1 month 3 weeks ago
19 வருடங்களிற்கு முன்னர் அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்ட மனிதாபிமான பணியாளர்கள் ; மூதூர் செல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை தடுத்த இராணுவத்தினர் ; வீதியை மறித்த கும்பல் ; ஆதாரங்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டாத பொலிஸார் Published By: Rajeeban 04 Aug, 2025 | 03:40 PM ஏசிஎவ் அமைப்பின் அறிக்கையிலிருந்து -- ஜூலை 31 ஆகஸ்ட் முதலாம் திகதி காலை பட்டினிக்கு எதிரான அமைப்பின் 17 பணியாளர்கள் மூதூர் நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தங்கள் திட்டங்களை முன்னெடுப்பதற்காக புறப்பட்டு சென்றனர். பட்டினிக்கு எதிரான அமைப்பின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும் தேவையற்ற பயணங்களை மட்டுப்படுத்துவதற்காகவும் மூதூரில் ஒரு அலுவலகத்தை கொண்டிருந்தது. ஆகஸ்ட் முதலாம் திகதி அவர்கள் கடல்வழியாக மீண்டும் திருகோணமலை திரும்புவதற்கு திட்டமிட்டிருந்தனர், ஆனால் அவர்கள் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் கிளர்ச்சி படையினர் மூதூரை இலக்குவைத்து தாக்குதலொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன் காரணமாக அரசசார்பற்ற அமைப்பின் 17 பணியாளர்களும் அங்கேயே நிற்கவேண்டிய நிலையேற்பட்டது. இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையில் மூண்ட மோதல்காரணமாக மூதூரை சுற்றியுள்ள வீதிகள் பயணம் செய்வதற்கு பாதுகாப்பற்றவையாக மாறியதால் படகு போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கொழும்பிலும் பிரான்ஸ் தலைநகரிலும் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் 17 பணியாளர்களையும் மோதல்கள் முடிவிற்கு வரும்வரை மூதூர் அலுவலகத்திலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்வது என தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்த பகுதி முழுவதும் கடும் மோதலில் சிக்குண்டிருந்தது, எனினும் திருகோணமலை அலுவலகத்துடன் தொடர்ச்சியான தொடர்புகள் பேணப்பட்டன. மூதூரில் உள்ள அலுவலகத்தில் 17 பணியாளர்களையும் தங்கியிருக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் அந்த தருணத்தில் சிறந்ததாக தோன்றியது. ஆகஸ்ட் 2ம் திகதி மூதூரில் நிலைமை மேலும் மோசமடைந்தது, மனிதாபிமான பணியாளர்களை வெளியேற்றுவது சாத்தியமற்ற விடயம் போல தோன்றியது. இதன் காரணமாக அந்த அலுவலகம் வெளியில் உள்ளவர்களின் கண்ணிற்கு தென்படுவதை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதனை அரசசார்பற்ற அலுவலகம் என அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. மறுநாள் மூதூர் அலுவலகத்தில் சிக்குண்டிருந்த பணியாளர்களை படகு மூலம் வெளியேற்றுவதற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் முயற்சிகளை எடுத்தது , ஆனால் அது சாத்தியமாகவில்லை.மோதலில் ஈடுபட்டிருந்த தரப்பினரிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதத்தை சர்வதேச செஞ்சிலுவை குழுவினால் பெற முடியாமல் போனதால் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகள் சாத்தியமாகவில்லை. மூதூர் அலுவலகத்தில் சிக்குண்டிருந்த 17 பேரையும் அகதிகளிற்கான முகாமிற்கு கொண்டுபோய் சேர்ப்பது குறித்தும் ஆராயப்பட்டது. எனினும் தொடர்ச்சியான எறிகணை தாக்குதல்கள் காரணமாக தங்களால் தங்கள் அலுவலகத்திலிருந்து வெளியே செல்ல முடியாத நிலை காணப்படுவதாக மனிதாபிமான பணியாளர்கள் தெரிவித்தனர். இந்த உரையாடல் இடம்பெற்று 20 நிமிடத்தின் பின்னர் அகதிமுகாம் எறிகணை தாக்குதலிற்குள்ளானது 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த காலப்பகுதியில் ஏசிஎவ் - பட்டினிக்கு எதிரான அமைப்பு இராணுவத்தினர் கடற்படையினர் பொலிஸாரை தொடர்புகொண்டு மனிதாபிமான பணியாளர்கள் நகரில் இருப்பதை தெரிவித்தது, அவர்களின் அலுவலகத்தின் ஜிபிஎஸ் விபரங்களை வழங்கியது. இந்த தகவல்கள் தங்கள் பணியாளர்கள் தங்கியுள்ள கட்டிடம் தற்செயலாக எறிகணை தாக்குதலிற்குள்ளாவதை தடுப்பதற்கு உதவும் என பட்டினிக்கு எதிரான அமைப்பு நம்பியது. இறுதியில் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற முடியும் எனவும் ஏசிஎவ் நம்பியது. ஏசிஎவ் குழுவினருக்கும் மூதூரில் சிக்குண்டிருந்த அதன் பணியாளர்களிற்கும் இடையிலான இறுதி தொடர்பாடல் நான்காம் திகதி காலை 7 மணிக்கு இடம்பெற்றது. ஆனால் அவர்கள் அன்றைய தினம் உயிருடன் இருந்தார்கள் என்பதை உறுதி செய்யக்கூடிய ஆதாரமற்ற தகவல்கள் கிடைத்துள்ளன. மூதூர் பணியாளர்களுடன் தொடர்புதுண்டிக்கப்பட்டதும் அந்த அலுவலகத்திற்கு தரை மூலமாக செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம், ஆனால் மூதூரிலிருந்து பத்து கிலோமீற்றர் தொலைவில் உள்ள இராணுவசாவடியில் உள்ளவர்களால் அது தடுத்துநிறுத்தப்பட்டது. ஆகஸ்ட் ஐந்தாம் திகதி பல தரப்பினரும் மூதூரில் உள்ள ஏசிஎவ் அலுவலகத்தில் 15 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவலை வெளியிட்டுக்கொண்டிருந்தனர். இரண்டாவது அணியொன்று திருகோணமலையிலிருந்து தோப்பூரிற்கு சென்று இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவினரை சந்தித்தது அவர்களும்; மூதூருக்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். எனினும் இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்பான பயணத்திற்கு அனுமதி மறுத்ததால் அந்த முயற்சியும் கைகூடவில்லை. எனினும் அன்றைய தினம் மூதூர் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக காண்பிப்பதற்காக இலங்கை இராணுவத்தினர் பத்திரிகையாளர்கள் குழுவினரை மூதூருக்கு அழைத்து சென்றிருந்தனர். ஆறாம் திகதியளவில் மூதூர் அலுவலகத்தில் சிக்குண்டிருந்த எமது பணியாளர்களை உயிருடன் பார்ப்போம் என்ற நம்பிக்கை குறைவடைய தொடங்கிவிட்டது. எனினும் ஏசிஎவ் மூதூர் சென்று நிலைமையை கண்டறிவதற்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து தரைவழிப்பயணத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. எனினும் கிராமமொன்றை சேர்ந்த கும்பல் வீதியை மறித்து எங்களை தடுத்ததால் எங்கள் முயற்சி மீண்டும் தடைப்பட்டது. படகு சேவை மீண்டும் இயங்கியதும் படகு மூலம் அங்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம். எனினும் படகின் முன்னால் எறிகணைகள் விழுந்து வெடித்ததால் அந்த முயற்சியும் கைகூடவில்லை. எனினும் அதேகாலப்பகுதியில் மனிதாபிமான அமைப்புகளின் கூட்டமைப்பு மூதூரை சென்றடைந்திருந்தது. தரைவழியாக மூதூர் சென்ற அவர்கள் ஏசிஎவ் பணியாளர்கள் சிக்குண்டிருந்த அலுவலகத்தை சென்றடைந்தனர். அவர்கள் அங்கு சென்றவேளை முன்வாசலிலேயே 17 மனிதாபிமான பணியாளர்களும் உயிரிழந்த நிலையில் காணப்படுவதை பார்த்தனர். கொலைகளை எங்களிற்கு அவர்கள் உறுதிப்படுத்தினார்கள், குற்றம் இடம்பெற்ற இடத்தின் படங்கள் எடுக்கப்பட்டன. பெருமளவிற்கு ஏசிஎவ்வின் திருகோணமலை பணியாளர்கள் இடம்பெற்றிருந்த குழுவினரே உடல்களை சேகரித்தனர். மூதூருக்கு சென்றதும் நேரடியாக பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அவர்கள் தாங்கள் உடல்களை சேகரிக்க வந்துள்ளதாக தெரிவித்தனர். ஐந்து பொலிஸார் அவர்களை மூதூர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர், படங்கள் எடுக்ககூடாது, தொலைபேசி அழைப்பில் ஈடுபடக்கூடாது என எச்சரித்தனர். பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்தை படமெடுத்தனர், ஆனால் உடல்களை சேகரிப்பதில் உதவவில்லை. ஆதாரங்களை சேகரிப்பதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபடவில்லை. என்ன நடந்தது என்பதை கண்டறிவது குறித்து அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்பதற்கான ஆரம்ப அறிகுறியாக இது காணப்பட்டது. https://www.virakesari.lk/article/221786
1 month 3 weeks ago
RESULT 5th Test, The Oval, July 31 - August 04, 2025, India tour of England India224 & 396 England(T:374) 247 & 367 India won by 6 runs
1 month 3 weeks ago
வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணம். உலகில் அறிவு பெற்ற இனத்திற்குள் தமிழினமும் உள்ளது. அதனால்தான் ஐரோப்பியர்கள் இலங்கை மக்களை அடிமைகளாக ஆண்ட காலத்திலும் தமிழர்களைத் தேர்ந்தெடுத்து பதவிகள் கொடுத்து தங்கள் நிர்வாகத்திற்கு வலுச்சேர்த்தார்கள். பிரிட்டன் மகாராணிக்கு கணிதபாடத்தில் ஏற்பட்ட சந்தேகத்தைத் தீர்க்க உதவியவர் அடங்காமுன்னணி சுந்தரலிங்கம் என்ற திருகோணமலை சேர்ந்த ஒரு தமிழர். முப்பத்து வருடங்களாக நீதி வழுவாத ஒரு அரசாட்சியை இலங்கையில் நடாத்திக் காட்டியவர் மேதகு பிரபாகரன் என்ற இன்னொரு தமிழர். தமிழர்களுக்குப் பதவிகள் கிடைப்பதைக் கண்ட அங்கு வாழும் சற்று அறிவுள்ள சிங்கள இனத்தவர்களும் தங்கள் மக்களின் அறிவை வளர்ப்பதற்கு உரிய வழிமுறைகளைத் தேடுவதை விட்டு தமிழர்கள்மேல் பொறாமை கொண்டுள்ளனர். இலங்கை சுதந்திரம் அடைந்தபின்பும் பெரும் பான்மை என்னும் பலம்கொண்டு அரசை சிங்களம் கைபற்றியபோதும் தன் இனத்தவரை அறிவைப் பெறுவதற்குரிய வழியில் வளர்க்காது தமிழினத்தையும் அவர்கள் அறிவையும் அழிக்கும் வழியிலேயே வளர்த்தது. தமிழரின் நூலகத்தை அழித்தது, சிங்களம் மட்டும் என்றும், தரப்படுத்தல் என்றும், இனக்கலவரம் என்றும் தமிழரை அழித்து அவர்கள் அறிவையும் அழிக்க இன்னமும் முயன்றும் வருகிறது. இவற்றை எல்லாம் செய்துகொண்டு தற்போது தமிழர் கல்விநிலமை பின்தங்கிவிட்டதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. இலங்கையில் தமிழரை அழிக்கலாம் ஆனால் தமிழர் அறிவை அழிக்க முடியாது. அதன் வேர்கள் இன்று உலகநாடுகளெல்லாம் பரந்தோடித் துளிர்விட்டு அந்த நாடுகளையும் முன்னேற்ற துடிக்கிறது. அந்நாடுகளும் தமிழருக்கு உயர்பதவிகள் கொடுத்து அழகுபார்க்கிறது. இதனால் சிங்களம் மேலும் மனம் புழுங்குகிறதே தவிர தன் குறை உணர்ந்து திருந்த முயல்வதாகத் தெரியவில்லை.
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
ஐயா , இது ஒரு நல்ல சந்தேகம் . ....... நீங்கள் கொஞ்சம் கவனித்து வாசித்திருந்தால் அதில் "சின்னையா என்னைத் தோளில் தூக்கிக் கொண்டு செல்வார் " என்று இருக்கும் . ....... அதாவது எனது தந்தையார் நான் பிறப்பதற்கு முன் தவறியிருந்தார் . ....... !
1 month 3 weeks ago
இப்போ இந்தியா தொடரை சமனாக்க கூடிய நிலையில் உள்ளது போல் தெரிகிறது. எல்லாம் இன்று காலநிலை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்துத்தான். நல்ல வெய்யில் அடித்தால் இங்கிலாந்து வெல்லும். மழை மூட்டம் என்றால் இந்தியா வெல்ல வாய்ப்புக்கூட! இப்போ இருக்கும் இரு ஆட்டக்காரர்களுக்கும் பந்து மட்டையில் படுவதைவிட காலில்தான் படுகிறது!!
1 month 3 weeks ago
அவுஸ்ரேலியாவில் முன்னர் குழந்தை ஒன்றிற்கு $4000 கொடுத்தார்கள் வேலையிலும் அதே அளவு கொடுத்தார்கள், 3 மாதம் சம்பளத்துடன் வேலை ஓய்வு, பின்னர் வேலைக்கு போகும் போது $4000 கொடுத்தார்கள். தங்கி வாழ்வோரின் தொகை (15 வயதிற்கு குறைந்தவர்களும் ஓய்வூதிய வயதெல்லை கொண்ட இந்த தங்கி வாழ்வோர் தொகை) விகிதம் அதிகரிக்கும் போது அந்த நாடு வளர்ச்சி பாதையிலிருந்து விலகி செல்ல ஆரம்பிக்கும், உள்நாட்டு குழந்தை பிறப்பு அதிகரிப்பினை ஊக்கிவிப்பது இதனாலேயே, ஆனால் குடியேற்றவாசிகள் உடனடி தீர்வு. சீனா மிகப்பெரிய இரண்டு பிரச்சினைகளை எதிர்கொள்கிறது இந்த தங்கி வாழ்வோர் விகித அதிகரிப்பு மற்றும் சீன வழங்கல் பாதையில் ஏற்படுத்தப்படும் நெருக்கடிகள் சீன பொருளாதாரத்திற்கு மிக பெரிய இரண்டு சவால்களாக உள்ளது. மிக பெரிய உற்பத்தி துறை கொண்ட சீனாவே உலகில் தற்போது மிக அதிகளவில் எரிசக்தியினை பயன்படுத்தும் நாடாக உள்ளது, இதனது வழங்கல் பாதையில் அமெரிக்காவினால் திட்டமிட்டு நெருக்கடியினை தோற்றுவிக்கும் நிகழ்ச்சி நிரல் செயற்பாட்டில் உள்ளது, இதற்கு மாற்றீடு சீனாவினால் தற்போது செய்ய முடியாது என்பதே யதார்த்தம், எவ்வாறு அமெரிக்க பொருளாதாரம் மற்றும் அதன் எதிர்காலம் பற்றிய உறுதியின்மை நிலவுகிறதோ அதனை போல சீன பொருளாதாரமும் நெருக்கடியில் உள்ளது. அதற்காகவே சீனா அதிகளவில் மீழ் உருவாக்கும் எரிசக்தியில் அதிக ஆர்வம் காட்டுகிறது.
1 month 3 weeks ago
நெத்தன்யாகுவும், அமெரிக்காவும் சேர்ந்து இஸ்ரேலுக்கு ஒரு முடிவுரை எழுதுகிறார்கள்.
1 month 3 weeks ago
இது ஒரு மிலேச்சத்தனமான செயல், எதற்காக தொடர்ந்தும் அப்பாவிகளை பிணைக்கைதிகளாக வைத்துள்ளார்கள், பலஸ்தீன மக்களே இவ்வாறு கடத்தி வைக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பான தகவல்களை இஸ்ரேலுக்கு வழங்கவேண்டும், இவ்வாறானவர்களுக்கு உதவி வழங்குவதனை ஈரான் நிறுத்த வேண்டும், அவுஸ்ரேலியாவில் காசா மக்களுக்காக பெருமளவிலான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள், அதில் ஈடுபட்ட மக்கள் இன மதம் வேறாக இருந்தாலும் சாதாரண மக்கள் பாதிக்கபட்டதற்காக வந்திருந்தார்கள், காசா அழிவுகள் உலகளவில் மிக பெரியளவில் மக்களை வந்தடைகிறது ஆனால் இந்த அப்பாவி இஸ்ரேலியர்களின் வலிகளை பற்றி மறந்துள்ளோம்.
1 month 3 weeks ago
இது ஒரு நியாயமான கோரிக்கை, பாதிக்கப்பட்ட இரண்டு சமூகங்களுக்கும் நீதி வழங்கும் பொதுவான பொறுப்பு இலங்கை அரசிற்கே உண்டு, அதே நேரம் முஸ்லீம்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கைகளும் நியாமான கோரிக்கைதான் அதற்கும் இலங்கை அரசே பொறுப்பு. இது மேலும் மேலும் இலங்கை ஆட்சியாளர்களை நெருகடிக்குள்ளாக்கும், அடிப்படையில் தாயக கோரிக்கையினையும் போராட்டத்தினையும் பலவீனமாக்க குடியேற்றங்களையும் அதே நேரம் இரு சமூகத்திற்கிடையே திட்டமிட்ட பிளவுகளை உருவாக்கிய இலங்கை அரசே இதற்கான முழுப்பொறுப்பினை ஏற்க வேண்டும், இதில் பலிக்கடாக்களாக்கப்பட்ட இரு சமூகங்களையும் குற்றவாளியாக்க முடியாது. இதில் இலங்கை அரசினால் நேரடியாக ஒரு சமூகம் பாதிக்கப்பட்டுள்ளது மற்ற சமூகம் மறைமுகமாக இலங்கை அரசினால் பாதிக்கப்பட்டுள்ளது, முஸ்லீம்களின் இந்த நியாமான கோரிக்கை மேலும் மேலும் எமக்கு பலம் சேர்க்கும் ஒரு முயற்சியாகவே இருக்கும், இங்கு கூறுவது போல தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டதிற்கெதிரான போராட்டத்தினை நீர்த்து போக செய்யாது மறுவளமாக உறுதி சேர்க்கும். இது இலங்கை அரசிற்கு ஒரு புதிய தலையிடியினை உருவாக்கலாம், இல்லாத ஒரு அமைப்பின் மீது வைக்கப்படும் குற்றசாட்டாக இது இருக்க போவதில்லை மாறாக இலங்கை அரசின் அனைத்து நிர்வாக பிரிவுமே இலங்கையில் பாதிக்கப்பட்ட இரு சிறுபான்மை பிரிவினர்களின் இழப்புகளுக்கும் காரணம் கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த இரண்டு பிரதான கட்சிகளுமே அதற்கு காரணம், அவர்களே குற்றவாளிகள். இது ஓடிப்போன சிங்கத்தினை வாலில் கட்டி வந்த நரியின் கதை போன்றது.
1 month 3 weeks ago
04 Aug, 2025 | 11:20 AM இஸ்ரேல் விமானதாக்குதல்களை நிறுத்தி காசாவிற்கான மனிதாபிமான விநியோக பாதையொன்றை நிரந்தரமாக திறந்துவிடுவதற்கு இணங்கினால் தன்னிடமுள்ள பணயக்கைதிகளிற்கு உணவு வழங்கும் விடயத்தில் ஒத்துழைக்க தயார் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஹமாசிடம் சிக்குண்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகள் பட்டினியால் வாடுவதை காண்பிக்கும் வீடியோ வெளியானதை தொடர்ந்து சர்வதேச கண்டனங்கள் எழுந்துள்ள நிலையிலேயே ஹமாஸ் இதனை தெரிவித்துள்ளது. 2023ம் ஆண்டு முதல் ஹமாசிடம் பணயக்கைதியாக உள்ள எவ்யட்டார் டேவிட்டின் வீடியோவே வெளியாகியுள்ளது. 24வயது டேவிட் எலும்பும்தோலுமாக காணப்படுகின்றார். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து கடும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார தலைவர் இந்த காணொளி பயங்கரமானது என தெரிவித்துள்ளதுடன் ஹமாசின் காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்து ஹமாசின் இராணுவபேச்சாளர் அபுஒபெய்தா பிடிபட்டுள்ள எதிரிகளிற்கு உணவு மருந்து பொருட்களை வழங்குவதற்கான சர்வதேச செஞ்சிலுவை குழுவின் வேண்டுகோள்களை சாதகமாக பரிசீலிக்க தயார் என தெரிவித்துள்ளார். எனினும் சில நிபந்தனைகளை விதித்துள்ள அவர் மனிதாபிமான விநியோகம் இடம்பெறும் போது இஸ்ரேல் விமானதாக்குதலை நிறுத்தவேண்டும், காசாவிற்குள் மனிதாபிமான விநியோகத்தை மேற்கொள்வதற்கான நிரந்தர பாதையை திறந்துவிடவேண்டும் என தெரிவித்துள்ளார். கடந்த 24 மணிநேரத்தில் காசாவில் பட்டினிமற்றும் போசாக்கின்மையால் மேலும் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காசாவில் பெரும் பஞ்சம் பட்டினிநிலை காணப்படுவதாக பல சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன. https://www.virakesari.lk/article/221758
1 month 3 weeks ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
1 month 3 weeks ago
Published By: Vishnu 04 Aug, 2025 | 02:32 AM யாழ். பருத்திதுறையில் காணாமல் போன தனிநபர்கள் குறித்து விசாரிக்கச் சென்ற குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளை கடற்படை புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் பின்தொடர்ந்து வருவதாக குற்றப் புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறையில் காணாமல்போன தொடர்புடைய ஒரு விஷயத்தை விசாரிக்க தங்கள் துறைஅதிகாரிகள் சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு நபர்கள் அவர்களைப் பின்தொடர்ந்ததாகவும் இவர்களை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் கடற்படை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என்பது உறுதி செய்யப்பட்டதாகவும். அதனடிப்படையில் பின்தொடர்ந்த கடற்படை புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை செய்தபோது குற்ற புலனாய்வு பிரிவினரை பின்தொடருமாறு கடற்படை புலனாய்வுப் பிரிவின் லெப்டினன்ட் கமாண்டர் உத்தரவு பிறப்பித்ததாக அவர்கள் குற்றப் புலனாய்வுத் துறையிடம் தெரிவித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்திற்கு மேலும் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/221733
1 month 3 weeks ago
கேப்டனாக தடுமாறும் கில்: ஆதிக்கம் செலுத்திய இந்தியா வெகுமதியை தவறவிடக் காரணமான தவறுகள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இங்கிலாந்தின் ஜோ ரூட் - ஹாரி புரூக் இணை கட்டுரை தகவல் தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக 4 ஆகஸ்ட் 2025, 02:01 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடரில் இதுவரை இந்தியா 31 செஷன்களை கைப்பற்றியுள்ளது. ஆனால், 20 செஷன்களை மட்டும் வெற்றி கொண்ட இங்கிலாந்து அணி தொடரில் 2–1 என முன்னிலை வகிக்கிறது. இந்தியா சிறப்பான கிரிக்கெட் விளையாடியும் அதற்கான வெகுமதியை பெற முடியாததற்கு முக்கிய தருணங்களில் செய்யும் தவறுகளே காரணம். ஓவல் டெஸ்டிலும் அப்படிப்பட்ட சில தவறுகள்தான் ஆட்டத்தை ஐந்தாம் நாள் வரை கொண்டுசென்றுள்ளன. வெற்றிக்கு 324 ரன்கள் தேவை என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸை டக்கெட்டும் போப்பும் தொடர்ந்தனர். மேகமூட்டத்தையும் ஈரப்பதத்தையும் பயன்படுத்திக் கொண்டு, சிராஜும் ஆகாஷ் தீப்பும் நல்ல ரிதத்தில் பந்துவீசினர். குறிப்பாக டக்கெட்டுக்கு எளிதாக பவுண்டரிகள் கொடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியுடன் இருந்தனர். எதிர்பார்த்த வேகத்தில் ரன் குவிக்க முடியவில்லை என்ற அழுத்தத்தில், பிரசித் கிருஷ்ணாவின் முழு நீளப் பந்தை கவர் டிரைவ் விளையாட முயன்று, இரண்டாவது ஸ்லிப்பில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதிரடி தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில், இன்னிங்ஸை கட்டியெழுப்ப வேண்டிய சுமை போப், ரூட் ஆகியோரின் தலையில் இறங்கியது. பிரசித் கிருஷ்ணா ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசிய போப், அடுத்த ஓவரிலேயே சிராஜின் வோபுள் பந்துக்கு எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இந்த தொடர் முழுக்க வோபுள் சீம் (wobble seam) பந்துக்கு நிறைய விக்கெட்டுகள் விழுவதை பார்த்து வருகிறோம். வோபுள் சீம் பந்துவீச்சு என்பது பந்தை நேராக வைத்து, தையலை தளர்வாக பிடித்து வீசும் பாணிக்கு பெயர். வோபுள் சீம் (Wobble Seam) பந்தை இரண்டு விதமாக வீசலாம். தையலை (seam) வழக்கத்தைக் காட்டிலும் தளர்வாகப் பிடித்து வீசுவது ஒருமுறை. விரல்களை தையலின் மேல் அகலப் படரவிட்டுக் கொண்டும் வீசலாம். காற்றில் ஊசலாடியபடி பயணிக்கும் பந்தின் தையல் ஆடுகளத்தில் எந்தப் பக்கம் விழுகிறதோ அந்தப் பக்கம் பந்து திரும்பும். (seam). இதிலுள்ள சுவாரஸ்யமே தையல் எந்தப் பக்கத்தைப் பார்த்து விழுமென்பது பேட்டருக்கு மட்டுமில்லாமல் பந்து வீச்சாளருக்கும் தெரியாது என்பதுதான். இந்த எதிர்பாராத் தன்மைதான் வழக்கமான ஸ்விங் மற்றும் சீம் பந்துவீச்சில் இருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹாரி புரூக் நெருக்கடிக்கு உள்ளாக்கிய புரூக் 106 ரன்களுக்கு 3 விக்கெட்களை தொலைத்த நிலையில், பாஸ்பால் பாணியை கைவிட்டு, அடக்க ஒடுக்கமாக ரூட்–புரூக் ஜோடி விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அழுத்தமான சமயங்களில் எதிரணி மீது அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பாஸ்பால் வரையறையின்படி, இந்திய பந்துவீச்சாளர்களை புரூக் நெருக்கடிக்கு உள்ளாக்கினார். முன்னும் பின்னும் நகர்ந்து விளையாடி, அவர்களின் லைன் அண்ட் லெந்த்தை சிதைத்ததோடு உளவியல் ரீதியாகவும் இந்திய பந்துவீச்சாளர்களை நிலைகுலைய வைத்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹாரி புரூக் அடித்த பந்தை கேட்ச் பிடித்த முகமது சிராஜ் தவறுதலாக எல்லைக் கோட்டை மிதித்துவிட்டதால் நடுவரால் 6 ரன்கள் கொடுக்கப்பட்டன. 19 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சிராஜ் தவறவிட, அதை கெட்டியாக பிடித்துக்கொண்ட புரூக் சதத்தில்தான் போய் நின்றார். கடந்த 70 ஆண்டுகளில் குறைந்த டெஸ்ட்களில் 10 சதங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். உலகின் தலைசிறந்த பேட்டரும் உலகின் முதல்நிலை டெஸ்ட் பேட்டரும் எவ்வித பதற்றமும் இன்றி, வெற்றி இலக்கை நோக்கி வீறுநடை போட்டனர். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நான்காவது வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது வேகப்பந்து வீச்சாளர்களின் வேலைப்பளுவை அதிகரித்ததால் லைன் அண்ட் லெந்த்தில் அவர்கள் தவறு செய்தனர். களத்தடுப்பில் தாக்குதல் பாணியா, தற்காப்பு பாணியா என்பதை முடிவுசெய்ய முடியாமல் கில் தடுமாறியதை பார்க்க முடிந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் களைப்பில் தவித்த போதும் சுழற்பந்து வீச்சாளர்களை தாமதமாக கொண்டுவந்தது ஏன் என்பது சுத்தமாக விளங்கவில்லை. முந்தைய இன்னிங்ஸில் பிரசித் கிருஷ்ணாவுடனான மோதலால் கவனத்தை தொலைத்த ரூட், ஒன்றிரண்டு ரன்களை ஓடுவதை மறந்து, பவுண்டரிகளை மட்டும் குறிவைத்து சொதப்பினார். ஆனால், இந்தமுறை வழக்கமான ஒரு ரூட் இன்னிங்ஸ் எப்படி இருக்குமோ அப்படி விளையாடினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வழக்கமான ஒரு ரூட் இன்னிங்ஸ் எப்படி இருக்குமோ அப்படி விளையாடினார். களத்தில் இந்திய அணியினரின் உடல்மொழி, ஆட்டம் இங்கிலாந்து பக்கம் நகர்ந்துவிட்டதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது. குல்தீப் அணியில் இருந்திருந்தால் ஆட்டம் வேறுமாதிரி, இந்தியாவுக்கு சாதகமாக கூட அமைந்திருக்கலாம். ஆகாஷ் தீப் பந்துகளில் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகள் விளாசிய புரூக் , இறங்கிவந்து அடிக்கப் பார்த்து, பேட்டை காற்றில் பறக்கவிட்டு சிராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்தியாவுக்கு திறந்த கதவு ரூட்–புரூக் இணை, நான்காவது விக்கெட்டுக்கு 195 ரன்களை குவித்து ஆட்டத்தை முழுவதுமாக இங்கிலாந்து பக்கம் திருப்பிவிட்டது. களமிறங்கியது முதலே பொறுப்பில்லாமல் கண்ணை மூடிக் கொண்டு பேட்டை சுழற்றிக் கொண்டிருந்த பெத்தேல், 5 ரன்னில் பிரசித் பந்தில் போல்டாகி சென்றார். இங்கிலாந்து அணி இலக்கை சிரமமின்றி நெருங்கி கொண்டிருந்த போது , பிரசித் கிருஷ்ணாவின் ஒரு அற்புதமான பேக் ஆஃப் எ லெந்த் (back of a length)பந்தின் மூலம் ரூட் (105) விக்கெட்டை கைப்பற்றினார். ரூட் விக்கெட்டுக்கு பிறகு, ஆட்டத்தில் மீண்டும் இந்தியாவுக்கு ஒரு கதவு திறந்தது. ஜேமி ஸ்மித்தும் ஓவர்டனும் களத்தில் இருந்தபோது, மழை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. எப்படியும் நான்காம் நாளில் ஆட்டம் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஐந்தாம் நாளை நோக்கி ஆட்டத்தை இயற்கை நகர்த்தியிருக்கிறது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அதிசயத்தை நிகழ்ந்தினால் ஒழிய, இந்தியாவால் இந்த ஆட்டத்தில் தலையெடுக்க முடியாது. 9 பந்துகளில் பிரசித் கிருஷ்ணா ரூட், பெத்தேல் விக்கெட்களை தூக்கியிருப்பது இந்தியாவுக்கு ஒரு சிறு நம்பிக்கையை கொடுத்துள்ளது. இன்று 3 ஓவர்களுக்கு பிறகு புதிய பந்து கிடைக்குமென கூறப்படும் நிலையில், புதிய பந்தில் விக்கெட் எடுக்க இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முயற்சிக்க வேண்டும். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. எதிர்பாராததை எதிர்பார்க்க வைக்கும்படி சென்று கொண்டிருக்கும் இந்த டெஸ்ட் தொடர், கடைசி நாளில் என்ன ஆச்சரியங்களை வைத்திருக்கிறது என்று பார்க்கலாம். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce9382en8njo
1 month 3 weeks ago
துருக்கியர் ஒருவருக்குத் தமிழ் வாசிக்க தெரிந்து அவருக்கு யாழ்களத்திலும் உறவு இருந்தால்…தம்பி தமிழ் சிறி இனித் துருக்கிக்கு ஊர்உலா செல்லவோ, அங்கு தலைகாட்டவோ முடியாது.😭
1 month 3 weeks ago
சோமரத்ன ராஜபக்ஷவின் கருத்து முக்கிய திருப்புமுனை: சர்வதேச விசாரணை தான் உண்மையை வெளிக்கொணரும் என தமிழ்த்தேசியக்கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தல் Published By: Vishnu 03 Aug, 2025 | 11:18 PM (நா.தனுஜா) செம்மணி பற்றிய உண்மைகளை சர்வதேச விசாரணையில் வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாக லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ கூறியிருப்பது இவ்விவகாரத்தில் மிகமுக்கிய திருப்புமுனையாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசியக்கட்சிகளின் பிரதிநிதிகள், இதனை ஒரு சர்வதேச கட்டமைப்பின் முன்னிலையில் விசாரிப்பதன் ஊடாக மாத்திரமே சகல உண்மைகளையும் வெளிக்கொணரமுடியும் எனவும், அதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதியும் சர்வதேச சமூகமும் முன்னெடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். யாழ் செம்மணி மனிதப்புதைகுழு விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அத்தோடு யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் நடாத்தப்பட்டுவந்த சித்திரவதைக்கூடங்கள் என்பன பற்றிய விபரங்களை வெளியிடுவதற்குத் தனது கணவர் தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், 'செம்மணி பற்றிய உண்மைகளை வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜபக்ஷ கூறியிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். மரணதண்டனை விதிக்கப்பட்ட அவர், இப்போது உண்மையைச் சொல்வதற்குத் தயாராக இருக்கிறார். இருப்பினும் இந்த நாட்டுக்குள் உண்மைகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் தனக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கருதுவதனாலேயே அவர் சர்வதேச விசாரணையைக் கோருகிறார். இந்த சர்வதேச விசாரணையையே நாம் 2010 ஆம் ஆண்டிலிருந்து கோரிவருகிறோம். அவ்வாறிருக்கையில் தற்போது சிங்களத்தரப்பிலிருந்து, அதுவும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவரிடமிருந்து அந்தக் கோரிக்கை வந்திருப்பதை நாம் எமக்கான ஒரு விடையாகவே பார்க்கிறோம். அதேபோன்று தனக்கு ஆணையிட்ட உயரதிகாரிகள், படுகொலைக் குற்றங்களைப் புரிந்தவர்கள் உள்ளிட்ட சகலரது விபரங்களையும் வெளிப்படுத்துவதற்குத் தயார் எனவும் அவர் கூறியிருக்கிறார். எனவே நீதிக்கான பயணத்தில் சர்வதேசத்தின் தலையீடு அல்லது பங்களிப்பு இல்லாவிடின், அது உண்மையான நீதியாக இருக்காது என சிங்களவர்களே கூறுமளவுக்கு இன்று நிலைமை மாறியிருக்கிறது. எனவே இலங்கை அரசாங்கம் முதலில் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும். அதுமாத்திரமன்றி மீண்டும் மீண்டும் உள்ளகப்பொறிமுறை எனக்கூறி சகல தரப்பினரையும் ஏமாற்றுவதை விடுத்து, நீதியானதொரு சர்வதேசப்பொறிமுறையை நோக்கி நகரவேண்டும். அப்பொறிமுறை தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரக்கூடியதாக இருக்கவேண்டும்' என வலியுறுத்தினார். அதேவேளை சோமரத்ன ராஜபக்ஷவின் கடிதம் தொடர்பில் கருத்துரைத்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், 'கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கு விசாரணைகளின்போதே செம்மணியில் சுமார் 300 - 600 பேர் வரை புதைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அதனை ஒரு முக்கிய விடயமாகக் கருதி அடுத்தகட்ட விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. மாறாக அவ்வேளையில் உரிய முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் பலர் சிறை செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். 'இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படுமாயின் இதுபற்றிய உண்மைகளைக் கூறத்தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜக்ஷ தெரிவித்திருக்கிறார். எனவே இவ்விவகாரத்தை ஒரு சர்வதேச கட்டமைப்பின் முன்னிலையில் விசாரிப்பதன் ஊடாக மாத்திரமே சகல உண்மைகளையும் வெளிக்கொணரமுடியும். ஆனால் எவ்வேளையிலும் இராணுவத்தைப் பாதுகாப்பதற்கு முற்படும் இலங்கை அரசாங்கம், சர்வதேச விசாரணைக்கான நகர்வுகளை ஒருபோதும் முன்னெடுக்காது. ஆகவே மிகச்சிறந்த இந்தத் திருப்பத்தை சரியாகப் பயன்படுத்தக்கூடியவகையில் ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும்' எனக் குறிப்பிட்டார். மேலும் சோமரத்ன ராஜபக்ஷ சர்வதேச விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதாகக் கூறியிருப்பது இவ்விவகாரத்தில் மிகமுக்கிய திருப்புமுனையாக அமைந்திருப்பதாகத் தெரிவித்த புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இதுகுறித்து ஜனாதிபதி உரியவாறான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதுமாத்திரமன்றி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவிருக்கும் நிலையில், இதுகுறித்து சர்வதேச சமூகம் அவதானம் செலுத்தவேண்டும் எனவும், நியாயமான சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/221729
1 month 3 weeks ago
போக்குவரத்து திணைக்களம் முகவரி: இல. 341, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 05, நாராஹேன்பிட்ட, இலங்கை. தொலைபேசி: +94 112 033333 E mail - Werahera : dmtweraheracom@gmail.com
Checked
Mon, 09/29/2025 - 00:45
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed