புதிய பதிவுகள்2

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

1 month 3 weeks ago
ரஞ்சித் அண்ணா தெளிவாக சொல்லி இருக்கிறார் என்று நம்புகிறேன். வெளிநாட்டில் அஞ்சலி செலுத்துவதை எதிர்ப்பவர்கள் ஒன்று அவர் இருக்கிறார் என்று நம்ப ஆசைப்படும் ஒரு தரப்பினர் மற்ற தரப்பினர் தங்கள் தனிப்பட்ட நலன்கள் பாதிக்கபட்டுவிடுமே என்று அச்சப்படுபவர்கள்.

குட்டிக் கதைகள்.

1 month 3 weeks ago
முக்கடல் சங்கமம் ❤️❤️❤️ (இசை கவி நகை )❤️❤️❤️❤️❤️ · விஜயா கிருஷ்ணன் ·Srdtopoesnju031h0a13iu8t24l7:gmta271u2014lc 1ff,l2f3uiiea80 · 😁டாக்டருக்கும் ஆக்டருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சு தான் கொல்லுவாங்க! 😁" சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்? சிவகாசில காச கரியாக்குவாங்க. நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க! 😁" FILE க்கும் PILE க்கும் என்ன வித்தியாசம்? FILES அ உட்கார்ந்து பார்க்கணும். PILES க்கு பார்த்து உட்காரணும். 😁" செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? மனிதனுக்கு கால் இல்லேன்னா பேலனஸ் பண்ண முடியாது. செல் போன்ல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது. ஓவ்வொரு இளைஞனின் மன உளைச்சலுக்கும் காரணம்? மதிப்பெண்ணும் மதிக்காத பெண்ணும்! 😁" வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான்! வசதி உள்ளவன் நாய் மேய்க்கிறான்! 😁" ஆண்களை அதிக தூரம் நடக்க வைக்கும் விஷயங்கள் ரெண்டு? ஒன்று பிகர், மற்றொன்று சுகர்! 😁" என்னதான் சென்டிமென்ட் பார்த்தாலும் கப்பல் கிளம்பும்போது பூசணிக்காய் எலுமிச்சம் பழம் வச்சு நசுக்கினாலும் சங்கு ஊதிட்டுதான் கிளம்பும். 😁" கணிப் பொறிக்கும் எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம்??? கணிப் பொறியில் எலி வெளியே இருக்கும். எலிப் பொறியில் எலி உள்ளே இருக்கும்.. 🍅" *சிரித்து சிந்தியுங்கள் இல்லைன்னா சிந்தித்து சிரியுங்கள்* .🍅" மொத்தத்துல சிரிங்க 😂" இனிய மாலை வணக்கம் .......... !

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

1 month 3 weeks ago
விருப்பு வாக்கு போடுவது ஏற்றுக்கொள்வதல்ல. அவரது கருத்தை வரவேற்பது. உண்மையில் ரகுவுக்கே தெரியும் அவரால் எந்த ஆதாரத்தையும் தரமுடியாது இல்லை என்பது. அவரது கருத்தை முழுமையாக வாசித்தால் இது உங்களுக்கு புரிந்திருக்கும். உங்களுக்கு பிரபாகரன் சாகணும். பைலை மட்டுமல்ல எல்லாவற்றையும் மூடுங்க.

ஜெனீவா தீர்மானமும் சுமந்திரனின் சதிக்கூட்டணியும்.

1 month 3 weeks ago
இந்த ஊடகவியலாளர் தானே "சுமந்திரன் பா.உ வாக வர இருக்கிறார்" என்று கடந்த டிசம்பரில் இருந்து யூ ரியூபில் வந்து சில்லறை பொறுக்கினார்? திரும்பவும் சில்லறை பொறுக்க ஒரு அரிய வாய்ப்பு! நல்லூர் திருவிழாவில் பிச்சைக் காரர்களுக்கு சீசனலாக வாய்ப்புக் கிடைப்பது போல இவையளுக்கும் பிழைப்பு ஓடுது😂!

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

1 month 3 weeks ago
பொதுவாகவே, இயல்பாக அரசியலை அவதானிப்போர், கிரமமாக பத்திரிகை வாசிப்போர் என்று சாமான்ய மக்களே புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதை புரிந்து கொண்ட நிலையில், தீர்க்க தரிசனமான ஒரு தலைமையின் கீழ் வளர்ந்தோம் என்று பெரிதாக பீற்றி கொள்பவர்கள் சிலருக்கு 2009 ல் நடந்த விடயம் 2025 ல் கூட புரியவில்லை என்பது நல்ல ஜோக் தான். தீர்க்க தரிசனம் என்றால் 15 -20 வருடங்களுக்கு பின் நடக்க இருப்பதை இப்போதே தமது நுண்ணறிவின் துணைகொண்டு அனுமானிப்பது. ஆனால், இங்கு தீர்கக தரிசன கோஷ்டிக்கு 16 வருடங்களுக்கு முன் நடந்ததை கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை. இதற்குள் இவர்கள் தமிழ் மக்களுக்கு அரசியல் வழிகாட்ட போகிறார்களாம். சின்ன புள்ள தனமா இல்ல. 😂

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

1 month 3 weeks ago
ஆதாரங்களை விடுங்கள். உங்கள் ஒரே கருத்திற்கு இரு வேறு விதமான பிரதிபலிப்பை எப்படி விளக்குகிறீர்கள்? ரஞ்சித் எழுதியது," ஓ..இப்ப புரிஞ்சிடிச்சு" என்ற நிலையா? உங்களைப் போல பலரின் சந்தேகத்தையும், நம்ப மாட்டேனென்ற அடம் பிடிப்பையும் அப்படியே காசாக்க சுவிசில் இருந்து ஒரு பக்கா மோசடிப் பேர்வழியை இறக்கினார்களே? அதற்குப் பிறகும் இந்த சந்தேகங்களால் "எவருக்கும் நட்டமில்லை" என்கிறீர்களா😂?

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

1 month 3 weeks ago
நீங்கள் முதலில் என்னை பற்றி நீங்களே உருவாக்கக வைத்திருக்கும் பிம்பத்தை விட்டு விட்டு சிந்திக்க முயலுங்கள். எனக்கு ஆதாரம் வேண்டும் தெளிவான சான்றுகள் வேண்டும். அதுவரை அது மனதில் ஒரு மூலையில் வதைத்தபடியே தான் இருக்கும். இதனால் மற்றவர்கள் எவருக்கும் எந்த தொல்லையே நட்டமோ கிடையாது

முஸ்லிம்களின் இழப்புகளும் நீதிக்கான கோரிக்கைகளும்

1 month 3 weeks ago
அருகம்குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னம் - பொலிஸார் விசேட அறிவிப்பு Monday, August 04, 2025 செய்திகள் அருகம்குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அருகம் குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அவர்கள் ஈடுபடும் வணிக நடவடிக்கைகள் குறித்து அண்மையில் கடும் விமர்சனங்கள் எழுப்பபட்டிருந்தன. சட்டத்தை மீறாத எந்தவொரு வெளிநாட்டவரின் இருப்பு குறித்தும் கரிசனையாக நோக்கப்பட வேண்டியதில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும் வரவேற்பதாகவும், இலங்கை ஒரு விரும்பத்தக்க சுற்றுலா தலமாக இருப்பதில் பெருமை கொள்ள வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். அருகம் குடாவோ அல்லது வேறு எந்தப் பகுதியோ, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையை தேர்ந்தெடுப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல அறிகுறியாக பார்க்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அருகம் குடாவில் இஸ்ரேலிய பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனியர்கள் அல்லது வேறு எந்த நாட்டவர்கள் இலங்கைக்கு வந்தாலும், அவர்கள் நம் நாட்டின் அழகை அனுபவிக்கட்டும் என தெரிவித்துள்ளார். நாம் நம் நாட்டைப் பற்றி பெருமைப்பட வேண்டும். வெளிநாட்டவர்கள் வருகை தருவது இலங்கையின் நன்மைக்கே. இது ஒரு பிரச்சினையாக ஏன் பார்க்கப்படுகிறது என்பது எனக்கு புரியவில்லை. நம் நாடு வளர்ந்து உயர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளையில், இலங்கை பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகள் உட்பட பாதுகாப்பு படைகள் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள எப்போதும் விழிப்புடன் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வூட்லர் உறுதியளித்துள்ளார். பொலிஸ், முப்படைகள் மற்றும் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். பிரச்சினை ஏற்படும்போது அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அருகம் குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னம் மற்றும் வணிக நடவடிக்கைகள் தொடர்பில் அண்மையில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியிருந்தது. இது போலத்தான்...இருக்கும் இந்த காத்தான்குடி படுகொலைப் பொய்களும்...... முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரனைகள் – சர்வதேச மயமாக்கப்பட வேண்டும் என ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்

19 வருடங்களிற்கு முன்னர் அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்ட அக்சன்பாம் மனிதாபிமான பணியாளர்கள்

1 month 3 weeks ago
ACF நிறுவனத் தொண்டர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு Published By: Vishnu 04 Aug, 2025 | 08:32 PM திருகோணமலை மூதூர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திங்கட்சிழமை (04) திருகோணமலை மட்டிக்களி லகூன் பூங்காவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு 19 ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை எனவும் புதிய அரசாங்கத்தின் ஆட்சியிலாவது நீதி கிடைக்க வேண்டும் எனவும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். 2006ம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதியன்று வழமை போல் கடமையின் நிமித்தம் மூதூரில் உள்ள அலுவலகத்துக்குச் சென்றிருந்த பணியாளர்கள் மூதூர் பகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலையின் காரணமாக அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில் அங்கேயே தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது. இதன்போது 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது. குறித்த படுகொலைச் சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 17 உள்ளுர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். இப்படுகொலையில் 1. ரிச்சட் அருள்ராஜ் (வயது – 24) 2. முத்துலிங்கம் நர்மதன் (வயது – 23) 3. சக்திவேல் கோணேஸ்வரன் (வயது – 24) 4. துரைராஜா பிரதீபன் (வயது – 27) 5. சிவப்பிரகாசம் ரொமிலா (வயது – 25) 6. கணேஷ் கவிதா (வயது – 27) 7. எம். ரிஷிகேசன் (வயது – 24) 8. அம்பிகாவதி ஜெசீலன் (வயது – 27) 9. கனகரத்தினம் கோவர்த்தனி (வயது – 27) 10. வயிரமுத்து கோகிலவதனி (வயது – 29) 11. ஏ.எல்.மொகமட் ஜௌபர் (வயது – 31) 12. யோகராஜா கோடீஸ்வரன் (வயது – 30) 13. சிங்கராஜா பிறீமஸ் ஆனந்தராஜா (வயது – 32) 14. ஐ. முரளிதரன் (வயது – 33) 15. கணேஷ் ஸ்ரீதரன் (வயது – 36) 16. முத்துவிங்கம் கேதீஸ்வரன் (வயது – 36) 17. செல்லையா கணேஷ் (வயது – 54) ஆகியோர் கொல்லப்பட்டிருந்தார்கள். மூதூர் பொது வைத்தியசாலைக்கு அருகில் இயங்கிவந்த அக்ஷன் பாம் எனும் சர்வதேச தொண்டர் நிறுவனத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த மேற்படி 17 பணியாளர்களையும் ஆயுதம் தரித்த சீருடைக்காரர்கள் நிறுவன வளாகத்துக்குள் நுழைந்து நிலத்தில் குப்புறப் படுக்கப்பண்ணி பின்பக்கமாக தலையில் சுட்டு படுகொலை செய்ததாக அன்றைய செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/221826

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

1 month 3 weeks ago
செம்மணி மனிதப் புதைகுழி: மேலும் 5 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு Published By: Vishnu 04 Aug, 2025 | 08:25 PM செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் திங்கட்கிழமை (4) மேலும் 05 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 135 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 126 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 30வது நாளாக இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு திங்கட்கிழமை (4) இடம்பெற்ற அகழ்வு பணிகளை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221825

வடக்கின் கல்வித் துறை பின்னடைய நிர்வாக பிரச்சனையே காரணம்!

1 month 3 weeks ago
எப்போது சிங்களரின் ஆட்சி இலங்கையில் மாறுகிறதோ அப்போது காரணம் நாங்களே என ஏற்றுக்கொள்வார்கள்…….. மாற்றம் ஒன்றே மாறாதது. இலங்கையின் தென்பகுதி குமரிக் கண்டத்துடன் இணைந்து கொள்ளும் என்ற செய்திகளும் பரவலாக வருகிறது.

மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்வதாயின் முழுமையாக, முறையாக பகிர வேண்டும் ; தயாசிறி ஜயசேகர

1 month 3 weeks ago
04 Aug, 2025 | 04:23 PM (இராஜதுரை ஹஷான்) மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்வதாயின் முழுமையாக, முறையாக பகிர வேண்டும். அல்லது ஒன்றும் செய்யாமலிருக்க வேண்டும். அதிகாரங்களை முறையாக பகிராமல் மாகாண சபைகள் வெள்ளை யானை என்று சித்தரிக்கப்படுவது முறையற்றது. வலது கையில் அதிகாரத்தை வழங்கி இடதுகையில் பறித்த நிலையே காணப்படுகிறது. இது முறையற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுயநிர்ணயம் தோற்றம் பெறும் என்று ஒரு தரப்பினர் தவறானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளார்கள். இதற்கு ஒருசில அரசியல் கட்சிகள் பொறுப்புக்கூற வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்த எடுத்துள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். கொழும்பில் திங்கட்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, மாகாண சபை முறைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் பல தனிநபர் பிரேரணைகளை முன்வைத்துள்ளேன். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அவசியம் அரசாங்கத்துக்கு காணப்படுகின்ற நிலையில் அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. மாகாண சபைத் தேர்தல் பற்றி அடுத்தாண்டு ஜனவரிக்கு பின்னர் தீர்மானிக்க முடியும் என்று அமைச்சர் ஒருவர் குறிப்பிடுகிறார். மாகாண சபை முறைமையில் காணப்படும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கு 06 மாதங்களேனும் செல்லும் என்று பிறிதொரு அமைச்சர் குறிப்பிடுகிறார். மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான செல்வாக்கு குறைவடைந்துள்ளதால் மாகாண சபை முறைமையை இரத்துச் செய்யவோ அல்லது மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போடுவதற்கோ இடமளிக்க முடியாது. 2013 ஆம் ஆண்டுக்கு பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத சூழலே காணப்படுகிறது. இதற்கு 2010 இற்கு பின்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பொறுப்புக்கூற வேண்டும். 2015-2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மாகாண சபைத் தேர்தலை பிற்போட்டது. திருத்த யோசனையை முன்வைத்த அமைச்சரே குறித்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார். ஒன்று பழைய தேர்தல் முறைமைக்கு அமைய விகிதாசார முறைமையில் சிறு திருத்தங்களை மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். அல்லது தற்போது காணப்படுகின்ற திருத்தங்களுடன் குழுவின் அறிக்கையின் யோசனையை பிரதமரால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து புதிய தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்த முடியும். இரண்டு முறைமையில் ஒன்றை தெரிவு செய்து காலம் தாழ்த்தாது அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். மாகாணசபை முறைமை மற்றும் மாகாணசபைத் தேர்தல் குறித்து மூன்று திருத்த யோசனைகளை பாராளுமன்றத்துக்கு முன்வைத்துள்ளேன். 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபை திருத்த பிரேரணை, 1989 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க மாகாண சபைகள் உப ஏற்பாடுகள் சட்ட திருத்த பிரேரணை, 1992 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க மாகாண அதிகார பரவலாக்க திருத்த பிரேரணை ஆகியன அவையாகும். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தனிநபர் பிரேரணைகள் குறித்து சட்டமாக அதிபர் 6 வார காலத்துக்குள் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். ஆனால் 15 அல்லது 20 வாரங்கள் கடந்துள்ள போதும் சட்டமா அதிபர் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு சட்டமா அதிபரை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்கிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது. அரசியலமைப்பின் பிரகாரம் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்வதாயின் அவற்றை சிறந்த முறையில் முறையாக பகிர வேண்டும். மாகாண சபை அதிகார பகிர்வில் பாரிய சிக்கல் நிலை காணப்படுகிறது. வலது கையில் வழங்கிய அதிகாரத்தை இடது கையில் பறிக்கும் நிலைக்கு மாகாண சபை அதிகார நிலை தள்ளப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கு உரித்தான அதிகாரங்களை ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக பறித்துக் கொண்டுள்ளார். சுகாதாரம், கல்வி மற்றும் நிர்வாக கட்டமைப்பில் இந்த நெருக்கடி நிலைமை காணப்படுகிறது. மாகாணங்களுக்குரிய விடயதானங்கள் பலவந்தமான முறையில் மத்திய அரசுக்கு மீளப்பெறப்பட்டுள்ளன. மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்வதாயின் முழுமையாக, முறையாக பகிர வேண்டும்.அல்லது ஒன்றும் செய்யாமலிருக்க வேண்டும். அதிகாரங்களை முறையாக பகிராமல் மாகாண சபைகள் வெள்ளை யானை என்று சித்தரிக்கப்படுவது முறையற்றது. மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்காமல், கைவிலங்கிட்டு எதனையும் செய்ய முடியாது. இவ்வாறான செயற்பாடுகளினால் மாகாண சபைகள் வினைத்திறாக செயற்படாமல், வெள்ளையானை போன்றே காட்சியளிக்கும். மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுயநிர்ணயம் தோற்றம் பெறும் என்று ஒரு தரப்பினர் தவறானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளார்கள். இதற்கு ஒருசில அரசியல் கட்சிகள் பொறுப்புக்கூற வேண்டும். மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் பற்றி விசேட அவதானம் செலுத்தப்படுகிறது. பொலிஸ் அதிகாரங்களை மாகாண முதலமைச்சருக்கு வழங்கினால் அது அரசியல் மயப்படுத்தப்படும் என்பதில் உறுதியாக உள்ளேன். தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஊடாக இந்த அதிகாரம் கண்காணிக்கப்பட வேண்டும். அத்துடன் காணி அதிகாரங்கள் தொடர்பில் காணி ஆணைக்குழு விசேட திட்டத்தை அல்லது வழிமுறையை செயற்படுத்த வேண்டும். மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசாங்கம் மந்தகதியில் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. முடிந்தால் மாகாண சபை விரைவாக நடத்துங்கள் என்று அரசாங்கத்திற்கு சவால் விடுக்கிறோம். மாகாண சபை அதிகாரத்தை எதிர்க்கட்சிகள் முழுமையாக கைப்பற்றும்.அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/221789

சிட்னியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் - ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பு

1 month 3 weeks ago
சிட்னியில் பாலஸ்தீன ஆதரவு பேராட்டம் - பாலத்தின் ஊடாக பேரணியாக சென்ற ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் - அவுஸ்திரேலியா ஏன் இதுவரை இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிக்கவில்லை என கேள்வி? Published By: Rajeeban 04 Aug, 2025 | 12:04 PM அவுஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தின் போது ஆயிரக்கணக்கானவர்கள் சிட்னி துறைமுகத்தின் பாலத்தின் ஊடாக பேரணியாக சென்றனர். அவுஸ்திரேலியாவின் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. .இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என வர்ணித்துள்ளனர். காசா யுத்தத்தை நிறுத்துமாறு அரசியல்வாதிகளை கோரும் செய்திகளுடன் ஆயிரக்கணக்கானவர்கள் கொட்டும் மழையிலும் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டனர். விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசஞ்சேயும் காணப்பட்டார். வெட்கம் வெட்கம் இஸ்ரேல் வெட்கம் வெட்கம் அமெரிக்கா என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோசமிட்டனர்? எங்களிற்கு என்ன வேண்டும் யுத்த நிறுத்தம் எப்போது வேண்டும தற்போது எனவும் அவர்கள் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டவர்களிற்கு ஆதரவாக பல பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் பாலத்தின் இருபக்கத்திலும் திரண்டிருந்தனர். காசா உலகின் ஏனைய பக்கத்தில் உள்ளது என்பது எனக்கு தெரியும் ஆனால் அது எங்களை இங்கு பெருமளவில் பாதிக்கின்றது என தெரிவித்த அலெக் பெவிலே என்ற தந்தையொருவர் காசாவின் சிறுவர்களை தனது மூன்று வயது மகனுடன் ஒப்பிட்டுள்ளதுடன் நாங்கள் உதவிகள் மூலம் மேலும் உதவுமோம் என தெரிவித்துள்ளார். எங்கள் அரசாங்கம் இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிக்கவில்லை என தெரிவித்த ஜாரா வில்லியம் தனது குழந்தையுடன் காணப்பட்டார்.மக்களை முழுமையாக பலவந்தமாக பட்டினி போட்டுள்ள நிலையில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என குறிப்பிட்டார். இரண்டு மணிநேரம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் 90,000க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர் என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/221762

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 month 3 weeks ago
இங்கிலாந்து பேட்டிங் லைனை காலி செய்த சிராஜின் வியூகம் : கடைசி நேரத்தில் வகுத்த திட்டம் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார் கட்டுரை தகவல் தினேஷ் குமார். எஸ் பிபிசி தமிழுக்காக 22 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு டெஸ்ட் தொடர் வரலாற்றில் இடம்பெற வேண்டுமானால், அதன் தொடக்கம் சரியாக இருந்தால் மட்டும் போதாது; முடிவும் பொருத்தமாக அமைய வேண்டும். 2 ரன்களில் ஆஸ்திரேலிய அணி தோற்ற, எட்ஜ்பஸ்டன் டெஸ்டையும் ஆஷஸ் 2005 தொடரையும் இன்னமும் கிரிக்கெட் உலகம் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக்கிறது. அதுபோல ஒன்றாக ஓவல் டெஸ்டும் ; ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடரும், கிரிக்கெட் வரலாற்றின் மறக்க முடியாத டெஸ்ட் தொடராக மாறிவிட்டது. டெஸ்டை வென்று, 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரை கைப்பற்ற 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜேமி ஸ்மித்தும் ஓவர்டனும் ஐந்தாம் நாளில் இன்னிங்ஸை தொடர்ந்தனர். தூண்டில் போட்டு தூக்கிய சிராஜ் பட மூலாதாரம், Getty Images இந்திய அணி தொடரை 2-2 என்று சமன்செய்ய வேண்டுமானால், 4 விக்கெட்டுகளை கைப்பற்றியாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கியது. ஐந்தாம் நாளின் முதலிரு பந்துகளில் ஓவர்டன் பவுண்டரிகளை அடிக்க, இந்திய ரசிகர்களின் அடிவயிறு கலக்கத்தை சந்தித்தது. இந்த தொடரில், இந்திய அணி எப்போதெல்லாம் நெருக்கடியை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் கைகொடுத்து தூக்கிவிட்ட சிராஜ், ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் பஞ்சு போல மாறியிருந்த பழைய பந்தை கையிலெடுத்தார். முதல் இரண்டு பந்துகளை பேட்டில் தொடக்கூட முடியாத அதிரடி விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்துக்கு, மேலும் வைடாக வீசி ரிஸ்க் எடுத்து தூண்டில் போட்டார் சிராஜ். தனது பொறுமையை சோதிப்பது இந்திய அணியின் வியூகம் என்பதை உணராத ஸ்மித், மீண்டும் ஒருமுறை இலக்கின்றி பேட்டை வீசி, விக்கெட் கீப்பர் ஜுரெலிடம் கேட்ச்சை மட்டுமல்ல, ஆட்டத்தையே தூக்கிக் கொடுத்தார். டெஸ்ட் தொடரின் சர்ச்சையான தருணங்கள் அதிரடி டக்கெட்டை 'அன்புடன்' வழியனுப்பிய ஆகாஷ்: இந்தியா - இங்கிலாந்து தொடரில் அடுத்த சர்ச்சை2 ஆகஸ்ட் 2025 கடைசி டெஸ்டிற்கான பிட்ச் எப்படி இருக்கும்? பார்வையிட்ட கம்பீர் மைதான ஊழியருடன் வாக்குவாதம்30 ஜூலை 2025 சதத்தை நெருங்கிய போது டிரா கேட்ட ஸ்டோக்ஸ் - ஜடேஜா அளித்த பதில் என்ன?29 ஜூலை 2025 கையில் கட்டுடன் களமிறங்கிய வோக்ஸ் பட மூலாதாரம், Shaun Botterill/Getty Images கருமேகங்கள் சூழ்ந்த போதும், செயற்கை விளக்குகளை பய்ன்படுத்தாமல் இருந்தது ஆச்சர்யத்தை உண்டுபண்ணியது. புதிய பந்தை விட பழைய பந்தில் சிறப்பாக ஸ்விங் செய்யும் சிராஜ், தனது அடுத்த ஓவரில், அபாயகரமாக திகழ்ந்த ஓவர்டனின் கால்காப்பை தாக்கி, LBW முறையில் ஆட்டமிழக்க வைத்தார். லெக் சைடில் சென்றது போல கோணம் அமைந்ததால், ஏதொவொரு நம்பிக்கையில் டிஆர்எஸ் மேல்முறையீட்டுக்கு ஓவர்டன் சென்றார்; குருட்டு நம்பிக்கையில் கூட சென்றிருக்கலாம். ஓவர்டனுக்கும் இங்கிலாந்துக்கும் வேறு என்ன வழி இருந்தது? LBW உறுதிசெய்யப்பட, ஓவல் மைதானத்தின் குளிரையும் மீறி ஆட்டம் சூடுபிடித்தது. புதிய பந்தை எடுத்தவுடன் பிரசித்தும், சிராஜும் கட்டுக்கோப்பாக பந்துவிசீனர். ரன்களை வாரி இறைப்பதற்கு பெயர் போன பிரசித் கிருஷ்ணா, பதற்றத்தில் கண்டதையும் முயற்சி செய்யாமல், சரியான லைன் அண்ட் லெங்த்தில் வீசினார். புதிய பந்து எடுத்து மூன்றாவது ஓவரிலேயே, ஒன்பதாவது விக்கெட்டையும் வீழ்த்தி கையில் கட்டுடன் இருக்கும் வோக்ஸை பேட் அனுப்பியாக வேண்டும் என்று இங்கிலாந்து அணிக்கு செக் வைத்தார். சிராஜின் செட்டப் மாஸ்டர் கிளாஸ் டங் விக்கெட்டை அவர் எடுத்த விதம் செட்-அப் மாஸ்டர்கிளாஸ் என்றே சொல்லவேண்டும். தேர்ட் மேன் திசையில் இருந்த ஃபீல்டரை பவுண்டரி லைனுக்கு அனுப்பி, அடுத்து வருவது ஒரு பவுன்சர்தான் என்று டங்கை நம்பவைத்தார். அதேநேரம் யார்க்கர் லெங்த்தில் வீச முற்பட்டாலும், ஆக்சனில் கிடைக்கும் சமிக்ஞையை கொண்டு பேட்டர் சுதாகரித்து விடுவார் என்று, முழு நீளத்தில் கால் பக்கம் வேகமாக வீசி, டங்கை போல்டாக்கினார். வரலாற்று கடமையென நினைத்து கையில் கட்டுடன் வோக்ஸ் களமிறங்கியதும், வேறு வழியில்லை என்று எதிர்முனையில் இருந்த அட்கின்சன், அடித்து ஆட தலைப்பட்டார். சிராஜ் வீசிய முழு நீளப்பந்தை அபாயம் என்று தெரிந்தும் கவ் கார்னர் திசையில் தூக்கியடித்தார். எல்லைக் கோட்டில் ஆகாஷ் தீப்பின் முயற்சி பலனளிக்காமல் போகவே, அணியின் ஸ்கோர் 363 ஆக உயர்ந்தது. சரியாக கடைசி பந்தில் சிங்கிள் ஓடி, அடுத்த ஓவர் ஸ்ட்ரைக்கை அட்கின்சன் தக்கவைத்து கொண்டார். வியூகத்து மாறாக நடந்துகொண்டதால் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெலை சிராஜ் கடிந்துகொண்டார். கடைசி விக்கெட்டுக்கான ரிஸ்க் பட மூலாதாரம், Stu Forster/Getty Images ரன் ஓடுகையில், கடும் வலியையும் பொருட்படுத்தாமல் வோக்ஸ் ஓடியது, டெஸ்ட் கிரிக்கெட் மீதும் அணியின் நலன் மீது அவருக்கிருக்கும் மதிப்பை வெளிப்படுத்தியது. லெக் சைடில் பவுண்டரி குறைவான தூரம் என்பதால், பிரசித் கிருஷ்ணா ஓவரை குறிவைத்து தாக்க முற்பட்டார் அட்கின்சன். ஆனால், எவ்வளவு தான் கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றியும், பெரிய ஷாட் எதையும் அட்கின்சனால் அடிக்க முடியவில்லை. கடைசி பந்தில் வோக்ஸுக்கு சிரமம் ஏறப்பட்டு விடாதபடி, மிட் ஆஃப் திசையில் இந்தமுறையும் சிங்கிள் எடுத்துக்கொண்டார். இங்கிலாந்து வெற்றிக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 'செய் அல்லது செத்துமடி' என்ற நிலைமைக்கு தள்ளப்பட்ட சிராஜ், பெரிய ரிஸ்க் எடுத்து, குறை உயர ஃபுல்டாஸ் பந்தை வீசினார். லெக் சைடில் பெரிய ஷாட் ஒன்றை விளையாட முற்பட்ட அட்கின்சன் முயற்சி தோல்வியடையவே, பந்து ஆஃப் ஸ்டம்பை பதம்பார்த்தது. தொடரின் முந்தைய டெஸ்ட் போட்டிகளில் நடந்தது என்ன? போராடிய ஜடேஜா: லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவை வீழ்த்திய ஸ்டோக்ஸின் அஸ்திரங்கள் எவை?14 ஜூலை 2025 புதிய வரலாறு படைத்த இந்தியா: ஆகாஷ் தீப் அற்புத பந்துவீச்சில் தடம் புரண்ட இங்கிலாந்து7 ஜூலை 2025 வெற்றியை தாரை வார்த்த இந்தியா: இங்கிலாந்துக்கு எதிராக 5 சதங்கள் அடித்தும் தோற்றது ஏன்?25 ஜூன் 2025 ஆட்ட நாயகனான சிராஜ் பட மூலாதாரம், Getty Images ஒட்டுமொத்தமாக இந்த டெஸ்டில் 9 விக்கெட்களை அள்ளிய சிராஜ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகன் விருதை 754 ரன்கள் குவித்த கில்லும் 481 ரன்கள் எடுத்த புரூக்கும் பெற்றுக்கொண்டனர். கோலி, ரோஹித், அஸ்வின் என பெரிய தலைகள் இல்லாத நிலையில், கேப்டன் பொறுப்பை ஏற்ற கில், இங்கிலாந்து மண்ணில் பேட்டராக மட்டுமின்றி கேப்டனாகவும் சாதித்துள்ளார். இந்திய அணி அணித் தேர்வு, வியூக வகுப்பில் நிறைய தவறுகளை செய்தாலும், இந்த தொடர் முழுக்கவே கடைசி வரை போராடிப் பார்ப்பது என்ற விடாப்பிடித்தனதுடன் விளையாடினர். இந்திய கிரிக்கெட்டின் உச்சபட்ச தருணங்களில் ஒன்றாக ஓவல் வெற்றி கொண்டாடப்படும். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp37y2x93veo
Checked
Mon, 09/29/2025 - 00:45
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed