புதிய பதிவுகள்2
களைத்த மனசு களிப்புற ......!
மலரும் நினைவுகள் ..
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கின்றது அவுஸ்திரேலியா - ஹமாஸ் நிர்வாகத்தில் பங்கேற்ககூடாது என நிபந்தனை
Published By: RAJEEBAN 11 AUG, 2025 | 12:07 PM ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன அரசின் நிர்வாகத்தில் பங்கேற்ககூடாது என்ற நிபந்தனையுடன் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் எதிர்கால அமர்வில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் இதனை உறுதி செய்துள்ளதுடன் இரண்டு தேசக்கொள்கை மத்திய கிழக்கில் வன்முறையை நிறுத்துவதற்கு மனித குலத்திற்கான சிறந்த நம்பிக்கை என தெரிவித்துள்ளார். பாலஸ்தீன இஸ்ரேலிய தேசங்களை உருவாக்குவதற்கான 181 வது தீர்மானத்திற்கு ஆதரவாக முதலில் கையை உயர்த்திய நாடு அவுஸ்திரேலியா என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். 77வருடங்களின் பின்னர் இந்த தீர்மானம் குறித்து சில தரப்பினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக உலகத்தினால் இனிமேலும் காத்திருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இராணுவகளைவு, பொதுத்தேர்தல்களை நடத்துதல், இஸ்ரேலின் இருப்பை அங்கீகரித்தல் போன்ற வாக்குறுதிகளை பாலஸ்தீன அதிகார சபை வழங்கியுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள யூதசமூகத்தினர் உடனடியாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த முடிவை கண்டித்துள்ளனர், பாலியல் வன்முறை மற்றும் கொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு தொழில்கட்சி அரசாங்கம் வெகுமதி வழங்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/222300
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் அல்ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் பலி
11 AUG, 2025 | 11:22 AM காசா நகரத்தின் அல்சிபா மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அல்ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனையின் முன்வாயில் தாக்கப்பட்டபோது அந்த பகுதியில் கூடாரத்திலிருந்த அனஸ் அல்-ஷரீப் மற்றும் முகமது க்ரீகே, கேமராமேன்கள் இப்ராஹிம் ஜாஹர், முகமது நௌஃபல் மற்றும் மோமன் அலிவாஆகியோர் கொல்லப்பட்டனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. இந்த "இலக்கு வைக்கப்பட்ட படுகொலை" ஊடக சுதந்திரத்தின் மீதான மற்றுமொரு அப்பட்டமான மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/222297
ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை
ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் 20இற்கு முன்னர் வெளிப்படும் - பரீட்சைகள் திணைக்களம் Published By: VISHNU 11 AUG, 2025 | 02:04 AM (இராஜதுரை ஹஷான்) ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும். விடைத்தாள் திருத்தும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (10) முதல் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை 2025.11.10 ஆம் திகதி முதல் 2025.12.05 ஆம் திகதி வரையும், 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை 2026.02.17 ஆம் திகதி முதல் 2026.02.26 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை திட்டமிட்ட வகையில் சிறந்த முறையில் நிறைவடைந்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகளை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கவுள்ளோம். இதற்கமைய பரீட்சை பெறுபேறுகள் 2025.09.20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும். 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலவகாசம் நாளையுடன் (12) நிறைவடைகிறது.ஆகவே தாமதமில்லாமல் விண்ணப்பிக்குமாறு விண்ணப்பதாரிகளிடம் கேட்டுக்கொள்கிறோம். 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சை 2025.11.10 ஆம் திகதி முதல் 2025.12.05 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை 2026.02.17 ஆம் திகதி முதல் 2026.02.26 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/222284
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
Published By: VISHNU 10 AUG, 2025 | 10:50 PM (இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக குடிக்கொண்டுள்ளமை அதனால் ஏற்படும் பாதிப்பை மிக வன்மையாக கண்டிக்கிறோம். இராணுவ பிரசன்னத்துக்கு பாரியதொரு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(15) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஹர்த்தாலினால் முழுமையாக முடங்க வேண்டும். எமது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அநீதிகளை கருத்திற் கொண்டு வர்த்தகர்கள் அன்றைய தினம் கடையடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். முத்தையன்கட்டு இளைஞன் கொலை வன்மையாக கண்டித்தக்கது. பொலிஸார் எவ்வித தலையீடுகளுமின்றி முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இராணுவத்தினர் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள். செம்மணி இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (10) ஊடக சந்திப்பொன்றை நடத்தி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் சனிக்கிழமை (09) அதிகாலை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 2025.08.08 ஆம் திகதியன்று நான்கு அல்லது ஐந்து பேர் முல்லைத்தீவு இராணுவ முகாமுக்கு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நால்வர் முகாமில் இருந்து தப்பித்துச் சென்றுள்ளார்கள். ஒருவர் காணாமல் போனதாகவும் குறிப்பிடப்பட்டு, காணாமல் போனவரின் உடல் தான் குளத்தில் இருந்து பின்னர் மீட்கப்பட்டுள்ளது. முகாமுக்குள் வைத்து இராணுவத்தினர் தம்மை மிக மோசமாக தாக்கியதாக தப்பித்து வந்தவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இராணுவத்தினரால் தாக்கப்பட்டு அடித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் குளத்தில் வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் உடன் விசாரணை செய்யப்பட வேண்டும். பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம். இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் மாலை முல்லைத்தீவு பொலிஸாரினால் ஒருசில இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதில் மூவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித தலையீடுகளுமின்றி முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். பிரதான விடயம் யாதெனில் ஒரு சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் அது தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்லுவது பிரயோசனமற்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் அப்பிரதேச மக்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள். மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள். இதற்கு செம்மணி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சித்துப்பாத்தி செம்மணி பகுதியில் குறுகிய காலத்துக்குள் 147 இற்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. பல வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்கள் என்பது தற்போது தெரியவருகிறது. இவ்வாறான பின்னணியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக குடிக்கொண்டுள்ளதாகலும் அதனால் ஏற்படும் பாதிப்பை மிக வன்மையாக கண்டிக்கிறோம். அதேவேளை இராணுவ பிரசன்னத்துக்கு பாரியதொரு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் முழுமையான ஹர்த்தாலில் ஈடுபடுமாறு சகல தரப்பினரிடமும் கோருகிறோம். எமது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அநீதிகளை கருத்திற் கொண்டு வர்த்தகர்கள் அன்றைய தினம் கடையடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். சகல நடவடிக்கைகளையும் கைவிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுமையாக முடங்க வேண்டும். இதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகிறோம். ஏனைய அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள், மக்கள் அமைப்புக்கள், வர்த்தகர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/222278
முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனவர் சடலமாக மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ரவிகரன் வலியுறுத்து
இராணுவத்தினரின் அடக்குமுறை முத்து ஐயன்கட்டு குளத்தடி சம்பவம் ஊடாக வெளிப்பட்டுள்ளது - கோமகன் சுட்டிக்காட்டு 10 AUG, 2025 | 05:25 PM முத்து ஐயன்கட்டு குளப்பகுதியில் இடம்பெற்ற படுகொலை மூலம் மீண்டும் இராணுவத்தினரின் அராஜகம் வெளிபட்டிருப்பதாக குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயல்பாட்டாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (10) யாழ்ப்பாணம் - அராலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. யுத்த காலத்தில் எவ்வாறு இராணுவ மயமாக்கப்பட்டிருந்ததோ அதே இராணுவ மயமாக்கல் தொடர்ச்சியாக தாயக பிரதேசங்களில் நிலவுகிறது. தென்பகுதியில் இவ்வாறான இராணுவ எண்ணிக்கையோ அல்லது இராணுவ செயல்பாடுகளோ காணப்படுவதில்லை. ஆனால் எமது பிரதேசங்களிலேயே இது காணப்படுகின்றது. எனவே உடனடியாக இந்த இராணுவமயமாக்கலை நிறுத்த வேண்டும். தமிழர் தாயகங்களில் உள்ள இராணுவத்தினரை தென்பகுதிகளுக்கு அனுப்பினால் தமிழர் தாயகங்களில் உள்ள இராணுவ மயமாக்கலை குறைக்கலாம். மீண்டும் இராணுவத்தினருடைய அடக்குமுறையானது முத்து ஐயன்கட்டு குளத்தடியில் மேற்கொள்ளப்பட்ட குடும்பஸ்தரின் படுகொலை மூலம் வெளிப்பட்டு நிற்கின்றது. எனவே இராணுவத்தினரின் இவ்வாறான அராஜகங்கள் உடனடியாக கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222262
ஏ -9 வீதி கொடிகாமம் பகுதியில் வாகன விபத்து - ஒருவர் பலி!
11 AUG, 2025 | 09:40 AM யாழ்ப்பாணம் - கண்டி ஏ9 வீதியில், கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஒருவர் அமர்ந்திருந்தபோது, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது, உயிரிழந்தவர் மிருசுவில் கரம்பஹம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் தனது வாகனத்தின் மீது மோதுவதைத் தடுக்க டிப்பர் வாகன சாரதி பிரேக் போட்டபோது, அதே திசையில் இருந்து வந்த கூலர் லொரியானது டிப்பர் வாகனத்தின் பின்புறத்தில் மோதியுள்ளது. அதன் தாக்கத்தில் டிப்பர் வாகனம், நிருத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதோடு, கூலர் லொறி எதிரே வந்த கார் ஒன்றுடன் மோதியுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கடுமையாக காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். அத்தோடு, டிப்பர் வாகன சாரதி, கூலர் லொரி வாகன சாரதி, வாகனத்தின் ஓட்டுநர், காரின் சாரதி மற்றும் அவரது மகன் ஆகியோர் காயமடைந்து யாழ். வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/222289
துருக்கியில் 6.1 ரிச்டர் அளவில் பூகம்பம்; ஒருவர் உயிரிழப்பு
Published By: DIGITAL DESK 3 11 AUG, 2025 | 10:23 AM துருக்கியில் 6.1 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர். இஸ்தான்புல் மற்றும் சுற்றுலா தலமான இஸ்மிர் உட்பட துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள பல நகரங்களில் பூகம்பம் உணரப்பட்டுள்ளது. துருக்கி உள்விவகார அமைச்சர் அலி யெர்லிகாயா, "இடிபாடுகளுக்குள் சிக்கிய 81 வயது முதியவர் மீட்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால் அவர்களின் உடல்நிலை மோசமாக இல்லை. இந்த பூகம்பத்தில் சிந்திர்கி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 16 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அவற்றில் நான்கு குடியிருப்புகளும், நகர மையத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடங்களும் அடங்கும். ஆறு பேர் வசித்து வந்த மூன்று மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். உயிரிழந்த நபரும் இடிபாடுகளுக்குள் சிக்கினார் என தெரிவித்துள்ளார். அந்நாட்டு நேரப்படி இரவு 7:53 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவுகோலில் 3.5 முதல் 4.6 வரை சுமார் 20 பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. துருக்கி பல புவியியல் பிளவுக் கோடுகளால் சூழப்பட்டுள்ளமையினால் பல பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தென்மேற்கில் ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி 53,000 பேர் உயிரிழந்தனர். இந்த பூகம்பம் பண்டைய நகரமான அந்தியோக்கியாவின் தளமான அன்டக்யாவை பேரழிவிற்கு உட்படுத்தியது. அதேவேளை, ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் 5.8 ரிச்டர் அளவுகோலில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 69 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222294
கியேவ் இல்லாத ஒப்பந்தம் இறந்த முடிவுகளுக்கு சமம் - செலென்ஸ்கி
கியேவ் இல்லாத ஒப்பந்தம் இறந்த முடிவுகளுக்கு சமம் - செலென்ஸ்கி 11 August 2025 ரஸ்யாவுடனான எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையிலும் கியேவும் இடம்பெற வேண்டும் என்று ஐரோப்பிய நட்பு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. எதிர்வரும் வெள்ளிக்கிழமை அலஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் சந்திப்பை நடத்தவுள்ளார். இதற்கு முன்னோடியாகவே இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, போலந்து, பின்லாந்து மற்றும் ஐரோப்பிய ஆணையகத் தலைவர்கள் கூட்டாக இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளனர். யுக்ரைன் ஜனாதிபதியும் பங்கேற்கும் வகையில் சந்திப்பை நடத்துவதற்கு ட்ரம்ப் தயாராகவே உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் இப்போதைக்கு, ரஸ்ய ஜனாதிபதி ஆரம்பத்தில் கோரியபடி, அது ட்ரம்ப்-புடின் உச்சி மாநாடாகவே நடைபெறும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி குறிப்பிட்டுள்ளார். புட்டினை பொறுத்தவரையில், செலேன்ஸ்கியை நேரடியாக சந்திக்க விரும்பாமையே இதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கியேவ் இல்லாத எந்தவொரு ஒப்பந்தமும் இறந்த முடிவுகளுக்கு சமம் என்று யுக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி கூறியுள்ளார். https://hirunews.lk/tm/413993/agreement-without-kiev-is-tantamount-to-dead-ends-zelensky
காசா நகரை கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்
இஸ்ரேலின் திட்டங்களுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் 11 August 2025 காசா நகரத்தை "கட்டுப்பாட்டில் கொண்டு வரும்" இஸ்ரேலின் திட்டங்களை ஐக்கிய நாடுகள் சபைக்கான, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கண்டித்துள்ளனர். எனினும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான "சிறந்த வழி" இது மாத்திரமே என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். இந்தநிலையில் திட்டமிட்ட தாக்குதல் நகர்வு மிக விரைவில் ஆரம்பிக்கும் என்றும் அது நகரும் என்றும் "காசாவை ஹமாஸிடமிருந்து விடுவிக்கும்" என்றும் நெதன்யாகு செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளே பட்டினியால் வாடுகின்றனர். மாறாக இஸ்ரேல்,காசா மக்களை பட்டினியில் வைத்திருப்பதாக கூறப்படுவதை அவர் மறுத்துரைத்தார். இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை அவசரக் கூட்டத்தில் இஸ்ரேல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் இந்த திட்டத்தினால், சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளன. இஸ்ரேலின் இந்த திட்டம், பணயக்கைதிகளை பாதுகாக்க எதுவும் செய்யாது, மேலும் அவர்களின் உயிருக்கு மேலும் ஆபத்தையே விளைவிக்கும் என்று அந்த நாடுகள் எச்சரித்துள்ளன. எனினும் அமெரிக்கா இஸ்ரேலைப் பாதுகாக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளது. பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், தமது நாடு அயராது உழைத்து வருவதாக அமெரிக்க தூதர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் இஸ்ரேல் முழுவதும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இந்த திட்டம், பணயக்கைதிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அவர்கள் தமது அச்சத்தை வெளியிட்டுள்ளனர். https://hirunews.lk/tm/413994/various-countries-condemn-israels-plans
முத்துஐயன்கட்டுக் கொலை: சுமந்திரன் கண்டனம்
முத்துஐயன்கட்டுக் கொலை: சுமந்திரன் கண்டனம் முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுப் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றும் இது தொடர்பில் பொலிஸார் எவ்வித தலையீடுகளுமின்றி முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது அவர் தெரிவித்தார். இதன்போது அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுக் குளத்தில் கடந்த சனிக்கிழமை காலை தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ஐந்து பேர் முத்துஐயன்கட்டு இராணுவ முகாமுக்கு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நால்வர் முகாமில் இருந்து தப்பித்துச் சென்றுள்ளார்கள். ஒருவர் காணாமல்போயிருந்தார். அவரின் சடலம்தான் முத்துஐயன்கட்டுக் குளத்தில் இருந்து பின்னர் மீட்கப்பட்டுள்ளது. முகாமுக்குள் வைத்து இராணுவத்தினர் தம்மை மிக மோசமாகத் தாக்கினார்கள் என்று தப்பித்து வந்தவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இராணுவத்தினரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் குளத்தில் வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் உடன் விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும், பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம். இவ்வாறான நிலையில் சனிக்கிழமை மாலை ஒட்டுசுட்டான் பொலிஸாரினால் ஒருசில இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதில் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித தலையீடுகளுமின்றி முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். பிரதான விடயம் யாதெனில் ஒரு சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் அது தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்லுவது பிரயோசனமற்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் அந்தப் பிரதேச மக்களுக்கு எதிராகச் செயற்படுகின்றார்கள். மக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றார்கள். இதற்குச் செம்மணி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றார். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/முத்துஐயன்கட்டுக்-கொலை-சுமந்திரன்-கண்டனம்/175-362663
தமிழ்த்தேசியப் பயணத்துக்கு தமிழரசு இணக்கப்பாடில்லை! - கஜேந்திரகுமார்
தமிழ்த்தேசியப் பயணத்துக்கு தமிழரசு இணக்கப்பாடில்லை! ஐ.நா.வுக்கான கடித விவகாரத்தில் பொய்யுரைப்பு; கஜேந்திரகுமார் தெரிவிப்பு! ஐ. நா.வுக்குக் கடிதம் அனுப்பும் விவகாரத்தில் தமிழரசுக் கட்சியே பொய்யுரைத்துள்ளது. தமிழ்க் கட்சிகளிடையே இப்போது இணக்கப்பாட்டை ஏற்படுத்தத் தவறினால் தமிழ்த் தேசியம் அழியும் நிலை ஏற்படும். இணக்கப்பாட்டை ஏற்படுத்த நாங்கள் தொடர்ந்தும் முயற்சிப்போம். இவ்வாறு யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள முன்னணியின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடத்திய ஊடக சந்திப்பின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு இலங்கையை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வலியுறுத்தி தமிழ்த் தேசியக்கட்சிகள், சிவில் அமைப்புகள் எனப்பலரும் ஒன்றிணைந்து இணக்கத்துடன் கடிதத்தைத் தயாரித்து ஐ.நா.வுக்கு அனுப்பியுள்ளோம். இந்தக் கடிதத்தில் உள்ள விடயங்களில் தமிழரசுக் கட்சியும் இணக்கம் தெரிவித்து தாமும் கையொப்பம் வைப்பதாகத் தெரிவித்திருந்தது. அதற்கமைய ஆரம்பகட்டப் பேச்சுகளும் நடைபெற்றன. எனினும் இறுதியில் தமிழரசுக் கட்சி பொய்களைக் கூறியுள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக இந்தக் கடிதத்துடன் தான் இணங்குவதாகவும் கட்சித்தலைவரே குழம்புகிறார் என்றும் யாழ்ப்பாணத்தில் நடக்கும் கூட் டத்தில் பேசி ஒரு முடிவுக்குக் கொண்டுவருவோம் என்றும் அந்தக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் கூறினார். அதன்படி, இந்தக் கடிதத்தை மேலும் பலப்படுத்துவதாக இருந்தால் பரவாயில்லை எனவும் அதில் வெட்டித் திருத்தம் செய்வதென்றால் தாமதம் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் கடிதத்தின் தரத்தைக் குறைக்க முடியாது, தரத்தைக் கூட்டுவதாக இருந்தால் தாமதித்தாலும் பரவாயில்லை என எமது தரப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் முடிவடைந்த பின்னர் நடத்திய ஊடக சந்திப்பின் போது இதுவரையும் எங்ளுக்குள் பேசப்பட்ட விடயங்களுக்கு மாறாக அப்பட்டமான பொய்களை சுமந்திரன் சொல்லியுள்ளார். அதற்குப் பிற்பாடும் 7ஆம் திகதி கொழும்பில் 5 மணிக்கு எனது இல்லத்தில் சந்திக்க இணங்கியிருந்தோம். தொடர்ந்தும் சந்திக்க விருப்பம் என்றால் அடுத்த வாரம் யாழில் சந்திக்கலாம் என்றும் நாங்கள் கூறினோம். நாங்கள் வெளிப்படைத்தன்மையாக நேர்மையுடன் இயங்க விரும்புகிறோம். ஆனால் அவர்களே திட்டமிட்ட பொய்களைக் கூறி வருகின்றனர். தமிழ்த்தேசியம் பாதுகாக்கப்பட்டு முன்னோக்கிப் பயணிக்கவேண்டுமாக இருந்தால் தமிழரசுக் கட்சி உட்பட நாம் அனைவரும் கட்டாயம் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்றார். https://newuthayan.com/article/தமிழ்த்தேசியப்_பயணத்துக்கு_தமிழரசு_இணக்கப்பாடில்லை!#google_vignette
முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனவர் சடலமாக மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ரவிகரன் வலியுறுத்து
முல்லைத்தீவு இளைஞன் உயிரிழப்பு! உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைப்பு! adminAugust 11, 2025 முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன் மாதிரிகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது. முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் காவற்துறை பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் கடந்த 07ஆம் திகதி இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனதாக தேடப்பட்டுவந்த 32வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற குடும்பஸ்தரே நேற்று முன்தினம் (09.08.25) முத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். நீதவானின் முன்னிலையில் சடலம் குளத்திலிருந்து மீட்கப்பட்டதுடன், தடயவியல் காவற்துறையினரால் தடயவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சடலம் உடல்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டது. யாழ் போதனா வைத்திய சாலையில் சட்ட வைத்திய அதிகாரியினால் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மரணத்திற்கான தெளிவான காரணம் குறிப்பிடப்படாமல் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் மேலதிக பகுப்பாய்வுக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட உள்ளது. https://globaltamilnews.net/2025/219108/
பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் படிமங்களுடன் & 100+ பெயர்களும்
வட்டல்/ பட்டல்/ தோணி - நவீன கால தொழிநுட்பமும் பழங்கால தொழிநுட்பமும் சேர்ந்து கட்டப்பட்ட தோணி. யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு சென்றிருந்த வேளை எடுக்கப்பட்ட நிழற்படம்
போர் முயற்சிகளுக்கான உக்ரைன் மக்களின் ஆதரவு சரிந்தது
இதே நிலமைதான் உக்ரேனிலும்.....செலென்ஸ்கிக்கு எதிரான போரட்டங்கள் வெளியே சொல்லப்படுவதில்லை. அதை விட கொடுமை என்னவென்றால் உக்ரேனில் நடக்கும் ஊழல்களுக்கு எதிரான போராட்டம். சொல்லி வேலையில்லை.அதுவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செல்லப்பிள்ளை உக்ரேனில் ஊழல் பிரச்சனை???? அமெரிக்கர்கள் எப்படி தங்கள் நாட்டிற்காக நெஞ்சின் மேல் கைவைத்து தேசிய கீதம் பாடுகின்றார்களோ அதே போல் அல்ல இன்னும் வலிமையாக நெஞ்சின் மேல் கை வத்து தேசிய கீதம் பாடுகின்றார்கள்.இதைப்பற்றி பளிங்கு ஊடகங்கள் வெளியே சொல்லாது.ரஷ்யர்கள் வலிமையானவர்கள். வலு உள்ளவர்கள். நாட்டுப்பற்று மிகுந்தவர்கள். ஒவ்வொரு நாட்டிலும் எதிர்கட்சி ஆளும் கட்சி என கொள்கைகள் இருக்கும். அதையெல்லாம் நாட்டின் நிலைமை சாட்சிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது.
பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் படிமங்களுடன் & 100+ பெயர்களும்
லெப். வாக்கர் என்ற ஆங்கிலேயர் கி.பி. 1811இல் நமது கப்பல்களைக் கண்டு வியந்து பின்வருமாறு கூறினார்: → 'பிரித்தானியாக்காரர்கள் கட்டிய கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மராமத்துச் செய்துதீர வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களுக்கு 50 ஆண்டானாலும் பழுது பார்க்கும் அவசியம் இல்லை." நிகழ்படம்: கட்டு வள்ளம், கட்டும் முறை.. இக்கட்டு வள்ளங்கள் TROY போரிலும் பயன்பட்டுள்ளது என்பதை கிரேக்க நாட்டு அகழ்வாராச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.. மேலும் இதன் எச்சங்கள் கிரேக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் வயது 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் படிமங்களுடன் & 100+ பெயர்களும்
கூடுதல் செய்திகள்: →சீனர்களின் சுங் வகைக் கப்பல்களுக்கு தமிழர்கள் வழங்கிய பெயர் - 'தூங்கு நாவாய்' → 1575இல் கோழிக்கோடு நகரத்தில் கப்பல்கள்:
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed