புதிய பதிவுகள்2

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month 2 weeks ago
வணக்கம் வாத்தியார் .......... ! பெண் : காதல் கண் கட்டுதே கவிதை பேசி கை தட்டுதே ஆசை முள் குத்துதே அருகில் போனால் தேன் சொட்டுதே பெண் : பறவையாய் திாிந்தவள் இறகு போல் தரையிலே விழுகிறேன் இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன் காற்று நீயாக வீச என் தேகம் கூச எதை நான் பேச பெண் : கலைந்து போனாயே கனவுகள் உரச பறித்து போனாயே இவளது மனச இருள் போலே இருந்தேனே விளக்காக உணா்ந்தேனே உன்னை நானே ஆண் : பாா்வை கொஞ்சம் பேசுது பருவம் கொஞ்சம் பேசுது பதிலாய் எதை பேசிட தொியாமல் நான் பெண் : கூச்சம் கொஞ்சம் கேக்குது ஏக்கம் கொஞ்சம் கேக்குது உயிரோ உனை கேட்டிட தருவேனே நான் ஆண் : அன்பே அன்பே மழையும் நீ தானே கண்ணே கண்ணே வெயிலும் நீ தானே பெண் : ஒரு வாா்த்தை உன்னை காட்ட மறு வாா்த்தை என்ன மீட்ட விழுந்தேனே கலைந்து போனானே பறித்து போனாயே ......... ! --- காதல் கண் கட்டுதே ---

இலங்கையில் மனிதபுதைகுழிகள் தோண்டப்படும் நிலையில் தமிழ் மக்கள் வெளிநாட்டு உதவியை எதிர்பார்க்கின்றனர்

1 month 2 weeks ago
Published By: RAJEEBAN 13 AUG, 2025 | 03:40 PM https://www.dw.com Jeevan Ravindran இலங்கையில் மனித புதைகுழியொன்று தோண்டப்படும் ஒவ்வொரு தருணத்திலும் தம்பிராசா செல்வராணி உறக்கமிழந்தவராக காணப்படுகின்றார். "எங்கள் உறவுகளிற்கு என்ன நடந்தது என்பது தெரியாது அவர்கள் தோண்ட ஆரம்பிக்கும்போது நாங்கள் பதற்றமடைகின்றோம்" என அவர் டிடயில்யூவிற்கு(dw) தெரிவித்தார். இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதி தருணங்களில் இலங்கைஇராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல்போன தனது கணவர் முத்துலிங்கம் ஞானசெல்வத்தை 54வயது செல்வராணி தேடிவருகின்றார். 3 தசாப்தகால மோதலின் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் யுத்தம் முடிவிற்கு வந்தது. அதன் பின்னர் பல பாரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதகாலமாக தொல்பொருள் ஆய்வாளர்கள் செம்மணியில் உள்ள மனித புதைகுழியை அகழ்ந்துவருகின்றனர், இது இலங்கையின் வடபகுதி தலைநகரமான யாழ்ப்பாணத்தின் புறநகரில் உள்ளது. இதுவரை குழந்தைகளினது எலும்புக்கூடுகள் உட்பட 140க்கும் அதிகமான எலும்புக்கூடுகளை மீட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் ஒரு ஆழமற்ற கல்லறையில் ஒன்றாக புதைக்கப்பட்டுள்ளனர் செம்மணி 1998 முதல் ஒரு மனித குழியாகயிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட பகுதி. பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல்வன்முறை கொலை வழக்கில் விசாரணையை எதிர்கொண்டிருந்த முன்னாள் இராணுவ கோப்பிரல், அந்த மாணவியுடன் உடலுடன் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தார். செம்மணியை சுற்றியுள்ள பகுதிகளில் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களுடன் 1990ம் ஆண்டு முதல் தான் பணியாற்றுவதற்காக சட்டத்தரணி நிரஞ்சன் டிபில்யூவிற்கு தெரிவித்தார். "இதுவரை உடல்கள் தோண்டப்பட்டதில், உடல்கள் எந்தவித சட்டத்தடைகளும் இல்லாமல், ஆழமற்ற குறிக்கப்படாத புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளமை" தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்தார். நாங்கள் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுகின்றோம் என தெரிவித்த அவர் ஏற்கனவே இறந்தநிலையில் அவர்கள் புதைக்கப்பட்டிருந்தால் அவர்களின் உடல்கள் வளையாது என குறிப்பிட்டார். சிலரின் கைகால்கள் வளைக்கப்பட்டதாக தோன்றுகின்றது என அவர் குறிப்பிட்டார். அந்த இடத்தில் எலும்புக்கூடுகளுடன் செருப்புகள், ஒரு குழந்தையின் பால்போத்தல், குழந்தையின் பாடசாலை பை உள்ளிட்ட பல பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். காயங்களை கிளறுதல் செம்மணிக்கு மிகவும் வலிமிகுந்த அதிர்ச்சிகரமான வரலாறு உள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண மக்களுடன் என யாழ்ப்பாணத்தை தளமாக கொண்ட அடையாளம் ஆய்வு கொள்கை ஆய்வு மையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அனுஷானி அழகராஜா தெரிவித்தார். அந்த காலத்தில் எங்களின் நண்பர்களின் சகோதரர்கள் தந்தைமார் சகோதரிகள் காணாமல்போனார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் இது நடந்து 25 வருடங்களாகிவிட்டது, இது மிகவும் பழைய காயங்களை கிளறுகின்றது, பாதிக்கப்பட்டவர்களிற்கு மாத்திரமில்லை, முழு சமூகத்திற்கும் முழுயாழ்ப்பாணத்திற்கும், இது உங்களால் உண்மையில் மறக்க முடியாத நினைவுபடுத்தல் என அவர் குறிப்பிட்டார். இலங்கையில் இதுவரை இடம்பெற்ற மனித புதைகுழி விசாரணைகளில் செம்மணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக கவனத்தை ஈர்த்ததாக மாறியுள்ளது. இந்த மனித புதைகுழி அகழ்வு சர்வதேச மேற்பார்வை என்ற கோரிக்கையை கிளறியுள்ளது குறிப்பாக இலங்கையின் தமிழ் சமூகத்திடமிருந்து. ஜூன் மாதம் இந்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேக்கர் "பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை பெற்ற நம்பகதன்மை மிக்க உள்நாட்டு பொறிமுறைகளுடன் முன்னேறிச்செல்வதில் இலங்கை சிரமங்களை எதிர்கொண்டுள்ளது, இதன் காரணமாக இலங்கையர்கள் நாட்டிற்கு வெளியே நீதியை தேடுகின்றனர், சர்வதேச சமூகத்தின் உதவியுடன்" என தெரிவித்தார். அவர்கள் அடுத்தது யாரை கண்டுபிடிக்கப் போகின்றார்கள் என்பது தெரியாது வோல்க்கெர் டேர்க்கின் விஜயத்தின் போது தமிழ் செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர், தம்பிராசா செல்வராணி அதில் கலந்து கொண்டு ஐநாவின் மனித உரிமை ஆணையாளரை நேரடியாக சந்தித்தார். இலங்கையின் நீதி பொறிமுறையில் தனக்கு நம்பிக்கை இல்லை என அவர் மனித உரிமை ஆணையாளரிடம் தெரிவித்தார். அம்பாறையின் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி செல்வராணி, தனது மாவட்டத்தில் உள்ள மனித புதைகுழிகளையும் அகழவேண்டும் என அவர் தெரிவிக்கின்றார். 'நாங்கள் அச்சமடைந்துள்ளோம், அடுத்தது யாரை கண்டுபிடிக்கப்போகின்றார்கள் என்பது எங்களிற்கு தெரியாது என டிடபில்யூவிடம் தெரிவித்த அவர் நான் இரவும்பகலும் இதனையே நினைத்துக்கொண்டிருக்கின்றேன் என்னால் நிம்மதியாக உறங்கமுடியவில்லை, உண்ணமுடியவில்லை, நான் பெரிதும் குழப்பமடைந்துள்ளேன் என தெரிவித்தார். கடந்த 17 வருடங்களாக, ஜனாதிபதிகள் மாறிக்கொண்டிருக்க நாங்கள் அவர்களிடம் எங்கள் பிள்ளைகள் எங்கள் அன்புக்குரியவர்களிற்கு என்ன நடந்தது என்ற உண்மையை தெரிவிக்கும்படி கேட்டுவருகின்றோம் என அவர் தெரிவித்தார். ஆனால் முன்னேற்றம் என்பது மிகவும் மெதுவானதாக காணப்படுகின்றது. ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளும் வேளை செல்வராணி தற்போதும் சிஐடியினரின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றார். "அவர்கள் நான் அங்கு செல்லக்கூடாது என தெரிவிக்கின்றனர், உங்கள் உறவினர்கள் இறந்துவிட்டனர் நீங்கள் ஏன் அங்கு செல்கின்றீர்கள் என கேட்கின்றனர்" என்கின்றார் செல்வராணி. புதிய அரசாங்கம் பழைய பிரச்சினைகள் இலங்கையின் வழமையான வம்சாவளி அரசியலில் இருந்து விலகி செப்டம்பர் 2024 இல் நாடு இடதுசாரி ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவை தெரிவு செய்தது. எனினும் சட்டத்தரணி நிரஞ்சன் 'சந்தேகம் வெளியிடுகின்றார்' அரசாங்கங்களை நம்பமுடியாது என்பதை வரலாறு எங்களிற்கு தெரிவித்துள்ளது. அவர்கள் சர்வதேச கண்காணிப்பை எதிர்ப்பார்கள் என அவர் குறிப்பிடுகின்றார். அரசாங்கத்திற்கு இனப்பிரச்சினை குறித்த புரிதல் இல்லை அவர்கள் அதனை புரிந்துகொள்ளவில்லை என சட்டத்தரணி நிரஞ்சன் ஊழலை ஒழித்தால் நாடு அமைதியாகயிருக்கும் என அவர்கள் கருதுகின்றனர், ஆனால் "நாடு கடனிற்குள் சிக்கியமைக்கு இனப்பிரச்சினையும் ஒரு காரணம்" என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என குறிப்பிட்டார். மனித உரிமை சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதனும் தனது நம்பிக்கையின்மையை வெளியிட்டார். "வரலாற்றுரீதியாக, மிக தெளிவாக இலங்கையின் ஒவ்வொரு அரசாங்கமும் பல்வேறு பொறுப்புக்கூறல் செயற்பாடுகளில் சர்வதேச உதவியை நாடுவதற்கு தயங்கியுள்ளன" என அவர் தெரிவித்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க யுத்தகுற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது தொடர்பில் தான் சர்வதேச உதவியை பெறப்போவதில்லை என தெரிவித்திருந்தார். அரசாங்கம் நீதியை நிலைநாட்டுவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது என்பது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் உள்ள நம்பிக்கையின்மையை அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டினார். அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் சர்வதேச மேற்பார்வையை கோரும் என தான் கருதவில்லை என அடையாளத்தின் அழகராஜா தெரிவித்தார். முன்னைய அகழ்வுகளில் இருந்து இம்முறை அகழ்வில் வித்தியாசமான எதனையும் பார்க்கவில்லை என அவர் தெரிவித்தார். தங்கள் பிள்ளைகளை செம்மணியில் பார்ப்போம் என எதிர்பாக்கும் குடும்பங்களை நான் சந்தித்தேன், அவர்கள் இந்த செயற்பாடுகள் தங்களிற்கு ஏதோ பதிலை தரப்போகின்றது என நம்பமுயல்கின்றார்கள், ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கான பதில் மிகவும் ஆபத்தானது என அவர் தெரிவித்தார். நம்பிக்கை என்பது எப்போதும் சிறந்தவிடயமல்ல, ஏனெனில் அது உங்களை மிக மோசமாக ஏமாற்றும் காயப்படுத்தும் குறிப்பாக இலங்கையில் என அழகராஜா தெரிவித்தார். https://www.virakesari.lk/article/222491

சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கைது!

1 month 2 weeks ago
சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கைது! சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில், கைதி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற பின்னர், அவர் தொடர்ந்தும் அங்கு தங்கி சிகிச்சைப் பெறுவதற்காக இலஞ்சமாக, 1,500,000 ரூபா கோரப்பட்டதோடு, அதில் 300,000 ரூபாவை அவர் இலஞ்சமாகப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (13) காலை புறக்கோட்டையில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் வைத்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க கைது செய்யப்பட்டார். https://athavannews.com/2025/1442930

புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய

1 month 2 weeks ago
புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்! புதிய பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய உத்தியோகபூர்வமாக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பு சபை நேற்று (12) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியபோதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டது. புதிய பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அவரது பெயரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த வாரம் கூடிய அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442923

விளையாட்டுகள் பெண் உடலில் தனித்துவமான வகையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் குழுக்கள் ஆய்வு

1 month 2 weeks ago
இது ஒன்றும் தவறோ, புதுமையோ அல்ல. ஆணும் பெண்ணும் இணைந்த ஓர் உருவம் என்பது பெரும்பாலும் அர்த்தநாரீசுவரர் திருவுருவத்தைக் குறிக்கும். இது இந்து மதத்தில் சிவன் பார்வதி இருவரும் பாதியளவு உடலைப் பகிர்ந்து கொண்ட தோற்றத்தைக் குறிக்கிறது. ஒருபுறம் ஆண் உடலாக சிவனும், மறுபுறம் பெண் உடலாக பார்வதியும் இருப்பார்கள். இது ஆண் பெண் சமத்துவத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. மேலும், இது படைப்பின் இருமையையும், ஒன்றிணைப்பையும் குறிக்கிறது. முக்கிய குறிப்பு: இங்கு வன்புணர்வு முற்றாக இல்லாது ஒழியும்.🤩

கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆள வேண்டும் - ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால்

1 month 2 weeks ago
அம்பாறை தொகுதியில்.. சிங்களவன் பியசேன என்பனை தமிழரசு கட்சியில் போட்டியிட வைத்து... பாராளுமன்றம் அனுப்ப, அவன் ஓடிப் போய் மகிந்த கட்சியில் இணைந்து... சம்பந்தனுக்கு அல்வா கொடுத்த சம்பவமும் நடந்தது. இப்படி.... சம்பந்தனின் ராஜதந்திரம் எல்லாம் சாயம் வெளுத்த சம்பவங்கள் நிறைய உண்டு. சம்பந்தன், தமிழனை காட்டிக் கொடுத்து.... சாகும் மட்டும்... அரசாங்க மாளிகையில் சொகுசாக இருந்து, அனுபவித்துப் போனது தான், அரசியலில் செய்த சாதனை.

கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆள வேண்டும் - ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால்

1 month 2 weeks ago
ஒழுங்காக இருந்த தமிழர்களையும் கருணா பிள்ளையான் அமல் பின்னால ஓடவிட்டுவிட்டு நஸீரோட சேர்ந்து மாட்டு பிரியாணி கிண்டிக்கொண்டிருந்தவர் தான் அந்த கபோதி

ஊருக்கு... "கொலிடே" போறேன்.

1 month 2 weeks ago
ஊருக்கு நான் கிளம்பீட்டன். போய் கார் ஒன்றை வாடகைக்கு எடுக்கணும் இல்லையோ வானாவது பிடிக்கணும் வாகனம் ஒடியபடி இல்லை வாகனத்தில் இருந்தபடி வீடியோ எடுத்துப் போடணும் போகேக்க விமான நிலையத்திலும் போய் இறங்கி விமான நிலையத்திலும் போற விமானத்திலும் தாற சாப்பாட்டையும் படம் பிடித்து கட்டாயம் போடணும் சொல்லீட்டும் தான் நான் போனாலும் சப்பிரைஸ்சா தான் போறன் என்று சனத்திற்கு நல்லா படம் காட்டணும் ஜட்டியை விட கொஞ்சம் பெருசா காற்சட்டை ஒன்றை கொழுவணும் கண்டதை எல்லாம் வாங்கி தின்னணும் தின்னுறதைவிட படம் பிடிச்சு போடணும் கையில் ஒரு தண்ணிப் போத்தல் கண்ணுக்கு ஒரு கூலிங்கிளாஸ் தலையில ஒரு தொப்பி கட்டாயம் முடிஞ்சால் முதுகில ஒரு சோல்டர் பை முடியாட்டில் இடுப்பிலோ குறைக்காலோ ஒரு காசுப்பையை தொங்க விடணும் கையில கொஞ்ச மோதிரம் கைச் சங்கிலி கழுத்தில வடம்போல சங்கிலிகள் கடைசிவரை பூட்டாத சேட் மேல் பட்டன் கையை அகட்டியபடி ஒரு நடை கையில கட்டுக்காசுக்கு வாங்கிய போன் காலில சேலில வாங்கின செருப்புகள் இடைக்கிடை என்ன வெக்கையப்பா இங்க மனுசர் வாழலாமோ என்றனும் இங்கிலீசிலையும் கொஞ்சம் கதைக்கணும் இடைக்கிடை வெளிநாட்டையும் பீத்தனும் கடை கடையா ஏறி இறங்கணும் காணாததை கண்டவன் போல கண்ணில் கண்டதையும் வாங்கி வைக்கணும் கண்டவைக்கு ஹலோ என்றனும் இங்க கடையில மலியப்போட்ட சாமான்களை கட்டிக்கொண்டுபோயவைக்கு குடுக்கணும் ரிச்சாவுக்கு இயக்கச்சியில் போகணும் உச்சா போறதை தவிர மிச்சமெல்லாம் மிச்சம் விடாமல் படம்பிடிச்சு போடணும் கச்சான் கடலை சாப்பிடணும் நல்லூர் கந்தசாமியாரையும் கட்டாயம் பார்க்கணும் அந்த றீயோவில ஐஸ்கிறீம் நக்கணும் அப்படியே நாலு கடற்கரை போகணும் அதிலும் மீன் சந்தைப்படம் கட்டாயாம் அப்படியே ஏலுமென்றால் சந்தையும் இங்க பாணும் பருப்பும் சாப்பிட்டாலும் அங்க போய் பீசா பர்கர் என்று நிக்கணும் ஊரில இருக்கேக்க போகாத கோயிலுக்கு உதுதான் எங்கட குலதெய்வம் என்று ஊரைக் கூட்டி பொங்கல் வைக்கணும் ஊரில் உள்ள கோயில் எல்லாம் போகணும் உள்ளவனை எல்லாம் கூப்பிட்டு நல்ல ஊர் ஆடு வெட்டி பாட்டி வைக்கணும் ஊத்தி நல்ல சாராயமும் வாக்கணும் வாக்கிற சாரயத்தில வந்தவன் எல்லாம் வாழ்த்தணும் பெரிய வள்ளலென்று எல்லாம் முடிய ஏக்கங்களோட மிளகாய் தூளும் அரிசி, வேற வகை மாக்களோடு கருவாடும் பனங்கட்டியும் மிச்ச சொச்ச சாமானும் கட்டிக்கொண்டு எச்சிலயாவது பூசி அழுகிறமாதிரி நடிச்சு அதையும் வீடியோ எடுத்துப் போட்டிட்டு அப்படியே அழுவார் மாதிரி வந்திடணும் வந்து போன கடனை கட்ட சரியாகீடும். 😂😂😂 உண்மை உரைகல்

கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆள வேண்டும் - ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால்

1 month 2 weeks ago
சில காலத்திற்கு முன்பு நடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஒன்றில்... தமிழர்கள் பெரும்பான்மையாக வந்து, கிழக்கு மாகாண முதமைச்சராக தமிழர் ஒருவர் வரக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும்... அதனை ஒரு முஸ்லீமுக்கு கொடுத்த... கபோதி தான் சம்பந்தன். அதற்குப் பிறகு கிழக்கு தமிழர்களை சோனகன் அடக்கி ஒடுக்கியதெல்லாம் பெரும் சோகம். சோனகனுக்கு முதமைச்ச ஆசையை தூண்டி விட்டு... சம்பந்தன் கூத்துப் பார்த்ததால், இப்ப அவர்கள் தொடர்ந்தும் முதலமைச்சர் கனவில் மிதக்கின்றார்கள்.

“இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு” யாழ்தேவி ரயில் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ் நோக்கி பயணம்

1 month 2 weeks ago
“இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு” யாழ்தேவி ரயில் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ் நோக்கி பயணம். கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான பயணம்”எனும் தொனிப்பொருளில் யாழ்தேவி ரயில் இன்று காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தினை ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மக்களிடையே கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் க்ளீன் ஸ்ரீலங்கா செயலக அலுவலகத்தினால் “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான பயணம்”எனும் தொனிப்பொருளில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த திட்டமானது இன்று முதல் ஒருவார காலத்திற்கு செயற்படுத்தப்படவுள்ளதுடன் இதன் ஆரம்ப நிகழ்வு கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் பொதுச்செயலகத்தின் தலைவர் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ் பீ சுவ}ஸ்வராவின் தலைமையில் இன்று காலை கோட்டை ரயில்நிலைய வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் நிறுவன அதிகாரிகள் மற்றும் ரயில்வே திணைக்களத்தி;ன் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர் ஆரம்ப நிகழ்வையடுத்து இன்று காலை 6.20 க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தினை வந்தடைந்த யாழ்தேவி ரயில் காலை 6.40க்கு “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கான பயணமாக கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டது. குறித்த ரயில் இன்று பிற்பகல் 2 மணிக்கு யாழ் ரயில் நிலையத்தினை சென்றடையவுள்ளது இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ் பீ சுவஸ்வர “யாழ்ப்பாண மாவட்ட மக்களிடையே கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் சமூக மற்றும் நெறிமுறைகள் மற்றும் தேசியமட்டத்திலான அர்ப்பணிப்புக்கள் மற்றும் முயற்சிகள் மூலம் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே இதன்நோக்கமாகும்” https://athavannews.com/2025/1442868

புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய

1 month 2 weeks ago
பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை தொடர்புக் கொள்வதற்கான புதிய WhatsApp தொலைபேசி இலக்கம் அறிமுகம்! பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தனியுரிமையை பாதுகாப்பதற்காகவும், குற்றங்கள் மற்றும் அவர்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சனைகளின் போது நேரடியாக பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை தொடர்புக் கொள்வதற்காகவும் புதிய WhatsApp தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவால் 071-8598888 எனும் புதிய WhatsApp இலக்கம் இன்றிலிருந்து (13) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய WhatsApp தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் பொலிஸ்மா அதிபருக்கு நேரடியாக குறுஞ்செய்திகள் அனுப்புவதற்காகவும், வீடியோ மற்றும் படத்தொகுப்புகளை அனுப்புவதற்கு மாத்திரம் பயன்படுத்த முடியும். அதேபோன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் இவ் இலக்கத்தினூடாக தங்களின் பிரச்சனைகள் மற்றும் தகவல்கள் தொடர்பான தகவல்களையும் வழங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442887

கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆள வேண்டும் - ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால்

1 month 2 weeks ago
கறையான் புற்றெடுக்கும். பாம்பு குடிகொள்ளும். இது இயற்கையின் நியதி.🫣

தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

1 month 2 weeks ago
தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு! தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து நேற்று மாலை (12) பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். மீன்படி நடவடிக்கைக்கு வந்த மீனவர்கள் சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்கியிருந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ராஜலிங்கம் சுபாஷினி எனும் 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்துள்ள அவர் நேற்று 12காலை செல்வச் சன்னதி ஆலயத்திற்கு சென்று வருவதாக கூறிச் சென்றதாகவும் இரவாகியும் வீடு திரும்பவில்லை எனவும் அவரது தந்தை தெரிவித்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தொண்டைமானாறு செல்வச் சன்னதி ஆலய கடல் நீர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் புகைப்படங்கள் செய்திகளில் வெளி வந்திருந்த நிலையில் குறித்த பெண்ணின் தந்தை மகளை அடையாளம் கண்ட நிலையில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார். இதன்படி, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன் மீட்கப்பட்ட சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1442905

புறா

1 month 2 weeks ago
புறாக்கள் அ ஓர் கருப்பு ஆங்கிலேய மேக்பை ஆங்கிலேய தாரைப் புறா ஆச்சன் லகுவர் கேடய ஆந்தை (=Aachen Luster Shield,[1] ELFP-No. D/705;[2] = Aachen Shield Owl[3]) ஆப்பிரிக்க ஆந்தை (GB/710)[2] ஆல்டென்பர்கர் தாரைப் புறா (D/513)[2] அமெரிக்க ராட்சத ரன்ட் புறா அமெரிக்கன் சோ ரேசர் (ESKT/031)[2] அனடோலிய ரிங்க்பீட்டர் (TR(D)/1104)[2] ஆன்ட்வெர்ப் சுமெர்லி (B/701)[2] அரேபிய தாரைப் புறா (D/514)[2] அரச புறா (ESKT/204)[2] ஆர்க்காங்கல் (புறா) (=Gimpel (D/402)) ஆர்மீனியன் டம்ப்லர் ஆஸ்திரேலியன் பெர்ஃபார்மிங் டம்ப்லர் ஆஸ்திரேலியன் சாடில்பேக் டம்ப்லர் ஆங்கிலேய கேரியர் (=Carrier (GB/101)[2]) ஆங்கிலேய விசிறிவால் (=Garden Fantail (GB/608)) ஆங்கிலேய நீளமுக டம்ப்லர் (clean legged (GB/830)[2] and muffed (GB/831)[2]) ஆங்கிலேய மேக்பை (GB/807)[2] ஆங்கிலேய நன் புறா (=Nun (GB/896)) ஆங்கிலேய பவுட்டர் (GB/310)[2] ஆங்கிலேய குறுமுக கர்ணப் புறா (GB/832)[2] ஆங்கிலேய தாரைப் புறா (ESKT/508)[2] இ இந்திய விசிறிவால் (ESKT/607)[2] இந்திய கோலா இத்தாலிய ஆந்தை (I/706)[2] இலாகூர் புறா (D/037)[2] ஈரானிய ஹைஃப்லையர் உ உக்ரைன் ஸ்கைகட்டர் (=Ukrainian Skycutter, =Polish Eagle (PL/963)) உரல் கோடிட்ட பிடரி புறா எ எகிப்திய ஸ்விஃப்ட் (GB/043)[2] எலிசிடர் புருசுலர் (=Old German Magpie Tumbler (D/828)) க ஓர் சிவப்பு கார்னியா ஓர் வெள்ளை குமுலெட் டிரகூன் கலடி கர்ணப் புறா ஆண் ஓர் சிவப்பு ஹெல்மெட் கொண்டைப் புறா ஓர் கருப்பு ஹெல்மெட் புறா கார்னியா (F/007)[2] கவுசோயிசு புறா (F/008)[2] கோபர்க் வானம்பாடி புறா (D/025)[2] கொலோன் கரணப் புறா (D/827)[2] கொண்டை சவுல்சு புறா (F/018)[2] குமுலெட் (GB/822)[2] கடிடானோ பவுட்டர் (=Gaditano Cropper (E/337)[2]) கலட்சு சுழல் கரணப் புறா (RO/974)[2] கென்ட் கிராப்பர் (B/309)[2] கிரானடினோ பவுட்டர் (E/343)[2] ஹெல்மெட் புறா ஹோல்லே கிராப்பர் (NL/331)[2] ஹோமிங் புறா காலர் புறா (GB/605)[2] கீவ் கரணப் புறா (RUS(D)/891)[2] கோமன் கரணப் புறா (H/857)[2] கீழை சுருள் புறா (GB/714)[2] கீழை சுழல் கரணப் புறா (D/850)[2] சுழல் கரணப் புறா, ச செகடினர் ஹைஃப்லையர் சீன பறக்கும் புறா[3] (=Chinese Nasal Tuft; Chinese Tumbler (D/914)) சீன ஆந்தை (D/609)[2] சிஸ்டோபோலிய உயர பறக்கும் புறா சுருள் இறகுப் புறா (D/601)[2] ஜெர்மன் பியூட்டி ஹோமர் (D/032)[2] ஜெர்மன் மோடெனா (D/206)[2] ஜெர்மன் நன் (D/897)[2] சாக்சன் ஃபேரி சுவாலோ சாக்சன் பீல்டு புறா (D/475)[2] சாக்சன் துறவி (D/467)[2] சாக்சன் சீல்டு (D/471)[2] சாக்சன் ஸ்பாட் (D/472)[2] ஸ்கான்டரூன் (D/105)[2] ஸ்மால்கல்டன் மூர்ஹெட் (D/602)[2] செர்பிய ஹைஃப்லையர் (SRB/886)[2] சிராசு டம்ப்லர் (D/920)[2][1] சவுத் ஜெர்மன் மாங் (muffed (D/436)[2] and clean legged (D/437)[2]) சவுத் ஜெர்மன் சீல்டு (D/438)[2] ஸ்டார்கார்டு சேக்கர் (D/818)[2] (German: Stargarder Zitterhals) இசுடார்லிங் புறா (D/405)[2] இசுடிரால்சுன்டு ஹைஃப்லையர் (D/804)[2] சிராசர் புறா (D/023)[2] ஸ்வெர்டுலோவிஸ்க் நீல சாம்பல் பல அம்ச தலை புறா செகடின் ஹைஃப்லையர் (H/861)[2] ஜிட்டர்ஹால் (=Stargard Shaker (D/818)) ட டமாஸ்கஸ் புறா (GB/042)[2] டானிசு காலர் (DK/604)[2] டானிஸ் சுவாபியன் (DK/404)[2] டானிசு டம்ப்லர் (DK/810)[2] டான்சிக் ஹைஃப்ளையர் (D/816)[2] டபிரசின் கர்ணப் புறா (H/849)[2] டொமஸ்டிக் சோ பிலைட் Domestic Show Flight (ESKT/915)[2] டோமினோ சுருள்Domino Frill (GB/715)[2] டோனெக் (=Dunek) டிரெசுடன் தாரைப் புறா (D/505)[2] டச்சு பியூட்டி ஹோமர் (NL/033)[2] டச்சு கிராப்பர் (NL/302)[2] டார்மிகன் (GB/611)[2] டிப்லர் புறா டர்பிட் (GB/711)[2] டிரகூன் (GB/104)[2] ந நார்விச் கிராப்பர் (GB/306)[2] நன் (GB/896)[2] (=English Nun) நிஸ் வெள்ளை வால் ஹைஃப்லையர் த துரிஞ்சன் வண்ண புறா, a group of pigeon breeds ப பிரித்தானிய சோ ரேசர் புருன்னர் பவுட்டர் பழைய டச்சு கபுசின் புராதான கரணப் புறா (D/907)[2] பார்பு புறா (Barb pigeon) (GB/102)[2] பெல்ஜிய ரிங்க்பீட்டர் (B/1102)[2] பெர்லின் சார்ட் ஃபேசுடு கரணப் புறா (D/904)[2] பிஜல்ஜினா சுழல் கரணப் புறா (BiH/1008)[2] பர்மிங்கம் சுழல் கரணப் புறா (GB/918)[2] பொகாரா தாரைப் புறா (GB/501)[2] பிரெசுலோ கரணப் புறா (D/911)[2] பிரித்தானிய சோ ரேசர் புருன்னர் பவுட்டர் (CZ/330)[2] புடாபெஸ்ட் ஹைஃப்லையர் (Poltli) பர்சா கரணப் புறா (TR(D)/894)[2] பெலசிகாசா கரணப் புறா (H/858)[2] பிரெஞ்சு மான்டைன் (F/006)[2] பனிப் புறா (D/403)[2] பழைய டச்சு கபுசின் (NL/603)[2] பழைய டச்சு கரணப் புறா (NL/826)[2] பழைய கீழை சுருள் (=Old Oriental Owl (D(USA)/726)) பழைய ஜெர்மன் கிராப்பர் (D/301)[2] பழைய செர்மானிய ஆந்தை (D/704)[2] பழைய கீழை ஆந்தை (D(USA)/726)[2] (=Old Fashioned Oriental Frill) பாகிஸ்தான் ஹைஃப்லையர் பார்லர் சுழல் கரணப் புறா பிக்மி பவுட்டர் (GB/329)[2] போலந்து ஹெல்மட் (=Polish Krymka Tumbler (PL/934)) ம மோடெனா மோடெனா (GB/205)[2] மஃப்ஃபெடு ஹெல்மட் (=Polish Helmet, =Polish Krymka Tumbler (PL/934)) மேற்கு இங்கிலாந்து டம்ப்லர் (GB/833)[2] ர ரமனோல். ரவுபைசியன். ரேசிங் ஹோமர் ரிவர்சேவிங் பவுட்டர் (=Reversewing Cropper (D/304)[2]) (German: Verkehrtflügelkröpfer) ரோசன் சிராக் ல லுசெர்ன் தங்க காலர் லுசெர்ன் தங்க காலர் (CH/421)[2] வ விசிறிவால் வியன்னா ஹைஃப்லையர் விசிறிவால் புறா (GB/606)[2] வாலன்சிய ஃபிகரிட்டா (=Valencian Frill (E/722)[2]) வியன்னா ஹைஃப்லையர் (A/981)[2] ஊர்ஸ்பர்க் சீல்டு கிராப்பர் (NL/327)[2] மேலும் காண்க வளர்ப்புப் புறா வீட்டுப் புறா ஆடம்பரப் புறா டிப்லர் புறா மேற்கோள்கள் Encyclopedia of Pigeon Breeds: List of Pigeon Breeds Entente Européenne d’ Áviculture et de Cuniculture (2012): EE-List of the breeds of fancy pigeons (ELFP) National Pigeon Association (2014): Breeds: from the NPA Standard (table of contents by name) பகுப்புகள்: Articles containing German-language text புறாக்கள் இப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2024, 06:48 மணிக்குத் திருத்தினோம். அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.Pßü
Checked
Mon, 09/29/2025 - 12:50
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed