புதிய பதிவுகள்2

AI பயனாளர்களின் நினைவுத் திறன் பாதிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

1 month 2 weeks ago
நீங்கள் சொல்வது உண்மைதான்.அன்று உங்களைப்போன்ற என்னைப்போன்ற சந்ததியினர்க்கு எந்த தொழில் நுட்பங்களும் இல்லாமல் இருந்த கிரகிப்பு தன்மை இன்றைய சந்ததியினர்களுக்கு இல்லை. கணணியோ கைத்தொலைபேசி இல்லாமல் எந்தவொரு செயல்களையும் செய்யமுடியாமல் தவிக்கின்றார்கள். இவர்கள் தான் அப்பா அம்மாவுக்கு ஒண்டும் தெரியாது என ஒரு பட்டத்தை மகுடமாக தலையில் தூக்கி வைத்து விட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்கின்றார்கள்.😃 வரம்புயர நீருயரும் நீருயர நெல் உயரும் நெல்லுயர குடி உயரும் குடி உயர கோன் உயரும்" அது அன்று...☝ இது இன்று...👇 சனத்தொகை கூடக்கூட வாகனங்கள் கூடும் வாகனங்கள் கூடக்கூட பெற்றொல் விலை கூடும் பெற்றோல் விலை கூடக்கூட சைக்கிள் கூடும் சைக்கிள் கூட ரோட்டுக்கள் சின்னனாகும் நடை பாதைகளும் பெருகும்.😂 இன்றைய சமுதாயத்தினர் சமாளித்து விடுவார்கள். என்னைப்போன்றவர்களோ " தம்பி நான் இந்த பெற்றோல் செட்டுக்கு முன்னால நிக்கிறம் வந்து கூட்டிக்கொண்டு போங்கோ எண்ட சிஷ்டம் கண்டியளோ 🤣

தமிழ்நாட்டில் குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்ய காரணம் என்ன?

1 month 2 weeks ago
அந்தக்காலங்கள் அளந்த வாழ்க்கை. எல்லோரும் எல்லாம் இருந்தது.அளவோடு உண்டார்கள். ஆனந்தமாய் வாழ்ந்தார்கள்.சுற்றம் சுற்றாடால் பாதிக்கும் வகையில் எதையுமே உருவாக்கவில்லை. இன்றைய காலம் எல்லோருக்கும் எல்லாம் தெரியும். எல்லோரும் புத்திசாலிகள். நனைச்சு சுமக்கின்றார்கள்.அவ்வளவுதான். 😂

செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்

1 month 2 weeks ago
இதில பகிடி என்ன வென்றால் போராட்டம் தொடங்கிய காலம்(அகிம்சை ,ஆயுதம் முதல் மற்றும் இன்றுவரை ) வகுப்பு எடுத்தல் கருத்து சொல்லுறவையல் எல்லாம் ஒன்றை சொல்லுவினம் இந்தியாவுடன் இணைந்து செயல் பட் வேணும் ... உலக ஆயுத போராட்ட குழுக்களுடன் இணைய வேணும்.(நாங்கள் பலஸ்தீன போராட்ட அமைப்புகளுடன் சேர்ந்து போராட வேணும் ...அப்படி சேர்ந்து போராடியவையல் பின்பு இலஙகை அரசுடன் கைகோர்த்து போராட்ட த்தை அழிப்பதில் முன் நின்றனர்") எவர் எமக்காக் குரல் கொடுத்தாலும் நாங்கள் விழுந்து கும்பிட வேணும் என இப்ப சொல்லுயினம்..

நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை

1 month 2 weeks ago
இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் திருவிழாக்கள் என்பது ஒரு களியாட்டம் மாதிரி. இதை விட்டால் அந்த நாட்டு மக்களுக்கு என்ன ஒன்று கூடல் இருக்கின்றது? பிரிந்த உறவுகள் ,குடும்ப உறவுகள் ஒன்று கூடலாகவும் இதை பார்க்கலாம்.ஒவ்வொரு நாடுகளுக்கும் களியாட்டங்கள் வேறுபடும்.ஐரோப்பிய நாடுகளில் இப்படியான கொண்டாட்டங்கள் மத ரீதியாக இல்லாமல் மது தளம்ப ஊர் கொண்டாட்டங்கள் நடைபெறும். அங்கேயும் கள்ளர் காடையர் ஆக்கினைகள் நிறைய இருக்கும்.காவல் துறையும் அளவிற்கதிகமாக குவிக்கப்பட்டிருப்பர். அப்படியான கொண்டாட்டங்களை யாரும் குறை சொல்வதில்லை. இந்த உலகு களவில்லாத உலகமா? இல்லையே!

ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்

1 month 2 weeks ago
அடி வாங்கி மாசக்கணக்கான பின்னும்…கைப்புள்ள போல நாங்கள் அடித்தோம் என புலம்புவதில் இருந்தே தெரிகிறது வெற்றி பாக்கிஸ்தான் பக்கமே என்பது 🤣

நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை

1 month 2 weeks ago
இறைவனே அலங்காரத்துடன் ஜெகஜோதிய காட்சியளிக்கும் பொழுது பக்தர்கள் ஆண்டியாக செல்ல முடியுமா? அதுவும் அலங்கார கந்தனிடன்...🤣 திருடர்கள் பிழைப்புக்கு திருடுகிறார்கள் நாட்டின் அமைச்சரவை ஏன் இந்த திருடர்களை நல்வழிப்படுத்த முடியாது ? என் அடுத்த கேள்வியை முருகன் கேட்கலாம் 😄 உங்களது கேள்வி, 1979 களில் சில தமிழ் புரட்சிகர இளைஞர்கள் கேட்டடதை ஞாபகப்படுத்துகின்றது. 😍..இன்னும் இப்படியான கேள்வி இருக்கின்றது...இந்த கேள்வி தொடரும் ஆனால் அதைவிட பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு பெருகும் ...நகைளை அணிந்து செல்வார்கள் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் ,திருடர்கள் வாழ வழிகிடைக்கும் ,பொலிசார் வேலை செய்வார்கள் ... பக்தர்கள் நகை அணிய வேண்டும் ....திருடர்களுக்கு வேலை வாய்ப்பை அரசு தேடிக் கொடுத்து புரட்சிகரமான சக்தியாக மாற்ற வேண்டும் ...அரசர்கள் எவ்ழியோ மக்கள் அவ்வழி என்ற நிலைக்கு புர🤭ட்சி செய்ய வேண்டும் ...

ஜெனீவா தீர்மானமும் சுமந்திரனின் சதிக்கூட்டணியும்.

1 month 2 weeks ago
2015 இல் சுமந்திரன் தொடக்கியதை 2025 இல் கஜேந்திரன் முடித்து வைக்கிறார். ஆணையாளரின் பதில் கடிதம் சொல்லும் சொல்லாத செய்திகள்! - --- --- --- ---- ----- *உள்ளகப் பொறிமுறையே பிரதானம். *தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கோரிக்கைகளை முன்வைக்கக்கூடாது. சொல்லாது சொல்லும் செய்தி என்ன? *ஜேவிபி அரசாங்கத்தை உருப்பெற வைப்பது! *சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இலங்கை தானாக இணைந்தால் சிறப்பு, ஆனால்...! *இன அழிப்பைப் பற்றி மேலோட்டமாக கதைக்கலாம். குறிப்பாகவோ வலுவாகவோ அதைக் கேட்கக் கூடாது. *சுமந்திரன் 2015 இல் ஓடிக் கொடுத்த Relay Race, 2025 இல் கஜேந்திரகுமார் நிறைவு செய்தார். --- ----- --- --- ------ கஜேந்திரகுமாருக்கு அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில் உள்ள பிரதான இரண்டு ஆங்கிலச் சொற்களின் பிரகாரமும், கொழும்பில் உள்ள சில இராஜதந்திர வட்டாரங்களோடு இன்று சனிக்கிழமை உரையாடிய விளக்கத்தை மையப்படுத்தியும் இக் கட்டுரையை எழுதுகிறேன்... ஜெனீவா மனித உரிமை சபையின் ஆணையாளருக்கு தமிழ்த்தேசிய பேரவை அனுப்பிய கடிதத்திற்கு பதில் கிடைத்திருப்பதாக பெருமைப்படுகிறார்கள். ஆனால், உண்மை நிலையோ வேறு! அந்த பதில் கடிதத்தின் உள்ளடக்கம் - பொருள் என்ன என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆணையாளர் தன்னுடைய பதில் கடிதத்தில் இலங்கையும், மனித உரிமை சபையும் செய்யவுள்ள “பொறுப்புகள்” பற்றி இரண்டு ஆங்கிலச் சொற்களில் வரைவிலக்கணம் செய்கிறார். 1) Comprehensive Process (SL) 2) Complementary Strategies (OHCHR & UNHRC) இந்த இரண்டு சொற்களையும் விரிவாக ஆராய்ந்தால்-- 1) Comprehensive Process (SL) என்ற ஆங்கிலச் சொல்லின் உள்ளடக்கம் என்பது இலங்கையின் ‘விரிவான செயல்முறையை’ குறித்து நிற்கிறது. அதாவது, பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையையும் சர்வதேசத்தின் நம்பிக்கையையும் இலங்கை முதலில் வென்றெடுக்க வேண்டும் என்ற தொனியில் அச் சொல் அமைகிறது.. இன்னும் அழுத்திச் சொல்வதானால் பொறுப்புக்கூறல் என்ற முறையில் இலங்கைக்கு இருக்கக்கூடிய ஆகக் குறைந்த செயல் வடிவம் அது. 2) Complementary Strategies என்ற ஆங்கிலச் சொல்லின் உள்ளடக்கம் என்பது ‘குறை நிரப்புகின்ற மூலோபாயம்’ என்பதைக் குறித்து நிற்கிறது. அதாவது, இலங்கை நடத்துகின்ற உள்ளக விசாரணைகளின் பற்றாக்குறைகள் அல்லது விடுபட்டுள்ளதாக கருதப்படுகின்ற விவகாரங்கள் சிலவற்றுக்கு குறுகிய சில நடவடிக்கைகளை பொது நியாயாதிக்கம் எனப்படும் (Universal Jurisdiction System) முறை ஊடாக சில நாடுகளின் நீதிமன்றங்கள் வேண்டுமானால் பார்த்துக்கொள்ளலாம். மனித உரிமைச் சபை உப்புச் சப்பற்ற தீர்மானத்தைக் கவனிக்கும் அல்லது அந்த விசாரணைகளுக்கான ஏற்பாடுகளை செய்யும் என்ற பொருளில் அது அமைகிறது. அதேநேரம், இலங்கை செயற்படுத்த வேண்டிய, விரிவான செயல்முறை என்ற Comprehensive Process என்ற ஆங்கிலச் சொல்லில் இருந்தும், ஆணையாளர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ள சில விடயங்களில் இருந்தும் மேலும் சில கற்பிதங்களை புரியக் கூடியதாகவுள்ளது. அதாவது, செயல் திறன் மிக்க நியாயமான(Independent fair) அதுவும் சர்வதேச சட்டங்களின் நியமங்களை முழுமையாக திருப்பித்திப்படுத்தக் கூடியதாக இலங்கை நடத்தவுள்ள உள்ளக விசாரணை அமைய வேண்டும் என்ற தொனி தெரிகிறது. அதாவது ஆணையாளர் மறைமுகமாக என்ன சொல்ல வருகிறார்? சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court - ICC) இலங்கை முதலில் வேண்டுமானால் இணைந்து கொள்ளலாம். மனித உரிமைகள் பற்றி சர்வதேச மட்டத்தில் ஏற்கப்பட்டுள்ள மனித உரிமைகள் விதிகள் அனைத்தையும் இலங்கை ஏற்றுக்கொள்வது நல்லது. ஆனால், இவையெல்லாம் பழைய குற்றங்களுக்கு செல்லுபடியாக வேண்டியது இல்லை. எதிர்காலம் மட்டுமே முக்கியம். கடந்தகாலப் பொறுப்புக்கூறல் கண்துடைப்பாக இருந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை. ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய ஐ நா உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டிருக்கிறது. ஆகவே, எதிர்வரும் காலத்தில் எப்போதோ ஒரு நாள் ICC இல் இலங்கையை இணைத்த பின்னர் நடத்தவுள்ள விசாரணை எப்படிப்பட்டதாக இருக்கும்? இலங்கை இணைந்தாலும் ஈழத்தமிழர்கள் கோருகின்ற விசாரணைகள் நடைபெறக் கூடிய வாய்ப்புகள் இருக்காது. அப்படி நடந்தாலும் கூட ஜேவிபி என்பிபி அரசாங்கத்தின் காலத்தில் இருந்து தான் விசாரணைகள் நடைபெறலாம். ஏனெனில், ஆட்சி மாற்றம் என்பதை அமெரிக்கா போன்ற மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகள் நம்புகின்றன. Universal Jurisdiction System என்ற முறைமை ஜெனீவாவினால் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவ உயர் அதிகாரிகள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அந்தந்த நாடுகளில் வைத்து அவர்களை விசாரணை செய்யும் முறை. ஆகவே, Universal Jurisdiction என்ற இந்த மாதிரியான பலவீனமான முறைமைகள் நடைமுறையில் சில மேற்கு நாடுகளிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இருப்பதால், அந்த நடைமுறைகளையும் வைத்துக் கொண்டு, இனிமேல் பழைய குற்றங்கள் பற்றிய பொறுப்புக்கூறலை நீர்த்துப்போகச் செய்வதே மேற்குலகத்தின் பிரதான இலக்கு. ஆனால், மனித உரிமை பேரவையில் இதைத் தொக்க வைத்திருந்தால், இலங்கையில் எதிர்பாராத நிலை ஏதும் ஏற்பட்டால் மீண்டும் அழுத்தத்தை அதிகரிக்கலாம். ஆனால் இப்போதைக்கு இல்லை. அதாவது, புதிய ஆட்சியில் புதிய நகர்வுகளை மேற்கொள்ளும் திட்டமாகவே (Comprehensive Process (SL) (Complementary Strategies -OHCHR & UNHRC) என்ற இந்த இரண்டு ஆங்கிலச் சொற்களும் அமைந்துள்ளன என்றால் அதில் மாற்றுக் கருத்தில்லை. அதாவது, பழைய விவகாரங்களைக் கைவிட்டு புதிய அணுகுமுறையில் சென்று தமக்குரிய புவிசார் அரசியல் - பொருளாதார நலன்களில் மேற்கு - ஐரோப்பிய நாடுகள் செயற்படுவதற்கு ஈடாகவே ஆணையாளரின் பதில் அமைந்துள்ளது. அதற்கு ஏற்பவே தமிழ்த் தேசிய பேரவையும் கடிதத்தை தயாரித்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஐ.நா அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு அல்லது அவர்களின் ஆலோசனையின் (Advice) பிரகாரம் கடிதம் எழுதியிருக்கலாம் என்பதிலும் சந்தேகம் இல்லாமலில்லை. இன அழிப்பு விவகாரம் பற்றி சர்வதேச நீதிமன்றத்தில் (International (Court of Justice -ICJ) ஈழத்தமிழர்கள் ஏதேனும் ஒரு நாட்டை பிடித்து வழக்குத் தாக்கல் செய்தால், இலங்கை, அமெரிக்க- இந்திய அரசுகளின் புவிசார் அரசியல் - பொருளாதார நலன்களுக்கு ஒத்திசைவாக இருக்காது என்ற நோக்கில், ஈழத்தமிழர் விவகாரத்தை ஐநா இவ்வாறு கையாளுகிறது. இப் பின்புலத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் 2015 இல் ஓடிக் கொடுத்த அஞ்சல் ஒட்டத்தை (Relay Race) 2025 இல் கஜேந்திரகுமார் நிறைவு செய்துள்ளார் என்றே பொருள் கொள்ள முடியும். பிரபல ஜிகாதியாக அறியப்பட்ட அல்-ஜூலானி என்பவரின் தலைக்கு பத்து மில்லியன் கொடையாக சில வருடங்களுக்கு முன் அறிவித்திருந்தது அமெரிக்கா. தற்போது, அப்படியான பயங்கரவாத ஜிகாதியோடு அதே அமெரிக்கா கைகோர்த்து சிரியாவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, ஜேவிபியோடு கூட்டு வைப்பதில் மேற்கு - ஐரோப்பிய நாடுகளுக்கு எந்த ஒரு வில்லங்கமும் இருக்காது. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர் https://www.facebook.com/1457391262/posts/pfbid03ddadDcotUwMxUHCdKHhsMJT5ctijLnSzg8gpUfndY4oydbKoVGi6Mv6CS1rGqE6l/?

செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்

1 month 2 weeks ago
இந்திய பிரபலமான புனித யாத்திரை நகரமான தர்மஸ்தலத்தில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உடல்கள் உடல்கள் புதைக்கபட்ட மனித புதைகுழி குறித்து தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. நான் நூற்றுக்கணக்கான சடலத்தை புதைத்தேன்'' - India-வை உலுக்கிய Dharmasthala Issue - என்ன நடக்கிறது?

பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள 135 வைத்தியசாலைகள் மூடப்படக் கூடிய அபாயம் ; பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் திங்கள் முதல் தொடர் வேலை நிறுத்தம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

1 month 2 weeks ago
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க முயற்சிக்கின்றோம் - சுகாதார அமைச்சர் Published By: DIGITAL DESK 2 09 AUG, 2025 | 04:05 PM (எம்.மனோசித்ரா) அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை திங்கட்கிழமை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தினை தடுப்பதற்கு சுகாதார அமைச்சின் சார்பில் சகல முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. இனங்காணப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு வழங்கப்படும். எனவே பொது மக்களுக்கு தடையற்ற மருத்துவ சேவையை வழங்குவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சனிக்கிழமை (09) இடம்பெற்ற இலங்கை அவசர மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் வருடாந்த ஆய்வு மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கு வேலை நிறுத்த போராட்டத்துக்குச் செல்வதற்கான காரணமொன்று இருக்கும் என நான் நினைக்கவில்லை. அவர்களுடன் நான் கலந்துரையாடினேன். சில இடங்களிலுள்ள பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளன. தற்போது சேவையாற்றும் வைத்தியர்கள் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுடன் இணைக்கப்பாட்டுடனேயே பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு நாம் நியாயமான தீர்வொன்றை வழங்குவோம். மக்களுக்கு சிறந்த சேவை வழங்க வேண்டும் என்பதே அனைவரதும் நோக்கமாகும். எவ்வாறிருப்பினும் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே நாம் அந்த சேவையை ஆற்றிக் கொண்டிருக்கின்றோம். கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகளுக்கு தற்போது படிப்படியாக தீர்வினை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். எனவே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடாது என எதிர்பார்க்கின்றோம். கடந்த ஆட்சிக் காலங்களில் செயற்பட்டதைப் போன்றே தற்போதும் சில அதிகாரிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு நியாயமானதல்ல. சுகாதார அமைச்சின் அனைத்து அதிகாரிகளும் ஒரே இலக்குடனேயே பணியாற்றுகின்றனர். சுகாதாரத்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு என்ன காரணம் என்பதை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நன்கு அறியும். தட்டுப்பாடு நிலவும் மருந்துகளை விரைவாக கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. திங்களன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தினை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் சுகாதார அமைச்சின் சார்பில் நாம் முன்னெடுத்திருக்கின்றோம். எமது முயற்சி வெற்றியளிக்கும் என்று நம்புகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/222173

முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனவர் சடலமாக மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ரவிகரன் வலியுறுத்து

1 month 2 weeks ago
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன் : சந்தேகத்தில் 6 இராணுவத்தினர் கைது : மூவருக்கு விளக்கமறியல்! 09 AUG, 2025 | 08:08 PM முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 6 இராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் 3 இராணுவத்தினரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை (8) முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போன நிலையில் இன்று காலை (09) குறித்த குடும்பஸ்தர் குளத்திலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த இளைஞனின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு எடுத்து சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்ட நிலையில், சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த இராணுவ முகாமிற்கு சென்ற ஐவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் மற்றுமொரு நபருக்கு முதுகு பகுதிகளில் பலத்த அடிகாயங்கள் ஏற்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற நிலையில் ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என அழைப்பு எடுத்து வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடத்தியதில், முத்தையன்கட்டில் வசிக்கும் எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற 32 வயதுடைய ஏழு மாத குழந்தையின் தந்தையே காணாமல்போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (07) இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததாகவும் அதனையடுத்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இராணுவ முகாம் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவ் இராணுவ முகாமிலுள்ள கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தகரங்கள் தருவதாக கூறி அப்பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு இராணுதினர் ஒருவரால் தொலைபேசியில் கூறப்பட்டுள்ளது. அதனையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஐவர் சென்றுள்ளனர். இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களுக்கு தடிகள், கம்பிகளால் இராணுவத்தினர் துரத்தி துரத்தி குறித்த இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள குளம் வரை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதலால் என்ன செய்வதென்று தெரியாது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக ஓடி தப்பி வந்ததாகவும் 20 ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் தம்மை தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் ஒருவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இராணுவ முகாமிற்கு சென்ற ஐந்து நபர்களில் நால்வர் திரும்பி வந்துள்ள நிலையில் ஒருவர் மாயமாகிய நிலையில், இன்று காலை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இன்றையதினம் இராணுவ முகாமிற்கு சென்ற இராணுவ வாகனம் வீதியில் பொதுமக்களால் வழிமறிக்கப்பட்டு நியாயம் கிடைக்க வேண்டும் என கேட்டுள்ளனர். காணாமல்போன குறித்த இளைஞர் தப்பி ஒடும்போது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள முத்தையன்கட்டு குளத்தின் பின்பகுதியில் வீழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதி கிராம மக்கள் நீரில் இறங்கி நேற்று வெள்ளிக்கிழமை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோதும் குறித்த குடும்பஸ்தரின் சடலம் இன்றுகாலை மீட்கப்பட்டது. இந்நிலையில் குறித்த காணாமல்போன இளைஞனின் சகோதரரால் குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/222183

மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!

1 month 2 weeks ago
மன்னார் சிந்துஜா மரணம் தொடர்பில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் மூவர் கைது 09 AUG, 2025 | 08:16 PM மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண் மரணத்துடன் தொடர்புடையதாக பணி நீக்கம் செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக ஐவரில் மூவர் இன்றைய தினம் சனிக்கிழமை (9) கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் ஜூலை மாதம் 28 உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண்ணின் மரணத்திற்கு நீதி கோரி வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. மருத்துவக் கவனயீனத்தால் ஏற்பட்ட அதீத இரத்தப்போக்கு காரணமாக குறித்த இளம் தாயின் மரணம் சம்பவித்துள்ளது என மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளிவந்தது. இந்த நிலையில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக இரண்டு தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக குறித்த ஐவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குறித்த ஐவரில் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும், இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர் களும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை(9) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் போது மன்னார் நீதவான் குறித்த மூவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் சந்தேக நபரான வைத்தியர் ஒருவரையும், தாதிய உத்தியோகத்தர் ஒருவரையும் கைது செய்ய உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார். இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/222178

முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனவர் சடலமாக மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ரவிகரன் வலியுறுத்து

1 month 2 weeks ago
முல்லைதீவில் இளைஞன் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை முல்லைத்தீவு முத்தையன் கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டமை மற்றும் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்ற இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தப்பியோடிய இளைஞர்களில் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் இன்று (9) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் 7 இளைஞர்கள் சென்றதாகவும், அவர்கள் இராணுவத்தால் விரட்டப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளதுடன் தப்பியோடிய ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொலைபேசி ஊடாக உரையாடியதுடன் அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டேன். இது தொடர்பில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் பேசியிருந்தேன். பொலிஸார் இது தொடர்பில் நீதியான வகையில் விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர். அத்தோடு, எமது உயர்மட்ட அமைச்சர்களுக்கும் இது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளேன். அவர்களும் இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளனர். ஆகவே, இச் சம்பவம் தொடர்பில் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு உண்மைத் தன்மையினை வெளிபபடுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படும் எனத் தெரிவித்தார். -வவுனியா தீபன்- https://adaderanatamil.lk/news/cme3z7wt802bqqp4k1h7g2pps

ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்

1 month 2 weeks ago
ஆபரேஷன் சிந்தூர்: எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன? - இந்திய விமானப்படை தலைவர் புதிய தகவல் பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, இந்தியா நடத்திய ராணுவ நடவடிக்கைகள் பற்றி விமானப் படை தலைவர் பேசினார். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்த ஆண்டு மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த ராணுவ மோதலின்போது ஐந்து போர் விமானங்களும் ஒரு பெரிய விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தலைவர் மார்ஷல் ஏபி சிங் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதைப்பற்றி பேசியுள்ளார். இந்தியா நடத்திய ராணுவ நடவடிக்கைகள் பற்றி விமானப் படை தலைவர் பேசினார். ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மே 6, 7 இரவு அன்று நடந்த தாக்குதலில் குறி வைக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருந்தது. இந்த நடவடிக்கைகளுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயரிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் தொடங்கியது. பெங்களூருவில் நடைபெற்ற 16வது ஏர் சீஃப் மார்ஷல் எல் எம் கத்ரே சொற்பொழிவில் ஏபி சிங் கலந்து கொண்டார். அப்போது, இந்த ராணுவ நடவடிக்கையின்போது இந்திய விமானப்படை குறைந்தது ஐந்து பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் மற்றும் ஒரு பெரிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தார். பெரிய விமானம் எலிண்ட் (ELINT) அல்லது ஏஇடபிள்யு&சி (AEW&C) ஆக இருக்கலாம் எனத் தெரிவித்தார். ஏபி சிங்கின் கூற்றுப்படி விமானம் தரையிலிருந்து 300 கிலோமீட்டர் தூரத்தில் குறிவைக்கப்பட்டது. இது தற்போது வரை மேற்கொள்ளப்பட்டதிலே தரையிலிருந்து வான் இலக்குகளைக் குறிவைக்கும் மிகப்பெரிய தாக்குதல் ஆகும் என்றார். '80-90 மணி நேரம் வரை நீடித்த உயர் தொழில்நுட்ப போர்' பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, இந்தியா – பாகிஸ்தான் ராணுவ மோதலை 'உயர் தொழில்நுட்ப போர்' என்று விவரித்தார். இந்தியா – பாகிஸ்தான் ராணுவ மோதலை 'உயர் தொழில்நுட்ப போர்' என்று அவர் விவரித்தார். "இது இந்தியா சண்டையிட்ட உயர் தொழில்நுட்ப போர் என நான் கூறுவேன். இதில் அவர்களின் (பாகிஸ்தான்) வான் பாதுகாப்பு அமைப்புக்கு மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தினோம்" எனத் தெரிவித்தார். மேலும், "இந்த இழப்புகளைப் பார்த்த பிறகு, இனியும் இதைத் தொடர்ந்தால் அதிக இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தது. அதனால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தனர். இது உயர்மட்ட அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது" என்றார். மே 7-10 வரை நடைபெற்ற ராணுவ மோதல் தொடர்பாக பல்வேறு வகையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. மே 31 ஆம் தேதி, இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான், பாகிஸ்தான் உடனான மோதலின்போது இந்திய விமானப்படை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்திருந்தார். இந்தியா - அமெரிக்கா உறவில் ஏற்பட்டுள்ள 'கசப்புணர்வு' பாகிஸ்தானுக்கு சாதகமாகுமா? 'இந்தியாவுக்கு பாகிஸ்தான் கச்சா எண்ணெய் விற்கலாம்' - பாகிஸ்தானின் எண்ணெய் வளம் பற்றிய ஒரு பார்வை இந்தியாவை விமர்சித்துவிட்டு பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்த டிரம்ப் - எந்த துறைகளுக்குப் பாதிப்பு? 'ஆபரேஷன் சிந்தூரை' நிறுத்த சொன்னது யார்? வேறுபடும் மோதி - டிரம்ப்! இந்திய விமானங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறிய பாகிஸ்தானின் கூற்றையும் அவர் முற்றிலுமாக மறுத்தார். எனினும், கடந்த மாதம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா – பாகிஸ்தான் மோதலில் 'ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது' எனத் தெரிவித்தார். ஆனால், எந்த நாடுகளின் விமானங்கள் பாதிக்கப்பட்டன என டிரம்ப் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்னதாக ஐந்து இந்திய ராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. எனினும், இந்தியா இந்தக் கூற்றை தொடர்ந்து மறுத்து வருகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78znz37862o

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

1 month 2 weeks ago
மன்னாரில் காற்றாலை அமைத்தல், கனிய மணல் அகழ்வுக்கு எதிராக தொடர் போராட்டம் : பேசாலை கிராம மக்களும் இணைவு 09 AUG, 2025 | 02:46 PM மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி 2வது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (9) 7 வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராம மக்கள் கலந்து கொண்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். மன்னார் தீவு பகுதியில் 2வது கட்டமாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) பாரிய காற்றாலைகளின் பாகங்கள் வாகனங்களில் மன்னார் நகர பகுதியை நோக்கி எடுத்து வரப்பட்ட நிலையில் மன்னார் தள்ளாடி சந்தியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் தள்ளாடி சந்தி மற்றும் மன்னார் சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக மக்களும்,பொது அமைப்புக்கள் இணைந்து சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில்,மக்களின் எதிர்ப்பையும் மீறி காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பாகங்கள் மன்னார் நகர பகுதிக்கு பலத்த பொலிஸாரின் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது. எனினும் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம் பெற்று வந்தது.இந்த நிலையில் குறித்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பேருந்துகள் மூலம் இன்றைய தினம் சனிக்கிழமை (09) வருகை தந்து குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கினர். குறிப்பாக மன்னார் தீவு பகுதியில் ஏற்கனபேவ அமைக்கப்பட்ட காற்றாலை மின் கோபுரங்களினால் மீனவர்கள் பாரிய அளவில் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு,காற்றாலைகள் காணப்படும் பகுதிகளில் வசித்து வருகின்ற மக்கள்,குறிப்பாக வயோதிபர்கள்,சிறுவர்கள்,கர்ப்பிணித்தாய்மார்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும் காற்றாலை கோபுரங்கள் அமைத்ததன் காரணமாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளினால் அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக பேசாலை கிராமம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாரிய வெள்ள நீர் தேங்கிய நிலையில் அவற்றை கடலுக்குள் செலுத்த தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகவும் அந்த மக்கள் தெரிவித்தனர். மேலும் மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் கணிய மணல் அகழ்வுக்கு நாங்கள் ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டோம் எனவும் மன்னார் தீவை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் குறித்த இரு திட்டங்களையும் நிறுத்த ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மன்னார் நகர சுற்று வட்டத்தில் இருந்து பதாகைகளை ஏந்தியவாறு மாவட்டச் செயலக பிரதான வீதியூடாக சென்று மீண்டும் நகர சுற்று வட்ட பகுதியை சென்றடைந்தனர். பின்னர் நகர சுற்றுவட்ட பகுதியில் தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/222161

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை

1 month 2 weeks ago
09 AUG, 2025 | 01:07 PM (எம்.மனோசித்ரா) ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஞாயிற்றுக்கிழமை (10) நாடளாவிய ரீதியில் 2587 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளன. இம்முறை சிங்கள மொழி மூலம் 2,31,637 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 76,313 மாணவர்களும் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளனர். அதற்கமைய ஒட்டு மொத்தமாக 3,07,951 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பரீட்சை நிலையங்களுக்கான முழுமையான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி தெரிவித்தார். கொழும்பிலுள்ள பரீட்சை திணைக்களத்தில் சனிக்கிழமை (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து அதற்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே ஏதேனும் அனர்த்த நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து தேவையான ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும். யாழ்ப்பாணத்தில் தீவுகளில் நிறுவப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கு வினாத்தாள்களைக் கொண்டு சேர்ப்பதற்கு கடற்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏதேனும் தேவை ஏற்படும் பட்சத்தில் விமானப்படை மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படும். தடையற்ற மின் விநியோகம் தொடர்பில் இலங்கை மின்சாரசபையுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் குறித்து இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று அவசர மருத்துவ நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பரீட்சாத்திகள் காலை 8.30 மணிக்கு பரீட்சை மண்டபங்களுக்கு சென்று விட வேண்டும். முதலில் இரண்டாம் பகுதி வினாத்தாள் வழங்கப்படும். காலை 9.30க்கு பரீட்சை ஆரம்பமாகி 10.45க்கு நிறைவடையும். அதன் பின்னர் முற்பகல் 11.15க்கு முதலாம் பகுதி வினாத்தாள் வழங்கப்படும். 12.15க்கு பகுதி ஒன்று பரீட்சை நிறைவடையும். பரீட்சைக்கு தேவையான உபகரணங்கள் மாத்திரமமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படும். கைக்கடிகாரத்தை உபயோகிக்க முடியும். ஆனால் நவீன கைக்கடிகாரங்களை உபயோகிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்றார். https://www.virakesari.lk/article/222152

முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனவர் சடலமாக மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ரவிகரன் வலியுறுத்து

1 month 2 weeks ago
09 AUG, 2025 | 03:32 PM முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்துஐயன்கட்டு பகுதியில் கடந்த வியாழக்கிழமை (07) அன்று இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போய் தேடப்பட்டுவந்த நபர் முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களிடம் உடனடியாக வாக்குமூலங்களைப் பெறுவதுடன், துரிதகதியில் விசாரணைகளை மேற்கொண்டு, குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 07.08.2025 இரவு இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போன நிலையில் தேடப்பட்டுவந்த முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்துஐயன்கட்டு இடதுகரை, ஜீவநகர் பகுதியைச்சேர்ந்த 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்னும் குடும்பஸ்தர் முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இன்று சனிக்கிழமை (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறிப்பாக கடந்த 07.08.2025 வியாழக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்ட குறித்த நபர் உள்ளடங்கலாக முத்துஐயன்கட்டு இடதுகரை ஜீவநகர் பகுதியைச் சேர்ந்த ஐவர், முத்துஐயன்கட்டுக் குளத்திற்கு அண்மைய பகுதியில் அமைந்துள்ள 63 ஆவது படைப்பிரிவு இராணுவ முகாம் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவ்வாறு இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை அறிந்து அப்பகுதி மக்கள் குறித்த பகுதிக்குச் சென்றபோது, ஒரு இளைஞனை இராணுவத்தினர் மிகக் கொடூரமாகத் தாக்கிக்கொண்டிருந்ததாக நேரில் பார்வையிட்ட ஊர்மக்கள் தெரிவிக்கின்னர். இந்நிலையில் இராணுவத்தால் தாக்கப்பட்ட இளைஞனை ஊர்மக்கள் காப்பாற்றச் சென்றபோது அவர்களையும் இராணுவத்தினர் தாக்கமுற்பட்டுள்ளதாக மக்களால் தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து ஊர் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற பலத்த முரண்பாட்டினையடுத்து, இராணுவத்தினர் இளைஞனை ஊர்மக்களிடம் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு இராணுவத்தினரால் தாக்கப்பட்ட குறித்த இளைஞன் முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார். இந்நிலையில் இராணுவத்தால் தாக்கப்பட்ட ஒருவர் காணாமல் போயிருந்தார். இவ்வாறு காணாமல்போயிருந்த நபரை ஊர்மக்கள் இணைந்து முத்துஐயன்கட்டுக்குளத்தில் தேடியதுடன், கடந்த 08.08.2025அன்று முத்துஐயன்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இத்தகைய சூழலிலேயே இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல் போயிருந்தநபர் 09.08.2025 இன்று காலை முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து சடலமாக இனங்காணப்பட்டிருந்தார். குறிப்பாக முத்துஐயன்கட்டு இடதுகரை ஜீவநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முத்துஐயன்கட்டுப் பகுதியிலுள்ள இராணுவத்தினர் குறைந்தவிலையில் எரிபொருள் உள்ளிட்ட பொருட்களை வழங்கிவந்ததாகவும், இவ்வாறு இராணுவத்தால் இளைஞர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வந்த பின்னணியிலேயே இராணுவத்தால் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இந்த கொலைச்சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான சூழலில் சடலம் இனங்காணப்பட்ட குறித்த இடம் குற்றப்பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டு, சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில் குறித்த இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் த.பிரதீபன் வருகைதந்திருந்தார். இந்நிலையில் நீதவானின் முன்னிலையில் சடலம் குளத்திலிருந்து மீட்கப்பட்டதுடன், தடயவியல் பொலிசாரால் தடயவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சடலம் உடல்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சிக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகைதந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இராணுவத்தின் அடாவடிச் செயற்பாடுகள் குறித்து நீதிபதியிடம் முறையிட்டிருந்தார். அதேவேளை மக்களாலும் இதன்போது நீதிபதியிடம் முறையீடுகள் செய்யப்பட்டன. மக்களின் முறைப்பாடுகளை பொலீசாரிடம் வாக்குமூலமாகப் பதிவுசெய்யுமாறு நீதிபதியால் இதன்போது தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்த விவகாரம் தொடர்பில் உடனடியாக மக்களிடம் வாக்குமூலங்களைப் பெறுமாறும், குற்றச்செயல்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதன்போது போலிசாரிடம் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222166

காஸாவில் பேரழிவுக்கு நடுவே ஹமாஸ் ஊழியர்களுக்கு சம்பளப் பணத்தை வழங்கும் 'ரகசிய நெட்வொர்க்'

1 month 2 weeks ago
பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, காஸாவில் வங்கி அமைப்பு செயல்படவில்லை என்பதால், சம்பளம் பெறுவது மிகவும் சிக்கலானதும், சில நேரங்களில் ஆபத்தானதுமாக இருக்கிறது. கட்டுரை தகவல் ருஷ்டி அபுஅலூஃப் காஸா செய்தியாளர் 9 ஆகஸ்ட் 2025, 03:56 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் கிட்டத்தட்ட இரண்டு வருடப் போருக்குப் பிறகு, ஹமாஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் ராணுவத் திறன் பலவீனமடைந்துள்ளது, அதன் அரசியல் தலைமை மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆனால், போர் நடந்து கொண்டிருந்த போதிலும், ரகசிய முறையைப் பயன்படுத்தி, ஹமாஸ் தொடர்ந்து பணம் வழங்கி வந்துள்ளது. இதன் மூலம், 30,000 அரசு ஊழியர்களுக்கு, மொத்தமாக 7 மில்லியன் டாலர் (சுமார் 5.3 மில்லியன் யூரோ ) சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. காஸாவில் பிபிசி பேசிய 3 அரசு ஊழியர்கள் கடந்த வாரம் தலா 300 டாலர் பெற்றதை உறுதிப்படுத்தினர். இவ்வாறு சம்பளம் பெற்ற பல்லாயிரக்கணக்கான ஊழியர்களில் இவர்களும் அடங்குவர். இவர்கள் போர் தொடங்குவதற்கு முன் பெற்ற முழு சம்பளத்தில் 20% மட்டுமே ஒவ்வொரு 10 வாரங்களுக்கு ஒருமுறை பெறுகின்றனர். பணவீக்கம் அதிகரித்து வருவதால், இந்த குறைவான சம்பளம் ஹமாஸின் விசுவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இஸ்ரேலிய கட்டுப்பாடுகளால் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உதவி அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. காஸாவில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. சமீபத்திய வாரங்களில் ஒரு கிலோ மாவின் விலை 80 டாலர் வரையிலும் உயர்ந்துள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES காஸாவில் வங்கி அமைப்பு செயல்படவில்லை என்பதால், சம்பளம் பெறுவது மிகவும் சிக்கலானதும், சில நேரங்களில் ஆபத்தானதுமாக இருக்கிறது. இஸ்ரேல், ஹமாஸின் சம்பள விநியோகஸ்தர்களை அடையாளம் கண்டு தாக்குகிறது, இதனால் ஹமாஸின் ஆட்சித் திறனை சீர்குலைக்க முயல்கிறது. காவல்துறை அதிகாரிகள் முதல் வருமான வரித்துறை ஊழியர்கள் வரை, பலரும் தங்கள் தொலைபேசியிலோ அல்லது தங்கள் துணைவரின் தொலைபேசியிலோ ரகசிய செய்தி பெறுகின்றனர். அந்த செய்தியில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு "நண்பரைச் சந்தித்து தேநீர் அருந்த" செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அந்த குறிப்பிடப்பட்ட இடத்தில், ஒரு ஆணோ, சில சமயங்களில் ஒரு பெண்ணோ அந்த ஊழியரிடம் வந்து, சீல் வைக்கப்பட்ட ஒரு உறையை அமைதியாக ஒப்படைத்துவிட்டு, எதுவும் பேசாமல் மறைந்து விடுகிறார். அந்த உறைக்குள் தான் சம்பளப் பணம் வைக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் மத விவகார அமைச்சகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர், பாதுகாப்பு காரணங்களுக்காக தனது பெயரை வெளியிட மறுத்தார். அவர், சம்பளம் வாங்கும் போது ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி விவரித்தார். "ஒவ்வொரு முறை சம்பளம் வாங்கச் செல்லும் போதும், என் மனைவி மற்றும் குழந்தைகளிடம் விடைபெற்றுச் செல்கிறேன். நான் திரும்பி வருவேனா என்பது தெரியாது," என்று கூறிய அந்த அதிகாரி, "பல முறை, இஸ்ரேல் சம்பள விநியோக இடங்களைத் தாக்கியுள்ளது. காஸா நகரில் ஒரு பரபரப்பான சந்தையை குறிவைத்த தாக்குதலில் நான் உயிர் பிழைத்தேன்."என பகிர்ந்துகொண்டார். அலா (பாதுகாப்புக்காக அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஹமாஸ் நடத்தும் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் இவர் தான் பொருள் ஈட்டும் ஒரே நபர். "எனக்கு 1,000 ஷெக்கல்கள் (சுமார் 300 டாலர்) கிடைத்தன, ஆனால் எல்லாம் பழைய, கிழிந்த நோட்டுகள். வியாபாரிகள் இவற்றை ஏற்கவில்லை. 200 ஷெக்கல்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வகையில் இருந்தன. மீதி பணத்தை என்ன செய்வது என தெரியவில்லை," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இரண்டரை மாத கால காத்திருப்புக்குப் பிறகு, இப்படி கிழிந்த பணத்தில் சம்பளம் தருகிறார்கள்", "என் குழந்தைகளுக்கு உணவளிக்க கொஞ்சம் மாவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், உதவி விநியோக மையங்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டியிருக்கிறது. சில சமயங்களில் கொஞ்சம் மாவு கொண்டு வர முடிகிறது, ஆனால் பெரும்பாலும் வெறுங்கையுடன் திரும்புகிறேன்" என்றும் குறிப்பிட்டார். மார்ச் மாதம், இஸ்ரேல் ராணுவம், கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் நிதித் தலைவர் இஸ்மாயில் பர்ஹூமை கொன்றதாக தெரிவித்தது. அவர் ஹமாஸின் ராணுவப் பிரிவுக்கு நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டார். ஹமாஸின் நிர்வாக மற்றும் நிதி அமைப்புகள் பெருமளவு அழிக்கப்பட்டிருந்தாலும், அவர்களால் இன்னும் ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் வழங்க முடிகிறது என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஹமாஸின் பொருளாதார நடவடிக்கைகளை நன்கு அறிந்த, முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் இதுகுறித்து பேசினார். ஹமாஸின் நிதி நடவடிக்கைகளை நன்கு அறிந்த ஒரு மூத்த அதிகாரி, பிபிசியிடம் பேசுகையில், 2023 அக்டோபர் 7-ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு முன், அவர்கள் நிலத்தடி சுரங்கங்களில் சுமார் 700 மில்லியன் டாலர் ரொக்கமாகவும், நூற்றுக்கணக்கான மில்லியன் ஷெக்கல்களையும் சேமித்து வைத்திருந்ததாக தெரிவித்தார். இந்த நிதியை ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் மற்றும் அவரது சகோதரர் முகமது ஆகியோர் நேரடியாக கண்காணித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், இருவரும் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டனர். பட மூலாதாரம், GETTY IMAGES ஹமாஸின் செயலால் மக்கள் அதிருப்தி ஹமாஸ் வரலாற்று ரீதியாகவே, காஸா மக்களுக்கு விதிக்கப்பட்ட அதிக இறக்குமதி வரிகள் மற்றும் பிற வரிகளின் மூலம் நிதி திரட்டியுள்ளது. கத்தாரிடமிருந்து மில்லியன்கணக்கான டாலர் நிதியைப் பெற்றுள்ளது. ஹமாஸின் ராணுவப் பிரிவான கஸ்ஸாம் படை, தனி நிதி அமைப்பின் மூலம் செயல்படுகிறது, இதற்கு முக்கியமாக இரான் நிதியளிக்கிறது. உலகில் மிகுந்த செல்வாக்கு கொண்ட இஸ்லாமிய அமைப்புகளில் ஒன்றான, எகிப்தை தளமாகக் கொண்ட (தடை செய்யப்பட்ட) இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் ஒரு மூத்த அதிகாரி, தங்கள் பட்ஜெட்டில் சுமார் 10% ஹமாஸுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்தார். போர்க்காலத்தில் வருவாய் ஈட்ட, ஹமாஸ் வணிகர்களிடம் வரி வசூலித்து, சிகரெட்டுகளை 100 மடங்கு அதிக விலையில் விற்று வருகிறது. போருக்கு முன் 20 சிகரெட்டுகள் கொண்ட பெட்டி 5 டாலராக இருந்தது, இப்போது 170 டாலருக்கும் மேல் விற்கப்படுகிறது. ரொக்கமாக சம்பளம் கொடுப்பதுடன், ஹமாஸ் தனது உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உள்ளூர் அவசரக் குழுக்கள் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்குகிறது. இஸ்ரேலின் தாக்குதல்களால் இந்தக் குழுக்களின் தலைவர்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றனர். இது காஸாவில் பொதுமக்களிடையே கோபத்தைத் தூண்டியுள்ளது. ஹமாஸ் தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே உதவி வழங்கி, மற்ற மக்களை புறக்கணிப்பதாக பலர் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தின் போது, காஸாவிற்கு வந்த உதவிகளை ஹமாஸ் திருடியதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. ஹமாஸ் இதை மறுத்தாலும், பிபிசிக்கு தகவல் அளித்த காஸா வட்டாரங்கள், அந்தக் காலகட்டத்தில் ஹமாஸ் கணிசமான அளவு உதவிகளை எடுத்ததாக உறுதிப்படுத்தியுள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன், புற்றுநோயால் கணவரை இழந்த பிறகு, தற்போது மூன்று குழந்தைகளைப் பராமரிக்கும் நிஸ்ரீன் கலீத் எனும் பெண்ணிடம் பிபிசி பேசியது. "பசியால் வாடிய போது, என் குழந்தைகள் வலியால் மட்டுமல்ல, ஹமாஸ் ஆதரவு பெற்ற எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் உணவுப் பொட்டலங்களையும் மாவுப் பைகளையும் பெறுவதைப் பார்த்தும் அழுதனர். நாங்கள் இப்போது அனுபவிக்கும் துன்பங்களுக்கு அவர்கள் காரணமல்லவா? அக்டோபர் 7 தாக்குதலுக்கு முன், ஏன் உணவு, தண்ணீர், மருந்து ஆகியவற்றை பாதுகாக்கவில்லை?" என்று அப்பெண் கேள்வி எழுப்புகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp37q1e417yo
Checked
Mon, 09/29/2025 - 09:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed