1 month 2 weeks ago
காசா நகரத்தினை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் - இஸ்ரேல் நிராகரிப்பு Published By: RAJEEBAN 09 AUG, 2025 | 11:22 AM காசா நகரத்தினை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் உலகம் நாடுகள் வெளியிட்டுள்ள கண்டனத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. இஸ்ரேலை கண்டித்து தடைகளை விதிக்கப்போவதாக எச்சரிக்கும் நாடுகளால் எங்கள் உறுதிப்பாட்டை குலைக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் ஹட்ஸ் தெரிவித்துள்ளார். காசாவை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்திற்கு ஐநாவும் உலக நாடுகள் பலவும் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. ஜேர்மனி இஸ்ரேலிற்கான ஆயுதவிநியோகத்தை நிறுத்தியுள்ளது. மோதல் மேலும் விரிவடைவது மேலும் பாரிய இடம்பெயர்வை உருவாக்கும்,மேலும் கொலைகளை மேலும் துயரத்தை அர்த்தமற்ற அழிவை இரத்தக்களறியை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் தெரிவித்துள்ளார். பிரிட்டிஸ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் இது தவறான நடவடிக்கை மேலும் இரத்தக்களறியை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/222146
1 month 2 weeks ago
Published By: VISHNU 08 AUG, 2025 | 10:31 PM (நா.தனுஜா) இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தி கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். வட, கிழக்கு மாகாணங்களில் இயங்கிவரும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அறிக்கை குறித்த தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி கடந்த வாரம் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் மற்றும் பேரவையில் அங்கம்வகிக்கும் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் தீவிர கரிசனை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இவ்விடயத்தில் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையின் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தன்மை, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் தொடரும் பேரவையின் தாமதம், சுயாதீனமானதும், நியாயமானதும், செயற்திறன்மிக்கதுமான செயன்முறையொன்றை ஸ்தாபிப்பதற்குப் பதிலாக இலங்கை அரசாங்கத்தில் தங்கியிருத்தல் என்பன தொடர்பில் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவேண்டும், ஐக்கிய நாடுகள் கட்டமைப்புக்குள் நடைமுறைச்சாத்தியமான வேறு வழிமுறைகளைப் பரிந்துரைத்தல், உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை முற்றுமுழுதாக சர்வதேசமயப்படுத்தி விரிவுபடுத்தல், சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான பொறிமுறையொன்றைப் பரிந்துரைத்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/222137
1 month 2 weeks ago
பெரும்பாலும் மக்களுக்கு தொல்லை கொடுக்கின்ற ஒலிபெருக்கி பயன்பாட்டை நடத்துவதே மதம் சம்பந்தபட்டவர்கள் தான்.ஒரு மத போதகரே அதை எதிர்பது பாராட்டுக்குரியது
1 month 2 weeks ago
ட்ரம்ப்பும் , புட்டினும் சந்திப்பது உறுதி 09 August 2025 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு எதிர்வரும் 15 ஆம் திகதி அலஸ்காவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, யுக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சாத்தியமான போர்நிறுத்தம் மற்றும் சமாதான உடன்படிக்கை குறித்து கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 2019 க்குப் பின்னர், இந்த இரண்டு தலைவர்களும், அமெரிக்க மண்ணில் தமது முதல் நேரடி சந்திப்பை நடத்தவுள்ளனர். யுக்ரைன் போர் நிறுத்தப்படவேண்டும். இல்லையேல் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா, ரஷ்யாவுக்கு விடுத்திருந்த காலக்கெடு நேற்று முடிவடைந்த நிலையில், இந்த சந்திப்பும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/413712/trump-and-putin-are-set-to-meet
1 month 2 weeks ago
கொக்குத்தொடுவாயில் இளைஞன் வெட்டிக்கொலை கொக்குத்தொடுவாய் களப்பு கடற்கரையில் தொழிலுக்காகச் சென்ற இளைஞன் ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (08) அதிகாலை நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலுக்கு 300 மீற்றர் தொலைவில், களப்பு கடற்கரையில் இருந்து 50 மீற்றர் தொலைவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் (07) இரவு தொழிலுக்காகச் சென்ற இளைஞன், இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தபோது, பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்களால் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதிகாலை 2:30 மணியளவில், தொழிலுக்காக வந்த மற்றொரு நபர், குறித்த இளைஞன் வீதியில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டுள்ளார். அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் என்பதால், யானை தாக்கியிருக்கலாம் என சந்தேகித்து, இளைஞனின் தந்தையையும் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரையும் அழைத்து வந்து பார்த்தபோது, உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, கொக்குளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணையை ஆரம்பித்தனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, சடலத்தை பார்வையிட்டு, மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரிக்கவும், கைரேகை பரிசோதனை மேற்கொள்ளவும், உடற்கூறு பரிசோதனைக்குப் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கவும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். பொலிஸார் மற்றும் தடயவியல் குழுவினர் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இளைஞனின் மாமனார் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவத்தில், கொக்குத்தொடுவாய் வடக்கைச் சேர்ந்த 21 வயதுடைய ஜெயராஜ் சுபராஜ் என்பவரே உயிரிழந்தவர். இவர் சிறந்த மரதன் ஓட்ட வீரராகவும், வடமாகாணத்தில் பல சாதனைகளைப் புரிந்தவராகவும் அறியப்படுகிறார். https://adaderanatamil.lk/news/cme3jji4y02b6qp4kghr74zb4
1 month 2 weeks ago
👍 அதே
1 month 2 weeks ago
அதை நன்றாக தெரிந்து கொண்ட செந்தில் றோட்டில் கொட்டி கிடங்கின்ற தேங்காயை எடுத்து ஈழ தமிழர்களுக்கு உடைத்து பேய்காட்டுகின்றார்.
1 month 2 weeks ago
நொச்சியாகமவில் இலக்கு வைக்கப்பட்ட சிறிதரன் எம்.பி! புலனாய்வு விசாரணை தீவிரம்!
1 month 2 weeks ago
உறவினர் பெயரில் வைத்திருக்கிறார் என்கிற குற்றச்சாட்டும் அவர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே அவர்களின் பெயரிலுள்ள சொத்துக்களும் விசாரிக்கப்படும். ஏற்கெனவே சில அரசியல்வாதிகளின் உறவினர்கள் இந்த விசாரணையில் இவ்வாறான சிக்கி தண்டனை பெற்றிருக்குகிறார்கள்.
1 month 2 weeks ago
கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 01 விடுமுறை நாட்களில் தாத்தாவும், பேரனும் ஒன்றாக பொழுதைக் கழிப்பது உண்மையில் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். அதற்காக நான் மூத்த மகளிடம் விடுதலைக்கு வருவது வழக்கம். ஒன்றாக விளையாடுவது, கதை சொல்வது மற்றும் பல சின்ன சின்ன செயல்களில் பேரப்பிள்ளைகளுடன் ஈடுபடுவேன். என் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகப் படிப்பு இலங்கை என்பதால், இங்கு பாடமுறை வித்தியாசம் என்பதால், அதை பெற்றோர்களே பார்த்துக்கொள்வார்கள் அப்படி ஒரு விடுமுறையில், கனடா, ஒட்டாவாவில் ஒரு சூடான ஆகஸ்ட் முன் இரவுப் பொழுது, மகளுக்கும் பேரனுக்கும் பெரிய வாக்குவாதம் வந்து விட்டது. மகள் தொலைபேசியில் முக்கிய வேலை விடயமாக கதைக்கும் பொழுது, பேரன் பெரிய சத்தம் போடும் ஒரு விளையாட்டு சிங்கத்தை, தாயின் பக்கத்தில் இருந்து விளையாடிக் கொண்டு இருந்தான். மகள் கொஞ்சம் தள்ளிப்போய் விளையாடு என்று பலமுறை சொல்லிப் பார்த்தாள். பேரன் 'இசை' கேட்பதாக இல்லை. கோபம் கொண்ட மகள், அதை இழுத்துப்பறித்துச் சென்று எங்கோ ஒளித்துவைத்தாள். ஆனால் பேரன் இன்னும் பெரிதாக சத்தம் போட்டு அழுது புரண்டான். உடனே நான் ஓடிச் சென்று அவனைத் தூக்கி கண்ணீரைத் துடைத்து, கொஞ்சம் ஆறுதல் படுத்தினேன். சும்மா அவனுக்காக எனது மகளைக் கடிந்தேன். அதனால் கொஞ்சம் அழுகையை நிறுத்திய இசை, 'தாத்தா, அம்மாவை ஹெல் [நரகம் Hell] இல் கொண்டு போய் போடுங்க என்று பிடிவாதமாக நின்றான். ஒருவாறு அவனுக்கு பிடித்தமான சில சிற்றுண்டிகளைக் கொடுத்து சமாதானம் ஆக்க முயற்சித்தேன். பின் ஆசைவார்த்தை கூறி, அவனை என் அறைக்குள் தூக்கிச் சென்று, சாய்வு நாற்காலியில், என் மடியில் இருத்தி, அவனுக்கு பிடித்த பெப்பா பன்றி [peppa pig] கதை விடியோவை சத்தம் இல்லாமல் போட்டேன். பின் கொஞ்ச நேரத்தால் அவனுக்கு பிடித்த "தாலாட்டு" ஒன்று மெதுவாகப் பாடினேன். "சின்ன பூவே சிங்காரப் பூவே சிஞ்சிதம் காதில் தேனாய் விழ சித்திரம் பேசும் கண்ணும் ஓய சிந்தை நிறுத்தி இமைகள் மூடாயோ?" "வடந்தை உன்னை தழுவாது இருக்க வண்ண மலர்களால் தூளி கட்டி வஞ்சகர் கண் படாது இருக்க வட்ட பொட்டிட்டு விழிகள் மூடாயோ ?" "பச்சை இலுப்பை அளவாய் வெட்டி பவளக்கால் தொட்டில் அழகாய் கட்டி படுக்க இதமாய் கம்பளி விரித்து பல்லாண்டு வாழ்வாய் நீ உறங்காயோ ?" "யாழ் எடுத்து ராவணன் மீட்க யாவரும் ஒன்றுகூடிக் கானம் கேட்க யானை துதிக்கையால் ஏணை ஆட்ட யாழ் மொழியானே கண் உறங்காயோ?" இசை பின் மடியை விட்டு இறங்கி, ஆனால், சாய்வு நாற்காலியிலேயே அருகில் இருந்து தாலாட்டை ரசித்துக்க்கொண்டு இருந்தான். அவனுக்கு இப்ப நான்கு அகவை. முந்தைய நாள், என் அறையில் அவன் விட்டுச்சென்ற பொம்மை ரயில்களால் அறை நிறைந்திருந்தது. ஆனால் இருள் வானத்தில் பரவியபோது, ஏதோ ஒரு மாயாஜாலம் கிளர்ந்தெழுந்தது. நான் சோர்வாலும், இன்று நேரத்துடன் இரவு உணவு எடுத்து, பசி நீங்கியதால் நாற்காலியில் தாராளமாக இளைப்பாறிக்கொண்டு இருந்தேன். இசை அந்த ரயில்களை பொறுக்கி எடுத்து, அதை விளையாடிக்கொண்டு, அமைதியாக படுத்துக்கொண்டு இருந்தான். திடீரென ஒரு தங்க ஒளி எங்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டது. நிலவொளியின் இறகுகளுடன் கூடிய அன்னப்பறவைகளால் இழுக்கப்பட்ட, மேகங்களின் தேர் வானத்திலிருந்து இறங்கியது. ஒரு மென்மையான குரல் எதிரொலித்தது, "வாங்க 'கந்தையா தில்லை', வாங்க 'இசை', வேறு எதிலும் இல்லாத ஒரு கோடை விடுமுறை உங்களுக்கு காத்திருக்கிறது." என்று மெதுவாகக் கூறியது. வரம் கொடுக்கும் தேவதைகள் வந்த போது குழப்பினேன் வந்த போது அவசரப்பட்டு வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்! கரம் பிடிக்க ஆசைகொண்டு கள்ளமாக அவளைத் தொட்டேன் கருத்த விழிகளால் சுட்டுஎரித்து பருத்த மார்பாள் பறந்துசென்றாள்! நான் அண்மையில் எழுதிய பாடல் வரிகளை முணுமுணுத்துக்கொண்டு , அவசரம் அவசரமாக, ஒரு அகல விளிம்பு கொண்ட தொப்பி (குல்லாய்) ஒன்றை எடுத்து, தலையில் அணிந்து, கண்ணாடியை பார்த்து அதைச் சரிபண்ணிவிட்டு, பேரனின் ஒன்று இரண்டு விளையாட்டு பொம்மைகளையும் எடுத்துக் கொண்டு சில வினாடியில் அதில் இருவரும் ஏறினோம். என்ன வேகம்! ஒரு நொடியில், அவை நட்சத்திரங்களைத் தாண்டி பறந்து கொண்டிருந்தன. சப்தரிசி மண்டலத்தின் ஒரு பகுதியான விண்மீன் குழுவான, வசிட்டரும் அருந்ததியும் (Mizar and Alcor) என் கண்ணில் தென்பட்டது. புராதன காலத்தில் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படும் மிகச் சிறந்த பிரம்மரிசிகள் (முனிவர்கள்) ஏழு பேரும் (சப்த ஏழு) வானில் நட்சத்திரங்களாக ஒளி வீசினார்கள். அவர்களின் அருகில் தான் இந்த இருவரையும் கண்டேன். அவர்கள் எப்போதும் அங்கே, இத்தனை ஆண்டுகள் ஆகியும் இணைந்து இருப்பதைக் கண்டு ஆச்சரியப் பட்டேன். கொஞ்சம் அருந்ததியுடன், 'ஏன் என் திருமணத்தின் போது, உன்னைக் காணமுடியவில்லை என்று கேட்ப்போம் எனறால்', அது முடியவில்லை!. எமது வானூர்த்தி வேகமாகப் பறந்துவிட்டது! பிரகாசிக்கும் ஒரு தலையுடன் துடைப்பம் போல ஒரு நீண்ட வாலுமாக வானில் வலம் வரும், கண்ணுக்கு விருந்தளிக்கும் சில வால் நட்சத்திரங்கள்களைத் தாண்டி சென்றோம். இசை அவ்வாற்றின் ஒன்றின் வாலை சிறிது நேரம் பிடித்து விளையாடினான். ஆனால் அது நழுவிப் போய்விட்டது. நாம் தரையிறங்கியபோது, அங்கு எல்லாம் மின்னும் ஒளியால் பிரகாசித்துக் கொண்டு இருந்தது. பூக்கும் தாமரைகளின் தோட்டங்கள், தேன் மற்றும் பால் ஆறுகள், மூடுபனி போல மிதந்து வரும் காதுக்கினிய சங்கீதம் எம்மை வரவேற்றது. அந்த விண்ணுலகத்தில், நாம் எம் பாதங்களை தரையில் வைக்கும் பொழுது, என் வாய் என்னை அறியாமலே; மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி மலையரையன் பொற்பாவை சிறுவனையும் தேறேன் எண்ணிலி உண் பெருவயிறன் கணபதி ஒன்று அறியான் எம்பெருமான் இது தகவோ இயம்பி அருள் செய்யீர் திண்ணென என்னுடல் விருத்தி தாரீரே ஆகில் திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக் கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா கடல் நாகைக் காரோணம் மேவி இருந்தீரே என்ற தேவாரத்தை தானாகப் பாடியது. கணவனின் கருத்துக்கு எதிராக செயல்படாத மனைவி உமையம்மை, சிறுவன் குமரன், உண்பதே தனது பிரதான வேலையாக கொண்டுள்ள கணபதி இவர்கள் வேண்டாம். விண்ணும் மண்ணும் ஆட்சி செய்து அனைத்து செல்வங்களும் உடையவராக விளங்கும் பெருமானே நீயே வேண்டும் என்று நான் பாட, அதற்கு ஏற்றவாறு இசை, தாளம் போட்டு ஆடி ஆடி வந்தான். அவனின் ஆட்டம், சிவபெருமானை வாசலுக்கே கொண்டு வந்தது. அவரது இமயமலை முடியில் இருந்து கங்கை பாய்ந்தது, அவரது கண்கள் அமைதியாலும் சக்தியாலும் பிரகாசித்தன. அவருக்கு அருகில் பார்வதி தேவி, அரவணைப்பு, அன்பு மற்றும் தாய்மை பாசத்தால் பிரகாசித்தார். அவர்களிடமிருந்து வெகு தொலைவில், ஒரு பெரிய போதி மரத்தின் நிழலில், கௌதம புத்தர் அமைதியாகவும் புன்னகையுடனும் அமர்ந்திருந்தார். கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் பாகம் 02 தொடரும் துளி/DROP: 1832 [கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/30751677411147503/?
1 month 2 weeks ago
இதற்குள் தலைவரின் குடும்பப் படிமங்கள் உள்ளன.
1 month 2 weeks ago
சங்கீதனும் ஜெயாத்தனும் வழங்கியுள்ள செவ்வி. இரு ஆண்டுகளுக்கு முன்னர் வந்தது, துவாரகா வெளிவருவதற்கு முன்னர். நல்ல கருத்துக்கள் தான் வழங்கியுள்ளனர்.🤔💭
1 month 2 weeks ago
இறைவன் ரொம்பவும் பிசி பாஸ். கள்வருக்கு பின்னால் எல்லாம் ஓட அவருக்கு நேரமில்லை. எவ்வளவு பிகருகளெல்லாம் வந்து குவியும் போது அவர் பொறுமையாக இருந்து ரசிக்க வேண்டாமோ?
1 month 2 weeks ago
கொள்ளையடிக்கும் எவரும் தங்களது பெயரில் எதுவுமே வைத்திருப்பதில்லை. இந்த துணிவில்த் தான் சொல்கிறாரோ?
1 month 2 weeks ago
தங்கத்தை புடமிடுவதுபோல சிறிதரன் புடமிடப்படுகிறார். மக்களுக்கு இன்னும் சேவை செய்ய உத்வேகம் அளிக்கப்படுகிறார். அவரை நம்பி வாக்களித்த மக்கள் அவரோடு இருந்து சவால்களை சந்திப்பர். வருமானத்திற்கு மேல் சொத்து குவித்தவருக்கு வாக்களித்த மக்கள், ஏன் சொத்தில்லாத சுத்தமான மனிதரை நிராகரித்தனர் என்பதுதான் கேள்வி. மக்களுக்கு சிறிதரனை பற்றி தெரியாமலா வாக்களித்தார்கள்?
1 month 2 weeks ago
சிறிதரனை அசிங்கப்படுத்தி அரசியலில் இருந்து ஒதுக்கி விட நினைப்பவர்கள் அவரை மக்களிடத்தில் உயர்த்தி அவருக்கு வெட்டிய குழியில் தாங்களே விழுந்து மடியப்போகிறார்கள். காழ்ப்புணர்ச்சி என்பது தன்னை திருத்தாமல் மற்றவர்களின் நற்பெயரை அழிப்பதிலேயே குறியாக இருக்கும். மக்களின் பிரச்சனையை புறந்தள்ளி தங்களை நிலை நிறுத்த போராடுகிறார்கள். அரசியல் மேடையில் அவருக்கு சேறு பூசி அவரை உயர்த்தி, தங்களை தாழ்த்திக்கொண்டார்கள். சிறிதரன் தன்னை மெய்ப்பிப்பதை விட லஞ்ச ஊழல் விசாரணைக்குழு மெய்ப்பிப்பது மேலானது. அதுதான் எல்லோரின் முகத்திரையையும் கிழிக்கும். முறைபாடளித்தவர்கள், இரகசியத்தகவல் வழங்கியவர்களும் தங்களை சுத்தமானவர்கள் என நிரூபிக்க வேண்டும்.
1 month 2 weeks ago
இவர்களாலானும் சரி, மற்றவர்களானாலும் சரி, ஏன் நகைகள் அணிந்து செல்ல வேண்டும்? இல்லாத இறைவன் இருக்கின்றார் எனில் தன்னை காண ஓடிவரும் பக்தர்களின் நகைக்களை கூட காப்பாற்ற முடியாதவரா அவர்?
1 month 2 weeks ago
உண்மை ஆனால் உலகம் ஒர் வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்படி நடந்து கொண்டு போகிறது இரண்டாம் உலகப்போரின் பின்பு வரையப்பட்ட நிகழ்ச்சி நிரல் அதை மாற்ற முடியாது ...அந்த நிகழ்ழ்சி நிரலைமாற்ற கூடிய சக்திகள் இன்னும் வரவில்லை...அது வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலையில் பல தேசிய இனங்கள் இருக்கின்றன... இன்று ஹாசாவில் பலஸ்தீனர்களுக்கு எதிராக நடக்கும் அட்டுழியங்களை (அதாவது அமெரிக்காவும்,இஸ்ரேலும் வெளுத்து கட்டுகிறார்கள் )ஏனைநாடுகள் சரி ,இஸ்லாமிய நாடுகள் சரி சும்மா அறிக்கை விட்டு கொண்டு தான் இருக்கின்றனர்....அவர்களுக்கே அந்த நிலை ... பலஸ்தீனம் என்ற நாடு உருவாக கூடாது என்பது அந்த நிகழ்ச்சி நிரலில் ஒன்று ...யுக்கோஸ்லோவாக்கியாவை 6 மாதங்களில் பிரித்து மூன்று நாடுகளை உருவாக்கியவர்கள் ,பலஸ்தீனருக்கு 60 வருடங்களுக்கு மேல் அழிவுகளை கொடுக்க்க்கின்றனர்
1 month 2 weeks ago
கடந்த வாரம் கனடாவிலிருந்து நல்லூர் திருவிழாவிற்கு சென்றவராகத் தான் இருக்க வேணும்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போகும் வழியில் இயற்கை கடன் கழிக்க போனவரை அடித்து, காயப்படுத்தி விட்டு 5 பவுண் நகை களற்றி எடுக்கபட்டதாக அறிந்தேன்.
1 month 2 weeks ago
அவர் அப்படி இல்லை என நான் கூறவில்லையே. ஆனால் சீமான் முகவர் என்பது தெரியும். முகவர்களின் அஜெண்டாவுக்குள் வீழ்ந்து இந்தியாவின் பெரும் அரசியல் கட்சிகளை நாம் பகைக்க கூடாது என்பதே என் கருத்து. ஒரு காங்கிரஸ் அரசியல்வாதியிடம் நீங்கள் இதை எதிர்பார்க்க முடியாது. அவர் இந்திய இராணுவ கொடுமையை எதிர்க்கவில்லை என்பதால் - அவரின் செம்மணி ஆதரவு குரலை நாம் உதாசீனம் செய்ய வேண்டுமா? இப்படி ஏதோ ஒரு காரணத்துக்காக (சுயநலத்துக்காக கூட) எமக்கு ஆதரவு தரும் குரல்களை கூட, “தானம் கிடைத்த மாட்டை, பல்லை பிடித்து பார்க்கும்” ஈழத்தமிழரின் புத்தியால்தான் -2009 இல் எல்லாரும் சேர்ந்து எம்மை வெளுத்தார்கள், கேட்க நாதியற்று கிடந்தோம்.
Checked
Mon, 09/29/2025 - 09:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed