1 month 2 weeks ago
10 AUG, 2025 | 10:42 AM கிழக்கு முஸ்லீம்கள் அரசியலில் மறைமுகமான அடிமைத்துவத்தின் கீழ் இருக்கின்றமை கவலையளிக்கின்றது. பொத்துவில் அறுகம்பை பிரச்சினையானது அரசியலாக்கப்படுகின்றமை கவலையளிக்கின்றது என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் தெரிவித்தார். கல்முனையில் சனிக்கிழமை (09) மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு கருத்து வெளியிட்ட அவர், இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிக்கர் ஒட்டுவதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். எங்களின் கொழும்பு அலுவலகத்தில் இருக்கின்ற குப்பைகளை போடுகின்ற வாளியில் கூட இந்த ஸ்டிக்கர் ஒட்டி இருக்கின்றோம். இந்த ஸ்டிக்கர் ஒட்டுகின்ற நிலைப்பாட்டில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. தற்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ன பிரச்சினைகளை பேசுகின்றார்களோ கடந்த காலங்களில் இந்தப் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அமைச்சுகளில் அவர்கள் இருந்திருக்கிறார்கள் . அவ்வாறு அவர்கள் அன்று செய்யாது இன்று இஸ்ரேல் தொடர்பில் அரசியல் ரீதியாக பிரச்சனைக்கு உட்படுத்துகின்றார்கள். பங்களாதேஷ்காரர்கள் என்றாலும் சரி இஸ்ரேல் காரர்கள் இருந்தாலும் சரி சீனாக்காரர்கள் என்றாலும் சரி எமது நாட்டில் தேவையற்ற விடயங்களை செய்வதை நாங்கள் அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதற்காக நாங்கள் இஸ்ரேலியர்களை விரட்டுவதற்காக பொத்துவில் மண்ணுக்கு வர வேண்டிய தேவையில்லை. எமது தலைநகரம் கொழும்பில் இரந்து அதாவது எமது வீட்டிலிருந்து 30 கிலோமீட்டர் தூரம் தான் கட்டுநாயக்க விமான நிலையம் இருக்கின்றது. அங்கிருந்து நாங்கள் இஸ்ரேலியர்களை மீண்டும் அவர்களை நாட்டிற்கு அனுப்பி விடுவோம். ஆனால் எமது நாட்டிற்கு உல்லாச பயணிகளாக வருகின்றவர்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். இந்த நாட்டின் பிரதான வருமான வழிகளில் சுற்றுலாத்துறை முக்கியத்துவம் பெற்றது. அதை மேம்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அதற்காக நாட்டின் இறைமையை பாதிக்கும் விடயங்களுக்கு அனுமதிக்க முடியாது. எனவே தான் இலங்கையின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக மாறி வரும் சட்டவிரோத இஸ்ரேலிய சபாத் இல்லங்களை பொத்துவில் பிரதேச சபை மூடிவிட முன்வர வேண்டும். பொத்துவில் அறுகம்பே பகுதியில் அரச அனுமதிகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக இயங்கும் இஸ்ரேலிய வழிபாட்டு தளம் (சபாத் இல்லம்) அருகில் இருக்கும் பள்ளிவாசலும் இருள் சூழ்ந்து இஸ்ரேலிய வழிபாட்டு தளத்தின் வாகன தரிப்பிடம் போன்று மாறியுள்ளது. கிழக்கில் அரசியல் செய்யும் மூன்று காங்கிரஸ் தலைவர்களும் இந்த விடயங்களில் கவனம் செலுத்தி அந்த பள்ளிவாசலை எதிர்காலத்தில் குறைந்தது மூடிவிடுவதிலிருந்தாவது பாதுகாக்க வேண்டும். தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் வாயால் கதைத்தவற்றை தவிர சமூகத்தின் நலனுக்காக இந்த காங்கிரஸ்காரர்கள் எதுவும் செய்யவில்லை. கடந்த காலங்களில் வாயால் பேசிக்கொண்டிருந்ததையே இப்போதும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். வடக்கை தமிழ் முதலமைச்சர் ஆளவேண்டும் என்ற எங்களின் கொள்கைப்படி கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம். அதற்காக எதிர்வரும் காலங்களில் சகல காங்கிரஸ்காரர்களையும் பெருந்தேசிய கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டணியை அமைக்கும் பணியை முன்னெடுத்து வருகிறோம் என்றார். இந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதி தலைவர் கலாநிதி ஹக்கீம் ஷெரீப், இணைப்பாளர் ஏ.எம். அஹூவர் உட்பட உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/222204
1 month 2 weeks ago
முத்தையன்கட்டு சம்பவம்; அரசாங்கம் நீதியை நிலைநாட்டுமா? - சாணக்கியன் கேள்வி 10 AUG, 2025 | 10:01 AM (நா.தனுஜா) பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் தாம் முன்னைய அரசாங்கங்களிலிருந்து எவ்வகையிலும் மாறுபட்டவர்கள் அல்ல என்பதைத் தற்போதைய அரசாங்கம் நிரூபித்துவருகிறது. முத்தையன்கட்டு சம்பவம் தற்போதைய அரசாங்கம் நீதியை நிலைநாட்டுமா? அல்லது தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கைப் பாதுகாக்குமா? என்பதைப் பார்ப்பதற்கான மற்றுமொரு பரீட்சையாகும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது குறித்து சாணக்கியன் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது, படையினரால் அழைக்கப்பட்டு, தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் முத்தையன்கட்டு ஏரியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் வசிப்பவர்கள் வழங்கிய தகவல்களின்படி, சிதைவுற்ற உலோகப்பொருட்களை எடுத்துச்செல்வதற்காக நான்கு இளைஞர்கள் முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு அவர்கள் தாக்கப்பட்டதாகவும், அங்கிருந்து தப்பிய நால்வரில் ஒருவர் காணாமல்போனதாகவும் அறியமுடிகிறது. அவ்வாறு காணாமல்போன இளைஞரின் சடலம் பின்னர் முத்தையன்கட்டு ஏரியிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதிலும், பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதிலும் தாம் முன்னைய அரசாங்கங்களிலிருந்து எவ்வகையிலும் மாறுபட்டவர்கள் அல்ல என்பதைத் தற்போதைய அரசாங்கம் நிரூபித்துவருகிறது. இச்சம்பவம் தற்போதைய அரசாங்கம் நீதியை நிலைநாட்டுமா? அல்லது தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கைப் பாதுகாக்குமா? என்பதைப் பார்ப்பதற்கான மற்றுமொரு பரீட்சையாகும் எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222201
1 month 2 weeks ago
10 AUG, 2025 | 09:31 AM ஆர்.ராம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவப்பிரசன்னம் அதிகமாகக் காணப்படுவதோடு போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் சிவில் நடைமுறைகளில் இராணுவத் தலையீடு தீவிரமடைந்துள்ளதால் அச்செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் தலைவருமான சிவஞானம் சிறிதரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். வடமாகாண ஆளுநர், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், கரைச்சி மற்றும் பூநகரி பிரதேச செயலாளர் மற்றும் தவிசாளர்கள் ஆகியோருக்கும் குறித்த கடிதம் பிரதியிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போருக்கு முற்பட்ட காலத்தில் கரைச்சிப் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கிளிநொச்சி பொதுநூலகம் பொதுவிளையாட்டு மைதானம் என்பனவற்றுக்குரிய 13.5 ஏக்கர் காணி போருக்குப் பின்னர் இராணுவத்தினரால் முழுமையாக கையகப்படுத்தப்பட்டிருந்தது. இதில் 9 பரப்புக்காணி பொதுநூலகத்துக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த 10வருடங்கால போராட்டத்தின் விளைவாக 5பரப்பு காணி மட்டும் விடுவிக்கப்பட்டு நூலக நிர்மாணத்தின் முதற்கட்டப் பணிகள் முடிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் கிளிநொச்சி மாவட்டத்தின் நகர வடிவமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் பொதுநூலக காணியின் ஒருபகுதி இன்றளவும் இராணுவத்தால் விடுவிக்கப்படாதுள்ளமை தொடர்புடைய தரப்பினரின் திட்டமிடலிலும் செயற்பாடுகளிலும் மாவட்டத்தின் கல்வித்தளத்திலும் பாதகமான தாக்கங்களை உருவாக்கியுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலக வளாகத்தின் ஒருபகுதி இராணுவ முகாமாக உள்ள சமநேரத்தில் கிளிநொச்சி மத்திய கல்லூரியின் பயன்பாட்டுக்கு தேவையான காணியில் இராணுவ நினைவுத்தூபி அமைக்கப்பட்டு இராணுவத்தளமாக எல்லைப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த காணியின் ஒருபகுதியை இலவச இணைதள வலையமைப்பாக பிரகடனப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனைப்பயன்படுத்தி இளைஞர், யுவதிகளை குறித்த பகுதிக்குள் உள்ளீர்ப்பதன் மூலமாக சமூகவிரோதச் செயற்பாடுகளுக்கான பகிரங்க வெளியை ஏற்படுத்தியுள்னனர். 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் நடைபெற்றபோது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கல்வித் திணைக்களங்களின் மேற்பார்வையில் நடாத்தப்பட்டுவந்த முன்பள்ளிகள் இராணுவத்தினரின் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவினரால் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டு அங்கு கற்பிக்கின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் சிவில் பாதுகாப்பு பிரிவின் நிர்வாக ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 303 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 166பேரும், யாழ்ப்பாணத்தில் 12 பேருமாக 481 பேர் இராணுவப்படையணிச் சம்பளத்தைப் பெற்று கடமையாற்றுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நகரிலும், சில கிராமங்களிலும் பொதுப்பயன்பாட்டிடங்களை அண்மித்த பகுதிகளில் உணவகங்களையும் சிகை அலங்கரிப்பு நிலையங்களையும் இராணுவத்தினர் நடாத்திவருகின்றமையானது உள்ளூர் வர்த்தகர்களுக்கு வருமான இழப்பையும் சமூக முரண்நிலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சியின் முதன்மை அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் சுற்றுலாத்தளமான கௌதாரிமுனை கடற்கரைப் பகுதியை கட்டண அறவீட்டுடன் நிருவகிக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றமையானது பொருத்தமற்றதாகும். ஆகவே கிளிநொச்சி மாவட்டத்தின் சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தின் தலையீட்டை உடனடியாக நீக்குவதோடு முன்பள்ளிகளை உடனடியாக மாகாண கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/222194
1 month 2 weeks ago
பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி இந்தி 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஒன்பதாம் நூற்றாண்டில் (கி.பி 850 வாக்கில்) தெற்கு இந்தியாவில் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விஜயாலயச் சோழன் எனும் மன்னர் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். சோழ சாம்ராஜ்ஜியத்திற்கான அடித்தளம் இவ்வாறு தான் நிறுவப்பட்டது. பத்தாம் நூற்றாண்டில் (கிபி 907 ஆம் ஆண்டு) சோழ சாம்ராஜ்ஜியத்தின் முதலாம் பராந்தக மன்னர் அரியணை ஏறி 48 ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் வந்த பலவீனமான மன்னர்களால் சோழ சாம்ராஜ்ஜியம் சரியத் தொடங்கியது. கிபி 985 ஆம் ஆண்டு முதலாம் ராஜராஜ சோழன் அரியணை ஏறியபோது சோழ சாம்ராஜ்ஜியம் மீண்டும் எழத் தொடங்கியது. முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் அவரின் மகன் ராஜேந்திர சோழன் தலைமையில் சோழர்கள், ஆசியாவில் மிகப்பெரிய ராணுவ, பொருளாதார மற்றும் கலாசார சக்தியாக உருவெடுத்தனர். ஒரு காலகட்டத்தில் சோழ சாம்ராஜ்ஜியம் தெற்கில் மாலத்தீவிலிருந்து வடக்கே வங்காளத்தில் கங்கை நதிக்கரை வரை பரவியிருந்தது. ரிச்சர்ட் ஈடன் தனது 'பாரசீக காலத்தில் இந்தியா (India in the Persianate Age)' புத்தகத்தில் சோழர்கள், "தஞ்சையின் மகா சோழர்கள்" என அறியப்பட்டதாக குறிப்பிடுகிறார். "ஒட்டுமொத்த தெற்கு கரை மீதான அவர்களின் கட்டுப்பாடு தற்போதும் கோரமண்டல் என நினைவுகூரப்படுகிறது. சோழமண்டல் என்கிற வார்த்தையின் மறுவிய வடிவம் தான் கோரமண்டல். இது சோழப் பேரரசின் ஆட்சி எல்லையைக் குறிக்கிறது" என எழுதியுள்ளார். ஸ்ரீவிஜய அரசுடனான மோதல் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, நடராஜர் சிலை சோழப் பேரரசின் அடையாளமாக இருந்தது 11 ஆம் நூற்றாண்டில் கெமர் மற்றும் சோழ வணிகர்கள் வங்காள விரிகுடாவின் கரையோரம் அமைந்துள்ள நாடுகளின் பொருளாதாரத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்தனர். தங்கள் இருவரின் நலனும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்துள்ளது என சோழர்களும் கெமர்களும் உணர்ந்தனர். இந்தக் காலகட்டத்தில் கெமர் பேரரசும் மிகப் பெரிதாக, செல்வாக்கு மிக்கதாக இருந்தது. அவர்கள் தற்போதைய கம்போடியா, தாய்லாந்து மற்றும் வியட்நாமின் பல பகுதிகளை ஆட்சி செய்தனர். கம்போடியாவில் உள்ள பிரபலமான அங்கோர்வாட் கோவிலை கெமர் மன்னர்கள் கட்டினர். ஒய் சுப்பராயலு தனது 'சோழர்களின் கீழ் தென்னிந்தியா (South India Under the Cholas)' எனும் புத்தகத்தில், "பல கல்வெட்டுகள் சோழர்கள் மற்றும் கெமர்கள் இடையே நட்புறவு இருந்தையும், 1020 ஆம் ஆண்டில் இருவருக்கும் இடையே ரத்தினங்கள் மற்றும் தங்கரத பரிமாற்றம் இருந்ததையும் குறிப்பிடுகின்றன. அதிகரித்து வந்த ரஷ்ய, சீன மக்கள் தொகை மற்றும் ஆடம்பர பொருட்கள் மீதான அவர்களின் ஈடுபாட்டால் இரு அரசுகளும் பெரிதும் பலனடைந்தன" என எழுதியுள்ளார். இருவருக்கும் இருந்த ஒரே எதிரி - ஸ்ரீவிஜய அரசு தான். பௌத்தர்களான ஸ்ரீவிஜய அரசர்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல துறைமுகங்களை கட்டுப்படுத்தி வந்தனர். சீனா நோக்கிச் சென்ற அனைத்து கப்பல்களுக்கும் அவர்கள் வரி விதித்தனர். வரி செலுத்தாத கப்பல்களை அவர்களின் கப்பற்படை தாக்கி அழித்தது. ஸ்ரீவிஜய அரசின் தோல்வி ஸ்ரீவிஜய அரசர்களின் ராஜாங்கம் சோழ அரசர்களை கோபமடையச் செய்தது. சோழ மன்னர்களுக்கு நட்புறவான செய்திகளை அனுப்பிய அதே வேளையில் தற்போதைய நாகப்பட்டினம் துறைமுகம் இருக்கும் பகுதியில் பௌத்த மடம் கட்டுவதற்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தனர். மறுபுறம், சீன மன்னர்களிடம் சோழர்கள் சிறிய அரசு என்றும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்து வந்தனர். ராஜேந்திர சோழன் 1015-இல் சீனர்களுடன் ராஜாங்க உறவுகளை ஏற்படுத்தினார். அப்போது ஸ்ரீவிஜயர்களின் கொள்கையைப் பற்றி அறிந்த பிறகு விஜயதுங்கவ மன்னரிடம் தனது ராணுவ வலிமையைக் காட்ட முடிவு செய்தார். 1017ஆம் ஆண்டு நடந்த போரில் ராஜேந்திர சோழன் வென்று விஜயதுங்கவர்மனை சிறைபிடித்தார். அதன் பின்னர், ராஜேந்திர சோழனின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு தனது மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்தார் விஜயதுங்கவர்மன். வெற்றிக்குப் பிறகு வன்முறை பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை ஒன்றின் எச்சங்கள் ராஜேந்திர சோழன் ஆசியாவில் மிகப் பிரபலமான நபராக மாறினார். அவர் ராணுவ வெற்றிகளின்போது வன்முறையில் ஈடுபடுவதற்காக அறியப்பட்டார். அவர் போர் விதிகளை மீறுவதாக அவரின் எதிரிகள் குற்றம்சாட்டினர். சாளுக்கியர்கள் உடனான போரில் ஒட்டுமொத்த ராஜ்ஜியத்தையும் அழித்து, "பெண்கள் மற்றும் பிராமணர்களைக் கொல்லவும் தயங்கவில்லை" எனத் தெரிவிக்கப்படுகிறது. அனிருத் கனிசெட்டி தனது 'தென்னிந்தியாவின் தக்காணப் பிரபுக்கள்: சாளுக்கியர்கள் முதல் சோழர்கள் வரை (Lords of the Deccan, Southern India from Chalukyas to Cholas)' எனும் புத்தகத்தில், "இலங்கையின் வரலாற்றிலும் ராஜேந்திர சோழனின் வீரர்கள் கடுமையாக நடந்து கொண்டது பதிவு செய்யப்பட்டுள்ளது" என எழுதியுள்ளார். "அரச குடும்பத்தின் பெண்களை கடத்தி, அனுராதபுரத்தின் அரச கஜானாவை களவாடிச் சென்றனர். இது மட்டுமில்லை பௌத்த மடங்களின் ஸ்துபிக்களை உடைத்து ரத்தினத்தை எடுத்துச் சென்றனர்" என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலத்தீவு ஆக்கிரமிப்பு பட மூலாதாரம், UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான பொலன்னறுவா இலங்கை அரசாங்கம் மற்றும் சோழப் பேரரசின் பழமையான அரச நகரம். 1014-இல் ராஜராஜ சோழனின் மறைவுக்குப் பிறகு ராஜேந்திர சோழன் அரியணை ஏறினார். பாண்டியர்கள் மற்றும் சேரர்கள் உடனான சண்டைக்குப் பிறகு 1017-இல் முதலில் இலங்கையைத் தாக்கினார். இந்தத் தாக்குதலின் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவது அல்ல, மாறாக முடிந்த வரையில் தங்கம் மற்றும் இதர பொக்கிஷங்களை எடுத்து வர வேண்டும் என்பது தான் என அந்த காலத்து கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. எனினும், முடிவில் சோழர்கள் முதல் முறையாக முழு இலங்கைத் தீவையும் கட்டுப்பாட்டில் எடுத்தனர். அதற்கு ஓராண்டு கழித்து 1018-இல் ராஜேந்திர சோழன் மாலத்தீவிற்கும் லட்சத்தீவிற்கும் கடற்படைகளை அனுப்பி அவற்றை சோழ காலனிகளாக மாற்றினார். 1019-இல் வட கர்நாடகா மற்றும் தெற்கு மகாராஷ்டிராவிற்கு ராணுவப் படைகளை அனுப்பினார். 1021-இல் தென்னிந்தியாவின் பெரும்பகுதிகளைக் கட்டுப்படுத்திய சாளுக்கியர்களை வென்றார். கங்கை நீரை தெற்கிற்கு எடுத்துச் சென்றவர் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சோழர்கள் கட்டிய சிவன் கோவில் 1022-இல் தனது பேரரசை 1000 மைல்கள் தாண்டி கங்கையின் கரை மற்றும் அதற்கு அப்பாலும் விரிவுபடுத்தினார். வழியில் ஓடிசா மற்றும் வங்காளத்தின் சக்திவாய்ந்த பால சாம்ராஜ்ஜியத்தின் மன்னரான மகிபாலாவை தனது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வைத்தார். "ராஜேந்திர சோழன் வங்காளத்திலிருந்து மிக விலையுயர்ந்த ரத்தினங்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகள் மற்றும் கலசங்களில் கங்கையின் புனித நீரையும் எடுத்துக் கொண்டு திரும்பினார். இந்த சாதனையின் நினைவாக அவருக்கு 'கங்கை கொண்ட சோழன்' என்கிற பெயர் கிடைத்தது. கங்கை கொண்ட சோழபுரத்தை தனது புதிய தலைநகராக அறிவித்தார். கங்கை கொண்ட என்றால் கங்கையை வென்றவர் என்று பொருள்" என ரிச்சர்ட் ஈடன் எழுதியுள்ளார். புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியரான ரோமிலா தாப்பர் தனது 'ஆதி இந்தியா (Early India)' புத்தகத்தில், "வெற்றிக்குப் பிறகு கங்கை நீரை தெற்கே எடுத்துச் சென்றது வடக்கு மீதான தெற்கின் வெற்றியின் சின்னம்" என எழுதியுள்ளார். சுமத்ராவிற்கு கப்பல் பயணம் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இந்தோனீசியாவில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்பன்னன் கோவில் ராஜேந்திர சோழன் தனது தலைநகரில் சிவனுக்கு ஒரு கோவிலை கட்டினார், இது 250 ஆண்டுகளுக்கும் மேலாக சைவ வழிபாடு மற்றும் சோழ கட்டடக்கலையின் அடையாளமாக திகழ்ந்தது. தலைநகரில் மிகப்பெரிய செயற்கை ஏரி ஒன்றை நிர்மாணித்தார் ராஜேந்திர சோழன். இதன் பரப்பளவு 16 மைகள் நீளமும் 3 மைல்கள் அகலமும் ஆகும். வங்காளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நதி இந்த ஏரியில் ஊற்றப்பட்டது, ஆனால் ராஜேந்திர சோழன் நீண்ட காலம் வடக்கு மீதான தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்த முடியவில்லை. மாலத்தீவு மற்றும் இலங்கை மீதான தனது வெற்றிகளால் குதூகலமடைந்த ராஜேந்திர சோழன் மற்றும் கடல்கடந்த பயணத்திற்கு திட்டமிட்டிருந்தார். இந்த முறை இந்தோனீசியாவில் உள்ள சுமத்ரா தீவுகளுக்கு தன்னுடைய கப்பற்படையை அனுப்பும் எதிர்பாராத முடிவை எடுத்தார். ஸ்ரீவிஜய அரசு மீதான கப்பற்படை வெற்றி பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 'The Golden Road' புத்தகத்தில் வில்லியம் டால்ரிம்பிள், சோழர்களின் வெளிநாட்டு பயணங்கள் பற்றி குறிப்பிடுகிறார். 1017-இல் ராஜேந்திர சோழன் மற்றும் ஸ்ரீவிஜய அரசிற்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ராஜேந்திர சோழனின் கப்பற்படை வென்றது. இது மலேசியாவின் கெடா ("கடாரம்") நகரில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ராஜேந்திரன் 'கெடாவை வென்றவர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். 1025-இல் ராஜேந்திர சோழன் தனது முழு கப்பற்படையையும் ஸ்ரீவிஜய அரசுக்கு எதிராக சண்டையிட அனுப்பினார். பால் முனோஸ் தனது 'ஆதி சாம்ராஜ்ஜியங்கள் (Early Kingdoms)' புத்தகத்தில், "இந்தப் போரில் வெற்றிக்குப் பிறகு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் அங்கோரைச் சேர்ந்த சூர்யவர்ம மன்னர், ராஜேந்திர சோழனுக்கு விலைமதிக்க முடியாத பரிசுகளை வழங்கினார். மிகப்பெரிய கப்பற்படை ஒன்றை அவர் அனுப்பினார். இவை சோழர்களின் முக்கிய துறைமுகமாக விளங்கிய நாகப்பட்டினத்தில் அணி சேர்க்கப்பட்டன" என எழுதியுள்ளார். வில்லியம் டால்ரிம்பிள் தனது 'தங்க சாலை (The Golden Road)' புத்தகத்தில், "இந்தப் போருக்கான வீரர்கள் மற்றும் யானைகளும் கூட கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டன. சோழர்கள் தங்களின் சண்டையை இலங்கையில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து ஆரம்பித்தனர்" என எழுதியுள்ளார். மேலும் அதில், "பல நாட்கள் கடல் பயணத்திற்குப் பிறகு அவர்கள் சுமத்ரா, தகுவா பா என்கிற தாய்லாந்து துறைமுகம் மற்றும் மலேசியாவில் உள்ள கேதா ஆகிய இடங்கள் மீது எதிர்பாரா தாக்குதலை நடத்தினர், அப்போது ஒரு தெற்காசிய அரசால் தங்கள் நாட்டிற்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட நீண்ட தூர ராணுவ நடவடிக்கை ஆகும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வெற்றிகரமான போர்களுக்குப் பிறகு ராஜேந்திரனின் ஆதிக்கம் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவியிருந்தது. இந்த வெற்றியின் பெருமையால் அதன் முழு விவரங்களை தஞ்சையில் உள்ள கோவில் சுவற்றில் 1027 ஆம் ஆண்டு எழுதினார். விஜய் மற்றும் சங்கீதா சகுஜா தங்களின் 'ராஜேந்திர சோழன், தென்கிழக்கு ஆசியாவிற்கான முதல் கடல் பயணம் (Rajendra Chola, First Naval Expedition to South-East Asia)' எனும் புத்தகத்தில், "இந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு இடங்களில் நான்கு சுமத்ராவிலும், ஒன்று மலாய் தீபகற்பத்திலும் ஒன்று நிகோபார் தீவுகளிலும் உள்ளது" என எழுதியுள்ளார். அதில், "ராஜேந்திர சோழன் இன்று சிங்கப்பூர் என அழைக்கப்படும் இடத்தை கடந்து சென்றிருப்பது சாத்தியமே. இதற்கு காரணம் அங்கும் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அதில் ராஜேந்திர சோழனின் பல்வேறு பெயர்களில் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர். சீனாவுடன் நெருங்கிய உறவு பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. தெற்கிழக்காசியாவில் கடல் வழியாக ராஜேந்திர சோழன் நுழைந்ததன் நோக்கம் வெற்றி பெறுவது மட்டுமல்ல, ஒரு வர்த்தகப் போரில் ராணுவ பலத்தைப் பயன்படுத்தி கடல் வழித்தடங்களில் ஸ்ரீவிஜய அரசின் பிடியை வலுவிழக்கச் செய்வதே ஆகும் என வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். கென்னத் ஹால் எழுதிய 'Khmer Commercial Development and Foreign Contacts under Suryavarman I' எனும் புத்தகத்தில், "இந்தப் பயணங்களில் முக்கியமான நோக்கம் என்பது சீனா உடன் மிகவும் லாபகரமான வர்த்தகப் பாதையை உருவாக்குவது ஆகும். அந்த காலகட்டத்தில் மிளகு, மசாலா மற்றும் பருத்திக்கு சீனாவில் பெரிய அளவில் தேவை இருந்தது. இவற்றை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அளவில் லாபம் சம்பாதிக்க முடியும் என சோழர்கள் நம்பினர்" என எழுதியுள்ளனர். ஸ்ரீவிஜயர்களை தற்காப்பு நிலைப்பாட்டை எடுக்க கட்டாயப்படுத்திய பிறகு, ராஜேந்திர சோழன் சீனாவுக்கு தனது தூதுக்குழுவை அனுப்பினார். சீன பேரரசருக்கு தந்தம், முத்துகள், பன்னீர், காண்டாமிருகக் கொம்புகள் மற்றும் பட்டு ஆடைகள் போன்ற விலையுயர்ந்த பரிசுகளை எடுத்துச் சென்றார். அதற்குச் சில நாட்கள் கழித்து சீனாவின் குவான்சூ நகரில் கோவில் ஒன்று கட்டப்பட்டது. அதன் சில பகுதிகள் தற்போதும் உள்ளன. ஜான் கை தனது, 'தமிழ் வணிகர்களும் இந்து-பௌத்த புலம்பெயர்ந்தோரும் (Tamil Merchants and the Hindu-Buddhist Diaspora)" எனும் புத்தகத்தில், "1067-69 காலகட்டத்தில் சோழ இளவரசர் திவாகரன் சீனாவில் உள்ள கோவில்களை பராமரிக்க நிதிகள் வழங்கினார் என ஒரு சீன கல்வெட்டு குறிப்பிடுகிறது" என எழுதியுள்ளார். தமிழ் வணிகர்கள் சீனாவிலிருந்து கோரமண்டல் துறைமுகங்களுக்கு நறுமணக் கட்டைகள் (சந்தனக்கட்டை), தூபம், கற்பூரம், முத்துக்கள், பீங்கான் மற்றும் தங்கம் அடங்கிய கப்பல்களைக் கொண்டு வந்தனர். கெமர் பேரரசு உடனான உறவுகள் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சோழ மற்றும் கெமர் சாம்ராஜ்ஜியங்கள் இடையேயான ஒத்துழைப்பின் அடையாளமாக அங்கோர் வாட் கோவில் உள்ளது. ராஜேந்திர சோழனின் காலகட்டத்தில் சோழ மற்றும் கெமர் சாம்ராஜ்ஜியங்கள் இடையேயான ஒத்துழைப்பு, உலகின் மிகப்பெரிய அங்கோர்வாட் கோவில் கட்டுமானத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த விஷ்ணு கோவில் தற்போதும் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தஞ்சையிலும் சிதம்பரத்திலும் கோவில்கள் கட்டப்பட்ட அதே காலகட்டத்தில் தான் இந்தக் கோவிலும் கட்டப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின் இரு சக்தி வாய்ந்த மன்னர்கள் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர். சிறந்த போர் வீரர் என்பதோடு, சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தார் ராஜேந்திர சோழன். பல கிராமங்களில் பல உயர்தர குருகுலங்களை நிறுவினார். இங்கு மாணவர்களுக்கு சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழி கற்பிக்கப்பட்டது. தஞ்சாவூர் தவிர்த்து ஸ்ரீரங்கம், மதுரை, ராமேஸ்வரம் உட்பட பல பிரம்மாண்டமான கோவில்களை அவர் கட்டினார். அவை இன்றளவும் கட்டடக்கலைக்குச் சான்றாகப் பார்க்கப்படுகின்றன. ராஜேந்திர சோழன் கடலை மட்டுமல்ல மக்களின் மனங்களையும் வென்றவர் எனக் கூறப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj4werp9lj2o
1 month 2 weeks ago
10 AUG, 2025 | 10:09 AM நெடுந்தீவுக்கான போக்குவரத்து இடர்பாடுகளை குறைக்கும் முகமாக திங்கட்கிழமை (04) முதல் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையேயான படகுகள் சேவை பரீட்சார்த்தமாக அதிகரிக்கப்படுகின்றது. நெடுந்தீவுக்கான அதிகரித்த பயணிகள் மற்றும் சேவையில் ஈடுபட போதுமான படகுகள் இன்மை காரணமாக நெடுந்தீவுக்கு பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது. இதற்கமைய சனிக்கிழமை (09) குறிகட்டுவான் இறங்குதுறையில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர், நெடுந்தீவு பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இம்முடிவு எட்டப்பட்டது. இதற்கமைய திங்கட்கிழமை காலை 6.15 மணிக்கு முதலாவது படகும் 6.45 க்கு இரண்டாவது படகும் நெடுந்தீவிலிருந்து புறப்பட்டு மீளவும் முறையே 7.30 மணிக்கும் 8.30 மணிக்கும் குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கியும் பயணிக்கும். அதேபோன்று மாலை 2.30 மணிக்கும் 3.30 மணிக்கும் நெடுந்தீவிலிருந்து படகுகள் புறப்பட்டு குறிகாட்டுவனை வந்தடைந்து, குறிகாட்டுவானில் இருந்து மீளவும் 4.00 மணிக்கும் 4.45 மணிக்கும் புறப்பட்டு நெடுந்தீவை சென்றடைய கூடியவாறு படகு சேவைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/222202
1 month 2 weeks ago
அன்பும் நன்றியும் 🙏
1 month 2 weeks ago
புங்குடுதீவில் அநாதரவாக கரையொதுங்கிய படகு – தீவிர விசாரணை written by admin August 9, 2025 யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் ஆட்களற்ற நிலையில் மீன்பிடி படகொன்று இன்றைய தினம் சனிக்கிழமை இரவு 07 மணியளவில் கரையொதுங்கியுள்ளது. ஆட்களற்ற நிலையில் , படகினுள் மீன் பிடி வலைகளுடன் படகு கரையொதுங்கிய நிலையில் , சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, படகு தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். https://globaltamilnews.net/2025/219042/
1 month 2 weeks ago
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -1 கார்த்திக் டிசம்பர் 22, 2024 மூலம் : யமுனா ஹர்ஷவர்த்தனா தமிழாக்கம் : கார்த்திக் திருமதி. யமுனா ஹர்ஷவர்த்தனா அவர்கள் எழுதி கிரி ட்ரேடிங் நிறுவனம் வெளியிட்ட ” Once upon a Time Thousands of years ago “ என்ற ஆங்கில புத்தகத்தின் மொழிபெயர்ப்பு இது. மஹாபாரத கதைகளின் தொகுப்பே இந்த நூல். ஆனை முகத்தோனுடன் ஓர் ஒப்பந்தம் உலகின் தலைச்சிறந்த காவியத்தை எழுதுவதற்கான நேரம் அது , வரலாற்றை சந்ததியருக்காக ஆவணப்படுத்தப்பட வேண்டிய நேரம். மீனவப் பெண்ணான சத்யவதிக்கும், பராசர முனிவருக்கும் பிறந்த கரிய நிறத்தை கொண்ட ரிஷி கிருஷ்ண த்வைபாயனா அந்தப் பொறுப்பை தனதாக்கிக் கொண்டார். பரந்த வேதங்களை படிப்பதற்கும் அடுத்த தலைமுறைகளுக்கு தொகுத்து வழங்கவும் வசதியாக தொகுத்து மூன்றாக வகைப்படுத்தியதால் வேத வியாசர் என்றழைக்கப்படும் கிருஷ்ண த்வைபாயனா இந்த மிகப் பெரிய வேலையை எப்படி செய்து முடிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தார். வரலாறு மிக நீண்டதாக ஐந்து தலைமுறைகளை உள்ளடக்கியதாக இருந்தது;விவரிப்பு மிக கடினமானதாக நூற்றுக்கணக்கான நபர்கள் மிக முக்கிய பாத்திரங்களில் கொண்டதாகவும் இருந்தது. கதாபாத்திரங்களின் உளவியல், சூழ்நிலைகளின் உளவியல் ; விவரிப்பின் மூலம் சொல்லப்படவேண்டிய சூழ்நிலைகள் என அவர் முன் இருந்த பணி கடினமாய் இருந்தது. கதை விவரிப்பு சுருக்கமாய் கச்சிதமாய் இருக்க வேண்டும். அதே நேரத்தில் எதையும் விட்டுவிடக்கூடாது. ஏனெனில், இந்த காவியம் , மனிதர்களை என்றும் வழிநடத்தக் கூடியது , இந்தக் காவியத்தில் இருக்கும் எண்ணற்ற பாத்திரங்களின் மூலம் ஒவ்வொருவரும் தன்னை மீட்டெடுப்பர், இந்த கதை, ஒருவரின் வாழ்வின் பாதையையே மாற்றக் கூடிய ஒன்றாகும். முன்னிருந்த வேலை கடினமானது. மீண்டும் நினைவுப்படுத்தி, நியாயப்படுத்தி தொகுத்து அதை எழுதுவது என்பது மனிதனால் ஆகக் கூடிய விஷயமில்லை என்பது வியாசருக்கு தெரியும். எனவே தெய்வத்தின் உதவியை நாட முடிவு செய்து ஆனைமுகனை பிரார்த்தித்தார். ” கணேசா ! பிரணவ வடிவானவனே ! என்னுடைய தாழ்மையான வணக்கங்களை ஏற்றுக்கொள். மனிதகுலத்தின் நன்மைக்காக , மஹாபாரதம் எழுதப்பட்டு காப்பற்றப்படவேண்டியது நம்மின் கடமையாகும். இதற்காய் , உன் உதவி வேண்டி வந்துள்ளேன். கருணை வடிவானவனே ! மஹாபாரதம் எழுத ஒப்புக் கொண்டு என்னை சிறப்பிப்பாயாக…” “வ்யாஸா ! நீ என்னிடம் இந்த உதவி கேட்டதற்கு நான் மிகவும் மகிழ்கிறேன். ஆனால்,எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும், உன் குடும்பக் கதையை உன்னருகில் உட்கார்ந்து நீ சொல்வதாய் என்னால் காத்திருக்க இயலாது, எனக்கு அவ்வளவு நேரமும் இல்லை ” என்றார் கணேசர். சிறிதும் இடைவெளி இன்றி கதையை சொல்லி செல்ல இயலாது. ஏனெனில் வரிகளை யோசிக்க அவருக்கு நேரம் வேண்டும் என வியாசர் அறிவார். விக்னேஸ்வரன்* மிகக் கடினமான நிறைவேற்றுவதற்கு கடினமான நிபந்தனையை விதிக்கிறார் என்பதையும் வியாசர் அறிவார். ஆனால் பல வருட தவத்தின் பயனாக கிடைத்த இந்த வாய்ப்பை வீணடிக்க அவர் விரும்பவில்லை. எனவே அவர் விநாயகரிடம் வேண்டினார், ஞான ஸ்வரூபனே நீ இல்லாமல் உலகில் ஞானம் என்பது இல்லாமல் போய்விடும். உங்கள் ஞானத்தின் உதவியால் நான் வரிகளை தொகுத்து சொல்கிறேன். இந்த எளியவன் சொல்வதை நீங்கள் புரிந்து கொண்டு எழுதும் வரையில் நான் இடையில் நிறுத்த மாட்டேன் என உறுதி அளிக்கிறேன். கஜானனர் இதற்கு ஒத்துக்கொண்டார். வியாசர் சொல்ல சொல்ல, அவர் தந்தத்தை ஒடித்து அதை எழுதுகோலாகக் கொண்டு பனை ஓலைச் சுவடிகளில் எழுதத் துவங்கினார். இடையில் வியாசர் கொஞ்சம் கடினமான வரிகளைக் கோர்த்து தர அதை புரிந்து கொண்டு விநாயகர் எழுத ஆகும் இடைவெளியில் அடுத்த அடுத்த வரிகளை அமைத்துக் கொள்ள வியாசருக்கு உதவியது. இதைப் புரிந்து கொண்ட விநாயகரும் சிரித்துக் கொண்டே எழுதினார். நாம் இன்று படித்து, கேட்டு கற்று மகிழும் மஹாபாரதம் இந்த விதமாகத்தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வியாசர் மூஷிக வாகனனுக்கு சொல்லி எழுதப்பட்டது. ஞானத்தின் அதிபதி மற்றும் வேதத்தை தொகுத்த ரிஷியின் இந்த கூட்டணி நமக்குள் ஒத்துழைப்பு மற்றும் இரக்கத்தின் விதைகளை தூவட்டும். மிக சரியான மனிதர் அக்காலத்தில் முனிவர்கள் எல்லோரும் கடுமையான தவங்கள் மூலம் மிக பெரிய பேறு அடைய விரும்பி தவம் இருந்தனர். ஆனால் ஒருவர் மட்டும் பிறக்கும் பொழுதே எல்லாவகையிலும் சிறந்தவராக பிறந்தார் , சுகர், வியாசரின் மகனான இவர் பிறப்பிலேயே பிரம்மத்தை பற்றிய ரகசியத்தை அறிந்திருந்ததால் சுக ப்ரம்ம ரிஷி என அழைக்கப்பட்டார். ஒருநாள் , உலகத்தின் அறிவு பொக்கிஷத்தை காப்பாற்ற தனக்கொரு மகன் வேண்டுமென உணர்ந்த வியாஸர் சிவனை நோக்கி தவமிருக்கத் துவங்கினார். அதே சமயத்தில் விண்ணுலகத்தில் இருந்து ஓர் கிளி அங்கே பறக்க அதை அவர் பார்த்தார். அதன் மூலம் அக்கிளி , மிக அழகான அதே சமயம் தெய்வீக களைப் பொருந்திய ஒரு குழந்தையை தந்தது. அந்தக் குழந்தை சுக தேவர், கிளிகளின் கடவுள் என அழைக்கப்பட்டது. சுகருக்கு , வியாஸர் வேதங்களையும் மற்ற விஷயங்களையும் கற்றுத் தர துவங்கினார். மிகக் குறுகிய காலத்திலேயே அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார் சுகர். மகனை, தந்தையே பரிட்சித்து சான்று அளிக்க முடியாத காரணத்தால், மிதிலையின் அரசராக இருந்த ஜனகரிடம் 1 அவரை அனுப்பி வைத்தார் வியாசர் . சுகர் வரப்போவதை முன்பே தனது ஞான திருஷ்டியால் அறிந்த ஜனகர், தனது கோட்டை காவலாளிகளை அழைத்து, அவர் சொல்லும் வரை சுகரை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என கட்டளையிட்டார். அதேபோல், கோட்டை வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்ட சுக ப்ரம்ம ரிஷியும், மூன்று நாட்கள், உணவையோ, சொட்டு நீரோ மற்றும் துறக்கமோ இன்றி காத்திருந்தார். நான்காம் நாள், ஜனகரே கோட்டை வாயிலுக்கு வந்து பிரம்மாண்ட ஊர்வலமாய் அவரை அழைத்து சென்றார். உள்ளே அழைத்து வரப்பட்ட சுக பிரம்மத்தை சிறந்த அழகிகள் குளிப்பாட்டி அவருக்கு அறுசுவை விருந்தும் அளித்தனர். இவை எதையும் சிந்தையில் கொள்ளாத இளம் ரிஷி தனக்களிக்கப்பட்ட விருந்தை ஏற்றுக்கொண்டார். இதை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ஜனகர் ” மகனே ! இப்பொழுது என்னுடன்அரசவைக்கு வருவாயாக ! ” என அழைத்தார். ஜனகரின் அரசவை வளர்ந்து வரும் நாட்டின் வளர்ச்சியை பிரதிபலிப்பது போல் இருந்தது. மிக அழகான நாட்டியப் பெண்மணிகள் நாட்டியமாடிக் கொண்டும் அருமையான பாடல்களைப் பாடிக்கொண்டும் இருந்தனர். அரசர் , சுகர் கையில் ஒரு கிண்ணத்தைக் கொடுத்து அதன் விளிம்பு வரை எண்ணையை ஊற்றி , அரசவையை சுற்றி வந்து அங்கிருந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய சொன்னார். அமைதியாக , அந்த கிண்ணத்தை கையில் ஏந்தி ஒரு சொட்டு எண்ணையும் சிந்தாமல் சென்று அங்கிருந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். அதைக் கண்டு மகிழ்ந்த ஜனகர் , சுகரை கட்டியணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ” என்னருமை மகனே ! இனி நீ கற்பதற்கு என்ன உள்ளது ? கஷ்டங்களோ , அரண்மனையின் செல்வச்செழிப்போ இல்லை உணர்வுகளை தூண்டு விஷயங்களோ உன்னை தீண்டவில்லை. நீ ஏற்கனவே ஒரு ப்ரம்மஞானி2 ” எனக் கூறினார். சுகர் எப்பொழுதும் இந்த உலக பிரஞை அற்று இருந்ததால் அவரை வியாசர் மிக கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. ஒருமுறை சுகர் ஆற்றங்கரையோரம் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். வியாசரும் அவரை பின்பற்றி சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது அங்கு சில இளம் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். சுகர் சென்றபொழுது அவர்கள் நாணம் அடையவில்லை. மாறாக அவர்கள் தங்கள் குளியலை தொடர்ந்தனர். ஆனால், அவரை தொடர்ந்து வியாசர் வந்தபொழுது , அவர்கள் உடனடியாக குளத்தில் மூழ்கி தங்களை மறைத்துக் கொண்டனர். இதைக் கண்ட ரிஷி ஆச்சர்யம் அடைந்து ”அழகான இளம் வாலிபன் நிர்வாணமாக நடந்தது உங்கள் உணர்வுகளை சீண்டவில்லை. ஆனால் முழுவதும் உடையணிந்த வயோதிகனான நான் வரும்பொழுது , வெட்கம் கொண்டு உங்களை மறைத்துக் கொண்டீர்களே.. இதற்கு விளக்கம் அளிக்க இயலுமா ” என வினவினார். அதற்கு அவர்கள் ” தவ ஸ்ரேஷ்டரே ! அவர் முழு ஞானம் அடைந்தவர் . ஆண் பெண் பாலின பேதத்தை கடந்து விட்டார். ஆனால் தாங்கள் அப்படி இல்லையே ! நாங்கள் எவ்வாறு வெட்கம் கொள்ளாமல் இருக்க இயலும் ” என பதில் உரைத்தனர். சுகர்தான், பின்பு மஹாபாரத்தையும் , ஸ்ரீமத் பாகவதத்தையும் உலகிற்கு பரப்பினார். இவ்வுலகிற்கு தேவையான ஞானத்தை காத்து மற்றவர்களுக்கு அளித்தார். ஜனகர் : சீதையின் தந்தை அல்ல. அவ்வம்சத்தில் வந்த அனைவருக்கும் இந்த பட்டம் உண்டு. எனவே இவர் அவ்வம்சத்தில் வந்த மற்றொரு அரசர் ப்ரம்மஞானி : பிரம்மத்தை கற்றறிந்தவர். சஞ்சீவனி – உயிர் தரும் மந்திரம் இது பாண்டவ / கௌரவர்களின் காலத்திற்கு மிக முன்னால் நடைபெற்ற ஒரு சம்பவம் ஆகும். தேவர்களும் அசுரர்களும் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தனர். அப்போரில் அசுரர்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்றுக் கொண்டே வந்தனர். காரணம், அவர்களுடைய குரு சுக்ராச்சாரியாருக்கு இறந்த உயிர்களை மீட்டுத் தரும் சஞ்சீவனி மந்திரம் தெரிந்திருந்தது. அந்த மந்திரம் அறிந்தாலொழிய இப்போரில் வெற்றி பெறுவது என்பது இயலாது என்பதை அறிந்த தேவர்கள் பலத்த ஆலோசனைக்குப் பிறகு அவர்கள் குரு பிரகஸ்பதியின் மகன் கசன் என்பவனை சுக்ராச்சாரியாரிடம் அனுப்பி இம்மந்திரத்தை கற்று வரக் கூறினர். கசன், சுக்ராச்சாரியாரை அணுகி தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ள கேட்டுக் கொண்டான். பிரகஸ்பதியின் மேல் இருந்த மரியாதை மற்றும் கசனின் பணிவான நடவடிக்கையின் காரணமாய் அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டார் சுக்ராச்சாரியார். ஒரு சீடனாய் தன் கடமைகளை சுக்ராச்சாரியாரின் விருப்பத்திற்கேற்ப செய்து வந்தான். நாளடைவில் அவரது மகள் தேவயானிக்கும் மிக நெருக்கமாகிவிட்டான் கசன். வஞ்சக எண்ணம் கொண்ட அசுரர்கள் கசனின் நோக்கத்தை சந்தேகிக்க துவங்கினர். அதனால் சுக்ராச்சாரியார் அறியாமல் அவனை கொல்லவும் முடிவெடுத்தனர். ஒருநாள், அவனை கடத்தி சென்று கடலில் மூழ்கடித்து அவனது பிணத்தை சுக்ராச்சாரியார் முன் கொண்டுவந்து கிடத்தினர். அவர் கேட்டபொழுது எதோ ஒரு காரணம் சொல்லப்பட்டது. ஆனாலும் அவர்களது கெட்ட எண்ணத்தை அறிந்து கொண்ட சுக்ராச்சாரியார், சஞ்சீவனி மந்திரம் ஜெபித்து அவனை உயிர்ப்பித்தார். அடுத்த முறை அவனை கொன்று அவனது உடலை நாய்க்கு உணவாக இட்டனர் அசுரர்கள். இதை அறிந்த தேவயானி, சுக்ராச்சாரியாரிடம் முறையிட, மீண்டும் அவர் சஞ்சீவனி மந்திரம் ஜெபித்தார். இம்முறை நாயின் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளிவந்தான் கசன். மூன்றாம் முறை அசுரர் அவனை மரத்தில் கட்டி வைத்து உயிருடன் எரித்தனர். பின்பு அந்த சாம்பலை, மதுவில் கலந்து சுக்ராச்சாரியாருக்கு அளித்தனர். அதை குடித்தப்பின் தான், நடந்ததை உணர்ந்தார். இப்பொழுது அவருக்கு தேவர்களின் தந்திரமும் புரிந்தது. சாம்பலாய் மதுவில் கலந்து அவரது வயிற்றில் இருந்த கசனுக்கு அவர் சஞ்சீவனி மந்திரத்தை போதித்தார்.பின் கீழே படுத்து அவர் அம்மந்திரத்தை ஜபிக்க , அவரது வயிற்றை கிழித்துக் கொண்டு உயிர் பெற்று வந்தான் கசன். அவனது குணத்திற்கு , அவனை உயிர் பெற்றவுடன் முதல் காரியமாய், அவனை உயிர்ப்பித்த குருவை சஞ்சீவனி மாத்திரம் ஜபித்து உயிர்பித்தான். பின்பு தேவர்களிடம் சென்று சேர்ந்தான். இதன் பின், சுக்ராச்சரியாரின் சாபத்தால் மது அருந்துபவர்கள் அவர் பட்ட கஷ்டம் போலவே அனுபவிப்பார்கள். சுக்ராச்சாரியாரின் உதிரத்தில் உயிர்பித்ததால், கசன் தேவயானிக்கு சகோதரன் முறை ஆகிவிட்டான். எனவே அவனை விடுத்து யயாதி என்ற மன்னனை மணமுடித்தாள் தேவயானி. இந்த யயாதியே பாண்டவர் / கௌவரவர்களுக்கு முன்னோடி ஆவான். https://solvanam.com/2024/12/22/பல்லாயிரம்-ஆண்டுகளுக்கு/
1 month 2 weeks ago
வன்னித்தம்பிரான் வழிபாடு தி. செல்வமனோகரன் அறிமுகம் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த ஆதிகாலத்தில் இருந்து விவசாயமும் கால்நடை வளர்ப்பும் மனிதர்களின் முக்கிய தொழில்களாக இருந்து வருகின்றன. குறிப்பாகத் தமிழகச் சூழலில் உருவான திணைக்குடிகள் இதற்குச் சான்றாகின்றன. வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம்; அதுவே விவசாயத்தின் பூர்வீகம் என்று கூறப்பட்டாலும் முல்லை நிலமும் குறிஞ்சியும் கூட குறித்த காலகட்டத்தின் பின் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டன. விவசாயமும் கால்நடை வளர்ப்பும் தவிர்க்க முடியாத தொழில்சார் இணங்கு முறையை உடையன என்பது முக்கிய விடயமாகிறது. தமிழகத்து முல்லை நிலம் காடுகளை, அவற்றை ஒட்டியமைந்த மேய்ச்சல் நிலப் பகுதிகளைக் கொண்டவை; கால்நடை வளர்ப்புக்கு உகந்தவை. காலப்போக்கில் சிறுவேளாண்மை நிலங்கள் உற்பவிக்கப்பட்டன. வரகு, தினை முதலான தானியங்கள் நிறைவாக உற்பத்தி செய்யப்பட்டன என கலித்தொகை (53: 22: 108:3) பல இடங்களில் எடுத்துரைக்கிறது. எருது வளர்ப்பவர்கள் அண்டர்கள் எனப்பட்டனர் (குறுந்தொகை 117:3). ஆயர் எனப்படுவோர் கோட்டினத்தாயர் (எருமை வளர்ப்பவர்), கோவினத்தாயர் (பசு வளர்ப்போர்), புல்லினத்தாயர் (ஆட்டிடையர்) என வகைப்பட்டிருந்தனர். இடையர் பல வகையினராக இருந்தனர் (குடவர், கோவலர், பூழியர், பொதுவர்). விவசாயம், கால்நடை இணைந்த வாழ்வு திணை மரபில் இருந்து மாறிய புதுவாழ்வை அளித்தது. பிற்கால இந்தியக் கால்நடை வளர்ப்போர் மேய்ச்சல் நிலம் தேடி இடம் பெயர்ந்து சென்றனர் எனவும் அதில் ஒரு பகுதியினர் இலங்கையினை வந்தடைந்து வாழ்ந்தனர் எனவும் கருதப்படுகிறது. மனிதர், வேட்டையாடல் – உணவுதிரட்டல் வாழ்க்கைமுறையில் இருந்து வேளாண்மை சார் வாழ்க்கைமுறைக்கு மாறியபோது, அனைத்துத் தொல்பண்பாடுகளிலும் வழக்கில் வந்த கால்நடைகளை வளர்த்தல், பேணுதல், உணவாகப் (இறைச்சி) பயன்படுத்தல் ஆகிய செயல்முறைகளின் கூட்டுத்தொழில் கால்நடை வளர்ப்பு எனப்பட்டது. இது வேளாண்மையின் துணைத்தொழிலாகிவிட்டது. கால்நடை வளர்ப்பானது, பண்பாட்டுக்குப் பண்பாடு, காலத்துக்குக் காலம் மாறிவருவதோடு, தனித்துவமான பண்பாட்டு, பொருளியல் பாத்திரத்தையும் வகிக்கிறது. எது எவ்வாறாயினும் கால்நடை வளர்ப்போரை இடையராகவோ, ஆயராகவோ கருதும் நிலை மாறியது. அது விவசாய நிலம் சார் மக்களின் தொழிலாயிற்று. பெருங்குடி வேளாளர், சிறுகுடி வேளாளர்களின் தொழிலாயிற்று. காலனிய காலத்தில் எல்லா மக்களும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டனர். ஆயினும் ‘பட்டி’ வளர்ப்பு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தாரால் தான் இன்றுவரை மேற்கொள்ளப்படுகிறது. மாடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்லும் சிறுகுடி வேளாளர் மாடு வழி தவறிச் செல்லாதிருக்கவும், நோய் நொடியின்றி பட்டி பெருகவும் பல தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளனர். பிராந்திய அடிப்படையில் வெவ்வேறு பெயர்கள், வெவ்வேறு வழிபாட்டு முறைகள் காணப்படினும் அவற்றின் அடிக்கட்டுமானம் ஒன்றாக இருப்பதைக் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக சிறுகுடி வேளாளரின் பொதுநிலைத் தெய்வமாக அண்ணமார் காணப்படுகிறார். அவருக்குப் ‘பொல்லு’ வைத்து (தடி) வழிபடும் மரபே காணப்படுகிறது. அதையொத்து பூநகரிப் பிராந்தியத்தில் வழிபடப்படும் குறிப்பன் துவரந்தடி (பொல்லு) வைத்தே வழிபடப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கால்நடை வளர்ப்பாளர்களின் நம்பிக்கை மிகுந்த இன்னொரு தெய்வமாக வன்னித் தம்பிரான் என்கின்ற வன்னித்தெய்வம் விளங்குகிறது. இதேபோல மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வதனமார், குமாரர், முன்னடித் தம்பிரான் வழிபாடுகளும் காணப்படுகின்றன. இந்த ஆய்வுக்காக திருகோணமலையில் இத்தெய்வம் பற்றிய தரவுகளை நேரே சென்று திரட்ட திசானி, டிலக்சனா, கஸ்தூரி ஆகியோர் உதவினர். அதேபோல முல்லைத்தீவில் அபிஷேகன், கனுசியா போன்றோரின் உதவி கிடைத்தது. வன்னித்தம்பிரான் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த வதனமார்களில் ஒருவரான வன்னித் தம்பியே வன்னித் தம்பிரான் என வழங்கப்படுவதாக அறியமுடிகிறது. வேளாள சமூகத்தின் ‘வன்னியர்’ தெய்வ வழிபாடு இலங்கையின் பல பாகங்களிலும் காணப்படுகிறது. அவ்வழிபாடும் இவ்வன்னித் தம்பிரான் வழிபாடும் ஒன்றா என்பதைச் சரிவர அறியமுடியவில்லை. தம்பிரான் என்பதற்கு பெரியவர், தலைவர், மதிப்பிற்குரியவர் என்ற பொருள்கள் உண்டு (உதாரணம் பெரியதம்பிரான், நாகதம்பிரான்). வன்னியர்களின் தலைவனாகவோ அல்லது வன்னியர்களின் வழிவந்த வழிபடு தெய்வமாகவோ வன்னித்தம்பிரான் வழிபாடு வந்திருக்கலாம். 1) வதனமார்களும் வன்னித் தம்பிரானும் ‘வதனமார் குழுமாடு கட்டு அகவல்’ எனும் நூலில் (ஈழத்துப் பூராடனார்: 2000) “சுவாதியம்மனின் மகனார் மங்கலனார், வதனமார் பதின்மரோடும் யானை, காலி (குழுமாடு/ குழுவன்) பிடிக்கின்ற செயலுக்காய் வில்லம்பு, செல்லை, வெளுக்கயிறு, கோடாலி, கிருசவடி, மேல்வளைந்த கோடரி (கோடரி), எல்லையில்லாப் பொல்லு என்பவற்றை எடுத்துக்கொண்டு, அவர்களது நாடான அயோத்தியில் இருந்து புறப்பட்டு ‘இராவணனாராண்ட’ இலங்கையை வந்தடைந்தனர்” எனக் கூறப்படுகின்றது. அவர்களுள் ஒருவரே வன்னித் தம்பிரான் என கிழக்கிலங்கை மக்களால் நம்பப்படுகிறது. 2) மாருதப்புரவீகவல்லியும் வன்னித்தம்பிரானும் தமிழ்நாட்டிலிருந்து மாருதப்புரவீகவல்லி என்னும் இளவரசி, தன்னைப் பீடித்திருந்த நோயைத் தீர்ப்பதற்காக இலங்கையின் வடபகுதிக்கு வந்தார். அந்நோய் தீர்ந்தபின், வன்னி என அழைக்கப்படும் அடங்காப்பற்றுப் பகுதியை ஆண்டுவந்த உக்கிரசிங்கசேனன் என்பவரை மணந்து இலங்கையிலேயே தங்கிவிட்டார். வையாபாடல், இவர்களுக்குப் பிறந்த மகனின் திருமணத்துக்காக, மதுராபுரியில் இருந்து பெண் ஒருவரை அழைத்துவந்தபோது, அவளுடன் 60 வன்னியர்கள் வந்ததாகக் கூறுகின்றது. இவர்கள் அடங்காப்பற்றுக்கு அனுப்பப்பட்டு அப்பகுதிக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டபோது இலங்கைக்கு மேலும் பல வன்னியர்களை இவர்கள் அழைத்து வந்துள்ளனர். முல்லைத்தீவில் குடியேறிய முல்லை மாலாணன், சிவலை மாலாணன், சருகி மாலாணன், வாட்சிங்கராட்சி போன்ற வன்னியர்களின் பெயர்கள் வையாபாடலில் கூறப்பட்டுள்ளன. வன்னி – அடங்காப்பற்றின் பூர்வகுடிகளினால் ஏற்பட்டு வந்த தொல்லைகளின் காரணமாக, அவர்களை அடக்குவதற்காகவும், தமிழ்நாட்டிலிருந்து பல வன்னியர்கள் அங்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். வையாபாடலில், ‘கறுத்தவராயசிங்கம், தில்லி, திடவீரசிங்கன், குடைகாத்தான், முடிகாத்தான், வாகுதேவன், மாதேவன், இராசசிங்கன், இளஞ்சிங்கவாகு, சோதையன், அங்கசிங்கன், கட்டையர், காலிங்கராசன், சுபதிட்டன், கேப்பையினார், யாப்பையினார், ஊமைச்சியார், சோதிவீரன், சொக்கநாதன், இளஞ்சிங்கமாப்பாணன், நல்லதேவன், மாப்பாணதேவன், வீரவாகு, தானத்தார், வரிப்பத்தார்’ ஆகிய 24 பேர் அழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் பளை, கரைப்பற்று, கச்சாய், கருவாட்டுக்கேணி, கட்டுக்குளம் போன்ற இடங்களில் குடியேற, வேறு பலர் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டப் பகுதிகளிலும் குடியேறினர். யாழ்ப்பாணத்திலும் சிலர் குடியேறினர். இன்னும் சில வன்னியர் கணுக்கேணி, முல்லைத்தீவு, தனிக்கல்லு, கிழக்குமூலை, மேற்குமூலை ஆகிய இடங்களில் ஆட்சிசெலுத்தி வந்த பல்வேறு பூர்வகுடிச் சாதியினரைத் தோற்கடித்து, அப்பகுதிகளைத் தாங்களே ஆண்டு வந்துள்ளனர். 3) திருகோணமலையில் வன்னித் தம்பிரான் பற்றிய கதைகள் வதனமார் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்ததாகவும் இலங்கையில் திருகோணமலையில் முதலில் இறங்கியதாகவும் சொல்லப்படும் அதேவேளை, இவர்களின் பொழுதுபோக்காக யானை, குதிரைகளை அடக்குதல் என்பன இருந்து வந்துள்ளன. அவர்களில் மொத்தமாக ஏழு பேர் இருந்துள்ளனர். அவர்களில் வன்னித்தம்பி என்ற ஒருவர் பாலை மரத்தில் தேனைக் கண்டு அதனை தான் மட்டும் குடித்துவிட்டார். அவ்வேளை இவரைக் காணாது தேடி வந்த மற்ற ஆறு பேரும், இவர் தான் மட்டும் தேனை அருந்தியிருப்பதைக் கண்டு கோபமுற்று, இங்குள்ள கால்நடைகளுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், பாதிப் பழமோ அல்லது பாக்கோ வைத்தால் கூட, அதனையும் ஏற்றுக்கொண்டு நன்மை செய்ய வேண்டும் என்றும் அவருக்குச் சாபமிட்டனர் (பூசாரி நல்லையா தவராசா). இவ்வழிபாடானது கிருஷ்ண அவதாரத்துடன் இணைத்துப் பேசப்படுகின்றது. அதாவது கிருஷ்ணவதாரத்தில் எவ்விதம் கிருஷ்ணர் பசுக்களைக் காத்து வந்தாரோ அதனைப் போல தங்களுடைய கால்நடைகளையும் பாதுகாப்பவராக இவர் கருதப்பட்டு வழிபடப்படுகின்றார். பசுக்கள் பெருகுவதற்காக வழிபடப்படும் இவரிடமே எருமை மாடுகள், பசுமாடுகள் என அனைத்தும் இருந்துள்ளன. இவர் காளை மாடுகளைச் சாந்தமாக்குதல், காட்டு மாடுகளைப் பிடித்து வைத்தல் போன்றவற்றினைச் செய்பவராகவும் கருதப்படுகின்றார். நம் மக்கள் எல்லாம் பால் கறப்பதில்லை. பால் வேண்டுமெனில் ஏனத்தைக் (பாத்திரத்தை) கொண்டு சென்று மாடுகள் உள்ள வழியில் வைப்பர். பின்னர் ‘கூ’ என்ற சத்தம் கேட்கும். சிறிது நேரம் கழித்துச் சென்று பார்த்தால் ஏனத்தில் பால் நிறைந்திருக்கும். இவ்வாறு இருக்க, ஒரு சமயம் வண்ணார் குலத்தைச் சார்ந்த ஒருவரும் மற்றொருவரும் பால் கறப்பவர் யார் என்பதனை அறிய வேண்டும் என்ற ஆர்வத்தில் ஏனத்தை பசுக்கள் செறிந்துள்ள இடத்தில் வைத்துவிட்டு, காட்டில் ஒளிந்திருந்து பார்த்தனர். சிறிது நேரத்தில் அந்த ஏனத்தில் பால் நிரம்பி வழியத் தொடங்கியது. அவ்வேளையில் ஒளிந்திருந்த அவ்விருவரும் போதும் என்று சொன்னதால் பாலுடன் ஏனமும் இல்லாமல் போனது. அன்றிலிருந்து பால் கொடுப்பதில்லை. அப்போதுதான் இவர் தனிப்பட காட்டிற்குச் சென்று இந்தப் பூசையைச் செய்கின்றார். ஏனெனின் அவரின் அம்மாசுவாதி அம்மன் ‘நீ அங்கே, இங்கே போய் ஒன்றும் கேட்கக்கூடாது. பிறரின் பட்டியில் போய் பாலும் எடுக்கக்கூடாது. முழுப்பேரும் கொண்டு வந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் உனக்குப் பரமுதம் செய்து தருவார்கள். அதை இல்லையென்று சொல்லாமல், அங்கே போய் பரமுதத்தைச் செய்துட்டு, சாப்பிட்டு வா’ என உரைத்ததாக நம்பப்படுகிறது. தினகரன் பத்திரிகையில் 2014.11.16 அன்று வெளிவந்த தாழை செல்வநாயகம் என்பவர் எழுதிய ‘கிளிச்சிறாம்பி’ எனும் சிறுகதையில் உயிர்களைக் காப்பாற்றும் தெய்வமாக வன்னித்தம்பிரான் குறிப்பிடப்படுகின்றார். வன்னித்தம்பிரான் வழிபாடு இன்று வன்னித் தம்பிரான் வழிபாடு திருகோணமலையில் சம்பூர், கிளிவெட்டி முதலான ஊர்களில் செல்வாக்குப்பெற்றுக் காணப்படுகிறது. வன்னித் தெய்வம் என்ற பெயரில் முல்லைத்தீவில் குமுழமுனை, ஆண்டாங்குளம் பகுதியில் உள்ள காட்டில் இவ்வழிபாடு காணப்படுகிறது. ஏலவே கூறியது போல மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வதனமார் வழிபாடு காணப்படுகிறது. அத்தெய்வத்துக்கான வழிபாட்டு முறையும் வன்னித் தம்பிரான் வழிபாட்டு முறையும் ஒத்த தன்மையுடையவை. அதேபோல மட்டக்களப்பில் காணப்படுகின்ற ‘முன்னடித் தம்பிரான் வழிபாடு, குமார தெய்வ வழிபாடு’ என்பன வன்னித்தம்பிரான் வழிபாட்டுடன் முழுமையாக ஒத்தமைந்தமை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகச் சூழலில் இவ்வழிபாடு இருப்பதாகத் தெரியவில்லை. வன்னித் தம்பிரானுக்கெனத் தனிக்கோயில் எதுவும் இல்லை. காட்டின் ஒரு புறத்தில் பற்றைகள் வெட்டப்பட்டு ஒரு மரத்தை மையமாகக் கொண்டதாக இவ்வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது. குறிப்பாக பாலைமரம் அல்லது ஆலமரம் முதன்மைப்படுத்தப்படுகின்றது. முல்லைத்தீவில் வெள்ளைக்கல் ஒன்று பாலை மரத்தடியில் வைத்து வழிபடப்படுகிறது. வழிபாட்டு முறைகள் வன்னித்தம்பிரானுக்கான சடங்குகளானது தை, மாசி, பங்குனி மாதங்களிலேயே பெரும்பாலும் செய்யப்படும். இவை கால்நடைகளுக்கு நோய் தாக்காது இருக்கவும் காணாமல்போன கால்நடைகளைத் திரும்பப் பெறுவதனையும் நோக்காகக்கொண்டு ஆற்றப்படுகின்றதெனலாம். மாடுகள் கன்று போட்டதன் பின்பு அவை கறக்கும் பாலினை வீட்டிற்குக் கொண்டு வந்து காய்ச்சி, அதிலிருந்து வருகின்ற பாலாடை, நெய் என்பவற்றினை எடுத்து, அதில் விளக்கேற்றி இச்சடங்குகள் ஆற்றப்படுகின்றன. அந்தக் காலத்தில் வரும் பாலினை விற்க மாட்டார்கள். வீட்டிற்குக் கொண்டுபோய் வன்னித் தம்பிரானுக்காக நெய் எடுத்து அதில் விளக்கேற்றி, உறி போட்டு, பாலை மரத்திற்கு அடியில் அந்த உறியில் முக்காலியைக் கட்டி, அதில் மடை வைத்து, பின்பு தேங்காய்ப் பாலில் பொங்கி, பானையை மூடி வைப்பர். அப்பானை திறக்கப்பட மாட்டாது. எனினும் தேங்காய்ப் பால் நன்கு பொங்கி வரும்வேளை, அதனை உறியில் வைத்து வெற்றிலை மடை மட்டும் வைக்கப்படுமேயன்றி வேறு மடைகள் பரப்பப்படமாட்டாது. பானையோடு தூக்கி முக்காலி மாதிரி உறியில் வைத்து கொஞ்ச நேரம் வெளியில் தள்ளி நின்றுவிட்டு சிறிது நேரம் கழித்து வந்து, கற்பூரம் கொளுத்தி பூசை செய்து முடிப்பார்கள். அதுமட்டுமன்றி வன்னித் தம்பிரானுக்கு வீட்டில் இருக்கும் பறங்கி வாழையை நேர்ந்து கட்டுவதுண்டு. அந்த வாழை உரிய நேரத்தில் பெரிய குலை போடும் என்ற நம்பிக்கையும் உண்டு. மேலும் அந்த வாழைக்குலையிலிருந்த வரும் பழத்தைக் கொண்டுவந்து தான் இங்குள்ள மடையில் வைப்பார்கள். இங்கு படைக்கப்படும் எந்தப் பொருளும் வீடுகளுக்குக் கொண்டுசெல்லப்பட மாட்டாது. அதுமட்டுமன்றி பெண்கள் இவற்றினைச் சாப்பிடுவதும் கிடையாது (பூசாரி நல்லையா தவராசா). மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வதனமாரில் ஒருவரான முன்னடித் தம்பிரான் தெய்வத்திற்கு பெரிதாக பந்தலினை அமைத்து, இலை-குழைகளினால் அலங்கரித்து வழிபாடியற்றப்படும். இதில் பச்சை அரிசியினையும் பாலினையும் சேர்த்துப் பொங்கல் செய்வர். அதில் வேறெந்தப் பொருளும் சேர்க்கப்படமாட்டாது. அகப்பையினைப் பயன்படுத்தாமல் பொங்கலைப் பொங்க வேண்டும். வாழைப்பழத்தினைக் குலையோடு பந்தலில் வைத்து வெற்றிலை, பாக்கு, பூக்கள் என்பவற்றினையும் மடையில் வைத்து வழிபாட்டினை ஆரம்பிப்பர். ஆண்டுதோறும், மாடு முதற் கன்று ஈன்றதும், பட்டிக்காரர்களால் இளங்கன்றுப் பால் எடுத்து பொங்கல் செய்யப்படும். இளங்கன்று வளர்ந்த பிற்பாடு அதன் பாலை எடுத்துச் சடங்கு செய்வர். இது ‘முதியான் கன்றுப் பால்’ எனப்படும். இரு தடவை செய்ய முடியாதவர்கள் ஒரு தடவை மாத்திரம் செய்யும் சந்தர்ப்பங்களும் உண்டு. பந்தல் போட்டு அப்பந்தலில் முக்காலி கட்டி அம்முக்காலியிலும் பொங்கல், பழம் என்பன படைக்கப்படும். இச்சடங்கானது முறையாகப் பூசாரியினால் செய்யப்பட்டால் முன்னடித்தம்பிரான் பூசாரியினுள் வெளிப்படுவார். பொங்கலைப் படைத்துவிட்டு காட்டிலேயே அதனை விட்டு வருவர். அதனை வீட்டிற்கு எடுத்து வரமாட்டார்கள். பின்னர், படைத்த பொங்கலை காட்டிற்குச் சென்றுதான் உண்ண வேண்டும் என்ற கட்டுப்பாட்டினை விதித்துள்ளனர். குறிப்பாக வீட்டிலுள்ள பெண்கள், குழந்தைகள் இப்பொங்கலை உண்ணக்கூடாது (ஈழத்துப் பூராடனார், 2000). இந்த அடிப்படையில் வன்னித் தம்பிரான் வழிபாடும் முன்னடித்தம்பிரான் வழிபாடும் ஒன்று என்றே கருதத் தோன்றுகிறது. குமுழமுனைப் பூசாரி தியாகசோதி சந்திரன், தை மாதத்தில் காடுவெட்டி நிகழ்த்தப்படும் வழிபாடாக இதனைக் குறிப்பிடுகின்றார். அவர் கூறுவதன்படி, அது பட்டிப்பொங்கலை அண்மித்து வருதலை அவதானிக்க முடிகிறது. உரிய பூசைத்தினத்திற்கு முதல்நாள் உரல், உலக்கை, சுளகு, நெல் உள்ளிட்ட நெல் குற்றலுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் சென்று மஞ்சள் நீரினால் கழுவி, நெல்குற்றும் மரத்தடியைத் தூய்மைப்படுத்தி அவ்விடத்தில் வைத்துக் குற்றிய பின், அரிசியை அம்மரத்திலேயே பாதுகாப்பாகக் கட்டி வைத்துவிட்டு வருவர். பெண்கள் புழங்கிய (பயன்படுத்திய) பொருட்களைப் பயன்படுத்துவதில்லை அல்லது அவற்றை மஞ்சள் நீரால் தூய்மைப்படுத்தி எடுத்துச் செல்வர். இச்சடங்கிலும் வழிபாட்டிலும் பெண்களை எந்த வகையிலும் சம்பந்தப்படுத்த முடியாது – கூடாது என்பது இவ்வழிபாட்டின் நியதியாகக் காணப்படுகிறது. பட்டியில் உள்ள எருது, பசு என்பவற்றில் இருந்து பெறப்பட்ட பாலை நெய்யாக்கி, அதனையும் பாலையும், குற்றித் தீட்டிய அரிசியோடு சேர்த்துக் கட்டி, ஒரு வருடம் நிறைவுற்ற தேங்காயையும் சொட்டுகளாக்கி (துண்டுகளாக்கி), புனிதமாக்கப்பட்ட பானையில் இட்டுப் பொங்குவர். பொங்கலுக்கு நீர் விடப்படுவதில்லை. பானையில் அகப்பையிட்டுக் கிண்டாது இப்பொங்கல் நிகழ்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இம்மக்கள் தங்கள் வயல்களையும் கால்நடைகளையும் காக்குமாறு வேண்டி வயல்களின் எல்லைகளிலும் மேய்ச்சல் நிலங்களின் – கிராமங்களின் எல்லைகளிலும் காஞ்சுரம் மரத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட வலிதான ஒன்றரைப் பாகம் (ஏறத்தாழ ஆறடி) கட்டையை (தடி) நிலத்தில் அடித்து நிறுத்துவர். பின் தென்னை மரத்தில் இருந்து பழுத்து விழுந்த தேங்காய் ஒன்றைத் தெரிவு செய்து மஞ்சள் நீரில் கழுவித் தூய்மைப்படுத்திய பின் திருநீறு, சந்தனம் இட்டு வன்னித் தம்பிரானுக்கு நேர்ந்து, இக்காஞ்சுரங் கட்டையில் கட்டிவிடுவர். இதன் வீரியம் ஒரு வருடத்திற்கு இருக்கும். ஒரு வருட நிறைவில், இத்தெய்வத்திற்கான பொங்கலில் இத்தேங்காயை உடைத்துத் துண்டுகளாக்கி இடுவர். பின்னர், மீளவும் நேர்ந்து தேங்காய் கட்டப்படும். இவ்வாறு தேங்காய் கட்டப்படுவதனால் தமது வயலும் பயிரும், கால்நடைகளும் பாதுகாக்கப்படுவதாக இன்றும் நம்பப்படுகிறது. இவ்வழக்கம் குமிழமுனையிலேயே காணப்படுகிறது. இந்தத் தெய்வத்துக்கான பூசையின் போது தெய்வமாடினும், குறி சொல்லும் வழக்கம் இல்லை. பூசையின் முடிவில் பூசாரி அடியவர்களுக்கு நெற்றியில் நீறிட்டு ஆசிர்வதிப்பார். முல்லைத்தீவு குமுழமுனையில் படையல்களைத் தட்டுவம் என்கிற பனையோலையில் படைப்பதும், தட்டுவத்திலிட்டே பிரசாதத்தை உண்பதுமான வழக்கம் காணப்படுகிறது. திருகோணமலையில் இலையில் படையலிடும் வழக்கமே காணப்படுகிறது. சில அவதானிப்புகள் வதனமார்களில் ஒருவராகவே வன்னித்தம்பிரான், முன்னடித்தம்பிரான் ஆகியோர் சுட்டப்படுகின்றனர். வதனமார், குமாரதெய்வச் சடங்குகளில் கட்டுக் கூறப்படும். வன்னித் தம்பிரான் தெய்வமேறினும் கட்டுக் கூறுவதில்லை. ஏனைய தெய்வங்களோடு வதனமார், குமார வழிபாடுகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், வன்னித்தம்பிரான் வழிபாடு தனித்தே இன்றும் இடம்பெறுகிறது. குமார வழிபாடு, இல்லங்களிலும் நிகழ்த்தப்படுகிறது. வதனமார் தெய்வம் காளி, வைரவர், மாரி கோயில்களில் காவல் தெய்வமாக அமைந்துள்ளது. வன்னித்தம்பிரானோ இன்றும் காடுகளில் வைத்தே வழிபடப்படுகிறார். பூசைக்காலம் முழுவதும் மௌனமாகவே யாவரும் கலந்து கொள்ள வேண்டும். அதேவேளை பூசாரி வாய் கட்டிப் பூசை செய்தல் நீண்டகால மரபாக இருந்து வருகிறது. ஆயினும் முல்லைத்தீவு குமுழமுனை வன்னித்தம்பிரான் வழிபாட்டில் தற்போது வாய் கட்டிப் பூசை செய்யப்படுவதில்லை. அந்தரத்தில் முக்காலியோ, அன்றிச் சிறுபரணோ அமைத்துப் படையல் வைப்பதும், பொங்கலைப் பானையோடு வைத்தே படைப்பதும் பொதுப்பண்பாக உள்ளது. திருகோணமலைப் பிரதேசத்தில் வன்னித்தம்பிரான் முன்பு பரணிட்டு அதன் மேல் குழைகளைப் பரவி, அதன்மீது பெரிய காட்டிலைகளில் அல்லது வாழையிலைகளில் படையலை வைத்துப் படைக்க, முல்லைத்தீவில் பனையோலையிலான தட்டுவத்தில் வைத்துப் படைக்கின்றனர். பூசாரி படையலுணவை முதலுண்ணத் தொடங்குவார். ஏனையோர் அதன் பின் உண்ணத் தொடங்குவர். முழுவதும் உண்ணப்பட வேண்டும் என்பதோடு பூசாரி இடத்தைவிட்டு எழுந்த பின்பே ஏனையோர் எழமுடியும். ஆண்கள் மட்டுமே பங்குபற்றும் வன்னித்தம்பிரான் பூசையில் பெண்களுக்கு இடமில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் அளைந்த பொருட்களைப் பாவிக்கக்கூடாது; அன்றிப் புனிதப்படுத்திப் பாவிக்க வேண்டும். முடிவுரை ஈழத்தில் வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களில், குறிப்பாக திருகோணமலை, முல்லைத்தீவுப் பிராந்தியங்களில் காணப்படும் கால்நடை, விவசாய கலப்புத்தொழில் செய்கின்ற மக்களின் வழிபடு தெய்வமே வன்னித்தம்பிரான். இவர் வன்னித் தெய்வம் எனவும் சுட்டப்படுகின்றார். காடுகளில் வைத்து வழிபடப்படுகின்ற, உருவமற்ற மரங்களில் வீற்றிருக்கும் தெய்வமாக இது கருதப்படுகிறது. இதனால் படையல்களும் உயரமான இடத்தில் – அந்தரத்தில் வைத்தே வழிபடப்படுகின்றன. இது வதனமார் வழிபாட்டோடு இணைந்த கதையாடல்களையும் வழிபாட்டு மரபுகளையும் கொண்டு அமைவதோடு, முன்னடித்தம்பிரான் வழிபாட்டோடு ஒத்தமைந்ததாகவும் காணப்படுகிறது. ஒரேவிதமான அடிப்படையில் ஒன்றான இத்தெய்வம், பிராந்தியப் பண்பியலுக்கேற்ப மாறுபட்டுக் காணப்படுவதாகவே எண்ணத் தோன்றுகின்றது. ஈழத்துக்கான வன்னியர் மரபோடும் இது இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கால்நடையோடு இயைந்த விவசாயம் என்பது இன்று வேளாண்மையாகக் கருதப்படுவதற்கான முன்னோடி வாழ்வின் விளைவே வன்னித்தம்பிரான் வழிபாடு ஆகும். ஆயினும், இன்று நிலவியல்சார் பிரச்சினைகளால் கால்நடை வளர்ப்பு அருகி வருகிறது. கால்நடை வளர்ப்பில் உள்ள சவால்கள் (மேய்ச்சல் நிலமின்மை, அபகரிப்பு, குடியேற்றம்), ஆர்வமின்மை, நவீன வாழ்வு, இதனைத் தாழ்வாகக் கருதுதல் முதலான பல சிக்கல்கள் இதற்கு ஏதுவாகின்றன. இதனால் வன்னித் தம்பிரான் வழிபாடும் அருகி வருகின்றது. https://www.ezhunaonline.com/vannithampran-worship/
1 month 2 weeks ago
நன்றி ஐயா, அந்தநிலைக்கு சென்றதன் விளைவே எதிரான கொள்கைகள் ஆட்சிக்காக ஒன்றிணைந்து கொண்டமை என நினைக்கின்றேன். அப்பாவிகளைப் பலிகொடுத்து அதிகார சுகபோகங்களை அனுபவித்துவரும் அதிகாரவர்க்கங்களின் அடாவடிகள் பொருண்மிய வீழ்ச்சியின் ஊடாக உலகில் ஆங்காங்கே ஆட்டம் கண்டுவருகின்றன. (ராஜபக்சர்களின் வீழ்ச்சிபோல்) பொருண்மிய வீழ்ச்சியின் ஊடாக மக்கள் கொதிநிலை அடைந்து தமக்கு எதிராகத் திரும்பிவிட்டால் என்ன செய்வது என்ற பயமும், மக்களின் விருப்பத்தக்கு மாறான அரசுகளே அண்மைய காலங்களில் யேர்மனியை ஆள்வதும் ஒரு வரள்நிலையாகும். தொடர்ந்தும் முன்றுகட்சி, இரு கட்சி ஆட்சிகளாகவே உள்ளன. கொள்கைகளை இலக்காக்கிக் கட்சிகளுக்கு வாக்களிக்கும் மக்கள் காணும் காட்சிகள் வேறாக உள்ளன. கடந்த அரையாண்டில் உள்நாட்டு உற்பத்தி கீழ்நோக்கிய நிலை. அமெரிக்க வரியேற்ற ஆதிக்கம் போன்ற பல்வேறு நெருக்கடிகளோடு, உற்பத்தித் தொழிலாளர் பற்றாக்குறை என்பனவற்றின் தாக்கமும் தாக்குகின்றது. தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு கட்டமைப்பகளுள் அதிகரித்துவரும் முஸ்லிம்களின் எண்ணிக்கை போன்றவற்றையும் அரசுத் தலைமையர் முதல் பொருண்மிய ஆய்வாளர் வரை கணித்திருப்பார்கள். அதன் விளைவாகவும் மாற்றி யோசிக்கிறார்களோ யாராறிவார். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
1 month 2 weeks ago
கசாப்புக் கூடம் ஐந்து (Slaughterhouse-Five) Bookday29/04/2025 தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –11 போரின் கொடூரத்தோடு அபத்தத்தையும் சொன்னதற்காகக் குப்பையில் வீசப்பட்ட நாவல் இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டம். ஜெர்மனியின் டிரெஸ்டன் நகரில் ஒரு பழைய தொழிற்கூடம். அதுவோர் இறைச்சித் தயாரிப்புக் கூடம். ‘கசாப்புக் கூடம் ஐந்து’ (Slaughterhouse-Five) என்று பெயர். போர்க் கைதிகளாகக் கொண்டுவரப்பட்ட நேசப்படையைச் சேர்ந்த பல நாடுகளின் வீரர்கள் அங்கே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். நாஜிகளின் தோல்வியை உறுதிப்படுத்துவதாக, அந்த நகரத்தின் மீது நேசப்படை விமானங்கள் குண்டுகளைப் போடுகின்றன. கட்டுமானங்கள் அனைத்தும் நொறுங்கிப் போன நிலையில், கசாப்புக் கூடத்தில் உயிரோடு மிஞ்சியவர்கள் வெளியே வருகிறார்கள். சாலையோரத்தில் ஒரு கழிப்பறை மட்டும் இடிந்து போகாமல் அப்படியே இருக்கிறது. ஒருவன், ஊரே அழிந்தபின் கழிப்பறை மட்டும் எஞ்சியிருப்பதில் உள்ள அபத்தத்தை எண்ணிச் சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்து ஒன்றுக்கடித்துவிட்டுத் திரும்புகிறான். அன்றைய ஜெர்மனியின் இனவெறிச் சர்வாதிகார ஆட்சியைச் சிறிதும் நியாயப்படுத்தாமல், ஆனால் பொதுவாகப் போர் எவ்வளவு கொடுமையானது, எவ்வளவு முட்டாள்தனமானது என்று முரண் நகை வடிவில் வேதனைச் சிரிப்பைப் பகிர்ந்துகொள்கிறது ‘ஸ்லாட்டர்ஹவுஸ் – ஃபைவ்’ நாவல் (1969). அவ்வாறு மனிதநேய வேதனையைப் பகிர்ந்துகொண்டது, அரசின் போர்க் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் தாக்குவதாக இருக்கிறது என்று கூறி அமெரிக்காவின் பல மாநில அரசுகள் நாவலுக்குத் தடைவிதித்தன. பாலியல் உறவு பற்றிப் பேசுகிறது, ஆபாசமான சித்தரிப்புகள் இருக்கின்றன, மதத்தை விமர்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளைக் கூறி தடை நடவடிக்கை நியாயப்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி நூலகங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட புத்தகப் படிகள் குப்பைத் தொட்டிகளில் போடப்பட்டன. குப்பையில் கிடக்கிற புத்தகத்தை யாராவது எடுத்துப் படித்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்துப் பல இடங்களில் புத்தகப் படிகளுக்குப் பள்ளிகள், கல்லூரிகளின் முதல்வர்களே தீ வைத்தார்கள். அரசியல்வாதிகள் நாவலைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்கள். வேறு பல நாடுகளிலும் நாவல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதிலேயே ஒரு முரண் நகை என்னவென்றால், நாவல் வெளியான அடுத்த ஆண்டிலேயே தேசிய சிறந்த நூல் விருது வழங்கப்பட்டது, 1972ஆம் ஆண்டிலிருந்து தடை நடவடிக்கைகள் பாய்ந்தன. நாவலாசிரியர் இந்த நாவலை எழுதிய குர்ட் வோன்னேகட் (1922–2007) இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார்.. முரண் நகை எள்ளல் நடையோடு கூடிய அறிவியல், அரசியல் புனைவுகளுக்காகவும், மனிதம் குறித்த ஆழ்ந்த பார்வைகளுக்காகவும் இலக்கிய உலகில் கொண்டாடப்படுபவர். கருப்பொருள்களாகப் போர்களின் விளைவு, தொழில்நுட்பத்தின் தாக்கம், தனிமை, மரணம், மனித நேயம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டார்.. அதிகாரத்தையும், தலைவிதி நம்பிக்கை உள்ளிட்ட சமூகத்தின் போலித் தனங்களையும் கேள்விக்கு உட்படுத்தினார். தலைமுறைகள் கடந்தும் நேசிக்கப்படும் வோன்னேகட் எழுதத் தொடங்குவதற்கு முன், அமெரிக்கச் சட்டப்படி ராணுவத்தில் பணி செய்தார். இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றார். அப்போது உண்மையாகவே ஜெர்மன் படையிடம் சிக்கிக்கொண்டார், டிரெஸ்டன் நகரத்தில் குண்டு போடப்பட்டபோது நல்வாய்ப்பாகத் தப்பித்தார். அந்த அனுபவங்களின் தாக்கத்திலும், மனிதநேயச் சிந்தனையிலிருந்தும், ராணுவப் பணி ஓய்வுக்குப் பிறகு எழுத்துத்துறையில் ஈடுபட்டார். ‘பிளேயர் பியானோ’ என்ற நாவல் அவரிடமிருந்து 1953இல் வந்தது. ‘பூனையின் தொட்டில்’ (கேட்ஸ் கிரேடில் –1963), ‘கடவுள் உம்மை ஆசிர்வதிப்பாராக திருவாளர் ரோஸ்வாட்டர்’ (காட் பிளெஸ் யூ, மிஸ்டர் ரோஸ்வாட்டடர்– 1965), ‘காலை உணவு சாம்பியன்கள் (பிரேக்ஃபாஸ்ட் ஆஃப் சாம்பியன்ஸ் –1973), கலபாகோஸ் (1985) உள்ளிட்ட புகழ்பெற்ற நாவல்களையும் வழங்கியிருக்கிறார். ‘ஸ்லாட்டர்ஹவுஸ்–ஃபைவ்’ ஒரு தனித்துவமான படைப்பு. இந்த நாவல் போர், மரணம், காலம், விதி நம்பிக்கை, மனித இருப்பு பற்றிய ஆழமான கேள்விகளை நகைச்சுவை கலந்து அறிவியல் புனைகதையாக ஆராய்கிறது என்று திறனாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். மையக் கதாபாத்திரம் காலவெளியில் சிக்கிக்கொள்ள, கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் நிகழ்காலத்திற்குமாக மாறி மாறிக் கால ஒழுங்கற்ற முறையில் பயணிக்கிறான். அந்தப் பயணத்தில் வேற்றுக் கோளில் வாழ்கிறவர்களையும் சந்திக்கிறான். முக்காலத்தையும் ஒரே நேரத்தில் காணக்கூடியவர்களாக இருக்கிற அவர்களோடு உரையாடுவதில், மரணம் இயல்பானது, தவிர்க்க முடியாதது என்று புரிந்துகொள்கிறான். அந்தப் புரிதல், வாழ்கிற வாழ்க்கையை சரியாக அமைத்துக்கொள்ள வழிசெய்கிறது. போர் எதிர்ப்புச் சிந்தனையும் அதிலிருந்து வலுப்பெறுகிறது. போர்களிலிருந்து உலகத்தைக் காப்பதோடு, அதிகாரக் கரங்களிலிருந்து புத்தகங்களைக் காக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் உணரலாம் என்று நாவல் அறிமுகக் கட்டுரைகள் கூறுகின்றன. கதைத்துளி இணையத்தில் ஏஐ வழியாகத் தேடியதில் கிடைக்கும் கதைச் சுருக்கத்தையும் கருத்தாக்கத்தையும் பார்ப்போம்: கண் பரிசோதனைத் தொழில்நுட்பப் பயிற்சி பெற்றவனான பில்லி பில்கிரீம், அமெரிக்க ராணுவத்தில் ஒரு சாதாரண சிப்பாயாக இருக்கிறான்.இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனிக்கு அனுப்பப்படுகிறான். 1944இல் பதுங்கு குழியில் இருந்த நேரத்தில் ஜெர்மன் சிப்பாய்களால் பிடிக்கப்படுகிறான். மற்ற போர்க் கைதிகளுடன் அவன் டிரெஸ்டன் நகருக்கு கொண்டு செல்லப்படுகிறான். அங்கே அவர்கள் ‘ஸ்லாட்டர்ஹவுஸ்-ஃபைவ்’ என்ற ஒரு கைவிடப்பட்ட கசாப்புக் கூடத்தில் அடைக்கப்படுகிறார்கள். 1945 பிப்ரவரி மாதம் டிரெஸ்டன் நகரம் நேசப்படை குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகிறது. பில்லியும் வேறு சில கைதிகளும் கசாப்புக்க கூடத்தின் சுரங்க அறையில் இருந்ததால் உயிர் பிழைக்கிறார்கள். அப்போதுதான் முதலில் குறிப்பிட்ட அந்தக் கழிப்பறையைப் பார்க்கிறார்கள். அந்த நிகழ்வுகளின் பயங்கரமும் இடிபடாத கழிப்பறைக் காட்சியும் அவன் மனதில் ஆழமான காயத்தையும் குழப்பமான எண்ணங்களையும் ஏற்படுத்துகின்றன. கதை பின்னர் அறிவியல் கற்பனைக்குள் நுழைகிறது. பில்லி பில்கிரிம் காலவெளியில் “சிக்கிக் கொள்கிறான்”. அவனால் தனது வாழ்க்கையின் எந்த நேரத்திற்கும் – பிறப்பு, போர் அனுபவங்கள், திருமண வாழ்க்கை, குழந்தைகள், எதிர்காலத்தில் அவனைக் கடத்திச் செல்லும் டிரால்ஃபாமடோர் என்ற வேற்றுக் கோள்வாசிகள் என்று கட்டுப்பாடின்றி பயணிக்க முடிகிறது. கதையின் இந்த கால ஒழுங்கற்ற தன்மை போரின் அதிர்ச்சியையும், நினைவுகளின் பன்முகக் கூறுகளையும் பிரதிபலிக்கிறது. மனித இனமல்லாத, அறிவுக் கூர்மையுடன் உள்ள டிரால்ஃபாமடோர் கோள்வாசிகள் காலத்தை ஒரு நேர்கோடாகப் பார்க்காமல், ஒரே நேரத்தில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கக் கூடியவர்களாக இருப்பதை அறிகிறான். அவர்கள் மரணத்தை ஒரு முடிவாகக் கருதுவதில்லை, மாறாக ஒரு மோசமான பொழுது, அவ்வளவுதான் என்று நினைக்கிறார்கள். “இது இப்படித்தான் நடக்கும்” என்று அவர்கள் திரும்பத் திரும்பப் பேசுகிறார்கள். இந்தச் சொற்றொடர் மரணத்தையும், தவிர்க்க முடியாததாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையைக் காட்டுகிறது. அந்த மனநிலை பில்லிக்கும் ஏற்பட்டு, வாழ்க்கையை இயல்பாக ஏற்றுக்கொள்கிறான். இயல்பான வாழ்க்கைக்கு எதிரியாகப் போர்களைப் பார்க்கிறான். நாவல் பில்லியின் வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் முன்னும் பின்னும் நகர்கிறது. நாம் அவனுடைய குழந்தைப் பருவம், விரும்பித் தேர்ந்தேடுக்காமல் வாழ்க்கை வசதிகளுக்காகச் செய்துகொள்ளும் திருமணம், அதன் மூலம் கிடைக்கிற கண் பரிசோதகர் வேலை ஆகியவற்றைப் பார்க்கிறோம். போருக்குப் பிறகு அவனுடன் நாமும் காலச்சுழலில் சிக்கி எதிர்காலத்திற்குச் சென்று மாறுபட்ட வேற்றுக்கோள்வாசிகளுடனான அனுபவங்களைப் பெறுகிறோம். ஒரே நீரோட்டமாக அமையாத கதை உத்தி போரின் அபத்தத்தையும், மனித எண்ணங்களின் குழப்பத்தையும் வாசகர்களுக்கு எடுத்துக்கூறுகிறது. போர் எதிர்ப்பு நாவலாக மட்டுமல்லாமல், நினைவுகள், அதிர்ச்சி, எல்லாம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டபடிதான் நிகழ்கின்றன என்று கருதும் வேற்றுக்கோள்வாசிகளை அறிமுகப்படுத்தி, விதித் தத்துவம் பற்றிப் பேச விட்டு, பின்னர் அதை விசாரணைக்கு உட்படுத்துகிறது. இறுதியில் புதிய மாற்றங்களை நிகழ்த்தும் மனித முயற்சிகளை உயர்த்திப் பிடிக்கிறது. சுதந்திர வேட்கை போன்ற பெரிய கேள்விகளையும் ஆராய்கிறது. நாவலுக்குப் பாராட்டு, படத்திற்கு விருது இத்தனை சிறப்புகள் இருப்பினும் இந்த நாவல் குறிப்பிடத்தக்க பெரிய விருதுகள் எதையும் பெறவில்லை. ஆனால் திரைப்படமாக வந்து கேன்ஸ் திரைப்பட விழா, ஹ்யூகோ, சாட்டர்ன் ஆகிய குறிப்பான விருதுகளைக் கைப்பற்ற்றியது. படக்கதைப் புத்தகமாகவும் வந்து சிறார்களிடமும் இளையோர்களிடமும் சென்றது. குர்ட் வோன்னேகாட் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் கழகத்தின் உறுப்பினராக இணைக்கப்பட்டார். பின்னர் அமெரிக்க கலை மற்றும் இலக்கிய அகாடமி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். போர் சூழ் உலகாக இருக்கிற, போர் மோகப் பேச்சுகள் ஒலிக்கிற நிலையில் இந்த நாவல் பற்றிய தகவல் தற்செயலாகக் கண்ணில் பட்டது.உடனே பகிர்ந்துகொள்ளத் தோன்றியது. தெரிந்துகொள்ளவும், தெரிந்துகொண்டதை சக மனிதர்களுக்குக் கதையாகச் சொல்லவும் வாழ்க்கை எத்தனை அனுபவங்களைக் குவித்து வைத்திருக்கிறது! https://bookday.in/a-novel-that-was-thrown-into-the-trash-for-describing-the-horrors-and-absurdities-of-war-article-written-by-a-kumaresan/
1 month 2 weeks ago
மூடப்படும் பாடசாலைகள் திறக்கப்படும் போதைப் பொருள் தடுப்பு மையங்கள்? - நிலாந்தன் வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70க்கும் மேற்பட்ட பாடசாலைகளை மூடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 10 பிள்ளைகள் கல்வி கற்கும் 35 பாடசாலைகள் காணப்படுவதாகவும் 11–20 பிள்ளைகள் கல்வி கற்கும் 64 பாடசாலைகளும், 20–50 பிள்ளைகள் கற்கும் 171 பாடசாலைகளும் இருப்பதாகவும் 50–100 பிள்ளைகள் கற்கும் 174பாடசாலைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலைகள் ஏன் மூடப்படுகின்றன? எப்படிப்பட்ட பாடசாலைகள் மூடப்படுகின்றன? பெரும்பாலும் உள்ளூரில் காணப்படும் சிறிய பாடசாலைகள்தான் அதிகமாக மூடப்படுகின்றன. அவை மூடப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவது காரணம், சனத்தொகை வீழ்ச்சி. இரண்டாவது காரணம், போட்டிப் பரீட்சை காரணமாக தேசிய மட்டப் பரீரசைகளில் உயர்ந்த அடைவைக் காட்டும் பாடசாலைகளை நோக்கி பிள்ளைகளை நகர்த்தும் ஒரு போக்கு. எனினும் யுத்தம்தான் இதற்கு மூல காரணம் என்று ஒரு மூத்த கல்வி அதிகாரி தெரிவித்தார். போர் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வுகள் புலப்பெயர்வுகள் போன்றவற்றால் சனத்தொகை வீழ்ச்சி அடைந்தது. போரினால் பாடசாலைகள் அழிக்கப்பட்டன. அல்லது சேதமடைந்தன. போர்க்காலத்தில் இடம்பெயர்ந்த ஒரு தொகுதி பாடசாலைகள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பவேயில்லை. போட்டிப் பரீட்சை காரணமாக நகர்ப்புற பாடசாலைகளில் நோக்கிச் செல்லும் மோகம் அதிகரிக்கின்றது. தேசியமட்ட பரீட்சைகளில் உயர்ந்த பெறுபேறுகளை அடைவதற்காக பிள்ளைகளை பந்தயக் குதிரைகள் போல பழக்கி எடுக்கும் ஆசிரியர்களையும் பாடசாலைகளையும் நோக்கி அல்லது நகரங்களை நோக்கி பிள்ளைகள் நகர்கிறார்கள். இதனால் உள்ளூரில் காணப்படும் சிறிய பாடசாலைகள் கைவிடப்படுகின்றன. வரையறைக்கப்பட்ட எண்ணிக்கையைவிடக் குறைந்தளவு பிள்ளைகளைக் கொண்ட ஒரு பாடசாலைக்கு வளங்களை விரயம் செய்ய முடியாது. எனவே சிறிய பாடசாலைகளை மூடுவது தவிர்க்கமுடியாதது என்று கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். யப்பானில் ஒரு தொடருந்துப் பாதையில் ஒரே ஒரு பிள்ளை பாடசாலைக்குப் போக வேண்டும் என்பதற்காக ஒரு ரயில்வே ஸ்டேஷனை மூடாமல் வைத்திருப்பதாக ஒரு செய்தி உண்டு. அது யப்பானில். ஆனால் இலங்கையில் அதிலும் போரால் எல்லா விதத்திலும் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகளில் மிகச்சில பிள்ளைகளுக்காக அளவுக்கு அதிகமான வளங்களைக் குவிப்பதற்கு கல்விக் கட்டமைப்பும் தயாரில்லை. இவ்வாறு பாடசாலைகள் அதிகமாக மூடப்படக்கூடிய வாய்ப்புகளைக் கொண்ட பிரதேசங்களில் அதாவது பிள்ளைகளின் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் பிள்ளைகளை ஒரு மையத்தில் இணைத்து, வளங்களையும் ஒரு மையத்தில் இணைத்து,கொத்தணிப் பாடசாலைகளை உருவாக்கிய பின் அப்பாடசாலைகளை நோக்கி பிள்ளைகளை ஏற்றி இறக்குவதற்கு உரிய வாகன ஏற்பாடுகளை செய்யலாம் என்று ஓய்வுபெற்ற கல்வி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். வவுனியா வடக்கு வலயத்தில் அவ்வாறு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பு ஒன்றின் உதவியோடு வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீவுப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவப் பாடசாலையும் அவ்வாறு வாகனத்தை விட்டு ஊர் ஊராக பிள்ளைகளை ஏற்றி இறக்குகிறது. அதில் மதமாற்ற உள்நோக்கங்கள் இருப்பதாக ஒரு பகுதி இந்துக்கள் மத்தியில் சந்தேகங்கள் உண்டு. அதே சமயம் கோவில்களைப் புனரமைப்பதற்குக் கோடி கோடியாகச் செலவழிக்கும் பக்தர்களும் அறக்கட்டளைகளும் தமது ஊர்களில் உள்ள பிள்ளைகளை ஏற்றி இறக்குவதற்கு வாகன ஏற்பாடுகளைச் செய்யலாம். வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மட்டும் 50 பாடசாலைகள் இதுவரை மூடப்பட்டு விட்டன, அவற்றில் பெரும்பாலானவை ஒரு காலகட்டத்தில் நவீன யாழ்ப்பாணத்தைச் செதுக்கிய கல்விச்சூழலைக் கட்டமைத்தவை. கடந்த இரு நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட மிஷன் பாடசாலைகளுக்கு போட்டியாகவும் எதிராகவும் இந்து மறுமலர்ச்சியாளர்களும் அறக்கட்டளைகளும் கட்டியெழுப்பிய பாடசாலைகள் யாழ்பாணத்தின் மூலை முடுக்கெல்லாம் காணப்பட்டன. ஊரின் ஒரு பகுதியில் ஓர் அமெரிக்க மிஷன் பாடசாலை அல்லது ரோமன் கத்தோலிக்க பாடசாலை காணப்படுமாக இருந்தால் அதற்குப் போட்டியாக சற்றுத் தள்ளி ஒரு சுதேச பாடசாலை கட்டப்படும். அதற்கு சரஸ்வதி, சன்மார்க்கா, சைவப்பிரகாசா… என்று ஏதாவது ஒரு இந்து மதம் சார்ந்த பெயர் வைக்கப்படும். ஊருக்குள் குறுகிய தூரத்தில் இவ்வாறு பாடசாலைகள் கட்டப்படுகையில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அங்கே போய்ப் படிக்குமாறு உந்தித் தள்ளினார்கள். இவ்வாறு போட்டிக்குப் பள்ளிக்கூடம் கட்டும் ஒரு போக்கின் விளைவாகவும்தான் நவீன யாழ்ப்பாணம் மேலெழுந்தது. இனப்பிரச்சினைக்கு அமெரிக்க மிஷனும் ஒருவிதத்தில் காரணம் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி கூறியிருக்கிறார். அரசாங்கம் தரப்படுதலை அறிமுகப்படுத்திய பொழுது அதனைத் தமிழர்கள் இன ஒடுக்குமுறையாக வியாக்கியானப்படுத்தினார்கள் என்ற பொருள்பட அவருடைய விளக்கம் அமைந்திருந்தது. மிஷன் பாடசாலைகளின் உழைப்பினால் யாழ்ப்பாணத்தில் கல்வி கற்றவர்களின் தொகை அளவுப் பிரமாணத்தைவிட அதிகமாக இருந்தது என்று அவர் விளங்கி வைத்திருந்திருக்கக் கூடும். இவ்வாறு போட்டிக்கு கட்டப்பட்ட பாடசாலைகளில் ஒருபகுதி இப்பொழுது மூடப்பட்டு வருகின்றது. கந்தர்மடத்தில் ஒரு பாடசாலை. கந்தர்மடம் சைவப் பிரகாச வித்தியாலயம். ஆறுமுகநாவலரால் கட்டப்பட்ட இந்தப் பாடசாலைக்கு ஈழப்போர் வரலாற்றில் முக்கியத்துவம் உண்டு. 1983ஆம் ஆண்டு நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்த பாடசாலை ஒரு வாக்களிப்பு நிலையமாக இருந்தது. அங்கே காவலுக்கு நின்ற படை வீரர்கள் மீது விடுதலைப் புலிகள் இயக்கம் தாக்குதல் நடத்தியது. அதில் சிப்பாய்கள் கொல்லப்பட்டார்கள். ஈழப் போரில் முதல்முதலாக ஒரு ரைஃபிள் கைப்பற்றப்பட்ட தாக்குதல் அது. அந்தப் பாடசாலையின் கழிப்பறைச் சுவரில் அந்தச் சுவரைத் தாண்டிக் குதித்துத் தப்ப முயன்ற ஒரு சிப்பாயின் ரத்தத்தில் தோய்ந்த கை அடையாளங்கள் பதிந்திருந்தன. அந்தப் பாடசாலை சில ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டு விட்டது. தமிழ் மக்கள் தமது ஜனத்தொகை தொடர்பாக சிந்திக்க வேண்டிய காலகட்டம் எப்பொழுதோ வந்து விட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளைப் பெறுமாறு குடும்பங்களை ஊக்குவிக்க வேண்டிய காலம் எப்பொழுதோ வந்துவிட்டது. அவ்வாறு அதிகம் பிள்ளைகளைப் பெறும் குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையைக் கொடுக்கத் தேவையான கட்டமைப்புகளை தமிழ் மக்கள் உருவாக்க வேண்டும். அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்கள் இந்த விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களை எவ்வாறு ஒருங்கிணைக்கலாம் என்றும் சிந்திக்கலாம். கல்வித்துறையில் புலம்பெயர்ந்த தமிழ்ச் தாராளமாக உதவி வருகிறது. தனி நபர்களும் தன்னார்வ நிறுவனங்களும் பரவலாகத் தொண்டு செய்து வருகிறார்கள். தாம் படித்த பாடசாலையை மேம்படுத்த வேண்டும் என்று தாகத்தோடு பழைய மாணவர்கள் பல பாடசாலைகளுக்கு காசை அள்ளி வழங்குகிறார்கள். தமது கிராமத்தின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்காக தமது முகத்தைக் காட்டாமலேயே அமைதியாக உதவிகளை செய்து கொண்டிருக்கும் பலரை நான் அறிவேன். புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலர் பாடசாலைகளில் பழைய மாணவர் சங்கங்களின் மீது அளவுக்கு மிஞ்சி செல்வாக்கு செலுத்துவதும் அங்கே குழப்பங்களை ஏற்படுத்துவதும் தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்டுதான். ஆனால் போர்க்காலத்திலும் 2009க்குப் பின்னரும் ஈழத் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக கல்வித்துறையில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் உதவி மகத்தானது. அதேசமயம் புலப் பெயர்ச்சி தொடர்ந்து நிகழ்திறது. தமது முதல் பட்டப்படிப்பை முடித்த பலருக்கும் புலப்பெயர்ச்சிதான் அடுத்த கவர்ச்சியான தெரிவாகக் காணப்படுகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை ஒரு பகுதி இளையோருக்கு கவர்ச்சியான முன் உதாரணமாக மாறிவிட்டது. இதனால் தொடர்ச்சியாக புலப்பெயர்ச்சி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இதுவும் தமிழ்ச் சனத்தொகையைக் குறைக்கின்றது. தமது நாட்டிலேயே வாழ வேண்டும்;தமது தாய் நிலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்; தனது அறிவையும் அனுபவத்தையும் தனது தாய் நிலத்துக்காக அர்ப்பணிக்க வேண்டும்; தமது வேரிலே நிலைத்திருந்து தமது சமூகத்துக்குப் பூத்துக் காய்க்க வேண்டும் என்ற இலட்சியப் பற்றை இளைய தலைமுறைக்கு ஊட்டக் கூடிய எத்தனை தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு? இதனால் சனத்தொகை மேலும் குறைந்துகொண்டே போகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஆசனம் குறைந்துவிட்டது. இவ்வாறாக சனத்தொகை வீழ்ச்சியின் பின்னணியில், ஒரு காலம் போட்டிக்கு பாடசாலைகளைக் கட்டிய ஒரு சமூகம் இப்பொழுது பாடசாலைகளை மூடிக்கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தேசிய அபாயகரமான ஒளடதங்கள் சபை அதிகாரிகளுடனான சந்திப்பின்போது வட மாகாண ஆளுநர் ஒரு விடயத்தைப் பரிந்துரைத்திருந்தார்.வடக்கில் போதைப்பொருள் புனர்வாழ்வு மையங்களை உருவாக்குவதற்கு போதிய இடவசதிகள் இல்லையென்றால் அவசரத் தேவைக்கு ஏற்கனவே மூடப்பட்டுள்ள பாடசாலைகளில் பொருத்தமானவற்றை பயன்படுத்தலாமா என்ற பொருள்பட அப்பரிந்துரை அமைந்திருந்தது. ஒரு காலம் போட்டிக்குப் பபாடசாலைகளைக் கட்டிய ஒரு சமூகத்தில் இப்பொழுது போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை பராமரிப்பதற்கு கைவிடப்பட்ட பாடசாலைகள் பரிந்துரைக்கப்படும் ஒரு நிலை? https://www.nillanthan.com/7625/
1 month 2 weeks ago
தமிழ் அரசுக்கட்சி விரும்பினால் எதிர்வரும் வாரம் சந்திக்கத் தயார்; தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு ! வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கையெழுத்திடாத நிலையில், அவர்கள் விரும்பும் பட்சத்தில் எதிர்வரும் வாரம் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தயாராக இருப்பதாக தமிழரசுக்கட்சியிடம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் கடந்த முதலாம் திகதி கொழும்பிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைக்கவிருந்த (அனுப்பிவைக்கப்பட்டுவிட்டது) கடிதத்தில் தமிழரசுக்கட்சி கையெழுத்திடுவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய கடந்த 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தின்போது மேற்படி கடிதத்தில் கையெழுத்திடுவது குறித்துத் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அத்தோடு அன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு இருதரப்பினரும் சந்திப்பதற்குத் தீர்மானித்திருந்ததாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 3 ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் அக்கட்சி உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் காத்திருந்த தமது கட்சியினரை சந்திக்கவில்லை எனவும், அதுபற்றித் தமக்கு அறியத்தரவில்லை எனவும் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார். அதன் நீட்சியாக கடந்த 7 ஆம் திகதி இருதரப்பினருக்கும் இடையில் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்த சந்திப்பு இறுதிநேரம் வரை உறுதிப்படுத்தப்படாததன் காரணமாக, அச்சந்திப்பும் நடைபெறவில்லை எனக் குறிப்பிட்ட கஜேந்திரகுமார், தமிழரசுக்கட்சி விரும்பும் பட்சத்தில் எதிர்வரும் வாரம் சந்திப்பொன்றை நடாத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக அவர்களுக்கு அறியத்தந்திருப்பதாகவும் கூறினார். https://akkinikkunchu.com/?p=336271
1 month 2 weeks ago
உக்ரைன் ஒரு துளி நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது - டிரம்பிற்கு ஜெலென்ஸ்கி பதில் 10 AUG, 2025 | 11:04 AM உக்ரைன் ஒரு துளி நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது என தெரிவித்துள்ள அந்த நாட்டின் ஜனாதிபதி வொளோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி சமாதானத்திற்காக முன்வைத்த திட்டத்தினை நிராகரித்துள்ளார். உக்ரைன் ரஸ்யா செய்த விடயங்களிற்காக அந்த நாட்டிற்கு எந்த வெகுமானங்களையும் வழங்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனியர்கள் தங்கள் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிற்கு வழங்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். ரஸ்ய உக்ரைன் மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கு சில நிலங்களை கையளி;க்கவேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையிலேயே உக்ரைன் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ரஸ்ய உக்ரைன் மோதலிற்கு தீர்வை காண்பதற்கா 15ம் திகதி ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222212
1 month 2 weeks ago
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு தமிழ்த் தலைமைகள் கோருவது முறையற்றது - விஜயதாச ராஜபக்ஷ 10 AUG, 2025 | 12:45 PM (இராஜதுரை ஹஷான்) பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச்செய்ய வேண்டும் என்று தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக வலியுறுத்துவது முறையற்றது. பூகோள பயங்கரவாதத்தை கருத்திற் கொண்டு தேசிய பாதுகாப்பினை முன்னிலைப்படுத்தியதாக இவ்விடயத்தில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் வெளிப்படைத்தன்மையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச்செய்ய வேண்டும் என்று தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக வலியுறுத்துவது முறையற்றது. உலகளாவிய ரீதியில் பயங்கரவாதம் தற்போது பல்வேறு வழிகளில் செயற்படுகிறது.இவ்வாறான நிலையில் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்வது பிரச்சினைக்குரியதாக அமையும். தேசிய பாதுகாப்பினை முன்னிலைப்படுத்தியே அனைத்து தீர்மானங்களையும் எடுக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பில் எமது அரசாங்கத்தில் வெளிப்படையான பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.சிவில் தரப்பினர் உட்பட கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதாந்திரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். சட்டவரைபு வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கும் தருவாயில் இருந்த நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதாக தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யும் காலவரையை ஜனாதிபதியால் குறிப்பிட முடியுமா, இந்த அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் என்ற நம்பிக்கை கிடையாது.அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் ஒன்றிணையும் போது பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் ஆயுதமாக பயன்படுத்தும். ஜனாதிபதி சட்டத்தரணி தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இருப்பினும் இதுவரையில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் வெளிப்படையானத் தன்மையில் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது சந்தேகத்துக்குரியது என்றார். https://www.virakesari.lk/article/222219
1 month 2 weeks ago
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் நடந்து முடிந்த 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாளுக்கு பதிலளித்த விதம் குறித்து பெற்றோர்கள் மாணவர்களிடம் கேள்வி கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி கோரியுள்ளார். மாணவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தைக் கழிக்க வாய்ப்பளிக்குமாறும், புலமைப்பரிசில் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு, குழந்தையின் குழந்தைப் பருவத்தை அழிக்க வேண்டாம் என்றும் பெற்றோர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், புலமைப்பரிசில் பரீட்சை என்பது ஒரு பரீட்சை மட்டுமே, இதன் காரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார். மேலும் கருத்து வௌியிட்ட அவர், "குறிப்பாக இந்த சிறு பிள்ளைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும். புலமைப்பரிசில் பரீட்சையை அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பாகும். பிள்ளைகள் தங்கள் திறனுக்கு ஏற்ப பரீட்சை எழுதுகிறார்கள். பிள்ளைகளின் திறன்கள் வேறுபட்டவை, எனவே பிள்ளைகளை ஒப்பிட்டுப் பார்த்து, இன்று பரீட்சையில் மாணவர்கள் என்ன எழுதினார்கள் என்று கேட்டு? அவர்கள் தவறான பதில் எழுதினால், அவர்களை திட்டவோ தண்டிக்கவோ வேண்டாம். அவர்கள் சரியான பதில் எழுதினாலும் சரி, தவறான பதில் எழுதினாலும் சரி, அந்த நேரத்தில் பிள்ளைகள் வினாத்தாளை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதே முக்கியம். எனவே நம் பிள்ளைகள் எப்படி பதிலளித்தாலும் சரி, பிள்ளைகளின் குழந்தைப் பருவத்தை நாம் திரும்பப் பெற முடியாது. எனவே இந்த குழந்தைப் பருவத்தை பதில்களை எழுதுவதை அடிப்படையாகக் கொள்ளாதீர்கள். புலமைப் பரிசில் பரீட்சை என்பது பிள்ளைக்கு ஒரு பரீட்சை மட்டுமே. இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த பரீட்சைகளை எதிர்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளனர். அதனால் புலமைப் பரிசில் பரீட்சையை அடிப்படையாக கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என்று நான் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றார். https://adaderanatamil.lk/news/cme5dz9pc02d4qp4kfpcwl3e2
1 month 2 weeks ago
முன்னாள் ஜனாதிபதிகள் கலந்துரையாடல்! அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதிகள் அனைவரும் ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். இதன்படி, இதன் சட்டபூர்வமான நிலையை ஆராய அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளும் சுமார் 50 சட்டத்தரணி கொண்ட குழுவை அணுகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கலந்துரையாடல்கள் மற்றும் நடவடிக்கைகளுக்காக முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் சட்டத்தரணிகள் இணைந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மலர் சாலையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் முதற்கட்ட கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் பிரதிநிதிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார். இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டாலும், அரசாங்கம் நினைப்பது போல் அதை செயல்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அடுத்த 14 நாட்களுக்குள் இந்த புதிய சட்டமூலத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முன்னாள் ஜனாதிபதிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/முன்னாள்-ஜனாதிபதிகள்-கலந/
1 month 2 weeks ago
“LTTE பயங்கரவாதியான உங்கள் கணவர்” சுகாதார சேவைகள் பணிப்பாளர் எழுதிய கடிதத்தால் சர்ச்சை! adminAugust 10, 2025 மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் அண்மையில் மாவட்டத்தில் சுகாதார உத்தியோகத்தர் ஒருவருக்கு எழுதிய கடிதம் பரவலாக எதிர்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த கடிதமானது குடும்ப நல சுகாதார அலுவலரான இன்பராசா விஜயலட்சுமி என்பவருக்கு எதிராக எழுதப் பட்டதோடு, அவரது கணவர் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியாக உள்ள நிலையில் அவரை குறித்த கடிதத்தில் இணைத்து ‘எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதி’ என குறிப்பிட்டு குறித்த கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளார். -குறித்த கடிதத்தில் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதி என குறிப்பிட்டுள்ளமை விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எதிராக அவருடைய பணியாளர்கள் தொடர்ந்தும் பல்வேறு குற்றச் சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர். பலரை பழி வாங்கும் நோக்குடன் அவர்களுக்கு இடமாற்றம் வழங்குதல்,மாதாந்த சம்பளத்தை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. இவரால் சுமார் 10 ற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,அவர் தேசியமக்கள் சக்தி அரசாங்கத்தை ஆதரித்து தனது முகநூல் பக்கத்தில் தொடர்ச்சியாக கருத்துக்களை பரிமாறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -பாதிக்கப்பட்ட பணியாளர்கள் வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளிநாடு சென்றுள்ளமையினால் அவர் நாட்டிற்கு திரும்பிய நிலையில் அவருக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். https://globaltamilnews.net/2025/219051/
1 month 2 weeks ago
குறிகாட்டுவானுக்கு அமைச்சர்கள் பயணம்! adminAugust 10, 2025 குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்றைய தினம் சனிக்கிழமை (09.08.25) குறிகட்டுவான் இறங்குதுறைக்கு துறைசார் அதிகாரிகளுடன் நேரடியாக விஜயம் செய்திருந்தார். அமைச்சருடனான விஜயத்தில் கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக செயலர் கே. சிவகரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் குரூஸ், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர்,நெடுந்தீவு பிரதேச செயலாளர், வேலணை உதவிப் பிரதேச செயலாளர், கடற்படை அதிகாரிகள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள். https://globaltamilnews.net/2025/219055/
1 month 2 weeks ago
ரஷ்ய மக்களும் போரை விரும்பவில்லை. ஆனால் அவர்களின் விருப்பங்களை மேட்டிமை தங்கிய புட்டின் கண்டுகொள்வதில்லை. 18 வயதுப் பையன்களை கொலைக்களத்திற்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றார். ரஷ்ய மக்கள் புட்டினையும் அவரின் அடிவருடிகளையும் துரத்த வழியில்லாமல் இருக்கிறார்கள்
Checked
Mon, 09/29/2025 - 09:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed