புதிய பதிவுகள்2

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” ”போலி வாக்காளர்கள், முகவரிகள், புகைப்படங்கள்: வாக்குத் திருட்டு புகார் குறித்து ஆதாரங்களுடன் ராகுல் விளக்கம்

1 month 2 weeks ago
போலி வாக்காளர் சர்ச்சை: ராகுல் காந்தியின் 5 குற்றச்சாட்டுகளும் தேர்தல் ஆணையத்தின் பதிலும் பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, ராகுல் காந்தி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, வாக்காளர் பட்டியலில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் 7 ஆகஸ்ட் 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை (2025 ஆகஸ்ட் 7) செய்தியாளர்களை சந்தித்தபோது, தேர்தல் ஆணையம் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலும், சட்டமன்றத் தேர்தல்களிலும் "வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய அளவில் மோசடி" நடைபெற்றதாக அவர் குற்றம் சாட்டினார். "இயந்திரம் மூலம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியலை வழங்காதது, மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவைத் 'திருட' பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டுச் சேர்ந்துள்ளது என்பதற்கான சான்றாகும்" என்று ராகுல் காந்தி கூறினார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் 'தவறாக வழிநடத்துவதாக' இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும், அவர் தனது புகாரை கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தான் சொல்வது உண்மை என்று ராகுல் காந்தி நம்பினால், அவர் பிரமாணப் பத்திரம் ஒன்றில் கையெழுத்திட்டு புகார் அளிக்க வேண்டும், அல்லது அவர், இந்திய மக்களை தவறாக வழிநடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். மகாராஷ்டிரா தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி கூறியதை மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நிராகரித்தார். "ராகுல் காந்தி தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார், பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். கடந்த முறை மகாராஷ்டிராவில் 75 லட்சம் வாக்குகள் அதிகரித்ததாகக் கூறினார், இப்போது ஒரு கோடி வாக்குகள் அதிகரித்ததாகக் கூறுகிறார். பொய்யான தகவல்களைச் சொல்லி தனது தோல்வியை மறைக்க முயற்சிக்கிறார்" என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, மகாராஷ்டிராவில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையில் வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் மக்களவைத் தேர்தலின் போது கர்நாடகாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக ஆதாரங்களை ராகுல் காந்தி வழங்கினார். வாக்காளர் பட்டியல் தொடர்பாக ராகுல் காந்தி கூறிய முக்கிய கூற்றுக்கள் பற்றிய ஒரு பார்வை. பட மூலாதாரம், ANI 1: 'மகாராஷ்டிரா தேர்தலில் மோசடி' குற்றச்சாட்டு முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராகுல் காந்தி இவ்வாறு கூறினார்: மகாராஷ்டிராவில், ஐந்து மாதங்களில் சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த ஐந்து ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதற்கான சந்தேகத்தை எழுப்பியது, இந்த சந்தேகத்தை நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் பகிரங்கமாகக் கூறியிருந்தோம். மகாராஷ்டிராவின் மக்கள் தொகையை விட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, வாக்கு சதவிகிதத்தில் திடீரென ஒரு பெரிய ஏற்றம் ஏற்பட்டது. சட்டமன்றத் தேர்தல்களில் எங்கள் கூட்டணி முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டது, ஆனால் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதே கூட்டணி வெற்றி பெற்றது. இது மிகவும் சந்தேகத்துக்குரியதாக இருந்தது. மாநில அளவில், மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையில் ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதைக் கண்டோம். இது குறித்து தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்தோம். மாநிலத்தில் 40 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 2: கர்நாடகா தேர்தல் குறித்து ராகுல் காந்தி என்ன சொன்னார்? ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள்: கர்நாடக மக்களவைத் தேர்தலில், உள் கருத்துக் கணிப்புகள் 16 இடங்களை வெல்லும் என்று கணித்திருந்தன, ஆனால் காங்கிரசுக்கு 9 இடங்கள் மட்டுமே கிடைத்தன. கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள், போலி முகவரிகள் மற்றும் மொத்த வாக்காளர்கள் இருப்பதை தங்கள் ஆய்வில் காங்கிரஸ் கண்டறிந்தது. கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில், 6.5 லட்சம் வாக்குகளில், 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் 'திருடப்பட்டுள்ளன'. வெவ்வேறு வாக்குச்சாவடிகளிலும் வெவ்வேறு மாநிலங்களிலும் வாக்களித்த சுமார் 11 ஆயிரம் வாக்காளர்கள் கர்நாடகாவில் வாக்களித்தனர். இந்த வாக்காளர்களின் பெயர்கள், வாக்குச்சாவடி எண்கள் மற்றும் முகவரிகளின் பட்டியல் எங்களிடம் உள்ளது. பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார். 3: 'போலி வாக்காளர்' ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டு: பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளின் வாக்காளர் பட்டியலில் பல வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரே வாக்காளர், பெங்களூருவில் உள்ள மகாதேவபுரா தொகுதியிலும், கிழக்கு லக்னௌவிலும், மும்பையில் கிழக்கு ஜோகேஸ்வரி தொகுதியிலும் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். தனது ஆய்வுக் குழு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்களை அடையாளம் கண்டுள்ளதாக ராகுல் காந்தி கூறினார். அவர்களின் முகவரிகள் தவறானவை அல்லது முகவரிகள் இல்லை அல்லது அந்த முகவரிகளில் அவர்கள் வசிக்கவில்லை. ஒவ்வொரு வீட்டு முகவரியிலும் 80 மற்றும் 46 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தனி வீடுகளில் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கிறது. புதிய வாக்காளராகப் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் படிவம் 6, பெருமளவில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற 33,692 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. 4: ஹரியானா சட்டமன்றத் தேர்தல்கள் குறித்த ராகுலின் குற்றச்சாட்டுகள் ராகுல் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்: ஹரியானாவில், மொத்தம் இரண்டு கோடி வாக்காளர்கள் இருந்த எட்டு தொகுதிகளில் வெற்றி மற்றும் தோல்விக்கு இடையிலான வித்தியாசம் வெறும் 22,779 வாக்குகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஒரு சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் திருடப்பட்டன. 90 இடங்களைக் கொண்ட ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று சொன்ன கருத்துக் கணிப்புகள், காங்கிரஸ் கட்சி சுமார் 60 இடங்களைப் பெறும் என்றும் தெரிவித்தன. கிட்டத்தட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்தையும் பாஜக தவறாக நிரூபித்து, பெரும்பான்மையை எளிதாகக் கடந்து 48 இடங்களை வென்றது. 5: தேர்தல் ஆணையம் பற்றி ராகுல் காந்தி என்ன சொன்னார்? "2024 மக்களவைத் தேர்தலின் போது, பிரதமர் மோதி ஆட்சியில் நீடிக்க வேண்டுமானால் 25 இடங்களைத் திருட வேண்டியிருந்தது. அந்தத் தேர்தலில், பாஜக 33 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் 25 இடங்களை வென்றது" என்று ராகுல் காந்தி கூறினார். "இந்திய ஜனநாயகத்தை அழிக்காமல் பாதுகாக்க பாடுபடுங்கள் என்று நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் சொல்கிறோம். இந்தத் தகவல்கள் அனைத்தும் எங்கள் கூற்றுக்கு முக்கிய சான்றாகும். கர்நாடகாவின் தகவல்கள் மட்டுமல்ல, நாட்டின் ஒவ்வொரு வாக்காளர் பட்டியலும் இப்போது ஒரு சான்றாக இருக்கிறது" என்று அவர் கூறினார். "இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும், இந்தியக் கொடிக்கும் எதிரான குற்றம் என்பதைவிட குறைவானதில்லை. இது, ஒரு சட்டமன்றத்தில் நடந்த குற்றத்திற்கான சான்று. இந்த வடிவத்தை அவதானித்தால் இதனை நாங்கள் முழுமையாக உறுதியாக நம்புகிறோம். இதை நாங்கள் சரியாக கவனித்து ஆய்வு செய்திருக்கிறோம்." "தேர்தல் ஆணையம் எங்களுக்குத் தரவுகளைத் தரவில்லை, சிசிடிவி காட்சிகளை அழிக்கப் போவதாக அவர்களே கூறினார்கள்... அதனால்தான் அவர்கள் அந்தக் காட்சிகளை அழிக்க விரும்பினார்கள்" என்று ராகுல் காந்தி கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுவதாக சில தரவுகளை வெளியிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார் ராகுலின் குற்றச்சாட்டுகள் குறித்து நிபுணரின் கருத்து என்ன? ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானது என்று கூறும் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான அதிதி ஃபட்ணீஸ், "இது தேர்தல் ஆணையத்தை சுற்றிவளைக்கும் ஒரு செயல். தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டுகளை ஏற்கவில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எவ்வாறு கையாள்வது என்பதுதான் தேர்தல் ஆணையத்திற்கு சோதனையாக இருக்கும்" என்று கூறினார். "தேர்தல் ஆணையம் போன்ற பாரபட்சமற்ற நிறுவனம் ஒன்றிற்கு எதிராக முதன்முறையாக இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையம் நேர்மையற்ற செயலைச் செய்ததால் பல வாக்காளர்களின் கைகளில் இருந்த வாக்கு என்ற ஆயுதம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் கடுமையான குற்றச்சாட்டு. தேர்தல் ஆணையம் அவரிடம் பிரமாணப் பத்திரம் கேட்டுள்ளது, எனவே இது தர்க்கரீதியானது என்று நினைக்கிறேன். ராகுல் காந்தியிடம் வலுவான ஆதாரம் ஏதேனும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்க மாட்டார்." ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளின் நேரம் குறித்து கருத்து தெரிவித்த அதிதி ஃபட்ணீஸ், பீகாரில் சிறப்பு வாக்காளர் திருத்த பிரசாரம் அதாவது SIR தொடர்பாக சர்ச்சைகள் தொடரும் நேரத்தில், எதிர்க்கட்சிகள் இதை ஒரு அரசியல் பிரச்சினையாக ஆக்குகின்றன. 'பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் சட்டமன்றத் தேர்தல்களில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அரசியல் பிரச்னைகளில் ஒன்றாக மாறும்' என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு,மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பாஜக என்ன சொன்னது? மகாராஷ்டிரா தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி கூறியதை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நிராகரித்தார். "ராகுல் காந்தி தொடர்ந்து பொய் சொல்லி வருவதோடு, பொய்யான அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார். இதை நான் எதிர்க்கிறேன். கடந்த முறை மகாராஷ்டிராவில் 75 லட்சம் வாக்குகள் அதிகரித்ததாக அவர் கூறினார், இப்போது ஒரு கோடி வாக்குகள் அதிகரித்ததாகக் கூறுகிறார். பொய்களைச் சொல்லி தனது தோல்வியை மறைக்க முயற்சிக்கிறார். அவரது கட்சி தனது இருப்பை இழந்துவிட்டது என்பது அவருக்குத் தெரியும். அடுத்த தேர்தலில் பொதுமக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள்" என்று மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி கூறினார். "மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் தோற்றீர்கள். மக்களவைத் தேர்தலில் மேலும் அதிக இடங்களை இழந்தீர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி சிறப்பாக செயல்பட்டது. கர்நாடகாவில், சட்டமன்றத்தில் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக வந்தாலும் மக்களவை தேர்தல் முடிவுகள் பாதகமாக இருந்தன. மகாராஷ்டிராவில் சட்டமன்றத்திலும், மக்களவையிலும் நீங்கள் வெற்றி பெறவில்லை. இப்போது, நாட்டிற்கும் உலகிற்கும் நீங்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள்?" "தர்க்கமும், புத்திசாலித்தனமும் முக்கியம். இந்தியாவில் தேர்தல்கள் முறையாக நடத்தப்படுவதில்லை என்று உலகிற்குச் சொல்ல முயற்சிக்கிறீர்களா? ராகுல் காந்தி வெளிநாடுகளுக்குச் சென்று இந்திய அமைப்புகளை அவதூறு சொகிறார். தேர்தல்களில் மோசடி நடத்தப்பட்டது உண்மையாக இருந்தால், ஜார்க்கண்டில் உங்கள் வேட்பாளர்கள் எப்படி வெற்றி பெற்றனர்? ஜம்மு காஷ்மீரில் நீங்கள் எப்படி வெற்றி பெற்றீர்கள்?" ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்புப் பற்றி பேசிய பாஜக எம்.பி சம்பித் பத்ரா, "இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியல் குறித்தும் பேசினார். ராகுல் காந்தி அரசியலமைப்பு நிறுவனம் ஒன்றை தாக்கிப் பேசுவது இதுவொன்றும் முதல் முறை அல்ல. தான் வெற்றி பெற்ற மாநிலங்களின் வாக்காளர் பட்டியலை அவர் ஏன் நம் முன் முன்வைக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cewyd0v218no

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல்: அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கப்பாடு

1 month 2 weeks ago
பயங்கரவாத தடைச் சட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உடன்பாட்டுடன்தான் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டதா?????🤔

பனை மரங்களுக்கு தீ வைத்த விஷமிகள்!

1 month 2 weeks ago
தீ வைத்துக் காட்டு மிருகங்களை துரத்துவதுபோல் இராணுவத்தையும் துரத்திவிடலாம் என்ற எண்ணம் போலும். மனிதருக்கு நரி மூளையும் உண்டு, அது பலவிதமாகவும் சிந்திக்கும்.🤪 எனக்கும் சிந்தனைகள் வருவதுண்டு, ஆனாலும் எங்கள் கற்பகதருவை எரிக்கும் சிந்தனைகள் வந்ததில்லை.🥺

மாத்து

1 month 3 weeks ago
நிஜமாகவே சிரிப்பு சிரிப்பாய் வருகுது . .......! அதுசரி கிருபன், நம்ம ஆசான் இதுக்குள்ள எந்த வைத்தியம் பார்க்கிறார் ....... தெரிஞ்சா எங்களுக்கும் உபயோகமாய் இருக்கும் அதுதான் ....... ! 😀

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல்: அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கப்பாடு

1 month 3 weeks ago
வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மாநாட்டை ஏமாற்றுவதற்கு வழமைபோல சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் நடத்தும் நாடகம்.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்: என்னால் உத்தரவாதம் வழங்க முடியாது - அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

1 month 3 weeks ago
Published By: DIGITAL DESK 2 07 AUG, 2025 | 04:31 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தமிழ் அரசியல் கைதிகளில் சுமார் 15 பேர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.இவ்விடயத்தில் எனக்கு உத்தரவாதம் வழங்க முடியாது. ஜனாதிபதியே தீர்மானம் எடுக்க வேண்டும். சாதகமான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற அமர்வின் போது நிலையியல் கட்டளை 27 இன் இரண்டின் கீழ் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பி.யான எஸ்.சிறிதரன் கடந்த பாராளுமன்ற அமர்வில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையதான குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் சந்தேக நபர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேக நபர்கள் 4 பேர், விடுதலை புலிகள் அமைப்பின் 8 உறுப்பினர்கள், ஆயுள் தண்டனை கைதிகள் 3 பேர் ,ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மேன்முறையீடு செய்துள்ள 2 கைதிகள், 2 மரண தண்டனை கைதிகள் 2 பேர் வெலிக்கடை, மெகசின், மஹர, தும்பர, பூஸா மற்றும் நீர்கொழும்பு ஆகிய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகள் தமது தண்டனைக் காலம் நிறைவடைந்ததன் பின்னர் விடுதலையாவார்கள். அல்லது நீதிமன்றத்தின் ஊடாக பிணையளிக்கப்படும் பட்சத்தில் விடுவிக்கப்படுவார்கள் அல்லது மேன்முறையீடு செய்து பிணை பெற்றுக்கொள்ளலாம். சிறைக்கைதிகள் விடுவிப்பு தொடர்பில் அரசியலமைப்பின் 34 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் ஏற்பாடும் காணப்படுகிறது. தமிழ் அரசியல் கைதிகளில் சுமார் 15 பேர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இவ்விடயம் தொடர்பில் என்னை சிலர் சந்தித்தனர். இவ்விடயத்தில் எனக்கு எவ்வித உத்தரவாதமும் வழங்க முடியாது. ஏனெனில் அது நீதியமைச்சின் விடயதானத்துக்குள் உட்படாது. இவ்விடயம் குறித்து ஜனாதிபதி தீர்மானம் எடுக்க வேண்டும். சாதகமான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/222065

பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள 135 வைத்தியசாலைகள் மூடப்படக் கூடிய அபாயம் ; பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் திங்கள் முதல் தொடர் வேலை நிறுத்தம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

1 month 3 weeks ago
07 AUG, 2025 | 04:33 PM (எம்.மனோசித்ரா) சுகாதார அமைச்சின் சில உயர் அதிகாரிகளின் தீர்மானத்தால் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள சுமார் 135 வைத்தியசாலைகள் மூடப்படக் கூடிய அபாயம் காணப்படுகிறது. ராஜித, கெஹெலிய காலங்களில் அதிகாரிகள் செய்ததையே தற்போதும் செய்கின்றனர். சுகாதார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அமைச்சரிடமிருந்து தகுந்த பதில் கிடைக்காவிட்டால் திங்கட்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். கொழும்பில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் சுகாதார கட்டமைப்பில் நெருக்கடி ஏற்படும். எது எவ்வாறிருப்பினும் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியாலங்கள் தடையற்ற மருத்துவ சேவையை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும். நாட்டில் 23,000 சிரேஷ்ட வைத்தியர்கள் காணப்படுகின்றனர். வருடாந்தம் 2,000 வைத்தியர்கள் இந்த கட்டமைப்பில் இணைகின்றனர். எனவே இவர்களுக்கான நியமனங்களை முறையாக வழங்க வேண்டியதும் அவசியமானதாகும். அத்தோடு இடமாற்றங்களும் முறையாக இடம்பெற வேண்டும். அவ்வாறு இடம்பெற்றால் மாத்திரமே சுகாதார கட்டமைப்பின் இருப்பினை தீர்மானிக்க முடியும். சுகாதார அமைச்சின் சுகாதார சேவைப்பிரிவின் பணிப்பாளர் மற்றும் பிரதி பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்களின் செயற்பாடுகளால் 23,000 சிரேஷ்ட வைத்தியர்களின் இடமாற்றங்கள் முற்றாக சீர்குலைந்துள்ளன. இது சுகாதார அமைச்சினால் உருவாக்கப்பட்ட ஒரு குழப்பமாகும். ஆனால் சுகாதார அமைச்சரிடமிருந்து இதற்கான ஸ்திரமான தீர்வு கிடைக்கவில்லை. இந்த பிரச்சினை தீவிரமடைந்தமைக்கான காரணமும் இதுவேயாகும். 2025ஆம் ஆண்டுக்கான இடமாற்ற பட்டியல் 9 மாதங்கள் தாமதமாகவே வெளியானது. அதில் சுமார் 5,000 வைத்தியர்கள் உள்ளடங்குகின்றனர். அந்த பட்டியலில் காணப்பட்ட 78 வெற்றிடங்கள் சட்டத்துக்கு முரணாக தன்னிச்சையாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதனால் குறித்த 78 வைத்தியர்கள் மாத்திரமின்றி, பட்டியலுள்ள அனைவரும் பாதிக்கப்படுவர். அது மாத்திரமின்றி பின்தங்கிய பிரதேசங்களுக்கான வைத்தியர் நியமனங்களும் இவ்வாறு தன்னிச்சையாக நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால் எதிர்வரும் ஓரிரு மாதங்களில் பிரதான வைத்தியசாலைகள் உட்பட சுமார் 135 பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படவுள்ளது. ராஜித, கெஹெலிய காலங்களில் அதிகாரிகள் செய்ததையே தற்போதும் செய்கின்றனர். அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவையும் அவர்கள் இந்த யுகத்துக்கே அழைத்துச் செல்லவே முற்படுகின்றனர். இந்த பிரச்சினைக்கு அமைச்சரிடமிருந்து தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்குள் பிரச்சினைகளுக்கான முறையான தீர்வு வழங்கப்படாவிட்டால் எமது தீர்மானத்திலும் எவ்வித மாற்றமும் இல்லை என்றார். https://www.virakesari.lk/article/222066

மாத்து

1 month 3 weeks ago
மாத்து - ஜெயமோகன் கொஞ்சம் முதுகுவலி இருப்பது உண்மைதான். அதைச் சொல்லியிருக்கக் கூடாது.நண்பர் ஆதுரத்துடன் “எங்க வலீன்னு சொன்னீங்க?”என்றார். “முதுகிலேங்க” என்றேன். “சொன்னா தப்பா நினைக்கப்பிடாது. வேற எங்கவேணுமானாலும் வலி வரலாம். முதுகிலே மட்டும் வலி வரப்பிடாதுங்க. நாமள்லாம் மிடில்கிளாஸ். முதுகுதானுங்களே எல்லாமே?” நான் மையமாகத் தலையசைத்தேன். வேறு எங்கெல்லாம் வலி வந்தால் அதைப் பொருட்படுத்தவேண்டியதில்லை என்று சிந்தனை ஓடியது ”இந்த அலோபதி வேஸ்டு. போய் விளுந்திராதீக. ஆயிரம் டெஸ்டு வைப்பான். அப்றம் ஒண்ணுமே இல்லேம்பான்” என்றார் அவர். “பேசாம நீங்க ஆல்டர்நேட்டிவ் மெடிசினுக்குப் போயிருங்கோ. என் மச்சினர் இப்டித்தான் ரொம்பநாள் மூட்டுவலி. எங்க வேணுமானாலும் வலி வரலாங்க, மூட்டில மட்டும் வலியே வரப்பிடாது. அப்டியே ஆளைச் சாய்ச்சிடுது பாருங்க. என்ன பண்ணுறதுன்னு தெரியாம அங்க இங்கன்னு கோட்டு போட்ட டாக்டருங்களுக்கு பணத்தையா அள்ளி விட்டார்” “பிறவு?”என்றேன். “எங்கிட்ட ஒருநாளைக்கு கேட்ட்டார். நம்ம இயற்கைமருத்துவம் லோகநாதன் இருக்காரே?” என் முகத்தைப் பார்த்துவிட்டு நிறைவுடன் “கேள்விப்பட்டிருக்கமாட்டீங்க. அப்டியே கொடத்தில போட்ட வெளக்கு… ஆரல்வாய்மொழிக்கு அந்தப்பக்கமா ஒரு சின்ன ஊரிலே இருக்கார்.பேச்சிப்பாறை சானலை தாண்டி அந்தப்பக்கமா போனா ஒரு ஓட்டுவீடு. வாசலிலே ஆடு நிக்கும்” “எப்பவுமேயா?”என்றேன். “மேயாதப்ப நிக்கும்”என்று யதார்த்தமாகச் சொல்லிவிட்டு “அவரிட்ட கூட்டிட்டு போனேன். போனதுமே சொல்லிட்டார், மூட்டுல பிரச்சினைன்னு”. “நடக்கிறதப் பாத்தா?”என்றேன். “இல்ல, இவரை சேரோட தூக்கிட்டு போனோம்” என்று மேலும் யதார்த்தமாகச் சொல்லி, “அப்டியே கூப்பிட்டு ஒக்கார வைச்சார். நாக்க நீட்டுன்னார்” நான் “மூட்டுல இல்ல வலி?”என்றேன். “ஆமா. ஆனா பாடி ஒண்ணுதானே? ஆத்துத்தண்ணியில கரைதோறும் ருசி பாக்கணுமாடாம்பார். பெரிய ஞானி. நாக்க கூர்ந்து பார்த்துட்டே இருப்பார். ஒரு புள்ளியில குண்டூசியாலே குத்துவார். அப்டியே ஒடம்பு துள்ளும்” “வலிக்குமோ?” “பின்ன? நாக்குல நரம்பில்லாம பேசுறதுன்னு கேள்விப்பட்டிருப்பீங்க. நாக்கில எல்லா நரம்பும் இருக்கு. மூட்டுக்குண்டான நரம்ப கண்டுபிடிச்சுட்டார்னா அப்டியே குத்தி தூர் எடுத்து விட்டுடுவார். செரியாப்போயிரும்” ”ஆச்சரியம்தான்” என்றேன். முதுகெலும்புகளுக்கெல்லாம் சேர்த்து ஒரே நரம்பா இல்லை ஒவ்வொன்றுக்கும் ஒரு நரம்பா என எண்ணிக்கொண்டிருந்தபோது நண்பர் தொடர்ந்தார். “மாற்றுமருத்துவத்திலே பலது இருக்குது சார். சாமுண்டியப்பான்னு வெள்ளக்கால் பக்கம் ஒருத்தர்” “பாக்க சாதாரணமாத்தான் இருப்பார் இல்லீங்களா?” “எப்டி தெரியும்?”என்றார் வியப்புடன். “சொன்னாங்க”என்றேன். “ஆனா மகாஞானி. அவரோட சிகிச்சை என்னான்னாக்க எல்லாமே உள்ளங்காலிலேதான்! நம்ம பிரண்டோட பொஞ்சாதிக்கு மனசிலே ஒரு பிரச்சினை. உள்ளங்காலிலே சரியா தொட்டு மனசிலே உள்ள அந்த பிரச்சினையப் புடிச்சுட்டாருன்னா பாத்துக்கிடுங்க” “ஓகோ”என்றேன். ஐயத்துடன் “அந்தம்மா அப்ப அவங்க மனசையா ரோட்டில வச்சு நடந்திட்டிருந்துது? ரொடெல்லாம் ஒரே கலீஜா கெடக்குமே?” “கழுவிக்கலாங்க. மனசிலே என்ன பிரச்சினை இருந்தாலும் கழுவிடலாம். அதுக்குத்தான் யோகக்குளியல் சிகிச்சை. சாம்பமூர்த்தின்னு ஒருத்தர் பண்றார். யோகாவால மனசை குளிப்பாட்டி விடுவார். சோப்பு, சீயக்காய்,ஷாம்பூன்னு அதிலே மூணு லெவல் இருக்கு. வேற வேற ரேட்டு ” “டிடெர்ஜெண்டு கூட தேவைப்படறவங்க இருப்பாங்க இல்லியா?” என்றேன். “சிலருக்கு ஃபினாயில்கூட வேண்டியிருக்கும்…” “பின்ன? நோய்கள் பலவகை. மோப்ப மருத்துவம் பாத்திருக்கியளா?” “மலர்மருத்துவம்னு ஒருவாட்டி யாரோ சொன்னாங்க” “இத மலமருத்துவம்னு சொல்வாங்க. மலத்தை மோந்து பாக்கிறது” “நோய் தெரிஞ்சுருமாமா? அதுக்கு லேப்லே குடுத்தா–” “இது பேஷண்டே மோந்து பாக்கிறதுங்க” “தன்னோட மலத்தையா?” “அதான் இல்ல”என்றார் மகிழ்ந்து “டாக்டரோட மலத்த…” “ஓ” என்றேன் “நெறைய தேவைப்படுமே” “அவரு மூணுவாட்டி தெனம் போவார். காலையிலே ஆணவம். மத்தியான்னம் கன்மம். ராத்திரி மாயை” “நிர்மலம்னு சொல்லுங்க” “அவரோட சம்சாரம் பேரு அதான்…மாற்று மருத்துவத்திலே பலது இருக்கு. இயற்கை உணவுண்ணு ஒண்ணு இருக்கு. மருந்தே வேண்டாம்னு சொல்வாங்க” “நோய் இல்லேன்னா எதுக்கு சார் மருந்து?” “கரெக்ட். அதான் அவங்க பாலிஸி. உணவே மருந்துன்னு சொல்லி பச்சைபச்சையா சாப்பிடுவாங்க. வாழையெலைக்கும் அதில வச்ச சாப்பாட்டுக்கும் வித்தியாசமே தெரியாம சாப்பிட்டாத்தான் அது ஆரோக்கியமான சாப்பாடுன்னு ரூல். குரங்கெல்லாம் அப்டித்தானே சாப்பிடுது” “அதுக்கு சமைச்சு குடுத்தா சாப்பிடாதா என்ன?” அவர் என்னை கடந்து சென்று “அதைச் சாப்பிட்டா நாப்பதுநாளிலே எல்லா நோயும் போயிரும்.நம்ம சகா ஒருத்தர் தமிழ்வாத்தியார். பதினாறு வருசமா சமைக்காத சாப்பாடுதான்.பெரீய ராமபக்தர். சேரிலே கூட குந்தித்தான் உக்காருவாருன்னா பாத்துக்கிடுங்க. நல்லமனுஷன், நம்மளப் பாத்தா அப்டியே ஒரு ஜம்பு…” எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ”இவங்க இப்டீன்னா மருந்தே உணவுன்னு ஒரு குரூப்பு இருக்கு. அவங்க வேற டைப்பு” என்றார் நண்பர் “ஒரே மூலிகையா சாப்பிடுவாங்க. கொல்லைக்குப்போறதே லேகியம் மாதிரி இருக்கும்னா என்னத்தச் சொல்ல?” “ஓகோ” என்றேன்.“அதை வேற ஏதாவது மாற்றுமருத்துவத்துக்கு யூஸ் பண்றாங்களா?” “இன்னும் இல்லீங்க” என்றார். ஆசுவாசமாக உணர்ந்தேன் “ஏதோ இந்தமட்டுக்கும்…” என்றேன். “ஹீலிங்னு ஒண்ணு இருக்கு. ஹீலர் ஆஸ்கார்னு ஒருத்தர். அவர் என்ன சொல்றார்னா நோயே இல்லேன்னு” “அப்ப அவர் எதை ஹீல் பண்றார்?” “இப்ப இலுமினாட்டின்னு ஒரு குரூப்பு இருக்குங்க இல்லியா?” ”பொம்மனாட்டீன்னு மாமிகள சொல்வாங்களே” “அதேமாதிரிதான். அவங்க சர்வதேச ஆரியச் சதி. அவங்க நம்மள பாதிக்காம இவரு நம்மளைக் குணப்படுத்திட்டே இருப்பார்” “அதுக்கு அவங்களையே குணப்படுத்தலாமே” “இன்னொருத்தரு ஃபீலர் மாதவன்னு பேரு. நாம நோய சொன்னாலே போரும் அப்டியே அளுதிருவார். அவர் ஒருபாட்டம் அளுதிட்டார்னா நம்ம மனசு லேசாயிரும்ங்க” எனக்கு இது கொஞ்சம் நம்பும்படியாக இருந்தது. ஒரு மனிதன் நமக்காக அழுகிறான் என்றால்… “வெங்காயம் மாதவன்னு சொன்னா ஊர்ல தெரியும்” என்றார் நண்பர் “ஓகோ” “ஹோமியோ வேற மாதிரி” என்றார் நண்பர் “எந்த அளவுக்கு கம்மியா கெமிக்கல கலக்கிறோமோ அந்தளவுக்கு வீரியம் ஜாஸ்திங்கிறது அவங்க பாலிசி. குண்டுமணி அளவுக்கு பாஸ்பரஸை எடுத்து அண்டாத்தண்ணியில கலக்குவாங்க. அதில ஒரு ஸ்பூன் எடுத்து மறுபடி ஒரு அண்டாத்தண்ணியில கலக்குறது. அதில ஒரு ஸ்பூன் எடுத்துமறுபடியும் ஒரு அண்டாத்தண்ணியிலே..அதில—” “அப்றம்…?” “அந்தக் கடைசீ தண்ணி இருக்கே அதோட வீரியம் அணுகுண்டு மாதிரியாக்கும். நின்னு கேக்கும். நம்ம ப்ரண்டோட தம்பி ஒருத்தனுக்கு தலைச்சுத்து. ஒக்காந்தா வாந்தி. நேரா போயி நம்ம கேசவபிள்ளைய பாத்தான். நாலு மடக்கு மருந்து குடுத்தார். நின்னிட்டுது” நான் பெருமூச்சுவிட்டேன் “கும்பகோணத்திலே ஒரு ஹோமியோ இருக்கார். இருக்கிறதிலேயே எசன்ஸை கம்மியா கலக்கின தண்ணி அவரு குடுக்கிறதுதான். காவேரியிலே அவரோட கெமிக்கல கலக்கிட்டு காவேரித்தண்ணியையே குடுக்கிறார். நல்லா கேக்குது” “எப்ப கலக்கினார்?” “அவரெங்க கலக்கினார்? அவங்க அப்பாதான் கலக்கினது…”என்றார் நண்பர் “இப்ப உங்க பிரச்சினைக்குத் தொடுவர்மம்கூட நல்லா கேக்கும். உடம்பிலே அங்கங்க தொடுறது…” “வேணாங்க எனக்கு கிச்சுகிச்சு ஜாஸ்தி”என்றேன் “சயண்டிஃபிக் டிரீட்மெண்டுங்க” என்றார்.”மாயநாதன்னு ஒருத்தர்.பாக்க சாதாரணமாத்தான் இருப்பார். பொம்புளையாளுங்களுக்கு குச்சி வச்சு தொடுவார். முஸ்லீம் பொம்புளைங்கன்னாக்க நெழலையே தொட்டு குணப்படுத்தீருவார்” “பயங்கரமா இருக்கு” என்றேன் “இருக்குல்ல? சார் மாற்றுமருத்துவம்னா சும்மா இல்ல. இங்கிலீஷ்ல நாலஞ்சு வார்த்தைய வாசிச்சுட்டு வெள்ளைக்கோட்ட மாட்டீட்டு பணத்த கறக்குற பிஸினஸ் இல்ல. தெய்வீகமான மருத்துவம். காலு கையின்னு தனியா பிரிச்சு செய்றதில்ல. ஹோலிஸ்டிக் மெடிசின்…” என்றார் நண்பர் “எனிமா மருத்துவம்னு ஒண்ணு இருக்கு. அதான் பெஸ்ட்” “என்ன பண்ணுவாங்க?” “எனிமா குடுக்கிறதுதான்” “எல்லா நோய்க்குமா?”என்றேன் “ஆமா, பின்ன?” “வயித்துப்போக்குக்கு?”என்றேன். “அதுக்கும்தான்”என இயல்பாகச் சொல்லி “அதில வெளக்கெண்ணை எனிமான்னு ஒண்ணு இருக்கு. அது மூட்டுநோய்க்கு நல்லது. போட்டுக்கிட்டா நடக்கிறது ஸ்மூத்தா இருக்குன்னு நம்ம பொஞ்சாதியோட தம்பி சொன்னான்” நான் பெருமூச்சுவிட்டேன். “உங்க மச்சினர் இப்ப எப்டி இருக்கார்?” “செல்போனிலே கூப்பிட்டேன். பேசமுடியல்லை. நேரா சங்கரன்கோயிலிலே சம்முவம்னு ஒருத்தர் இருக்கார். பாக்க சாதாரணமாத்தான் இருப்பார். போயிப்பாருங்கன்னு சொன்னேன்” நான் தெளிந்து “அவரு என்ன பண்றார்?”என்றேன் “அறை மருத்துவம்சார்” “ரூம்லயா?” “இல்ல”என்றார் “போனதுமே பளார்னு ஒண்ணு விடுவார் பாருங்க. அப்டியே நோய்லாம் பறந்திரும். நம்ம தம்பி மச்சானுக்கு அங்கயே சரியாயிடுச்சுன்னா நம்ப மாட்டீங்க” “பல்வலியா?” “எப்டி கண்டுபிடிச்சீங்க?” மறுபிரசுரம் முதற்பிரசுரம் Mar 21, 2015 https://www.jeyamohan.in/72144/

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” ”போலி வாக்காளர்கள், முகவரிகள், புகைப்படங்கள்: வாக்குத் திருட்டு புகார் குறித்து ஆதாரங்களுடன் ராகுல் விளக்கம்

1 month 3 weeks ago
08 AUG, 2025 | 08:40 AM இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற மக்களைவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளா இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற மக்களைவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் "வாக்கு திருட்டு" நடந்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறிய அவர், 5 வழிகளில் இந்த மோசடி அரங்கேறி உள்ளதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். காங்கிரஸ் கட்சி பெங்களூரு மத்திய தொகுதியின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் நடத்திய விசாரணையின் கண்டுபிடிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில், பெங்களூரு மத்திய தொகுதியில் பா.ஜ.க 32,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லியில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது; பெங்களூரு மத்திய தொகுதியில் 1,00,250 போலி வாக்குகளை உருவாக்கி தேர்தல் திருடப்பட்டதாகக் கூறினார். மகாதேவபுரா தொகுதியின் தரவுகளை ஆய்வு செய்யவே பல மாதங்கள் ஆனது என்றும் அவர் கூறினார். மகாதேவபுரா தொகுதியில் பெரும் வித்தியாசம் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதாகவும், மகாதேவபுரா தவிர மற்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்றதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். மகாதேவபுராவில் 1,14,046 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றதால், மக்களவைத் தொகுதியை அது கைப்பற்றியது. ஒரு தொகுதியிலிருந்து மட்டும் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசம் எப்படி வந்தது என்று நாங்கள் ஆய்வு செய்தோம். இது மிகப்பெரிய சமநிலையற்ற தன்மை. மகாதேவபுரா தொகுதியை ஆய்வு செய்தபோது, 6.5 லட்சம் மொத்த வாக்குகளில் 1,00,250 வாக்குகள் 5 வெவ்வேறு வழிகளில் திருடப்பட்டதைக் கண்டறிந்தோம்” என்று அவர் கூறினார் 5 விதமான முறைகேடுகள் - அம்பலப்படுத்திய ராகுல்காந்தி ராகுல் காந்தி, இந்த வாக்குகள் 5 வழிகளில் திருடப்பட்டதாக விளக்கினார். போலி வாக்காளர்கள் (Duplicate voters) ஒரே நபரின் பெயர் மற்றும் புகைப்படம் பல வாக்குச் சாவடிகளில் இடம்பெற்றது. போலியான மற்றும் செல்லாத முகவரிகள் (Fake and invalid addresses) முகவரி இல்லாத அல்லது சரிபார்க்க முடியாத வாக்காளர்கள். ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் (Bulk voters in a single address) சிறிய வீட்டில் பல குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். செல்லாத புகைப்படங்கள் (Invalid photos) வாக்காளர் பட்டியலில் புகைப்படங்கள் இல்லாத அல்லது அடையாளம் காண முடியாத அளவுக்கு சிறிய புகைப்படங்கள் உள்ள வாக்காளர்கள். படிவம் 6 தவறான பயன்பாடு (Misuse of Form 6) புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் படிவம் 6ஐ பயன்படுத்தி முதியவர்கள் மீண்டும் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டது. ஆதாரங்களுடன் விளக்கிய ராகுல்காந்தி இதன்படி 11,965 போலியான வாக்காளர்கள், போலியான மற்றும் தவறான முகவரியுடன் 40,009 வாக்காளர்கள், ஒரே முகவரியில் 10,452 வாக்காளர்கள், தவறான புகைப்படங்களுடன் கூடிய 4,132 வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐ தவறாக பயன்படுத்திய 33,692 வாக்காளர்கள் உள்ளனர் என கூறினார். போலி வாக்காளர்கள்: குர்கிரத் சிங் டாங் என்ற ஒருவரின் புகைப்படம் 4 வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் இருந்ததாக சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, இதேபோல் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா என்ற பெயரில் கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார். போலியான முகவரிகள்: “ஹவுஸ் எண் 0”, தந்தையின் பெயர் “ilsdfhug,” “dfoigoidf” போன்ற செல்லாத தகவல்கள் கொண்ட 40,009 வாக்காளர்கள் இருந்தனர். ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள்: ஒரு சிறிய வீட்டில் 80 வாக்காளர்கள் வசிப்பதாகவும், “153 Beire club” என்ற மதுபானக் கடையில் 68 வாக்காளர்கள் வசிப்பதாகவும் ராகுல் காந்தி படங்களுடன் விளக்கினார். படிவம் 6 தவறான பயன்பாடு: 70 வயதுடைய ஷகுன் ராணி என்ற பெண், புதிய வாக்காளர் படிவம் 6ஐப் பயன்படுத்தி 2 முறை பதிவு செய்து, 2 வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்களித்துள்ளார். புதிய வாக்காளர்கள் எனப் பதிவு செய்யப்பட்ட பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் என்றும் ராகுல் காந்தி கூறினார். தேர்தல் ஆணையம் மீது குற்றம் “இது ஒரு தொகுதியில் நடந்த கிரிமினல் குற்றம். இது போன்ற குற்றங்கள் நாடு முழுவதும் பெரிய அளவில் நடந்து வருவதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இது தேர்தல் ஆணையம் மற்றும் பாஜக இணைந்து செய்த சதி,” என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையம் ஆதாரங்களை அழித்து வருவதாகவும், நீதித்துறை இதில் தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/222092

செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்

1 month 3 weeks ago
அவரோடு எமது புலம்பெயர் உறவுகள் தொடர்பில் இருக்கவேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல்: அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கப்பாடு

1 month 3 weeks ago
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல்: அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கப்பாடு August 8, 2025 பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பாக, தற்போதைய அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அத்துடன், நிகழ்நிலை காப்புச்சட்டத்தை மாற்றம் செய்வது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல் ஜி.எஸ்.பி பிளஸ் வசதி குறித்து அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி வருவதாகவும், அதில் அரசாங்கம் பல விடயங்களில் உடன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் நிகழ்நிலை காப்புச்சட்டம் மாற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார். ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதும் மனித உரிமைகளை உறுதி செய்வதும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். https://www.ilakku.org/anti-terror-law-repeal-eu-agreement/

யுக்ரைன் போர் நிறுத்தம் - ட்ரம்ப்பும் புடினும் சந்திப்பதில் சந்தேகம்

1 month 3 weeks ago
யுக்ரைன் போர் நிறுத்தம் - ட்ரம்ப்பும் புடினும் சந்திப்பதில் சந்தேகம் General08 August 2025 யுக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை விரைவில் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், இன்னும் அதற்கான இறுதி வடிவம் கொடுக்கப்படவில்லை. வாசிங்டனும் மொஸ்கோவும் ஒரு சாத்தியமான உச்சி மாநாட்டை எவ்வாறு நடத்தப்போகின்றன என்பது குறித்து இதுவரை அறிவிப்புக்கள் வெளியிடவில்லை. இந்த சந்திப்பு அடுத்த வாரம் இடம்பெறும் என்று கிரெம்ளினும் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த சந்திப்பு நடைபெற்றால் 2021 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் புடின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தமைக்கு பின்னர், இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே நடைபெறும் முதலாவது சந்திப்பாக அது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த சந்திப்பின்போது யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியும் இணைத்துக்கொள்ளப்படுவாரா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. ஏற்கனவே சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாமல் செலன்ஸ்கியை சந்திக்கப்போவதில்லை என்று புடின் தெரிவித்துள்ள நிலையில், புடினுடனான சந்திப்பில், செலன்ஸ்கி இணைத்துக்கொள்ளப்படுவதைத் தாமும் விரும்பவில்லை என்று ட்ரம்ப்பும் தெரிவித்துள்ளார். https://hirunews.lk/tm/413561/ukraine-ceasefire-trump-and-putin-meeting-in-doubt

காசா நகரை கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்

1 month 3 weeks ago
காசா நகரை கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் 08 August 2025 காசா நகரை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்துக்கு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஹமாஸைத் தோற்கடிக்கவோ அல்லது கடத்தப்பட்டவர்களைத் திரும்பப் பெறவோ முடியாது என்று அமைச்சரவை அமைச்சர்களில் பெரும்பாலானோர் நம்பியதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்த அலுவலகம் கூறியுள்ளது. எனினும் இந்த நடவடிக்கை பேரழிவு விளைவுகளை" ஏற்படுத்தக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கிறது. அத்துடன் பணயக்கைதிகளுக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை அச்சம் வெளியிட்டுள்ளது. காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், பிரதேசத்திற்குள் கூடுதல் உதவிகளை அனுமதிக்கவும், தமது நட்பு நாடுகள் உட்பட சர்வதேச அழுத்தத்தை, இஸ்ரேல் எதிர்கொள்ளும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தநிலையில், காசா நகரத்தை ஆக்கிரமிப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐந்து கொள்கைகள் ஆகியவற்றை விபரிக்கும் ஒரு அறிக்கையை நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இது அமைச்சரவை பெரும்பான்மை வாக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறுகிறது. ஹமாஸ் அமைப்பை நிராயுதமாக்குவது. அனைத்து பணயக்கைதிகளையும் - உயிருடன் இருப்பவர்களையும் மற்றும் இறந்தவர்களையும் திருப்பி அனுப்புதல். காசா பகுதியை இராணுவ மயமாக்குதல். காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு கட்டுப்பாடு. ஹமாஸ் அல்லது பாலஸ்தீன அதிகார சபை அல்லாத ஒரு மாற்று சிவில் அரசாங்கத்தை நிறுவுதல் என்பன இந்த ஐந்து அம்சத் திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. https://hirunews.lk/tm/413568/israeli-defense-cabinet-approves-plan-to-capture-gaza-city

சிறீதரன் எம். பி. சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டு - பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை

1 month 3 weeks ago
பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை முருகானந்தன் தவம் இலங்கையின் எம்.பிக்களின் சொத்து பற்றிய அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 30ஆம் திகதி முடிவடைந்த போதிலும், 175 எம்.பிக்களில் 80 பேர் இன்னும் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவில்லை, அதன்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்காத எம்.பி.க்கள் மீது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது . இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்டத்தின்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறும் எம்.பிக்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அதிகாரமும் ஆணையத்திற்கு உள்ளது. ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் திகதிக்கு முன் வைத்திருக்கும் அனைத்து சொத்துக்களின் விவரங்களையும் சபாநாயகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கிடையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முந்தைய பாராளுமன்றத்தில் பணியாற்றிய பாராளுமன்ற ஊழியர்களில் பெரும்பாலோர் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் சமர்ப்பிக்கவில்லை. இவ்வாறான நிலையில்தான் இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவரும் யாழ் மாவட்ட எம்.பியுமான சிறீதரன் சட்டத்துக்கு முரணாக சொத்துக்கள் வைத்திருப்பதாக சிவில் ஆர்வலர் சஞ்சய் மஹாவத்த என்பவர் குற்றப் புலனாய்வுத்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். சிறீதரன் தமது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் பெயர்களில் சொத்துக்களைப் பராமரித்து வருவதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்படவேண்டும் என்றும் முறைப்பாட்டாளர் கோரியுள்ளார். இந்த முறைப்பாட்டாளர் ரணில் விக்ரமசிங்கவின் தீவிர ஆதரவாளர். அவர் முன்னாள் சிங்கள அமைச்சர்கள், எம்.பிக்களின் சொத்துக்கள் தொடர்பில் இவ்வாறு பல முறைப்பாடுகளை செய்துள்ளவர். ஆனால் ‘’எனக்கு முகம் தெரியாத சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நிதிக்கேற்ற புலனாய்வு பிரிவில் சொத்துக் குவிப்பு சம்பந்தமாக என் மீது முறைப்பாடு செய்திருக்கிறார். இந்த விடயத்தை நல்லதொரு விடயமாகவே நான் பார்க்கிறேன். என்னுடைய பெயரிலேயோ அல்லது என்னுடைய குடும்பத்தினரின் பெயரிலேயோ இலங்கைக்குள்ளோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ சொத்துக்கள் இருந்தால் அது தொடர்பில் நிதிக்குற்றவியல் விசாரணை பிரிவினர் கண்டுபிடித்து, அதனை மக்களுக்கு வெளிப்படுத்துவது அவர்களது தார்மீக கடமை என தெரிவித்திருக்கும் சிறீதரன், என் மீதான இந்த அவதூறான செயற்பாட்டுக்குப் பின்னால் தமிழரசு கட்சியின் தலைமை பதவி தொடர்பில் எனக்கெதிராக நீதிமன்றத்தினூடாக இடைக்கால தடை உத்தரவு பெற்றிருக்கும் தரப்பினரே இருப்பதாகவும் , தமிழரசு கட்சியின் தலைவராக நான் தெரிவு செய்யப்பட்டபோது என்னோடு சேர்ந்திருந்து எனது கைகளைத் தூக்கி, என்னோடு இணைந்து செயற்படுவதாகக் கூறியவர்களே ,கட்சியில் இணைந்து 6 மாதங்களே ஆகாதவர்களை வைத்துக்கொண்டு, பின்னணியில் இருந்து கொண்டு எனக்கெதிராக வழக்கு தாக்கல் செய்து இடைக்காலத் தடையைப் பெற்றிருந்தார்கள். அந்த அடிப்படையில், இந்த சம்பவங்கள் அனைத்துக்கும் பின்னால் கட்சியின் தலைமைப்பதவி தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்தவர்கள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, நிதி குற்றப் புலனாய்வு பிரிவை நம்பி என்மீது சொத்துக் குவிப்பு தொடர்பில் முறைப்பாடு செய்திருக்கும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த சஞ்சே மகாவத்த என்ற நபருடைய முறைப்பாட்டை ஏற்று உரிய விசாரணைகளை முன்னெடுத்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது அவசியம் . என்னிடம் அவ்வாறான சொத்துக்கள் இருந்தால் அதனை உறுதிப்படுத்தவேண்டுமென்பதே என்னுடைய நிலைப்பாடு. வருடாந்தம் என்னுடைய சொத்து விபரங்களைப் பாராளுமன்ற சபாநாயகரிடம் கையளிப்பதோடு, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற பிரிவுக்கும் கையளித்து வருகிறேன். இணையத்தளங்களில் அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் என்னுடைய சொத்து விபரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. என்னுடைய சொத்து விபரங்கள் என்பது வெளிப்படையானது. இலங்கையில் விரல்விட்டு எண்ணக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவனாக என்னுடைய சொத்து விபரங்களை வெளிப்படையாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இணையத்தளத்தினூடாக வெளியிட்டு வருகிறேன். அதனை எவரும் பார்க்கமுடியும். ஆகவே, என் மீது சுமத்தப்பட்டிருக்கும் முறைப்பாட்டை ஏற்று விரைவாக விசாரணைகளை ஆரம்பித்து உண்மையைக் கண்டறிந்து மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். நிதிக்குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கையை நான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்’ எனவும் தெரிவித்துள்ளார். சிறீதரன் மீதான இந்த சட்ட விரோத சொத்துக்குவிப்பு முறைப்பாட்டின் பின்னணியில், அவரது தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைகள் சம்பந்தப்பட்டிருப்பது உள் வீட்டுத் தகவல்களாகக் கசிந்துள்ளது. இதற்கு சிறீதரன் எம்.பியை தமிழரசுக் கட்சியிலிருந்து மட்டுமல்லாது எம்.பி. பதவியிலிருந்தும் அகற்றுவதே இந்த தலைகளின் திட்டமாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தலைமைக்கு சிறீதரன் கட்டுப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துத் தோற்றவர்கள், சிறீதரன் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றுள்ளார் என்ற போலி குற்றச்சாட்டை சுமத்தி தோற்றவர்கள் தற்போது சிங்களத்தரப்போடு சேர்ந்து சிறீதரன் சட்டவிரோதமாக சொத்து குவித்துள்ளார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், கட்சி நடவடிக்கையாக சிறீதரன் மீது கட்சித் தலைமைக்கு கட்டுப்படாமை குற்றச்சாட்டுடன் சட்டவிரோத சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டையும் முன் வைத்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்குவதே இவர்களின் திட்டம். தமிழரசுக் கட்சியின் இந்த பெரிய தலைகளுக்கு சிறீதரன் மீது ஏன் இந்த வன்மம் என் று பார்த்தால் அது சிறீதரன் மீதான வன்மம் அல்ல அவரின் எம்.பி. பதவி மீதான மோகமே காரணம் என உள்வீட்டுத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. தமிழரசின் தலைவர் பதவியிலும் பாராளுமன்ற எம்.பி. பதவியிலும் சிறீதரனிடம் தோற்றவர்களினால் அதனை ஜீரணிக்க முடியவில்லை. அத்துடன் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற அதீத நம்பிக்கையில் ‘’மக்களினால் தெரிவு செய்யப்பட்டால் மட்டுமே பாராளுமன்றம் செல்வோம் .தேசியப்பட்டியல் மூலம் ஒருபோதும் பாராளுமன்றம் செல்ல மாட்டோம் ‘’ என தெரியாத்தனமாக சூளுரைத்துவிட்ட நிலையில், பாராளுமன்றத் தேர்தலில் தோற்று இன்று தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லமுடியாத நிலை. அதனால்தான் சிறீதரனை ஏதோவொரு வழியில் கட்சியிலிருந்து வெளியேற்றினால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகும் .அதன் மூலம் பாராளுமன்றத் தேர்தலில் சிறீதரனுக்கு அடுத்ததாக வாக்குகள் பெற்றவர் என்ற அடிப்படையில், பாராளுமன்றம் செல்லமுடியும் என்ற திட்டத்தில் சிறீதரனின் எம்.பி. பதவி மீது இலக்கு வைத்தே இவ்வாறு தொடர்ந்தும் சிறீதரனை வீழ்த்தும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்கின்றது அந்த உள்வீட்டுத்தகவல். சிறீதரனின் எம்.பி.பதவிக்கு எவ்வேளையும் ஆபத்து ஏற்படலாம் என்பதனை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அளித்துள்ள விளக்கமொன்றின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.அந்த விளக்கத்தில் சுமந்திரன் பின்வருமாறு கூறுகின்றார். கட்சியின் ஒழுக்கக் கோவையுடன் இணைந்து செயற்பட முடியாதவர்கள் தாராளமாக வெளியே போகலாம்.கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சிக்கு மாறாக, செயற்படுவதனை எந்த மானமுள்ள அரசியல் கட்சியும் அனுமதிக்காது. கட்சிக்குள் இருந்து கொண்டு பலவிதமான கேள்விகளை எழுப்பலாம் கருத்துரைக்கலாம். கட்சி செய்வது தவறு என்று கூறலாம். இவை செவிமடுக்கப்படும். ஆனால், இறுதியில் ஒரு தீர்மானத்தைக் கட்சி எடுத்தால் அந்த தீர்மானத்திற்கு ஆதரவில்லாமல் பேசியவர்கூட கட்சியின் தீர்மானத்தோடு சேர்ந்து நிற்க வேண்டும். வெளியே போய் நின்று கொண்டு நான் இதனை எதிர்த்தேன். எனக்கும் இதற்கும் தொடர்பில்லை என சொல்வது முறையற்ற செயற்பாடு. கட்சி கட்டுப்பாட்டோடு இயங்காது விட்டால், அது ஒரு கட்சி அல்ல. கட்சி ஒரு கொள்கையை அறிவித்தால் இல்லை அதனை நான் ஏற்கமாட்டேன் என்றால், அவர் வேறு கட்சிக்குப்போக வேண்டும். இந்தக் கட்சியில் இருக்க முடியாது. இந்த விடயத்தில் எமது மத்தியக் குழுவும் செயற்குழுவும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கட்சியின் தீர்மானம். கொள்கைக்கு மாறாக, செயற்படுபவர்களுக்கு எதிராக கட்சி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். அவர்கள் தவறு செய்தது உறுதிப்படுத்தப்பட்டால் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். அவர்களுக்கு சட்ட ரீதியாகக்கூட நிவாரணம் எதுவும் கிடைக்காது என்பது இப்போது உறுதியாகியுள்ளது. எனவே, கட்சி ஒழுக்கக் கட்டுப்பாடு காரணமாக நடவடிக்கை எடுக்கும்போது, எந்த நீதிமன்றமும் அதில் தலையிடாது. ஆகவே, எதையும் செய்து விட்டு கட்சி ஒரு தீர்மானத்தை எடுத்தால் அதற்கு நான் இணங்க மாட்டேன். இது என்னுடைய சுதந்திரம், நான் இன்னொரு வேட்பாளரை ஆதரிப்பேன் என்று சொல்லி நடப்பவர் கள் விரைவில் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். ஆனால், வழக்கம் போலவே சிறீதரனின் கட்சியின் தலைமைக்குக் கட்டுப்படாமை, மதுபானசாலை அனுமதிப்பத்திரம் போன்ற குற்றச்சாட்டுக்களில் சிறீதரனிடம் தோற்றதுபோலவே இந்த சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டிலும் இந்த பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலையே உள்ளது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பெரிய-தலைகள்-தோற்றுப்போகும்-நிலை/91-362524

மன்னார் காற்றாலை திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம்

1 month 3 weeks ago
மன்னார் காற்றாலை திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம் மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குச் சகல தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அபிவிருத்தித் திட்டப் பணிகளை இடைநிறுத்துவதற்கு மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின்னுற்பத்தித் திட்ட விவகாரம் தொடர்பில் இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சில் ஈடுபடுபதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் மற்றும் இல்மனைட் கனிய வளம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று வியாழக்கிழமை விசேட கலந்துரையாடல் மின்சாரத்துறை அமைச்சர் அருண கருணாதிலக தலைமையில் இடம்பெற்றது. (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/மன்னார்-காற்றாலை-திட்டத்தை-இடைநிறுத்த-தீர்மானம்/175-362550

பனை மரங்களுக்கு தீ வைத்த விஷமிகள்!

1 month 3 weeks ago
பனை மரங்களுக்கு தீ வைத்த விஷமிகள்! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று மாலை கட்டைக்காடு ராணுவ முகாமிற்கு முன்னால் காணப்பட்ட நூற்றுக்கணக்கான பனைகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. நிலைமையை உணர்ந்து கொண்ட இராணுவத்தினர் தீயை அணைப்பதற்காக, தீயணைப்பு வாகனத்தை வரவழைத்ததுடன் மருதங்கேணி இராணுவ முகாமில் இருந்தும் தீயை அணைப்பதற்காக 200 இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். பற்றி எரியும் தீ ஏனைய பனை மரங்களுக்கும் வேகமாக பரவியது. சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், இராணுவ முகாமுக்கு முன்னால் காணப்படும் இந்த நூற்றுக்கணக்கான பனைகளுக்கு தீவைப்பது இது முதல் முறை அல்ல இதற்கு முன்பும் பல தடவைகள் இவ்வாறு தீ வைத்து அழித்துள்ளார்கள். இவர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்பது தொடர்பாக எங்களுக்கு தெரியவில்லை,ஆனாலும் இந்த பகுதி இராணுவத்தினுடைய எல்லை இல்லை, பொதுமக்கள் வந்து இங்கே மட்டைகளை வெட்டுவது, பனம் பழம் பொறுக்குவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களை ஒருபோதும் இராணுவத்தினர் தடுத்ததில்லை.ஆனாலும் இவ்வாறான கீழ்த்தரமான வேலைகளில் சிலர் ஈடுபடுகிறார்கள். அருகில் காணப்படும் மதுபான சாலையில் மது அருந்திவிட்டு காட்டுப்பகுதியால் சென்றவர்களே இவ்வாறு பனைகளுக்கு தீ வைத்துள்ளார்கள் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.[ https://newuthayan.com/article/பனை_மரங்களுக்கு_தீ_வைத்த_விஷமிகள்!

திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்!

1 month 3 weeks ago
திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்! யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டமானது நேற்றையதினம் (07) ஆரம்பமாகியுள்ளதுடன் இன்றுவரை முன்னெடுக்கப்படவுள்ளது. சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டமானது, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், பொதுமக்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். https://newuthayan.com/article/திஸ்ஸ_விகாரைக்கு_எதிரான_போராட்டம்!
Checked
Mon, 09/29/2025 - 06:46
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed