1 month 2 weeks ago
ஒரே நாளில் இறந்து விடுவோம் என தெரிந்தும் உயர உயர பறக்கும் ஈசலை போல் நாமும் வாழ்க்கையை ரசித்து வாழ்வோம்.😂
1 month 2 weeks ago
இந்த உக்கிரேன் இரஸ்சிய யுத்தத்தின் அடிப்படை நேட்டோ விரிவாக்கம் தொடர்பில் ஆரம்பத்திலிருந்து அமெரிக்காவினது நிலைதான், 2014 நடுநிலையான உக்கிரேன் ஆட்சியினை இரஸ்சிய சார்பு ஆட்சி என கூறி தீவிர வலது சாரிகளின் ஆதரவுடன் தூக்கியெறியப்பட்டு அதன் பின்னர் ஒரு நீண்டகால அடிப்படையில் இரஸ்சியாவிற்கு எதிராக உக்கிரேனில் ஒரு களம் அமைப்பதற்காக போர் பயிற்சி ஆயுத தளபாட வசதி என போரிற்காக உக்கிரேன் தயார்படுத்தப்பட்டது. அமெரிக்கா முன்னர் 20% உலக வர்த்தகம், உலக சர்வதேச நாணயம், என அனைத்து பொருளாதார ரீதியில் உலகு தங்கியிருக்கும் நிலையில் இருந்த அமெரிக்க பொருளாதாரம் ஒரு புறம் 800 மேற்பட்ட இராணுவ தளங்களுடன் ஒரு பெரிய சாம்ராஜம் நடத்தும் அமெரிக்காவிற்கு எதிராக இரஸ்சியாவினால் எதுவும் செய்து விட முடியாது எனும் உறுதி நிலையில் ஒரு நம்பிக்கையுடன் போரிற்கான முஸ்தீபுகளின் மூலம் இரஸ்சியாவினை போரிற்குள் தள்ளி அதனை உடைத்துவிடலாம் என நம்பியிருந்தது. நடைமுறையில் இரஸ்சியர்கள் இவ்வகையாக அமெரிக்க எதிர்ப்பிற்கு அமைதியாக அடிபணிந்துவிடுவார்கள் என தவறாக மதிப்பிட்டிருக்கலாம். இந்த போரினை ஐரோப்பா மூலம் அமெரிக்கா தொடர்ந்தும் நடத்தும் எனவே நம்புகிறேன், ஆனால் அமெரிக்காவின் அமைதி முயற்சி என்பது ஒரு நாடகம் என கருதுகிறேன். அமெரிக்காவிற்கு இந்த போரிற்கான தேவை தொடர்ந்தும் உள்ளது, அது பொருளாதார இராணுவ ரீதியான தேவைகளாக உள்ளது, தற்போது பேசப்படுவது போல நிரந்தர போர் முடிவிற்கு வராது ஆனால் உக்கிரேன் பலப்படுத்த ஒரு தற்காலிக ஓய்வு தேவை. இந்த போர் முடிய வேண்டுமாயின் ஒன்று போரில் இரஸ்சியா தோற்கடிக்கப்பட்டு மேற்கின் கைகளுக்கு செல்லவேண்டும் அல்லது உக்கிரேன் தோற்க வேண்டும். தற்போதய முயற்சிகள் உக்கிரேனை தோல்வியிலிருந்து காக்க முயற்சிக்கும் நடவடிக்கைகள். ஆனால் நீண்ட போரை தொடர்ந்து நடத்தக்கூடிய வகையில் இந்த வளர்ந்த 7 நாடுகளும் இல்லை என கூறுகிறார்கள், அமெரிக்க நாணயம் தரமிறக்கப்படும் என எதிர்பார்க்கிறார்கள், அமெரிக்க நாணயங்களையும் பணமுறிகளையும் அதிகளவில் சேமிப்பில் வைத்திருக்கும் ஜப்பானது கடன் 252% அதன் மொத்த தேசிய உற்பத்தியில் எட்டும் என எதிர்பார்க்கிறார்கள், அமெரிக்காவின் கடன் 134% அதே 5 வருடங்களில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது (ஐ எம் எப் இன் தரவுகளின்படி 2029 இல் debt to GDP UK 110%, ITALY 145%, FRANCE 115%, இதில் ஜேர்மனியும் கனடாவும் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன). Currency Devaluation முன்பு சில நாடுகளில் நிகழ்ந்துள்ளதாக கூறுகிறார்கள் 1950 இல் பிரான்ஸ் மற்றும் 1990 இல் இத்தாலியிலும் நடந்த நாடுகளாகும். நிலமை இப்படி மோசமாக மாறுவதனால் போரினை முடிவிற்கு கொண்டுவர முயற்சிக்கிறார்களோ தெரியவில்லை, ஆனால் போரினை சமாதானமாக முடிக்க முயற்சித்தால் அது இரஸ்சியாவின் விருப்பமான உக்கிரேன் நடு நிலையான நாடு எனும் கொள்கையினை ஏற்கவேண்டும் அதற்கு மேற்கு தயாராக இருக்காது என கருதுகிறேன்.
1 month 2 weeks ago
நான் எல்லோருடனும் கருத்து முரண்படக்கூடியவன்தான்! ஏனெனில் என்னால் வஞ்சகமாக யாருடனும் நடந்துகொள்ள முடியவில்லை.!
1 month 2 weeks ago
1000 இற்கும் மேற்பட்ட அப்பாவி இஸ்ரேலியர்களை கொடூரமாக கொன்று குவித்த பாலஸ்தீன பயங்கரவாதிகள் முற்றாக துடைத்தழிக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேல் கங்கணம் கட்டி நிற்கும் செயலானது வரவேற்கத்தக்கது. விரைவில் முழு இஸ்ரேலையும் மீட்டிட வாழ்த்துக்கள். எக்காலத்திலும் புனித இஸ்ரேலிய மண்ணில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இருக்கக் கூடாது. நான் மக்கள் கொல்லப்படுவதற்கு மிகவும் வருந்துகிறேன், எனினும் பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்பட்டே ஆக வேண்டும்.
1 month 2 weeks ago
பற்களை இழந்த ஓநாய் சைவ உணவு முறைகளை புகழ்ந்து பேசத்தொடங்குமாம்.
1 month 2 weeks ago
இது "மூளை மலேரியா (cerebral malaria)". இலங்கை உட்பட பல நாடுகளில் காணப்படும் சாதாரண மலேரியா வகையை விட ஆபத்தானது. சாதாரண மலேரியாவை Plasmodium vivax என்ற ஒரு கல உயிரி உருவாக்கும். மூளை மலேரியாவை Plasmodium falciparum என்ற ஒரு கல உயிரி ஏற்படுத்தும். இந்த P. falciparum சஹாரா பாலைவனத்திற்குக் கீழான ஆபிரிக்க நாடுகளில் மிகவும் தீவிரமாக ஆட்களைக் கொல்லும் ஒரு தொற்று நோய். சாதாரண மலேரியாவிற்கு எதிராகப் பயன்படும் குளோரோகுயின் வகை மருந்துகள், மூளை மலேரியாவிற்கு பயன் தராது. Artemisinin எனப்படும் ஒரு புதிய மருந்து தான் பயன்படுத்த வேண்டும். இந்த மருந்தை ஒரு சீன மூலிகையில் இருந்து பிரித்தெடுத்த விஞ்ஞானிக்கு மருத்துவ நோபல் பரிசு கிடைத்தது. இலங்கையில் இருக்கும் அனோபிலிஸ் வகை நுளம்புகள் மூளை மலேரியக் கிருமியையும் காவக் கூடியவை என்பதால் மருத்துவத் துறை இது பற்றிக் கவனம் செலுத்த வேண்டும். ஆபிரிக்காவில் இருந்து வருவோருக்கு இரத்தப் பரிசோதனை விமான நிலையத்திலேயே செய்து, மலேரியாக் கிருமிகள் இருந்தால் சிகிச்சை முடியும் வரை தனிமைப் (quarantine) படுத்த வேண்டியிருக்கும்.
1 month 2 weeks ago
இங்கு பகிரப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தவறு ஏதும் இழைத்துள்ளதாக தெரியவில்லை. தனது கடமையை செய்துள்ளார். ஆனால் செய்தியை வழங்கும் ஊடகம் தனிநபர் மீது சேறு பூசும் வேலையை செய்துள்ளது. குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதும், தனக்கு பிடித்தமான விடயங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதும் அவரவர் சொந்த விருப்பு, வெறுப்பு. இதுபோலவே விடுதலை புலிகள் அமைப்பு மீது அபிமானம் வைப்பதும், மதிப்பதும், அவமதிப்பதும் அவரவர் சொந்த விருப்பு, வெறுப்பு. ஆனால், இங்கே அரச பணியாளர் ஒருவர் வேலைக்கு கள்ளம் அடித்துவிட்டு/தனக்கு கொடுக்கப்பட்ட பணியை பொறுப்பாக செய்யாமல் தனக்கு வேண்டியவர்கள் மூலம் மேலதிகாரிகளுக்கு எச்சரிக்கை கொடுப்பது தவறான செயல் மட்டும் அல்ல, சட்டவிரோதமான செயலும் ஆகும். இலங்கை அரசின் அகராதியில் விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாதிகளாகவே சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, அரச நிறுவனத்தின் கடிதம் ஒன்றில் பயங்கரவாதி என குறிப்பிடப்படுவது ஒன்றும் சர்ச்சைக்குரிய விடயம் அல்ல. தவிர, இந்த கடிதத்தை மருத்துவ அதிகாரி வினோதன் எழுதியன் பின்னால் அவருக்கு முறைப்பாடு செய்தவர்கள் யார் என தெரியாது. இங்கு தனது வேலை விடயத்தில் தனது வாழ்க்கை துணையை வைத்து அச்சுறுத்தல் கொடுத்தது மிக தவறான செயல். இதே பெயரில் உள்ள ஒரு முன்னாள் போராளி புலிகள் அமைப்பின் உறுப்பினர் தன்னை புலனாய்வு பிரிவின் முன்னைய பொறுப்பாளராக தெரிவித்து பல காணொளிகளை சமூக ஊடகத்தில் பிரசுரித்து உள்ளார். சம்பவத்தில் தொடர்புபட்ட பணியாளர் இவரது வாழ்க்கை துணையோ தெரியவில்லை. இலங்கையில் பொதுவாகவே அரச பணியாளர்கள் வேலை விடயத்தில் சோம்பேறித்தனம், வேலை செய்வதற்கு பஞ்சி. வாழ்க்கை துணையை முன்னாள் பயங்கரவாதி என விளித்தது இவ்வளவு கோபத்தை ஏற்படுத்தும், இவ்வளவு ரோசக்காரி என்றால் ஆரம்பத்திலேயே தனது வேலையை ஒழுங்காக ஏன் செய்யவில்லை?
1 month 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : { ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி } (2) ஆண் : பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன் பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி ஆண் : ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம் காசு பணம் வந்தா நேசம் சில மாசம் ஆண் : சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ வேப்பிலை கரிவேப்பிலை அது யாரோ நான் தானோ ஆண் : என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி கண்மணி கண்மணி ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி ஆண் : நேற்று இவன் ஏணி இன்று இவன் ஞானி ஆள கரை சேத்து ஆடும் இந்தத் தோனி ஆண் : சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம் பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம் ஆண் : பணங்காச கண்டு புட்டா புலி கூட புல்ல தின்னும் கலிகாலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி அடங்காத காள ஒன்னு அடிமாடா போனதடி கண்மணி கண்மணி .......... ! --- ஊரத் தெரிஞ்சிகிட்டேன் ---
1 month 2 weeks ago
தாழம்பூ கைகளுக்கு . ........ ! 😍
1 month 2 weeks ago
மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம் 10 AUG, 2025 | 04:36 PM தமிழக அரசின் மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற 55 நாட்களில் இந்தியா தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 61 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் தடுத்து வைத்திருப்பதை கண்டித்தும், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க தலைவர் ஞாயிற்றுக்கிழமை (10) ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டார். இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மேலும் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வதில் காலதாமதமாகும் பட்சத்தில் வரும் 15ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம், 19ஆம் திகதி புகையிரத மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற 55 நாட்களில் நேற்று வரை 61 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடியில் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறையில் உள்ள 61 இராமநாதபுரம் மாவட்டம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரியும், தொடர் கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தமிழக மீனவர்கள் பிரச்சனை இன்றி கடலில் மீன் பிடிப்பதற்கு இரு நாட்டு அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாளை முதல் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு செய்துள்ளனர். மேலும் மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்வதில் கால தாமதம் செய்யும் பட்சத்தில் 13ஆம் திகதி தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டம், 15ஆம் திகதி சுதந்திர தினத்தன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் எனவும், அதனை தொடர்ந்து வரும் 19ஆம் திகதி ரயில் மறியல் போராட்டத்தில் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஈடுபட போவதாக இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இன்று நடந்த மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டத்தில் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். மீனவர்களின் இந்த தொடர் வேலை நிறுத்தம் காரணமாக ராமேஸ்வரத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் தினசரி சுமார் ரூபாய் ஒரு கோடி வரை அந்நிய செலாவணி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/222250
1 month 2 weeks ago
கொக்கு தொடுவாய் மனிதப் புதை குழி விவகாரம்; 45 வகையான சான்று பொருட்களை அடையாளம் காண உதவும் சட்டத்தரணி தற்பரன் 10 AUG, 2025 | 03:35 PM முல்லைத்தீவு மாவட்ட கொக்குத் தொடுவாய் மனித புதகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்று பொருட்களை அடையாளம் காண உதவுமாறு காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி கலாநிதி தற்பரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வழக்கு இல: AR/804/23 முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் உள்ள மனித புதைகுழி குறித்த விசாரணை முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் நடத்தப்பட்டு வருகின்றது. முதற்கட்ட தொல்பொருள் பகுப்பாய்வுகள் இந்த புதைகுழி 1994-1996 காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கூறுகிறது. காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஆட்களைக் கண்டுபிடிப்பதற்கான காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பரந்த முயற்சிகளின் ஒரு அங்கமாகும். 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தல், நிருவகித்தல் மற்றும் கருமங்களை ஆற்றுதல்) சட்டத்தின் பிரிவு 12 (ஆ) இன் கீழ், OMP அதன் கடப்பாடுகளின்படி, மனிதப் புதைகுழி மீதான விசாரணையைக் கண்காணித்து வருகிறது. புதைகுழியில் உள்ள மனித எச்சங்களின் அடையாளம் குறித்து தீர்மானம் மேற்கொள்வதற்குத் துணைபுரியுமாறு காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திடம் முல்லைத்தீவு நீதவான் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள பொதுமக்களிடம் இந்த வழக்கு தொடர்பான முக்கியமான தகவல்கள் இருக்கலாம் என்பதை காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நம்புகிறது. புதைகுழி அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட பொருட்கள் தொடர்பில் பொதுமக்கள் தகவல்களையும் அடையாளங்களையும் உறுதிப்படுத்த கொள்ள முடியும். எண்.3174 உள்ளாடைகள் எண்.3104 காற்சட்டை,1564 உள்ளாடை ,1018 உள்ளாடைகள் ,எண் 1204 கால்சட்டை X76 உள்ளாடை ,த.வி.பு.இ.1333 நாய் களுத்துப்பட்டி ,10546 முழு நீளக்காற் சட்டை, எண் 10555 உள்ளாடை ,எண் 1781 உள்ளாடை ,எண்.302 பிரேசியர் ,த.வி. பு .இ.1302, எண் 1124 உள்ளாடைகள் , எண்1124 காற்சட்டை மற்றும் உள்ளாடை ,எண் 777 உள்ளாடை ,எண்499 உள்ளாடைகள் , எண் 0043-நாய் களுத்துப்பட்டி ,குருதி O+, எண்306 உள்ளாடை ,உ101 77 ,X95 உள்ளாடை, இ 474 காற்சட்டை, இ 701 உள்ளாடைகள் ,இ225 உள்ளாடைகள், த.வி.பு.இ.225 ,இ 458 உள்ளாடைகள் ,ஈ 17 உள்ளாடை ,இ 453 மேற் சட்டைஎ 1778 பிராசியர்,எண் 760 உள்ளாடைகள், எ 599 உலோக வளையல். உ599 பிராசியர், எண்1907 ரீசேட், எண் 7907 பிராசியர்,த.வி.பு .ஒ நாய் கழுத்துப் பட்டி, எண் 3504 3503 உள்ளாடை , எண் 3471 மேற் சட்டை மற்றும் ஓ 3035 காற்சட்டை என்பனவற்றை அடையாளப்படுத்த உதவவும். காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் கொக்கு தொடுவாய் மனிதப் புதைகுழி சான்று பொருட்களை இனம் கானும் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களிகளிடமிருந்து புதைகுழியில் உள்ள எச்சங்கள் குறித்த சாத்தியமான அடையாளங்கள், அவற்றின் அம்சங்கள், உடைகள், முந்தைய காலங்கள் ஏற்பட்டிருந்த காயங்கள் போன்றவற்றை விவரிக்க முடியும். வழங்கும் தகவலின் அடிப்படையில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பயிற்சி பெற்ற அதிகாரிகள், இந்த வழக்கு தொடர்பான முக்கியமான தகவல்களைக் கொண்ட சாத்தியமான உறவினர்கள், சாத்தியமான சாட்சிகள் தொடர்பில் நேர்காணல் செய்வார்கள். அலுவலக சட்டத்தின் கீழ், இரகசியத்தன்மையை உறுதி செய்வதற்கும் (பிரிவு 12 (இ) (V)) சாட்சி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் (பிரிவு 13(1) (எ) மற்றும் 18) OMP கடமைப்பட்டுள்ளது. இந்த நேர்காணல்கள் மூலம் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்தும் OMP அறிந்திருக்கிறது. இதனால் உளவியல் ரீதியான சேவைகளும் வழங்கப்படும். இது தொடர்பான தகவல்களை இலக்கம் 40 மூன்றாம் மாடி புத்கமுவ வீதி ராஜகிரிய, இல 54 தர்மாராம வீதி கோட்டை மாத்தறை, துணை அலுவலகம் மாவட்ட செயலகம் முல்லைத்தீவு, கோட்டை வீதி பழைய மாவட்ட செயலக கட்டிடம் மட்டக்களப்பு, மூன்றாம் மாடி புதிய கட்டிடம் மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம், மாவட்ட செயலகம் மன்னர், A9 வீதி நீதிமன்றம் அருகாமை கிளிநொச்சி ஆகிய அலுவலகங்களில் 05.08.2025 ஆந் திகதி முதல் 04.09.2025 ஆந் திகதி வரையில் வருகை தந்து தகவல்களை வழங்குமாறு அல்லது ராஜகிரிய 0112861431, மாத்த்றை 0412244684, முல்லைத்தீவு 0212286030, மட்டக்களப்பு 0652222229 , யாழ்ப்பாணம் 0212219400 மற்றும் மன்னார் 0232223929 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலம் தகவல்களை வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/222246
1 month 2 weeks ago
யாழில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு 10 AUG, 2025 | 03:07 PM யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் மலேரியா நோயுடன் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (09) உயிரிழந்துள்ளார். நெடுந்தீவைச் சேர்ந்த 38 வயதான நபரே உயிரிழந்துள்ளார். ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்லும் நோக்குடன் ஆபிரக்க நாட்டில் சில காலம் தங்கியிருந்த நிலையில், ஐரோப்பிய நாட்டிற்கு செல்லும் முயற்சி கைகூடாத நிலையில் கடந்த 2 ஆம் திகதி மீண்டும் நெடுந்தீவை வந்தடைந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 ஆம் திகதி கடுமையான நடுக்கம், மாறாட்டம் போன்ற அறிகுறிகளுடன் இரவு 10.30 மணிக்கு நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு உடனடியாகவே இடமாற்றம் செய்யப்பட்டார். யாழ் போதனா வைத்தியசாலையில் உடனடியாகவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒக்டோபர் 5 ஆம் திகதி காலையில் இவரது குடும்பத்தினர் மூலம் இவர் ஆபிரிக்க நாட்டிற்கு சென்று வந்த தகவல் கிடைத்ததும் மலேரியாவிற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு Falciparum malaria இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவருக்கு உடனடியாகவே மலேரியா நோய்க்கான ஊசி மருந்துகள் நாளத்தின் ஊடாக ஏற்றப்பட்டது. தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்பட்ட மலேரியாவிற்கான குருதிப் பரிசோதனையில் ஒக்டோபர் 7 ஆம் திகதி அவரது குருதியில் மலேரியா கிருமிகள் முற்றாக அழிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. ஆயினும், அவருக்குக் காணப்பட்ட பல்வேறு வேறுநோய் நிலைகளால் அவர் சுய நினைவற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/222239
1 month 2 weeks ago
மன்னார் கடற்பகுதியில் 07 இந்திய மீனவர்கள் கைது Published By: DIGITAL DESK 3 10 AUG, 2025 | 01:18 PM மன்னாரை அண்மித்த கடற்பகுதியில் மீன்பிடித்த 07 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தது. வட மத்திய கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட படகுடன் இந்திய மீனவர்கள் தலைமன்னார் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகள் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கை கடற்பரப்புக்குள் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க தொடர்ந்து ரோந்து மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படை தெரிவித்தது. https://www.virakesari.lk/article/222231
1 month 2 weeks ago
'மீனவர்களை சிறை பிடித்த இலங்கை' - கண்டித்து சாலைமறியல்; ஆவேச போராட்டம் 10 AUG, 2025 | 11:38 AM இராமேஸ்வரம் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இராமேஸ்வரத்திலிருந்து சனிக்கிழமை காலை 356 விசைப்படகுகளில் மீன் துறை அனுமதியுடன் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று பகல் பொழுதில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு விசைப்படகுகளை சுற்றி வளைத்து சிறை பிடிக்க முயன்றனர். இதனை கண்ட ஒரு படகில் இருந்த மீனவர்கள் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். இந்நிலையில் தங்கச்சிமடத்தை சேர்ந்த இருதய டிக்சன் என்பவருக்கு சொந்தமான மற்றொரு படகினை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மேலும் அந்த படகில் இருந்த டல்லஸ், பாஸ்கரன், ஆரோக்கிய சாண்ட்ரின், ஸ்லைடன் சேசுராஜா, அருள், ராபர்ட், லொய்லன் ஆகிய 7 மீனவர்களையும் கைது செய்து விசாரணைக்காக மன்னார் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். இதனிடையே இலங்கை கடற்படையினரிடம் சிக்காமல் தப்பி வந்த மீனவர்கள் தங்களுடன் மீன்பிடிக்க வந்த படகினையும் மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற தகவலை மீனவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். இதனால் பதற்றம் அடைந்த தங்கச்சிமடம் மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்கச்சிமடம் ஆரம்ப சுகாதார நிலையம் முன் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மீனவர்களின் சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த போலீஸார் மீனவர்களின் போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். ஆனால் போலீஸாரின் சமாதானத்தை மீனவர்கள் ஏற்கவில்லை. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் வரை மறியலை கைவிடமாட்டோம் என கூறி மீனவர்கள் தொடர் மறியலில் ஈடுபட்டனர். இந்த பேச்சு வார்த்தையின் போது மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியரை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனிடையே சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விடுவிக்காவிடில் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர்களின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் தங்கச்சிமடம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. https://www.virakesari.lk/article/222217
1 month 2 weeks ago
வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத அதிகார பகிர்வுடன் கூடிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வினை வலியுறுத்தி திரியாயில் மக்கள் போராட்டம் 10 AUG, 2025 | 01:14 PM வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் 100 நாள் செயன்முனைவின் 10 ஆவது நாள் நிகழ்வு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (10) திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்திற்குட்பட்ட திரியாய் கிராமத்தில் இடம்பெற்றது. பல வழிகளிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட திரியாய் மக்கள் தொடர்ந்தும் நில அபகரிப்புக்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை கூடிய மக்கள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத அதிகார பகிர்வுடன் கூடிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வினை அரசிடம் வலியுறுத்தினர். இதில் பெருமாபாலான மக்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். https://www.virakesari.lk/article/222232
1 month 2 weeks ago
Published By: DIGITAL DESK 2 10 AUG, 2025 | 04:56 PM ஆர்.ராம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் முழுதாய் நிறைவுக்கு வந்துவிட்டன. இந்நிலையில் கடந்த மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வுக்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி.பெரேரா புதிய அரசியமைப்பு சம்பந்தமாக அரசாங்கம் முன்னெடுக்கின்ற, முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக கேள்விகளை தொடுத்திருந்தார். அந்தக்கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, புதிய அரசியலமைப்புக்கான பூர்வாங்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தமது ஆட்சி நிறைவுக்கு வருவதற்குள் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் உறுதியாக கூறியிருந்தார். பிரதமரின் கூற்றில் சிறு மயக்கம் உள்ளது. அதாவது, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமா இல்லை, தற்போதைய அரசியலமைப்பில் மறுசீரமைப்புச் செய்யப்படுமா என்ற விடயத்தில் தெளிவான விளக்கம் காணப்படவில்லை. இந்த நிலைமையானது, எதிர்க்கட்சிக்களுக்கு ஒருவித கிலேச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அத்தகைய சூழலில் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் தொடர்பாக பரிசீலிப்பதற்காகவும் அக்குறித்த புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காகவும் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130 இன் கீழ் சிறப்பு நோக்கத்திற்கான பாராளுமன்றக் குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணையொன்றை எதிர்கட்சிகளின் சார்பில் முன்னெடுப்பதற்கான பூர்வாங்கப்பணிகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த பிரேரணையானது, பெரும்பாலும் பொது எதிரணிகளின் பிரேரணையாகவே முன்வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. அதற்கான பேச்சுக்கள் தற்போது முன்னேற்றகரமான நிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உண்மையில் ஜே.வி.பி புதிய அரசியலமைப்பு பணிகளுக்கான செயற்பாடுகளை சத்தமின்றி ஆரம்பித்துள்ளது. அக்கட்சிக்கு மிக நெருக்கமான சட்டத்தரணிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டவர்களை ஒன்றிணைத்து வரைவு தயாரிக்கின்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தகவலறிந்த வரையில், இந்த அரசியலமைப்பு வரைவுச் செயற்பாடுகள் அனைத்தும் மிகமிக இரகசியமாகவே பேணப்பட்டு வருகின்றன. இந்த வரைவுச் செயற்பாடுகள் தேசிய மக்கள் சக்தியினரை மையப்படுத்திய துறைசார்ந்தவர்களால் முன்னெடுக்கப்படுகின்றதா இல்லை ஜே.வி.பி. தலைமையகமாக பெலவத்தவின் கட்டுப்பாட்டை வைத்திருக்கும் ரில்வின் சில்வாவின் கட்டுப்பாட்டில் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதில் தான் குழப்பங்கள் நீடிக்கின்றன. எவ்வாறாயினும், இச்செயற்பாடு அநுர அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தின் இரண்டாம் வருட இறுதியில் அல்லது மூன்றாம் வருட நடுப்பகுதியில் தான் வெளிப்படுத்தப்படவுள்ளது. அதுவரையில், புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதா அல்லது, அரசியலமைப்பு மறுசீரமைப்புக்களைச் செய்வதா என்பதைவெளிப்படுத்துவதற்கு அநுரவும் அவரது தோழர்களும் தயாராக இல்லை. அண்மையில் ரில்வின் சில்வா, நாட்டில் 'முறைமை மாற்றத்தினை' ஏற்படுத்தி பொருளாதார ரீதியில் முன்னோக்கி நகர்ந்து செல்வதாக இருந்தால் ஆகக்குறைந்தது தசாப்த காலம் தேவைப்படும் என்று கூறியிருப்பதன் ஊடாக, குறைந்தது இரண்டு பதவிக்காலங்களுக்கு ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருப்பதற்கு அத்தரப்பு திட்டமிடுகின்றது என்பது வெளிப்பட்டுள்ளது. அநுரகுமாரவின் அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் புதிய அரசியலமைப்பொன்றையோ அல்லது அரசியலமைப்பு மறுசீரமைப்பொன்றையோ கொண்டுவர வேண்டிய தேவை உள்ளதென்பதை அவர்கள் உள்ளார்த்தமாக உணர்ந்திருக்கின்றார்கள். அதற்கு காரணங்கள் உள்ளன. குறிப்பாக, அண்மைக்காலமாக அரசாங்கத்துக்கு எதிராக நாடாளவிய ரீதியில் ஏற்பட்டுள்ள 'எதிரான மனோநிலை' நிச்சயமாக அடுத்துவருகின்ற காலத்தில் வலுவடைந்து திரட்சியடைகின்றபோது அது ஆட்சியின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும். அத்தகைய சூழலை சமாளிப்பதென்றால் ஜே.வி.பி.யிடம் காணப்படுகின்ற 'அநுர' என்ற 'தேர்தல் அரசியல் முத்திரயை' மட்டும் பயன்படுத்தி சமாளிக்க முடியாது. அந்த மூலோபாயம் தொடர்ந்து வெற்றிபெறுமா என்ற கேள்விகளும் உள்ளன. 'அநுர' என்ற தனிமனிதனுக்கும் பேச்சாற்றலுக்கும் இன்னமும் நாடாளவிய ரீதியில் 'இரசனை மிகு வரவேற்பு' இருந்தாலும் ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி முரண்பாடுகளும் அதனையொத்த செயற்பாடுகளும் வாக்குகளை அலையாக திரட்டுவதில் சிக்கல்களை ஏற்படுத்தும் அவ்விதமான சூழலில் 2029இல் 'அநுர'வை முன்னிறுத்தி ஜனாதிபதி தேர்தலுக்கு மீண்டும் முகங்கொடுப்பதாக இருந்தால் அது சவால்கள் நிறைந்த முட்படுக்கைப் பயணம். ஏனென்றால் ஜனாதிபதி தேர்தலில் சறுக்கினால் அடுத்துவருகின்ற தேர்தல்களின் முடிவுகளும் அதன்பின்னரான விளைவுகளும் பற்றிக் கூறவேண்டியதில்லை. ஆகவே, தான் தென்னிலங்கையில் ஏற்படவுள்ள வாக்குவங்கிச் சரிவை வடக்கு, கிழக்கைப் பயன்படுத்தி ஈடுசெய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அல்லது புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை முன்னெடுகிறது அநுர அரசாங்கம். அந்த வகையில் இரண்டாவது தடவையும் ஆட்சியை தக்கவைப்பதற்காகனதொரு 'பிடி'யாகவே புதிய அரசியலமைப்பு மையப்படுத்திய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது கிடைக்கின்ற உள்வீட்டுத் தகவல்களின் பிரகாரம், ஜனாதிபதி அநுரவும், அவரது தாய்வீடான பெலவத்த ஜே.வி.பி.தலைமையகமும் 'நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதை' முதலாவது இலக்காகக் கொண்டிருக்கின்றன. இந்தச் செயற்பாட்டை முன்னெடுப்பதன் ஊடாக, தமக்கு பெரும்சவாலாக இருக்கின்ற 51 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை ஜனாதிபதி வேட்பாளர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற மிகப்பெரிய தலையிடி நீங்கிவிடும். மறுபக்கத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கிய வரலாற்றுப்பெருமையும் ஒருங்கே கிடைக்கும். பொறுப்புக்கூறல், நீதிவிசாரணை என்று தொடர்ச்சியாக கடிந்துகொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை சமாளித்துக்கொள்வதற்கானதொரு உபாயமாகவும், இராஜதந்திர மட்டத்தில் ஆட்சியை கவிழ்ப்பதற்கு முனையும் தரப்புக்களை புறமொதுக்குவதற்கான உபாயமாகவும் புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு மறுசீரமைப்பு விடயத்தினை பயன்படுத்த முனைகிறது அநுர அரசாங்கம். குறித்த செயற்பாட்டுக்குள் ஏலவே ஸ்தாபிக்கப்பட்டு செயல்திறனற்றிருக்கும் காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றுக்கு மேலதிகமாக சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம், உண்மை, மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்டவற்றையும் உள்ளீர்த்துக் வினைத்திறனற்ற கண்துடைப்புக்கான 'தேசிய பொறிமுறையை' ஸ்தாபித்துக்கொள்வதற்கும் முனைப்புக்கள் உள்ளன. அடுத்தபடியாக, உயர்நீதிமன்ற நீதிபதிகள், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான தவிசாளர்கள், கணக்காய்வாளர் நாயகம், வெளிநாடுகளுக்கான இராஜதந்திரிகள் உள்ளிட்ட அனைத்து உயர் பதவிகளுக்கான நியமனங்களில் தமக்கு விரும்பிய நியமனங்களை செய்வதற்கு அரசியலமைப்பு பேரவை தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வருகின்றது. ஆகவே, முட்டுக்கட்டையாக இருக்கும் அரசியலமைப்பு பேரவையின் வலுவைக் குறைப்பதுவும் ஜனாதிபதி அநுரவின் விசேட நோக்கமாக உள்ளது. இதனைவிடவும், தேர்தல் முறைமை மாற்றம் மாகாண சபை முறைமை நீக்கம் உள்ளிட்ட விடயங்களையும் புதிய அரசியலமைப்பு உள்வாங்க வேண்டும் என்ற நோக்கமும் ஜே.வி.பிக்குள் காணப்படுகின்றது. ஜே.வி.பியின் கொள்கைகளை தேசிய கொள்கைகளுக்குள் புகுத்தி, அதனை மையப்படுத்தியதாக நாட்டின் அடிப்படைச்சட்டமான அரசியலமைப்புச் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற நோக்குநிலைகளும் அவர்களுக்கு தாராளமாகவே உள்ளன. இதனைவிடவும், சீனக் கம்னியூஸக் கட்சியுடன் ஜே.விபி 'கட்சிசார்ந்த' இருதரப்பு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ள நிலையில், 'தனிக்கட்சி ஆதிக்கத்தினை' மையப்படுத்திய அரசியலமைப்பு ஏற்பாடுகளும் உள்வாங்கப்படலாம். ஜே.வி.பி. தலைமையிலான அநுர அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளை அல்லது, அரசியல் மறுசீரமைப்பு பணிகளை தமது இருப்பை நிலைநிறுத்துவதற்கான உபாயமாகவே முழுக்க முழுக்க பயன்படுத்த முனைகிறது. மாறாக, தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையான அவர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமாக அங்கீகரிக்கப்பட்டு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வுடன் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் என்று சிந்திப்பதே முட்டாள்தனமானது. அவ்விதமான நிலையில், அநுர அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளையோ அல்லது அரசியல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளையோ கையாள்வதற்கு தமிழ்த் தரப்பு தீர்க்கமான நிலைப்பாடுகளுடன் தற்போதிருந்தே முனைவதே ஆகக்குறைந்த வியூகமாக இருக்கும். தவிர்த்து, நல்லாட்சிக்கால புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை கைவிட வேண்டும் என்று கஜேந்திரகுமார் வலியுறுத்துவதும், தானும் இணைந்து அப்பணியில் ஈடுபட்டதால் அதனைக் கைவிடமுடியாது என்ற சுயமரியாதைக்குள் நின்று சுமந்திரன் 'கட்சி தீர்மானத்தை' காரணம் காண்பிப்பதாலும் நன்மை ஜே.வி.பி. அரசாங்கத்துக்கு தான். ஏனென்றால், வடக்கு, கிழக்கில் தமிழ் பிரதிநிதிகள் எண்ணிக்கைக்கு நிகராக ஜே.வி.பி.யும் மக்கள் பிரதிநிதித்துவங்களை கொண்டிருக்கின்றது. ஆகவே, தமிழ் பிரதிநிதிகள் வடக்கு, கிழக்கு மக்களின் ஏகோபித்த நிலைப்பாடு என்று கட்சி முரண்பாடுகளுக்கு அப்பால் அரசியலமைப்புக்கான யோசனைகளை முன்வைத்தால் கூட ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது சந்தேகம் தான். இதற்குள், சகோதர முஸ்லிம் தரப்புக்களையும் உள்ளீர்க்க வேண்டிய தேவையும் தமிழ்த் தரப்புக்கு உள்ளது. அத்தரப்பு தனியாக அரசியலமைப்பு விடயங்களை கையாள முனைந்தால் நிலைமைகள் அதோ கதிதான். https://www.virakesari.lk/article/222258
1 month 2 weeks ago
ராகுல் காந்தி கிளப்பிய ‘வாக்கு திருட்டு’ விவகாரம்: தேர்தல் ஆணையம், பாஜக எதிர்வினை என்ன? Published By: RAJEEBAN 10 AUG, 2025 | 01:05 PM புதுடெல்லி: கடந்த 2024 மக்களவைத் தேர்தல் முதல் பல்வேறு மாநிலத் தேர்தல்களில் பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு வைத்து மிகப் பெரிய அளவில் வாக்காளர் மோசடி நடந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். இது குறித்த தரவுகளை வெளியிட்ட அவர், ஐந்து விதமாக ‘வாக்குகள் திருட்டு’ நடந்துள்ளதாக விவரித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி அணுகுண்டு வீசிவிட்டார் என்று பரபரப்புகள் கூடிய நிலையில், அவரது குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது தேர்தல் ஆணையம். கூடவே, ‘இது ராகுலின் உச்சபட்ச விரக்தியின் வெளிப்பாடு மட்டுமே’ என்று அவரை பாஜக கிண்டல் செய்துள்ளது. தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “தேர்தல் முடிவுகள் முன்கூட்டியே திட்டமிடப்படுகின்றன. இதற்கு, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதிக்கு கிடைத்த முடிவுகளே சாட்சி. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 16 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற எண்ணிக்கை கிடைத்தது. ஆனால், நாங்கள் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். வெற்றி வாய்ப்புள்ள 7 தொகுதிகளில் நாங்கள் தோல்வி அடைந்தோம். இந்த தோல்வி குறித்து நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம். இந்த விரிவான ஆய்வில், பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு வைத்து ஐந்து விதமாக வாக்குகள் திருடப்பட்டது தெரியவந்தது. 1. போலி வாக்காளர்கள், 2.போலி முகவரி, 3.ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், 4.தவறான புகைப்படங்கள், 5.படிவம் 6 தவறாக பயன்படுத்தப்படுவது என 5 விதமாக வாக்குகள் திருடப்பட்டுள்ளன. கர்நாடகாவின் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில், 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு தொகுதியில் மட்டும் நடந்திருந்தால், நாடு முழுவதும் என்ன நடக்கிறது என்று கற்பனை செய்து பாருங்கள். மகாதேவபுரா தொகுதியில் மட்டும் 11,965 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். போலி மற்றும் தவறான முகவரிகள் மூலம் 40,009 வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூரு மத்திய தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் 40,009 வாக்காளர்களுக்கு போலியான வீட்டு முகவரி இடம்பெற்றுள்ளது. இதில் சிலருடைய வீட்டு முகவரயின் கதவு எண் ‘பூஜ்ஜியம்’ என்று இருக்கிறது. வாக்குகளை யார் திருடுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். முன்பு, எங்களிடம் ஆதாரம் இல்லை, ஆனால் இப்போது எங்களிடம் நூறு சதவீதம் ஆதாரம் உள்ளது. அனைத்துத் தரவுகளும் கிடைத்துள்ளன. இந்த வாக்குத் திருட்டு பல தொகுதிகளில் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் இப்போது சாக்குப்போக்கு சொல்லக் கூடாது. அவர்கள் எங்களுக்கு சிசிடிவி காட்சிகள் மற்றும் மின்னணு வாக்காளர் பட்டியலை வழங்க வேண்டும். இது எனது கோரிக்கை மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையும் ஆகும்” என்று வெகுண்டெழுந்திருக்கிறார் ராகுல் காந்தி. பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முடிந்து, வரைவு பட்டியலை கடந்த 1-ம் தேதி ஆணையம் வெளியிட்டது. அதில், சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில்தான் தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி தரவுகள் - ஆதாரங்கள் என ஆய்வு முடிவுகளைச் சுட்டிக்காட்டி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தேர்தல் ஆணையம் எதிர்வினை: கர்நாடகாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், கர்நாடக மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி இது குறித்து ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘கர்நாடகாவில் தகுதியற்ற வாக்காளர்கள் பலர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பல தகுதியுடைய வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் நீங்கள் கூறியுள்ளீர்கள். அவ்வாறு நீக்கப்பட்ட மற்றும் சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை 1960 தேர்தல் விதி 20 (உட்பிரிவு 3)-இன் கீழ், உங்களின் கையொப்பத்துடன் அனுப்புமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அப்படி அனுப்பினால் மட்டுமே தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க முடியும்” என்று கூறியுள்ளார். இதேபோல், மகாராஷ்டிரா மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராகுலுக்கு எழுதிய கடிதத்தில், “வாக்காளர் பட்டியல் பத்தி 3-ன்படி, தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் நீங்கள் கூறியதை புரிந்துகொள்ள முடிகிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க 1960-ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் விதி 20(3)(b)-ன் கீழ் இந்தக் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள சத்தியப் பிராமணத்தில் கையொப்பமிட்டு திருப்பி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை உச்சபட்ச விரக்தி என்று சாடியுள்ளது பாஜக. டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பித்ரா, “ராகுல் காந்தியும், காங்கிரஸும் அவர்கள் வெற்றி பெற்ற இடங்களில் எந்த பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்துவதில்லை. இதுபோன்ற குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பொங்கும் போக்கை தேசம் கவனித்து வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் 99 இடங்களில் காங்கிரஸ் வென்றது. அதைக் கொண்டாடவும் செய்தது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை கேள்வி கேட்கிறது. ராகுல் சொல்வது போல் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவில் சமரசம் செய்திருந்தால், 99 இடங்களில் வெற்றி கிடைத்தது எப்படி? ராகுல் காந்தி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்” என்று கூறியுள்ளார். இந்நிலையில்தான் காங்கிரஸ் சார்பில், ராகுல் காந்தி தலைமையில் பெங்களூருவில் ஃப்ரீடம் பார்க்கில் இன்று ‘வாக்கு அதிகாரப் பேரணி’ நடைபெறுகிறது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். ‘நமது வாக்கு, நமது உரிமை, நமது போராட்டம்’ என்ற கோரிக்கையுடன் இப்பேரணி நடைபெறுகிறது. பேரணியாக சென்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பிக்கவுள்ளனர். https://www.virakesari.lk/article/222229
1 month 2 weeks ago
Published By: RAJEEBAN 10 AUG, 2025 | 10:50 AM ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60 வது கூட்டத்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் குழுவிற்கு தலைமை தாங்கவுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கையின் நிலைப்பாட்டை முன்வைத்து உரையாற்றவுள்ளார். புதிய அரசாங்கம் பதவியேற்றது முதல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படும் தீர்மானங்கள் கடுமையானவையாக காணப்படாத நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் பொறுப்புக்கூறலிற்கு தீர்வை காண்பதற்காக உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது, அரசியல் தலையீடுகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டபடி சுயாதீன வழக்குரைஞர் அலுவலகத்தை ஏற்படுத்துவது உள்நாட்டு பொறிமுறை குறித்து சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் சுயாதீன வழக்குரைஞர் அலுவலகத்தை ஏற்படுத்துவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளோம், எதிர்காலத்தில் இதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை அவசியம் என்ற வேண்டுகோள்கள் குறித்து பதிலளித்துள்ள வெளிவிவகார அமைச்சர் செம்மணி விவகாரம் நீதிதிதுறையின் கீழ் வருகின்றது, இதில் அரசதலையீடு எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ளார். மன்னார் மாத்தளையிலும் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றை அகழ்வது விசாரணைகள் குறித்த உரிய நடைமுறைகளிற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது, இந்த விடயங்களில் நாங்கள் வெளிப்படையாக உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222209
1 month 2 weeks ago
பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பலரும் தூங்கும்போது வாயைத் திறந்து கொண்டு தூங்கும் பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள். கட்டுரை தகவல் சந்தன் குமார் ஜஜ்வாரே பிபிசி செய்தியாளர் 10 ஆகஸ்ட் 2025, 02:29 GMT புதுப்பிக்கப்பட்டது 10 ஆகஸ்ட் 2025, 05:47 GMT ஒவ்வொருவரும் தூங்கும் போது தனித்தனியான பழக்கவழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். சிலர் தடிமனான தலையணையை வைத்து தூங்குவார்கள். சிலர் மெல்லிய தலையணையில் தூங்க விரும்புவார்கள். வானிலை எப்படியிருந்தாலும், சிலரால் போர்வை இல்லாமல் தூங்க முடியாது. சிலருக்கு அப்படி தூங்க பிடிக்காது. ஆனால் நன்றாக தூங்கத் தொடங்கிவிட்டால், நம்மால் பல விஷயங்களைக் கவனிக்க முடியாது. அதில் ஒன்று தான் வாயைத் திறந்து கொண்டு தூங்குவது. தூங்கும் போது உங்கள் வாய் திறந்தே இருக்கிறதா? யாராவது உங்களிடம், 'நீ தூங்கும்போது வாயைத் திறந்து வைத்திருப்பாய்' என்று சொன்னதுண்டா? அப்படியானால், தூக்கத்தில் வாயைத் திறந்து வைத்திருப்பதற்கு காரணம் என்ன? அது எதைக் குறிக்கிறது? இது ஏதேனும் உடல்நல அபாயங்களையும் சுட்டிக்காட்டுகிறதா? என்பதைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம். தூக்கத்தின் போது வாயைத் திறந்துகொண்டே தூங்குதல் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பொதுவாக பல குழந்தைகள் தூங்கும்போது வாயைத் திறந்து வைத்திருப்பார்கள், இதற்குப் பின்னால் ஒரு சிறப்பு காரணம் இருக்கிறது (குறியீட்டு படம்) பல நேரங்களில், கடினமான வேலைகளைச் செய்யும்போது, மக்களுக்கு அதிக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதற்காக, அவர்கள் மூக்கு மட்டுமல்லாமல் வாய் வழியாகவும் சுவாசிக்கிறார்கள். ஓடும்போது அல்லது கால்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும்போது, மக்கள் வாய் வழியாக மூச்சு வாங்குவதைக் காணலாம். ஆனால், பொதுவாக தூங்கும்போது, நம் கண்களைப் போலவே வாயும் மூடியிருக்கும். தூக்கத்தில், நாம் மூக்கு வழியாக சுவாசிக்கிறோம். நிம்மதியான நிலையில் இருப்பதால், வேகமாக சுவாசிக்க வேண்டிய தேவை இருப்பதில்லை. ஆனால் தூங்கும்போது பலருடைய வாய் திறந்தே இருக்கும். அப்போது, அவர்கள் வாய் வழியாக சுவாசிக்கிறார்கள். இதற்கான காரணத்தை அறிய, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (AIIMS) நுரையீரல், தீவிர சிகிச்சை மற்றும் தூக்க மருத்துவத் துறையின் மருத்துவர் விஜய் ஹட்டாவிடம் பேசினோம். "வாயைத் திறந்து கொண்டே தூங்குவது மிகவும் பொதுவானது. பலரும் இப்படித்தான் தூங்குகிறார்கள். வாயைத் திறந்து கொண்டே தூங்குவது எந்த நோயின் அறிகுறியும் இல்லை" என்று விளக்கிய மருத்துவர் விஜய் ஹட்டா, "மூக்கில் ஏதேனும் பிரச்னை இருந்தாலோ அல்லது மூக்கு அடைத்திருந்தாலோ, மக்கள் வாய் வழியாக சுவாசிக்கிறார்கள்"என்று கூறினார். மூக்கு அடைப்புக்கு ஒரு பொதுவான காரணம் கடுமையான சளி. ஆனால், சில சமயங்களில் டான்சில் பெரிதாவதால் மூக்கு அடைப்பு ஏற்படுகிறது. இது குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு அடினாய்டுகள் அல்லது டான்சில் பெரியதாக இருக்கும், இவை தொற்றுநோயை எதிர்த்து போராட உதவுகின்றன. இதனால் மூக்கில் லேசான அடைப்பு ஏற்படுகிறது. அதனால்தான் பல குழந்தைகள் வாயைத் திறந்து கொண்டே தூங்குகிறார்கள். வயது ஏற ஏற, டான்சில் சிறிதாகி, இந்தப் பழக்கம் மெல்ல மறைந்துவிடும். எப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, நாம் தூங்கும் போது நிம்மதியான நிலையில் இருக்கிறோம், எனவே பொதுவாக வாய் வழியாக சுவாசிக்க வேண்டிய அவசியமில்லை (குறியீட்டு படம்) செப்டம் குருத்தெலும்பு, நாசி செப்டமின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. இது நாசி செப்டம் குருத்தெலும்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாசி செப்டம் நாசி குழியை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. "செப்டம் குருத்தெலும்பு இயற்கையாகவே சற்று வளைந்திருக்கும், முற்றிலும் நேராக இருக்காது. ஆனால், அது அதிகமாக வளைந்தால், மூக்கின் ஒரு பகுதி அடைபடுகிறது. இதனால், விலகிய நாசி செப்டத்தின் (DNS) காரணமாக, மக்கள் வாய் வழியாகவும் சுவாசிக்கத் தொடங்குகிறார்கள்" என மருத்துவர் விஜய் ஹட்டா கூறுகிறார். இந்தப் பிரச்னை தீவிரமானால், செப்டோபிளாஸ்டி எனும் அறுவை சிகிச்சை மூலம் இதை சரிசெய்ய முடியும். ஆனால், தூங்கும்போது வாயைத் திறந்து வைத்திருந்தால் சுவாசம் உரத்த சத்தமாக இருந்தாலோ அல்லது குறட்டை விடுவதாக இருந்தாலோ, உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. எப்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, வாயைத் திறந்து கொண்டே சுவாசிப்பது வாய் சுகாதாரத்தைப் பாதிக்கிறது (மாதிரி படம்) "வாய் வழியாக சுவாசிப்பது வாயில் வறட்சியை ஏற்படுத்தும். இது வாய் சுகாதாரத்தைப் பாதிக்கலாம்" எனக் கூறுகிறார் டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையின் நுரையீரல், தீவிர சிகிச்சை மற்றும் தூக்க மருத்துவத் துறையின் தலைவர் மருத்துவர் ரோஹித் குமார். ஒருவர் வாயைத் திறந்து கொண்டு தூங்கினால் அல்லது வாய் வழியாக சுவாசித்தால், அந்த நேரத்தில் குறட்டை சத்தம் கேட்டால், அது வேறு ஏதேனும் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இதுபோன்ற சூழ்நிலையில், அதற்கான காரணத்தைக் கண்டறிய ஒரு மருத்துவரைத் தொடர்புகொள்வது நல்லது. "ஒருவருக்கு இருமல், சளி அல்லது வேறு எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாய் திறந்து தூங்கினால், முதலில் காது, மூக்கு, தொண்டை (ENT) பரிசோதனை செய்ய வேண்டும். அதன் பிறகு தான் மேற்கொண்டு பரிசோதனைகள் செய்ய முடியும்"என்று மருத்துவர் ரோஹித் குமார் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj4wey0j1xro
1 month 2 weeks ago
10 AUG, 2025 | 10:26 AM குடியுரிமை தரமறுக்கும் பாஜக அரசு; குடியிருக்கும் உரிமையை பறிக்கும் திமுக அரசு; ஈழத்தமிழச் சொந்தங்களை அடக்கி ஒடுக்குவதற்கு பெயர்தான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாமில் வசிக்கும் மக்களுக்கு நிபந்தனைகளுடன் 420 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் வீடு ஒதுக்கீடுப் பெற்ற ஈழச்சொந்தங்கள் தங்கள் வீட்டின் முன் இருந்த ஆபத்தான திறந்தவெளி சாக்கடைக்கு மூடியிட்டு முகப்பு கூரை அமைத்தனர் என்பதற்காக தமிழ்நாடு அரசின் Q - பிரிவு காவலர்கள் சாக்கடை மூடியை அகற்றாவிட்டால் அளித்த வீடுகள் திரும்பப்பெறப்படும் என கடும் மிரட்டல் விடுத்து அச்சுறுத்துவது வன்மையான கண்டனத்துக்குரியது. வீடுகள் திரும்பப்பெறப்படும் என்ற Q - பிரிவு காவல்துறையின் மிரட்டலால் மனமுடைந்த பவானிசாகர் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தம் அருள்குமார் விசமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும் மிகுந்த மனவலியும் தருகிறது. வந்தவரை எல்லாம் வசதியாக வாழவும் ஆளவும் வைத்த தமிழர் நிலம் தம் சொந்த இனத்தவரை சொந்தமாக பத்தடி நிலம் கூட உரிமை கோர முடியாத நிற்கதியான நிலையில் தவிக்க விட்டிருப்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். தமிழ் இனத்திற்கும் நிலத்திற்கும் துளியும் தொடர்பற்ற வடவர்களை இலட்சக்கணக்கில் உள் நுழைய அனுமதித்து தமிழர் வேலை வாய்ப்பினை தட்டிப்பறித்து வழங்கியதுடன் ஆதார் அட்டை முதல் குடும்ப அட்டைவரை வழங்கி நிரந்தரமாய் இங்கே தங்க வைத்துள்ளதற்கு விதிக்கப்படாத கட்டுப்பாடுகளும் ஏற்படுத்தப்படாத தடைகளும் எம் ஈழத்தமிழ் மக்களுக்கு விதிக்கப்படுகிறது என்றால் இந்த ஆட்சியும் அதிகாரமும் யாருக்கானது? வடவர்கள் தமிழ் மண்ணிற்கு வந்த ஓரிரு வருடங்களில் வாக்களிக்கும் உரிமை வரை தரத் தயாராகிவிட்ட இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் இரண்டு தலைமுறையாக ஈழச்சொந்தங்கள் இந்த மண்ணில் வாழ்ந்தும்கூட இன்றுவரை குடியுரிமை தர மறுப்பது ஏன்? இலங்கை இனவெறி சிங்கள அரசின் இனப்படுகொலையை எதிர்கொண்டு எல்லையில்லா அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் ஆளாகி வீட்டை இழந்து நாட்டை இழந்து உறவுகளைப் பறிகொடுத்து உரிமைகளும் உடைமைகளும் அற்று இப்பூமிப்பந்தில் உயிர்வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்காதா? என ஏக்கத்தோடும் தவிப்போடும் பத்து கோடி தமிழ் மக்களின் தாயகமாக விளங்கும் தாய்த்தமிழகத்தை நாடிவந்த ஈழச்சொந்தங்களுக்கு இல்லாத உரிமை எங்கிருந்தோ இந்த நாட்டிற்கு வந்த திபெத்தியர்களுக்கு மட்டும் எப்படி வந்தது? திபெத்தியர்களுக்கு இந்நாடு அளிக்கும் வசதிகள், சலுகைகள் என்ன? அவர்களிடம் காட்டும் அக்கறை பரிவு பற்றில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட நாட்டுக்குப் பெருத்த பொருளாதாரப் பங்களிப்புகளைச் செய்யும் தமிழ்ப்பேரினத்தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களிடம் காட்ட மறுப்பதேன்? தமிழர்கள் நாங்கள் இந்த நாட்டிற்கு வரி செலுத்தவில்லையா? அல்லது வாக்குச் செலுத்தவில்லையா? நாட்டின் விடுதலைப்போராட்டம் முதல் இன்றைக்கு எல்லைப் பாதுகாப்பு போர்கள் வரை தமிழர்களின் பங்கு எவருக்கும் குறைந்தது இல்லையே? அதற்கு இந்நாடு தரும் கைமாறுதான் எம் ஈழச்சொந்தங்களை துரத்துவதா? இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு குடியுரிமை தர மறுக்கிறது. தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசோ குறைந்தபட்சம் நிம்மதியாக குடியிருக்கும் உரிமையைக்கூட தர மறுக்கிறது. இரண்டிற்கும் என்ன வேறுபாடு உள்ளது? இதுதான் திமுக அரசு இனத்தையும் மானத்தையும் மண்ணையும் மொழியையும் காக்கும் செயலா? இதுதான் திமுக தமிழர் உரிமையை மீட்கும் முறையா? வடவர்களுக்கு வாசல் திறந்துவிட்டு ஈழத்தமிழ்ச் சொந்தங்களை Q - பிரிவு காவலர்கள் மூலம் ஒவ்வொரு நாளும் சித்ரவதை செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடலா? வீடு என்ற பெயரில் திமுக அரசால் வழங்கப்படும் வெப்பத்தை உமிழும் கான்கீரிட் கொட்டைகளுக்குள் ஈழச்சொந்தங்களை அடைத்துவைக்க முயல்வது கொடுங்கோன்மை இல்லையா? உயிருக்கு ஆபத்தான பாதுகாப்பு அற்ற சாக்கடைக்கு மூடி இடுவதினாலோ வெயில் வரமாலிருக்க மேற்கூரை அமைப்பதினாலோ திமுக அரசுக்கு நேர்ந்த இழப்பு என்ன? அரசால் ஒதுக்கப்பட்ட முகாமுக்குள் செய்யப்படுவது அது எப்படி ஆக்கிரமிப்பாகும்? ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு திமுக அரசின் Q - பிரிவு காவலர்கள் தொடர்ச்சியாக தரும் நெருக்கடிகளை கண்டித்து தற்போது பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே அறப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என்பதை இவ்வறிக்கையின் வாயிலாக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறேன். ஆகவே ஈரோடு மாவட்டம் பவானிசாகர் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு திமுக அரசு Q- பிரிவு காவல்துறை மூலம் தரும் அச்சுறுத்தல்களை உடனடியாக நிறுத்தி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் பாதுகாப்பாகஇ நிம்மதியாக வாழ அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இதற்கு மேலும் - பிரிவு காவலர்களின் நெருக்கடிகளும் அச்சுறுத்தல்களும் தொடர்ந்தால் முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களை காக்க என்னுடைய தலைமையில் விரைவில் ஈரோட்டில் மாபெரும் போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரிக்கின்றேன். https://www.virakesari.lk/article/222205
Checked
Mon, 09/29/2025 - 09:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed