புதிய பதிவுகள்2

இந்தியாவின் அபாச்சிக்கு போட்டியாக பாகிஸ்தான் களமிறக்கும் சீன ஹெலிகாப்டர் - காத்திருக்கும் சவால் என்ன?

1 month 2 weeks ago
பட மூலாதாரம், PAFFALCONS படக்குறிப்பு, இசட்-10 எம்இ, பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்க்கப்பட்ட நவீன தாக்குதல் ஹெலிகாப்டர் கட்டுரை தகவல் முன்ஜா அன்வர் பிபிசி உருது, இஸ்லாமாபாத் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் தயாரிக்கப்படும் இசட்-10 எம்இ (Z-10 ME) ஹெலிகாப்டர் பாகிஸ்தானில் ஒரு துப்பாக்கிசுடுதல் பயிற்சி மைதானத்தில் நிற்பது போன்ற புகைப்படம் கடந்த மாதம் சமூக ஊடகங்களில் வலம் வந்துகொண்டிருந்தது. பலரும் இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படம் என தெரிவித்தனர்., வேறு சிலர் இது பாகிஸ்தானில் பரிசோதனைக்காக வந்த இசட்-10 ஹெலிகாப்டரின் முந்தைய பதிப்பு என நம்பினர். இந்த ஊகங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்பு துறை (ISPR) சீனாவில் தயாரிக்கப்பட்ட இசட்-10 எம்இ ஹெலிகாப்டர்கள் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்க்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தாக்குதல் ஹெலிகாப்டர்களை இந்தியா முதல்முறையாக அதிக அளவில் கொள்முதல் செய்த முதல் சில நாட்களில் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது. இதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான், அமெரிக்காவிலிர்ந்து மூன்று அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் டெல்லி அருகில் உள்ள ஹிண்டன் விமானபடைதளத்திற்கு வந்து சேர்ந்தன. அதிநவீன வசதிகளுடனான இசட்-10 எம்இ ஹெலிகாப்டர்கள் எல்லா காலநிலைகளிலும், பகலிலோ, இரவிலோ துல்லியமான தாக்குதலை நடத்தும் ஆற்றல் கொண்டது என நிபுணர்கள் கூறுகின்றனர். நவீனா ரேடர் மற்றும் மின்னணு போர் கருவிகள் பொருத்தப்பட்ட இசட்-10 எம்இ தரைவழியாகவும், வான் மார்க்கவாகவும் வரக்கூடிய அபாயங்களை எதிர்கொள்ளும் ஆற்றலை அதிகரிக்கிறது. இந்த கட்டுரை சீனாவின் இசட்-10 எம்இ மற்றும் அமெரிக்காவின் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களுக்கு இடையிலான வேறுபாடுகளை விளக்குகிறது. பட மூலாதாரம், SINGAPORE AIR SHOW படக்குறிப்பு, இசட்-10 எம்இயில் பல வகையான ஆயுதங்களை பொருத்த முடியும் இசட்-10 எம்இ தாக்குதல் ஹெலிகாப்டரின் சிறப்பு அம்சங்கள் என்ன? பட மூலாதாரம், ISPR படக்குறிப்பு, இசட்-10 எம்இயின் நவீன மாடலில் புதிய, சக்திவாய்ந்த இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது, இது திறனையும் வரம்பையும் அதிகரிக்கிறது ஏர் கமோடோர் (ஓய்வு) முஸாமில் ஜிப்ரான் தற்போது முல்தானின் ஏர் பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்துகிறார். அவரது கூற்றுப்படி இசட்-10 எம்இ ஹெலிகாப்டர், டபிள்யு 10 என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கான தயாரிப்பு 1994ஆம் ஆண்டு நவீன தாக்குதல் ஹெலிகாப்டருக்கான தேவையை சீனா உணர்ந்தபோது தொடங்கப்பட்டது. இதுதான் சீனாவால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தாக்குதல் ஹெலிகாப்டராகும். ஏசியன் மிலிட்டரி ரெவ்யூவின் கூற்றுப்படி, இந்த ஹெலிகாப்டர் குறுகிய தூர வான்வழி ஆதரவு, டாங்கிகளுக்கு எதிரான நடவடிக்கை, குறைவான அளவு வான்வழி தாக்குதல் ஆகியவற்றை செயல்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த அம்சங்கள் காரணமாக அது இந்தியாவின் ஏஹெச்-64இ(AH-64E) அபாச்சி கார்டியன் ஹெலிகாப்டருடன் ஒப்பிடப்படுகிறது. முஸாமில் ஜிப்ரான் கூற்றுப்படி கடந்த காலத்தில் இந்த ஹெலிகாப்டரின் பல்வேறு பதிப்புகள் இருந்திருக்கின்றன. அவரது கூற்றுப்படி பனிமூட்டமான சூழலில் பெரும்பாலான ரேடர்கள் சரியாக செயல்படுவதில்லை, ஆனால் இசட்-10 எம்இயில் பொருத்தப்பட்டுள்ள ரேடர் மூடுபனியிலும் வெகு சிறப்பாக செயல்படும். "இந்த ஹெலிகாப்டரின் துப்பாக்கிகள் ஹெல்மெட் மவுண்டட் சைட்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, இது ஒரு நகரும் ஆயுத அமைப்பாகும், பைலட் எந்த திசையைப் பார்த்தாலும், துப்பாக்கி தானாக அந்த திசையில் சுடும்," என்கிறார் முஸாமில் ஜிப்ரான். அதன் புதிய பதிப்பில் கூடுதல் ஆற்றல் கொண்ட ஒரு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது, இது அதன பறக்கும் ஆற்றலையும், தூரத்தையும் அதிகரிக்கிறது. டிபென்ஸ் செக்யூரிட்டி ஆசியாவின் கூற்றுப்படி, "செயல்திறன் அடிப்படையில், இசட்-10 எம்இ-யின் அதிகபட்ச வேகம் மணிக்கு 300 கிலோமீட்டராக உள்ளது. எடை மற்றும் கூடுதல் எரிபொருளைப் பொறுத்து அதன் பயண வரம்பு 800 முதல் 1,120 கிலோமீட்டர் வரை இருக்கும்." இந்த ஹெலிகாப்டரின் வெற்று எடை சுமார் 5,100 கிலோகிராம், அதிகபட்ச டேக்-ஆஃப் எடை 7,200 கிலோகிராம் வரை செல்லலாம். இது எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை (Line of Control) ஒட்டி நீண்ட தூரம் ஊடுருவி தாக்குதல் நடத்தும் ஆற்றலை அதற்கு வழங்குகிறது. பாதுகாப்பு ஆய்வாளர் சவுத்ரி ஃபாரூக்-கின் கூற்றுப்படி இந்த ஹெலிகாப்டரில் பலவகையான ஆயுதங்களை பொருத்த முடியும். இசட்-10 எம்இ-யில் தரையில் உள்ள இலக்குகளை தாக்கவும், வான்வழி அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள பயன்படும் வழிநடத்தக்கூடிய 16 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், 32- ட்யூப் ராக்கெட் பாட்கள் மற்றும் டி ஒய்-90 வானிலிருந்து வானில் ஏவக்கூடிய ஏவுகணைகளை பொருத்தலாம். இசட்-10எம்இ மற்றும் அபாச்சி இடையிலான வேறுபாடுகள் பட மூலாதாரம், INDIAN MEDIA படக்குறிப்பு, அமெரிக்க அபாச்சி ஹெலிகாப்டர் சர்வதேச போர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் இசட்-10 எம்இ இதுவரை அதுபோல் பயன்படுத்தப்படவில்லை அபாச்சியுடன் ஒப்பிடுகையில் இசட்-10எம்இ யில் சீனா பல்வேறு மேம்பாடுகளை செய்திருப்பதாக ஏர் கமோடோர் (ஓய்வு) முஸாமில் ஜிப்ரான் சொல்கிறார். அவரது கூற்றுப்படி, ஏவுகணைகளில் இன்ஃப்ராரெட் (ஹீட்-சீக்கிங்) ஏவுகணைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது."இந்த சூழலில், இந்த சீன ஹெலிகாப்டர் ஒரு முக்கிய சாதக அம்சத்தை கொண்டுள்ளது, இதன் இன்ஜினின் புகை வெளியேற்றும் அமைப்பு கிடைமட்டமாக இல்லாமல் 45 டிகிரி கோணத்தில் பின்புறமாக சாய்ந்துள்ளது. இதனால், இதன் வெப்ப அடர்வு (heat signature) கணிசமாகக் குறைகிறது." இந்த வடிவமைப்பு காரணமாக, எதிரிகளின் ரேடர் அல்லது வெப்பத்தை உணரும் கருவி இந்த ஹெலிகாப்டரை கண்டுபிடிப்பதில் சிரமத்தை சந்திக்கின்றன என அவர் கூறுகிறார். அமெரிக்காவின் அபாச்சி ஹெலிகாப்டர்கள் பல போர்களிலும் சர்ச்சைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இசட்-10 எம்இ பாகிஸ்தானுக்காகவே தயாரிக்கப்பட்டது என பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த தாக்குதல் ஹெலிகாப்டர்கள் தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் இந்த ஹெலிகாப்டர்கள் இதுவரை எந்த போரிலும் பயன்படுத்தப்படவில்லை. அட்லாண்டிக் கவுன்சிலின் மூத்த உறுப்பினரும், முன்னாள் பென்டகன் அதிகாரியுமான அலெக்ஸ் பிளெட்சாஸ், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் உயர்-தொழில்நுட்பத் துறைகளில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் மாற்றத்தில் நிபுணராவார். "இசட்-10 எம்இ குறைவான எடை கொண்டது, அளவில் சற்று சிறியது மற்றும் நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்டது, இது அதை மிகவும் இலகுவாக இயக்கும் தன்மையுடையதாக்குகிறது. ஆனால், ஏஹெச்-64 அபாச்சியின் வேகம் அதிகம்," என அலெக்ஸ் பிளெட்சாஸ் விளக்குகிறார். மேலும், "இது பலவகையான ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடியது மற்றும் நவீன ரேடார் மற்றும் இலக்குகளை குறிவைக்கும் அமைப்புகளைக் கொண்டுள்ளது. இசட்-10 எம்இயின் விலை குறைவு, ஆனால் இரு ஹெலிகாப்டர்களும் டாங்கிகளை தாக்குவதற்காகவே உருவாக்கப்பட்டவை," என்று அவர் விளக்குகிறார். சீன மற்றும் மேற்கத்திய தொழில்நுட்பங்களின் ஒப்பீடு பட மூலாதாரம், SINGAPORE AIR SHOW படக்குறிப்பு, இசட்-10 எம்இ, பாகிஸ்தானின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ஹெலிகாப்டர் எனக் கூறப்படுகிறது 1965ஆம் ஆண்டு பாகிஸ்தான்-இந்தியப் போருக்குப் பிறகு, அமெரிக்க ஆயுதங்களுக்கு தடை விதிக்கப்பட்ட பிறகே பாகிஸ்தான்- சீனா பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடங்கியது. பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள், டேங்குகள் மற்றும் பீரங்கிகளை வழங்கி நீண்டகால ராணுவ மற்றும் ராஜதந்திர உறவுகளுக்கு சீனா அடித்தளம் அமைத்தது. பனிப்போருக்கு பிறகு, ஆயுதங்கள் வாங்க பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு பதிலாக சீனாவை சார்ந்திருக்க தொடங்கிய பிறகு இந்த கூட்டணி மேலும் ஆழமடைந்தது. சீனாவும், பாகிஸ்தானும் 1963-ல் கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தம் எல்லை சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்து, 1966-ல் பாகிஸ்தானுக்கு சீனா ராணுவ உதவி அளிக்கத் தொடங்கியது. கடந்த சில சதாப்தங்களில், சீனா தான் தயாரித்த பல ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியிருக்கிறது. ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (SIPRI) தரவுகளின்படி, 2020 முதல் 2024 வரை பாகிஸ்தான் இறக்குமதி செய்த ஆயுதங்களில் 81% சீனாவிலிருந்து வந்தவை. SIPRIயின் கூற்றுப்படி, 2015-2019 மற்றும் 2020-2024 ஆண்டுகளுக்கு இடையில் பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதி 61% அதிகரித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, சீனாவிலிருந்து பாகிஸ்தான் வாங்கிய ஆயுதங்களில் நவீன போர் விமானங்கள், ஏவுகணைகள், ரேடார்கள் மற்றும் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் அடங்கும். பாகிஸ்தானில் உள்ளூரில் தயாரிக்கப்படும் சில ஆயுதங்களில் சீனாவின் பங்களிப்பு உள்ளது. இவை சீன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை அல்லது சீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியவை. இசட்-10 எம்இ தேர்வு செய்யப்பட்டது எப்படி? பட மூலாதாரம், SINGAPORE AIR SHOW படக்குறிப்பு, இசட்-10 எம்இ, சிங்கப்பூர் ஏர் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது பாகிஸ்தான் ராணுவம் முதலில் ஏஹெச் -1இசட் வைப்பர் ஹெலிகாப்டர்களை வாங்க திட்டமிட்டது. 2015இல் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தது, ஆனால் இந்தியாவுடனான வளர்ந்து வரும் பாதுகாப்பு உறவுகள் காரணமாக இதிலிருந்து பின்வாங்கியது. பாகிஸ்தான் ராணுவ விமானப் பிரிவைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத மூத்த பைலட் ஒருவர், "தாக்குதல் ஹெலிகாப்டர்களில் மிக முக்கியமானது பராமரிப்பு," என பிபிசியிடம் தெரிவித்தார். " அமெரிக்க அபாச்சி முற்றிலும் புதிய கட்டமைப்பு தேவைப்படும் ஒரு முற்றிலும் வேறுபட்ட ஒரு இயந்திரம். முன்னதாக பாகிஸ்தான், 'சூப்பர் கோப்ரா' அல்லது 'வைப்பர்' எனப்படும் ஏ ஹெச்-1இசட் ஹெலிகாப்டரில் ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பொருத்த தயாராகி வந்தது, ஆனால் அந்த ஹெலிகாப்டர் இதுவரை கிடைக்கவில்லை," என அவர் கூறினார். பின்னர், துருக்கியின் டி129 ஹெலிகாப்டர்களைப் பெற பாகிஸ்தான் முயற்சித்தது, ஆனால் இயந்திர சிக்கல்கள் காரணமாக அந்த வாய்ப்பும் முடிவுக்கு வந்ததையடுத்து, சீனாவை நாடியது. 2015இல் வந்த சீன ஹெலிகாப்டர்களை தொழில்நுட்பக் காரணங்களால் பாகிஸ்தான் நிராகரித்ததாக அவர் சொல்கிறார். அதன் பின்னர் 2019இல் இறுதி முடிவு எடுக்கப்பட்டது. பாகிஸ்தான் நிபுணர்கள் இசட்-10 எம்இ ஹெலிகாப்டர்களில் பாகிஸ்தானின் தேவைகளுக்கு ஏற்ப அபாச்சி போன்ற ரேடர், வானிலிருந்து வானில் தாக்கும் மற்றும் வானிலிருந்து தரையில் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் நவீன ஆயுத அமைப்புகளை பொருத்தினர். பட மூலாதாரம், SOCIAL MEDIA படக்குறிப்பு, சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்ட இசட்-10 எம்இ படத்தை பலர் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்று கூறினர் இசட்-10 பாகிஸ்தானின் முதல் தேர்வாக இருக்கவில்லை என அலெக்ஸ் பிளெட்சாஸ் சொல்கிறார். "பாகிஸ்தான் துருக்கியில் தயாரான ஹெலிகாப்டர்களை வாங்க விரும்பியது, ஆனால் அமெரிக்கா இன்ஜின் பகுதிகள் இறக்குமதியை தடை செய்தது. இதன் பின்னர், சீனாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உறவை வலுப்படுத்த பாகிஸ்தானுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்தது," என்று அவர் சொல்கிறார். இந்த கட்டுரையை எழுதும் நேரம்வரை பாகிஸ்தான் ராணுவம் (ஐஎஸ்பிஆர்) இந்த ஒப்பந்தம் பற்றிய தகவல்களை பிபிசியிடம் தெரிவிக்கவில்லை. ஆனால், பாகிஸ்தான் ராணுவ விமானப் பிரிவின் மூத்த பைலட் ஒருவரின் கூற்றுப்படி பாகிஸ்தான் சீனாவிலிருந்து 30 ஹெலிகாப்டர்களை வாங்கியுள்ளது, இவை பல தொகுதிகளாக பாகிஸ்தானுக்கு வந்து சேரும். ஏர் கமோடோர் (ஓய்வு) முஸாமில் ஜிப்ரான் இத்துடன் உடன்படுவதாகத் தெரிகிறது - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyvvmn2604o

பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள 135 வைத்தியசாலைகள் மூடப்படக் கூடிய அபாயம் ; பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் திங்கள் முதல் தொடர் வேலை நிறுத்தம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

1 month 2 weeks ago
ஏற்பட்ட இணக்கப்பாடுகளை செயற்படுத்துவதில் தாமதம் வைத்தியர்களின் இடமாற்றச் செயல்பாட்டில் ஏற்பட்ட முறைகேடுகளைத் திருத்துவது தொடர்பாக, சுகாதார அமைச்சருடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த சில மாதங்களாக, சுகாதார அமைச்சுக்குள் வைத்தியர் இடமாற்றப் பட்டியல்களைத் தயாரித்தல், இடமாற்ற உத்தரவுகளை செயல்படுத்துதல் மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் ஆகிய செயற்பாடுகள் உரிய வகையில் மேற்கொள்ளப்படவில்லை என அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக எழுந்துள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, தொழிற்சங்க நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியுள்ளது என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும், சுகாதார அமைச்சர் அளித்த வாய்மொழி வாக்குறுதிகளை செயல்படுத்தத் தவறுகின்றமை, தங்கள் சங்கத்திற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் அதன் நிறைவேற்றுக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சுகாதார அமைச்சின் இடமாற்ற சபைகள் தலையிட்டு, இடமாற்ற உத்தரவுகளை வெளிப்படையாக செயல்படுத்தப்படாவிட்டால் அல்லது சுகாதார கட்டமைப்பை முடக்க முயற்சித்தால், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடுமையான தீர்மானங்களை எடுக்க தயங்காது. சுகாதார அமைச்சரின் உரிய ஆலோசனைகளை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் அதிகாரிகள் மீது, பொது சேவை ஆணைக்குழு உட்பட அனைத்து தரப்பினரிடமும் முறைப்பாடு செய்ய, தமது சங்கம் பின்நிற்காது எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cme710xs602egqp4kt74j8op7

முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனவர் சடலமாக மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ரவிகரன் வலியுறுத்து

1 month 2 weeks ago
முத்தையன்கட்டில் இராணுவ முகாமிற்கு சென்ற இளம் குடும்பஸ்தரின் இறுதி ஊர்வலம்; பொலிஸார் விஷேட அதிரடி படையினர் விஷேட பாதுகாப்பு 11 AUG, 2025 | 04:51 PM முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியபோது தப்பியோடி சடலமாக மீட்கப்பட்டவரின் சடலம் இன்றையதினம் திங்கட்கிழமை (11) அடக்கம் செய்யப்பட இருக்கும் நிலையில் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முத்தையன்கட்டு குளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து கடந்த 07 திகதி இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டட்டு ஐவர் முகாமிற்கு சென்றநிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நால்வர் தப்பியோடிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இறந்தவவரின் சடலம் இன்றையதினம் 1 மணியளவில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் இது சம்பவம் குறித்து கலகம் ஏற்படலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/222322

வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வதைத் தடுக்க 5 எளிய வழிகள்

1 month 2 weeks ago
பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, வயிற்றில் சேரும் அதிகப்படியான கொழுப்பு நீரிழிவு மற்றும் இதய நோய்களை ஏற்படுத்தும். கட்டுரை தகவல் சுமீரன் ப்ரீத் கவுர் பிபிசி செய்தியாளர் 11 ஆகஸ்ட் 2025, 01:35 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பலரும் தங்கள் வயிற்றுப் பகுதியை குறைக்க உடற்பயிற்சிக் கூடங்களை நாடுகின்றனர். ஆனால், சிலரோ அதற்கு பெரிதும் கவனம் செலுத்துவதில்லை. வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு பெல்லி ஃபேட் டம்மி ஃபேட், பீர் ஃபேட் என்றும் அழைக்கப்படுகிறது. தங்களின் உருவம் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து கவனம் கொள்ளும் இளைஞர்கள் இதுகுறித்து கவலை கொள்கின்றனர். வயிற்றுப்பகுதியில் அதிகரிக்கும் கொழுப்பின் காரணமாக, தங்களுக்கு விருப்பத்துக்கேற்ற, சௌகரியமான உடைகளை அவர்களால் அணிய முடிவதில்லை. உங்கள் விருப்பத்துக்கேற்ப ஆடைகளை அணிவதுடன் மட்டும் இந்த பிரச்னை முடிவதில்லை. வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பால் உங்கள் ஆரோக்கியத்துக்கு ஆபத்து ஏற்படும் என்பது நிரூபணமாகியுள்ளது. வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிப்பது மற்றும் கொலஸ்ட்ரால் சம்பந்தமான பிரச்னைகள் உட்பட பல தீவிரமான உடல்நல பிரச்னைகள் ஏற்படும். இந்த நோய்கள் வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பால் ஏற்படுகின்றன. மேலும் இதனால் டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்களுக்கான ஆபத்துகளும் அதிகரிக்கின்றன. பட மூலாதாரம், GETTY IMAGES ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளியான ஆய்வு ஒன்று, சைடோகைன் (cytokine) எனப்படும் ஒருவகை புரதம் வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பால் அதிகமாக உற்பத்தியாகிறது. இதனால் உடலில் வீக்கம் (inflammation) உருவாகும். வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பால் ஆஞ்சியோடென்சின் (angiotensin) எனப்படும் புரதமும் உற்பத்தியாகிறது. இதனால், ரத்த நாளங்கள் சுருங்குதல், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படுகின்றன. இதனால், டிமென்ஷியா (மறதி நோய்), ஆஸ்துமா மற்றும் சிலவகை புற்றுநோய்களுக்கான ஆபத்துகளும் அதிகரிக்கின்றன. டெல்லியில் உள்ள ஃபோர்ட்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையின் மூத்த இதயவியல் மருத்துவர் ஷிவ் குமார் சௌத்ரி கூறுகையில், உடலின் மற்ற பாகங்களில் சேரும் கொழுப்பை விட, வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு மிகவும் ஆபத்தானது என்கிறார். மேலும் அவர், "வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பில் இருந்து செல்கள் உடையும் போதோ அல்லது சிதையும்போது, அதிலிருந்து பலவிதமான நச்சுக்கூறுகள் வெளியாகின்றன. இந்த கூறுகள், இதய ரத்த நாளங்களில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், இதய நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. உடலில் இன்சுலின் எதிர்ப்பையும் (insulin resistance) அதிகரிக்கிறது. இதன்காரணமாக, நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்தும் அதிகரிக்கிறது" என்று விளக்குகிறார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பால் உயர் ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். நிபுணர்களின் கூற்றுப்படி, வயிற்றுப்பகுதியில் கொழுப்பு அதிகரிப்பதற்கு மரபியல் ரீதியான விஷயங்கள், ஹார்மோன் மாற்றங்கள், வயது, அதிக உடல் எடை மற்றும் மெனோபாஸ் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. சமநிலையற்ற வாழ்வியல் முறை, சரிவிகித உணவு முறையை கடைபிடிக்காதது போன்றவையும் இதற்கான காரணங்களாக உள்ளன. சரிவிகித உணவு முறையை கடைபிடித்தல், தினசரி உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம் வயிற்றுப்பகுதி கொழுப்பை குறைக்க முடியும் என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். வயிற்றுப்பகுதி கொழுப்பை குறைக்க, சில விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேருவதைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி அவசியம். 1. இரவு உணவுக்கும் தூங்கும் நேரத்துக்குமான வித்தியாசம் தூங்குவதற்கு இரண்டு - மூன்று மணிநேரத்துக்கு முன்பாக எதையும் சாப்பிடக் கூடாது. நாள் முழுவதும் நீங்கள் சாப்பிடும் உணவின் கலோரிகளை, அன்றைய நாளில் நீங்கள் செய்யும் வேலைகளுக்கான ஆற்றலாக பயன்படுத்துகிறது. ஆனால், இரவில் நீங்கள் உண்ணும் உணவு அவ்வாறு பயன்படுத்த முடியாது. எனவே, அது கொழுப்பாக சேர்ந்து, உடல் எடை அதிகரிக்கும். 2. சரிவிகித உணவை உண்ணுங்கள் உணவில் நீங்கள் அதிகமான நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுக்கும் போது, நீண்ட நேரத்துக்கு நீங்கள் பசியாக உணர மாட்டீர்கள். உணவில் நார்ச்சத்து இருந்தால், உணவு வயிற்றுப்பகுதியிலிருந்து குடலுக்கு நகரும் வேகம் குறையும். இதனால் நீண்ட நேரத்துக்கு வயிறு நிரம்பிய உணர்வுடனேயே நீங்கள் இருப்பீர்கள். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, அதிக நார்ச்சத்து உணவுகளை உட்கொள்வதன் மூலம், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, குறைவாகவும் சாப்பிடுவீர்கள். இது உடல் பருமன் அபாயத்தைக் குறைக்கிறது. உணவில் புரதச்சத்தை சேருங்கள். புரதமும் வயிற்றை நீண்ட நேரத்துக்கு நிரப்பும், இதனால் மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை குறையும். பசியை தூண்டும் கரெலின் (ghrelin) ஹார்மோன்அளவை இது குறைத்து, மீண்டும் உண்ண வேண்டும் என்ற எண்ணத்தைக் குறைக்கும். புரதம் உடலின் தசைகளுக்கு வலுவூட்டுகிறது. வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, கலோரிகளை எரிக்கும் திறனையும் அதிகரிக்கிறது. புரதம் நிறைந்த முட்டை, பருப்பு, பால், சீஸ், தயிர், மீன், கோழி இறைச்சி மற்றும் சோயா போன்றவற்றை தினசரி உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். 3. மிகவும் பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை தவிருங்கள் கொஞ்சம் கூட நார்ச்சத்து இல்லாத மைதா பிரெட், சிப்ஸ் மற்றும் கிராக்கர்ஸ் போன்றவை எளிதிலேயே செரிமானமாகிவிடும், இதனால் உங்களின் ரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கும். இவ்வளவு வேகமாக ரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும்போது, பசி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உடல் எடை, டைப் 2 நீரிழிவு நோய் போன்றவற்றுக்கான ஆபத்தும் அதிகமாகிறது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கேக்குகள், குக்கீகள் (பிஸ்கெட்) மற்றும் பேஸ்ட்ரிகள் போன்ற மிகவும் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை தவிர்க்குமாறு நிபுணர்கள் கூறுகிறார்கள். இவை வயிற்றுப்பகுதியில் கொழுப்பு சேருவதை மிக விரைவாக அதிகரிக்கும். எனவே, இவற்றுக்கு பதிலாக முழுமையான தானிய பிரெட், வறுத்த தின்பண்டங்கள், பழங்கள் மற்றும் நட்ஸ் போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம். சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகமான உணவுகளை தவிர்க்க வேண்டும். மது அருந்துதல், புகைப்பிடித்தலை குறைக்க வேண்டும். 4. போதுமான உறக்கம் போதுமான தூக்கம் இல்லாதபோது, பசி ஹார்மோனில் விளைவுகளை ஏற்படுத்தி அதிகமாக சாப்பிட வேண்டும் என்று தோன்றும். லாஸ் ஏஞ்சலஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்களின் படி, வயிற்றுப்பகுதியில் உற்பத்தியாகும், பசி உணர்வை அதிகரிக்கும் க்ரெலின் என்கிற ஹார்மோன், போதிய தூக்கமின்மையால் அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்றும் அதை சரிசெய்ய வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மன அழுத்தம் ஏற்படும்போது ரத்தத்தில் மன அழுத்த ஹார்மோனான கார்ட்டிசால் (cortisol) எனும் ஹார்மோன் உற்பத்தியாகும். இதுதவிர, நாம் மன அழுத்தத்தில் இருக்கும் போது உணவில் அதிக கவனம் செலுத்தாமல், நம்மை அதிலிருந்து மடைமாற்றும் எல்லாவித உணவுகளையும் சாப்பிடும் அளவுக்கு சென்றுவிடுவோம். 5. உடற்பயிற்சியின் அவசியம் உடற்பயிற்சிகள் மற்றும் ஏதாவது பயிற்சிகளின் மூலம் ஆக்டிவாக இருப்பதன் மூலம் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இது, குறிப்பாக வயிற்றுப்பகுதி கொழுப்பை குறைக்க உதவுகிறது. தினமும் வேகமான நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அல்லது யோகா போன்றவற்றை மேற்கொள்ளும்போது அவை கொழுப்பை குறைப்பதோடு மட்டும் அல்லாமல், வளர்சிதை மாற்றத்தையும் வேகப்படுத்துகிறது. உடற்பயிற்சி செய்வது தசைகளுக்கு வலுவூட்டுகிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். வயிற்றுப்பகுதியில் சேரும் கொழுப்பை குறைப்பது நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கான ஆபத்துகளை குறைக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx277kp52rdo

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

1 month 2 weeks ago
மன்னார் காற்றாலை, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக 9ஆம் நாளாகத் தொடர் போராட்டம்: பல்வேறு கிராம மக்கள் ஆதரவு Published By: DIGITAL DESK 2 11 AUG, 2025 | 04:16 PM மன்னாரில் மக்களின் எதிர்ப்பையும் மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் 2வது கட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகிய திட்டங்களுக்கு எதிராக, மன்னார் பஜார் பகுதியில் கடந்த ஒன்பது நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று திங்கட்கிழமை, இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கிராம மக்களும் கலந்துகொண்டனர். ஞாயிற்றுக்கிழமை (11) மன்னார் தீவுப் பகுதியில் 2வது கட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பாகங்கள் கனரக வாகனங்களில் கொண்டு வரப்பட்டபோது, தள்ளாடி சந்தியில் மக்கள் ஒன்றுதிரண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதிலிருந்து, தள்ளாடி மற்றும் மன்னார் சுற்றுவட்டப் பகுதிகளில் பொது அமைப்புகள் மற்றும் மக்கள் சுழற்சி முறையில் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, காற்றாலை கோபுரங்களுக்கான பாகங்கள் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார் நகரத்திற்குள் கொண்டு வரப்பட்டபோதும், மக்களின் போராட்டம் வலுவடைந்துள்ளது. இன்று, கீளியன் குடியிருப்பு, நடுக்குடா, கட்டுக்காரன் குடியிருப்பு, பருத்திப்பன்னை, பாவிலுப்பட்டான் குடியிருப்பு உள்ளிட்ட கிராம மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும், மன்னார் மாவட்ட ஒளிக்கலை ஒன்றியமும் முழுமையான ஆதரவை வழங்கியதோடு, அதன் உறுப்பினர்களும் போராட்டத்தில் இணைந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளின் முழுமையான ஒத்துழைப்புடன், மன்னார் மக்களும் இளைஞர்களும் இரவு பகல் பாராது இந்தப் போராட்டத்தைத் தொடர்கின்றனர். https://www.virakesari.lk/article/222318

பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் படிமங்களுடன் & 100+ பெயர்களும்

1 month 2 weeks ago
இவ் ஆவணமானது சில தவறுகள் நீக்கப்பட்டு பண்டைய தமிழர்களின் படிமங்களுடன் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா 2025!

1 month 2 weeks ago
Published By: Digital Desk 2 11 Aug, 2025 | 05:46 PM யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில், இரண்டாவது 'யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா 2025' ஆனது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை மூன்று தினங்களுக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு ஒன்று திங்கட்கிழமை (11) யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்ற அலுவலகத்தில் இடம்பெற்றது. அப்போது ஏற்பாட்டாளர்கள் இதனைத் தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், "நமது சமூகத்தில் வாசிப்பு கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் சமூகப் பொறுப்பு நமக்கு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வாசிப்பை மேம்படுத்தும் நோக்கில், இந்தப் புத்தகத் திருவிழாவை இலாப நோக்கமின்றிக் கடந்த ஆண்டு சிறப்பாக நடத்தினோம். அதற்கு கிடைத்த பெரும் வரவேற்பே இந்த ஆண்டும் சிறப்பாக ஏற்பாடு செய்ய எங்களை ஊக்குவித்தது" என்றனர். உள்நாட்டு, தேசிய மற்றும் சர்வதேச புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றிணைத்து நடைபெறும் இந்தத் திருவிழாவில், வாசகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நூலகர்கள் என அனைவரும் ஒரே இடத்தில் பன்மொழிப் பதிப்பகங்களைக் காணவும், தள்ளுபடி விலையில் புத்தகங்களை வாங்கவும் வாய்ப்பு கிடைக்கும். அத்துடன், பிரபல எழுத்தாளர்களைச் சந்தித்துப் பேசவும், புத்தக வெளியீடுகளில் பங்குபெறவும், நாடக நிகழ்வுகளைக் காணவும் ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைக்கும். எதிர்வரும் வெள்ளிக்கிழமை புத்தகத் திருவிழாவை ஆரம்பித்து வைப்பதற்காக, பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் மற்றும் சிறப்பு விருந்தினராக மூத்த எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். மூன்று தினங்களும் புத்தகக் கண்காட்சிக்கு அப்பால் பல்வேறு கலை மற்றும் இலக்கிய நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா 2025! | Virakesari.lk

மன்னாரைக் காக்க மாபெரும் மக்கள் போராட்டம் - வலுச்சேர்த்த தமிழ் தேசியப் பேரவை

1 month 2 weeks ago
மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துங்கள் - வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம். 1 Aug, 2025 | 02:37 PM மன்னாரில் முன்னெடுக்கவுள்ள காற்றாலைத் திட்டத்தை நிறுத்தக்கோரியும், இல்மனைற் அகழ்விற்கு எதிராகவும் மன்னாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்திற்கு அண்மையில் திங்கட்கிழமை (11) குறித்த போராட்டம் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காறர்கள், அபிவிருத்தியின் பெயரால் மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இத்திட்டங்களை நிறுத்தவேண்டும்.இலங்கையின் மீன்பிடி தொழில் மற்றும், பறவைகளின் பாதுகாப்பு சரணாலயம், இயற்கை காற்றின் வலு முதலானவற்றிற்கு பெயர் பெற்ற இடமாக மன்னார் விளங்குகிறது. இந்தநிலையில் ஏகபோக இராட்சத பல்தேசிய கம்பெனிகளின் இலாப வேட்டையாலும், இலங்கை அரசாங்கங்களின் கையாலாகாத நிலையாலும் அழிவை எதிர் நோக்கி உள்ளது மன்னார் தீவு. ஏற்கனவே உள்ள காற்றாலைகளால் மீன் கரைக்கு வருவது குறைந்துவிட்டது மீன் இனப்பெருக்கம் குன்றிவிட்டது. காற்றாலைகளின் அமைப்பால் தரையில் ஏற்படுத்தப்பட்ட மாறுதல்கள் வடிகாலமைப்பை மாற்றிவெள்ளப்பெருக்கு மற்றும் நிலத்தடி நீர் உவராதலை ஏற்படுத்தியுள்ளது. காற்றாலைகளின் இரைச்சலால் மன்னாருக்கு வரும் வலசைப்பறவைகளின் வருகையை தடுக்கவும் பாதையை மாற்றவும் அவை காற்றாடிகளால் இறக்கும் நிலையையும் ஏற்படுத்திஉள்ளது. இது மட்டுமின்றி மக்களின் வாழ்விலும் காற்றாலைகளின் ஒலி மாசு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் மன்னார் மண்ணின் கீழ் இருக்கும் இல்மனைட் தோரியம் போன்ற கனிமவளங்கள் இன்றைய நவீன விஞ்ஞான உபகரணங்கள் மற்றும் இராணுவ தேவைகளுக்காக உலக நாடுகளுக்கு தேவைப்படுகின்றது. அதில் முதலீடு செய்வது பெரும் லாபம் தரும் என்பதால் பல் தேசிய நிறுவனங்கள் முண்டியடக்கின்றன. எனவே மன்னாரில் நடைபெற இருக்கின்ற இவ் அகழ்வு மன்னார் தீவையே மனித வாழ்வுக்கு உகந்ததாக இல்லாமல் செய்துவிடும் அளவிற்கு ஆபத்தானது. இந்த காற்றாலை மற்றும் கனியஅகழ்வு நாட்டின் தேவைக்கானதன்றிபல் தேசிய கம்பெனிகளின் இலாபக் குவிப்புக்கானதே என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும் என்றனர். வவுனியா சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இப்போராட்டத்தில், அரசியல் தரப்பினர்,சமூக செயற்ப்பாட்டாளர்கள்,பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர். மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துங்கள் - வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம் | Virakesari.lk

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

1 month 2 weeks ago
வெள்ளிக்கிழமை ஹர்த்தாலை ஆதரிக்கிறோம் : வடகிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும் - மனோ கணேசன் Published By: Digital Desk 3 11 Aug, 2025 | 04:21 PM “நீதியான விசாரணை”, “வடகிழக்கில் இருந்து மேலதிக இராணுவம் குறைப்பு” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை (15) நடத்தும் முழு அடைப்பு என்ற ஹர்த்தாலை தாம் ஆதரிக்கிறோம் என தெரிவித்து அறிக்கையொன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஐந்து தமிழ் இளைஞர்கள், 8 ஆம் திகதி முத்தையன் கட்டு இராணுவ முகாமுக்கு சிப்பாய்களால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அந்த முகாமில் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. தப்பிச் சென்றவர்களில் ஒருவரான, கபில்ராஜ், 9 ஆம் திகதி முல்லை முத்தையன் கட்டு குளத்தில் சடலமாக மீட்கபட்டுள்ளார். தப்பிச் சென்ற ஏனைய நால்வர், தம்மை இராணுவத்தினர் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆகவே என்ன நடந்தது என்பதை ஊகிப்பது கடினமானது அல்ல. இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இலங்கை தமிழரசு கட்சி, “நீதியான விசாரணை”, “ வடகிழக்கில் இருந்து மேலதிக இராணுவம் குறைப்பு” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை நடத்தும் முழு அடைப்பு என்ற ஹர்த்தாலை தாம் ஆதரிக்கிறோம். ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அநுர குமார திசாநாயக்க, இது தொடர்பில் உடன் விசாரணை, தண்டனைக்குரிய சட்ட நடவடிக்கை, ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன் இதை அடிப்படையாக கொண்டு, வடக்கு கிழக்கின் மேலதிக இராணுவ பிரசன்னத்தை உடன் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். “இராணுவ பிரசன்னம் குறைப்பு” என்பதுதான் இந்த ஹர்த்தால் சொல்ல போகும் செய்தி. போர் செய்த இராணுவம் சும்மா இருக்காது. அதிலும் இன அடிப்படையிலான போர் செய்த இராணுவ சிப்பாய்களின் மனங்களில் இனவாதம் தங்கி இருக்கத்தான் செய்யும். எனவே அவர்களை தென்னிலங்கைக்கு கொண்டு வந்து, “குளம் வெட்டுவது, குளத்தில் தூர் எடுப்பது, வீதி அமைப்பது, வீடு கட்டுவது, ஹோட்டல் நடத்துவது, தோட்டம் செய்வது, காய்கறி சந்தை நடத்துவது” போன்ற இன்ன பிற அபிவிருத்தி பணிகளில், ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அநுர குமார திசாநாயக்க, ஈடுபடுத்த வேண்டும். “இதற்கு முன் இப்படியான சம்பவங்கள் நடக்க வில்லையா? அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?” என எம்மை பார்த்து, தம்மை அறிவாளிகள் என நினைத்து கொண்டு, கேள்வி கேட்கும், ஜேவிபி அமைச்சர்கள், எம்பிக்கள் ஆகியோரின் வாய்களையும் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அனுர குமார திசாநாயக்க மூட வேண்டும். “அன்றைய அரசுகள் மாறி, மாறி செய்தவற்றை செய்ய நாம் வரவில்லை. மாற்றி செய்யவே நாம் வந்தோம்”, என நீங்கள் தான் மக்களுக்கு கூறினீர்கள். அதையே தான் நீங்களும் செய்ய வந்தீர்கள் என்றால், நாம் எதிர்க்கத்தான் செய்வோம். அரச இராணுவ பயங்கரவாதத்தை, நாம் அப்போதும் எதிர்த்தோம். இப்போதும் எதிர்கிறோம். எப்போதும் எதிர்ப்போம். வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடை பெற அழைப்பு விடுத்து இருக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் கோரிக்கையை, தமிழ் முற்போக்கு கூட்டணி வரவேற்று, ஆதரவை அறிவிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை ஹர்த்தாலை ஆதரிக்கிறோம் : வடகிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும் - மனோ கணேசன் | Virakesari.lk முல்லைத்தீவு இராணுவ தாக்குதல் தொடர்பான ஹர்த்தாலுக்கு இலங்கையராகவும், மலையக தழிழராகவும் ஜீவன் தொண்டமான் முழுமையான ஆதரவு. 11 Aug, 2025 | 01:28 PM முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் – முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக வடக்கு மற்றும் கிழக்கில் வெள்ளிக்கிழமை (15) அனுசரிக்கப்படவுள்ள ‘ஹர்த்தால்’ போராட்டத்திற்கு ஒரு இலங்கையராகவும், மலையக தமிழராகவும், எனது முழுமையான ஆதரவினை வழங்குவதாக தெரிவித்துக்கொள்கின்றேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வியாழக்கிழமை (07), முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டுப் பகுதியில் 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர், இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனதாக தேடப்பட்டு வந்தார். பின்னர் கடந்த சனிக்கிழமை (09) அன்று, அவரது சடலம் முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து மீட்கப்பட்டது. நீதிக்கான கோரிக்கையிலும், இராணுவத்தின் அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நடைபெறவுள்ள இந்த ஹர்த்தாலுக்கு, எனது ஒற்றுமையையும் உறுதியான ஆதரவையும் வெளிப்படுத்துகின்றேன். யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த பின்பும், இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் நிகழ்வது மிகவும் வருத்தமளிப்பதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வலியுறுத்துகின்றேன் என்றார். முல்லைத்தீவு இராணுவ தாக்குதல் தொடர்பான ஹர்த்தாலுக்கு இலங்கையராகவும், மலையக தழிழராகவும் ஜீவன் தொண்டமான் முழுமையான ஆதரவு | Virakesari.lk

கருவாடு ஏற்றுமதி சந்தையை மேம்படுத்துவதற்காக கடற்றொழில் அமைச்சு பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்

1 month 2 weeks ago
11 Aug, 2025 | 05:14 PM இந்நாட்டு கருவாடு உற்பத்தியின் தரத்தை உயர்த்தி, சர்வதேச சந்தைக்கு ஏற்றவாறு அதனை மேம்படுத்தும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சானது, கடந்த வியாழக்கிழமை (07) அமைச்சு கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது. கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், ஏற்றுமதியாளர்கள், பதப்படுத்துபவர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட துறையின் அனைத்து பங்குதாரர்களும் கலந்துகொண்டனர். ஐரோப்பா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற உயர் தரத்தை எதிர்பார்க்கும் சந்தைகளுக்கு இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கருவாடுகளின் தரம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக இருந்தது. இக்கலந்துரையாடலின் போது, பதப்படுத்துபவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. உள்நாட்டில் உயர்தரமான கருவாட்டினைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமம் அவர்களின் முக்கிய பிரச்சினையாக இனங்காணப்பட்டது. மேலும், நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் கருவாடு உற்பத்தியின் போது காணப்படும் தரம் தொடர்பான பிரச்சினைகளும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டன. இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள், புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக வலியுறுத்தினார். "இறக்குமதி செய்யும் நாடுகளின் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய, உயர்தரமான கருவாடு உற்பத்தியை உருவாக்குவதும், அதன் மூலம் ஏற்றுமதி சந்தையை வலுப்படுத்துவதுமே எமது பிரதான நோக்கமாகும்" என பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். அதன்படி, பின்வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் விளக்கினார் தொழில்நுட்ப அறிவை வழங்குதல்: உயர்தரமான கருவாடு உற்பத்திக்காகத் தேவையான நவீன தொழில்நுட்பங்களை உற்பத்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்துதல். தனியார் துறையை ஊக்குவித்தல்: ஐரோப்பிய ஒன்றியத்தின் தரத்திற்கு ஏற்ற தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு தனியார் துறைக்குத் தேவையான வசதிகளையும் நிபுணத்துவத்தையும் வழங்குதல். தரத்தை மேம்படுத்துதல்: நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் தற்போது மேற்கொள்ளப்படும் கருவாடு உற்பத்தியின் தரம் மற்றும் சுகாதார நிலைமைகளை உயர்த்துவதற்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்குதல். இக்கலந்துரையாடலில் உற்பத்தியாளர்கள், உயர்தரமான கருவாட்டை உற்பத்தி செய்ய முன்வருவதாக இணக்கம் தெரிவித்தனர். இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம், இலங்கையின் கருவாட்டுத் தொழிற்துறையை சர்வதேச மட்டத்தில் ஒரு போட்டித்தன்மை வாய்ந்த துறையாக மாற்றுவதற்கு கடற்றொழில் அமைச்சு எதிர்பார்க்கிறது. கருவாடு ஏற்றுமதி சந்தையை மேம்படுத்துவதற்காக கடற்றொழில் அமைச்சு பங்குதாரர்களுடன் கலந்துரையாடல் | Virakesari.lk

அத்துரலிய ரத்ன தேரர் தலைமறைவு - தேசிய பட்டியல் ஆசனத்திற்காக பௌத்தமதகுருவை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் தேடும் பொலிஸார் - கோட்டா - தேசபந்துவிற்கும் தொடர்பு

1 month 2 weeks ago
11 Aug, 2025 | 04:38 PM முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமறைவாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓபிபிபி கட்சியின் பொதுச்செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் 2020 இல் கடத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கில் அத்துரலிய ரத்ன தேரரை தேடி வரும் பொலிஸார் அவர் தலைமறைவாகியுள்ளார் என தெரிவித்துள்ளனர். அத்துரலிய ரத்ன தேரரின் ராஜகிரிய ஆலயம்,தியான நிலையங்கள் உட்பட பல இடங்களிற்கு அவரை தேடிச்சென்றதாக தெரிவித்துள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அவரை எங்கும் கண்டுபிடிக்கமுடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர். அத்துரலிய ரத்ன தேரரை அவரது தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார் அவர் நாட்டிலிருந்து தப்பியோடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவ்வேளை மேல்மாகாணத்திற்கான சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபராக விளங்கிய தேசபந்து தென்னக்கோன் ஆகியோருடன் தொடர்புபட்ட சம்பவம் தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அத்துரலிய ரத்னதேரரை தேடுவதாக தெரிவித்துள்ள பொலிஸார் இருவரையும் விசாரணை செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் தேசிய பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான கையெழுத்தை பெறுவதற்கு அத்துரலிய ரத்ன தேரர் ஓபிபிபி கட்சியின் பொதுச்செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ கடத்தினார் என்ற குற்றச்சாட்டு உள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் அந்த ஆவணத்தில் கையெழுத்திடாவிட்டால் தன்னை கொலை செய்யப்போவதாக வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளனர். அத்துரலிய ரத்ன தேரர் தலைமறைவு - தேசிய பட்டியல் ஆசனத்திற்காக பௌத்தமதகுருவை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் தேடும் பொலிஸார் - கோட்டா - தேசபந்துவிற்கும் தொடர்பு | Virakesari.lk

கச்சதீவு தொடர்பில் இந்தியாவின் கருத்துக்களை நாம் அலட்டிக்கொள்ள தோவையில்லை - யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கை

1 month 2 weeks ago
11 Aug, 2025 | 05:16 PM கச்சதீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது மிக பெரிய வரலாற்றுத் தவறென குறிப்பிடுவது தொடர்பாக நாம் அலட்டிக்கொள்ள தோவையில்லை என தெரிவித்து யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய அரசியலில் அதிலும் குறிப்பாகத் தமிழக அரசியலில் அடிக்கடி கச்சதீவு விவகாரம் சூடு பிடிப்பது வழமை. தேர்தல் காலங்களிலும் மற்றும் எல்லைதாண்டி இலங்கைகடற்பரப்பில் இந்திய மீனவர்கள் வந்து இலங்கை மீனவர்களது வளங்களை சூறையாடி, வலைகளைச்சேதமாக்கும் போதும் இலங்கைக்கடற்படையால் அவர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படும் போதும் தமிழக முதல்வர் கச்சதீவை இலங்கைக்கு வழங்கியது போல திரும்பப்பெறுவதுதான் தமிழக மீனவர்களது பிரச்சினைக்குத்தீர்வு என்று கோஷமிடுவது சர்வசாதாரணம். இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி சில நாட்களுக்கு முன் கச்சதீவை காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இலங்கைக்குத்தாரை வார்த்தது மிக பெரிய வரலாற்றுத்தவறு என்று குறிப்பிட்டிருந்தார். வட பகுதிக்கு அல்லது முன்னர் வடக்கில் இருந்த யாழ்ப்பாண இராச்சியத்திற்குச் சிறப்பைக் கொடுப்பதற்கு தீவுகள் முக்கியமானதொரு காரணமாகும். மன்னார் துவங்கி காரைதீவு (காரைநகர்), வரையுள்ள இரணைதீவு, பாலைதீவு, நெடுந்தீவு, கச்சதீவு, புங்குடுதீவு, கற்கடதீவு, எழுவைதீவு, நயினாதீவு. மண்டைதீவு, ஆகியவை இவை. இவற்றுள் மன்னார், ஊர்காவற்துறை, மண்டைதீவு, புங்குடுதீவு, காரைநகர் ஆகியவை தரைவழிப்பாதையால் இலங்கைப்பிரதான நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் எல்லாத்தீவுகளிலும் மக்கள் வசிப்பதில்லை. குறிப்பாக நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கச்சதீவில் மக்கள் வசிப்பத்தில்லை. வருடத்தில் ஒரு முறை மட்டும் இடம் பெறும் கத்தோலிக்க மக்களின் புனித அந்தோனியார் திருநாளுக்கு மட்டும் மக்கள் இலங்கையின் குறிப்பாக வட மாகாணத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் போவார்கள். வடக்கில் பெரும்பான்மையினராக இருக்கும் இந்து மத சகோதரர்களும் கணிசமானளவு தொகையினர் இங்கு வருவதுண்டு. இந்தியாவிலிருந்தும் ஆயிரக்கணக்கில் மக்கள் வருவார்கள் திருநாட் காலங்களில் மக்கள் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் முக்கிய ஏற்பாடுகளுக்கு இலங்கைக் கடற்படையினர் பொறுப்பாயிருப்பார்கள். கச்சதீவுத் திருநாளுக்கு சில வாரங்குளுக்கு முன் யாழ்ப்பாணச் செயலகத்தில் அரச அதிகாரிகள் பாதுகாப்புத்தரப்பினர் யாழ் மறைமாவட்ட ஆயரின் பிரதிநிதிகள் கூடி திருநாளுக்கான சகல ஏற்பாடுகளையும் செய்து வருவது வழக்கம். திருநாள் இல்லாத மற்ற நாட்களில் இலங்கையிலிருந்து மட்டுமல்ல இந்தியாவிலிருந்தும் கடற்தொழில் செய்பவர்கள் சற்று ஓய்வெடுக்க அல்லது வலைகளைக் காயப்போட இங்கு வந்து போவார்கள். இந்தியக் கடற்தொழிலாளர் பெரும் எண்ணிக்கையில் இங்கு வந்து போவதாலும் சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட அந்தோனியார் கோயிலுக்கு இவர்களும் வந்து வழிபட்டுச்செல்வார்கள். நேர்த்திக்கடன் போன்ற கடன்கள் செய்வதற்கும் சில சந்தர்ப்பங்களில் நன்கொடைகள் வழங்குவதற்கும் வருவார்கள். இந்தப் பின்ணனியிலும் கணிசமானளவு இந்தியக் கடற்தொழிலாளர்கள் வருவதாலும் கச்சதீவு இந்தியாவுக்கா இலங்கைக்கா சொந்தம் என்ற ஒரு மயக்கம் உருவானது ஆயினும் 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னிருந்தே கச்சதீவில் புனித அந்தோனியார் சிற்றாலயம் ஒன்றிருந்தது. இவ்வாலயம் யாழ்ப்பாணக் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் கீழ் உள்ள நெடுந்தீவுப் பங்கின் கீழ் இருந்தது. நெடுந்தீவுப் பங்கில் உள்ள பங்குத் தந்தைதான் இவ்வாலயத்திற்கு நேரடிப் பொறுப்பாயிருந்து வந்துள்ளார். கச்சதீவு திருநாளுக்குச் சில நாட்களுக்கு முன் நெடுந்தீவுப் பக்கத்திலிருந்து பங்குத்தந்தையின் பணிப்புரையில் கச்சதீவு மூப்பர்' என்றழைக்கப்பட்ட (மூப்பர் அல்லது கணக்குப்பிள்ளை என்னும் கத்தோலிக்க ஆலய நிர்வாக முறை 16ம் நூற்றாண்டில் புனித சவேரியார் காலத்திலிருந்து ஒரு ஆலயத்தில் குரு நிரந்தரமாத் தங்குவதில்லை யென்றால் அவ்விடங்களில் ஆலயப்பராமரிப்பு, மக்களின் ஆன்மீக நலன் சம்பந்தமான விடயங்களுக்கு இந்த மூப்பரே பொறுப்பாயிருப்பார். பங்குத்தந்தை வரும் போது இவரே அனைத்துக்கும் பொறுப்பு கூறுபவராக இருப்பார். இப்போது அனேகமான ஆலயங்களில் வதிவிடப்பங்குத்தந்தை இருப்பதால் பெரும்பாலும் இந்த மூப்பர் முறை நடைமுறையில் இல்லை.) அல்லது வழிபாடுகளுக்கு ஆயத்தம் செய்பவர் யாத்திரிகளது தேவைகளையும் கவனிப்பார். சில உதவியாளர்களுடன் சென்று அங்குள்ள சிற்றாலயம், அதன் சுற்றுப்புறம் ஆகியவற்றைச் சுத்தம் செய்வார். பங்குத்தந்தையும் சில நாட்களுக்கு முன் சென்று இப்பணிகளை மேற்பார்வை செய்வார். இவ்வாறு செய்த பழைய மூப்பர்களின் வாரிசுகள் இப்போதும் நெடுந்தீவில் உள்ளனர். அண்மைக்காலங்களில் கடற்படையினர் உணவு, குடிநீர் ஏற்பாடுகள் பலவற்றை கடற்படையினர் செய்துவருகின்றனர். யுத்தகாலத்தில் கச்சதீவு திருநாள் ஒழுங்காக இடம் பெற்றிருக்கவில்லை. இங்கு ஒரு தற்காலிக கடற்படை முகாமும் இருந்தது. யுத்தம் முடிவடைந்தபின் யாத்திரைகள் கிரமாக இந்திய இலங்கை யாத்திரிகாகளுடைய பங்குபற்றுதலுடன் இடம் பெற்று வருகின்றன. யாழ்மறை மாவட்ட ஆயரின் பணிப்புரையில் நெடுந்தீவுப் பங்குத்தந்தையே வழிபாட்டுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கின்றார். யாழ் ஆயரின் அழைப்பின்பேரில் தான் இந்தியாவின் தங்கச்சி மடம் பங்குத்தந்தையும் வேறு சில குருக்களும் துறவிகளும் வருகின்றனர். இந்திய யாத்திரிகளது எண்ணிக்கை போன்ற ஏற்பாடுகள் எல்லாம் யாழ் கச்சேரியில் நடக்கும் கூட்டங்களில் முடிவு செய்யப்படுகின்றது. இந்திய யாத்திரிகள் கணிசமானளவு வருகின்றமையால் இந்திய குருக்களுக்கும் கூட்டுத்திருப்பலி மற்றும் வழிபாடுகளில் கணிசமான பங்கு வழங்கப்படுகின்றது. கச்சதீவுப்பெருநாள் ஏற்பாடுகளும், வழிபாட்டு ஒழுங்கமைப்பும் இலங்கை அரசினதும், யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயரின் பணிப்புரையிலேயே நடைபெற்றுவருகின்றது. நிறைவாக கச்சதீவு கடந்த பல தசாப்தங்களாக (யுத்தகாலம் நீங்கலாக) இந்திய இலங்கை யாத்திரிகள் ஏறக்குறைய சரிக்குச்சரி எண்ணிக்கையில் வந்துபோனமையாலும், திருநாள் இல்லாத வருடத்தின் எஞ்சிய நாட்களின் இரு நாட்டுக்கடற்தொழிலாளரும் கச்சதீவுக்குச் சர்வசாதாரணமாக வந்து ஓய்வெடுத்து இங்கிருந்த அந்தோனியார் சிற்றாலயத்தில் வணங்கிச் சென்றதாலும் அரசியல், புவியியல் ரீதியில் கச்சதீவு யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி குறிப்பாக இந்திய தரப்பில் கேட்கப்பட்டுவந்தது. இப்பகுதியில் இலங்கைக் கடலில் அத்துமீறி வந்து மீன்பிடிப்பதில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவது போன்ற நிகழ்வுகள் இடம்பெறுவதால் கச்சதீவை இலங்கைக்கு வழங்கியது தவறு என்று தமிழக அரசியல் தரப்பிலும் இந்திய மத்தி அரசிலும் கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. உண்மையில் 1974ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்தபோது ஆணித்தரமாக கச்சதீவு இலங்கைக்கே சொந்தம் அதில் இந்தியா உரிமை கொண்டாடப் போவதில்லை என்று அறிவித்தமை கச்சதீவை இலங்கைக்குத்தாரை வார்த்து கொடுத்தமையாகாது. ஏனெனில் கச்சதீவு ஒருபோதும் இந்தியாவின் ஆட்சிக்கும் நிர்வாகத்திற்கும் கீழ் இருந்ததில்லை. இந்த பின்னியில் கச்சதீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுப்பது அல்லது மிளப்பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனை அப்போதே யாழ் ஆயராக இருந்த கலாநிதி. ณ. தியோகுப்பிள்ளை ஆண்டகை யாழ் ஆயரில்ல ஆவணங்களிலிருந்தும் யாழ் ஆயரின் நிர்வாகத்தின் கீழ் நெடுந்தீவுப் பங்குப் பதிவேடுகள் அங்குள்ளவர்களின் வாய்மொழி பாரம் யபரியங்களிலிருந்தும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். எனவே ய இந்தியப் பிரதமரின் கூற்றாகிய 1974 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போதுதான் கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. அப்போது தமிழ் நாட்டில் தி.மு.க கட்சியும் காங்கிரஸ் ஆட்சியின் பங்காளியாக இருந்தது என்பது பற்றியெல்லாம் நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. புதிய, 2016ம் ஆண்டு தற்போதைய ஆயர் கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை பொறுப்பேற்றபின் பல வருடங்களாக குறிப்பாக போர்க்காலத்தில் கவனிப்பாரற்று சிதைவடைந்த நிலையில் ஒரு பல்லாயிரக்கணக்கான யாத்திரிகள் கலந்துகொள்ளும்படியான ஒரு ஆலயம் கட்டவேண்டிய தேவையை உணர்ந்து கடற்படையினரிடம் அனுசரணையைக் கோரியபோது. அவர்களது அனுசரணையில் ஒரு புதிய அழகிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்திய யாத்திரிகர்களும் வருகின்றனர் மற்றும் கடற்தொழிலாளரும் இங்கு மற்ற நாட்களில் வந்து ஓய்வெடுக்கவும் தமது வலைகளைக் காயப்போடவும் அவர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதி தொடர்ந்து பேணப்படுகின்றது என்றுள்ளது. கச்சதீவு தொடர்பில் இந்தியாவின் கருத்துக்களை நாம் அலட்டிக்கொள்ள தோவையில்லை - யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கை | Virakesari.lk

மன்னாரைக் காக்க மாபெரும் மக்கள் போராட்டம் - வலுச்சேர்த்த தமிழ் தேசியப் பேரவை

1 month 2 weeks ago
மன்னாரைக் காக்க மாபெரும் மக்கள் போராட்டம் - வலுச்சேர்த்த தமிழ் தேசியப் பேரவை பதிவேற்றுனர்: அன்பரசி திகதி: 11 Aug, 2025 மன்னார் நகரத்தின் சுற்றுச் சூழலுக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காற்றாலைத் திட்டம் மற்றும் மன்னார் தீவையே முற்றாக அழிக்கக்கூடிய கனியமண் அகழ்வுத் திட்டம் ஆகியவற்றை உடனடியாகக் கைவிடக்கோரி, இன்று மன்னாரில் மக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். போராட்டத்திற்கான அவசியம் என்ன? மன்னார் பகுதியில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலைத் திட்டமானது, அப்பகுதியின் சூழலியல் சமநிலையை முற்றாகப் பாதிக்கும் வகையிலும், அங்குள்ள மக்களின் மீன்பிடி மற்றும் விவசாயம் சார்ந்த வாழ்வாதாரங்களை அழிக்கும் வகையிலும் அமைந்துள்ளதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அதேபோல, மன்னார் தீவில் முன்னெடுக்கப்படவுள்ள கனியமண் அகழ்வானது, ஒரு வளமான நிலப்பரப்பை முற்றிலுமாக அழித்து, எதிர்காலத்தில் மன்னார் தீவு என்ற ஒன்றே இல்லாத நிலையை உருவாக்கும் ஒரு பாரிய அழிவுத் திட்டம் என அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த அழிவுத் திட்டங்களுக்கு எதிராகவே மக்கள் தன்னெழுச்சியாக வீதியில் இறங்கிப் போராடி வருவதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர். வலுச்சேர்த்த தமிழ் தேசியப் பேரவை மக்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கும் வகையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியப் பேரவையின் தலைவர்கள் நேரடியாகக் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்தப் போராட்டத்தில், தமிழ் தேசியப் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மன்னார் மாவட்ட அமைப்பாளர் துரைராஜா ஜோன்சன் மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, மக்களின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்தனர். தமது அரசியல் நோக்கங்களுக்கு அப்பால், மக்களின் வாழ்வுரிமையையும், மண்ணின் வளத்தையும் பாதுகாப்பதே தமது முதன்மையான கடமை எனத் தெரிவித்த அரசியல் தலைவர்கள், இந்த அழிவுத் திட்டங்களை அரசு கைவிடும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் சூளுரைத்தனர். மன்னாரைக் காக்க மாபெரும் மக்கள் போராட்டம் - வலுச்சேர்த்த...மன்னார் நகரத்தின் சுற்றுச் சூழலுக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காற்றாலைத் திட்டம் மற்றும் மன்னார் தீவையே முற்றாக அழிக்கக்கூடிய கனியமண் அகழ்வுத் திட

நியூசிலாந்தில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீட்டு விழா

1 month 2 weeks ago
நியூசிலாந்தில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீட்டு விழா ——————————— நியூசிலாந்து, ஓக்லாண்ட்(Auckland) மாநகரில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியிடப்பட உள்ளது. “தேசிய சுய நிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும்”, “இலத்தீன் அமெரிக்காவில் தேசிய இன முரண்பாடுகள்”, “ஆபிரிக்க தேசிய இனங்களும் சுயநிர்ணய விடுதலையும்”, “முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள்”“தென்கிழக்காசிய விடுதலைப் போராட்டங்கள்”, “இந்தியாவில் தேசிய இன எழுச்சியும் வீழ்ச்சியும்” ஆகிய ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீடு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. நியூசிலாந்து, ஓக்லாண்ட் மாநகரில் உள்ள மவுண்ட் ரோஸ்கில் போர் நினைவு மண்டபம், 13 வது மே சாலை, மவுண்ட் ரோஸ்கில், ஓக்லாந்து 1041 எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் மாலை 1800 முதல் 2030 மணி வரை இவ் வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளது. (Mt Roskill War Memorial Hall, 13 May Road, Mt Roskill, Auckland 1041, New Zealand) இந்நிகழ்வு திரு. சண் வேலுப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நூல் வெளியீட்டு விழாவில் அறிமுக உரையை திரு. மேவின் கொன்ஸ்ரன்ரைன் அவர்கள் உரையாற்றுவார். அத்துடன் நூல்களின் ஆய்வுரைகளை திரு. சிவசரவணபன் சர்வேஸ்வரன், திரு. பூபாலசிங்கம் பிரதீபன், திரு. கௌரிசங்கர் சுதந்திரபாலன், திரு. பிரேம்குமார் கந்தசாமி, திருமதி. வித்தியா நந்தகுமார் மற்றும் திருமதி. தமிழினி வாமதேவன் ஆகியோர் வழங்குவார்கள். ஓக்லாண்ட் மாநகரில் நிகழும் இந்நூல் வெளியீட்டின் ஏற்புரையை திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் நிகழ்த்துவார். யாழ்க்கள உறவுகளே, வட்ஸ்அப்பில் படித்ததைப் பகிர்ந்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் அல்ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் பலி

1 month 2 weeks ago
கொல்லப்பட்ட அல்ஜசீரா ஊடகவியலாளர் ஹமாஸ் உறுப்பினர் - இஸ்ரேலிய இராணுவம் குற்றச்சாட்டு 11 AUG, 2025 | 02:04 PM அல்ஜசீரா ஊடகவியலாளர் அனாஸ் அல் ஷரிவை இலக்குவைத்து தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஹமாஸ் உறுப்பினர் என தெரிவித்துள்ளது. அனாஸ் அல் ஷரிவ் ஹமாசின் உறுப்பினர் என்பதற்கான அனைத்து ஆவணங்களும் ஆதாரங்களும் உள்ளன என தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் அவர் பெற்ற பயிற்சி விபரங்கள், சம்பள பட்டியல்கள் போன்றவை அந்த ஆவணத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அவருக்கு பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புள்ளதை இந்த ஆவணங்கள் மீண்டும் உறுதி செய்கின்றன என இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸ் இந்த விடயத்திலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள முயல்கின்றது என குறிப்பிட்டுள்ளது. கொல்லப்பட்ட ஊடகவியலாளர் 2013 இல் ஹமாஸ் அமைப்பில் இணைந்தார் என தெரிவித்துள்ள இஸ்ரேலியஇராhணுவம் இஸ்ரேலியர்களிற்கு எதிராக ரொக்கட் தாக்குதலை மேற்கொண்ட ஹமாஸ் குழுவின் தலைவர் இவர் எனவும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/222310

செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்

1 month 2 weeks ago
சம்பந்தன் மட்டும் அல்ல. எனக்கும் உங்களுக்கும் கருத்து எழுத கூட இதுதான் பயன்படுகிறது🤣

போர் முயற்சிகளுக்கான உக்ரைன் மக்களின் ஆதரவு சரிந்தது

1 month 2 weeks ago
உலகத்தில் மக்கள் எப்போதாவது போரை விரும்பி இருப்பார்களா 🤣. போரை விரும்பாதபடியால்தான் வசியால் அவுசுக்கும், கு சா அண்ணையால் ஜேர்மனிக்கும் ஓடிப்போக முடிந்தது. இதே போலத்தான் நானும். இப்படித்தான் பல ஈழத்தமிழர்களும் போரை விரும்பவில்லை. இந்த அடிப்படையில் பார்த்தால் - சிங்களவன் வெல்ல முடியாத எதிரி, எனவே ஈழ விடுதலை போராட்டமே தவறு என்றல்லா ஆகி விடும் 🤣.
Checked
Mon, 09/29/2025 - 09:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed