1 month 2 weeks ago
அடி, நுனி தெரியாமல் கருத்து கூறுவது கடினம். ஆனாலும் இந்த பெண் இவ்வளவு ஆபத்துடன் பயணிக்க அவர் காதலன் அனுமதி கொடுத்தாரா? அவர் ஏன் இலங்கை செல்லவில்லை? அவருக்கு இலங்கை செல்ல முடியாத நிலமை உள்ளதா? அவருக்கு உண்மையில் இந்தப்பெண்ணில் அன்பு உள்ளதா? அவர் அங்கு யாருடன் மேய்ந்துகொண்டு உள்ளாரோ யாருக்கு தெரியும்.
1 month 2 weeks ago
இந்தியர்கள் மற்றும் தமிழர்களில் இப்படி பிரித்துவிடும் மோசமானவர்கள் உள்ளனர் 😒
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
எனவே எந்த விடயத்தையும் விஞ்ஞானபூர்வமாக, அறிவுபூர்வமாக ஆராயவேண்டும். அதனை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் ஆதாரபூர்வமான தெளிவுப்படுத்த வேண்டும். ] அப்படி எல்லாம் செய்ய வேண்டிய தேவை இல்லை செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் பொய்களை அடித்துவிட்டால் போதும் காற்றாலை மின் உற்பத்தி கழுத்திற்கு தூக்கு என்று தங்கள் கழுத்தில் தூக்கு கயிறை மாட்டிக் கொண்டும் எங்கள் ஆணி வேர் அழிக்கபடுகின்றது காற்றாலை மின் உற்பத்தி எங்கள் உயிரை குடிப்பது மீண்டும் ஒரு மனித புதை குழி வேண்டாம் 🙄 என்று சொல்லி கொடுத்ததை திரும்ப சொல்லி கொண்டு ஆர்பாட்டம் ஊர்வலம் போகிறார்கள்
1 month 2 weeks ago
நான் ஊரு போனநேரம்....கண்ட சிலபேர் ...கேட்டது...என்ன தம்பி கையிலை ..கழுத்திலை ஒண்டையும் காணவில்லை ...எந்த நாடு....ஆ ஆ... கனடாவே ...அப்ப சரி.....இதுக்கு என்ன சொல்லப் போறீயள்... பிரியன் ....35 வருடம் மாடாய் உழைத்தும் கனடாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்திவிட்டேன்......என்னுடைய கையில் திருமண மோதிரம் தவிர வேறு இல்லை...மனைவியின் ஆக்கினைக்கு சிலவேளை..ஒரு சின்ன சங்கிலி போடுவதுண்டு..
1 month 2 weeks ago
தமிழர்கள் இந்தியாவையும் மேற்குலகத்தையும்மட்டும நம்பி இருந்தால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான் ஒப்புக்காகவது சீனாவுடன் பேச்சுவார்ததைகளை நடத்தி அவர்களுக்கு செக்வைக்க வேண்டும். இதைத்தான் சிறிலங்கா அரசு தொடர்ந்து மாறி மாறி செய்து கொண்டிருக்கிறது.ஐநா வுக்கும் கடிதம் எழுதுவதையும் இந்தியாவுக்கு கடிதம் எழுதுவதையும் நிறுத்தி விட்டு சீனாவுக்கு கடிதம் எழுதி ஒரு சோதனை முயற்சியைச் செய்து பார்ப்பதில் என்ன நட்டம் வரப்போகின்றது?
1 month 2 weeks ago
அட நீங்கள் வேற....🙂 பொது மேடைகளில் கடவுள் இல்லை என்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை காண நேரிட்டால் மயங்கி வீழ்ந்து விடுவீர்கள்😄. செவ்வாய்,வெள்ளி விரத நாட்களுக்கென்று தனிப்பாத்திரம் வைத்து சமைப்பார்கள். அவ்வளவிற்கு சுத்த பத்தமானவர்கள்.அதை விட கொடுமை என்னவென்றால் இவர்களின் திருமணமோ அனைத்து கிரக,ராசி,யோனி பொருத்தங்களும் பார்த்து பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருக்கும். வைரவர்,காளி,சனீஸ்வரன் என்றால் தசை நடுங்குபவர்களாக இருப்பர். இது நான் கண்ட அனுபவம்.☝ உண்மையை தவிர வேறேதும் எழுதவில்லை.🙏 கடவுள் இல்லையென வாதாடுபவர்கள் பெரும்பாலோர் இந்துக்களாகவே இருப்பர். கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் நாத்தீக விடயத்தில் கொஞ்சம் விலகியே இருப்பர். உலக பொருளாதாரத்தில் தங்கத்தின் பங்கு எப்படியோ அது போல் தான் யாழ்ப்பாணத்தானுக்கும் தங்கம் முக்கியம். தமிழர்களின் பொருளாதாரத்தை சிங்களம் அழிக்க முடியாமல் இருப்பதற்கு அவர்கள் சேமித்து வைத்திருந்த தங்கமும் ஒரு காரணம் என்பார்கள்.
1 month 2 weeks ago
அவர்களுக்கு ரஸ்யாவைக் குற்றங்சாட்ட வேண்டிய பிரதான இலக்கு இருந்தபடியால் இஸ்ரெலையும் இழுத்து விட்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்ரேலியர்களின் பாலியல் அத்துமீறல்களை உறுதிப்படுத்த முடியாதுள்ளது என சிறு சட்ட ஓடடையையும் சேர்த்திருக்கிறார்கள்.சாட்சிகள் உள்ள சிறிலங்கா இந்திய இராணுவங்கள் தமிழர்கள் மேல்புரிந்த பாலியல் அத்துமீறல்களை ஏன் அவர்களுடைய கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கிறது.
1 month 2 weeks ago
ஆணையாளரின் முன்னோடி அறிக்கை வெளியானது *** **** *** **** *2015 ஆம் ஆண்டு போன்று 2025 இலும் அதே நகர்வு...! *அநுர அரசாங்கம் மீது நம்பிக்கை.... *உள்ளக விசாரணைக்கே முன்னுரிமை.....! *தமிழர் விவகாரம் பத்தோடு பதினொன்றாக மாறியது. *ICC யில் இலங்கை இணைந்தால் பழைய குற்றங்கள் கைவிடப்படும்..... - --- ------ --- ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் 12 திகிதியிட்ட பதிப்பிக்கப்பட்டிராத முன்னோடிப் பிரதி ஒன்று புதன்கிழமை அவரது அலுவலகத்தின் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் பிரதி ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையின் பிரதியாகும். இதற்கேற்ப இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள திட்டம் எதிர்வரும் நாட்களில் அல்லது வாரங்களில் தெரியவரும். ஆணையாளரின் 16 பக்க அறிக்கைய தொனிப்பொருள் என்ன என்பதைப் பார்க்கும் போது ஒரு விடயம் தெளிவாகப் புரிகிறது. அதாவது, 2015 ஆம் ஆண்டு அப்போதைய ரணில் - மைத்திரி அரசாங்கம் அமெரிக்காவோடு இணைந்து ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றிய 301 தீர்மானம் போன்ற ஒரு நிலைமை 60 ஆம் கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்படுவதற்கான நிகழ்தகவு, பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 2025 இல் ஏற்படலாம் என்ற கற்பிதம் தொனிக்கிறது. ஜேவிபி என்பிபி எனப்படும் புதிய அரசாங்கத்தின் மீது அனைத்து மக்களும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்ற அடிப்படையில் பொறுப்புக் கூறல் விவகாரம் முழுவதையும் இலங்கையிடம் இருந்தே ஆணையாளர் எதிர்பார்க்கிறார். இது வடக்கில் என்.பி.பி எனப்படும் ஜேவிபிக்கு வாக்களிக்கும் நிலைக்கு மக்களை தமிழ்த் தேசியக் கட்சிகள் இட்டுச் சென்றதன் நேரடி விளைவு ஆகும். அத்துடன் ஐசிசி எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court, ICC) இலங்கை இயல்பாகவே இணைவது நல்லது என்ற கோணத்திலும், இலங்கை கடந்தகால குற்றங்களில் இருந்து விடுபடுவதற்கான ஒரு வாய்ப்பாக புதிய முன்னேற்றங்கள் அமையும் என்ற வியூகத்திலும் அறிக்கையின் உள்ளடக்கம் பொதிந்துள்ளது. இதை நான் ஏற்கனவே செய்தி உளவியல் தன்மையின் பிரகாரம் ஊகித்துச் சுட்டிக்காட்டியிருந்தேன். இலங்கை செய்ய வேண்டிய பொறுப்புக் கூறல்கள் தொடர்பாக சிறிய சிறிய விடயதானங்கள் அடங்கிய பரிந்துரைகள் இம்முறை எண்ணுக்கணக்கில் அதிகளவாக அறிக்கையின் முடிவுரையில் காணப்படுகின்றன. ஆனால், கடந்தகால அறிக்கைகளிற் பலவற்றில் குறைந்த எண்ணுக்கணக்கில் ஆனால் கடுமையான விடயதானங்கள் கையாளப்பட்டிருந்தது போன்று இம்முறை அனுப்பப்பட்டுள்ள அறிக்கை அமையவில்லை. மாறாக புதிய அரசாங்கத்தின் மீது ஒரு மென்போக்கையே அது வெளிப்படுத்துகின்றது. ஏற்கனவே 46-1 தீர்மானத்தை இலங்கை நிராகரித்திருந்தது. எந்த ஒரு பரிந்துரைகளும் இலங்கையினால் நடைமுறைப்படுத்தப்படவுமில்லை. அதன் பின்னர் தீர்மானிக்கப்பட்ட அலுவலகப் பொறிமுறை எனப்படும் ஒஸ்லாப் (OHCHR Sri Lanka Accountability Project ) திட்டத்தைக்கூட இலங்கை உரிய முறையில் செயற்படுத்தவில்லை. புதிய அரசாங்கம் என ஆiணாயளர் நம்புகின்ற அநுர தலைமையிலான நிர்வாகம், பதவியேற்று ஒரு வருடமாகும் நிலையிலும், ஜெனிவாவின் எந்த ஒரு பரிந்துரைகளிலும் கவனம் செலுத்தப்படவில்லை. ஆகவே, புதிய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை ஆணையாளர் எந்தப் புள்ளியில் இருந்து வெளிப்படுத்துகிறார் என்ற கேள்வி எழுகிறது! பொது நியாயாதிக்கம் எனப்படும் (Universal Jurisdiction) விசாரணை முறை கூட பயனற்றது. அதாவது போர்க்குற்றவாளி எனப்படும் நபர் வெளிநாடுகளுக்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் அங்கு வைத்து விசாரணை நடத்துவது. இத் திட்டம் சர்வதேச விசாரணை முறையும் அல்ல. ஆனால் இத் திட்டம் பற்றிய நம்பிக்கையை ஆணையாளர் பிரஸ்தாபித்துள்ளார். இதன் காரண - காரியமாவே பொது நியாயாதிக்கம் என்பதை தமிழர்கள் தமது கோரிக்கையாக முன்வைக்கக்கூடாது என்ற கருத்துருவாக்கம் தமிழ்ப் பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்க காலத்தில் நிலைமாறுகால நீதி என்று மார் தட்டி நம்பி எதுவுமே நடக்காத ஒரு பின்னணியில், எந்த அடிப்படையில் 2025 ஆம் ஆண்டிலும் புதிய அரசாங்கம் என்று ஆணையாளர் சித்தரித்து நம்பிக்கை வைக்கிறார்? போர்க்குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்றும், அதற்கான சர்வதேச விசாரணைகள் எனவும் முன்னைய அறிக்கைகளில் மிகக் கடுமையாகச் சுட்டிக்காட்டிருந்தனர். ஆனால் ----- இம்முறை மனித உரிமை மீறல்கள் தொடருகின்றன என்ற கருத்தையும், பொறுப்புக்கூறலுக்கு இதுவரை இலங்கை ஒத்துழைக்காவிடினும், இனியாவது ஒத்துழைக்கவேண்டும் என்பது போலவும் பயங்கரவாத தடைச் சட்டம் இதுவரை நீக்கப்படாமை பற்றியும் ஆங்காங்கே எடுத்தியம்பும் இந்த அறிக்கை பற்பல சிறிதும் பெரிதுமான குற்றச்சாட்டுகளை மாத்திரம் அறிக்கையில் முன்வைக்கிறது. ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்புக்கான சர்வதேச நீதி பற்றிய தெளிவான பரிந்துரைகள் அறிக்கையில் இல்லை. விசேடமாக, இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணையை கோருவதாகத் தமிழ்த் தேசிய பேரவை கூறியிருந்தபோதும், அந்த விடயங்கள் அல்லது தமிழ்த் தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகள் இணைந்து கடிதம் அனுப்பியமை தொடர்பான எந்த ஒரு பதிவும் அறிக்கையில் இல்லை. அது ஏற்கனவே ஆணையாளர் அனுப்பியிருந்த பதிலோடு கரைந்து போய்விட்டது போலும்..... உண்மையில் இன அழிப்புக்கான நீதியை மையப்படுத்தி அந்தக் கடிதத்தை தமிழ்த் தேசியப் பேரவை வரைந்திருக்கவில்லை. அதனாற்தான் அதை இலகுவாகத் தட்டிக்கழிக்க முடிந்துள்ளது. 2012 ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலும் நல்லிணக்கமும் என்று தொடங்கிய ஆணையாளரின் அறிக்கையிடல், தற்போது மனித உரிமை நிலைமை என்று குட்டிச் சுவராகியுள்ளது. கடந்த கால சர்வதேசக் குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் பத்தோடு பதினொன்றாகிவிட்டது. இம்முறை அறிக்கையின் தாக்கம் குறைவடைந்து, ஒட்டுமொத்த இலங்கை மக்களின் மனித உரிமை மீறல் விவகாரம் பற்றியதாகவும் மக்களின் ஜனநாயகப் பாதுப்பு என்ற தொனியிலும் அமைந்துள்ளது. ஆணையாளர் கடந்த யூன் மாதம் இலங்கைக்கு வந்தபோது யாழ் செம்மணி மனிதப் புதைகுழியையும் பார்வையிட்டிருந்தார். இதை அறிக்கையில குறிப்பிட்டபோதும், இதை ஓர் இன அழிப்புக்கான குற்றங்களில் ஒன்றாக அவர் எடுத்தாளவில்லை. அதேநேரம்---- ஆணையாளர் எதிர்ப்பார்ப்பது போன்று ஐசிசி இல் இலங்கை இணைந்தாலும், 2002 ஆம் ஆண்டுக்கும் 2025 ஆண்டுக்கும் இடையான குற்றங்களை அதன் அடிப்படையில் அது விசாரிக்காமல், எதிர்காலத்தில் நிகழக்கூடிய குற்றங்களைத் தண்டிக்கும் உரிமையை வழங்குவதாகவே இலங்கை வாக்குறுதி அளிக்கும். ஆகவே ----- இதுவா பொறுப்புக்கூறல்...? இதுவா சர்வதேச நீதி...? இதனை நம்பி கடந்தகாலக் குற்றங்களை மறப்போம் மன்னிப்போம் என நல்லிணக்க அடிப்படையில் நீக்கம் செய்து விட்டு இலங்கை ஐசிசி இல் இணைந்த காலத்தில் இருந்து நடைபெறும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் பற்றி மாத்திரமே விசாரணைகள் நடைபெறலாம். ஆகவே ஈழத்தமிழர்கள் மீண்டும் ஏமாற்றப்படப் போகின்றனர் என்ற முடிவுக்கே வர வேண்டும். தேசிய இனப் பிரச்சினை விவகாரம் கூட பத்தோடு பதினொன்றாகவே மதிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கே கேள்வி என்னவென்றால்-- 1) 2012 ஆம் ஆண்டு முதல் நிறைவேற்றப்பட்டு வரும் தீர்மானங்களை இந்த ஆணையாளர் வாசிக்கவில்லையா? 2) அல்லது கவனிக்கவில்லையா? 3) அல்லது மேற்கு - ஐரோப்பிய நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப பணியாற்றுகிறாரா? அரசு அற்ற இனங்களுக்கான நீதி என்பது புவிசார் அரசியல் தேவைகளின் அடிப்படையிலேயே அமைகின்றது என்பதற்கும், தமிழர் பிரதிநிதிகள் இறுதி நேரத்திலும் தமக்குள் முரண்பட்டுக் கொண்டிருப்பது ஆணையாளருக்கு இப்படியான அறிக்கைகளை முன்வைக்க இடமளிக்கிறது என்பதற்கும் இந்த அறிக்கை சிறந்த உதாரணம்.... அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid0p9oEGWQhJAXzxYzrRLe3ZnpWRQTW5gEhDK1kUT6kpsncrj8nLuVmPXnAdMkVmp3Al/?mibextid=wwXIfr
1 month 2 weeks ago
70 களின் கடைசியில் இருந்தே சிறிய சங்கிலி ஒன்று இப்போதுவரை அணிந்துள்ளேன். யாராவது அறுத்தால் அதன் பின் அணியமாட்டேன்.
1 month 2 weeks ago
உலகின் பல நாடுகளில் இருந்தும் என்று தலைப்பு வந்திருக்க வேண்டும்.
1 month 2 weeks ago
உண்டென்றால் அது உண்டு , இல்லையென்றால் அது இல்லை . .......... ! 😇
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
இதே போன்று ஐநா என்றேனும் சிங்களப் படைகளிற்கு கூறியதுண்டா? (யாரேனும் அறிவூட்டுங்கள் எனக்கு)
1 month 2 weeks ago
சுவியர், யாழ்ப்பாண பஸ் பிரயாணத்தின் போது நசி பட்டுப் போனாலும், அதுகும் பல ஆயிரம் மலரும் நினைவுகளை கண் முன்னே கொண்டு வந்து விடும். அதில் பயணம் செய்யும் போது... வேலைக்குச் செல்லும் நடுத்தர வயதினர், வைத்தியசாலைக்கு செல்லும் வெளிப்புற நோயாளர்கள், பலதரப் பட்ட பாடசாலை மாணவர்கள்... அவர்களின் முகத்தில் தெரியும் கனவுகள் என்று ஆயிரம் கதை சொல்லும் முகங்களை தரிசிக்க முடியும். ஊருக்குச் செல்பவர்கள் பஸ்ஸில் பிரயாணம் செய்வதை முக்கிய நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்க வேண்டும். 🙂
1 month 2 weeks ago
இவ்வளவு தகவலே போதும் ஐயா. இதற்கு மேல் அவிழ்த்துவிட வேண்டாம். 😁
1 month 2 weeks ago
கொழும்பு - யாழ்ப்பாணம் பேரூந்துகளில் போகும் போது.. கூடுமானவரை தண்ணீரை குறைத்து அருந்தி பிரயாணம் செய்வது நல்லது. அதிக நீர் அருந்தினால்... அடிக்கடி ஒன்றுக்கு போக வேண்டி வரும். பேரூந்து சாரதி நிறுத்தும் சில மலசல கூடங்களுக்குப் போனால், இல்லாத வியாதிகளையும் வாங்கிக் கொண்டு வரவேண்டி வரலாம். காட்டுப் பக்கம் ஒதுங்கினால்... தவிச்ச முயல் அடிப்பதற்கு என்றே... பல கள்வர்கள் பதுங்கி இருப்பார்கள் போலுள்ளது. 😂
1 month 2 weeks ago
பழனி காதலனுக்காக கள்ளப்படகில் ராமேஸ்வரம் வந்த இலங்கை இளம்பெண்.. மண்டபத்தில் காத்திருந்த ட்விஸ்ட்! ராமேஸ்வரம்: பழனியில் உள்ள தன் காதலனை பார்ப்பதற்காக இலங்கை இளம்பெண் ஒருவர் தன் தங்கச் செயினை விற்று அந்த பணத்தில் கள்ளப் படகில் ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளார். எப்படியாவது தனது காதலனை கரம் பிடித்தே ஆக வேண்டும் என நினைத்த விதுர்ஷியாவை போலீசார் கைது செய்து அகதிகள் முகாமில் அடைத்துள்ளனர். இந்தியா வருவதற்கு விண்ணப்பித்த போது அவருக்க்கு விசா வழங்க இந்திய தூதரகம் அனுமதி மறுத்து இருக்கிறது. இதனால் தான் அவர் கள்ளப்படகில் வந்துள்ளார். இலங்கையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தமிழகத்தில் அகதிகள் வசித்த போது இங்குள்ள இளைஞருடன் காதல் வயப்பட்டு இருக்கிறார். சொந்த நாட்டிற்கு சென்ற போதும் காதலனை மறக்க முடியாத இளம்பெண், மீண்டும் படகு மூலமாக தமிழகத்திற்கு வந்த போது போலீசாரிடம் பிடிபட்டுள்ளார். ராமேஸ்வரம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வு குறித்து பார்க்கலாம். இலங்கையை சேர்ந்த இளம்பெண் ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதி எப்போதும் கடலோர காவல் படை கண்காணிப்பில் உள்ள பகுதிகளில் ஒன்றாகும். இங்கு இருந்து இலங்கை மிகவும் பக்கம் என்பதால் கடல் வழியில் ஏதேனும் சட்ட விரோத செயல்கள் நடைபெறுகிறதா? சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என ரோந்து பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். இந்த நிலையில்தான், இலங்கையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அகதியாக வந்து இருப்பதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அரிச்சல் முனை கடற்பகுதியில் இளம்பெண் ஒருவர் நிற்பதை கவனித்தனர். உடனடியாக அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து வந்த உளவுப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்தியா திரும்ப விசா கிடைக்கவில்லை இதில், அந்த இளம்பெண்ணின் பெயர் விதுர்ஷியா என்பதும், இலங்கை மன்னார் ஆண்டகுளம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இவர் ஏற்கனவே வசித்து வந்ததாகவும் அப்போது அங்குள்ள கவி பிரகாஷ் என்பவரை காதலித்ததாகவும் கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை சென்ற அவருக்கு பின்னர் இந்தியா திரும்ப விசா கிடைக்காமல் இருந்துள்ளது. ஆனால், எப்படியாவது தனது காதலனை கரம் பிடித்தே ஆக வேண்டும் என நினைத்த விதுர்ஷியா, இலங்கையில் இருந்து கள்ளப்படகு மூலமாக தமிழ்நாடு வர முடிவு செய்துள்ளார். இதற்கான பணம் தன்னிடம் இல்லாததால், கையில் இருந்த நகைகளை விற்று ரூ.2 லட்சத்தை படகோட்டியிடம் கொடுத்துள்ளார். அந்த படகோட்டி ஏற்பாட்டில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் அரிச்சல் முனைக்கு வந்துள்ளார். பழனி இளைஞருடன் காதல் விசாரணை முடிந்த நிலையில், அந்தப்பெண்ணை மண்டபம் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் போலீசார் ஒப்படைத்தனர். ஏற்கனவே அகதிகள் முகாமில் வசித்து வந்த விதுர்ஷ்யா குடும்பத்தினர் 2016 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அரசு அனுமதியுடன் திரும்பி சென்றுள்ளனர். ஆனால், இலங்கையில் வாழ்வதற்கு தகுந்த சூழல் இல்லாததால், ஒரு மாதத்தில் மீண்டும் பழனிக்கே திரும்பியுள்ளனர். பழனியில் வசித்த நிலையில், அங்குள்ள இளைஞருடன் காதல் ஏற்பட்டதால் இருவரும் திருமணம் முடிக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது காலாவதியான விசாவில் இருப்பதால் பதிவு திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், அபராத தொகையை செலுத்தி இலங்கைக்கு சென்றுள்ளார். பின்னர் இந்தியா வருவதற்கு விண்ணப்பித்த போதுதான் அவருக்க்கு விசா வழங்க இந்திய தூதரகம் அனுமதி மறுத்து இருக்கிறது. https://tamil.oneindia.com/news/ramanathapuram/sri-lankan-young-woman-arrives-in-rameswaram-by-illegal-boat-for-lover-detained-at-refugee-camp-727849.html டிஸ்கி காதலர்களை ஏனப்பா பிரிக்கிறியள் இந்த பாவம் சும்மா விடாது ..
1 month 2 weeks ago
Published By: VISHNU 13 AUG, 2025 | 07:03 PM முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை இடம்பெற்றுவருகின்றது தவறு செய்தால் யார் என்றாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவது எமது பொறுப்பாகும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் புதன்கிழமை (13) பழைய கச்சேரி மண்டபத்தில் அபிவிருத்திகுழு தலைவர் அமைச்சர் சுனில் ஹந்தி நெத்தி தலைமையில் இடம்பெற்றது இதில் கலந்துகொண்ட பின்னர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இல்வாறு தெரிவித்தார். முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இளைஞர்கள் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஊடகவியலாளர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தெரியும் அவர்கள் அனுமதியின்றி உள்ளே நுழைந்தது என. இருந்த போதும் அந்த முகாமிற்குள் உள் நுழைந்த சம்பவம் தொடர்பாக 3 இராணுவ வீரர்களை கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. அங்கு இரும்பு திருடப்பட்டதாக தெரியவந்துள்ளதுடன், இது தொடர்பில் இராணுவத்தினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரும்பு கடத்தலில் 3 இராணுவத்தினர் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் நிமித்தம் 3 இராணுவத்தினரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. அதேவேளை நீதியாக விசாரணை இடம் பெற்றுவருகின்றது, இதனை மக்களுக்கு நாங்கள் சொல்லுகின்றோம். எனவே தவறு செய்தால் யாரென்றாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவது எமது பொறுப்பாகும். அதேவேளை இராணுவ முகாங்களையோ பொலிஸ் நிலையங்களையோ அவசியம் இல்லாமல் அகற்ற வேண்டியது இல்லை என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் பாதுகாப்பான அல்லது முக்கியமான இடங்களை தவிர நில விடுவிப்பினை தொடக்கத்தில் இருந்து கூடுதல் நிலங்களை விடுவித்துள்ளோம். நில பிரச்சனை தொடர்பாக இன்று விவாதித்தோம் எனவே எங்கள் முதல் நோக்கம் மக்களின் நிலம் பொலிஸ் நிலையங்கள் கையகப்படுத்தி இருந்தால் மாற்று இடத்தை கண்டுபிடிப்பதாகும். எனவே தேவையற்ற குழப்பத்தை உருவாக்குவது அல்ல, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் கொள்கை என்றார். https://www.virakesari.lk/article/222524
1 month 2 weeks ago
Published By: RAJEEBAN 13 AUG, 2025 | 12:28 PM ரஸ்ய, இஸ்ரேலிய படையினர் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் எச்சரித்துள்ளார். மோதல்களில் நடைபெறும் பகுதிகளில் பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் தரப்பினர் பட்டியலில் ரஸ்ய, இஸ்ரேலிய படையினரும் சேர்க்கப்படலாம் என அவர் எச்சரித்துள்ளார். ஐக்கிய நாடுகளால் தொடர்ந்து ஆவணப்படுத்தப்பட்டுள்ள சிலவகையான பாலியல் வன்முறைகளின் வடிவங்கள் குறித்த குறிப்பிடத்தக்க கவலையின் விளைவு இதுவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மோதல்களின் போது இடம்பெறும் பாலியல் வன்முறைகள் குறித்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கான தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர், பாலியல் வன்முறை மற்றும் ஏனைய பாலியல் ன்வன்முறை வடிவங்களில் ஈடுபடுவதாக நம்பகதன்மை மிக்க விதத்தில் சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது அவற்றில் ஈடுபடுபவர்கள் குறித்த அடுத்த வருட அறிக்கையில் ரஸ்ய, இஸ்ரேலிய படையினரும் இணைத்துக்கொள்ளப்படலாம் என தெரிவித்துள்ளார். "ஐக்கிய நாடுகள் சபையால் ஆவணப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பிறப்புறுப்பு வன்முறை, நீடித்த கட்டாய நிர்வாணம் மற்றும் துஷ்பிரயோகம் மற்றும் இழிவான முறையில் நடத்தப்படும் தொடர்ச்சியான ஆடைகளை அவிழ்க்கும் தேடல்கள் போன்ற பாலியல் வன்முறையின் வடிவங்களைக் குறிக்கின்றன" என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அனுமதிக்க மறுத்துள்ளதால் இஸ்ரேலிய படையினர் பயன்படுத்தும் முறைகள் போக்குகள் மற்றும் மற்றும் திட்டமிடப்பட்ட பாலியல் வன்முறைகள் குறித்து உறுதியாக உறுதிப்படுத்த முடியாமலுள்ளது என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அனைத்து வகையான பாலியல் வன்முறைகளும் உடனடியாக நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேலிய அரசாங்கம் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/222475
Checked
Mon, 09/29/2025 - 15:50
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed