங்களும் இல்லை. கழிவை முகாமை செய்வதற்கு போதிய அளவுக்கு பொருத்தமான வளங்கள் இல்லை என்பது ஒரு புறமிருக்க, கழிவை முகாமை செய்வது என்பது தனிய உள்ளூராட்சி சபையின் பொறுப்பு மட்டுமல்ல. அது மக்களுடைய பொறுப்பும் தான் என்று அண்மையில் சாவகச்சேரியைச் சேர்ந்த ஒரு செயற்பாட்டாளர் முகநூலில் எழுதியிருந்தார். சுத்தமாக இருப்பது ஒர் ஒழுக்கம். தமது சூழலை சுத்தமாக வைத்திருப்பது என்பது ஒரு பொறுப்பு; ஒரு பண்பாடு. வட்டாரங்கள்தோறும் கழிவை சேகரிக்கும் மையங்களை உருவாக்க வளங்கள் இருக்கின்றதோ இல்லையோ அவ்வாறு உருவாக்கப்படும் மையங்களில் மக்கள் கழிவுகளை எவ்வாறு போடுகிறார்கள் என்றும் பார்க்க வேண்டும். அதற்கென்று வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் தொட்டிகளில் பக்குவமாகக் கழிவைக் கொண்டு போய்ப் போடுவது எத்தனை பேர்? பதிலாக வாகனத்தில் நின்றபடியே தொட்டியை நோக்கி அதை வீசுபவர்கள் எத்தனை பேர்? இதற்கு முன்பு அவ்வாறு கழிவு சேகரிக்கும் மையங்களை உருவாக்கிய பொழுது அந்தப் பகுதியையே குப்பையாக்கிவிட்டார்கள். யாழ்ப்பாணத்தில் முறையற்ற கழிவகற்றல் உயிர் பல்வகமைக்கு ஆபத்து விளைவிக்கும் என்கிறார் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் கணபதி கஜபதி. இது ஒரு சமூகப் சமூகப் பொறுப்பு. தன் வீட்டுக்கு குப்பையை மற்றவரின் தலையில் கொட்டுவது.தான் சுத்தமாக இருந்தால் போதும் மற்றவர்கள் எப்படியும் அழுகி நாறட்டும் என்ற சிந்தனை. இந்த சுயநலம் இருக்கும்வரை ஒருவர் மற்றவரை நேசிக்க முடியாது. ஒரு சமூகமாகத்தானும் திரள முடியாது. இதற்கு சட்டம் இயற்றி கமராவைப் பூட்டி எத்தனை நாட்களுக்கு கண்காணிப்பது? தண்டனைகளின் மூலம் மட்டும் சமூகப் பொறுப்பை, கழிவு முகாமைத்துவப் பண்பாட்டை உருவாக்க முடியுமா? அண்மையில் பொது இடங்களில் வெற்றிலை துப்பியதற்காக ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளிவந்தது. இதுதொடர்பாக ஏற்கனவே நான் எழுதியிருக்கிறேன். பெரும்பாலான சந்தைகளில் மூலைகளில் வெற்றிலை துப்பல்களை பார்க்கலாம். அது மட்டுமல்ல வாகனம் ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே வாகனத்தின் சாரதி அல்லது பேருந்தில் பயணிப்பவர்கள் வெற்றிலையைத் துப்புவார்கள் அது காற்றில் பறந்து வந்து உங்களுடைய முகத்தில் படும். எச்சில் நெடி அன்றைய நாளையே அருவருப்பானதாக ஆகிவிடும். இங்கே இந்த இடத்தில், இலங்கைத் தீவின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவுக்கு கிடைத்த ஒரு அனுபவத்தைக் குறிப்பிட வேண்டும். பிரேமதாச ஊரில் அதிகம் பிரபல்யமாகாத ஒருவராக இருந்த காலத்தில் தன்னுடைய முதலாவது நேர்முகத் தேர்வுக்காக புதிய ஆடைகளை அணிந்து கொண்டு பேருந்தில் ஏறுவதற்கு மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்திருக்கிறார். அங்கே நகர்ந்து கொண்டிருந்த பேருந்தில் இருந்த ஒருவர் தன் வெற்றிலை எச்சிலை வெளியே துப்பியிருக்கிறார். அது பிரமதாசாவின் முகத்திலும் தலையிலும் சட்டை முழுவதிலும் பட்டிருக்கிறது. திகைத்துப்போன பிரேமதாச துக்கத்தோடு தாயாரிடம் திரும்பி ஓடி வந்திருக்கிறார். தாயார் மகனைத் தேற்றி நம்பிக்கையூட்டியிருக்கிறார். நீ முழுகிவிட்டு வா நான் இருப்பவற்றில் நல்ல உடுப்பை அயர்ன் பண்ணித் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். தாய் கொடுத்த உற்சாகத்தோடு வேறு ஓர் உடுப்பை அணிந்து கொண்டு நேர்முகத் தேர்வுக்கு போன பிரேமதாச அங்கே நூலக உதவியாளராக தெரிவு செய்யப்படுகிறார். அங்கிருந்துதான் அவருடைய அரசியல் வாழ்வு தொடங்குகிறது. பேருந்தில் பயணம் செய்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜன்னலுக்கு வெளியே துப்புகிறார்கள். மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் துப்பிவிட்டுப் போகிறார்கள். அது காற்றில் பறந்து வந்து பின்னால் வருகிறவரின் முகத்தில் துர் நெடியோடு படியும். எவ்வளவு அருவருப்பு? அது இப்பொழுது தண்டனைக்குரிய குற்றம். தன் குப்பையை மற்றவர்களின் தலையில் கொட்டுவதும் குற்றம். தண்டனைகளால் மட்டும் அவ்வாறான சமூகப்பொறுப்பை பண்பாட்டை உருவாக்க முடியுமா? திருநெல்வேலி சந்தைக்குள் காறித் துப்பும் ஒருவர் தன் வீட்டுக்குள் அதைச் செய்ய மாட்டார். ஏனென்றால் அது அவருடைய சொந்த வீடு. தான் சுத்தமாக இருந்து கொண்டு மற்றவர்கள் வாழும் சூழலை அசுத்தமாக்குவது ஒரு நாகரிகம் அடைந்த மக்கள் கூட்டம் செய்கிற வேலையல்ல. கழிவை அகற்றுவது என்பதற்கு பதிலாக கழிவை முகாமை செய்வது என்று சிந்திப்பதே பொருத்தமானது என்று சமூகச் செயற்பாட்டாளராகிய செல்வின் கூறினார். கழிவு முகாமைத்துவத்தை வளர்ச்சியடைந்த நாடுகள் லாபகரமான ஒரு தொழிலாக மாற்றி விட்டன. அங்கெல்லாம் கழிவு விற்கப்படுகிறது; வாங்கப்படுகிறது; மீள சுழற்சிக்கு உள்ளாக்கப்பட்டு மீண்டும் விற்கப்படுகிறது. எனவே கழிவு முகாமைத்துவத்தை எப்படி வணிகப் பண்புடையதாக மாற்றலாம் என்று சிந்திக்கலாம். அது ஒரு கூட்டுப் பொறுப்பு. ஆனால் அந்த கூட்டுப் பொறுப்பை மக்களுக்கு உணர்த்துவது யார்? உள்ளூர்த் தலைவர்கள் உள்ளூர் முன்னுதாரணங்களாக மாறினால்தான் அவ்வாறு கூட்டுப் பொறுப்பைக் கட்டியெழுப்பலாம். உள்ளூர்த் தலைவர்கள் முதலில் பிரதேச சபைக்குள் தமது கூட்டுப் பொறுப்பை நிரூபிக்க வேண்டும். குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றத்துக்குள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து முடிவெடுக்க வேண்டிய விடையங்களில் புதிய உள்ளூராட்சி மன்றங்கள் கூட்டுப் பொறுப்பை நிரூபிக்குமாக இருந்தால் மக்களிடமும் கூட்டுப்பொறுப்பை எதிர்பார்க்கலாம். குப்பை விடயத்தில் மட்டுமல்ல எல்லா விடயத்திலும் கூட்டுப் பொறுப்பை எதிர்பார்க்கலாம். தலைவர்கள் எவ்வழியோ மக்களும் அவ்வழி. https://www.nillanthan.com/7603/#google_vignette
1 month 3 weeks ago
‘சோமரத்ன ராஜபக்ச மனைவியின் கோரிக்கையை ஏற்று, அனுர தன்னை நிரூபிக்க வேண்டும்” மனோ “..கிருஷாந்தி குமாரசுவாமி மட்டும் அல்ல, இன்னமும் பல நூற்று கணக்கானோர் கொலை செய்ய பட்டனர். இதை நான் 1998ம் வருடமே என் சாட்சியத்தில் சொன்னேன். இன்று ஐந்து அல்லது ஆறு மனித புதை குழிகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன. நான் சொன்னது உண்மை ஆகி உள்ளது. மொத்தமாக 250 முதல் 300 பேர் வரை சித்திரவதைக்கு உள்ளாகி கொன்று புதைக்க பட்டார்கள். இன்று தண்டனைக்கு உள்ளாகி இருக்கும் நானும், ஏனைய நால்வரும் மட்டும் இத்தனை பேரை கைது செய்து, சித்தரவதை செய்து, கொன்று, குழி வெட்டி, புதைக்க முடியுமா.?” “..யாழ்ப்பாணத்துக்கு செல்லும் பிரதான, சாலையில் அமைந்துள்ள, செம்மணி காவல் சாவடியில், பகல் நேரங்களில், அடையாளம் காட்ட படுவோர், உடன் கைது செய்ய பட்டு. இராணுவ ட்ரக்கில், ஏற்ற பட்டு, 7ம் இராணுவ படை தலைமையகத்துக்கு கொண்டு செல்ல பட்டு, விசாரணை என்ற பெயரில், சித்திரவதைக்கு உள்ளாக்க பட்டு, கொல்ல பட்டு, சடலங்களாக இரவு மீண்டும் செம்மணி காவல் சாவடிக்கு கொண்டு வரப்படுவர். மேலதிகாரிகளின் கட்டளை படி நாம் அந்த சடலங்களை அங்கே புதைப்போம். தொடர்ந்து புதைத்தோம். இதுதான் நடந்தது. கொலை செய்த மேலதிகாரிகள் தப்பி விட்டனர். புதைத்த நாம் தண்டனைக்கு உள்ளாகி உள்ளோம். சில மேலதிகாரிகள் கைதாகி வழக்கு தொடர பட்டு, பின் அந்த வழக்கு நின்று போய் விட்டது. அதிகாரிகள் தப்பி விட்டார்கள். நாம் அகப்பட்டு உள்ளோம். இது அநீதி. சர்வதேச விசாரணை நடக்கும் பட்சத்தில் நான் சாட்சியம் அளித்து குற்றம் இழைத்த அதிகாரிகளின் பெயர்களை வெளி படுத்த தயாராக உள்ளேன்..” லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, தனது மனைவி திருமதி எஸ்.சி.விஜேவிக்கிரம மூலம் இவ்வாறு கூறி உள்ளதாக தெரிவித்த, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இவ்விதம், வெளி கொணர பட்டுள்ள கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் புதிய திருப்பம் தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது; கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை குற்றவாளி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் மனைவி திருமதி எஸ்.சி.விஜேவிக்கிரம, ஜனாதிபதி அனுர குமாரவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் நகல்களை பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் அனுப்பி உள்ளார். ஐநாவுக்கும் அனுப்பி உள்ளார். அக்கடிதத்தில் தனது கணவர் தன்னிடம் கூறிய மேற்கண்ட விடயங்களை, அவர் எழுதியுள்ளார். ஆகவே இன்று இந்த கடிதம், அனுரகுமார திசாநாயக்கவின் “கோர்ட்டில்” இன்று நிற்கிறது. சர்வதேச கண்காணிப்பு விசாரணைக்கு ஜனாதிபதி அனுர உடன் பட வேண்டும். அதிலே லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச சுதந்திரமாக சாட்சியம் அளிக்க வேண்டும். ஆனால், இவற்றுக்கு முன், இன்று சிறையில் இருக்கும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவுக்கு, உடனடியாக அங்கே அதி உயர் விசேட பாதுகாப்பு வழங்க பட வேண்டும். இது தொடர்பில், அரசியல் சிவில் சமூகமாக நாம் கூட்டு மேல் நடவடிக்கைக்கு தயார் ஆவோம். ஐநா மனித உரிமை ஆணையர் வொல்கர் டர்க்கிடம் கோரிக்கை நாம் அதிகார பூர்வமாக கோரிக்கை விடுப்போம். பிரசித்தி பெற்ற சித்திரவதை, பாலியல் வல்லுறவு, படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, தனக்கு ஆணை இட்ட மேலதிகாரிகளை அடையாளம் காட்ட தயார் என்கிறார். இலங்கை வரலாற்றில் இப்படி ஒரு இராணுவதை சேர்ந்த நபர் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்து, தனக்கு ஆணை இட்ட மேலதிகாரிகளை அடையாளம் காட்ட தயார் என கூறவில்லை. ஆகவே, இதை ஏற்று மேல் நடவடிக்கை எடுக்க அனுர குமார அரசாங்கம் முன் வர வேண்டும். சர்வதேச நெருக்குதல்களை முறையாக தர ஐநா மனித உரிமை ஆணையகமும் முன் வர வேண்டும். இதை செய்ய முடியா விட்டால், இது ஒரு அரசாங்கமாகவோ, அது ஒரு ஐநா சபையாகவோ இருக்க முடியாது. இது இன்று சர்வதேச விவகாரம் ஆகி விட்டதை அனுர குமாரவும், வொல்கர் டர்க்கரும் உணர வேண்டும். அதனால்தான், அனுரவுக்கு செம்மணி விவகாரம் ஒரு அக்னி பரீட்சை என்று அன்றே சொன்னேன். இன்று மீண்டும் கூறுகிறேன். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/சோமரத்ன-ராஜபக்ச-மனைவியின்-கோரிக்கையை-ஏற்று-அனுர-தன்னை-நிரூபிக்க-வேண்டும்-மனோ/150-362216
1 month 3 weeks ago
கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரி பேரணி எம்.எஸ்.எம்.நூர்தீன் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நீதி கோரி காத்தான்குடியில் கவனஈர்ப்பு பேரணி ஒன்று ஞாயிற்றுக்கிழமை(03) அன்று முன்னெடுக்கப்பட்டது. காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை இடம்பெற்று 35ஆவது வருட ஷுஹதாக்கள் தினம் ஞாயிற்றுக்கிழமை (03) அன்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், காத்தான்குடி முதலாம் குறிச்சி பிரதான வீதியில் இந்த கவன ஈர்ப்பு பேரணி நடத்தப்பட்டது. அதன் பின்னர் பிரகடனம் வெளியிடப்பட்டது. காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளை தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. இலங்கையில் கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்தத்தின்போது, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நீதியும் நியாயமும் வேண்டி கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் புதை குழிகள் தோண்டப்பட்டு அங்கிருந்து எடுக்கப்படும் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பேரணியின்போது வலியுறுத்தப்பட்டது.பேரணியின் இறுதியில் ஷூஹதாக்கள் தின பிரகடனம் ஒன்றும் வாசிக்கப்பட்டது. இதன்போது, சிறப்புரையை சம்மேளன தலைவரும் ஓய்வுபெற்ற அதிபருமான சத்தார் நிகழ்த்தினார் பிரகடனத்தை சம்மேளன செயலாளர் மௌலவி ரமீஷ் ஜமாலி வாசித்தார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு அனுப்பி வைக்கும் பொருட்டு இந்த பிரகடனம் காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜூத் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது, முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள் என்பதை வலியுறுத்தியும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தவும், முஸ்லிம்கள் இழந்த காணிகளை மீள வழங்கவும் வேண்டும் எனவும் விகிதாசாரப்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கான காணி பங்கீடு செய்யப்பட வேண்டும் எனவும் விகிதாசாரப்படி, அரசு உயர் பதவிகளில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் அமர்த்தப்பட வேண்டும் எனவும் இந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேரணியில், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளை பிரதிநிதிகள் தேசிய ஷுஹதாக்கள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் இதன்போது, கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களைத் தாங்கி நின்றனர். https://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/கடத்தி-காணாமல்-ஆக்கப்பட்ட-முஸ்லிம்களுக்கு-நீதி-கோரி-பேரணி/46-362217
1 month 3 weeks ago
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இனி எரிபொருள் வாங்காது என கேள்விப்பட்டேன்; அது நல்லது: ட்ரம்ப் 03 AUG, 2025 | 12:21 PM ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இனி எரிபொருட்களை வாங்காது என்று கேள்விப்பட்டேன். அது ஒரு நல்ல நடவடிக்கை" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ரஷ்யாவிடம் இருந்து இனி இந்தியா எரிபொருள் வாங்காது என்று புரிந்து கொள்கிறேன். அதைத்தான் கேள்விப்பட்டேன். சரியா தவறா என எனக்குத் தெரியாது ஆனால் அது ஒரு நல்ல நடவடிக்கை. என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.” என தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலை நிறுத்துவதில் டொனால்ட் ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கான முயற்சியாக ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பிற நாடுகளையும் அது எச்சரித்து வருகிறது. அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி இந்தியா சீனா உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எரிபொருட்களை வாங்கி வருகின்றன. சந்தை விலையை விட ரஷ்யா குறைவாக விற்பதால் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதில் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. இதை தடுக்கும் நோக்கில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25மூ வரி விதிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் கடந்த புதன் கிழமை அறிவித்தார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “இந்தியா எங்கள் நண்பர். எனினும் பல ஆண்டுகளாக நாங்கள் அவர்களுடன் சிறிய அளவிலான வர்த்தகத்தையே மேற்கொண்டு வருகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவின் வரி விதிப்பு மிக அதிகமாக உள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. இதனால்தான் அவர்களுடனான எங்களது வர்த்தகம் குறைந்த அளவில் உள்ளது. மேலும் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு. அவர்கள் கடுமையான பணம் சாரா வர்த்தக தடைகளையும் அமல்படுத்துகின்றனர். உக்ரைனில் மேற்கொண்டு வரும் கொலைவெறித் தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்பும் நேரத்தில்இ அந்த நாட்டிடமிருந்து தங்களுக்கு தேவையான ராணுவ உபகரணங்களை அதிக அளவில் இந்தியா வாங்கியுள்ளது. சீனாவுடன் சேர்ந்த ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி இறக்குமதியாளராகவும் இந்தியா உள்ளது. இவை அனைத்தும் சரியான விஷயங்கள் அல்ல.” என தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக ட்ரம்ப் வெளியிட்ட மற்றொரு பதிவில் “ரஷ்யாவுடன் இந்தியா வைத்துள்ள உறவு குறித்து எனக்கு கவலை இல்லை. ஆனால் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரிகள்தான் உலகிலேயே மிக அதிகமாக உள்ளது. எனவேதான் அவர்களுடன் ஒப்பீட்டளவில் சிறிய வணிகத்தையே செய்து வருகிறோம். அதேநேரம் ரஷ்யாவுடன் அமெரிக்க வர்த்தக உறவு கொண்டதில்லை. இந்தியா மற்றும் ரஷ்யாவும் செயலிழந்துபோன தங்களின் பொருளாதாரங்களை இன்னும் நாசமாக்கட்டும்” என்று கடுமையாக கூறியிருந்தார். இந்நிலையில் ரஷ்யாவுடன் வர்த்தக உறவில் ஈடுபடும் நிறுவனங்கள் அமெரிக்காவில் வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளையும் ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனால் சில இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருட்களை வாங்குவதை நிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. எனினும் இது தொடர்பாக மத்திய அரசு எவ்வித தகவல்களையும் தெரிவிக்கவில்லை. இந்த பின்னணியில் டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/221686
1 month 3 weeks ago
03 Aug, 2025 | 11:44 AM ஆர்.ராம் இந்திய எதிர்ப்புவாதத்துக்கு முன்னதாக ஜே.வி.பி. தமிழ் மக்களின் சுயாட்சி, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்களை முழுமையாக நிராகரித்துள்ளதோடு அதனை தொடர்ச்சியாகவும் பின்பற்றி வருகின்றனர் என்று குறிப்பட்ட இராஜதந்திரியான கலாநிதி. தயான் ஜயத்திலக்க கடந்தகால ஜனாதிபதிகளை விடவும் பிற்போக்குத்தனமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான தீர்வு, மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அதன்பின்னர் 1983ஜுலைக்குப் பின்னர் தெற்கு நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்திய ஒன்றோடொன்று இணைந்த ஆனால் வேறுபடுத்தக்கூடிய இரண்டு அரசியல் நிகழ்வுகள் இருந்தன. ஆதிலொன்று தமிழ் கேள்விக்கான அரசியல் தீர்வுக்கான கவன மாற்றம் இரண்டாவது இந்தியாவின் வளர்ந்து வரும் வகிபாகமாகும். கறுப்பு ஜுலை தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வு தேவை என்பதை வெளிப்படுத்தியது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கில் அரை தன்னாட்சி அதிகார சுய-நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்டதாக 1957இல் பண்டாரநாயக்க மற்றும் செல்வநாயகம் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. 1983நிகழ்வுகளுக்குப் பிந்தைய காலகட்டத்தில் தடைசெய்யப்பட்ட ஜே.வி.பி. எந்தப் பக்கத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டது? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஜே.வி.பியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீர 1983 மற்றும் 1984 இல் தனது தலைமறைவுக் காலத்தில் கட்சியின் மத்திய குழுவில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார், அது 1985 இல் தமிழீழப் போராட்டத்திற்கு என்ன தீர்வு என்ற தலைப்பில் 350பக்கங்களைக் கொண்ட புத்தகமாக இரகசியமாக வெளியிடப்பட்டது. அதில் அவர் தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கான கேள்விக்கு ஒரு தீர்வாக எந்தவொரு சுயாட்சி முறைமையையோ அல்லது அதிகாரப்பகிர்வையோ ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அவ்விதமான கோரிக்கைகளை முற்றிலும் நிராகரித்து எதிர்த்திருந்தார். அவரது வெளிப்படையான நிராகரிப்பில் அவரது கட்சி 1981இல் போட்டியிட்ட மாவட்ட அபிவிருத்தி சபைகளைக்கூட உள்ளடக்கப்பட்டிருந்தது. ஜே.வி.பி.யின் அதிகாரப் பகிர்வுக்கு எதிரான நிலைப்பாடு இந்திய இராணுவத் தலையீட்டிற்கு எதிர்வினையாக ஆரம்பிக்கப்படவில்லை. அதற்கு முன்னரேயே இருந்தது. ஜுலை கலவரத்துக்குப் பின்னர் ஜி பார்த்தசாரதி தலைமையிலான தூதுக்குழு விஜயத்துடன் இந்திய இராஜதந்திர வகிபாகம் ஆரம்பித்திருந்தாலும் ஜே.வி.பி. அதற்கு முன்னராகவே தனது நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தது. அதன்பின்னர் இந்திய தலையீட்டையும் ஜே.வி.பி எதிர்த்தது. ஜே.வி.பி.இடதுசாரித்து சிந்தனைகளைக் கொண்டது என்ற அடிப்படையில் சமஷ்டியை ஏற்காது விட்டாலும் சீன மற்றும் வியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு வெளிப்படையான ஒற்றையாட்சி அரசின் கீழ் இன-பிராந்திய சுயாட்சியை ஏற்றிருந்தன. ஆனால் ஜே.வி.பி.அதற்கு கூட தயாரக இல்லை. இந்நிலையில் கடந்த 40 ஆண்டுகளாக, தமிழ்த் தேசியப் பிரச்சினை சம்பந்தமாக விஜேவீர 1985இல் வெளியிட்ட புத்தகத்தில் வெளிப்படுத்தி நிலைப்பாடுகளில் இருந்து தற்போது வரையில் அக்கட்சி மாறவில்லை. அக்கட்சி தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வாகவோ அல்லது தற்காலிகமான தீர்வாகவோ அல்லது பகுதியளவிலான தீர்வாகவோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல்-பிராந்திய சுயாட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்த் தேசிய பிரச்சினையை ஒரு தனித்துவமான அரசியல் கோரிக்கையாகக்கூட அங்கீகரிக்கவில்லை. லெனினின் கோட்பாட்டில் பார்க்கின்றபோது ஜே.வி.பியானது சொல்லில் சோசலிசத்தைக் கொண்டிருந்தாலும் செயலில் பெருமிதத்தையே (இனவாதத்தையே)கொண்டிருக்கின்றது என்ற வரையறைக்குள்யே காணப்படுகின்றது. விசேடமாக அரைச்சுயாட்சி, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்களைக் கூட அங்கீகரிப்பதற்கு முன்வராது விட்டாலும் கூட, 13ஆவது திருத்தச்சட்டத்தினைக் கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் முடக்கப்பட்டு 68ஆண்டுகள், ஜூலை கலவரம் நிகழ்ந்து 42 ஆண்டுகளாகின்றன, மாகாண சபைகளுக்கு முதன்முதலாக தேர்தல் நடைபெற்று பிறகு 35 ஆண்டுகளாகின்றன, வடக்கு மாகாண சபைக்கு நடத்தப்பட்ட தேர்தல் முடிவiடைந்து 12ஆண்டுகளாகின்றன. ஆனால் தற்போதும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீண்டகாலமாக நிலுவையிலுள்ள மாகாண சபைத்தேர்தல்கள் குறித்து மௌனமாக உள்ளார். தமிழ் தேசியப் பிரச்சினை குறித்த அரசியல் உரையாடல், தற்போது 1957க்கு முந்தைய காலத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த அரசியல் வெற்றிடம், தமிழ் புலம்பெயர் சமூகத்தின் செல்வாக்கு மிக்க புதிய இனப்படுகொலைக்கு நீதி கோரும் தலைமுறைக்கு எதிராக அநுர அரசை அரசியல் ரீதியாகவும் சித்தாந்த ரீதியாகவும் பாதுகாப்பற்றதாக விட்டுவிடும். அரசுக்கு தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபைகள் மற்றும் முதலமைச்சர்களைக் கொண்டுள்ளோம் என்று பகிரங்கமாக கூறுவதற்கு முடியாது விட்டால் தெற்கில் சிங்கள பெரும்பான்மை இனப்படுகொலை'என்ற விடயத்தினைப் பயன்படுத்தி அதிதீவிர தேசியவாதத்துடன் பதிலளிக்கும் நிலைமையே உருவாகும். இது இனங்களுக்கு இடையிலான துருவமயமாக்கலை மேலும் அதிகரிக்கும். இந்த விடயம் சம்பந்தமாக ஜே.வி.பிக்கு கவலைகள் காணப்படவில்லை என்பது வெளிப்படையான விடயமாகும். ஜே.ஆர்.ஜயவர்த்தன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய ஜனாதிபதிகளின் கீழாக மாகாண சபைகளுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன. உலகளாவிய இடதுசாரி-தாராளவாதிகளின் வெறுப்பின் சின்னமாக இருந்த மஹிந்த கூட தனது முதல் மற்றும் இரண்டாவது பதவிக்காலங்களில் இரண்டு தடவைகள் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் போலியான முற்போக்கு நிர்வாகம், மற்றும் அதனை ஆதரிக்கும் பிரதான ஜனநாயகக் கட்சிகளும் தலைவர்களும் 1980களில் நிகழ்ந்தேறிய துன்பத்தின் முக்கிய முற்போக்கான கட்டமைப்பு விளைவான தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபைகளை, மௌனமான புறக்கணிப்பால் அகற்றுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. தமிழர்களுக்காக ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை, அவர்கள் திரண்ட மக்களாக வாழும் அருகருகே உள்ள பகுதிகளை இணைக்க முடியாதவாறு ஜே.வி.பி பறித்துவிட்டது. அத்தகைய ஜே.வி.பியினர் தற்போது என்.பி.பிஆக இருந்தாலும் மகாண சபைகளுக்கான தேர்தல் விடயத்தில் எதிர்-சீர்திருத்தவாதிகளாகவே காண்பிப்பதோடு, ஜெயவர்த்தன, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை விட மிகவும் பிற்போக்குத்தனமானவர்களதக உள்ளது என்றார். https://www.virakesari.lk/article/221668
1 month 3 weeks ago
அணுசக்தி நீர்மூழ்கி நகர்வு: அமெரிக்கா - ரஷ்யா அணு ஆயுத மோதலுக்கு வழிவகுக்குமா? ஓர் அலசல் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டிரம்ப் மற்றும் புதின் கட்டுரை தகவல் ஸ்டீவ் ரோசென்பெர்க் ரஷ்ய ஆசிரியர், மாஸ்கோவிலிருந்து 5 மணி நேரங்களுக்கு முன்னர் சமூக ஊடகத்தில் நிகழ்ந்த ஒரு வாக்குவாதத்தால் அணு ஆயுத மோதல் தூண்டப்படுவது வரலாற்றில் இதுவே முதன்முறையா? ரஷ்ய முன்னாள் அதிபர் மெத்வதேவின் சமூக வலைதள பதிவுகளால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யாவை நோக்கி நகர்த்த உத்தரவிட்டுள்ளார். இதற்கு ரஷ்யா எப்படி எதிர்வினையாற்றும்? அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான அணு ஆயுத மோதல் உடனடியாக நிகழக் கூடிய ஒன்றாக உள்ளதா? இது, 1962ம் ஆண்டில் நிகழ்ந்த கியூபா ஏவுகணை நெருக்கடியின் இணைய யுக வடிவமாக உள்ளதா? ரஷ்யாவின் ஆரம்பக்கட்ட எதிர்வினைகளின் அடிப்படையில் நான் அவ்வாறு இல்லை என சந்தேகிக்கிறேன். டிரம்பின் அறிவிப்பை ரஷ்ய செய்தி ஊடகங்கள் நிராகரித்துள்ளன. மாஸ்கோவ்ஸ்கி கோம்சோமோலெட்ஸ் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் ராணுவ ஆய்வாளர் ஒருவர் டிரம்ப் "பிடிவாதம் காட்டுவதாக" கூறுகிறார். ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் கோமெர்சென்ட் (Kommersant) செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க அதிபர் நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்து பேசுவது, "அர்த்தமற்ற உளறல். அதன் மூலம் அவர் உற்சாகம் அடைகிறார்." என்றார். "டிரம்ப் (நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்து) எந்த உத்தரவையும் வழங்கவில்லை என உறுதியாக கூறுகிறேன்," என ரஷ்ய பாதுகாப்பு நிபுணர் அதே செய்தித்தாளிடம் கூறினார். பட மூலாதாரம், Getty Images 2017-ம் ஆண்டு, வட கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பியதாக டிரம்ப் கூறியதையும் அந்த செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்பின் சிறிது காலத்திலேயே வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் டிரம்ப் சந்திப்பு நடத்தினார். நீர்மூழ்கிக் கப்பல்களை நகர்த்துவது குறித்த சமீபத்திய நிகழ்வுகள் அமெரிக்கா-ரஷ்யா உச்சி மாநாட்டுக்கு முன்னோடியாக இருக்குமா? நான் அவ்வளவு தூரம் செல்ல மாட்டேன். ஆனால், ரஷ்ய அதிகாரிகளிடமிருந்து வரும் எதிர்வினைகள் சுவாரஸ்யமாக உள்ளது. ரஷ்ய அதிபர் மாளிகையிடமிருந்தோ அல்லது வெளியுறவு அமைச்சகம் அல்லது பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்தோ இந்த கட்டுரையை எழுதும் வரை எவ்வித கருத்தும் வரவில்லை. ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் அமெரிக்காவுக்கு நெருக்கமாக நிறுத்தப்படுவது குறித்தும் நான் எவ்வித அறிவிப்பையும் பார்க்கவில்லை. இது, ரஷ்யா இன்னும் இந்த சூழல் குறித்து ஆராய்ந்து வருகிறது, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறது என கருதலாம், அல்லது எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கலாம். எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம் இல்லை என ரஷ்யா நினைப்பதாகவே, முன்பு நான் குறிப்பிட்ட ரஷ்ய ஊடகங்களில் வெளியான எதிர்வினைகள் உணர்த்துகின்றன. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சமூக ஊடகங்களில் கருத்து மோதல்களுக்குப் பிறகு, கிம் ஜாங் உன்னும் டொனால்ட் டிரம்பும் பலமுறை சந்தித்தனர். டிரம்ப் - மெத்வதேவ் கருத்து மோதல் டிரம்ப் கடந்த சில தினங்களாகவே சமூக ஊடகத்தில் மெத்வதேவுடன் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார். யுக்ரேனுடனான போரை நிறுத்துவதற்கு தான் அளித்த 50 நாட்கள் காலக்கெடுவை டிரம்ப் இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்களாக மாற்றினார். இதையடுத்து, மெத்வதேவ் தன் சமூக வலைதள பக்கத்தில் "டிரம்ப் ரஷ்யாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து விளையாடுகிறார்… ஒவ்வொரு இறுதி எச்சரிக்கையும் ஒரு அச்சுறுத்தல், போரை நோக்கிய ஒரு நகர்வு" என தெரிவித்திருந்தார். டிரம்ப் அதற்கு, "தோல்வியடைந்த, தான் இன்னும் ஆட்சியில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் ரஷ்ய முன்னாள் அதிபர் மெத்வதேவிடம், தன் பேச்சில் கவனமாக இருக்குமாறு கூறுங்கள். அவர் மிகவும் ஆபத்தான பிரதேசத்துக்குள் நுழைகிறார்" என தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் (வலது) சமீபத்திய நாட்களில் சமூக ஊடகங்களில் டொனால்ட் டிரம்புடன் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார் இதற்கு மெத்வதேவ் தனது அடுத்த பதிவில், சோவியத் ஒன்றியத்தின் தயாரிப்பான தானியங்கி அணு ஆயுத கட்டுப்பாட்டு அமைப்பான "டெட் ஹேன்ட்" (Dead Hand) பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. இதை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. 2008 முதல் 2012 வரை ரஷ்ய அதிபராக மெத்வதேவ் இருந்தபோது, அவர் ஒப்பீட்டளவில் ஒரு தாராளவாத ஆளுமையாக பார்க்கப்பட்டார். "சுதந்திரம் இல்லாமல் இருப்பதை விட சுதந்திரம் சிறந்தது," என்பது அவருடைய பிரபலமான மேற்கோளாகும். ஆனால், நாளடைவில் அவர் ஆக்ரோஷமானவராக மாறிவருகிறார். குறிப்பாக, யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்புக்கு பிந்தைய கால கட்டத்தில் அதிரடியான, மேற்கு நாடுகளுக்கு எதிரான சமூக வலைதள பதிவுகளுக்காக அவர் அறியப்படுகிறார். ரஷ்ய அதிபர் மாளிகையின் குரலாக பார்க்கப்படாததால், அவரது பல கருத்துகள் கவனிக்கப்படாமல் இருந்தன. அமெரிக்க அதிபரால் அவருடைய கருத்துகள் திடீரென கவனிக்கப்பட்டன. கவனிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், டிரம்பின் எரிச்சலுக்கும் அவர் ஆளானார். சமூக ஊடக பதிவை ஒருவர் விரும்பாமல் இருப்பது வேறு விஷயம். நாம் எல்லோரும் அதில் இருக்கிறோம். ஆனால், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்துவது வரை செல்வது மிகையான ஒன்றாக உள்ளது. டிரம்ப் ஏன் அப்படி செய்தார்? ஆனால், டிரம்ப் ஏன் அவ்வாறு செய்தார்? நியூஸ்மேக்ஸுக்கு டிரம்ப் இதுகுறித்து தன் விளக்கத்தை அளித்துள்ளார்: அதில், "மெத்வதேவ் அணு ஆயுதங்கள் குறித்து மோசமான சில விஷயங்களை பேசியுள்ளார். அணு ஆயுதம் உச்சபட்ச எச்சரிக்கையாக இருப்பதால், அந்த வார்த்தையை குறிப்பிடும் போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மீதான டிரம்பின் புதிய வரிகளால் யாருக்கு பாதிப்பு அதிகம்? ரஷ்யாவின் கருத்துக்கு எதிர்வினை - அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப் 'இந்தியாவுக்கு பாகிஸ்தான் கச்சா எண்ணெய் விற்கலாம்' - பாகிஸ்தானின் எண்ணெய் வளம் பற்றிய ஒரு பார்வை ஆறு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை - இரான் கடும் எதிர்வினை ஏன்? ஆனால், சமூக ஊடகம் வாயிலாக அணு ஆயுத போருக்கு அச்சுறுத்துவதாக மெத்வதேவ் மீது நீண்ட காலமாக குற்றம் சாட்டப்படுகிறது. இது புதிதல்ல. மெத்வதேவின் சமீபத்திய பதிவுகளை மிகவும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு டிரம்ப் எதிர்வினையாற்றியிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இதுவொரு வியூகமாகவும் இருக்கலாம். டிரம்பின் வணிகத்திலும் அரசியலிலும் அவர் காரியமாற்றும் விதத்தில், கணிக்க முடியாத தன்மை உள்ளது; பேச்சுவார்த்தைக்கு முன் அல்லது பேச்சுவார்த்தையின் போது போட்டியாளர்கள் மற்றும் எதிரிகளின் சமநிலையை குலைக்கக் கூடிய எதிர்பாராத முடிவுகளை எடுப்பது அவருடைய வியூகமாக உள்ளது. யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது என்கிறது அவரது உறுதிமொழி ஓர் உதாரணமாகும். நீர்மூழ்கிக் கப்பல்களின் நகர்வு, இதன்கீழ் வரலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx294j42rd2o
1 month 3 weeks ago
தமிழரசுக்கட்சி கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடாது? நிலாந்தன். செம்மணிப் புதைகுழிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காண்பதற்கு நீதிமன்றம் மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.இம்மாதம் ஐந்தாம் திகதி குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மக்கள் பொருட்களை அடையாளம் காட்டலாம்.அது ஒரு நீதிமன்றத்தில் ஆளுகைக்கு உட்பட்ட நடவடிக்கை என்ற காரணத்தால் அதற்குரிய ஒழுங்குகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரசாங்கம் இந்த விடயத்தில் சீரியஸாக இருக்கிறது, உண்மையாக இருக்கிறது என்று கூறுபவர்களுக்கு இது உற்சாகமூட்டக்கூடியது.குறிப்பாக அடுத்த ஜெனீவா கூட்டத்தொடரை நோக்கி அரசாங்கம் உழைத்து வருவதை இது காட்டுகிறது. ஊழல்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆர்வத்தை தூண்டி வருகின்றன. குறிப்பாக முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான நடவடிக்கையானது பொறுப்புக் கூறத் தொடர்பில் அரசாங்கம் உலக சமூகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் நம்பிக்கையூட்ட முயற்சிக்கின்றது என்பதைக் காட்டுகின்றன. பகிரங்க சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் என்பதும் இந்த உள்நோக்கத்தை கொண்டதுதான். செம்மணியில் அரசாங்கம் உண்மையாக நடந்து கொள்கிறது என்ற ஒரு பிம்பத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கட்டியெழுப்புவதன் மூலம் உள்நாட்டு நிதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்காக அரசாங்கம் தொடர்ந்து உழைத்து வருகிறது. குறிப்பாக மனித உரிமைகள் ஆணையாளர் உள்நாட்டுப் பொறிமுறையை வெளிநாட்டு உதவிகளோடு பலப்படுத்துவது என்ற தனது நிலைப்பாட்டை கொழும்பில் வைத்து உத்தியோகபூர்வமாக தெரிவித்த பின் அரசாங்கம் அதிகம் உற்சாகமடைந்திருப்பதாகத் தெரிகிறது. கொழும்பில் உள்ள ஐநா அலுவலகம் அரசாங்கத்தின் ஓர் அலகு போல செயல்படுகின்றது என்ற பொருள்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் விமர்சித்து வரும் ஒரு பின்னணிக்குள், அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரின் முடிவுகளை தனக்குச் சாதகமாக வளைக்கக்கூடிய விதத்தில் அரசாங்கம் திட்டமிட்டு உழைக்கின்றது என்பதைத்தான் செம்மணி விசாரணைகளில் அரசாங்கம் நடந்து கொள்ளும் விதம் நமக்கு உணர்த்துகின்றது. இந்த விடயத்தில் தமிழ்த் தரப்பு என்ன செய்யப் போகின்றது? முதலாவதாக செம்மணியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காண்பதற்கும் அந்த விடயத்தில் அடுத்த கட்ட விசாரணைகளுக்கு உதவக்கூடிய விதத்திலும் பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்க் கட்சிகளுக்கு உண்டு;தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு உண்டு; தமிழ்ச் சிவில் சமூகங்களுக்கு உண்டு. நீதிக்கான போராட்டம் என்பது குற்றம் இழைக்கப்பட்டிருக்கிறது என்பதனை நிரூபிப்பதற்கு தேவையான சான்றுகளையும் சாட்சிகளையும் உரிய முறைப்படி திரட்டி,உரிய ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறிமுறைக்கூடாக முன்னெடுப்பதுதான். இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகளிடமும் தமிழ் குடிமக்கள் அமைப்புகளிடமும் நீண்ட கால அடிப்படையிலான பரந்தகன்ற,வேலைத் திட்டம் ஏதாவது உண்டா? குறிப்பாக ஜெனிவாவுக்கு கடிதம் அனுப்புவதற்கும் அப்பால் பரிகார நீதியை நோக்கி நிலைமைகளை புத்திசாலித்தனமாக நகர்த்தக்கூடிய வழி வரைபடம் ஏதாவது உண்டா ? இந்த விடயத்தில் முன்கை எடுத்து செயற்பட்டிருக்க வேண்டியது பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிதான்.2015 இலிருந்து 2018 வரையிலும் அக்கட்சி நிலைமாறு கால நீதியின் பங்காளியாக செயற்பட்டது. அப்பொழுது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களில் ஒரு பகுதியினரும் நிலைமாறு கால நீதியை நிராகரித்து பரிகார நீதியைக் கோரினார்கள். 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐநாவின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானமானது பொறுப்புக் கூறலுக்கானது. அதை சட்டத்துறை சார்ந்த வார்த்தைகளில் சொன்னால் நிலை மாறு கால நீதிக்கானது. தமிழரசுக் கட்சி காலகட்டத்தில் நிலைமாறு கால நீதியின் பங்காளியாகச் செயல்பட்டது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர்கள் ஐநாவோடும் இலங்கை அரசாங்கத்தோடும் இணைந்து செயல்பட்டார்கள். நிலைமாறு கால நீதியானது இலங்கைத் தீவை பொறுத்தவரையிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது. “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பரிசோதனை செய்தோம். அந்தப் பரிசோதனை தோற்றுப் போய்விட்டது “என்று சுமந்திரன் சொன்னார். அவர் இதைச் சொன்னது வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பில். அந்த சந்திப்பு முக்கியமானது. 2021 ஆம் ஆண்டு மன்னாரைச் சேர்ந்த சிவகரனால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு சந்திப்பு அது. ஜெனிவாக கூட்டத் தொடரை முன்னிட்டு ஐநாவுக்குக் கொடுக்க கடிதம் ஒன்றை ஏழுதுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட இரண்டாவது சந்திப்பு அது. சந்திப்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தார்கள். அந்த சந்திப்பில்தான் சுமந்திரன் மேற்கண்டவாறு சொன்னார்.அந்த சந்திப்பின் பின் நிகழ்ந்த மூன்றாவது சந்திப்பு கிளிநொச்சியில்,சென் திரேசாள் மண்டபத்தில் இடம் பெற்றது.அதில்தான் ஒரு கூட்டுக் கடிதம் இறுதி செய்யப்பட்டது. வவுனியாவில் சுமந்திரன் சொன்னதை இன்னொரு விதமாகச் சொன்னால் இலங்கை தீவில் நிலை மாறுகால நீதியை ஸ்தாபிக்கும் முயற்சிகளில் அதாவது இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைப்பதில் ஐநா தோற்றுப் போய்விட்டது என்றும் சொல்லலாம். 2015 ஆம் ஆண்டு ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ் மக்களும் பங்காளிகள்.ஆட்சி மாதத்தைக் கவனத்தில் எடுத்து மனித உரிமைகள் கூடாது தொடர் செப்ரெம்பர் மாதத்துக்கு பிற்போடப்பட்டது. அப்பொழுது உருவாக்கப்பட்ட ரணில் மைத்திரி அரசாங்கமானது ஐநாவின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றியதுதான் நிலைமாறு கால நீதிக்கான அந்தத் தீர்மானம் ஆகும். அதற்கு முன்பு நிறைவேற்றப்பட்ட எல்லா தீர்மானங்களிலும் அப்போது இருந்த இலங்கை அரசாங்கங்கள் தீர்மானத்திற்கு எதிராகவே வாக்களித்தன. கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னரும் அரசாங்கம் ஐநா தீர்மானங்களுக்கு எதிராக விவாக்களித்தது.ஏன் அதிகம் போவான்? புதிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சராகிய விகித ஹேரத் கடந்த ஐநா கூட்டத்தொடரில் பேசும் பொழுது ஐநா தீர்மானங்களுக்கு எதிராகவும் அனைத்துலக பொதுமுறைக்கு எதிராகவுமே பேசியிருக்கிறார். இப்படிப்பட்டதோர் பின்னணியில்,ஏற்கனவே ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான முயற்சிகள் தோல்வியடைந்திருக்கும் ஆகப்பிந்திய அனுபவங்களின் பின்னணியில்,ஒரு புதிய அரசாங்கம் கொழும்பில் ஆட்சி செய்யும் ஒரு பின்னணியில்,கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு கடிதத்தின் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றது. அக்கட்சியானது சிவில் சமூகத்தோடு இணைந்து ஒரு கடிதத்தைத் தயாரித்து அந்த வரைபை தமிழரசுக் கட்சிக்கும் அனுப்பியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை அதாவது நேற்று அது தொடர்பாக முடிவெடுப்பதற்கு தமிழரசுக் கட்சி கூடியது. முடிவில் கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்று சுமந்திரன் அறிவித்திருக்கிறார். எனினும் தமிழரசுக் கட்சியின் கூட்டத்துக்கு சில நாட்களுக்கு முன்பு கொழும்பில் சுவிற்சர்லாந்து தூதரகத்தின் நிகழ்வு ஒன்றில் சுமந்திரன் கஜேந்திரகுமார் உட்பட சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். அச்சந்திப்பில் சுமந்திரனுக்கும் கஜனுக்கும் இடையே ஒரு சந்திப்பை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக ஒரு தகவல்.கடிதம் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் முடிவை சுமந்திரன் அறிவித்திருக்கும் ஒரு பின்னணியில் அந்தச் சந்திப்பு இனி நடக்குமா இல்லையா என்பதனைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தமக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதிகள் கட்சியின் பதில் தலைவர், பொதுச் செயலாளருக்கு மட்டும் அனுப்பப்படவில்லை. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டிருக்கிறது என்று சிவஞானமும் சுமந்திரனும் கூறுகிறார்கள்.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தங்களிடமிருந்து கழட்டி எடுத்து கடிதத்தில் அவர்களுடைய கையெழுத்தை வாங்குவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றது என்ற குற்றச்சாட்டு அதற்குள் மறைந்திருக்கிறது. இந்தக் கூட்டுக் கடித விவகாரத்தை முன்வைத்து தமிழரசுக் கட்சியை தமிழ் மக்கள் முன் அம்பலப்படுத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றதா? என்ற சந்தேகம் தமிழரசுக் கட்சியினர் மத்தியில் உண்டு.கடிதத்தின் பிரதிகள் தனித்தனியாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டமையை மேற்சொன்ன சந்தேகத்துக்கு ஊடாகத்தான் தமிழரசுக் கட்சி பார்க்கின்றது என்று தெரிகிறது. எனவே ஐநாவுக்கு அனுப்பப்படப் போகும் கூட்டுக் கடிதம் மெய்யான பொருளில் ஒரு பலமான கடிதமாக அமைவதற்கான வாய்ப்புகள் இனிமேல்தான் உருவாக வேண்டும். தமிழரசுக் கட்சியின் கூட்டத்தின் பின் அறிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் அக்கடிதத்தில் தமிழ்த் தேசியப் பேரவைச் சேர்ந்த கட்சிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் மட்டும்தான் கையெழுத்திடுவார்கள் போல் தெரிகிறது. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடவில்லை என்று சொன்னால் அந்த கூட்டுக் கடிதத்துக்கு அங்கீகாரம் குறைவாகவே இருக்கும். இந்த விடயத்தில் கூட்டுக் கடிதத்தின் அங்கீகாரத்தைக் கூட்டுவதா? அல்லது தமிழரசுக் கட்சியை தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதா? என்ற இரண்டு தெரிவுகளில் எதனை தமிழ்த் தேசிய பேரவை எடுக்கப் போகிறது ? https://athavannews.com/2025/1441586
1 month 3 weeks ago
அப்படியா? பாராளுமன்ற மன்றத்தில் நான் பிரபாகரனின் ஆள் என்றும் நான் பிரபாகரனின் வீரத் தமிழன் என்றும் பேசமுடியும் என்றால் பிரபாகரனுக்கு அஞ்சலி என்றால் சிறை என்பது உங்கள் கற்பனை மட்டுமே. பிரபாகரனைப்போல மாவீரர் நாளில் விளக்கேற்றி மாவீரர் நாள் பாடலுக்கு அஞ்சலி செய்யமுடியும் தேசத்தில் பிரபாகரனுக்கும் அஞ்சலி என்பது சிறை தண்டனை என்பதும் உங்கள் கற்பனை மட்டுமே. உண்மையில் உண்மையை தரிசிக்க எந்த ஆதாரமும் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள நாம் தயாராக இல்லை என்பது மட்டுமே உண்மை.
1 month 3 weeks ago
தமிழரசுக்கட்சி கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடாது? நிலாந்தன். செம்மணிப் புதைகுழிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காண்பதற்கு நீதிமன்றம் மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.இம்மாதம் ஐந்தாம் திகதி குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மக்கள் பொருட்களை அடையாளம் காட்டலாம்.அது ஒரு நீதிமன்றத்தில் ஆளுகைக்கு உட்பட்ட நடவடிக்கை என்ற காரணத்தால் அதற்குரிய ஒழுங்குகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரசாங்கம் இந்த விடயத்தில் சீரியஸாக இருக்கிறது, உண்மையாக இருக்கிறது என்று கூறுபவர்களுக்கு இது உற்சாகமூட்டக்கூடியது.குறிப்பாக அடுத்த ஜெனீவா கூட்டத்தொடரை நோக்கி அரசாங்கம் உழைத்து வருவதை இது காட்டுகிறது. ஊழல்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆர்வத்தை தூண்டி வருகின்றன. குறிப்பாக முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான நடவடிக்கையானது பொறுப்புக் கூறத் தொடர்பில் அரசாங்கம் உலக சமூகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் நம்பிக்கையூட்ட முயற்சிக்கின்றது என்பதைக் காட்டுகின்றன. பகிரங்க சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் என்பதும் இந்த உள்நோக்கத்தை கொண்டதுதான். செம்மணியில் அரசாங்கம் உண்மையாக நடந்து கொள்கிறது என்ற ஒரு பிம்பத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கட்டியெழுப்புவதன் மூலம் உள்நாட்டு நிதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்காக அரசாங்கம் தொடர்ந்து உழைத்து வருகிறது. குறிப்பாக மனித உரிமைகள் ஆணையாளர் உள்நாட்டுப் பொறிமுறையை வெளிநாட்டு உதவிகளோடு பலப்படுத்துவது என்ற தனது நிலைப்பாட்டை கொழும்பில் வைத்து உத்தியோகபூர்வமாக தெரிவித்த பின் அரசாங்கம் அதிகம் உற்சாகமடைந்திருப்பதாகத் தெரிகிறது. கொழும்பில் உள்ள ஐநா அலுவலகம் அரசாங்கத்தின் ஓர் அலகு போல செயல்படுகின்றது என்ற பொருள்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் விமர்சித்து வரும் ஒரு பின்னணிக்குள், அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரின் முடிவுகளை தனக்குச் சாதகமாக வளைக்கக்கூடிய விதத்தில் அரசாங்கம் திட்டமிட்டு உழைக்கின்றது என்பதைத்தான் செம்மணி விசாரணைகளில் அரசாங்கம் நடந்து கொள்ளும் விதம் நமக்கு உணர்த்துகின்றது. இந்த விடயத்தில் தமிழ்த் தரப்பு என்ன செய்யப் போகின்றது? முதலாவதாக செம்மணியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காண்பதற்கும் அந்த விடயத்தில் அடுத்த கட்ட விசாரணைகளுக்கு உதவக்கூடிய விதத்திலும் பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்க் கட்சிகளுக்கு உண்டு;தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு உண்டு; தமிழ்ச் சிவில் சமூகங்களுக்கு உண்டு. நீதிக்கான போராட்டம் என்பது குற்றம் இழைக்கப்பட்டிருக்கிறது என்பதனை நிரூபிப்பதற்கு தேவையான சான்றுகளையும் சாட்சிகளையும் உரிய முறைப்படி திரட்டி,உரிய ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறிமுறைக்கூடாக முன்னெடுப்பதுதான். இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகளிடமும் தமிழ் குடிமக்கள் அமைப்புகளிடமும் நீண்ட கால அடிப்படையிலான பரந்தகன்ற,வேலைத் திட்டம் ஏதாவது உண்டா? குறிப்பாக ஜெனிவாவுக்கு கடிதம் அனுப்புவதற்கும் அப்பால் பரிகார நீதியை நோக்கி நிலைமைகளை புத்திசாலித்தனமாக நகர்த்தக்கூடிய வழி வரைபடம் ஏதாவது உண்டா ? இந்த விடயத்தில் முன்கை எடுத்து செயற்பட்டிருக்க வேண்டியது பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிதான்.2015 இலிருந்து 2018 வரையிலும் அக்கட்சி நிலைமாறு கால நீதியின் பங்காளியாக செயற்பட்டது. அப்பொழுது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களில் ஒரு பகுதியினரும் நிலைமாறு கால நீதியை நிராகரித்து பரிகார நீதியைக் கோரினார்கள். 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐநாவின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானமானது பொறுப்புக் கூறலுக்கானது. அதை சட்டத்துறை சார்ந்த வார்த்தைகளில் சொன்னால் நிலை மாறு கால நீதிக்கானது. தமிழரசுக் கட்சி காலகட்டத்தில் நிலைமாறு கால நீதியின் பங்காளியாகச் செயல்பட்டது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர்கள் ஐநாவோடும் இலங்கை அரசாங்கத்தோடும் இணைந்து செயல்பட்டார்கள். நிலைமாறு கால நீதியானது இலங்கைத் தீவை பொறுத்தவரையிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது. “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பரிசோதனை செய்தோம். அந்தப் பரிசோதனை தோற்றுப் போய்விட்டது “என்று சுமந்திரன் சொன்னார். அவர் இதைச் சொன்னது வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பில். அந்த சந்திப்பு முக்கியமானது. 2021 ஆம் ஆண்டு மன்னாரைச் சேர்ந்த சிவகரனால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு சந்திப்பு அது. ஜெனிவாக கூட்டத் தொடரை முன்னிட்டு ஐநாவுக்குக் கொடுக்க கடிதம் ஒன்றை ஏழுதுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட இரண்டாவது சந்திப்பு அது. சந்திப்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தார்கள். அந்த சந்திப்பில்தான் சுமந்திரன் மேற்கண்டவாறு சொன்னார்.அந்த சந்திப்பின் பின் நிகழ்ந்த மூன்றாவது சந்திப்பு கிளிநொச்சியில்,சென் திரேசாள் மண்டபத்தில் இடம் பெற்றது.அதில்தான் ஒரு கூட்டுக் கடிதம் இறுதி செய்யப்பட்டது. வவுனியாவில் சுமந்திரன் சொன்னதை இன்னொரு விதமாகச் சொன்னால் இலங்கை தீவில் நிலை மாறுகால நீதியை ஸ்தாபிக்கும் முயற்சிகளில் அதாவது இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைப்பதில் ஐநா தோற்றுப் போய்விட்டது என்றும் சொல்லலாம். 2015 ஆம் ஆண்டு ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ் மக்களும் பங்காளிகள்.ஆட்சி மாதத்தைக் கவனத்தில் எடுத்து மனித உரிமைகள் கூடாது தொடர் செப்ரெம்பர் மாதத்துக்கு பிற்போடப்பட்டது. அப்பொழுது உருவாக்கப்பட்ட ரணில் மைத்திரி அரசாங்கமானது ஐநாவின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றியதுதான் நிலைமாறு கால நீதிக்கான அந்தத் தீர்மானம் ஆகும். அதற்கு முன்பு நிறைவேற்றப்பட்ட எல்லா தீர்மானங்களிலும் அப்போது இருந்த இலங்கை அரசாங்கங்கள் தீர்மானத்திற்கு எதிராகவே வாக்களித்தன. கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னரும் அரசாங்கம் ஐநா தீர்மானங்களுக்கு எதிராக விவாக்களித்தது.ஏன் அதிகம் போவான்? புதிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சராகிய விகித ஹேரத் கடந்த ஐநா கூட்டத்தொடரில் பேசும் பொழுது ஐநா தீர்மானங்களுக்கு எதிராகவும் அனைத்துலக பொதுமுறைக்கு எதிராகவுமே பேசியிருக்கிறார். இப்படிப்பட்டதோர் பின்னணியில்,ஏற்கனவே ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான முயற்சிகள் தோல்வியடைந்திருக்கும் ஆகப்பிந்திய அனுபவங்களின் பின்னணியில்,ஒரு புதிய அரசாங்கம் கொழும்பில் ஆட்சி செய்யும் ஒரு பின்னணியில்,கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு கடிதத்தின் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றது. அக்கட்சியானது சிவில் சமூகத்தோடு இணைந்து ஒரு கடிதத்தைத் தயாரித்து அந்த வரைபை தமிழரசுக் கட்சிக்கும் அனுப்பியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை அதாவது நேற்று அது தொடர்பாக முடிவெடுப்பதற்கு தமிழரசுக் கட்சி கூடியது. முடிவில் கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்று சுமந்திரன் அறிவித்திருக்கிறார். எனினும் தமிழரசுக் கட்சியின் கூட்டத்துக்கு சில நாட்களுக்கு முன்பு கொழும்பில் சுவிற்சர்லாந்து தூதரகத்தின் நிகழ்வு ஒன்றில் சுமந்திரன் கஜேந்திரகுமார் உட்பட சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். அச்சந்திப்பில் சுமந்திரனுக்கும் கஜனுக்கும் இடையே ஒரு சந்திப்பை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக ஒரு தகவல்.கடிதம் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் முடிவை சுமந்திரன் அறிவித்திருக்கும் ஒரு பின்னணியில் அந்தச் சந்திப்பு இனி நடக்குமா இல்லையா என்பதனைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தமக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதிகள் கட்சியின் பதில் தலைவர், பொதுச் செயலாளருக்கு மட்டும் அனுப்பப்படவில்லை. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டிருக்கிறது என்று சிவஞானமும் சுமந்திரனும் கூறுகிறார்கள்.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தங்களிடமிருந்து கழட்டி எடுத்து கடிதத்தில் அவர்களுடைய கையெழுத்தை வாங்குவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றது என்ற குற்றச்சாட்டு அதற்குள் மறைந்திருக்கிறது. இந்தக் கூட்டுக் கடித விவகாரத்தை முன்வைத்து தமிழரசுக் கட்சியை தமிழ் மக்கள் முன் அம்பலப்படுத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றதா? என்ற சந்தேகம் தமிழரசுக் கட்சியினர் மத்தியில் உண்டு.கடிதத்தின் பிரதிகள் தனித்தனியாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டமையை மேற்சொன்ன சந்தேகத்துக்கு ஊடாகத்தான் தமிழரசுக் கட்சி பார்க்கின்றது என்று தெரிகிறது. எனவே ஐநாவுக்கு அனுப்பப்படப் போகும் கூட்டுக் கடிதம் மெய்யான பொருளில் ஒரு பலமான கடிதமாக அமைவதற்கான வாய்ப்புகள் இனிமேல்தான் உருவாக வேண்டும். தமிழரசுக் கட்சியின் கூட்டத்தின் பின் அறிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் அக்கடிதத்தில் தமிழ்த் தேசியப் பேரவைச் சேர்ந்த கட்சிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் மட்டும்தான் கையெழுத்திடுவார்கள் போல் தெரிகிறது. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடவில்லை என்று சொன்னால் அந்த கூட்டுக் கடிதத்துக்கு அங்கீகாரம் குறைவாகவே இருக்கும். இந்த விடயத்தில் கூட்டுக் கடிதத்தின் அங்கீகாரத்தைக் கூட்டுவதா? அல்லது தமிழரசுக் கட்சியை தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதா? என்ற இரண்டு தெரிவுகளில் எதனை தமிழ்த் தேசிய பேரவை எடுக்கப் போகிறது ? https://athavannews.com/2025/1441586
1 month 3 weeks ago
‘கன்சைட்’ சித்திரவதை சிறைக் கூண்டுகளில் வெளிநாட்டவர்கள் உட்பட 60 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை அம்பலம் ; முன்னாள் கடற்படை தளபதி உலுகேதென்னவின் வாக்கு மூலத்தால் விரிவடையும் விசாரணைகள் Published By: Digital Desk 3 03 Aug, 2025 | 11:03 AM (எம்.எப்.எம்.பஸீர்) திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இருக்கும் ‘கன்சைட்’ எனும் சட்ட விரோத நிலத்தடி சித்திரவதை முகாம் சட்ட விரோத சிறைக் கூண்டு என்று முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன சி.ஐ.டி. விசாரணையில் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் படியும் மேலும் பல சாட்சிகளின் பிரகாரமும் குறித்த சட்ட விரோத சிறையில் இரு வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 60 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தததாக சி.ஐ.டி. யினர் விசாரணையில் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், சி.ஐ.டி. அதிகாரிகள் குறித்த 60 பேரும் யாரென அடையாளம் காண்பதற்கு, கடற்படை தளபதியிடம் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் பெயர் பட்டியலை பொல்கஹகவல நீதிவானின் உத்தரவூடாக கோரியுள்ளனர். எனினும் அந்த தகவல்கலை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட இதுவரை வழங்கவில்லையென சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெள்ளை வேனில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் தொடர்பில் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை விசாரணை பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது. இந்த வெள்ளை வேன் கடத்தல்கள் தொடர்பிலான விசாரணைகளில் ‘கன்சைட்’ எனும் நிலத்தடி வதை முகாம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அங்கு சென்று நடாத்திய விசாரணைகளின் போது கேகாலையைச் சேர்ந்த சாந்த சமரவிக்ரம அல்லது கேகாலை சாந்த, இப்பாகமுவையைச் சேர்ந்த பிரதீப் ஆகியோரின் கடத்தல்கள் தொடர்பில் தகவல் வெளிப்பட்டன. இந்நிலையில் கேகாலை மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கொன்றின் பிரதிவாதியான சாந்த சமரவிக்ரம, இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த பிரதீப் ஆகியோர் ‘கன்சைட்’ முகாமில் இருந்தமைக்கான ஆதாரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்து அது குறித்து கோட்டை நீதிவானுக்கு அறிக்கையும் சமர்பித்தனர். அவ்வாறான நிலையில் கேகாலை மேல் நீதிமன்ற பதிவாளரின் முறைப்பாட்டுக்கு அமைய கேகாலையைச் சேர்ந்த குறித்து தனியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. கேகாலை சாந்த சமரவிக்ரம, அலவ்வ பொலிஸாரால் கடந்த 2010 ஜூலை 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் போது தப்பியோடியதாக பொலிஸ் தரப்பில் அப்போது கூறப்பட்டது. எனினும் விசாரணையில் பொலிஸ் அதிகாரிகள் கடற்படையினரின் உதவியுடன் அவரை ‘கன்சைட்’ முகாமில் சிறை வைத்து காணாமலாக்கியமை வெளிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இது குறித்த விசாரணைகளில் இதுவரை அலவ்வ பொலிஸ் நிலையத்தின் அப்போதைய குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட 5 பொலிஸாரும், கன்சைட் வதை முகாமின் பொறுப்பாளராக இருந்த கொமாண்டர் ரணசிங்க உள்ளிட்ட 5 கடற்படையினரும் கைது செய்யப்பட்ட நிலையிலேயே கடந்த ஜூலை 28 ஆம் திகதி முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டார். சி.ஐ.டி.யினர் முன்னெடுத்த விசாரணைகளின் போது 2010 ஜூலை 23 ஆம் திகதி காணாமல் போன கேகாலை சாந்த அதிலிருந்து 6 மாதங்கள் வரை திருகோணமலை ‘கன்சைட்’ நிலத்தடி சித்திரவதை முகாமில் இருந்தமை சாட்சிகளுடன் வெளிப்படுத்தப்ப்ட்டது. அதன்படியே, கடந்த 2010 ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 2013 வரை கடற்படை உளவுத்துறை பணிப்பாளராக கடமையாற்றிய முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவிடம் சி.ஐ.டி.யினர் விசாரணைகளை நடாத்தியது. இதன்போது தான் 2010 ஒக்டோபர் முதலாம் திகதி உளவுத்துறை பணிப்பாளராக கடமையேற்ற பின்னர், அப்போதைய கடற்படை தளபதி சோமதிலக திஸாநாயக்கவிடம் பெற்றுக்கொண்ட எழுத்து மூல அனுமதிக்கு அமைய ‘கன்சைட்’ முகாமை பார்வையிட சென்றதாக முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன சி.ஐ.டி.யினரின் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு 40 முதல் 60 வரையிலானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘கன்சைட்’ என்பதை பதிவு செய்யப்பட்ட சிறைச்சாலை அல்ல என்பதையும், அது சட்ட விரோத தடுப்பு மையம் என்பதையும் முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன ஏற்றுக்கொன்டதாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கும் அறிவித்துள்ளனர். அதன்படியே, முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன தண்டனை சட்டக் கோவையின் 356,141,296,32,47 ஆகிய பிரிவின் கீழ் கடத்தல் மற்றும் சிறை வைப்பு, சட்டவிரோத கும்பல் ஒன்றின் உறுப்பினராக இருத்தமை, கொலை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட தண்டனைக் குரிய குற்றங்களை புரிந்துள்ளதாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். அதன்படி, இந்த சட்ட விரோத செயலை அப்போதைய கடற்படை தளபதி சோமதிலக திசாநாயக்க அறிந்திருந்ததாக சாட்சியங்கள் வெளிப்பட்டுள்ள நிலையில், அவரையும் அப்போது கிழக்கு பிராந்திய கடற்படை தளபதியாக இருந்த கொலம்பகேவையும் விசாரணை வலயத்துக்குள் கொண்டு வந்து சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர். முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன சி.ஐ.டி. விசாரணையில் வெளிப்படுத்திய தகவல்களுக்கு அமைய, கன்சைட் முகாமை பார்வையிட தான் என்ர போது, அங்கு விஷேட உளவுப் பிரிவு என ஒரு பிரிவு செயற்பட்டதாகவும், அது கடற்படையின் உளவுத் துறையால் வழிநடத்தப்பட்ட பிரிவு அல்ல என்பதை தான் கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார். குறித்த விசேட பிரிவுக்கு, உளவுத் துறையுடன் தொடர்புபடாத கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க கட்டளைகளை வழங்கியுள்ளதாகவும், அதில் ரணசிங்க, பொடி குமார, லொகு குமார, ரத்நாயக்க, சந்தமாலி, கௌசல்யா ஆகிய கடற்படை வீர வீராங்கனைகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி பின்னர் தான் அந்த விசேட உளவுத்துறை பிரிவை கலைத்ததாகவும் நிஷாந்த உலுகேதென்ன குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், கடற்படை விசேட உளவுத்துறை தொடர்பிலும் சி.ஐ.டி. அவதானம் செலுத்தி விசாரித்து வருகின்றது. கடந்த ஜூலை 30 ஆம் திகதி நிஷாந்த உலுகேதென்னவை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதும், முன் வைக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு நீதிமன்றம் அடையாள அணிவகுப்பை இரத்துச் செய்தது. இந்த விவகாரத்தில், விடுதலை புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவு பொறுப்பாளராக இருந்த பாரதி, கடற்படையின் விஜேகோன் உள்ளிட்ட சாட்சியாளர்கள் அளித்துள்ள சாட்சியங்களின் பிரகாரம் இரு வெளிநாட்டவர்களும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை உறுதியாகியுள்ளது. அது குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதனிடையே, இந்த விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை குறித்த விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இளங்கசிங்க, உப பொலிஸ் பரிசோதகர் நாமல், சார்ஜன் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரை கடற்படை உளவுப் பிரிவு அச்சுறுத்தும் வண்ணம் பின் தொடர்ந்த்துள்ளமை குறித்து பொல்கஹவல நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கன்சைட்’ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் குறித்து கடற்படை வீரர் விஜேகோனின் சாட்சியத்தை மையபப்டுத்தி, பருத்தித் துறையை சேர்ந்த்த கரன், சரீதா எனும் கணவன் மனைவியிடம் சாட்சியம் பெற அவர்களை தேடி சி.ஐ.டி. குழு சென்ற போது கடற்படை உளவுப் பிரிவினர் அவர்களை பின் தொடர்ந்த்துள்ளனர். பருத்தித் துறையை சேர்ந்த குறித்த கணவன் மனைவி தற்போது சுவிட்சர்லாந்தில் வசிப்பது தெரியவரவே, சி.ஐ.டி.யினர் அவர்ளது வீட்டாரிடம் தகவல் பெற்று தொலைபேசியில் தொடர்புகொள்ள நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பின்னர் அவ்வீட்டுக்கு கடற்படையினர் சென்று விசாரித்துள்ளனர். இது குறித்து சி.ஐ.டி.யினர் தகவல் தெரிந்த பின்னர், சி.ஐ.டி.யினரை பிந்தொடர்ந்த கடற்படையினரை சி.ஐ.டி.க்கு அழைத்து வாக்கு மூலம் பெற்றுள்ளனர். இதன்போது காங்கேசன்துறை பகுதிக்கு பொறுப்பான கடற்படை உளவுத் துறை பொறுப்பதிகாரி லெப்டினன் கமாண்டர் ரூபசிங்க என்பவரே சி.ஐ.டி.யை பிந்தொடர உத்டவிட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து நீதிமன்றுக்கும் அறிவித்த விசாரணை அதிகாரிகள் ரூபசிங்கவை அழைத்து விசாரித்துள்ளனர். இதன்போது தனது முடிவுக்கு அமையவே தான் அவ்வுத்தர்வை விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் கடந்த ஜூலை 30 ஆம் திகதி பொல்கஹவல நீதிவான் நீதிமன்றில் நிஷாந்த உலுகேதென்னவுக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு வந்த போது, குறித்த ரூபசிங்க எனும் லெப்டினன் கொமாண்டரும் அங்கு இருந்த நிலையில், இது குறித்து சி.ஐ.டி.யினர் நீதிவானுக்கும் அறிவித்துள்ளனர். இவ்வழக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி மீள விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அதுவரை முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன விளக்கமரியலில் வைக்கப்ப்ட்டுள்ளார். அத்துடன் மேலதிக விசாரணை முன்னேற்றத்தை எதிர்வரும் 24 ஆம் திகதி சமர்ப்பிக்க நீதிவான் சி.ஐ.டி.யினருக்கு அறிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/221661
Checked
Sun, 09/28/2025 - 21:43
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed