புதிய பதிவுகள்2

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

1 month 2 weeks ago
சுமந்திரன் தனது இருப்பை காட்டிக் கொள்வதற்காக அவ்வப்போது பைத்தியக்காரத்தனமான செயல்களில் ஈடுபட்டு, தனது மூக்கை அறுத்துக் கொள்வதுதான் வழமை. அதில்... செல்வநாயகம் காலத்து அரதப் பழசான கடையடைப்பை தூசிதட்டி எடுத்து, இப்போ செய்ய முற்படுகின்றார். அதற்கு மக்களின் ஆதரவு இல்லை என்று இப்போதே தெரிந்து விட்டது. சுத்துமாத்து சுமந்திரன் புதிதாக சிந்தித்து, கீழ் வரும் போராட்டங்களை முன் எடுக்க வேண்டும். 1) தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தல். 2) சாகும் வரை உண்ணா விரதம். 3) பெற்றோல் ஊத்தி தீக்குளித்தல். போன்றவற்றை செய்தால்... மக்களின் அமோக ஆதரவு அவருக்கு நிச்சயம் உண்டு. 😂 🤣

கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை"

1 month 2 weeks ago
கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 02 "ஆ, கந்தையா தில்லை! நீங்கள் உங்கள் குட்டிப் பேரன் இசையுடன் வந்திருக்கிறீர்கள்," என்று சிவன் கூறினார். "வா, வா - காலை உணவு தயாராக உள்ளது", என அன்பாக வரவேற்றார். பின் சிவா, 'இசை'யை பார்த்து என்னை ஒருவன் பதினாறு அகவையில், 'பித்தா பிறைசூடி பெருமானே' என்று பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே என்று திட்டினான், நியோ அவனின் வர்க்கமூல அகவையில் தாளம் காட்டும் நடையுடன் புகழ்ந்து வருகிறாய்' என்று மெச்சினார். நாம் இருவரும் ஒரு தெய்வீக கொற்றக் குடையின் கீழ் அமர்ந்தோம். தட்டுகள் தங்க நிறத்தில் இருந்தன, உணவு வானளாவியதாக இருந்தது - மேகங்களைப் போல மென்மையான இட்லிகள், நெய் சொட்டும் பொங்கல், பூமியில் உள்ளதை விட இனிமையான தெய்வீக மாம்பழங்கள் அங்கு எமக்கு இருந்தன. தியானத்தை முடித்துக் கொண்டு அங்கு வந்த புத்தர் எமக்கு மல்லிகை தேநீர் வழங்கினார். பார்வதி இசைக்கு ஒரு பிரகாசமான இனிப்பு லட்டுவை வழங்கினார். அது 'இசை'யை மகிழ்ச்சியுடன் சிரிக்க வைத்தது. காலை உணவுக்குப் பிறகு, நான் , "சுவாமி, நாங்கள் சில முக்கிய கேள்விகளுடன் வந்துள்ளோம். எங்கள் அன்பான நிலமான இலங்கையில் என்ன நடக்கிறது?" என்று ஆரம்பித்தேன். சிவன் பெருமூச்சு விட்டார், அவரது மூன்றாவது கண் மெதுவாக மினுமினுத்தது. "கந்தையா தில்லை, மண் நினைவால் அழுகிறது. போரின் வலி, அதிகார பேராசை, உண்மையின் மௌனம் - அது இன்னும் எதிரொலிக்கிறது." சுருக்கமாக கூறினார்! ஆனால் எனக்கு, அந்த விளக்கம் சற்றும் திருப்தி அளிக்கவில்லை, என் வாய் 'வாடா வாடா, சுடலை மாடா, அங்கிட்டும் இங்கிட்டும் பார்க்காம எங்கிட்டும் நிற்காம, என் கவலை தீர்க்க உடனே நீ ஓடி வாடா' என்று முணுமுணுத்துக்கொண்டு இருந்தது. சிவனுக்கு அது கேட்டிருக்க வேண்டும். சிவன் தொடர்ந்தார் 'செம்மணியில் செய்யப்பட்டது வெறும் கொலை அல்ல - அது வாழ்க்கையை, தர்மத்தையே அவமதிப்பதாகும். பெண்கள், குழந்தைகள், மண்ணின் மைந்தர்கள் பாதுகாப்பதாக சத்தியம் செய்தவர்களால் சாம்பலாக மாற்றப்பட்டனர். ஆனாலும் நிலம் நினைவில் கொள்கிறது - சாட்சியமளிக்க மண் இன்று செம்மணியில் எழுகிறது.' என்றார்! 'யாழ்ப்பாண நூலகத்தைப் பற்றியும் நான் கூறவேண்டும். சரஸ்வதி வீணையுடன் முன்னுக்கு இருந்தாள், ஆனால் கண்மூடி இருந்துவிட்டாளே?' ஒரு பெருமூச்சு விட்டார். 'அறிவுக் கோயில் எரிமலையாக மாறியது - காலத்தால் அல்ல, வெறுப்பால். அந்த நெருப்பு புத்தகங்களை மட்டுமல்ல, ஒரு மக்களின் ஆன்மாவையும் எரித்தது. புத்தகங்களை எரிப்பவர்கள் நாகரிகங்களை எரிக்கிறார்கள்.' என்று கோபத்துடன் கூறினார். வானரத்தின் வழிவந்த வன்முறையாளர் வளந்தரு நூலகத்தை தீமூட்டி எரித்தார்! கானகத்தின் அமைதியில் தியானித்தவன் கருத்தபுகையில் சத்தியம் இழந்தான்! போதிமரமும் கொதித்து எழ, புத்தனும் போதனையைக் கைவிட்டு சிலையானான்! என்னை ஏறிட்டு பார்த்தார். பின் இசையை கட்டித் தழுவியபடி, 'தமிழ் கண்ணீரில் நனைந்த நிலத்தில் என் சகோதரன் புத்தரின் சிலையை வலுக்கட்டாயமாக எழுப்புவது வழிபாடு அல்ல - அது அவமானம். சிவன் என்ற நான், மதம் என்ற போர்வையில் வெற்றியை ஆசீர்வதிப்பதில்லை. கீழே புதைக்கப்பட்ட எலும்புகளிலிருந்து நீதி முளைக்கும் வரை, இரத்தம் தோய்ந்த மண்ணில் தர்மம் மலர முடியாது. அதுவரை, இந்த நிலம் தூங்காது.' என்று அமைதியாக கூறினார். பின் 'லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை உண்மை கூற விரைவில் அனுப்புவார் என் நண்பர் புத்தர்' என்றார். பார்வதி கருணையுடன் கூறினார், "ஆனால் நம்பிக்கை சிறிய இதயங்களில் வாழ்கிறது. இசை போன்ற குழந்தைகள் இரக்கத்தின் ஜோதியை சுமப்பார்கள்." என்றார். பக்கத்தில் இந்திரன் [Sakka, king of gods], விஸ்ணு [Upulvan / උපුල්වන් ‍දෙවියෝ] சூழ நின்ற புத்தர் புன்னகைத்தார், "துன்பம் இருக்கிறது, ஆனால் அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பாதையும் இருக்கிறது. இப்போதும் கூட, சாம்பலுக்கு மத்தியில், கருணையின் விதைகள் வளர்ந்து வருகின்றன." புத்தர் தொடர்ந்தார், "நான் அஹிம்சையைக் கற்றுக் கொடுத்தேன் - வெறும் செயலில் அல்ல, சிந்தனையிலும். செம்மணியில், இறந்தவர்களின் மௌனம், பேச்சை விட சத்தமாக அழுகிறது. அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டு ரகசியமாக புதைக்கப்படும்போது, தேசம் பூமியை மட்டுமல்ல, அதன் சொந்த மனசாட்சியையும் தோண்டி எடுக்கிறது." என்று ஒரு பெருமூச்சு விட்டார். "என்னை சிலையாகி எங்கும் திணிக்கிறார்களே தவிர, வேறு ஒன்றையும் நான் காணவில்லை?" ஏக்கத்துடன் என்னைப் பார்த்தார். 'இசை'யை வாரி எடுத்து கொஞ்சினார். 'யாழ்ப்பாண நூலகத்தின் அழிவு வெறும் புத்தகங்களின் இழப்பு அல்ல - அது ஞானம், கலாச்சாரம், நினைவாற்றல் ஆகியவற்றின் மீதான தாக்குதல். தீயை மூட்டியது மாறன் ( Mara / இவன் ஒரு அசுரன், தனது அழகிய பெண்களை அனுப்பி முனிவர்கள், தேவர்கள், அரக்கர்கள் மற்றும் மனிதர்களின் கடுமையான தவத்தை கலைக்கும் ஆற்றல் படைத்தவன் ஆவான். ) அல்ல, மாறாக வெறுப்பால் மேகமூட்டப்பட்ட கொடிய மனிதர்கள்!'. 'அன்பு அல்லது சம்மதம் இல்லாமல் தமிழ் நிலங்களில் எனது உருவத்தை வலுக்கட்டாயமாக வைப்பது தம்மம் அல்ல - அது ஒரு துறவியின் உடையில் அரசியல் நாடகம். அடக்குமுறையின் மூலம் பிறந்த ஒரு கோயில், அமைதிக்கான இடம் அல்ல, மாறாக பாசாங்குத்தனத்தின் நினைவுச்சின்னம். நான் உண்மையிலேயே அந்த சிலைகளில் இருந்தால், நான் கட்டாயம் அழுவேன்.' என்றார் "ஒன்றை நினைவில் வையுங்கள் 'என்னைப் பின்பற்றுபவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களுக்கு: ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். எலும்புகள் மற்றும் முள்வேலி மீது நான் எப்போதாவது அமைதியைக் கட்டினேனா??" புத்தர் துக்கம் தாளாமல் அழுதார். செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே துயிலாத சடலங்களே கண்மணி மழலைகளும் கதறாத மௌனங்களே செம்மண்ணும் அவர்களைத் தழுவ மறுக்குதே காடையர்கூட்டம் அதன்மேல் கும்மாளம் அடிக்குதே! பாடசாலை சிறுமி சிதறிக் கிடக்கிறாளே பக்கத்தில் இன்னும் அவளின் புத்தகப்பையே புத்தர் போதித்தது மண்ணோடு மண்ணாகிற்றே அப்பாவி உடல்கள்மேல் வழிபாடு நடக்குதே! விலங்குக்கும் சில பண்பாடு உண்டே விபரம் அறிந்தால் நன்மை கிடைக்குமே விளக்கம் இல்லாத மதபோதனை எனோ களங்கப் படுத்துதே புண்ணியப் பூமியை! வரிசையில் எலும்புகள் அவலத்தைச் சொல்லுதே இடையில் சின்னஞ்சிறுசுகள் பாதகத்தைக் காட்டுதே பாவத்தை அழிக்கத் தோன்றிய கௌதமபுத்தனே சிலைசிலையாய் மண்ணைக் கவர்வது எதற்க்கோ! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் பாகம் 03 தொடரும் https://www.facebook.com/share/p/16puxtSJ2X/?mibextid=wwXIfr

புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்

1 month 2 weeks ago
உங்கள் & நண்பர்களின் தன்னலமற்ற சேவைகள் தொடர வாழ்த்துகள் தம்பியை சந்தித்தேன் உங்களை சந்திக்க முடியவில்லை, அடுத்த முறை சந்திப்போம்

போர் முயற்சிகளுக்கான உக்ரைன் மக்களின் ஆதரவு சரிந்தது

1 month 2 weeks ago
முன்னாள் ஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்கல் மின்ஸ்க் உடன்படிக்கை ஒரு உக்கிரேனை போரிற்கு தயார்படுத்துவதற்கான கால அவகாசத்தினை பெறும் உடன்பாட்டு நாடகம் என கூறியிருந்தார். தற்போது உக்கிரென் இராணுவத்திற்கு உடனடியாக ஒரு போர் நிறுத்தம் தேவை இல்லாவிட்டால், உக்கிரேன் இராணுவம் முற்று முழுதாக செயலிழக்கும் நிலை உருவாகிறது அதனை தடுத்து நிறுத்த உடனடி போர் நிறுத்தம் அவசியம். நிரந்தர போர் நிறுத்தமும் தீர்வும் ஏற்பட வாய்ப்பு குறைவாகவே உள்ளது என கருதுகிறேன்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

1 month 2 weeks ago
#ஹர்த்தால்_திகதியில்_மாற்றம் இந்த வெள்ளிக்கிழமை (15.08.2025) நடத்த திட்டமிட்ட ஹர்த்தால் தவிர்க்கமுடியாத காரணங்களால் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு 18.08.2025) ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக சுமந்திரன் ஐயா அறிவிப்பு… தகவல் #காலைமுரசு_மாலைப்பதிப்பு 👇👇👇கூலி திரைப்படத்தை முன்னிட்டு கர்த்தால் பின்போடப்பட்டுள்ளதாம்.ரஜனி நன்றி தெரிவிப்பாம். இந்திய சுதந்திர தினம் வேறையாம்.

போர் முயற்சிகளுக்கான உக்ரைன் மக்களின் ஆதரவு சரிந்தது

1 month 2 weeks ago
உக்கிரேன் போரில் உளவு தகவலினடிப்படையில், பிரதான திட்டமிடல்கள் நேட்டோ அதிகாரிகளினாலேயே நடாத்தப்படுவதாக கூறப்படுகிறது, இதில் ஐரோப்பிய யூனியனும் பங்குதாரர்கள். அடிப்படையில் நேட்டோவின் திட்டத்தில் மாற்றமில்லை எனவே கருதுகிறேன். 2013 இல் மேடான் கலவரத்திற்கு முன்னதாக அமெரிக்க செனட்டரின் ஜோன் மக்கேயினினது உக்கிரேன் விஜயத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி. 2016 இல் லின்ட்சே கிரகமும், ஜோன் மக்கேயினினது உக்கிரேன் விஜயத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி.

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

1 month 2 weeks ago
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 கௌரி சற்குணம் ·doersStpno6hmi lgucgfgau793a1h8ic6828cg0uh34962829441598i0tm · நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குணம் பெறலாம்... 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும். 6. வாயு தொல்லை வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும். 7. வயிற்று வலி வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும். 8. சரும நோய் கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும். 9. மூக்கடைப்பு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும். 10. கண் எரிச்சல், உடல் சூடு வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும். 11. வயிற்றுக் கடுப்பு வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும். 12. பற் கூச்சம் புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும். 13. வாய்ப் புண் வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும். 14. தலைவலி பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும். 15. வயிற்றுப் பொருமல் வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும். 16. அஜீரணம் ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும். ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும். 17. இடுப்புவலி சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும். 18. வியர்வை நாற்றம் படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும். 19. உடம்புவலி சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும். 20. ஆறாத புண் விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும். 21. கண் நோய்கள் பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும். 22. மலச்சிக்கல் தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும். 23. கபம் வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும். 24. நினைவாற்றல் வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். 25. சீதபேதி சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும். 26. ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும். 27. பூச்சிக்கடிவலி எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும். 28. உடல் மெலிய கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும். 29. வயிற்றுப்புண் பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். 30. வயிற்றுப் போக்கு கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும். 31. வேனல் கட்டி வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும். 32. வேர்க்குரு தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம். 33. உடல் தளர்ச்சி முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும். 34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம். 35. தாய்ப்பால் சுரக்க அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும். 36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும். 37. எரிச்சல் கொப்பளம் நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது. 38. பித்த நோய்கள் கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும். 39. கபக்கட்டு நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும். 40. நெற்றிப்புண் நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும். 41. மூக்கடைப்பு இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது. 42. ஞாபக சக்தி வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும். 43. மாரடைப்பு சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம். 44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும். 45. கை சுளுக்கு கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும். 46. நீரிழிவு அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும். 47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். 48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன் புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம் 49. உடல் வலுவலுப்பு ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும். 50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும். எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும். கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும். Voir la traduction...... !

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

1 month 2 weeks ago
புலம்பெயர் அகதியார் தான் செற்றிலாகிய வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற மேற்குலகநாடுகளின் மின்சார உற்பத்தியில் காற்றாலை மின் உற்பத்தி பெரும் பங்கு வகிக்கிறது என்பதோடு அதிகரித்தும் வருகின்றது என்பதை அறியாதவராக இருக்கின்றாரா அல்லது மன்னார் மக்களுக்கு அது எல்லாம் தேவையில்லை என்று நினைக்கிறாரா ?

தமிழர் தாயகம் அமைதியாகக் கைப்பற்றப்படும் வேளையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் இவ்வளவு தேவையற்ற மௌனம்? - பிரித்தானிய தமிழர் பேரவை

1 month 2 weeks ago
கொள்ளையரின் வெள்ளைக் கருத்துக்கள்

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

1 month 2 weeks ago
மன்னார் சொர்க்கம் இல்லை - காற்றாலை மின்திட்டத்தினால் பறவைகளிற்கு ஆபத்து இல்லை - எரிசக்தி அமைச்சர் 12 AUG, 2025 | 05:00 PM மன்னாரில் காற்றாலை மின்திட்டத்தினால் பறவைகளிற்கும் இயற்கை சமநிலைக்கும் பாதிப்பு ஏற்படாது என எரிசக்தி அமைச்சர் குமாரஜயக்கொடி தெரிவித்துள்ளமைக்கு சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். காற்றாலை மின்திட்டத்தினால் பறவைகளிற்கு ஆபத்து என தெரிவிக்கப்படுவது ஆதாரமற்ற விடயம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் நான் அந்த பகுதிக்கு சென்றுள்ளேன் காற்றாலைமின்திட்டத்தினால் பறவைகளிற்கு பாதிப்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை,மன்னார் முதல் பூநகரி வடக்கு முதல் அரசகாணி என தெரிவித்துள்ளார். மன்னாரை சில தரப்பினர் ஒரு சொக்கம் எனவும் அது காற்றாலை விசையாழிகளால் அழிக்கப்படலாம் என தெரிவிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் மன்னார் முதல் பூநகரி வடக்கு முதல் காணப்படும் பகுதி ஒரு தரிசு நிலம் மக்கள் பறவைகளை பற்றி பேசுகின்றனர், ஆனால் அந்த பாதையில் பறவைகள் எதுவுமில்லை என தெரிவித்துள்ளார். அமைச்சரின் கருத்து குறித்து பதிவிட்டுள்ள சூழல் ஆர்வலர் மெலனி குணதிலக மழைக்காலத்தில் புவிவெப்பமடைதல் உண்மையா என அமைச்சரிடம் கேட்காதீர்கள் என தெரிவித்துள்ளார். இதேவேளை அமைச்சரின் கருத்து குறித்து பதிவிட்டுள்ள ரெகான்ஜயவிக்கிரம 2025 இல் அரசியல்வாதிகளின் முட்டாள்தனமான பதில்களில் இதுவே தலைசிறந்தது என குறிப்பிடலாமா என கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/222424

ஊடகவியலாளர் குமணனை மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை அழைத்துள்ளனர்

1 month 2 weeks ago
இலங்கை பொலிஸார் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனை விசாரணைக்கு அழைப்பதை உடனடியாக கைவிடவேண்டும் - பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு Published By: RAJEEBAN 12 AUG, 2025 | 05:33 PM இலங்கை பொலிஸார் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனை விசாரணைக்கு அழைப்பதை உடனடியாக கைவிடவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. கணபதிப்பிள்ளை குமணனை விசாரணைக்கு அழைப்பதை, இலங்கை பொலிஸார் உடனடியாக கைவிடவேண்டும், தங்கள் துன்புறுத்தல்களை நிறுத்தவேண்டும், பத்திரிகையாளர்கள் பழிவாங்கப்படுதல் குறித்த அச்சமின்றி சுதந்திரமாக பணியாற்றுவதை உறுதி செய்யவேண்டும் என சிபிஜேயின் பிராந்திய இயக்குநர் பெஹ் லிஹ் யி வேண்டுகோள் விடுத்துள்ளார். நியாயபூர்வமான செய்தியறிக்கையிடலிற்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை பயன்படுத்துவது பொலிஸ் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வதாகும், அச்சு ஊடக சுதந்திரத்தை மீறுவதாகும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222431

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

1 month 2 weeks ago
காற்றாலை, கனிய மணல் அகழ்வு திட்டங்களுக்கு எதிராக மன்னாரில் 10-வது நாளாக தொடர் போராட்டம் Published By: DIGITAL DESK 2 12 AUG, 2025 | 04:41 PM மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டங்களை உடனடியாக நிறுத்தக் கோரி, மன்னார் மாவட்ட மக்கள், பொது அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தி வரும் போராட்டம் செவ்வாய்க்கிழமை (12) 10-வது நாளாகத் தொடர்கிறது. இப்போராட்டத்தில் மன்னார் தாழ்வுபாடு கிராம மக்கள் இன்றைய தினம் சுழற்சி முறையில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். நேற்று (11) நள்ளிரவு, காற்றாலை திட்டங்களுக்கான பாரிய உபகரணங்களை, பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார் தீவுக்குள் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, உபகரணங்களை ஏற்றி வந்த பார ஊர்தி உள்ளே நுழைய முடியாமல் தடைபட்டது. இதன்போது, போராட்டக்காரர்களை அச்சுறுத்தி, புகைப்படம் எடுத்து அங்கிருந்து வெளியேற்ற பொலிஸார் முயற்சித்தபோதும், போராட்டக்காரர்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக, அந்த வாகனம் மன்னார் நீதிமன்ற வளாகம் முன்பாக நிறுத்தப்பட்டது. இந்த போராட்டம் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிராக, மன்னார் பொலிஸார் தடை உத்தரவு பெறுவதற்காக இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர். இந்த வழக்கில் போராட்டக்காரர்கள் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222410
Checked
Mon, 09/29/2025 - 12:50
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed