1 month 2 weeks ago
ஐக்கிய நாடுகள் சபையின் 31 அமைப்புகளில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா : ட்ரம்ப்பின் அதிரடி உத்தரவு 08 January 2026 அமெரிக்காவின் தேசிய நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறி, ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பிரிவுகள் உட்பட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா உடனடியாக வெளியேறுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்பினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, அமெரிக்கா பின்வரும் அமைப்புகளில் இருந்து விலகுகிறது. 1. ஐநா சார்ந்த அமைப்புகள்: ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு (UN Women), ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) உள்ளிட்ட 31 ஐ.நா அமைப்புகள். 2. ஏனைய சர்வதேச அமைப்புகள்: சர்வதேச சூரியசக்தி கூட்டணி (International Solar Alliance), கொழும்புத் திட்டம் (Colombo Plan) உள்ளிட்ட 35 ஐ.நா அல்லாத அமைப்புகள். அமெரிக்க வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுவதாகவும், இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் "அமெரிக்கா முதலில்" (America First) என்ற கொள்கைக்கும் தேசிய நலனுக்கும் முரணாக இருப்பதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, சர்வதேச நிதியுதவிகள் அமெரிக்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமைவதை அனுமதிக்க முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த முடிவினால் சர்வதேச அளவில் சுகாதாரம், கல்வி, மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களுக்கு அமெரிக்கா வழங்கி வந்த பெருமளவிலான நிதியுதவி நிறுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, இலங்கையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கொழும்புத் திட்டம் (Colombo Plan) போன்ற அமைப்புகளில் அமெரிக்காவின் விலகல் ஆசிய பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. The White HouseWithdrawing the United States from International Organiza...MEMORANDUM FOR THE HEADS OF EXECUTIVE DEPARTMENTS AND AGENCIES By the authority vested in me as President by the Constitution and the laws of the Unitedhttps://hirunews.lk/tm/439619/us-withdraws-from-31-united-nations-organizations-trumps-executive-order
1 month 2 weeks ago
A/L மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு செய்திகள் அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பரீட்சைகள் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். நாடு முழுவதும் 2,086 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ள நிலையில், பரீட்சை பணிகளை ஒருங்கிணைக்க 325 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்கள் செயற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, 32 பிராந்திய சேகரிப்பு மத்திய நிலையங்கள் செயற்படுவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்தது. https://adaderanatamil.lk/news/cmk51j25903oeo29n1u0yaaca
1 month 2 weeks ago
காயங்களுடன் நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட மதுரோவின் மனைவி சிலியா புளோரஸ்! adminJanuary 7, 2026 வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் அமெரிக்க சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இந்த நிகழ்வு உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலியாவின் வழக்கறிஞர் மார்க் டோனெல்லி (Mark Donnelly), கைது நடவடிக்கையின் போது (Abduction) தனது கட்சிக்காரருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். குறிப்பாக, அவரது விலா எலும்பு (Rib) முறிந்திருக்கலாம் அல்லது பலத்த சேதமடைந்திருக்கலாம் என அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். அவருக்கு உடனடியாக எக்ஸ்ரே (X-ray) மற்றும் முழுமையான மருத்துவப் பரிசோதனைகள் வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரோ மற்றும் சிலியா மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இருப்பினும், தாங்கள் நிரபராதிகள் என இருவரும் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர். மதுரோ தன்னை ஒரு “போர்க்கைதி” (Prisoner of War) என்று அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் சர்வதேச அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. அடுத்தக்கட்ட விசாரணை மார்ச் 17-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/225910/
1 month 2 weeks ago
பயனாளிகளின் வங்கிக்கணக்கிற்கு பகுதி பகுதியாக பணத்தை வேலைகள் முடிய முடிய வைப்புச் செய்யும்படி காரைநகர் பிரதேச செயலக திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்திருந்தார். அவர்களுடைய தொழிநுட்ப உத்தியோகத்தர் கையெழுத்து போட்டு வங்கியில் மீள எடுக்கும் சீட்டு வழங்கினால் மட்டுமே பணம் வங்கியில் எடுக்கலாம். முதலாவது வேண்டுகோள் கடிதம் வட்டு தெற்கு, வட்டுக்கோட்டை யா/165 நாகன் பரராசசிங்கம் ஐயாவின் மலசல கூடம் பூரணப்படுத்த 150000 ரூபா தேவைப்படுகிறது. அவருடைய படங்கள், குறுங்காணொளிகள் குமாரசாமி அண்ணைக்கு அனுப்பிவிட்டேன். விரைவில் அந்தப் பணிகள் நடைபெறும் என நம்புகிறேன். பொன்னாலை விசேட தேவையுடைய சகோதரர்களின் பணியை அடுத்ததாக செய்வோம். அவர்களுடைய மலசல கூடக் குழி பெரிதாக நீளமாக இருப்பதாக பிளம்பிங் வேலை செய்யும் தம்பி குறிப்பிட்டார். அதனுடைய பிளாற் புதிதாக அமைக்க வேண்டும். கூரைப் பிளாற் வெடித்துள்ளதாகவும் தண்ணீர் தாங்கியை மேலே வைப்பது பாதுகாப்பு இல்லை என்றும் கூறினார்கள். முதலில் அவசரத் தேவையை நிறைவேற்றுகிறோம். தண்ணீர் தாங்கியை ஒரு ஸ்ராண்டில் வைப்போம் என தெரிவித்துள்ளேன்.
1 month 2 weeks ago
யாழில். கைதான இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு Published By: Vishnu 08 Jan, 2026 | 02:15 AM இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 27ஆம் , 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் கைதாகி இருந்தனர். கைதான மீனவர்கள் இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் , புதன்கிழமை (7) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 23 பேரினதும் விளக்கமறியலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் மன்று நீடித்துள்ளது. https://www.virakesari.lk/article/235484
1 month 2 weeks ago
கவனிப்பாரற்றிருந்த நிலாவரை கிணறு துப்புரவு adminJanuary 8, 2026 யாழ்ப்பாணம் நிலாவரை ஆழமற்ற கிணற்றுப் பகுதி அண்மைய நாட்களில் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் துப்புரவு செய்யப்பட்டுள்ளது. தொன்மை வாய்ந்த நிலாவரை கிணற்றுப் பிரதேசம் கழிவுகளாலும் பற்றைகளாலும் சூழப்பட்டிருந்த நிலையில், நேற்று புதன்கிழமை (ஜனவரி 7, 2026) விசேட தூய்மிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நிலாவரை பகுதி மிகவும் தூய்மையற்றதாகக் காணப்படுவதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து, பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் துப்புரவுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. உடைந்திருந்த பார்வையாளர் இருக்கைகள் மற்றும் நுழைவாயில் கதவுகள் திருத்தப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டன. பொலித்தீன் பாவனைக்குத் தடை விதிக்கப்பட்டு, சுத்தத்தைப் பேணுவதற்கான அறிவுறுத்தல் பலகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நீண்டகாலமாக பிரதேச சபையின் பராமரிப்பில் இருந்த இப்பகுதியில், 2021-2023 காலப்பகுதியில் தொல்லியல் திணைக்களம் விகாரை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தடுத்த தவிசாளர் நிரோஷ் மீது நீதிமன்றில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. தொல்லியல் திணைக்களத்தின் தலையீடுகள் மற்றும் கட்டண அறவீட்டுத் தடைகள் காரணமாக, கடந்த காலங்களில் சபையினால் இப்பகுதியைச் சீராகப் பராமரிக்க முடியாத சூழல் நிலவியமை குறிப்பிடத்தக்கது. தற்போது இப்பகுதி மக்கள் முகம் சுளிக்காத வகையில் சுத்தப்படுத்தப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்களின் தொன்மையைப் பறைசாற்றும் வகையில் மீண்டும் ஒரு சுற்றுலாத் தளமாகப் பேணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://globaltamilnews.net/2026/225914/
1 month 2 weeks ago
கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு விவகாரத்தில் பொய்யுரைத்த இராணுவம்; ஜனாதிபதி முன்னிலையில் உண்மையை உடைத்தார் - ரவிகரன் எம்.பி Published By: Vishnu 08 Jan, 2026 | 02:13 AM முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், விடுவிக்கப்படாத காணிகளுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்பட்டதுடன், வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகளால் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இராணுவத்தின் குறித்த பொய்யான தகவலுக்கு எதிர்ப்புத்தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேப்பாப்புலவில் 55பேருக்குரிய 59.5ஏக்கர் காணிகளும் 4பேருக்குரிய 100ஏக்கர் மத்தியவகுப்புக்காணிகளுமாக மொத்தம் 59பேருக்குரிய 159.5ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கேப்பாப்புலவில் விடுவிக்கப்படவேண்டியுள்ளதாக ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் புதன்கிழமை (07) பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், பாராளுமன்றில் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் பிற்பகல் புதன்கிழமை (07) 04.00மணியளவில் பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது. அந்தவகையில் இக்கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அனுர குமாரதிசாநாயக்க, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் வருகைதந்திருந்தனர். அத்தோடு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள், அதிகாரிகளும் வருகைதந்திருந்தனர். அந்தவகையில் முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணி விடுவிப்புத் தொடர்பில் பேசப்பட்டது. குறித்த கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விடயத்தில் 44பேருக்குத்தான் காணிகள் விடுவிக்கவேண்டியிருந்ததாகவும், அதில் பெரும்பாலானவர்களின் காணிகள் விடுவிப்புச் செய்யப்பட்டுவிட்டதாகவும், இன்னும் குறிப்பிட்டளவானவர்களுக்கே கணிகள் விடுவிக்கவேண்டியுள்ளதாகவும் இதன்போது குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த சில அதிகாரிகளால் உண்மைக்குப்புறம்பான தகவல்கள் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தன. இந்நிலையில் குறுக்கீடு செய்து அதிகாலிகளால் வழங்கப்படுகின்ற்தகவல்கள் தவறானவை என்பதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன். கேப்பாப்பிலவில் ஏற்கனவே இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருந்த மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டிலுக்கின்றன. எனினும் 55பேருக்குரிய 59.5ஏக்கர் காணிகளும், 4பேருக்குரிய 100ஏக்கர் மத்தியவகுப்புக் காணிகளும் இராணுவத்தினரால் இன்னும் விடுவிக்கப்படவேண்டியுள்ளது என்பதை இதன்போது சுட்டிக்காட்டினேன். இதன்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளுக்கு பதிலாக பதிலீட்டுக்காணிகள் மக்களுக்கு வழங்கப்பட்டதுடன், வீடுகளும் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்துந்தும் இராணுவத்தினரால் உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் பிழையான தகவல்களை வழங்கிக்கொண்டிருக்கின்றனர் என்பதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தேன். அத்தோடு மக்களுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்படவில்லை. சீனியாமோட்டை என்னுமிடத்தில் சிறிய காணித் துண்டுகளில் தற்காலிகமாக வீடுகள் அமைத்து கேப்பாப்புலவு மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்ற விடயத்தினையும் ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தினேன். அதேவேளை முறையற்ற விதத்திலேயே மக்களுக்கு அங்கு வீடுகள் அமைக்கப்பட்டு கேப்பாப்புலவு மக்கள் தற்காலிகமாக அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்ற விடயத்தினையும் இதன்போது சுட்டிக்காட்டினேன். எதிர்காலத்தில் இராணுவத்தினர் காணிகளை விடுவித்த பிற்பாடு சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவீர்கள், அதுவரை சீனியாமோட்டைப்பகுதியில் தற்காலிகமாகவே குடியேற்றப்படுகின்றீர்கள் என்ற அரச அதிகாரிகளின் வாக்குறுதிக்கமையவே மக்கள் அங்கு தற்காலிகமாக குடியேறித் தங்கியுள்ளனர் என்ற விடயத்தினையும் இதன்போது வெளிப்படுத்தியிருந்தேன். இந்நிலையில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமது பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்படுமென்ற நம்பிக்கையுடனேயே கேப்பாப்புலவு மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்ற விடயத்தினையும் இதன்போது ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியிருந்தேன். இந்த கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு தொடர்பான உண்மையான விபரங்களை முல்லைத்தீவு மாவட்ட செயலரிடமிருந்தும், கரைதுறைப்பற்று பிரதேசசெயலரிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில் இராணுவத்தளபதியிடம் குறித்த கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு விடயம் தொடர்பான ஒரு அறிக்கையினை தமக்கு தருமாறு ஜனாதிபதி கோரியிருந்தார். இதுதொடர்பில் நானும்முல்லைத்தீவு மாவட்டசெயலாளருடனும், கரைதுறைப்பற்று பிரதேசசெயலருடனும் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் - என்றார். https://www.virakesari.lk/article/235483
1 month 2 weeks ago
அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு மற்றும் புதிய வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 09 முதல் – ஜனாதிபதி Published By: Vishnu 08 Jan, 2026 | 01:58 AM அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்கும் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 9 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 10 ஆவது பாராளுமன்றத்தின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம் புதன்கிழமை (07) பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசின் செயற்திட்டத்தின் தற்போதைய நிலைமை மற்றும் மீள்குடியேற்றம் மற்றும் பயிற்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்கும் செயற்பாடு குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டது. துல்லியமான தரவுகள் மற்றும் உண்மையான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் என்பவற்றுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்காக செயல்படுத்தப்படும் கடன் திட்டம் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. வங்கிகளுடன் கலந்தாலோசித்து அந்தக் கடனைப் பெறுவது குறித்து வர்த்தக சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தின் அவசியம் குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அத்தோடு, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் ஒவ்வொரு வர்த்தகத்தையும் பதிவு செய்வதற்கான ஒரு பொறிமுறையின் அவசியத்தையும், அதன் நன்மைகள் குறித்து வர்த்தக சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார். மேலும், அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பதிவு செய்யப்படாத சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும், இது தொடர்பாக அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செயற்திறனுடன் செலவிட வேண்டியதன் அவசியத்தையும், இல்லையெனில் உரிய காலப்பகுதிக்குள் எதிர்பார்க்கும் அபிவிருத்தி நோக்கங்களை அடைய முடியாது போகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் அன்றாட வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புகையில் முன்பிருந்த நிலையை விட, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் , நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம், பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/235482
1 month 2 weeks ago
ஆரோக்கியமான மனநிலை மற்றும் ஆரோக்கியமான உடலைக் கொண்ட ஒரு பிள்ளையை வளர்ப்பதே எமது தேசிய இலக்காகும் - சரோஜா சாவித்ரி போல்ராஜ் Published By: Vishnu 08 Jan, 2026 | 01:53 AM “தேசிய ரீதியில் தரப்படுத்தப்பட்ட ஒரு சட்டகத்தின் வழிகாட்டலில், இலங்கையிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் சமமான வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தித் திட்டத்தை (Early Childhood Development programme) நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.” முன்பிள்ளைப்பருவ சிறுவர்களிடையே சமூக மற்றும் நடத்தை ரீதியான வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சிறுவர் சுகாதார மேம்பாட்டுத் தொடர்பாடல் நிகழ்ச்சித்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, புதன்கிழமை (07) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இத்திட்டம் 'தூய்மையான இலங்கை' (Clean Sri Lanka) நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ், தேசிய முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் தலைமையின் கீழ், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளிட்ட 12 அமைச்சுகளின் கூட்டுப் பங்களிப்புடன் இது முன்னெடுக்கப்படுகிறது. இத்திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழா கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில், ஜனவரி 10ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, செயற்பாடுசார் கற்றல் அணுகுமுறை (Activity-based learning) மற்றும் கற்றலுக்கு அத்தியாவசியமான கருவிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம் சிறுவர்களிடையே ஒத்துணர்வு (Empathy) மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல், ஒழுக்க மேம்பாடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள், தகவல் தொடர்புத் திறன்களை மேம்படுத்துதல் போன்ற பண்புகளை வளர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷண, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (தூய்மையான இலங்கை) பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஷ்வர, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (பாடவிதான ஒருங்கிணைப்பு மற்றும் ஆரம்பக் கல்வி அபிவிருத்தி) திருமதி உதார திக்கும்புர மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் பத்துவந்துடாவ ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/235481
1 month 2 weeks ago
5ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 119 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை Published By: Vishnu 07 Jan, 2026 | 10:04 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 5ஆவதும் இறுதியுமான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க இங்கிலாந்து 119 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது. ஜேக்கப் பெத்தெல் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி குவித்த கன்னி சதத்தின் பலனாக இங்கிலாந்து நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்களை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. போட்டியின் நான்காம் நாளான புதன்கிழமை (7) காலை தனது முதலாவது இன்னிங்ஸை 7 விக்கெட்கள் இழப்புக்கு 518 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா 567 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது கடைசி விக்கெட்டை இழந்தது. 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 128 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்த ஸ்டீவன் ஸ்மித் நான்காம் நாள் மேலும் 10 ஓட்டங்களைப் பெற்று 138 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதேவேளை 42 ஓட்டங்களிலிருந்து தனது துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த போ வெப்ஸ்டர் 71 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவர்கள் இருவரும் 8ஆவது விக்கெட்டில் 107 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பந்துவீச்சில் ஜொஷ் டங் 97 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றைடன் கார்ஸ் 130 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பென் ஸ்டோக்ஸ் 95 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 183 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்களை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பொறுமையுடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடிய ஜேக்கப் பெத்தல் 2ஆவது விக்கெட்டில் பென் டக்கெட்டுடன் 81 ஓட்டங்களையும் 4 விக்கெட்டில் ஹெரி ப்றூக்குடன் 102 ஓட்டங்களையும் 6ஆவது விக்கெட்டில் ஜெமி ஸ்மித்துடன் 45 ஓட்டங்களையும் பகிர்ந்து இங்கிலாந்துக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தார். பென் டக்கெட், ஹெரி ப்றூக் ஆகிய இருவரும் தலா 42 ஓட்டங்களையும் ஜெமி ஸ்மித் 26 ஓட்டங்களையும் பெற்றனர். ஜேக்கப் பெத்தல் 232 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள் உட்பட 142 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் போ வெப்ஸ்டர் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஸ்கொட் போலண்ட் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். நாளை போட்டியின் கடைசி நாளாகும். https://www.virakesari.lk/article/235479
1 month 2 weeks ago
ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து இலங்கைக்கு 8 மில்லியன் யூரோ மானியம் - பசுமை பொருளாதார வளர்ச்சி செயற்திட்டத்துக்கான இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து 07 Jan, 2026 | 06:41 PM (நா.தனுஜா) 'நிலையான விவசாய நடைமுறைகள் மூலம் பசுமை பொருளாதார வளர்ச்சி' எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு 8 மில்லியன் யூரோ மானியத்தை வழங்கும் ஒப்பந்தத்தில் அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் கைச்சாத்திட்டுள்ளன. மேற்படி ஒப்பந்தத்தின் பிரகாரம் தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்ச, இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் என்பன கூட்டிணைந்து உருவாக்கிய இத்திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் 8 மில்லியன் யூரோ மானியத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நிலையான உற்பத்தி மற்றும் நுகர்வு நடைமுறைகளையும், உணவுப்பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் மாற்றத்தையும் ஊக்குவிப்பதே இம்முயற்சியின் பிரதான நோக்கமாகும். அத்தோடு இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீது விசேட கவனம் செலுத்தி, இறப்பர் பயிர்ச்செய்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி வகைகளில் நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு நேயமான விவசாய நடைமுறைகளுக்கு மாறுவதும் இதன் இலக்காகும். அதன்படி இந்த இருதரப்பு ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ஜோஹன் எச்.ஹெஸ்ஸும் புதன்கிழமை (07) கைச்சாத்திட்டனர். இதுபற்றிக் கருத்து வெளியிட்ட நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, இச்செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியிருக்கும் ஆதரவுக்கு அரசாங்கத்தின் சார்பில் நன்றியை வெளிப்படுத்தினார். அதுமாத்திரமன்றி இச்செயற்திட்டமானது இலங்கையின் நிலையான வளர்ச்சி தொடர்பான நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்புடையவாறு அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 'இந்த ஒப்பந்தம் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகாலக் கூட்டாண்மைக்கு ஒரு சான்றாகும். பசுமை பொருளாதார வளர்ச்சி, நிலையான நுகர்வு, உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உணவுப்பாதுகாப்புக்கான நமது பரஸ்பர உறுதிப்பாட்டில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்' எனவும் அவர் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/235473
1 month 2 weeks ago
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்! 08 Jan, 2026 | 08:39 AM 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதமும் லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை. நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/235492
1 month 2 weeks ago
அதிகார வெற்றிடம் (Power Vacuum) என்பது ஒரு கூட்டு பிரச்சினையாக உருவாவதன் தாக்கம். அவுஸ்ரேலியாவில் இந்த நிகழ்வின் பின்னணி.
1 month 2 weeks ago
அருஸ், நிராஜ் டேவிட் ஆகியோர்களின் காணொளி பார்ப்பதுண்டு (முழுமையாக அல்ல பகுதி பகுதியாக), நேற்று வேலையில் ஒரு இந்திய நண்பர் கூறினார் அமெரிக்க வெனிசுலா ஆக்கிரமிப்பிற்கு காரணம் என அவர் பார்த்த ஒரு யுரியுப் காணொளியில் யாரோ அமெரிக்க மத்திய வங்கி வெள்ளியினை சந்தையில் விற்றிருந்ததாக (short silver) தற்போது வெள்ளி விலை அதிகரித்ததால் அமெரிக்க மத்திய வங்கி மாட்டிக்கொண்டுள்ளது அதனால் வெனிசுலாவில் பெருமளவில் வெள்ளி இருந்ததால்தான் அமெரிக்கா வெனிசுலாவினை தாக்கியதாக கூறினார், அதற்கு அவர் கூறியது Hedge எனும் பதம். முதலில் மத்திய வங்கி இவ்வாறு வெள்ளியினை விற்று வாங்குவதில்லை என நினைக்கிறேன் என கூறி Hedge செய்வதன் நோக்கமே சந்தை செயற்பாடுகளால் ஏற்படும் விலை மாற்ற நட்டத்தினை ஈடு செய்வது, அத்துடன் சந்தையில் செய்யப்படும் வியாபரத்தினை (Silver Contracts) உண்மையான வெள்ளியினூடாக மாற்று செய்ய முடியாது என கூறியிருந்தேன். தங்கம் வெள்ளி போன்ற commodity விலை அதிகரிப்பதற்கு காரணம் liquidity injection, எனது வேலை நண்பர் தவறாக புரிந்து கொண்டாரா அல்லது அந்த காணொளியில் தவறாக கூறினார்களோ தெரியவில்லை. இந்த காணொளிகள் பெரும்பாலும் ஒரு வாசகர் ஈர்ப்பிற்காக பயன்படுத்தப்படுவதால் அதில் விடயங்கள் பெரிதாக இருக்காதுதான்.
1 month 2 weeks ago
S THEVAKUMARAN A/C:- 300131108781 National Savings Bank Chankanai Branch Swift Code:- NSBALKLX உறவுகளே, மேலே உள்ளது "முன்னோடி - அடிப்படை சுகாதார வசதித்திட்டம் 2026" மட்டும் பயன்படுத்தும் வங்கிக் கணக்கு. உங்களிடம் (யாழில்) தகவல் தெரிவிக்காமல் ஒரு ரூபா பணமும் செலவளிக்கப்படமாட்டாது. பணம் அனுப்பினால் தகவல் தாருங்கள். நீங்கள் விரும்புகின்ற வகையில் யாழ் புனைபெயர்/ பெயர் குறிப்பிட விருப்பமில்லை/ சொந்தப்பெயர் தகவலைப் பகிர்வோம். என்னுடைய தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் +94 77 959 1047, பொதுவானது +94 77 777 5448.(வட்சப், வைபர்)
1 month 2 weeks ago
எப்போதும் வெறுமை வெறுமையாக இருக்காது, தற்போது ரொய்டர்ஸ் செய்தி வழங்கல் வெற்றிடம் எவ்வாறு ஈடுகட்டப்படுகிறது என கூறுகிறது, இது சொல்லாத செய்தி இதனூடாக அதிகார வெற்றிடம் மட்டும் நிரப்பப்படவில்லை மேலதிகமான விளைவுகளை உருவாக்கியுள்ளது. இது ஒன்றும் அமெரிக்காவிற்கு புதியதல்ல. பொதுவாக சீன வழங்கல் பாதை பன்முகத்தன்மை கொண்டது, தற்போது அது ஈரானை நோக்கி குவிக்க வைக்கின்ற செயலை செய்தது ஈரானின் இராஜதந்திர வெளியுறவுக்கொள்கை அல்ல அதன் எதிரி அமெரிக்காவே. இதனைத்தான் கடந்தகால வரலாற்றுத்தவறுகளில் இருந்து பாடம் கற்காத அமெரிக்கா என குறிப்பிட்டேன். எனது கருத்து தவறாக இருக்குமோ என கருதுகிறேன், இது ஒரு அமெரிக்காவின் கையறு நிலையாக இருக்குமோ என கருதுகிறேன். இந்த வெனிசுலா நடவடிக்கை பல மோசமான தெரிவுகளில் ஒரு ஓரளவு மோசமான தெரிவாக அமெரிக்காவிற்கு உள்ளதா? இது ஒரு ஆரம்பம் மட்டுமே பல கூட்டு விளைவுகளின் விளைவினை இனிமேல்தான் எதிர்கொள்ளவேண்டும்.
1 month 2 weeks ago
சீன சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெனிசுலா எண்ணெயை ஈரானிய கச்சா எண்ணெயுடன் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். சியி லியு மற்றும் புளோரன்ஸ் டான் ஆகியோரால் ஜனவரி 8, 2026 காலை 11:00 GMT+11 5 மணிநேரத்திற்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 11, 2017 அன்று சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள டோங்கிங்கில் ஷான்டாங் ஹைக் குழுமத்திற்குள் ஒரு காட்சி காணப்படுகிறது. REUTERS/Aizhu Chen/கோப்பு புகைப்படம் கொள்முதல் உரிம உரிமைகள், புதிய தாவலைத் திறக்கிறது சுருக்கம் வெனிசுலா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்பும் ஒப்பந்தம் எண்ணெய் ஓட்டத்தை திசைதிருப்பும். சீன சுத்திகரிப்பு ஆலைகளால் பயன்படுத்தப்படும் வெனிசுலா எண்ணெய், குறுகிய கால தேவையை ஈடுகட்டுகிறது சீன சுயேச்சைகள் அனுமதிக்கப்பட்ட பிற எண்ணெயைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்த வாரம் சீன வாங்குபவர்களிடமிருந்து வெனிசுலா மெரே கச்சா எண்ணெயுக்கான சலுகைகள் அதிகரித்துள்ளன. சிங்கப்பூர், ஜனவரி 7 (ராய்ட்டர்ஸ்) - அமெரிக்கா நாட்டின் அதிபரை பதவி நீக்கம் செய்ததிலிருந்து நிறுத்தப்பட்ட வெனிசுலா ஏற்றுமதிகளுக்குப் பதிலாக, சீன சுயாதீன சுத்திகரிப்பு நிறுவனங்கள் வரும் மாதங்களில் ஈரான் உள்ளிட்ட மூலங்களிலிருந்து கனரக கச்சா எண்ணெயை வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வர்த்தகர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். வார இறுதியில் அமெரிக்கப் படைகள் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைப்பற்றிய பின்னர், கராகஸ் மற்றும் வாஷிங்டன் அமெரிக்காவிற்கு 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள வெனிசுலா கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்டதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று தெரிவித்தார். ராய்ட்டர்ஸ் பவர் அப் செய்திமடல் உலகளாவிய எரிசக்தி துறை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் வழங்குகிறது. இங்கே பதிவு செய்யவும் . அந்த ஏற்பாடு சீனாவிற்கான வெனிசுலா விநியோகத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர், இது டீபாட்கள் எனப்படும் சுயாதீன சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மலிவான எண்ணெய் ஆதாரத்தைக் குறைக்கிறது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளர் ரஷ்யா, ஈரான் மற்றும் வெனிசுலாவிலிருந்து தள்ளுபடி செய்யப்பட்ட அனுமதிக்கப்பட்ட எண்ணெயை வாங்குபவராகும். ஏராளமான ரஷ்ய, ஈரானிய விநியோகம் "வெனிசுலா நாடகம் சீனாவின் சுயாதீன சுத்திகரிப்பு நிலையங்களை கடுமையாக பாதிக்கிறது, ஏனெனில் அவை தள்ளுபடி செய்யப்பட்ட கனரக பீப்பாய்களுக்கான அணுகலை இழக்கக்கூடும்" என்று ஸ்பார்டா கமாடிட்டிஸ் ஆய்வாளர் ஜூன் கோ கூறினார். "இருப்பினும், ரஷ்ய மற்றும் ஈரானிய மூலப்பொருட்கள் ஏராளமாக கிடைப்பதாலும், வெனிசுலா பீப்பாய்கள் தண்ணீரில் இருப்பதாலும், பொருளாதாரம் அவர்களுக்குப் புரியாததால், தேநீர் தொட்டிகள் அனுமதிக்கப்படாத பீப்பாய்களுக்கு ஏலம் எடுக்க வேண்டியிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை," என்று அவர் கூறினார். 2025 ஆம் ஆண்டில் சீனா ஒரு நாளைக்கு 389,000 பீப்பாய்கள் வெனிசுலா எண்ணெயை இறக்குமதி செய்தது, இது அதன் மொத்த கடல்வழி கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 4% என்று கெப்லர் தரவு காட்டுகிறது. டிசம்பரில் ஏற்றப்பட்ட குறைந்தது ஒரு டஜன் அனுமதிக்கப்பட்ட கப்பல்கள் ஜனவரி தொடக்கத்தில் சுமார் 12 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளை ஏற்றிக்கொண்டு வெனிசுலா கடற்பரப்பை விட்டு வெளியேறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், ஜனவரி 1 முதல் வெனிசுலாவின் முக்கிய துறைமுகங்களில் ஆசியாவிற்கான ஏற்றுதல் நிறுத்தப்பட்டுள்ளதாக கப்பல் தரவு காட்டுகிறது. விநியோகம் இறுக்கமடைந்ததால், உடனடி விநியோகத்திற்காக வெனிசுலாவின் மெரே கச்சா எண்ணெய் விற்பனையாளர்கள், கடந்த மாதம் ஐசிஇ பிரெண்டிற்கு பீப்பாய்க்கு சுமார் $10 தள்ளுபடியில் சரக்குகளை வழங்கியதாக ஒரு வர்த்தகர் கூறினார், இருப்பினும் வர்த்தகம் ஸ்தம்பித்துள்ளது. மற்றொரு வர்த்தகர், ஒரு பீப்பாய்க்கு மைனஸ் $11 விலையில் சலுகைகள் இருப்பதாகக் கூறினார். மிதக்கும் சேமிப்பு 75 நாட்கள் நீடிக்கும். ஆசியாவில் உள்ள கப்பல்களில் வெனிசுலாவின் கச்சா எண்ணெய் சுமார் 75 நாட்கள் சீன தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக உள்ளது, இதனால் மாற்று வழிகளுக்கான உடனடி முன்னேற்றம் கட்டுப்படுத்தப்படுகிறது என்று கெப்ளர் மூத்த ஆய்வாளர் சூ முயு கூறினார். வெனிசுலா எண்ணெயைப் பயன்படுத்தும் டீபாட்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ரஷ்ய மற்றும் ஈரானிய விநியோகத்திற்கு மாற வாய்ப்புள்ளது, மேலும் சீனா கனடா, பிரேசில், ஈராக் மற்றும் கொலம்பியா போன்ற தடையற்ற ஆதாரங்களையும் பயன்படுத்தலாம் என்று அவர் கூறினார். வாங்குபவர்கள் இன்னும் மாற்று வழிகளைத் தேடத் தொடங்கவில்லை என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தன, ஈரானிய ஹெவி கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு சுமார் $10 தள்ளுபடியில் ICE பிரெண்டிற்கு பதிலாக போதுமான விநியோகத்தில் உள்ளது, இது மலிவான மாற்றாகும். ஈராக்கிய பஸ்ரா போன்ற மத்திய கிழக்கு வகைகளையும் தேநீர் தொட்டிகள் கருத்தில் கொள்ளலாம் என்று சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் கூறினார். இதற்கிடையில், டிரான்ஸ் மவுண்டன் பைப்லைனில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கோல்ட் லேக் மற்றும் அக்சஸ் வெஸ்டர்ன் பிளெண்ட் போன்ற கனேடிய கச்சா எண்ணெய்க்கான தள்ளுபடிகள் இந்த வாரம் $2 க்கும் அதிகமாக அதிகரித்து, ஏப்ரல் மாதம் சீனாவிற்கு டெலிவரி செய்யப்படும் ICE பிரெண்டிற்கு ஒரு பீப்பாய்க்கு $4-$5 ஆக உயர்ந்துள்ளது, ஏனெனில் அமெரிக்காவின் தேவை குறையும் என்ற எதிர்பார்ப்புடன், வர்த்தகர்கள் தெரிவித்தனர். சிங்கப்பூரில் சியி லியு மற்றும் புளோரன்ஸ் டான் ஆகியோரால் அறிக்கையிடப்பட்டது; டோனி மன்ரோ மற்றும் எலைன் ஹார்ட்கேஸில் ஆகியோரால் திருத்துதல். https://www.reuters.com/business/energy/chinese-refiners-expected-replace-venezuelan-oil-with-iranian-crude-traders-say-2026-01-07/
1 month 2 weeks ago
ஆமா, இந்த மேதாவித்தனமெல்லாம் நாடுகள் சந்தர்ப்பம் பார்த்துத்தான் வெளிவருமா? கண்ணுக்கு முன்னுக்கு இந்தக்கொடூரங்கள் நடைபெறும்போது ஏன் அந்த மௌனம்?
1 month 2 weeks ago
இணைப்பிற்கு நன்றி
1 month 2 weeks ago
மீள யோசித்ததில்: சிலவேளை யார் எவ்வளவு அனுப்புகிறார் என்ற விபரம் - ஒப்பீட்டளவில் குறைந்த தொகை அனுப்புவோரை சங்கடபடுத்தலாம். அதனால் அவர்கள் பங்களிக்காமலே விடலாம். எனவே எந்த முடிவும் எனக்கு சமனே.
Checked
Thu, 02/26/2026 - 04:46
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed