1 month 3 weeks ago
விஎஸ் தவபாலன் Sstoroepndl999402aal7505i8a443t46 tm6tt594m0211hiihflut879m5 · பிரமாதம்... கிளிநொச்சியில் ஒரு பாடசாலையில் முதல் நாள் பாலர் வகுப்பில் ஆசிரியை: பிள்ளையின்ர பெயர் என்ன? மாணவி: பட்டு ரீச்சர் ஆசிரியை: பட்டு நீ படித்து என்னவாக வர ஆசைப்படுகிறாய்? டீச்சர், நான் நல்லா படிச்சு ஒரு பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்திற்கு தலைவியாக இருக்கனும் பெரிய பணக்காரியாக, ஒவ்வொரு நாட்டிலும் என் நிறுவனங்கள் இருக்கணும். எல்லா நாட்டிலையும் எனக்கு வீடு, resort இருக்கனும் விலை உயர்ந்த கார்கள் வாங்கனும். சொந்தமா விமானம், ஹெலிகொப்டர் இருக்கனும். விலை கூடின வைர நகைகள், உடுப்புகள் hand bags வைத்திருக்கனும் எனக்கு சேவகம் செய்ய எப்போதும் 100 வேலையாட்கள் இருக்கனும். மொத்தத்தில் பணத்திலும் புகழிலும் புரளனும் டீச்சர்: “போதும் போதும் லிஸ்ட் ரொம்ப நீளமா போயிட்டு இருக்கு பட்டு😂" பிள்ளைகளே இனிமே யாரும் இவளவு நீளமா பதில் சொல்லக்கூடாது. சுருக்கமா ஒரு வரியில தான் சொல்லவேணும் ok ஓகே… தம்பி சொல்லு…. நீ என்னவா வர ஆசைப்படுறாய்? மாணவன்: நான் பட்டுவிற்கு புருசனாய் வர ஆசைப்படுறன் ரீச்சர்😂"
1 month 3 weeks ago
Published By: Vishnu 01 Aug, 2025 | 10:58 PM அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைக்கவுள்ள கடிதத்தில் கையெழுத்திடுவது குறித்து வெள்ளிக்கிழமை (1) நடைபெறவுள்ள கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானத்தை அறிவிப்பதாக தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகள் கூறியிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்றை அனுப்புவதற்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் என்பன கடந்த வாரம் ஏகமனதாகத் தீர்மானம் மேற்கொண்டிருந்தன. அக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும், அதில் பங்கேற்பதில்லை என்று கட்சி தீர்மானித்திருப்பதாகப் பதிலளிக்கப்பட்டது. இருப்பினும் தாம் அனுப்பிவைக்கவுள்ள வரைபினைத் தயாரிக்கும் பணிகள் இவ்வாரத்துக்குள் நிறைவுசெய்யப்படும் எனவும், அவ்வரைபு தமிழரசுக்கட்சிக்கும் அனுப்பிவைக்கப்படும் எனவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் வெள்ளிக்கிழமை (1) கொழும்பிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுவிட்ஸர்லாந்து நாட்டின் தேசிய தின நிகழ்வைத் தொடர்ந்து, அதே ஹோட்டலிலேயே இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் (தமிழ்த்தேசிய பேரவை) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரும், தமிழ்த்தேசிய பேரவை சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் ஆகியோரும், சிவில் சமூகம் சார்பில் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் மற்றும் பி.என்.சிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள கடிதம் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்ததுடன் அவ்விடயங்களுடன் உடன்படும் பட்சத்தில் அதுபற்றி விரைவில் ஒரு முடிவை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலளித்த தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை (1) யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தில் இதுபற்றிக் கலந்துரையாடி தீர்மானமொன்றை அறிவிப்பதாகக் குறிப்பிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/221589
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
ஆழ்ந்த இரங்கல்கள்.
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
வித்தியாசமான சிரிப்புடன் நகைசுவை செய்பவர் . ...... ! ஆழ்ந்த இரங்கல்கள் ....... !
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
புதிய கல்வி சீர்திருத்தம் – பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம் அல்ல adminAugust 2, 2025 புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம் அல்ல, மாறாக அனைவரின் புரிதல், யோசனைகள் மற்றும் பரிந்துரைகளுடன் நேர்மறையான மாற்றங்களைச் செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு பொறுப்பு என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புதிய கல்வி சீர்திருத்தம் குறித்து வடக்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துவதற்காக இன்றைய தினம் சனிக்கிழமை வடக்கு மாகாண செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார். மேலும் தெரிவிக்கையில், புதிய கல்வி சீர்திருத்தத்தில், ஒரு மாகாணம், மாவட்டம் அல்லது பிராந்தியம் மட்டுமல்ல, ஒவ்வொரு மாகாணம், மாவட்டம் மற்றும் பிராந்தியமும் முக்கியமானது. சமத்துவம் அங்கிருந்து தொடங்குகிறது. நம் நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சம வாய்ப்புகளை வழங்க விரும்பினால், அனைத்து வளங்களையும் ஒரு பிராந்தியத்திற்கு, ஒரு மாவட்டத்திற்கு ஒதுக்க முடியாது. அது நியாயமாக விநியோகிக்கப்பட வேண்டும். அங்கு, கடினமான மற்றும் வளம் குறைவாக உள்ள பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். கடினமான பாடசாலைகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தீர்வுகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அனைத்து பாடசாலைகளிலும் டிஜிட்டல் வசதிகள், கற்றல் வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள், சுகாதார வசதிகள், தண்ணீர், விளையாட்டு மைதானங்கள், ஆய்வகங்கள், புதுமை இடங்கள் மற்றும் அழகியல் அலகுகள் வழங்கப்பட வேண்டும். அதற்கான நல்ல திட்டம் எங்களிடம் உள்ளது. அதற்காக, இந்த பொது விவாதத்தை நாங்கள் நடத்துகிறோம். ஏனெனில் இது கல்வி அமைச்சகம் அல்லது ஹரிணி அமரசூரிய அல்லது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சீர்திருத்தம் அல்ல. இது இலங்கையில் தேசிய கல்வியின் சீர்திருத்தம். நாம் அனைவரும் இதைப் பற்றி ஒரு யோசனை பெற வேண்டும். நாம் அனைவரும் இதில் ஈடுபட வேண்டும். கல்வி சீர்திருத்தம் பற்றிய உரையாடலை உருவாக்குங்கள். ஆசிரியர் சங்கங்களுடனும், நிபுணர்களுடனும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடனும் நாங்கள் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளோம். நாங்கள் தொடர்ந்தும் அவ்வாறு செய்வோம். பெற்றோர்கள் உட்பட சமூகத்தின் அனைத்துத் துறையினரும் இதில் ஈடுபட வேண்டும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார் https://globaltamilnews.net/2025/218729/
1 month 3 weeks ago
இவ்வளவு நாள படுத்துத் தூங்கி விட்டு இப்போது போகும் இலங்கை மனித குழு அங்கு போவதில் என்ன அதிரடி இருக்கிறது. ஒரு வேளை கதையை மாற்றி சங்கிலியன் காலத்து படுகொலைகள் என்று வரலாற்றை திரித்து எழுதப் போகிறார்களோ? முதலில் மனித உரிமைகள் ஆணைககுழு என்ற ஒன்று இலங்கையில் இருக்கிறதா?இசயத்தித் தலைப்பை பொறுப்புணர்வோடு இடவேண்டும். இந்திய ஊடகங்களின் தாக்கம். இப்போது நம்மவர்களின் டஊடகங்களில் கொஞ்சம் தூக்கலாகவே தெரிகிறது.
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
காத்தான்குடியின் இரண்டு பள்ளிவாசல்களில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 பேர் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதியுடன் சரியாக 35 வருடங்களாகின்றன. அன்றைய தினத்தை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஷுஹதாக்கள் தினமாக அனுஷ்டிக்கின்றனர். இதனை நினைவு கூரும் முகமாக காத்தான்குடியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இயக்கங்களுக்குமிடையிலான மூன்று தசாப்த போரில் இலங்கை முஸ்லிம்கள் சந்தித்த இழப்புகளின் உச்சபட்சமே இந்த பள்ளிவாசல் படுகொலையாகும். கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்பதே அன்று புலிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. இதன் காரணமாக காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை, ஏறாவூர் படுகொலை, அளிஞ்சிப்பொத்தானை படுகொலை, குருக்கள்மடம் கடத்தலும் படுகொலையும், பல்வேறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள், அவ்வப்போதான ஆட்கடத்தல்கள், கல்விமான்களை இலக்கு வைத்த படுகொலைகள் என அக் காலப்பகுதியில் ஆயுதம் தாங்கிய குழுக்களால் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டனர். இவ்வாறான வன்முறைகளால் சுமார் 7000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை முஸ்லிம்கள் இழந்துள்ளனர். இதன் காரணமாக இன்று கிழக்கு மாகாணத்தில் மிகவும் குறுகிய நிலப்பரப்புக்குள் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் மிக நெருக்கமாக வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இது பல்வேறு சுகாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கும் வழிவகுத்துள்ளது. இந்த நாட்டை பிரிவினையிலிருந்தும் பாதுகாப்பதற்காக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பாரிய விலையைக் கொடுத்துள்ளனர். வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்திலிருந்து எவ்வாறு விரட்டப்பட்டதன் மூலம் தமது வாழ்வையே தொலைத்தார்களோ அதேபோன்று கிழக்கு முஸ்லிம்களும் மேற்குறிப்பிட்ட வன்முறைகளால் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். இருப்பினும் இவற்றுக்கு இதுவரை குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தவித நஷ்டயீடுகளையோ நீதியையோ அவர்கள் பெறவில்லை என்பது கவலைக்குரியதாகும். கடந்த காலங்களில் சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது முஸ்லிம்களைத் தனித்தரப்பாக அங்கீகரிக்குமாறும் இழப்புகளுக்கு நஷ்டயீடு வழங்குமாறும் கோரிக்கைவிடுத்தும் அவை கவனத்திற் கொள்ளப்படவில்லை. இன்றும் கூட இது தொடர்பில் கிழக்கு முஸ்லிம்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் அவற்றுக்கு எவரும் உரிய பதிலளிப்பதாகத் தெரியவில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட கடந்த காலங்களில் கிழக்கு முஸ்லிம்களின் அவலங்களை வைத்தே அரசியல் செய்து அதிகாரங்களுக்கு வந்தனர். முஸ்லிம் தனித்துவக் கட்சிகள் அனைத்தும் முஸ்லிம்களின் இந்த இழப்புகளை சந்தைப்படுத்தியும் அவற்றுக்கு தீர்வு தருவதாகவும் கூறியே அரசியல் செய்தன. இன்றும் செய்து வருகின்றன. எனினும் மக்களுக்கு எந்தவித நீதியும் கிடைத்ததாக இல்லை. யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் குறித்து தற்போது பரவலாகப் பேசப்படுகிறது. தற்போது தோண்டப்பட்டுக் கொண்டிருக்கும் செம்மணியில் சுமார் 100 வரையான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இப் பகுதியில் அநியாயமாகக் கொன்று புதைக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. அதேபோன்றுதான் கிழக்கில் குருக்கள்மடம் பகுதியில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இடங்களும் தற்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கும் தற்போது நடைபெற்று வருகிறது. யுத்த காலத்தில் இவ்வாறு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற அநீதிகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் இதுவரை போதுமான கவனம் உள்நாட்டிலோ அல்லது சர்வதேச நீதிப் பொறிமுறைகளிலோ செலுத்தப்படவில்லை. எதிர்வரும் காலங்களிலாவது இதற்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான பொறிமுறைகள் நிறுவப்பட வேண்டும். யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள அப்பாவி மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். – Vidivelli https://www.vidivelli.lk/article/19832
1 month 3 weeks ago
நான் கடந்த மாதத்தில் நடந்த தூரம் 118.6 KM. இந்த ஆண்டு இன்று வரைக்கும் நடந்த தூரம்:1011 KM
1 month 3 weeks ago
எல்லாம் கண்துடைப்பாகவே முடியும். ஒன்று இனத்துவ அடிப்படையில் சிங்களத்தின் காவலனான ராஜபக்ஸ குடும்பத்தைக் காப்பாற்றாது விடமாட்டார்கள் அல்லது இனக்கலவரத்தைத் தூண்டி திசைதிருப்பிவிடுவார்கள். சிங்களத்தை தவறாகத் தமிழினம் தொடர்ந்து மதிப்பிடுவதன் பயனாகவே யாழில் சிங்களப் பெரும்பான்மைக் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். சிங்களம் புதிதாகச் சிந்தித்திருந்தால் ஒரு இராணுவத்தின் சாட்சியோடு உள்ள செம்மணியை வெளிக்கொண்டரும் செயற்பாட்டைப் பொறுப்போடு கையேற்று நடாத்தியிருக்கும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
1 month 3 weeks ago
ஆம், இப்படியாக அன்றாட வாழ்க்கையில் கட்டாயம் இயங்குவதை உடல் பயிற்சி ஆக்குவது, நேரமொதுக்கி உடற்பயிற்சி என்று ஈடுபடுவதில் உள்ள தெவிட்டல் அல்லது சலிப்பை குறைக்கும் அல்லது நீக்கி விடும். நான் செய்வது, வாராந்த மளிகை பொருட்கள் வாங்க செல்லும் போது, கடடையில் இருந்து அதிக தூரத்திலே வண்டியை தரிப்பது. காவு வண்டில் எடுப்பது இல்லை. மளிகை கடைக்குள் கூடையில் பொருட்களை காவுவது அதே போல வண்டிக்கும் மளிகை பொருட்களை காவி வந்தே ஏற்றுவது. (இது தான் இப்போது இங்கே gym களில் சொல்லப்படும் farmers walk, யாழ்ப்பாணத்தில் யுத்த நேரத்தில் எல்லாரும் செய்தது வாளியில் தண்ணி காவி). இவற்றுக்கு இயன்ற அளவு வேகமான நடை. என்ன 2 தரம் மளிகை பொருட்கள் வாங்க செல்ல வேண்டி வரலாம். அது பரவாயில்லை.
1 month 3 weeks ago
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாருடன், அவரது மகனும் தற்போதைய பதினோராவது நிர்வாக அதிகாரியுமான குமரேஷ் சயந்தன மாப்பாண முதலியார் படத்தில் காணப்படுகின்றார்கள். பட இணைப்பிற்கு நன்றி சுவியர்.
1 month 3 weeks ago
ராஜ பக்ஸ குடும்ப வலையமைப்பு மீது சர்வதேச விசாரணை தொடங்கப்படுள்ளதாக செய்திகள் கசிகின்றன. தந்தையார் ஈடு வைத்த வீட்டை மீட்க முடியாமல் பாராளுமன்ற உறுப்பினர்களே உதவி செய்து மீட்டுக்கொடுத்ததாகவும், மஹிந்த அரசியலில் இணைவதற்கு பணமின்மையால் பணிசெய்த இடத்தில் ஒரு வருட சம்பளத்தை கடனாகப் பெற்றே இணைந்ததாகவும் இவரது முன்னைய வரலாறு கூறப்படுகிறது. அப்படிப்பட்டவர்களிடம் கோடிகளில் பணம், வெளிநாடுகளில் முதலீடு எப்படி வந்தது? இவர்களது ஆட்சிக்காலத்தில் ஏழை சிங்கள இளைஞர்களை பலிகொடுத்து, மக்களை ஏமாற்றி சேர்த்த சொத்து. இப்போ இவை எல்லாம் வெளிவரும் நிலையில் நாமல் ஒருபுறம், கட்சி உறுப்பினர் மறுபுறம் எச்சரிக்கை விடுகிறார்கள். பொறுத்திருந்து பாப்போம் எப்போ பூதம் வெளிக்கிளம்புதென்று. அதற்கு முதல் இவர்களை காப்பாற்றும் பரிவாரங்களை கைது செய்து இவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
ஊடங்களின் உசுப்பேத்தும் செய்தித் தலைப்புகளும், தமிழும் படும்பாடானது 21ஆம் நூற்றாண்டின் கொடுமை. திருந்தவேமாட்டார்கள் போலுள்ளது. ஆதவன் நியூசுக்கு என்ன அதிரடி இருக்குதோ!
Checked
Sun, 09/28/2025 - 21:43
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed