புதிய பதிவுகள்2

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

1 month 2 weeks ago
வீரப்பன(சந்தன கடத்தல்) படுகொலைசெய்து அரசியல் செய்வது போல,இந்தியாவில் உள்ள சில மார்க்ஸிட் பயங்கரவாதிகளை கொலை செய்து அரசியல் செய்வது போல .... நம்ம போராட்ட அரசியலையும் நசுக்குவதற்கு முயற்சி செய்கின்றனர் ....சிறிலங்கா தேசியம் நிலைத்து நிற்க இந்தியா தேசியவாதிகள் தீயா வேலை செய்கின்றனர் என்பது என்னவோ உண்மை... இந்தியா தேசியவாதிகளுக்கு ஒர் கனவு உண்டு ...பிரித்தானியா நாட்டை விட்டு செல்லும் பொழுது ஒன்றாக இருந்த மாதிரி மீண்டும் பாகிஸ்தான்,பங்களதேஷ்,இந்தையா எல்லாத்தையும் ஒன்றாக்க வேணும் எண்டு... கனவு தானே காணட்ட்டும் ...காசா? பணமா?

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

1 month 2 weeks ago
தாயகத்தில் இருந்து முடிவுகள் வரவேண்டும் என்கிறோம் ஆனால் இதுவரை விளக்கேற்றும் லுக்கு ஆதரவாக ஒரு குரல் கூட வரவில்லை. இங்கே என்னை பற்றி அவர்களே வரைந்து வைத்த பிம்பத்தை நினைவில் கொண்டு எழுதுகிறார்கள். ஆனால் எனது நிலைப்பாடு ஆதாரங்களுடன் நிறுவ வேண்டிய கடப்பாடு எமது தலைமுறைகளுக்கு இருக்கிறது. அதை நாம் செய்ய தவறுவோமானால் ... எத்தனை தலைமுறை யாராலும் இதற்கு விடை கிடைக்காது. அவரவர் தத்தமக்கு ஏற்றாற்போல் அதால் போனார் இதனால் வந்தார் இப்படி நடந்திருக்கலாம் என்று தான் இருக்கப் போகிறது. உதாரணம் சுபாஷ் சந்திரபோஸ்....

செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்

1 month 2 weeks ago
சர்வதேச விசாரனையை இந்தியா கேட்க மாட்டாது என்பது செந்திலுக்கு நன்றாகவே தெரியும் ... தமிழ்நாட்டு மீனவர்களுக்கும்,இலங்கை தமிழ் மீன்வர்களுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியவில்லை ...செம்மனிபுதைகுழிக்கு நீதி கோருகின்றார் ..

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

1 month 2 weeks ago
வீரவணக்கம் செலுத்துவதாக இருந்தால் நவம்பர்27 திகதி மாவீரர் நாளில் செய்வதே சரியானது.புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் இயற்கை சாவு அடைந்தால் கூட அவர்கள் மாவீரர்கள் என்றே கருதப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்படுவதே புலிகளின் வழக்கம்.ஆனால் மாவீரர் நாளுக்கு நாலே மாதங்கள் மட்டுமே இலரக்கும் நிலையில் ஓகஸ்ட் 02 ஆம் திகதி நடத்த வேண்டிய அவசரம் என்ன?அடுத்த மாதம் ஜெனிவா மனித உரிமைச்சபையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கை வரப்போகின்றது. செம்மணிப் புதை குழிகள் விவகாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் தாக்கத்தை மடைமாற்ற வேண்டும்.எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப்பார்த்தால் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்த நிகழ்வு நட்த்தப்பட்டிருக்கலாம். நிச்சயம் இதன் பின்னணியில் பல மறைகரங்கள் இந்திய இலங்கை புலனாய்வு அமைப்புகள் சம்பந்தப்பட்டிருக்கலாம். போலித்துவாராகவை உருவாக்கியவர்களும் இந்த நினைவேந்தலை செய்தவர்களும் ஒரே மறை கரங்களால் இயக்கப்படும் ஆட்களே.

செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்

1 month 2 weeks ago
திமுக புலிகள் ஆதரவு நிலைபாடு எடுத்து தனது ஆட்சியை இழந்தது .கொலைகார இந்திய இராணுவம் இலங்கையைவிட்டு வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இருந்தது. புலிகள் ஒழிப்பு நடவடிக்கை என்று படித்து கொண்டிருந்த இலங்கை தமிழ் மாணவர்களுக்கு ஜெயலலிதாவால் நிறுத்தபட்ட விசாவை மீண்டும் வழங்கியது. சசிகாந்த செந்தில் என்பவர் இலங்கை தமிழர்கள் மீது நடத்தபட்ட இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு விசாரணை வேண்டும் என்று இந்தியாவை கேட்டு இருக்கிறாரா இந்திய இராணுவத்தின் கொடூரங்களுக்கு மன்னிப்பு வருத்தமாவது தெரிவித்து இருக்கின்றாரா

நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை

1 month 2 weeks ago
ஒருவருக்கு இல்லாத இறைவன் மற்றவருக்கு இருப்பார் , சந்திரா (அமைச்சர் சந்திர சேகரா)முதல் பிரதமர் ஹரணி வரை,ஜனாதிபதி அனுரா முதல் யாழ் மாவட்ட ஜெ.வி.பி உறுப்பினர்கள் வரை இன்று நல்லூரான் திருவடியை நாடி வருகின்றனர் ...அன்று விபூதி வேண்டாம் என சொல்லியவர்கள் இன்று தரிசனம் செய்கின்றனர் ...

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

1 month 2 weeks ago
அது அந்த தளத்தின் உரிமையாளரின் குழுவில் உள்ளவர்கள் மட்டுமே அதை பார்க்க முடியும் என்று வந்தது

நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை

1 month 2 weeks ago
அரசியல் வாதிகள் (முக்கியமா ஜெ.வி.பியினர்) மட்டும் சிறிலங்கா தேசியம் பேச வேணும் என்ற சட்டம் இல்லை தானே... திருடர்களும் ஒன்றுபட்ட இலங்கைய விரும்புகின்றனர் சிறிலங்கா தேசியத்தை வளர்க்க அவர்கள் இலங்கையின் பல பாகங்களிலிருந்து நல்லூருக்கு வந்து திருடி அதை தங்கள் பகுதியில் விற்பனை செய்து சிறிலங்கா தேசியத்துக்கு மேலும் பலம் சேர்க்கின்றனர்... தமிழ் தேசியத்தை சிங்கள தேசியவாதிகள் திருட,நகை திருடர்கள் நகைகளை திருடுகிறார்கள் ...வாழ்க திருடர் தேசியம்..

மேதகு- ஈழத்தமிழர்களின் அடையாளம்- பா.உதயன்

1 month 2 weeks ago
மேதகு- ஈழத்தமிழர்களின் அடையாளம்- பா.உதயன் எல்லா மனிதர்களும் பிறக்கும் போதே எல்லா சுதந்திரத்துடனும் பிறக்கிறான் என ஆங்கிலேய தத்துவஞானி ஒருவன் கூறினான்.( All human beings are born free and equal). இவனது உரிமைகள் பறிக்கப்படும் போதும் நசுக்கப்படும் போதும் தனக்கான இருப்பை தங்க வைத்துக் கொள்ள அற ரீதியாகவோ ஆயுத ரீதியாகவோ போராடித் தான் தம் உரிமையை மீட்க முடியும் என்ற அடிப்டையிலே இலங்கைத் தீவில் ஈழத்து தேசிய இனத்துக்கு இனவாத சிந்தனை கொண்ட சிங்கள ஆட்சியாளர்களினால் வலிந்து ஆக்கப்பட்ட கொடுமையின் விளைவே இந்த தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டம் என்ற வழிமுறையைப் பின்பற்ற வைத்தது. இந்த அடிப்படையில் ஈழத் தமிழரின் வலிகளையும் துன்பத்தையும் அவனது தேசிய அடையாளத்தையும் உலகறியச் செய்தான் தனி மனிதனாக நின்று ஒரு இளைஞன் “இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.” என்று வரலாறு ஒன்றை எழுதிச் சென்றிருக்கிறான். வன்முறை எமது வாழ்வல்ல நாமாகவே விரும்பி இந்த ஆயுதத்தை கையில் எடுக்கவில்லை. சிங்கள ஆட்சியாளர்கள் உண்மையான பெளத்தர்களாக இருந்திருந்தால் நாம் ஆயுதம் தூக்கி இருக்க மாட்டோம்.(If the Sinhala rulers had been real Buddhists we would not have taken up arms). அவர்களை போன்று எமக்குமான சம உரிமையை வழங்கி இருந்தால் நாம் இந்த பாதைக்கு வந்திரிருக்க மாட்டோம் என்று கூறி தனி ஒரு மனிதனாக நின்று திருப்பி அடித்தால் தான் எம் மக்களுக்கான உரிமையை அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு மூன்று படைகளை கட்டி சம பலமாக நின்று தமிழன் அடையாளத்தை உலகறியச் செய்தவன். ஒரு காலத்தில் உலகம் எம்மை பார்த்ததும் அதேவேளை எம்மை பேச்சு வார்த்தைக்கு அழைத்ததும் எமக்குள் இருந்த இந்த படை வலுச் சமநிலையாகும். போராட்டம் என்பது பூக்களின் மேல் நடப்பது இல்லை. முள்ளும் கல்லுமாக எத்தனையோ தடைகளை தாண்டி நடக்க வேண்டும். இதில் சரிகளோடும் பிழைகளோடும் துரோகங்களோடும் கடந்து போவதென்பதும் உலக பூகோள அரசியலின் மாற்றங்களோடும் அவர் அவர் நலன் சார்ந்த மாற்றங்களுடன் பயணித்து எமது இலக்கை அடைவதென்பதும் இலகுவானதல்ல. எல்லா விடுதலைப் போராட்டங்களும் சரியோடும் பிழைகளோடுமே நகர்ந்திருக்கின்றன. எல்லா கைகளுமே தூய்மையான கைகள் இல்லை பாலைஸ்தீன விடுதலை வீரன் யாசிர் அரபாத்தின் கையிலும் கியூபா விடுதலை வீரன் பிடல் காஸ்ரோ கையிலும் சேகுவேரா கைலும் இருந்ததெல்லாம் துப்பாக்கி தான் இவர்கள் எல்லோருமே சரிகளோடு பிழைகளோடும் தான் தம் இனத்தின் போராட்டத்தை கொண்டு சென்றிருக்கிறார்கள் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் யார் ஒருவன் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்காக போராடி சென்றானோ அவன் வாழ்வும் வரலாறும் நினைவு கூரப் பட வேண்டும். இன்று இவர்கள் போற்றத் தக்க தலைவர்களாக அந்த மக்களால் நினைவு கூரப் படுகிறார்கள் என்றுமே மறக்க முடியாத தலைவர்களாக மதிப்பளிக்கப் படுகிறார்கள் அவர்கள் இன்று இல்லை என்றாலும் அவர்கள் காட்டிய பாதையில் இருந்து போராடுகிறார்கள் இதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். உலகின் எந்தப் போராட்டமாக இருந்தாலும் ஆதிக்க சக்திகளின் பூகோள அரசியல் நலனுக்கு ஏற்பவும் புதிய உலக ஒழுங்கின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே அந்த போராட்டத்தின் தோல்வியும் வெற்றியும் தங்கி இருக்கும். பூகோள அரசியல் என்பது ஒரு சதுரங்க பலகை போலவே Geo Politics is like a chessboard, அதிகாரம் மிக்க நாடுகள் தங்கள் சுயநலத்தின் அடிப்படையில் இந்த ஆட்டத்தை ஆடுகின்றன. இன்று சர்வதேசத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளும் அதையொட்டிய போர்களும் இந்த நலன்களொடு தான் நகர்கின்றன. நீதி, தர்மம், அறம், மனிதாபிமானம், எல்லாம் இன்று இருக்கும் உலக ஒழுங்கில் ஒன்றுமே இல்லை. ஆதிக்க வலு மிக்க சக்திகள் அவர் அவர் பூகோள அரசியல் சுயநலன் சார்ந்து அங்கீகரிப்பதோ அழிப்பதோ அவர் கைகளில் தான் இருக்கிறது இதில் தமிழர் போராட்டமும் சிக்குண்டு பயங்கரவாதத்துக் எதிரான யுத்தமென கூறி ஒரு இனத்தின் விடுதலை போராட்டம் பெரும் பூகோள அரசியலில் சுய நலன் சார்ந்தவர்களால் எம் கண்ணை குத்தி அளிக்கப்பட்ட வரலாற்றோடு இது மெளனிக்கப் பட்டது. வரலாறுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் நடந்த வரலாறுகளை யாரும் மறைக்கவோ அல்லது அந்த மக்களிடம் இருந்து அந்த நினைவுகள் பிரிக்கவோ முடியாது. தன் இனத்தின் விடுதலைக்காக நின்ற இடத்திலேயே நின்று போராடியவன் எங்குமே சென்று ஒளித்து இருக்க மாட்டான் இது அவனுக்கான அடையாளம் இல்லை அந்த வகையில் ஒரு இனத்தின் வரலாற்றை எழுதிய மேதகு என்ற வீரனின் வரலாற்றை யாராலும் மறைக்க முடியாது. வெற்றி தோல்விகளுக்கு அப்பால் யார் ஒருவன் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்காக போராடி சென்றானோ அவன் வாழ்வும் வரலாறும் அந்த மக்களால் நினைவு கூரப்பட வேண்டும். தன் நலனும் சுயநலன் உடன் கூடியவர்கள் எல்லா சமூகத்திலும் இருப்பார்கள் இவர்களை தவிர்த்து ஈழத்து மக்கள் யதார்த்தத்துடன் கூடிய அறிவு பூர்வமான சிந்தனையுடன் கூடிய முடிவுகளை எடுக்க வேண்டும் இதில் நம்பிக்கையோடு அவன் காட்டிய பாதையில் எல்லோரும் ஒற்றுமையாக பயணிப்பதே அந்தத் தலைவனுக்கு நாம் நன்றியோடும் நினைவோடும் செய்யும் கடமையாகும். பா.உதயன் ✍️

திவால் நிலையில் நிறுவனங்கள், அமலாக்கத்துறை விசாரணை - அனில் அம்பானியின் வணிக சாம்ராஜ்யம் வீழ்கிறதா?

1 month 2 weeks ago
பொதுவாக இந்த பெரிய நிறுவனங்களின் மோசடிகள் வெளிவருவதில்லை, இந்தியாவில் பொதுத்துறையில் வருமானம் ஈட்டும் துறைகளை தமக்கு நெருங்கிய பெரும் பணமுதலைகளிடம் அனுகூலங்கள் பெற்றுக்கொண்டு கொடுக்கும் இந்திய அரசியல்வாதிகள், ஆனால் இந்த விவகாரத்தில் ஏனோ இது நிகழ்ந்துள்ளது, அதற்கு இந்த அம்பானி சகோதரர்களிடையே நிலவும் போட்டி காரணமாக இருக்க கூடும், முகேஸ் அம்பானி தனது ஜியோ தொலைதொடர்பினை இந்திய தொலைதொடர்பான பி எஸ் என் இல் இனை பயன்படுத்தி வளப்படுத்தினார் என கூறப்படுகிறது, அதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருந்தனர் என கூறப்பட்டது. அதானி பற்றி கூறத்தேவையேயில்லை.

55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சதீவை மீட்பது எப்போது? - சீமான் கேள்வி

1 month 2 weeks ago
பாதிக்கப்படும் ஏழை இலங்கை தமிழ் மீனவர்கள் பற்றி எந்த கவலையும் இல்லாமல் தாயும் பிள்ளையானாலும் வாயும் வறும் வேறு என்பந்தனை உணர்த்துகிறார், ஆனாலும் எமக்குத்தான் புரிவதில்லை.

நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை

1 month 2 weeks ago
நகைகளை காட்டுவதற்காக கோயிலுக்கு போகக்கூடும், ஆனால் ஆண்களின் சட்டைகளை உருவுகிறார்கள் ஒரு புறம், மறுபுறம் திருடர்கள் நகைகளை உருவுகிறார்கள்.🤣

போர் முயற்சிகளுக்கான உக்ரைன் மக்களின் ஆதரவு சரிந்தது

1 month 2 weeks ago
இந்த ஆய்வறிக்கை ஒரு முக்கியமான யதார்த்தத்தினை காட்டுகிறது, அது உக்கிரேன் மக்களின் மனவோட்டத்தினை தெளிவாகக்காட்டுகிறது. ஆனால் இந்த கட்டுரை மற்றும் உலக பிரச்சார ஊடகங்கள் கூறுவது போல புட்டினும் செலன்ஸ்கியும் சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை, இரஸ்சியாவினை பொறுத்தவரை செலன்ஸ்கி ஒரு காலாவதியான அரச தலைவர் (அதுதான் யதார்த்தமும் கூட), அவருடனான் உடன்பாடு சட்ட ரீதியாக ஏற்றுகொள்ளப்படும் நிலை காணப்பட்ட போதும் இரஸ்சியா செலன்ஸ்கியுடனான சந்திப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கவிரும்பவில்லை என தோன்றுகிறது, மாறாக புதிய தேர்தல் மூலம் இரஸ்சிய சார்பு அரசு மூலம் தமக்கு சாதகமான ஒரு தீர்வை எட்ட முனையும் முயற்சியில் ஈடுபட விரும்புவது போல தெரிகிறது. இதனிடையே செலன்ஸ்கி மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொள்ளவிரும்பவில்லை என தெரிகிறது, அவ்வாறு தேர்தலில் செலன்ஸ்கி போட்டியிட்டால் தோல்வியுற வாய்ப்புள்ளதாக கருதகூடும், ஐரோப்பிய ஒன்றியம் செலன்ஸ்கியிற்கு மாற்றீடாக சலூஸ்னியினை ஆட்சி பீடமேற்ற முயற்சிப்பதாக கருத்து நிலவுகிறது, அது தொடர்ந்தும் இரஸ்சிய எதிர்ப்பு நிலையினை தொடர்வதனை உறுதிப்படுத்தும். இந்த போர் களம் இரு சக்திகளுக்கிடையேயான அதிகாரப்போடியான களமாக மாறியுள்ளது, இந்த மேற்கு மற்றும் இரஸ்சிய அதிகாரப்போட்டியில் உக்கிரேனியர்கள் சிக்கிக்கொண்டுள்ளார்கள். மேற்கு உக்கிரேனை பலப்படுத்த ஒரு தற்கால யுத்த நிறுத்தத்தினை எதிர்பார்க்கிறார்கள், அதன் மூலம் தொடர்ந்து உக்கிரேனை ஒரு கருவியாக தமது அகிகாரப்போட்டிக்கு பயன்படுத்துவதற்கு, ஆனால் இரஸ்சிய அதிபர் எந்த நிரந்தர தீர்வற்ற புகைப்பட சந்திப்புக்களை விரும்பவில்லை என கூறியுள்ள நிலையில் ட்ரம்ப் புட்டின் சந்திப்பு நிகழவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேய்மான போரில் உக்கிரேனிடம் தற்போது எந்த துருப்புசீட்டும் இல்லை, ஆனால் இந்த போரை உடனடியாக முடிவிற்கு கொண்டுவராவிட்டால் இரஸ்சிய நில ஆக்கிரமிப்புடன் ஒரு இரஸ்சிய பொம்மை ஆட்சி உக்கிரேனில் ஏற்படலாம் என கருதுகிறேன், அதனை மேற்குலகு தடுக்க உடனடி போர்நிறுத்தம் அவசியமாகிறது. ஆனால் போரும் சமாதானமும் இரஸ்சியாவின் கைகளிலேயே இருக்கிறது, அதற்கு காரணம் உலக ஒழுங்கில் ஏற்பட்டுள்ள மாற்றம், என்றுமில்லாதவாறு மேற்கு இராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பலமிழந்து காணப்படுகிறது. இது உலகிற்கு ஒரு ஆபத்தான சூழ்நிலையாகும், மாற்றங்கள் பெரிய அழிவுகளுடனேயே வரலாறுகளில் நிகழ்ந்துள்ளது.

"மூன்று கவிதைகள்"

1 month 2 weeks ago
கவிதைகள் அருமை. காலகாலமாக காளையர்க்கு இருக்கும் பிரச்சனையே இவைதானே, காதல், காம ம், கன்னி. பள்ளிக்குப்போய் படிப்பை விட்டதும், பாடையில போறளவு உயிரை விடுறதும்.

போர் முயற்சிகளுக்கான உக்ரைன் மக்களின் ஆதரவு சரிந்தது

1 month 2 weeks ago
ஆகஸ்ட் 7, 2025 போர் முயற்சிகளுக்கான உக்ரைனின் ஆதரவு சரிந்தது பொதுமக்கள் வாஷிங்டன் மீது வெறுப்பு, விரைவான நேட்டோ அணுகலுக்கான நம்பிக்கையை இழக்கின்றனர் பெனடிக்ட் விகர்ஸ் எழுதியது லண்டன் - மோதலின் ஆரம்ப நாட்களிலிருந்து வெற்றி பெறும் வரை போராடுவதற்கான ஆதரவு கடுமையாகக் குறைந்துவிட்டதால், பெரும்பாலான உக்ரேனியர்கள் இப்போது ரஷ்யாவுடனான போரை பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்கள். நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான அவர்களின் நம்பிக்கைகள் மங்கிவிட்டன, அமெரிக்கத் தலைமையின் ஒப்புதல் சரிந்துவிட்டது என்றாலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவை உக்ரேனியர்கள் இன்னும் முக்கியமாகக் கருதுகின்றனர். இருப்பினும், அது எப்போது வேண்டுமானாலும் விரைவில் நடக்கும் என்று பெரும்பாலானோர் சந்தேகிக்கின்றனர். போருக்கு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடுவதற்கான உக்ரேனிய மக்களின் ஆதரவு புதிய வீழ்ச்சியை எட்டியுள்ளது. ஜூலை தொடக்கத்தில் நடத்தப்பட்ட கேலப்பின் உக்ரைனின் மிக சமீபத்திய கருத்துக் கணிப்பில், 69% பேர் போரை விரைவில் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவருவதை ஆதரிப்பதாகக் கூறியுள்ளனர், ஒப்பிடும்போது 24% பேர் வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடுவதை ஆதரிப்பதாகக் கூறியுள்ளனர். இது 2022 ஆம் ஆண்டில் பொதுமக்கள் கருத்தில் இருந்து கிட்டத்தட்ட முழுமையான தலைகீழ் மாற்றத்தைக் குறிக்கிறது, அப்போது 73% பேர் உக்ரைன் வெற்றி பெறும் வரை போராடுவதை ஆதரித்தனர், 22% பேர் உக்ரைன் விரைவில் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்பினர். பிராந்தியம் அல்லது மக்கள்தொகை குழுவைப் பொருட்படுத்தாமல், உக்ரேனிய மக்களின் அனைத்துப் பிரிவுகளிலும் போர் முயற்சிக்கான ஆதரவு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இராஜதந்திர முயற்சிகள் புதிய உந்துதலைப் பெறுவதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும், புதுப்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளை முன்மொழிவதாகவும் சமிக்ஞை செய்துள்ளார், அதே நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொருளாதாரத் தடைகள் அச்சுறுத்தலுடன் கிரெம்ளினுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறார். இந்த நடவடிக்கைகள் இருந்தபோதிலும், மோதல் பெரும்பாலும் குறையாமல் தொடர்கிறது. தினசரி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் தொடர்கின்றன, மேலும் முன்னணி வரிசையின் பல பிரிவுகளில் சண்டை தீவிரமாக உள்ளது. தீவிர சண்டைக்கு நீடித்த முடிவு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. உக்ரேனியர்களில் பெரும்பான்மையானவர்கள் இப்போது போரை விரைவில் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவருவதை விரும்பினாலும், பெரும்பாலானோர் தீவிர சண்டை விரைவில் முடிவடையும் என்று சந்தேகிக்கின்றனர். நான்கில் ஒருவர் (25%) அடுத்த 12 மாதங்களுக்குள் தீவிர சண்டை முடிவுக்கு வரும் என்று நினைக்கிறார்கள், இருப்பினும் 5% பேர் மட்டுமே அதை "மிகவும் சாத்தியம்" என்று பார்க்கிறார்கள். மூன்றில் இரண்டு பங்கு (68%) பேர் அடுத்த ஆண்டில் தீவிர சண்டை முடிவுக்கு வருவது சாத்தியமில்லை என்று நினைக்கிறார்கள். உக்ரேனியர்கள் வாஷிங்டனை கடுமையாக எதிர்க்கின்றனர், ஆனால் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவிற்கு ஒரு பங்கு இருப்பதாகக் கருதுகின்றனர். போரின் ஆரம்ப மாதங்களிலிருந்து, தங்கள் மிக முக்கியமான இராணுவ கூட்டாளியைப் பற்றிய உக்ரேனியர்களின் கருத்துக்கள் தீர்க்கமாக மாறிவிட்டன. 2025 ஆம் ஆண்டில், 16% உக்ரேனியர்கள் அமெரிக்கத் தலைமையை ஆதரிக்கின்றனர், அதே நேரத்தில் 73% பேர் மறுப்பை வெளிப்படுத்துகின்றனர், இது ஒரு சாதனை உச்சமாகும். 2022 ஆம் ஆண்டில், 66% பேர் அமெரிக்கத் தலைமையை ஏற்றுக்கொண்டபோது, வாஷிங்டன் கட்டியெழுப்பிய அனைத்து நல்லெண்ணங்களும், ஆவியாகிவிட்டன. டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு 2025 ஆம் ஆண்டில் கீவ் மற்றும் வாஷிங்டன் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளன. பிப்ரவரி மாத இறுதியில் ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையே ஒரு பதட்டமான சந்திப்பு அமெரிக்க இராணுவ உதவியில் தற்காலிக இடைநிறுத்தங்களுடன் ஒத்துப்போனது. இதற்கு நேர்மாறாக, இந்த ஆண்டு ஜெர்மனியைப் பற்றிய கருத்துக்கள் கணிசமாக மேம்பட்டுள்ளன. போரின் ஆரம்ப மாதங்களில் ஜெர்மனி மிகவும் எச்சரிக்கையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதிலும், பெர்லினின் தலைமைத்துவ ஒப்புதல் 63% என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. ரஷ்யாவின் ஒப்புதல் மிகக் குறைவாகவே உள்ளது (1%), அதே நேரத்தில் போர் தொடங்கியதிலிருந்து சீனா தொடர்ந்து குறைந்த மதிப்பீடுகளைப் பெறுகிறது (8%). அமெரிக்கத் தலைமையின் மீது கடுமையான எதிர்ப்பு இருந்தபோதிலும், பெரும்பாலான உக்ரைனியர்கள் இன்னும் மோதலைத் தீர்ப்பதில் வாஷிங்டனுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதாகக் கருதுகின்றனர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் (75%) மற்றும் இங்கிலாந்து (71%) மீதான கருத்துக்களுக்கு ஏற்ப, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா "குறிப்பிடத்தக்க பங்கை" வகிக்க வேண்டும் என்று எழுபது சதவீதம் பேர் நம்புகின்றனர். சமீபத்தில் துருக்கியில் சில பேச்சுவார்த்தைகள் நடந்திருந்தாலும், 55% உக்ரைனியர்கள் அதன் குறிப்பிடத்தக்க ஈடுபாட்டை ஆதரிக்கின்றனர், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிற்கான ஆதரவை விடக் குறைவு. நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியத்தில் விரைவாக நுழைவதற்கான நம்பிக்கைகள் மேலும் மங்குகின்றன நாட்டின் நீண்டகால பாதுகாப்பிற்கு முக்கியமானதாக பலரால் பார்க்கப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் சேர உக்ரைன் நீண்ட காலமாக விருப்பம் தெரிவித்து வருகிறது. போரின் முதல் இரண்டு ஆண்டுகளில், நேட்டோவில் விரைவாக இணைவதற்கான நம்பிக்கைகள் அதிகமாக இருந்தன, தெளிவான பெரும்பான்மை (2022 இல் 64% மற்றும் 2023 இல் 69%) அடுத்த பத்தாண்டுகளுக்குள் உக்ரைன் ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்த்தனர். நேட்டோவில் விரைவாக இணைவதற்கான நம்பிக்கைகள் கடந்த ஆண்டு 51% ஆகக் குறைந்து, தொடர்ந்து கீழ்நோக்கிய போக்கைக் கொண்டுள்ளன, 2025 இல் 32% ஐ எட்டியுள்ளன, இது 2022 ஐ விட பாதி அதிகமாகும். இதற்கிடையில், உக்ரைன் ஒருபோதும் நேட்டோவில் ஏற்றுக்கொள்ளப்படாது என்று நம்பும் சதவீதம் 33% ஆக உயர்ந்துள்ளது, இது அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சேர எதிர்பார்க்கும் சதவீதத்திற்கு ஏற்ப உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் எதிர்காலம் குறித்த நம்பிக்கைகள் நேட்டோவைப் போலக் குறையவில்லை, ஆனால் போரின் முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது இன்னும் மந்தமாகவே உள்ளன. உக்ரேனிய பெரியவர்களில் ஒரு சிறிய பெரும்பான்மையினர் (52%) அடுத்த பத்தாண்டுகளில் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கிறார்கள், இது கடந்த ஆண்டு 61% ஆகவும், 2022 மற்றும் 2023 இல் 73% ஆகவும் இருந்தது. கீழே வரி பெரும்பாலான உக்ரேனியர்கள் சண்டை முடிவுக்கு வரத் தயாராக இருந்தாலும், அது விரைவில் நடக்கும் என்று சிலர் மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். வாஷிங்டனுக்கு பொதுமக்கள் ஒப்புதல் குறைந்துவிட்டாலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று உக்ரேனியர்கள் நம்புகிறார்கள். இந்த ஆண்டு நேட்டோவில் விரைவாக இணைவதற்கான நம்பிக்கைகளில் மற்றொரு தீர்க்கமான மாற்றத்தையும் கண்டுள்ளது, அடுத்த பத்தாண்டுகளில் 32% பேர் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இராஜதந்திர முயற்சிகள் இழுபறியாக இருப்பதால், உக்ரைனின் போர் முயற்சியின் எதிர்காலமும், சர்வதேச சமூகத்துடனான அதன் உறவும் ஆழமாக நிச்சயமற்றதாகவே உள்ளது. கலப் இணையத்தளத்தில் இருந்து கூகிள் தமிழாக்கம். Gallup.comUkrainian Support for War Effort CollapsesNew data from Ukraine show the public favors ending the war with Russia through negotiations, as support for fighting until victory has plummeted.
Checked
Mon, 09/29/2025 - 09:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed