1 month 2 weeks ago
15 Aug, 2025 | 06:03 PM புங்குடுதீவு தனியார் போக்குவரத்து சங்கத்தினர் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுத்த கொடியை பறக்கவிட்டு, பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 10 ஆம் திகதி அன்று தனது வீட்டில் இருந்தவேளை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை அற்புதராசா (அகிலன்) அவர்களின் கொலைக்கு நீதிவேண்டியும் கொலையாளிகளை விரைந்து கைதுசெய்யக்கோரியும் இந்த போராட்டம் சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்றது. இதனால் புங்குடுதீவு - யாழ்பாணம் இடையேயான போக்குவரத்து சேவைகள் இன்றையதினம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நபருக்கு நீதி வேண்டி புங்குடுதீவில் போராட்டம்! | Virakesari.lk
1 month 2 weeks ago
15 Aug, 2025 | 05:17 PM யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இந்திய அமைதிப் படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் , இந்திய துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினமான இன்றைய தினம்(15) வெள்ளிக்கிழமை பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடத்திற்கு இந்திய தூதுவர் சென்று அஞ்சலி செலுத்தினர். அதன் போது, யாழ் . மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக குமாரவும் அஞ்சலி செலுத்தினார். விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட “பவன்” நடவடிக்கை மற்றும் 1987 தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரையில் விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிரான ஏனைய நடவடிக்கைகளின் போது உயிர் நீத்த இந்திய இராணுவத்தினரின் நினைவாக பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளது. யாழில் இந்திய அமைதிப்படையின் நினைவு தூபியில் இந்திய துணைத்தூதுவர் எஸ்.சாய் முரளி அஞ்சலி | Virakesari.lk
1 month 2 weeks ago
பாவம் புண்ணியம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை என்பது இவனது மரணத்தின் மூலம் மீண்டும் மீண்டும் உணர்த்தப்படுகின்றது. ஒரு பூச்சியை கூட இம்சிக்க விரும்பாத பலர் நோய் வந்து, புற்றுநோய் வந்து, விபத்துகளில் சிக்கி நாட்கணக்காக வலியால் துடி துடித்து வருடக்கணக்கில் அதை அனுபவித்து இறந்து போவதை இப்போதும் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். ஆனால் இந்த மனிதப் படுகொலையாலியோ சில மாதங்கள் மட்டுமே ஈரல் பிரச்சனைகளால் அவதியுற்று, உயர்தர சிகிச்சைகளும் பெற்று இறந்து விட்டான். 2001 இல் நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, 10 முஸ்லிம் இளைஞர்களை கட்டுக்கஸ்தோட்டையில் வைத்து படுகொலை செய்தவன் இவன். தகப்பன் பாதுகாப்பு அமைச்சராக இருந்தமையாலும் அரசியல் செல்வாக்காலும் உயர் நீதிமன்றத்தால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவன்.
1 month 2 weeks ago
Published By: PRIYATHARSHAN 15 AUG, 2025 | 01:11 PM கரைக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் செயற்படும் (லிட்டோரல்) சுயாதீன மாற்றுரு போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா (LCS 32) இட் நாளை சனிக்கிழமை (16/08) கொழும்புத் துறைமுகத்திற்கு வருகைதரவுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. கொழும்புத் துறைமுகத்திற்கு யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா வருகை தரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அமெரிக்க - இலங்கை பங்காண்மையின் உறுதியினையும், பாதுகாப்பான, வளமான மற்றும் சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பினையும் இந்தக் கப்பலின் வருகை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையிலான நீண்டகால உறவுகளையும், உறவை வரையறுக்கும் நெருக்கமான ஒத்துழைப்பையும் இது பிரதிபலிக்கிறது. கப்பல் தனது பயணத்தை மீண்டும் தொடர்வதற்கு முன்பு எரிபொருள் நிரப்புவதற்கும் மற்றும் ஏனைய தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்குமான ஒரு குறுகிய நிறுத்தமாக கொழும்புத் துறைமுகம் செயற்படும். அமெரிக்க 7ஆவது கப்பற்படையின் ஒரு அங்கமான யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா (LCS 32), நட்பு நாடுகள் மற்றும் பங்காளர்களுடனான ஈடுபாடுகள் ஊடாக பிராந்திய ஸ்திரத்தன்மையினையும் கடல்சார் பாதுகாப்பினையும் மேம்படுத்தும் அதே வேளை, மேற்கு பசிபிக் மற்றும் இந்து சமுத்திரம் ஆகிய பெருங்கடல்களில் அதன் படைகளுக்கு நடவடிக்கைக் கட்டுப்பாடு மற்றும் திட்டமிடலை வழங்குவதை முதன்மை செயற்பணியாகக் கொண்டுள்ள, உலகின் மிகப்பெரிய முன்னோக்கி அணிவகுக்கப்பட்ட கப்பற்படையினை வழிநடத்துகிறது. “யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா இலங்கைக்கு வருகை தருவதானது, அமெரிக்க மற்றும் இலங்கையின் பங்காண்மையின் சக்திவாய்ந்த ஒரு அடையாளமாகும். கடற்படையின் மிகப்பெரிய முன்னோக்கி அணிவகுக்கப்பட்ட கப்பற்படையான அமெரிக்க 7ஆவது கப்பற்படையின் ஒரு பகுதியான இக்கப்பலின் வருகையானது, கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியம் ஆகியவற்றிற்கான எமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டினை பிரதிபலிப்பதுடன் பிராந்தியம் முழுவதும் அமைதியையும், செழிப்பையும் மேம்படுத்துவதற்கு நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகையில் இலங்கையுடன் இணைந்து நிற்பதில் நாங்கள் உருவாக்க பெருமையடைகிறோம்.” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார். யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா என்பது கரைக்கு அருகிலுள்ள கடற்பிராந்தியங்களில் செயற்படுவதற்காகவும், முன்னோக்கிய பிரசன்னம், கடல்சார் பாதுகாப்பு, கடல் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு உதவி செய்வதற்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு சுயாதீன திரிபுருவ லிட்டோரல் வகை போர்க்கப்பலாகும். 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி பெயர் சூட்டப்பட்டு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட இக்கப்பலானது தற்போது Destroyer Squadron (DESRON) 7 இன் ஒரு அங்கமாக செயற்படுகிறது. ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காகவும், கூட்டணிகள் மற்றும் பங்காண்மைகளை பலப்படுத்துவதற்காகவும், எதிர்கால போரிடும் திறன்களை மேம்படுத்துவதற்காகவும் சான்டா பாப்ரா இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வழக்கமான ரோந்துகளை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222609
1 month 2 weeks ago
யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சுதர்சன் திடீர் மறைவு – மருத்துவ சமூகத்திற்கு பேரிழப்பு. .................................................................................. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாகச் சேவையாற்றிய, உயர் திறமையுடன் கூடிய சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சுதர்சன் அவர்கள், இன்று திடீரென உயிரிழந்தார் என்ற செய்தி, மருத்துவ உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மருத்துவம் என்பது ஒரு சேவையாகவும், ஒரு ஒப்பற்ற தர்மமாகவும் இருந்த காலத்தில், மனிதாபிமானமும், உயிருக்காக போராடும் உறுதியும் கூடிய மருத்துவராக டாக்டர் சுதர்சன் விளங்கினார். அவசர சத்திர சிகிச்சைகள், அரிய வகை அறுவை சிகிச்சைகள், மற்றும் மருத்துவக் கல்வி பயிற்சிகளில் அவர் செய்த பங்களிப்பு, யாழ் மருத்துவக் குடும்பத்தில் நீண்ட நாள் நினைவுகூரப்படும். அவரது பணிவும், நோயாளிகளுடன் கொண்ட நெருக்கமான உறவும், அவரை நோக்கி வரும் எதுவும் ஒரு "மருத்துவரின் மேன்மை" என்பதற்கான சான்றாக இருந்தது. மருத்துவ மாணவர்களிடையே அவர் முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். மரணவாசல் அருகிலும் உயிரை காக்க முடியும் என்ற நம்பிக்கையை தொடர்ந்து பலரை மீட்டவர்; அவரின் திடீர் மறைவு, யாழ் போதனா வைத்தியசாலைக்கும், இலங்கை மருத்துவ துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் இருக்கின்றது. அவரது குடும்பத்தாருக்கும், சக ஊழியர்களுக்கும், நோயாளிகளுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், உணர்வுபூர்வமான அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். "ஒரு நல்ல மருத்துவர் ஆயுள் நீட்டிக்கிறார்; ஆனால் ஒரு சிறந்த மருத்துவர் நம்பிக்கையை உயிராக்குகிறார். டாக்டர் சுதர்சன் அந்த சிறந்தவர்களில் ஒருவராகவே இருந்தார்." அவரது ஆத்மா சாந்தியடையட்டும். Thangamuthu Sathiyamoorthy
1 month 2 weeks ago
யாழ். பல்கலையில் செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 15 AUG, 2025 | 08:56 AM செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை (14) நடைபெற்றது. இதன்போது கொல்லப்பட்டவர்களின் உருவப் படங்களுக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியில் இருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி விமானப் படையினர் மேற்கொண்ட விமானக் குண்டு வீச்சில் 54 மாணவிகளும் 7 பணியாளர்களுமாக 61 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 150 இற்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222589
1 month 2 weeks ago
வைத்தியர் சுதர்சனுக்கு யாழ்.வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இரங்கல் 15 AUG, 2025 | 04:53 PM மரணவாசல் அருகிலும் உயிரை காக்க முடியும் என்ற நம்பிக்கையை தொடர்ந்து பலரை மீட்டவர், வைத்தியர் சுதர்சன். அவரின் திடீர் மறைவு, யாழ் போதனா வைத்தியசாலைக்கும், இலங்கை மருத்துவ துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் இருக்கின்றது என வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். குறித்த இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்படுள்ளதாவது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாகச் சேவையாற்றிய, உயர் திறமையுடன் கூடிய சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுதர்சன் அவர்கள், இன்று திடீரென உயிரிழந்தார் என்ற செய்தி, மருத்துவ உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மருத்துவம் என்பது ஒரு சேவையாகவும், ஒரு ஒப்பற்ற தர்மமாகவும் இருந்த காலத்தில், மனிதாபிமானமும், உயிருக்காக போராடும் உறுதியும் கூடிய மருத்துவராக டாக்டர் சுதர்சன் விளங்கினார். அவசர சத்திர சிகிச்சைகள், அரிய வகை அறுவை சிகிச்சைகள், மற்றும் மருத்துவக் கல்வி பயிற்சிகளில் அவர் செய்த பங்களிப்பு, யாழ் மருத்துவக் குடும்பத்தில் நீண்ட நாள் நினைவுகூரப்படும். அவரது பணிவும், நோயாளிகளுடன் கொண்ட நெருக்கமான உறவும், அவரை நோக்கி வரும் எதுவும் ஒரு "மருத்துவரின் மேன்மை" என்பதற்கான சான்றாக இருந்தது. மருத்துவ மாணவர்களிடையே அவர் முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். மரணவாசல் அருகிலும் உயிரை காக்க முடியும் என்ற நம்பிக்கையை தொடர்ந்து பலரை மீட்டவர்; அவரின் திடீர் மறைவு, யாழ். போதனா வைத்தியசாலைக்கும், இலங்கை மருத்துவ துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் இருக்கின்றது. அவரது குடும்பத்தாருக்கும், சக ஊழியர்களுக்கும், நோயாளிகளுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், உணர்வுபூர்வமான அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். "ஒரு நல்ல வைத்தியர் ஆயுள் நீட்டிக்கிறார். ஆனால் ஒரு சிறந்த மருத்துவர் நம்பிக்கையை உயிராக்குகிறார். வைத்தியர் சுதர்சன் அந்த சிறந்தவர்களில் ஒருவராகவே இருந்தார். இரங்கல் செயதியில் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/222619
1 month 2 weeks ago
15 AUG, 2025 | 03:07 PM காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு என்று விமர்சித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இது முடிவில்லாத போரை நோக்கி நகர்த்தும் என்றும் தெரிவித்துள்ளார். ராணுவ நடவடிக்கை மூலம் காசா நகரை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு அதன் பாதுகாப்பு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. ஏற்கெனவே காசா பகுதியில் சிக்கி உள்ள அப்பாவி மக்கள் உணவுப் பஞ்சத்தாலும் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலாலும் கடும் பேரழிவை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் காசாவின் முக்கிய பகுதியான காசா சிட்டியை கைப்பற்ற இஸ்ரேல் திட்டமிட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் "காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு. நிரந்தர போர் நிறுத்தத்துடன் இந்த போர் முடிவடைய வேண்டும். காசா மாநகரை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் முன் எப்போதும் இல்லாத பேரழிவுக்கும் நிரந்தர போருக்கும் வழி வகுக்கும். இதனால் பெரிதும் பாதிக்கப்படப்போவது இஸ்ரேலிய பணயக்கைதிகளும் காசா மக்களும்தான். காசாவை பாதுகாப்பதற்கான திட்டத்தை ஐநா முன்னெடுக்க வேண்டும். இதற்கான அமைப்பை காசாவில் நிறுவ வேண்டும். ஐநா பாதுகாப்பு கவுன்சில் இதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும். இது தொடர்பாக மற்ற உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எனது குழுக்களை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஐ.நா.வால் முன்மொழியப்படும் இந்த அமைப்பு காசாவை பாதுகாப்பது அப்பாவி மக்களை பாதுகாப்பது பாலஸ்தீன அரசுக்கு ஆதரவாக பணியாற்றுவது ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். பாலஸ்தீனத்தை ஒரு நாடாக பிரான்ஸ் கடந்த மாதம் அங்கீகரித்தது. அதன் தொடர்ச்சியாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் தனக்கு உள்ள உறுதியை இம்மானுவேல் மேக்ரான் வெளிப்படுத்தி உள்ளார். https://www.virakesari.lk/article/222616
1 month 2 weeks ago
📌👉யாழின் பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் திடீர் மரணம்‼️‼️‼️ மருத்துவதுறையின் ஒரு தூண் சரிந்தது..! சிறந்த மருத்துவ ஆளுமை 😭 ஆழ்ந்த இரங்கல்கள் ..! சத்திர சிகிச்சை நிபுணர் Dr.சுதர்சன் மாரடைப்பால் மரணம் 😭😭😭 ( இன்று - 15-08-2025 ) கொழும்பில் காலமானார் 😭 யாழ் மண்ணிற்கு பேரிழப்பு 😭😭 யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் V. சுதர்சன் அவர்கள் மனிதாபிமானம் மிக்க ஒரு நல்ல மனிதர். நோயாளர்களை மிகவும் அன்புடன் கவனிப்பவர். அவரது மரணம் மிகவும் கவலையாக இருக்கின்றது. ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பயிற்சி பட்டறை ஒன்றுக்காக சென்றிருந்த அவர் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் .எனினும் அவர் உலகத்தை விட்டு பிரிந்து விட்டார். அவரது பிரிவால் வாடும் அவர் தம் குடும்ப உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். முகநூலில் இருந்து....
1 month 2 weeks ago
ரஸ்ய துறைமுகத்தின் மீது உக்ரைன் தாக்குதல் - ஈரானிலிருந்து ஆயுதங்களுடன் வந்த கப்பலை இலக்குவைத்தது 15 AUG, 2025 | 12:36 PM ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆயுதங்களுடன் ரஸ்ய துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பல் மீதுதாக்குதலை மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. அஸ்ட் ராகன் பகுதியில் உள்ள ரஸ்ய துறைமுகமான ஒலியாவை தாக்கியுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. ரஸ்யாவின் தென்பகுதியில் உள்ள துறைமுகத்தினை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஈரானில் இருந்து ஆளில்லா விமானங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் வந்த கப்பல் மீது தாக்குதலை மேற்கொண்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஆயுதங்கள் இராணுவ தளபாடங்கள் வெடிபொருட்கள் விநியோகத்திற்காக இந்த துறைமுகத்தினை ரஸ்யா பயன்படுத்திவருகின்றது என உக்ரைன் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/222606
1 month 2 weeks ago
ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழப்பு 15 AUG, 2025 | 10:23 AM ஜம்மு: ஜம்மு-காஷ்மீரன் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள தொலைதூர மலை கிராமத்தில் நேற்று மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சிஐஎஸ்எப் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உட்பட 46 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கிஷ்த்வார் மாவட்டத்தில் நேற்று மேகவெடிப்பின் காரணமாக தீடீர் வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் சோசிட்டி மலை கிராமத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46-ஆக உள்ளது. இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக நம்பப்படுவதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரையில் மீட்கப்பட்ட 120 பேரில் 38 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மீட்பு பணிகளில் என்டிஆர்எப், எஸ்டிஆர்எப், காவல்துறை, ராணுவம், உள்ளூர் தன்னார்வலர்கள் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளனர். நிலைமை மோசமாக இருப்பதால் என்டிஆர்எப்-ன் இரண்டு புதிய குழுக்கள் உட்பட மீட்பு பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மச்சைல் மாதா கோயிலுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள சோசிட்டி கிராமத்தில் மதியம் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த பேரழிவு நிகழ்ந்தது. ஜூலை 25-ம் தேதி தொடங்கிய வருடாந்திர மச்சைல் மாதா யாத்திரை செப்டம்பர் 5-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதற்காக அங்கு ஏராளமான மக்கள் கூடியிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 9,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கான 8.5 கிலோமீட்டர் பாதயாத்திரை சோசிட்டி கிராமத்தில் இருந்தே தொடங்குகிறது. இந்த கிராமம் கிஷ்த்வார் நகரத்திலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட சமூக சமையலறை (லங்கர்) மேகவெடிப்பால் பெரிதும் பாதிப்படைந்தது. திடீர் வெள்ளம் காரணமாக கடைகள் மற்றும் பாதுகாப்பு புறக்காவல் நிலையம் உட்பட பல கட்டமைப்புகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பேரிடர் ஏற்பட்ட உடன் கிஷ்த்வார் துணை ஆணையர் பங்கஜ் குமார் சர்மா, மூத்த காவல்துறை கண்காணிப்பாளருடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். இந்த மேகவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனேஜ் சின்ஹா இரங்கல் தெரிவித்துள்ளதுடன், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, கிஷ்த்வார் மாவட்டத்தில் தொலைதூர கிராமத்தில் பெரும் மேக வெடிப்பால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விளக்கினார். https://www.virakesari.lk/article/222593
1 month 2 weeks ago
யாழ்ப்பாணத்தில் பல குண்டு வீச்சுகளுக்கும் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் இராணுவ நடவடிக்கைக்கும் பொறுப்பாக இருந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தையின் மகனும், பின்பு மகிந்தா அமைச்சரவையில் அமைச்சராக இருந்து கைத்துப்பாக்கியை காட்டி தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிய இலங்கையின் கடைந்தெடுத்த சிங்கள இனவாதிகளில் ஒருவரான ரொஹான் ரத்வத்தை இன்று சிறையிலையே காலமானார். Prashanthan Navaratnam
1 month 2 weeks ago
இன்றுவரை, யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களை நாங்கள் பூர்த்தி செய்கின்றோம், ஆனால் அரசாங்கத்திடமிருந்து எந்த ஒப்புக்கொள்ளுதலும் இல்லை, இது எனது சகோதரிக்கு இடம்பெற்றுள்ளது, நாங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு நீதியை உண்மையை வழங்குவோம் என இதுவரை அரசாங்கம் தெரிவிக்கவில்லை. நீங்கள் உடல்களை புதைக்கலாம், ஆனால் உங்களால் உண்மையை புதைக்க முடியாது, புதைக்கப்படாத எலும்புக்கூடுகள் நிலத்தை கிழித்துக்கொண்டு வெளியே வந்து உலகத்தி;ற்கும் மக்களிற்கும் எங்களை உரிய முறையில் புதைக்கவில்லை, எங்களிற்கு நீதி வழங்கப்படவில்லை என தெரிவிக்க வருகின்றன.
1 month 2 weeks ago
நான் அறிந்த செய்திகள்வரையில் அவரை முதுகில் குத்தியது அவர் மனைவி, சுப்பிரமணிய சுவாமி இவர்களின் பரிவாரங்கள். ஈழத்தமிழர் மேல் தமிழ்நாட்டுத் தமிர்களுக்கு ஏற்பட்ட அனுதாபத்தைக் குறைக்கவும், பிரபாகரன் படையின் எழுச்சியை அழிக்கவும் அவர்களுக்கு வேறுவழி தெரியவில்லை. நடந்தவற்றை அரசியல் வழியின்றி, நீதியின் வழிநின்று விசாரித்தால் உண்மைகள் வெளிவரலாம். இங்கு நீதிதேவதையும் முதுகில் குத்தப்பட்டுள்ளது தெரிகிறது.
1 month 2 weeks ago
பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த பிரபல சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் சுதர்சன் மாரடைப்பு காரணமாக இன்று கொழும்பில் காலமானார். வைத்தியரின் இறுதி கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வைத்தியர் சுதர்சனின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://athavannews.com/2025/1443164
1 month 2 weeks ago
இடை கையிரெண்டில் ஆடும் . ......... ! 😍
1 month 2 weeks ago
நீங்கள் உடல்களை புதைக்கலாம், ஆனால் உங்களால் உண்மையை புதைக்க முடியாது புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நிலத்தை கிழித்துக்கொண்டு உண்மையை சொல்ல வெளிவருகின்றன - சட்டத்தரணி ரனிதா ஞானராஜா Published By: RAJEEBAN 15 AUG, 2025 | 04:17 PM நீங்கள் உடல்களை புதைக்கலாம், ஆனால் உங்களால் உண்மையை புதைக்க முடியாது, புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நிலத்தை கிழித்துக்கொண்டு வெளியேவந்து உலகத்திற்கும் மக்களிற்கும் எங்களை உரிய முறையில் புதைக்கவில்லை, எங்களிற்கு நீதி வழங்கப்படவில்லை என தெரிவிக்க வருகின்றன என சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவித்துள்ளார். தரிந்து ஜெயவர்த்தன, தரிந்து உடுவரகெதர, எம்எப்எம் பசீர் ஆகியோர் இணைந்து எழுதிய செம்மணி எனும் நூலின் வெளியீடு வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றவேளை அந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது. நான் மூன்று முக்கிய விடயங்களை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நாங்கள் ஏன் மனித புதைகுழிகளை பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் கடத்தப்பட்டவர்கள் அல்லது காணமல்போனவர்கள் காணாமலாக்கப்பட்டவர்களுடன் தொடர்புபடுத்த முயல்கின்றோம்? குறிப்பாக வடக்குகிழக்கில். இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக யுத்தம் இடம்பெற்றது, உலகில் அதிகளவானவர்கள் பலவந்த காணாமலாக்கப்பட்ட நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது என ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்த குழு தெரிவித்துள்ளது. ஐநாவின் குழு பலவந்தமாக காணாமலாக்கப்பட்டிருக்ககூடியவர்கள் எண்ணிக்கை 60,000 முதல் ஒரு 100,000 என தெரிவித்துள்ளது, அவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யுத்தகாலத்தின் பயங்கரவாத தடைச்சட்டம என்ற மிகவும் கொடுரமான பயங்கரமான சட்டம் நடைமுறையிலிருந்தது, அவசரகாலசட்டம் போன்ற அதற்கு ஆதரவான சட்டங்கள் காணப்பட்டன என்பது உங்களிற்கு தெரியும், இவை பயங்கரவாதத்தை கையாள்வதற்காக நடைமுறைக்கு வந்தவை, இந்தசட்டங்களை வலுக்கட்டாயமாக மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தினார்கள், குறிப்பாக வடக்குகிழக்கில். விசாரணைக்காக அழைக்கப்பட்ட மக்கள்;, அவர்கள் ஒருபோதும் திரும்பிவரவில்லை. சோதனைச்சாவடிகள் ஊடாக நடந்துசென்று கொண்டிருந்தவர்கள், அதனை கடந்து சென்றவர்கள் ஒருபோதும் மீண்டும் திரும்பிரவரவில்லை. தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறும், சுற்றிவளைப்புகள் இடம்பெறும், மக்களை சுற்றிவளைத்து தலையாட்டி ஒருவரின் முன்னால் நிறுத்துவார்கள், அவர் தலையாட்டினால் அந்த நபரை கொண்டு செல்வார்கள், அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பலர் மீண்டும் திரும்பவில்லை. 2009 வரை இவற்றை திட்டமிட்ட முறையில் முன்னெடுத்தார்கள். வடக்குகிழக்கிலும் முழு நாட்டிலும் 2009 மே மாதத்துடன் யுத்தம் முடிவடைந்துவிட்டதை என நாங்கள்; நினைக்கின்றோம், ஆனால் நீங்கள் அங்கு சென்றால், வடக்குகிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டால், வடக்குகிழக்கில்; நிழல்யுத்தம் தொடர்ந்தும் நீடிக்கின்றது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள் . யுத்தம் முடிவடைந்த பின்னரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை மிகதீவிரமாக நடைமுறைப்படுத்துகின்றார்கள், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் கண்காணிப்பின் கீழ் இருக்கின்றனர், மனித உரிமை விடயங்களிற்காக செயற்படுபவர்கள் கண்காணிக்கப்படுகின்றார்கள். நாளாந்தம் ஒவ்வொரு நாளும் பலர் சிஐடி டிஐடியினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர் தொடர்ந்தும் அழைக்கப்படுகின்றனர். சிஐடி டீஐடி போன்ற அரச கட்டமைப்புகள் தங்கள் அலுவலகங்களை வடக்குகிழக்கில் ஏற்படுத்தியுள்ளன. கொழும்பில் உள்ள தங்கள் அலுவலகங்களிற்கு விசாரணைக்கு அழைப்பதற்கு பதில் வடக்குகிழக்கில் உள்ள தங்கள் அலுவலங்களிற்கு பலரை விசாரணைக்கு அழைக்கின்றார்கள். மிகச்சமீபத்தில் கேள்விப்பட்டிருப்பீர்கள், தரிந்துவும் அவரது நண்பர்களும் குமணனின் பெயரை இங்கே குறிப்பிட்டனர். குமணன் புகைப்பட ஊடகவியலாளர் அவர் தொடர்ச்சியாக தனது புகைப்படங்கள் மூலம் வடக்குகிழக்கில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசிவரும் ஒருவர். மிக வலுவான முறையில் அவர் இதனை செய்துவருகின்றார். அவரை 17ம் திகதி விசாரணைக்காக அழைத்துள்ளனர். யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் வடக்குகிழக்கில் நிலவரம் இவ்வாறானதாகத்தான் காணப்படுகின்றது. ஏன் நாங்கள் மனித புதைகுழிகளை பலவந்தமாக காணாமல்போகச்செய்தலுடன் தொடர்புபடுத்த விரும்புகின்றோம் என்றால் , யுத்தம் முடிவடைந்த பின்னரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள பல குடும்பத்தவர்கள் உள்ளனர், அவர்கள் தங்கள் நேசத்திற்குரியவர்கள் குறித்த பதிலை கோருகின்றனர், அவர்கள் சோதனை சாவடியில் காணாமல்போயிருக்கலாம் அல்லது யுத்தத்தின் இறுதி தருணத்தில் சரணடைந்திருக்கலாம். அவர்கள் சரணடைந்தால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் எல்எல்ஆர்சி முன்னால் சாட்சியமளிக்கையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் யுத்தவலயத்திலிருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிக்கு உயிருடன் வரவில்லை என தெரிவித்தார். நாங்கள் இந்த எண்ணிக்கை குறித்தே பேசுகின்றோம். நாங்கள் தற்போது திறக்கப்பட்ட மனித புதைகுழிகளுடன் போராடுகின்றோம், 14 மனித புதைகுழிகள் திறக்கப்பட்டு நீதிநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. முதலாவது செம்மணிமனித புதைகுழி குறித்து குறிப்பிடுவேன். கிருசாந்தி குமாரசுவாமி கொலை வழக்கு குறித்து இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டவேளை தனது வாயை திறந்த சோமரட்ண ராஜபக்சவினால் இந்த விடயம் தெரியவந்தது - 1999 ஜூலை 3ம் திகதி - அந்த திகதியிலிருந்து அவர்கள் அந்த விடயத்தை கையாள ஆரம்பித்தனர், விசாரணைகளை முன்னெடுத்தனர், புதைக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் இருந்து 15 மனித எச்சங்களை அகழ்ந்தனர். விசாரணைகள் முடிவடைந்ததும் ஆறு சந்தேகநபர்கள் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட அறிக்கை மீண்டும் கொழும்பு நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கு திரும்பிவரவில்லை. முப்பது வருடங்களாகியும் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து எந்த அறிவுறுத்தல்களும் இல்லை. நாங்கள் குடும்பத்தவர்களை சென்று சந்திக்கும் போது அவர்கள் இரத்தமாதிரிகளை வழங்கியதாக மரபணு பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவிக்கின்றனர், மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை தங்கள் உறவுகள் என அடையாளம் காட்டியவர்கள் உள்ளனர். ஆனால் அதன் பின்னர் இந்த விடயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மக்களின் பங்களிப் குறைவாக காணப்படுகின்றது, அச்சுறுத்தல்களே இதற்கு காரணம். நிபுணத்துவம் இல்லை, நிபுணர்கள் தேவை. 14 மனித புதைகுழிகள் குறித்து பேசும் போது ஐந்து முக்கியமான மனித புதைகுழிகள் விவகாரத்தில் நான் ஆஜராகியுள்ளேன். ஒன்று மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி, மற்றையது மன்னார் சதொசா மனித புதைகுழி - 18 மனித எச்சங்கள் மீட்கப்பட்டன, அவை அனுராதபுரம் சட்டவைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டன, பின்னர் கொழும்பிற்கு மாற்றப்பட்டன, எலும்பு பகுப்பாய்வு இடம்பெற்றுள்ளது, இன்னமும வெளியாகவேண்டிய அறிக்கைகள் உள்ளன,. 2013 இந்த நடவடிக்கைகள் ஆரம்பமாகின எவ்வளவு காலம் என நினைத்து பாருங்கள், குடும்பத்தவர்கள் ஒவ்வொரு நீதிமன்ற நடவடிக்கையிலும் சமூகமளித்துள்ளனர். சாதொச மனித புதைகுழி 2018 இல் அடையாளம் காணப்பட்டது, 379 மனித எச்சங்கள் மீட்கப்பட்டன, கார்பன் டேட்டிங் இடம்பெற்றது, ஆய்வுகூட அறிக்கை வெளியானது. ஆனால் அது அர்த்தப்படுத்தப்படவில்லை. நாங்கள் கோரிய அறிக்கை இன்னமும் கிடைக்கவில்லை. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை எடுத்ததால் அது 2022 இல் கண்டுபிடிக்கப்பட்டது, 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. தொல்பொருள் ஆராய்ச்சி, எலும்புபரிசோதனை அறிக்கைகள் போன்றவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஒன்றரை வருடங்களிற்கு முன்னர் நீதிமன்றம் தடமறிதல் செயல்முறைக்கு உத்தரவிட்டுள்ளது. காணாமல்போனோர் அலுவலகத்திற்கு இதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. காணாமல்போனவர்கள் அலுவலகத்தினால் எந்த பயனும் இல்லை. அது வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை. அது அமைச்சொன்றின் ஒரு பகுதியாக காணப்படுகின்றது, அமைச்சின் அறிவுறுத்தலிற்கு ஏற்ப செயற்படவேண்டிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் காணாமல்போனவர்கள் அலுவலகம் நீதியை பெற்றுதரும் என இன்னமும் சித்தரிக்கின்றார்கள். செம்மணி செம்மணியில் 32 வாரங்கள் மிகச்சிறிய அளவு நிலப்பரப்பினை தோண்டியவேளை 141 மனித எலும்புக்கூடுகளை மீட்டுள்ளனர். சிறிய இடத்தில் இது மிகப்பெரியது. நாங்கள் அந்த பகுதி முழுவதையும் அகழ் வதற்கான கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். சம்பூரில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை குறித்து குறிப்பிடவேண்டும், அங்கு மிகவும் ஆபத்தான நிலை காணப்படுகின்றது. எலும்புக்கூடுகள் மனித எச்சங்கள் கண்ணிவெடிகளுடன் கலந்து காணப்படுகின்றன. இது மிகவும் ஆபத்தான விடயம். எங்களிற்கு இவற்றை கையாள்வதற்கு தொழில்நுட்ப திறன் அவசியம். நாங்கள் மண்ணிற்கு கீழே எங்கள் அன்புக்குரியவர்களை தேடுகின்றோம். காணாமலாக்கப்பட்டவர்கள் குடும்பத்தினர் உறவினர்கள் களைப்படைந்துவிட்டனர், அவர்கள் பல ஆணைக்குழுக்களின் முன் சென்றுள்ளனர். நீதி வழங்குதல் என்பது மிகவும் மெதுவான மந்த கதியிலாள செயற்பாடாக காணப்படுகின்றது. காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் பதில்களிற்காக காத்திருக்கின்றனர். அவர்களிற்கு உண்மையை அறிவதற்கான உரிமையுள்ளது, தங்கள் நேசத்திற்குரியவர்களிற்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கான உரிமையுள்ளது, அவர்களிற்கு கௌரவமான இறுதி சடங்கினை முன்னெடுப்பதற்கான உரிமையுள்ளது. உண்மையான தகவல்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன, தணிக்கைக்கு உள்ளாகின்றன. வடக்கில் என்ன நடந்தது நடக்கின்றது என்பது தெற்கில் உள்ளவர்களிற்கு முழுமையாக தெரியாது. உண்மையை தெரியப்படுத்துவதை அதிகரிக்கவேண்டும். உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும், இன்றுவரை, யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களை நாங்கள் பூர்த்தி செய்கின்றோம், ஆனால் அரசாங்கத்திடமிருந்து எந்த ஒப்புக்கொள்ளுதலும் இல்லை, இது எனது சகோதரிக்கு இடம்பெற்றுள்ளது, நாங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு நீதியை உண்மையை வழங்குவோம் என இதுவரை அரசாங்கம் தெரிவிக்கவில்லை. நீங்கள் உடல்களை புதைக்கலாம், ஆனால் உங்களால் உண்மையை புதைக்க முடியாது, புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நிலத்தை கிழித்துக்கொண்டு வெளியேவந்து உலகத்திற்கும் மக்களிற்கும் எங்களை உரிய முறையில் புதைக்கவில்லை, எங்களிற்கு நீதி வழங்கப்படவில்லை என தெரிவிக்க வருகின்றன. https://www.virakesari.lk/article/222623
1 month 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . .......... ! பெண் : முத்தமழை இங்கு கொட்டி தீராதோ முல்லை இரவுகள் பத்தி எரியாதோ பெண் : சங்கம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ பெண் : கண்ணாளா என்னாளா பெண்ணாளா இன்னும் வரும் எந்தன் கதை பெண் : காலை கனவினில் காதல் கொண்டேன் கண் விழித்தேன் அவன் காணவில்லை பெண் : என்னோடு உன்னை ஒன்றாக்கும் வரை என்ன செய்தும் வழி தீரவில்லை பெண் மற்றும் குழு : கண்ணான கண்ணே என் கண்ணாளா என் உள் மன காதலை கண்டாயா பெண் : கரு மை கண்ட கண்ணோக்கி பொய் சொல்லி நின்றாயா பெண் மற்றும் குழு : போதும் போதும் என சென்றாயா ஆண் : காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ ஆண் : ஓ….. பாலை நிலத்தினில் சோலை நிழலென காதல் சொல்வேன் நான் காதல் சொல்வேன் ஆண் : மோக பனி போர்வையில் கரம் கோர்கையில் காதல் சொல்வேன் காதில் காதல் சொல்வேன் பெண் : நான் காதலி காதலன் நீ வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன் ஆண் மற்றும் பெண் : வேஷம் என்பேன் வெறும் வேஷம் என்பேன் பெண் : காலம் யாவும் நீதானே இந்தக் காலன் வந்தால் வெல்வேனே ஆண் : மறுமொரு சூரியன் பல தாரகை மண்ணில் மின்னல் வீழாதே மண்ணில் மின்னல் வீழாதே பெண் : காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ பெண் : இன்னும் ஒரு முறை எந்தன் கதை சொல்லவா பெண் குழு : சொல் சொல் சொல் சொல் சொல் சொல் பெண் : காதில் விழும் வரும் வரை காதல் பாடவா பாடவா…ஆ…..ஆ…. பெண் : சங்கம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ…… ! --- முத்தமழை இங்கு கொட்டித்தீராதோ ---
1 month 2 weeks ago
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம்: கொழும்பு பேஸ்லைன் வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு! பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பேஸ்லைன் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக பொரளை பொது மயானத்திலிருந்து பொரளை சந்தி நோக்கி செல்லும் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1443192
1 month 2 weeks ago
இந்தியாவின் பிளாஸ்டிக் கழிவுகளால் இலங்கையின் கடற்கரைகள் பாதிப்பு! தென்மேற்கு பருவகாற்று காரணமாக, இந்தியாவில் இருந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் அதிகளவில் இலங்கையின் கடற்கரைகளில் சேருவதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக கல்பிட்டி, நீர்கொழும்பு, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் நெடுந்தீவு கடல் பகுதிகளில் இந்த கழிவுகள் பெரும்பாலும் கரைத்தட்டுவதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் குறித்த விடயம் தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் சுற்றுச்சூழல் பிரதியமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1443177
Checked
Mon, 09/29/2025 - 15:50
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed