புதிய பதிவுகள்2

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா 2025!

1 month 2 weeks ago
இப்பவும் யாழ்ப்பாண மக்கள் புத்தகங்களை வாசிக்கின்றனரா?குறிப்பாக மாணவர்கள் வாசிக்கின்றனரா? நான் நினக்கின்றேன் சர்வதேச யூ டியுப்,சர்வதேச டிக்டொக்,சர்வதேச வட்சப் ,சர்வதேச முகப்புத்தக திருவிழா என திருவிழா நடத்தினால் மக்கள் அலை அலையாக வந்து கல்ந்து கொள்வார்கள்...🤣

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

1 month 2 weeks ago
சுமத்திரன்2010 இல் இருந்து அரசியலில இருக்கிறார். தமிழரசுக்கட்சியின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கக் கூடிய நிலையிலும் இருந்திருக்கிறார்.மைத்திரி ஜனாதிபதியாக இருந்த காலத்தில்வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத வகையில் இரு பிரதான கட்சிகளும் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்த வேளையில் ஒருங்கிணைந்த கூட்டரசாங்கத்துக்கு முழு ஆதரவளித்த எதிர்க்கட்சியில் இருந்திருக்கிறார். அப்பொழுதெல்லாம். இராணுவ பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இராணுவ பிரசன்னத்தைக் குறைக்குமாறு கோரவில்லை.ரணில் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் பல முறை தமிழத்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாலேயே தப்பிப் பிழைத்தது.அப்பொழுதெல்லாம் இதனை ஒரு துருப்புச்சீட்டாகாப் பாவித்து ஏன் பேரம் பேசவில்லை. மாறாக அதே இராணுவ பாதுகாப்புடனேயேதமிழ்ப்பிரதேங்களில் உலாவித் திரிந்தார்.இப்பொழுது மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் வடமாகாண முதலமைச்சர் கனவில் பம்மாத்து அரசியல் செய்கிறார். இது ஒரேநாளில் நெல் முளைத்த வயலை ஊழுது விதைத்து அறுவடை செய்து நெருப்பில்லாம் பொங்கல் பொங்கி படம்காட்டிய நடிப்பு அரசியல் போலத்தான் இ.ருக்கப் போகிறது.நல்லூர்த்திருவிழா காலத்தில் யாழ்நகர்பகுதியில் சனநடமாட்டம் அதிகரித்த வேளையில் வர்த்தகர்களின் வணிகத்துக்கு ஆப்பு வைக்க நினைக்கிறார். நல்லூர்த்திருவிழாவையே நம்பி வாழும்கடலை கச்சான்,தும்புமிட்டாயக் கடைகளையும் சாத்த வேண்டும் என்று சொல்கிறாரோ?

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

1 month 2 weeks ago
நாங்கள் பாடசாலைக்கு செல்ல முதலிருந்து பொலிசும் ,இராணுவமும் அட்டுழியங்களை செய்கின்றனர்...பெரிய இனப்ப்டுகொலை நடந்த பின்பும் அட்டுழிய்ங்களை செய்கின்றனர் ... அவர்கள் நியாயமாக நடந்தால் மக்கள் அநியாயமாக நடக்க மாட்டார்கள் ... 😆

பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள 135 வைத்தியசாலைகள் மூடப்படக் கூடிய அபாயம் ; பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் திங்கள் முதல் தொடர் வேலை நிறுத்தம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

1 month 2 weeks ago
இடதுசாரிகள் நாட்டை கியுபா போல மாற்ற வேணுமென்றும் வலதுசாரிகள் நாட்டை சிங்கபூராகவும் மாற்ற வேணுமென்று கனவு காண்கின்றனர் ஆனால் சிறிலங்கா மக்களும்,அமைச்சர்களும் சிறிலங்கா போல த்தான் இருப்போம் என அடம் பிடிக்கின்றனர்.

போர் முயற்சிகளுக்கான உக்ரைன் மக்களின் ஆதரவு சரிந்தது

1 month 2 weeks ago
ஆரம்பத்தில் உக்கிரேஎன் நேட்டோவில் அங்கம் பெறவேண்டும் எனும் முனைப்புடன் போரில் ஈடுபட்டது ஆனால் நேட்டோ கனவு கலைந்து போனாலும் தொடர்ந்தும் போரிடுகிறது. உக்கிரேனின் அடுத்த குறி ஐரோப்பிய ஒன்றிய இணைவு, அது ஓரளவிற்கு சாத்தியப்படலாம் எனும் நிலையில் அண்மையில் தன்னிச்சையாக செயல்படும் ஊழல் ஒழிப்பு பிரிவினை செலன்ஸ்கி தனது கட்டுப்பாட்டில் எடுக்கும் சட்டம் இயற்றியவுடன் அதற்கெதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள், இந்த ஆர்பாட்டம் 2014 மேடான் ஆர்ப்பாட்டம் போன்றது என கூறினார்கள். எவ்வாறு குறுகிய காலப்பகுதியில் இவ்வார்ப்பாட்டம் உருவானது என்பது தொடர்பில் ஆச்சரியம் தெரிவிக்கப்பட்டது, இதனிடையே உடனடியாக செலன்ஸ்கி அவசர அவசரமாக அந்த சட்டத்தினை நீக்கிவிட்டார். இதன் பின்னணியில் ஐரோப்பிய ஒன்றியம் செலன்ஸ்கியிற்கு மாற்றீடாக சலூஸ்னியினை ஆட்சி பீட ஏற்ற முனைகிறதாக கூறப்படுகிறது, இவர் முற்று முழுதான இராணுவ பின்னணி கொண்டவர், தொடர்ந்து போரினை சிறப்பாக நடத்த இராணுவ பின்னணி கொண்ட ஒரு தலைமைபீடம் அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் கருதலாம். மேற்கின் அறிவுரையின்படி இஸ்தான்புல் உடன்படிக்கையினை ஏற்க மறுத்து தொடர்ந்து போரிட முடிவு செய்த செலன்ஸ்கி அதே ஆண்டு ஒக்ரோபர் மாதம் செலன்ஸ்கி புதிய ஒரு சட்டத்தினை இயற்றினார், அதன் மூலம் எந்த ஒரு உக்கிரேன் அரச அதிகாரிகளும் உக்கிரேன் சார்பாக இரஸ்சியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் அது சட்டவிரோதம் எனும் சட்டம். போரிற்கான தேவைகள் வலிந்து உருவாக்கப்படுகின்றன, புதிதாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களை இராணுவத்தில் இணைப்பதற்கான புதிய சட்டத்தினையும் உருவாக்கியுள்ளார் செலன்ஸ்கி. ஆனால் எதற்காக யுத்தத்தில் ஈடுபடுகிறார்கள் (செலன்ஸ்கி ஐரோப்பாவிற்காகவும் போராடுகிறோம் என கூறினார்) எனும் தெளிவு உக்கிரேனியர்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் இல்லை, நேட்டோவில் இணையமாட்டோம் என கூறினால் போர் முடிந்துவிடும், அதே நேரம் உக்கிரேனை நேட்டோவில் இணைக்க நேட்டோ நாடுகளும் விரும்பவில்லை ஆனாலும் போர் தொடர்கிறது. எந்த போராட்டத்திற்கும் ஒரு கொள்கை வேண்டும் அது தவறானதாக இருந்தாலும் அதனை விரும்புபவர்கள் அதனை பின்பற்றுவார்கள், ஆனால் வெறும் அதிகாரம், பணம் என்பவற்றிற்காக மற்றவர்களின் கருத்தினடிப்படையில் செயல்படமுடியாது.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியா!

1 month 2 weeks ago
இந்த மலேரியாவின் (cerebral malaria) (வெளியே தெரியாத ) ஒரு பக்கம் இராணுவ போட்டி / பகைமை, சீன - அமெரிக்கா பாதுகாப்பு துறைகளுக்கு இடையில் ஏற்படுத்தியது. காரணம், சீனர் ( யுயு என்றும் பெயர்) என்றே நினைவு இதுக்கு குறிப்பிட்ட மூலிகையில் இருந்து மருந்தை கண்டறிந்தது. அமெரிக்கா இராணுவத்துக்கு அது மிகப் பெரியசாவால் அந்த நேரத்தில் (2015 மட்டில் , ஆனால் அதுக்கு முதலே பல ஆண்டுகள் ஆய்வு இரு இராணுவத்திலும்) இரு இராணுவம், பாதுகாப்பு துறையும் நீண்ட மலேரியா ஆய்வு வரலாறு உடையவை. அனால், பின்பு us இராணுவம் இதில் மும்மரமாக ஆராய்ந்து, சாதாரண புல்லில் (பெயர் நினைவு இல்லை) இருந்தும் எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்து இருந்தது .

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

1 month 2 weeks ago
நாம் பாடசாலைக்கு செல்ல ஆரம்பித்த காலம் தொட்டு இன்றுவரை கதவடைப்பு நடைபெறுகின்றது. கதவடைப்பை பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பும் வைக்கின்றது. மக்களின் நாளாந்த வாழ்க்கையை பாதித்தது நீங்கலாக கதவடைப்புக்கள் அவை வைக்கப்பட்டதற்கான நோக்கத்தை நிறைவேற்றி உள்ளனவா?

மழையால் யாழில் 32 பேர் பாதிப்பு!

1 month 2 weeks ago
Published By: DIGITAL DESK 2 11 AUG, 2025 | 08:26 PM யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (11) காலை பெய்த கனமழையால், ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஜே/351, ஜே/363, ஜே/364 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஜே/393 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/222348

உயர்தர, சாதாரண தர பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

1 month 2 weeks ago
11 AUG, 2025 | 05:23 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கான தினத்தை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரையும், சாதாரண தர பரீட்சைகள் 2026 பெப்ரவரி 17 முதல் 26 வரையும் நடைபெறும் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செவ்வாய்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகள் ஊடாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அதிபர்கள் ஊடாக விண்ணிப்பிக்க முடியும் என்றும், தனிப்பட்ட பரீட்சாத்திகள் தமது தேசிய அடையாள அட்டை ஊடாகவும் விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic என்பவற்றில் வழிகாட்டுதல்களை அவதானித்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட நகலை வேறு தேவைகளுக்காக வைத்துக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை ஊடாக விண்ணப்பிக்கவுள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் ஏற்கனவே அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/222329
Checked
Mon, 09/29/2025 - 09:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed