1 month 2 weeks ago
வரவேற்பிற்குநன்றி 🙏 சுருக்கமாக என்பி அல்லது NB என குறிப்பிடலாம்
1 month 2 weeks ago
வணக்கம் வாங்கோ புதியசமநிலை/புதியமீதி! உங்களை எவ்வாறு அழைக்கலாம் என்றும் சொல்லுங்கோ.
1 month 2 weeks ago
கடந்த காலங்களில் இருந்து விடுபடுவதற்கு இலங்கைக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம்-ஐநா மனித உரிமை ஆணையாளர். இலங்கை அரசாங்கம் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் அரசாங்கத்திற்கு தொடர்புள்ளதை பல வருடங்களாக ஏற்க மறுத்து வந்துள்ளது என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்க்கெர் டேர்;க் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்களை விடுவித்தல் புதிய நிலக் கையகப்படுத்துதல்களை நிறுத்துதல் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து நபர்களையும் விடுவித்தல் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு முயற்சிகளை ஆதரித்தல் மற்றும் காணாமல் போனவர்கள் அலுவலகத்தின் பாரபட்சமற்ற தன்மையை உறுதி செய்தல் அதன் நம்பகத்தன்மையை கட்டியெழுப்ப சர்வதேச நிபுணத்துவம் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றைப் பெறுவதன் மூலம் நிலைமாறுகால நீதிக்கான சூழலை உருவாக்கவேண்டும் என என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கான இலங்கை குறித்த அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச ஈடுபாடு இன்றியமையாததாக உள்ளது மற்றும் பொறுப்புக்கூறல் மற்றும் நீண்டகால நல்லிணக்கம் மற்றும் நிலையான அமைதிக்கு உறுதுணையாக இருக்க முடியும். சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடுப்பதற்கும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் முதன்மை பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடம் உள்ளது என்றாலும் இதை சர்வதேச வழிமுறைகளால் பூர்த்தி செய்து ஆதரிக்க முடியும். என மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார் மாற்றத்திற்கான அடித்தளங்களை நடைமுறைப்படுத்தவும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும்கடந்தகால மோதல்களிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணவும் நிலையான சமாதானம் மற்றும் தேசிய ஐக்கியத்திற்கான அடித்தளத்தை இடவும் கிடைத்துள்ள வரலாற்று சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்தவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த காலங்களில் இருந்து விடுபடுவதற்கு இலங்கைக்கு இன்று ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ள அவர் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்குதல்சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்தல்பாரபட்சம் மற்றும் பிரிவினைவாத அரசியலை முடிவிற்கு கொண்டுவருதல் போன்ற நீண்டகால பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பது புதிய திசையில் பயணிப்பதற்கு தலைமைத்துவம் உறுதிவழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார். அரசநிறுவனங்களின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க இந்த அர்ப்பணிப்புகளை உறுதியான நடவடிக்கைகளுடன் ஒரு ஒத்திசைவான காலக்கெடு திட்டமாக மாற்றவேண்டும் என ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்நாட்டு போரின்போது இழைக்கப்பட்ட குற்றங்களிற்கு நீதிவழங்குவதும் இதில் உள்ளடங்கியிருக்கவேண்டும் என மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்நாட்டு போரின் போது மீறல்கள் துஸ்பிரயோகங்கள் மற்றும் குற்றங்களிற்கு அரசபடையினரும் அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற அரசசாரா தரப்பினரும் காரணம் என்பதை தெளிவாக உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுதலுடன் இதனை ஆரம்பிக்கவேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான எனது விஜயத்தின் போது பாதிக்கப்பட்டவர்களின் வேதனையை துன்பத்தை நான் தெளிவாக பார்த்தேன் என தெரிவித்துள்ள அவர் உண்மை மற்றும் நீதிக்கான அவர்களின் வேண்டுகோள்களிற்கு தீர்வை காணவேண்டும் என தெரிவித்துள்ளார். தேசிய ஐக்கியம் பற்றிய அரசாங்கத்தின் நோக்கினை சாத்தியமாக்குவதற்கு இந்த நடவடிக்கைகள் அவசியமானவை என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அனைத்திற்கும் அப்பால் கடந்தகால மீறல்கள் மீண்டும் இடம்பெறாமலிருப்பதை உறுதி செய்வதற்கு இது மிகவும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார். சுயாதீன வழக்குரைஞர் அலுவலகத்தை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை வரவேற்றுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் பாரிய மனித உரிமைமீறல்கள் சர்வதேச சட்;ட மீறல்களிற்கு தீர்வை காணபதற்கு அர்ப்பணிப்புள்ள நீதித்துறைபொறிமுறையை ஏற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்குகிழக்கில் இராணுவத்தினரின் பிடியில் உள்ள நிலங்களை விடுவிக்கவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும். நீண்டகால பயங்கரவாத தடைச்சட்ட கைதிகளை விடுதலை செய்யவேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கைக்கு வெளியேயும் உள்ளேயும் அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளிற்கு சர்வதேச சமூகம் தனது பங்களிப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சர்வதேச சட்டங்களின் கீழான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து வழக்குதொடுப்பதற்கான பொறுப்பு முக்கிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்குரியது என்றாலும் இதனை சர்வதேச வழிமுறைகளால் ஆதரிக்க முடியும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் வலுப்படுத்தப்பட்ட திறனை பயன்படுத்தி பொறுப்புக்கூறல் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கும் நல்லிணக்க முயற்சிகளிற்கு பங்களிப்பதற்கும் ஐநா உறுப்பு நாடுகளை மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். https://athavannews.com/2025/1442979
1 month 2 weeks ago
என்ன கொடுமை ஐயா. செய்தி திரட்டி என்பதை பார்த்துவிட்டு ஏதோ உலகத்தில் உருப்படாத நாடு ஒன்றில் இப்படி நடைபெற்றதோ என எண்ணினேன். இலங்கையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது என்பதை வாசிக்க அதிர்ச்சியாக உள்ளது. நாட்டில் மனிதாபிமானம் இல்லாது போகின்றது.
1 month 2 weeks ago
வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!
1 month 2 weeks ago
"கூலி" படம் ஆயிரம் கோடி வசூல் செய்ய வேண்டும் என்று நேர்த்திக்கடன் வைத்து, மண்சோறு சாப்பிட்ட... ரசிக குஞ்சுகள்.
1 month 2 weeks ago
வணக்கம் நண்பர்களே நான் புதிய அறிமுகம் ஜெர்மனியிலிருந்து newbalance
1 month 2 weeks ago
‘கூலி’ விமர்சனம்: ரஜினி - லோகி கூட்டணியின் ‘ஆவரேஜ்’ ட்ரீட்மென்ட் எப்படி? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான முதல் நாளில் இருந்தே ‘கூலி’ படத்துக்கான ஹைப் மிகப் பெரிய அளவில் உருவாகிவிட்டது. காரணம், தமிழின் தற்கால இயக்குநர்களில் ஒருவராக லோகேஷ் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டதுதான். அவருடன் ரஜினி என்கிற ஒரு மிகப் பெரிய பிராண்ட் இணையும்போது படம் குறித்த எதிர்பார்ப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக எக்கச்சக்கமாக எகிறிவிட்டிருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை ‘கூலி’ திரைப்படம் நிறைவேற்றியதா என்று பார்க்கலாம். சென்னையில் மேன்ஷன் ஒன்றை நடத்தி வருபவர் தேவா (ரஜினிகாந்த்). தனது இளவயது நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்) திடீரென மரணம் அடைந்ததை அடுத்து, அவருடைய இறுதிச் சடங்குக்கு வரும் தேவாவை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார் ராஜசேகரின் மூத்த மகள் ப்ரீத்தி (ஸ்ருதிஹாசன்). தனது நண்பனின் சாவுக்கு உண்மையான காரணம் என்ன என்பதை துப்பறியத் தொடங்கும் தேவாவுக்கு மிகப் பெரிய கடத்தல் கும்பலின் தலைவனான சைமன் (நாகர்ஜுனா) பற்றியும், அவரது வலது கரமாக செயல்படும் தயாளன் (சவுபின் சாஹிர்) பற்றியும் தெரியவருகிறது. இவர்களுக்கும் ராஜசேகருக்கும் என்ன தொடர்பு? தேவா, ராஜசேகரின் பின்னணி என்ன என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘கூலி’ திரைக்கதை. ADVERTISEMENT ’மாநகரம்’ தொடங்கி ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என தனக்கென ஒரு பாணி, விறுவிறுப்பான திரைக்கதை உத்தி மூலம் இந்தியாவின் ‘மோஸ்ட் வான்ட்டட்’ இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கும் லோகேஷ் கனகராஜ், இந்தியாவின் நம்பர் ஒன் சினிமா நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினியை இயக்கும் வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டாரா என்று கேட்டால், ‘இல்லை’ என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. லோகேஷ் இயக்கத்தில் வெளியானதிலேயே ‘லியோ’ தான் சுமாரான படம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் தற்போது ‘வீக்’ ஆன திரைக்கதையின் மூலம் லோகேஷின் மிக ஆவரேஜான படம் என்ற பெருமையை ‘கூலி’ தட்டிச் சென்றுள்ளது. வழக்கமான ரஜினி படங்களுக்கே உரிய ‘மாஸ்’ இன்ட்ரோ காட்சி, சத்யராஜின் மரணம், அதற்கான காரணங்களை ரஜினி தேடத் தொடங்குவது என பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைப்பதுடன் தொடங்கும் படம், அடுத்தடுத்த காட்சிகளிலேயே சரியத் தொடங்கி விடுகிறது. அதற்கு காரணம் எந்த ஒரு கதாபாத்திரத்துக்கும், காட்சிகளுக்கும் வலுவான பின்னணி இல்லாததுதான். ஸ்ருதிஹாசன் தொடங்கி சத்யராஜ், நாகர்ஜுனா, ரச்சிதா ராம் என ஏராளமாக கேரக்டர்கள் திரையில் உலவினாலும் இவர்கள் யாருடைய கதாபாத்திரமும் அழுத்தமாக எழுதப்படவில்லை. படம் முழுக்க ரஜினி, சவுபின் இருவருடைய ஆதிக்கம்தான். தனது அட்டகாசமான திரை ஆளுமையால் ரஜினிகாந்த், நட்சத்திர நெரிசல் மிகுந்த படத்தில் வழக்கம் போல ஜொலிக்கிறார். ரஜினியின் சின்னச் சின்ன மேனரிசங்கள் கூட ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. படத்தில் ஆங்காங்கே வரும் ‘ரஜினி ஸ்பெஷல்’ தருணங்கள் படத்தின் நகர்வுக்கு வலுவூட்டுகின்றன. சவுபினுக்கு முழுநீள நெகட்டிவ் கதாபாத்திரம். படம் முழுக்க தனது குரூரத் தன்மை கொண்ட கதாபாத்திரத்துக்கு சிறப்பான முறையில் நியாயம் செய்திருக்கிறார். மற்றபடி நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோருக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். சில காட்சிகளே வந்தாலும் உபேந்திரா வரும் இடங்கள் மாஸ். ஆமீர்கான் கதாபத்திரம் ரோலக்ஸின் இன்னொரு வடிவம். சிறிய வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார். லோகேஷின் படங்களில் தொடக்கம் முதல் வரும் ஒரு டம்மி கதாபாத்திரம் திடீரென ஆக்ரோஷம் கொண்டு எழுந்து நிற்கும். உதாரணமாக ‘விக்ரம்’ படத்தில் வரும் ஏஜென்ட் டீனா கதாபாத்திரம். அப்படி இதிலும் லோகேஷ் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அது பெரியளவில் கைகொடுக்கவில்லை. இணையத்தில் பெரும் வைரலான ‘மோனிகா’ பாடல் பொருந்தாத இடத்தில் வருகிறது. ஆனால் அதில் பூஜா ஹெக்டேவின் நடனம் சிறப்பு. அனிருத்தின் பின்னணி இசை ‘மாஸ்’ காட்சிகளில் மட்டும் கைகொடுத்திருக்கிறது. ஆனால் மற்ற இடங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை. பாடல்கள் ஏற்கெனவே ஹிட். ‘அரங்கம் அதிரட்டுமே’ பாடல் வரும் காட்சியில் அரங்கம் அதிர்கிறது. 80களின் ரஜினியை ரசித்தவர்களுக்கு படத்தில் சிறப்பான ட்ரீட் உள்ளது. நேர்த்தியான முறையில் டீ-ஏஜிங் செய்த தொழில்நுட்பக் குழுவினருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். லோகேஷ் படங்களில் டிரேட்மார்க் ஆக வரும் பழைய பாடல் இதில் சுத்தமாக எடுபடவில்லை. படத்தின் முதல் பாதியிலேயே ரஜினி யார், அவரது நோக்கம்தான் என்ன என்பதை முழுமையாக வெளிப்படுத்தி, இரண்டாம் பாதியில் கேள்விகளுக்கான முடிச்சுகள் அவிழும்படி செய்திருக்கலாம். கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் காட்சியில் தான் பார்வையாளர்களுக்கு முழு உண்மையும் தெரியவருகிறது. கடைசி அரை மணி நேரம் ஆமீர்கான், ரஜினி இடையிலான காட்சிகளும், அந்த ஃப்ளாஷ்பேக்கும் படமாக்கப்பட்ட விதம் சிறப்பு. ஆனால், படத்தின் நீளம் காரணமாக கிட்டத்தட்ட அந்தக் காட்சி வரும்போதே பார்வையாளர்கள் சலிப்படைந்து விடுகின்றனர். மொத்தத்தில் எடுத்துக் கொண்ட கதைக்களம் சிறப்பாக இருந்தாலும், அது சொல்லப்பட்ட விதத்தில் எதிர்பார்த்த சுவாரஸ்யம் இல்லாததால் ‘ஆவரேஜ்’ ஆன படம் என்ற அளவிலேயே நின்றுவிடுகிறது ‘கூலி’. ரஜினியின் சின்ன சின்ன மேனரிசங்களும், சவுபினின் வில்லத்தனமுமே பல இடங்களில் படத்தை காப்பாற்றுகின்றன. ‘கூலி’ விமர்சனம்: ரஜினி - லோகி கூட்டணியின் ‘ஆவரேஜ்’ ட்ரீட்மென்ட் எப்படி? | Coolie Movie Review - hindutamil.in
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
இது ஒரு இறைவனின் சமூகத் தொண்டாக பார்க்கலாமே? இன்று பவுண் விற்கும் விலையில் பணக்காரர்களிடமிருந்து எடுத்து (பறித்து) சில லட்சாதிபதிகளை அவர் உருவாக்குகிறார் தானே???😅
1 month 2 weeks ago
இதில் இரண்டு சிறு பிள்ளைகளின் கழுத்தை நெருத்து சங்கிலியை திருடியிருப்பதாக தந்தை பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார்.ஜேர்மனை சேர்ந்த 3 பெண்கள் இதில் சம்பந்த பட்டிருக்கிறார்கள்..
1 month 2 weeks ago
“காசாவில் இனப்படுகொலை நடக்கவில்லை” - பிரியங்கா குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் தூதர் பதில் 12 AUG, 2025 | 04:15 PM புதுடெல்லி: காசாவில் இனப்படுகொலை நடக்கவில்லை என்றும், அங்கு நடக்கும் பெரும்பாலான கொலைகளுக்கு ஹமாஸ் பயங்கரவாதிகளே காரணம் என்றும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய அரசால் பாலஸ்தீனத்தில் அப்பாவிகள் கொல்லப்படுவதை இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இஸ்ரேலிய அரசு இனப்படுகொலையை செய்து வருகிறது. 60,000-க்கும் மேற்பட்ட மக்களை அது கொன்றுள்ளது, இவர்களில் 18,430 பேர் குழந்தைகள். அதோடு, நூற்றுக்கணக்கானவர்களை இஸ்ரேல் பட்டினியால் கொன்றுள்ளது. இதில் பலர் குழந்தைகள். மேலும், பல லட்சம் பேர் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் மரணத்தை நெருங்கும் அபாயம் உள்ளது. இந்தக் குற்றங்களை மவுனமாக செயல்படுத்துவது மட்டுமல்லாது, அவற்றை வேடிக்கை பார்ப்பதும்கூட ஒரு குற்றமாகும். பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அழிவை கட்டவிழ்த்து விடும்போது இந்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது" என கூறி இருந்தார். பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவை டேக் செய்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் பதில் அளித்துள்ளார். அவரது அந்த பதிவில், "வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால், உங்கள் வஞ்சகம்தான். இஸ்ரேல் 25,000 ஹமாஸ் பயங்கரவாதிகளையே கொன்றது. பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பது ஹமாஸின் கொடூரமான தந்திரங்கள். வெளியேற அல்லது உதவி பெற முயற்சிக்கும் மக்களைச் சுடுவது, அவர்களுக்கு எதிராக ராக்கெட் தாக்குதல்களை நடத்துவது ஆகியவை காரணமாகவே பொதுமக்கள் உயிரிழக்க நேரிடுகிறது. காசாவுக்கு 20 லட்சம் டன் உணவை இஸ்ரேல் வழங்கியது. அதேநேரத்தில், அவற்றைக் கைப்பற்ற ஹமாஸ் முயல்கிறது, இதன்மூலம் பட்டினியை உருவாக்குகிறது. கடந்த 50 ஆண்டுகளில் காசாவின் மக்கள் தொகை 450% அதிகரித்துள்ளது. அங்கு இனப்படுகொலை இல்லை" என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, அல்ஜசீரா தொலைக்காட்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டதற்கும் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட மற்றொரு எக்ஸ் பதிவில், "அல்ஜசீரா தொலைக்காட்சியின் ஐந்து பத்திரிகையாளர்கள் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது, பாலஸ்தீன மண்ணில் நிகழ்ந்துள்ள மற்றொரு கொடூரமான குற்றமாகும். உண்மைக்காக நிற்கத் துணிந்தவர்களின் அளவிட முடியாத தைரியத்தை, இஸ்ரேலிய அரசின் வன்முறை மற்றும் வெறுப்பால் ஒன்றும் செய்ய முடியாது. ஊடகங்களில் பெரும்பாலானவை அதிகாரத்துக்கும் வர்த்தகத்துக்கும் அடிமைப்படுத்தப்பட்ட உலகில், இத்தகைய துணிச்சலான ஆன்மாக்கள் உண்மையான பத்திரிகை என்றால் என்ன என்பதை நமக்கு நினைவூட்டி உள்ளன. அவர்களது ஆன்மா சாந்தியடையட்டும்" என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222414
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 14 AUG, 2025 | 11:59 AM கண்டி, பேராதனை பகுதியில் கடையொன்றில் சிறிய சொக்லேட் பக்கற்றை திருடிய 67 வயதுடைய முதியவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை செய்த கடையின் உரிமையாளரும் அவரது ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பேராதனையில் உள்ள ஈரியகம பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் பிள்ளைகள் திருமணமாகி வேறு பகுதிகளில் குடியேறிய பின்னர் அவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். குறித்த நபர் சம்பவத்தன்று உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு கடைக்குச் சென்றுள்ளார். அங்கு இரண்டு பேர் அவரை கடைக்குள் இழுத்துச் சென்று தாக்கியுள்ளனர். ஏனெனில் அவர் முன்தினம் கடையில் சொக்லேட்டுகளை திருடும் காட்சி சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்துள்ளது. முதியவரிடம் சொக்லேட் வாங்கும் அளவிற்கு பணம் இல்லாமையால் சொக்லேட் பிரியரான அவர் திருடியுள்ளார். அவர் வழமையாக கடைக்குச் செல்லும் போது தனக்கும் அவரது மனைவிக்கும் சொக்லேட்கள் வாங்கி வரும் பழக்கம் இருந்துள்ளது. சந்தேகநபர்கள் தாக்குதலுக்குள்ளான முதியவரை கடை மூடும் நேரம் வரை உள்ளே வைத்திருந்து வீதியில் விட்டுச் சென்றுள்ளனர். அவ் வழியூடாக சென்ற பெண்ணொருவர் அவரை அடையாளம் கண்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார் என மரணப்படுக்கையில் இருந்த முதியவர் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விஜித விஜேகோனின் அறிவுறுத்தலின் பேரில், குற்றப்பிரிவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சஞ்சீவ மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார். https://www.virakesari.lk/article/222548
1 month 2 weeks ago
பட மூலாதாரம், ANNAMALAI/X கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் "வள்ளியம்மா, சிறையில் அடைக்கப்பட்டதற்காக நீ வருந்துகிறாயா?" என்று நான் கேட்டேன். 'வருந்துவதா? மீண்டும் கைது செய்யப்பட்டால் இப்போதே கூட சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன்' என்று அந்தப் பெண் கூறினாள்." "ஆனால் அது உன் மரணத்தில் முடிந்தால் என்ன செய்வது? என நான் கேட்டேன். 'எனக்குப் பிரச்னையில்லை. தாய்நாட்டிற்காக உயிரிழக்க யார் தான் விரும்ப மாட்டார்கள்?' என்று அவரிடமிருந்து பதில் வந்தது" மகாத்மா காந்தி தனது 'சத்தியாகிரகா இன் சௌத் ஆப்பிரிக்கா' எனும் நூலில், தில்லையாடி வள்ளியம்மை குறித்து எழுதியுள்ள வரிகள் தான் இவை. 1898ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஒரு புலம்பெயர் தமிழ் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர் வள்ளியம்மை. இவரது பெற்றோர் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி - மங்களத்தம்மாள். வள்ளியம்மை தனது 15ஆம் வயதிலேயே, தென் ஆப்பிரிக்காவில் இனவெறியின் அடிப்படையில் இந்தியர்களுக்கு விரோதமாக கொண்டுவரப்பட்ட சட்டங்களுக்கு எதிரான மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டவர். படக்குறிப்பு, தில்லையாடி வள்ளியம்மையின் உருவச்சிலை (தில்லையாடி கிராமம்) அதன் காரணமாக அந்த இளம் வயதிலேயே அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த கடுமையான சூழ்நிலைகள், வள்ளியம்மையின் உடல்நிலையைப் பாதித்தன. பிப்ரவரி 1914இல் விடுதலை செய்யப்பட்ட சில நாட்களில் உடல்நிலை மோசமாகி அவர் உயிரிழந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கியமான பங்கு வகித்த சத்தியாகிரகத்திற்கு பெரும் உத்வேகம் அளித்தது 'வள்ளியம்மை மற்றும் தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த பல தமிழ் மக்களின் தியாகங்கள் தான்' என்று காந்தி தனது உரைகளில் குறிப்பிட்டுள்ளார். தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம் (1907–1914) என்பது மகாத்மா காந்தி இந்தியாவில் நடத்திய அஹிம்சை வழியிலான சத்தியாகிரக போராட்டங்களுக்கு ஒரு முன்னோட்டமாகக் கருதப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தென்னாப்பிரிக்காவில் வசித்த இந்தியர்களுடன் மகாத்மா காந்தி (1914) மகாத்மா காந்தி, 1893ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு ஒரு வழக்கறிஞராகப் பணிபுரிய சென்றார். தென்னாப்பிரிக்காவில் அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்துவந்த இந்திய சமூகங்கள், அங்கு ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயர்களால் கடுமையான இனவெறி ஒடுக்குமுறைக்கு ஆளானார்கள். இந்தியர்களைக் குறிவைத்து பாரபட்சமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். மேலும், இந்தியாவில் இருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு 5 வருட ஒப்பந்த அடிப்படையில் அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள் அங்கு ஒப்பந்தம் முடிந்தவுடன், மீண்டும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் அல்லது சுதந்திர இந்தியர்களாக வாழலாம் அல்லது சொந்த செலவில் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என்பதே விதி. அவ்வாறு சுதந்திர இந்தியர்களாக வாழ வேண்டும் என்று விரும்பியவர்கள், 3 பவுண்டுகள் வருடாந்திர வரி செலுத்த வேண்டும். இது ஒரு குடும்பத்திற்கு 3 பவுண்டுகள் என்று இல்லாமல், 13 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 16 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் என ஒவ்வொரு இந்தியருக்கும் 3 பவுண்டுகள் என அறிவிக்கப்பட்டது. இது அப்போதைய சூழலில் இந்தியர்களுக்கு மிகப்பெரிய தொகை. இந்தச் சட்டத்தின் நோக்கம் என்பது, ஒன்று இந்தியர்கள் குறைவான கூலிக்கு மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யவேண்டும் அல்லது தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற வேண்டும். பின்னர், 1906 ஆம் ஆண்டில் 'ஆசியப் பதிவுச் சட்டம்' (ப்ளாக் ஆக்ட்) அமலுக்கு வந்தது. இது, தென்னாப்பிரிக்காவின் டிரான்ஸ்வால் மாகாணத்தின் இந்திய மற்றும் சீன சமூகங்களை இலக்காகக் கொண்டு இயற்றப்பட்ட ஒரு பாரபட்சமான சட்டமாகும். ஆசியப் பதிவுச் சட்டத்தின்படி, எட்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆசிய ஆண்களும் பதிவு செய்து, அடையாளச் சான்றிதழ்களை எடுத்துச் செல்ல வேண்டும். இதில் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கைரேகைகள் இருக்கும். இந்தச் சட்டத்திற்கு இணங்கத் தவறினால் அபராதம், சிறைத்தண்டனை அல்லது நாடுகடத்தலுக்கு வழிவகுக்கும். இத்தகைய சட்டங்களை எதிர்த்தே தனது சத்தியாகிரகப் போராட்டத்தை தொடங்கினார் காந்தி. அதற்கு தென்னாப்பிரிக்காவின் புலம்பெயர் இந்தியக் குடும்பங்கள் பெரும் ஆதரவளித்தன. அதில் ஒன்று தில்லையாடி வள்ளியம்மையின் குடும்பம். பட மூலாதாரம், RANDOM CREATIONS படக்குறிப்பு, சுசான் பிராங்கோ எழுதிய 'சோல் ஃபோர்ஸ்- வள்ளியம்மா' இது சுசான் பிராங்கோ எழுதிய 'சோல் ஃபோர்ஸ்- வள்ளியம்மா' எனும் தில்லையாடி வள்ளியம்மையின் வாழ்க்கை வரலாற்று நூலில் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது. "செப்டம்பர் 11, 1906, ஒரு அமைதியான போராட்டத்தின் தொடக்கத்தைக் குறித்தது. அதற்கு சத்தியாகிரகம் என்று மோகன்தாஸ் காந்தி பெயரிட்டிருந்தார். என்னுடைய இளம் வயதிலேயே, இந்த அறியப்படாத, முயற்சிக்கப்படாத, போராட்டத்தின் ஒரு பகுதியாக நான் இருந்தேன். எதிர்காலத்தில் அது ஒரு மிகப்பெரிய போராட்டமாக மாற இருந்தது...". அதைத் தொடர்ந்து 1911-1913 காலகட்டத்தில் மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 'தேவாலயங்களில் கிறிஸ்தவச் சடங்குப்படி நடத்தப்படும் திருமணங்கள் மட்டுமே செல்லும்' என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. இது பிற மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அதன் பிறகு சத்தியாகிரகப் போராட்டங்கள் மேலும் தீவிரமடைகின்றன. தென்னாப்பிரிக்காவின் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் தேவாலய சட்டத்தை மீறி நடத்தப்பட்ட அனைத்து திருமணங்களும் செல்லாது என்று அறிவித்தபோது, ஆயிரக்கணக்கான திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து காந்தி முன்னெடுத்த சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டார் வள்ளியம்மை. காந்தியின் டால்ஸ்டாய் பண்ணை பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 1100 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இந்தப் பண்ணையில் பல இந்தியக் குடும்பங்கள் தங்கியிருந்தன. தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி 1910 இல் நிறுவிய ஆசிரமம் தான் 'டால்ஸ்டாய் பண்ணை'. டிரான்ஸ்வால் மாகாணத்தில் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டிற்கு எதிரான அவரது சத்தியாக்கிரக இயக்கத்தின் தலைமையகமாக இது செயல்பட்டது. 1100 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இந்தப் பண்ணையில் பல இந்தியக் குடும்பங்கள் தங்கியிருந்தன. இங்கு வள்ளியம்மையும் சில காலம் தனது தாயுடன் வசித்துள்ளார். "இந்தப் பண்ணை அமைதியான இடமாக இருந்தது, அங்கு இந்துக்கள், முஸ்லிம்கள், பார்சிகள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் அனைவரும் ஒற்றுமையுடனும், பரஸ்பர மரியாதையுடனும் வாழ்ந்தனர். இளைஞர்களும் முதியவர்களும் தங்கள் வயதுக்கு ஏற்ற எந்த வேலையையும் செய்தனர்" என டால்ஸ்டாய் பண்ணை குறித்து 'சோல் ஃபோர்ஸ்- வள்ளியம்மா' நூலில் வள்ளியம்மை விவரிக்கிறார். தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி உச்சத்தில் இருந்தது குறித்தும் அந்த நூலில் அவர் பின்வருமாறு பதிவு செய்துள்ளார். "நான் ஆப்பிரிக்காவில் தொடர்ந்து வாழ நினைத்தேன், இவ்வளவு அற்புதமான ஒரு நாட்டில் நான் பிறந்ததால் அல்ல, மாறாக என் இதயம் இங்கிருக்கிறது என்பதால். நான் அநீதியை எதிர்த்துப் போராட முடிவு செய்தேன். என் திறமைகளால் பிரச்னைகளைச் சமாளிக்க, ஞானத்தால் சவால்களை வெல்ல, அன்பால் வெறுப்பைக் கைவிடச் செய்ய, முழுமையான நிராகரிப்புடன் இனவெறியை ஒழிக்கவும் முடிவு செய்தேன்." பட மூலாதாரம், ARUNANKAPILAN படக்குறிப்பு, தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் உள்ள தில்லையாடியில் கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபம் 1913ஆம் ஆண்டில், வள்ளியம்மை தனது தாய் மற்றும் ஏராளமான பெண்களுடன், காந்தியின் டால்ஸ்டாய் பண்ணை அமைந்திருந்த டிரான்ஸ்வாலில் இருந்து நடால் வரை ஊர்வலம் சென்றார். அங்கீகரிக்கப்படாத ஊர்வலங்களை தடைசெய்யும் சட்டங்களை மீறி, நியாயமற்ற நடைமுறைகளுக்கு எதிராகப் போராடினார். இதில் பெண்கள் கைக்குழந்தைகளுடன் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தின் ஒருபகுதியாக அங்கிருந்த நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் ரயில்வே முகாம்களுக்கு சென்று தொழிலாளர்களை, பெரும்பாலும் தமிழர்களை சந்தித்து சத்தியாகிரக போராட்டம் குறித்து பேசினர். 'மூன்று பவுண்டு வரி' என்ற சட்டம் ஒழிக்கப்படும் வரை வேலையை நிறுத்துமாறு அவர்களிடம் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 21, 1913 காந்தியின் மனைவி கஸ்தூர்பா, வள்ளியம்மை உள்பட பல பெண்கள் கைது செய்யப்பட்டனர். கடின உழைப்புடன் கூடிய மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு, மாரிட்ஸ்பர்க் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு வள்ளியம்மை நோய்வாய்ப்பட்டார். அவர் பிப்ரவரி, 1914ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டபோது கடும் காய்ச்சலுடன் இருந்தார் என மகாத்மா காந்தி 'சத்தியாகிரகா இன் சௌத் ஆப்பிரிக்கா' நூலில் குறிப்பிடுகிறார். "வள்ளியம்மா ஆர். முனுசாமி என்ற அந்த பதினாறு வயதுடைய இளம்பெண்ணை எப்படி என்னால் மறக்க முடியும்? ஜோகன்னஸ்பர்க்கைச் சேர்ந்த அவளை நான் பார்த்தபோது அவள் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தாள். அவள் ஒரு உயரமான பெண்ணாக இருந்ததால், அவளுடைய மெலிந்த உடலைப் பார்ப்பது எனக்கு வேதனையாக இருந்தது." சிறையிலிருந்து விடுதலையான சில நாட்கள் கழித்து, பிப்ரவரி 22ஆம் தேதி தனது பிறந்தநாள் அன்றே உடல்நலக்குறைவால் அவரது உயிர் பிரிந்தது. "இந்தியா என்ற நாடு இருக்கும்வரை வரை, தென்னாப்பிரிக்க சத்தியாகிரக வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் நிலைத்து நிற்கும்." என காந்தி குறிப்பிட்டார். வள்ளியம்மையை நினைவுகூரும் வகையில், தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் உள்ள தில்லையாடியில் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அங்கு ஒரு பொது நூலகமும் செயல்பட்டுவருகிறது. இந்திய அரசின் சார்பில் 2015ஆம் ஆண்டு வள்ளியம்மையின் நூற்றாண்டு நினைவு தினத்தில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy4djz807e7o
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
ஐநாவைக் கையாள்வது ? - நிலாந்தன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாரித்த கூட்டுக் கடிதத்தில் தமிழரசுக் கட்சி கைகழுத்திடவில்லை. அதனால் அக்கூட்டுக் கடிதத்தில் முன்னணியும் அதன் தோழமைக் கட்சிகளும் சிவில் சமூகங்களும் கையெழுத்திட்டு அனுப்பி உள்ளன. தமிழரசுக் கட்சியின் கையெழுத்து இல்லை என்பது அடிப்படையில் ஒரு பலவீனம். அதேசமயம் கடிதத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்ற முடிவை அறிவித்த பொழுது சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களின்படி தமிழரசுக் கட்சியானது மனித உரிமைகள் பேரவையோடு தனிக் கட்சியாக என்கேஜ் பண்ணப் போகிறது என்று தெரிகிறது. இந்த நிலைப்பாடு, தன்னை ஒரு பெரிய அண்ணனாகக் கருதும் மனோ நிலையில் இருந்துதான் தோன்றுகிறது. கடந்த 16 ஆண்டுகளாக தமிழரசுக் கட்சி அவ்வாறான மூத்த அண்ணன் மனோநிலையைத் தொடர்ந்து பேணி வருகிறது. கடந்த 16 ஆண்டு காலத்தில் தமிழ் அரசியலில் ஏற்பட்ட தேக்கங்களுக்கும் தோல்விகளுக்கும் அதுதான் பிரதான காரணம். கடிதத்தில் கையெழுத்துப் போடாமல் விட்டதற்கு அவர்கள் வேறு காரணங்களைக் கூறக்கூடும். உதாரணமாக முன்னணி தான் ஒரு கடிதத்தைத் தயாரித்து விட்டு அதில் கையெழுத்து போடுமாறு தங்களைக் கேட்டது என்ற ஒரு குற்றச்சாட்டு. இரண்டாவது குற்றச் சாட்டு, கடிதத்தின் வரைவை முன்னணி கட்சித் தலைமைக்கு அனுப்பியதோடு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக அனுப்பியதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சிக்கு மாறாக முடிவு எடுக்கத் தூண்டும் உள்நோக்கம் அவர்களிடம் இருந்தது என்ற சந்தேகம். மூன்றாவது குற்றச் சாட்டு, கடிதத்தில் தமிழரசுக் கட்சி கையெழுத்திடுமா இல்லையா என்ற விவகாரத்தை முன்வைத்து தமிழரசுக் கட்சியை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் உள்நோக்கம் முன்னணியிடம் இருந்தது என்ற சந்தேகம். அந்த சந்தேகத்தை பலப்படுத்தும் விதத்தில் முன்னணியின் மேடைப் பேச்சுகளும் சமூகவலைத்தள உரையாடல்களும் காணப்பட்டமை. அதாவது தமிழரசுக் கட்சியை தமிழ் மக்களுடைய கோரிக்கைகளுக்கு எதிராகத் துரோகம் செய்யும் ஒரு கட்சியாகச் சித்தரிக்கும் விதத்தில் விமர்சனங்களை முன்வைத்தமை என்ற குற்றச்சாட்டு. இக் குற்றச்சாட்டுகளில் ஓரளவுக்கு உண்மை உண்டு. ஆனாலும் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கடிதத்தில் கையெழுத்துப் போடாமல் விட்டதற்கு பிரதான காரணம் கடந்த 16 ஆண்டுகளாக இருந்துவரும் அதே காரணம்தான். அதாவது தானே பெரிய கட்சி, தானே முதன்மைக் கட்சி என்ற நினைப்பு. அவ்வாறு நினைக்கத்தக்க பெரும்பான்மை அவர்களிடம் உண்டு என்பது உண்மை. ஆனால் தமிழ்த் தேசிய அரசியலானது கட்சி போட்டிகளுக்கூடாக முன்னெடுக்கப்பட வேண்டிய வழமையான,தொழில்சார் மிதவாத அரசியல் அல்ல. மாறாக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் ஒரு மக்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்கும் அரசியல். இதில் வெளி உலகத்தை அணுகும் பொழுது தமிழ் மக்கள் ஒரு தேசமாக ஒன்றாக நிற்க வேண்டியது அவசியம். இந்த விடயத்தில் முதன்மைக் கட்சியாகவும் பிரதான கட்சியாகவும் காணப்படும் தமிழரசுக் கட்சிக்குத்தான் அந்தப் பொறுப்பு உண்டு. அவர்கள் தான் அந்தப் பொறுப்பை உணர்ந்து ஒரு மூத்த அண்ணனை போல ஏனைய கட்சிகளுக்கு வழிகாட்ட வேண்டும். ஐநாவைக் கையாளும் விடயத்தில் தாங்களே முன்கை எடுத்து விவகாரங்களைக் கையாள வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறிய ஒரு பின்னணிக்குள்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சிவில் சமூகங்களும் அந்த விவகாரத்தைக் கையில் எடுத்தன. அதைவிட முக்கியமாக 2015 ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரையிலும் தமிழரசுக் கட்சி அந்த விடயத்தைப் பிழையாகக் கையாண்டது என்ற அனுபவம் உண்டு. ஐநாவின் 30/1 தீர்மானத்தின் பிரகாரம் நிலைமாறு கால நீதியை ஏற்றுக்கொண்டு தமிழரசுக் கட்சி, நிலைமாறு கால நீதியின் பங்காளியாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செயற்பட்டது. ஆனால் அது ஒரு தோல்வியுற்ற பரிசோதனை என்று பின்னர் 2021இல் சுமந்திரன் கூறினார். எனவே தமிழரசுக் கட்சி ஐநாவைக் கையாள்வதில் ஏற்கனவே தோல்வி அடைந்து விட்டது என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே சமயம் தமிழரசுக் கட்சி தவறு விடுகிறது என்று கூறிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் உருப்படியாக எதையும் செய்திருக்கவில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெனிவாவுக்கு ஒரு கூட்டுக் கடிதத்தை எழுதும்போது அந்தக் கடிதத்தின் பிரதான கோரிக்கைகளை முன்மொழிந்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான். பொறுப்புக் கூறலை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்பது முதலாவது பிரதான கோரிக்கை.இரண்டாவது, உருவாக்கப்படும் விசாரணை பொறிமுறையானது காலவரையறைக்குட்பட்டு இயங்க வேண்டும் என்பது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளிலும் இந்தக் கோரிக்கைகளை நோக்கி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எந்த அளவுக்கு உழைத்திருக்கிறது? மனித உரிமைகள் பேரவைக்குள் இருந்து இலங்கை இனப்பிரச்சினையை ஐநா பொதுச் செயலர் மீண்டும் பொதுச் சபைக்கு பாரப்படுத்தி, அங்கிருந்து அதை பன்னாட்டு நீதிமன்றங்களுக்கு பாரப்படுத்தப்பட வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாகும். ஒரு கடிதம் எழுதினால் மட்டும் அதை ஐ நா செய்து விடாது. மாறாக ஐநாவில் தீர்மானங்களை எடுக்கும் நாடுகளை நோக்கி லொபி செய்ய வேண்டும்.அதற்குத் தேவையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அந்த விடயத்தில் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது? இதுதான் பிரச்சினை. தமிழரசுக் கட்சி போகிற வழி பிழையானது என்றால் சரியான வழியைக் காட்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது அந்த வழியில் தன்னையும் கட்டியெழுப்பி தமிழ் மக்களையும் கட்டியெழுப்பியிருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை எனவே ஐநாவைக் கையாளும் விடயத்தில் இரண்டு பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகளும் வெவ்வேறு விகிதத்தில் பிழை விட்டிருக்கின்றன. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒப்பீட்டளவில் சரியான விளக்கங்களோடும் சரியான கொள்கை முடிவுகளோடும் காணப்படுகின்றது.ஆனால் அந்த முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்களிடம் உழைப்பு இல்லை. இப்படிப்பட்டதோர் பின்னணியில்தான் மீண்டும் ஒரு கடிதம் அனுப்பும் விடயம் விவகாரமாக மாறியது.இந்த விடயத்தில் சிவில் சமூகங்களின் பங்களிப்பைப் பற்றியும் சொல்ல வேண்டும். சிவில் சமூகங்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சியிடம் ஒருவித ஒவ்வாமை உண்டு. இது சம்பந்தரின் காலத்தில் இருந்தே தொடங்குகின்றது. அதற்கு ஆழமான ஒரு காரணம் உண்டு. 2010இல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பின் அப்பொழுது காணப்பட்ட சிவில் சமூகங்கள் பெருமளவுக்கு முன்னணிக்கு ஆதரவாகக் காணப்பட்டன.எனவே அதன் தர்க்கபூர்வ விளைவாக அவை சம்பந்தருக்கு எதிராகவும் காணப்பட்டன. இந்தப் போக்கை இன்னும் ஆழமாகப் பார்த்தால் அப்பொழுது காணப்பட்ட சிவில் சமூகங்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பலப்படுத்தும் நோக்கிலானவை என்றுதான் கூறலாம். மறைந்த மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களை இணைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் சிவில் சமூக அமையம்,2015ல் இருந்து செயற்பட்ட தமிழ் மக்கள் பேரவை போன்றவற்றை இங்கு சுட்டிக்காட்டலாம். இதனால் சிவில் சமூகங்கள் தொடர்பில் சம்பந்தரிடம் ஒருவித ஒவ்வாமை உணர்வு இருந்தது.2013ஆம் ஆண்டு முதன்முதலாக கூட்டமைப்பையும் முன்னணியையும் ஒரே அரங்கினுள் கொண்டு வந்த, மன்னாரில் இடம் பெற்ற சந்திப்பின்போது அதற்குத் தலைமை தாங்கிய முன்னாள் மன்னார் ஆயரை நோக்கி சம்பந்தர் என்ன சொன்னார்? “பிஷப் நீங்கள் சொல்லுங்கோ. ஆனால் முடிவெடுக்கப் போறது நாங்கள்தான்” என்று சொன்னார். இந்த நிலைப்பாடுதான் இன்றுவரை தமிழரசுக் கட்சியிடம் உள்ளது. குறிப்பாக கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் பொது வேட்பாளரின் விடையத்திலும் தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் சுமந்திரன் அணியானது பொது வேட்பாளரை ஒரு பொது எதிரிபோல பார்த்தது.பொது வேட்பாளரை முன்னிறுத்திய சிவில் சமூகங்களை ஒவ்வாமை உணர்வோடு மட்டுமல்ல பகை உணர்வோடு அணுகியது.சுமந்திரன் பகிரங்கமாக மேடைகளில் சிவில் சமூகத்தைத் தாக்கிப் பேசினார். இத்தனைக்கும் அவர் மேடை ஏறி ஆதரித்த சஜித் பிரேமதாச ஐநா மனித உரிமைகள் பேரவையில் அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு எதிரான நிலைப்பாட்டோடு காணப்பட்டார். சிவில் சமூகங்கள் தங்களுடைய பெரிய அண்ணன் மனோநிலையை கேள்விக்கு உள்ளாக்குகின்றன என்று தமிழரசுக் கட்சி நம்புகின்றது. மேலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பலவீனமடையும் பொழுது சிவில் சமூகங்கள் முன்னணியைப் பலப்படுத்துகின்றன என்றும் தமிழரசுக் கட்சி கருதுகின்றது. 2019இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் மக்கள் பேரவை ஒரு சுயாதீனக் குழுவை உருவாக்கியது.ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கனவு அப்பொழுதுதான் செய்முறைக்கு வந்தது.ஆனால் அந்தச் சுயாதீனக் குழுவை சம்பந்தர் ஏற்றுக்கொள்ளவில்லை மட்டுமல்ல, யாழ்ப்பாணம் சின்மயா மிஷினில் நடந்த ஒரு சந்திப்பின்போது சிவிகே சிவஞானம்,சிவில் சமூகப் பிரதிநிதிகளைப் பகை உணர்வோடு அணுகினார். எனவே தமிழரசுக் கட்சி கடந்த 16 ஆண்டுகளிலும் சிவில் சமூகங்களை சந்தேகத்தோடு பார்க்கின்றது.அவை தன்னுடைய முதன்மையைக் கேள்விக்குள்ளாக்கி, முன்னணியைத் தமக்கு எதிராகப் பலப்படுத்துகின்றன என்ற பயம் அவர்களுக்கு உண்டு.அதே பயந்தான் கடந்த வாரம் அனுப்பப்பட்ட கடித விடயத்திலும் அவர்கள் எடுத்த முடிவின் மீது அதிகம் செல்வாக்கு செலுத்தியதா? ஒரு பெரிய கட்சி,மூத்த கட்சி சிவில் சமூகங்கள் தொடர்பாக அவ்வாறான ஒவ்வாமை உணர்வோடும் விரோத உணர்வோடும் காணப்படுவது என்பது தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிந்த போக்கைக் காட்டுகின்றது.பொதுவாக சிவில் சமூகங்கள் ஏன் அரசியலில் நேரடியாகத் தலையிடும் நிலைமை ஏற்படுகின்றது? அரசியல் கட்சிகள் தங்களுக்குரிய பொறுப்பை உணர்ந்து வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளத் தவறும் போதுதான், சிவில் சமூகங்கள் கட்சிகளின் மீது தார்மீகத் தலையீட்டைச் செய்ய வேண்டி வருகிறது. ஆனால் அந்தத் தார்மீகத் தலையீட்டை தமிழரசுக் கட்சி ஒரு தொந்தரவாக,ஒரு வில்லங்கமாக ஏரிச்சலோடு பார்க்கின்றதா? https://www.nillanthan.com/7636/
1 month 2 weeks ago
வவுனியா பொருளாதார மத்திய நிலையம் செப்ரெம்பர் முற்பகுதியில் திறப்பு August 14, 2025 11:35 am வவுனியா மதவுவைத்தகுளத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வரும் செப்ரெம்பர் முற்பகுதிக்குள் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான திருத்தப்பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவுறுத்தப்படும் என்று வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக அமைச்சர் நேற்று பார்வையிட்டார். அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். ‘ கடந்த 8வருடங்களுக்கு முன்பு வவுனியாவில் 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான முதலீட்டில் அமைக்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையம் இதுவரை இயங்காமலுள்ளது. எனவே இம்மாத இறுதிக்குள் இதில் செய்யவேண்டிய திருத்தப் பணிகளைச் செய்துவிட்டு எதிர்வரும் மாதம் முற்பகுதிக்குள் அதனைத் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் ஏற்கனவே வவுனியா மொத்த வியாபாரச் சந்தையில் உள்ள 35வியாபாரிகளுக்கு மத்தியநிலையத்தில் உள்ள கடைகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். மிகுதி 15 கடைகள் விவசாய அமைப்புகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்- எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். https://oruvan.com/vavuniya-economic-center-to-open-in-early-september/
1 month 2 weeks ago
செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம்ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு 14 AUG, 2025 | 10:08 AM முல்லைத்தீவு - வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14 அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டு வீச்சுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட 53 மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்குமான 19 ஆம் ஆண்டு நினைவேந்தல், படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற வள்ளிபுனம் இடைக்கட்டுப்பகுதி வியாழக்கிழமை (14) உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார். அந்த வகையில் புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் முப்புரம் வட்டார உறுப்பினர் சிவபாதம் குகநேசன் மற்றும் வள்ளிபுனம் பகுதி இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், சுடரேற்றப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222545
Checked
Mon, 09/29/2025 - 15:50
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed