Aggregator
இலங்கை தேசிய எறிபந்து அணிக்கு யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லுாரி வீராங்கனைகள் தெரிவு!
இலங்கை தேசிய எறிபந்து அணிக்கு யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லுாரி வீராங்கனைகள் தெரிவு!
யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லுாரி வீராங்கனைகள் இலங்கை தேசிய எறிபந்து அணிக்கு தெரிவாகியுள்ளனர்
இந்த பெருமைமிகு சாதனைக்காக அவர்களுக்கு கல்லுாரி சார்பாகவும் பழைய மாணவர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். (ப)
இலங்கை தேசிய எறிபந்து அணிக்கு யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லுாரி வீராங்கனைகள் தெரிவு!
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை - முழுமையான யுத்த நிறுத்தத்திற்கான வேண்டுகோளை நிராகரித்தார் ரஸ்ய ஜனாதிபதி
தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாது!
தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாது!
தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாது!
தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையாளர் நாயகத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அனுப்பி வைத்த கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி தவிர்க்க முடியாத காரணத்தினால் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்ய முடியவில்லை என தெரிவிக்கிறோம் - என்றுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாது!
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
அவளைத்தொடுவானேன்....???
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து நிலைய இருக்கைகள் : பயணிகள் அவதி
பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து நிலைய இருக்கைகள் : பயணிகள் அவதி
19 Mar, 2025 | 11:48 AM
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் காணப்படும் இருக்கைகள், அமர முடியாதவாறு உடைந்து காணப்படுவதுடன் அவை எவ்வித பராமரிப்பின்றி காணப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதுமட்டுமின்றி இருக்கைகள் உடைந்து மற்றும் பழுதடைந்து காணப்படுவதால் பயணிகள் எழுந்து நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் எழுந்து நிற்க முடியாதவர்கள் குறித்த இருக்கையில் அமரும் போது உடலில் காயங்கள் ஏற்படுவதாகவும், இருக்கைகளில் இருந்து விழ வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
வடமாகாணத்தின் பிரதான நுழைவாயிலாகவும், பல மாவட்டங்களில் இருந்து வந்து செல்வோர் அதிகமாக கூடும் இடமாகவும் உள்ள வவுனியா பிரதான பேரூந்து நிலையத்தின் நிலை இவ்வாறு காணப்படுவதால் பயணிகள் மிகுந்த அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றமை குறிப்பிடத்தக்கது.
பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து நிலைய இருக்கைகள் : பயணிகள் அவதி | Virakesari.lk
மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!
தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை 60 ஆக குறைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (19) நிராகரித்துள்ளது.
இந்த மனு இன்றைய தினம் பரிசீலிக்கப்பட்டதையடுத்து நிராகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது -வைகோ
19 Mar, 2025 | 02:15 PM
புதுடெல்லி: இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ “கடந்த 40 ஆண்டுகளில் 843 மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள். ஜனவரி 25-ம் தேதி முதல் 45 நாட்களில் பல்வேறு தாக்குதல்களை இலங்கை கடற்படை நடத்தி இருக்கிறது.
ஜனவரி 25 அன்று 3 படகுகளில் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்தது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு லட்சக்கணக்காண ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பிப்ரவரி 2-ம் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஏராளமான படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களில் 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அவர்களின் படகையும் பறிமுதல் செய்தது. பிப். 19-ம் தேதிஇ இலங்கை கடற்படை 42 இந்திய மீனவர்களை கைது செய்தது.
இலங்கை கடற்படையின் மனிதநேயமற்ற இத்தகைய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மீன்படி தொழிலை அழிக்க இலங்கை கடற்படை விரும்புகிறது. நமது கடற்படை அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது? நாங்கள் இந்திய அரசுக்கு வரி செலுத்துகிறோம். தமிழக மீனவர்கள் என்ன அனாதைகளா?
நமது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்குச் சென்று அந்நாட்டின் ஆட்சியாளர்களைச் சந்தித்தார். நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் அதேபோல் சந்தித்தார். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தற்போது என்ன காரணத்துக்காக நமது பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்கிறார்? இலங்கை அரசுக்கும் அதன் கடற்படைக்கும் கண்டனம் தெரிவிக்கப் போகிறாரா? இன்றும்கூட ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனர்கள் இந்திய அரசிடம் நீதி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமரை சந்தித்து இது தொடர்பாக பேசி இருக்கிறார். வெளியுறவு அமைச்சரையும் சந்தித்துப் பேசி இருக்கிறார். பலமுறை கடிதம் எழுதி இருக்கிறார். அவை அனைத்துமே குப்பைத் தொட்டியில் போடப்பட்டுவிட்டன .
இதுதான் இந்திய அரசு தமிழக மீனவர்களை இந்திய குடிமக்களை நடத்தும் விதமா? இனிமேலாவது நீங்கள் அங்கே செல்லாதீர்கள் அவர்களை இங்கே வரவழையுங்கள்.
இந்திய கடற்படை ஒருமுறையாவது ஒரு துப்பாக்கிச் சூட்டையாவது நடத்தி இருக்கிறதா? இவ்விஷயத்தில் இந்திய கடற்படையும் இலங்கை கடற்படையும் இணைந்து செயல்படுகிறார்கள். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மொத்த தமிழகமும் இந்திய அரசால் கைவிடப்பட்டது போல் உணர்கிறது.” என தெரிவித்தார்.
வைகோவின் உரைக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் “அவையின் மூத்த உறுப்பினர் வைகோ உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். அவரது கவலையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால் அவர் பேசியதில் ஒரே ஒரு வார்த்தை அவர் கோபத்தில் பேசி இருக்கிறார் என கருதுகிறேன்.
அந்த வார்த்தை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில் அது உண்மையல்ல. நமது மீனவர்களை துன்புறுத்துவதற்காக நமது கடற்படை இலங்கை கடற்படையுடன் இணைந்து செயல்படுமா?
இந்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 2014ல் பிரதமர் மோடி பதவியேற்ற உடனேயே இலங்கை அரசுடன் பேசினார். இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை உயிருடன் திருப்பி அனுப்ப வேண்டும் என கூறினார். நமது மீனவர்களுக்கு உதவுவதற்கான ஒரு வாய்ப்பையும் நாம் வீணடிக்கவில்லை. நமது மீனவர்களுக்கு எப்போது எல்லாம் பிரச்சினை ஏற்பட்டுள்ளதோ அப்போதெல்லாம் நமது வெளியுறவுத்துறை அமைச்சகமும் பிரதமரும் உதவி இருக்கிறார்கள்.
வைகோவின் கவலைகள் அனைத்தையும் நான் அங்கீகரிக்கிறேன். ஆனால் அந்த ஒரு வார்த்தையை மட்டும் நீக்க வேண்டும் என்று அவைத் தலைவரை கோருகிறேன்.” என குறிப்பிட்டார்.
இதையடுத்து அவையை நடத்தி வந்த துணை தலைவர் ஹரிவன்ஷ் வைகோவின் அந்த குறிப்பிட்ட வார்த்தையை நீக்க உத்தரவிட்டார்.
இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது -வைகோ | Virakesari.lk
யானைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட நபரை மீட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்
19 Mar, 2025 | 03:38 PM
காட்டு யானைகளின் ஆக்கிரமிப்பினால் வயல் வெளியில் காவல் நின்றவர் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை (18) மாலை இடம்பெற்றது.
சுமார் 50 க்கும் அதிகமான யானைகள் வயல் அறுவடையின் பின்னர் மேற்குறிப்பிட்ட மாவடிப்பள்ளி பகுதியில் உட்புகுந்து அங்கு புதிதாக முளைத்துள்ள புற்களை உண்டு வருவதுடன் சட்டவிரோதமான குப்பைக்கூளங்களும் நாடி வயல் வெளிகளில் நடமாடிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சம்பவ தினம் மாலை அறுவடை செய்யப்பட்ட வயல்வெளியில் மாடுகளை மேய்ப்பதற்காக காவலுக்கு சென்ற நபரை திடீரென அங்கு சென்ற யானைகள் சுற்றி வளைத்ததுடன் குறித்த நபரை தாக்க முயன்றுள்ளன.
உடனடியாக செயற்பட்ட அந்நபர் அருகில் உள்ள உயரமான இடமொன்றில் ஏறியுள்ளார். எனினும் குறித்த நபரை விடாது துரத்திய யானைகள் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இதேவேளை தகவலை அறிந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து வெடி பொருட்களை பாவித்து யானைக் கூட்டத்தை பின்வாங்க செய்ததுடன் யானை தாக்குதல் ஆபத்தில் இருந்த நபரையும் மீட்டுள்ளனர்.
தற்போது இப்பகுதியில் சுமார் 200 க்கும் அதிகமான யானைக் கூட்டம் வருகை தருவதுடன் பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றன. அண்மைக்காலமாக இப்பிரதேசத்தில் கூட்டமாக ஊடுருவும் யானைகள் காய்க்கும் தென்னை மரங்கள் உட்பட பயன் தரும் மரங்கள் வீட்டுத் தோட்டங்கள், குடியிருப்புகள், வேலிகள் என்பவற்றை துவம்சம் செய்து வருகிறது.
பல இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளதுடன், நூற்றுக்கணக்கான காய்க்கும் தென்னை மரங்கள் முற்றாக அழிக்கப்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்பிரதேசத்தில் யானை, மனித மோதலை கட்டுப்படுத்தி சொத்துக்கள் சேதம், உயிரிழப்புக்களை தவிர்க்கும் நோக்கில் இதற்கான நிரந்தர தீர்வு ஒன்றை பெற்று தருமாறு பொதுமக்கள் கேட்டுள்ளனர்.
இதேவேளை அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் கீழ் உள்ள குடாக்கள்ளி மேற்கு கண்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 15 ஏக்கர் வேளாண்மைகளை காட்டு யானைகள் நாசமாகியுள்ளன.
யானைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட நபரை மீட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் | Virakesari.lk
வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் தொடர்பில் கருத்தரங்கு
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஏற்பாட்டில், 'வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல்' தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (19) இடம்பெற்றது.
யுனொப்ஸ் நிறுவனத்தில் கென்யாவில் பணிபுரியும் கலாநிதி வி.நவநீதன் இந்த இரு நாள் பயிற்சிக் கருத்தரங்கின் வளவாளராகக் கலந்துகொண்டார்.
ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - திட்டமிடல் எம்.கிருபாசுதன், பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் - பொறியியல் சேவைகள் எந்திரி ந.சுதாகரன், வடக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் சர்வானந்தா ஆகியோர் பங்கேற்றனர்.
ஆளுநரின் செயலாளர், இந்தப் பயிற்சிக் கருத்தரங்கை ஆளுநர் ஒழுங்கு செய்திருப்பதன் நோக்கத்தை தெளிவுபடுத்தினார். வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - திட்டமிடல் எம்.கிருபாசுதன் மாகாணத்தின் ஒட்டுமொத்த நிலைமை தொடர்பில் சுருக்க விளக்கத்தை முன்வைத்தார். அதன் பின்னர் வளவாளர் கலாநிதி வி.நவநீதன் அவர்களால் பயிற்சிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
வடக்கு மாகாணத்தின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் அபிவிருத்தி மற்றும் திட்டமிடலுடன் தொடர்புடையதாகப் பணியாற்றும் திணைக்களத் தலைவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இதில் பங்கேற்றனர்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஏற்பாட்டில், 'வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல்' தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (19) இடம்பெற்றது.
யுனொப்ஸ் நிறுவனத்தில் கென்யாவில் பணிபுரியும் கலாநிதி வி.நவநீதன் இந்த இரு நாள் பயிற்சிக் கருத்தரங்கின் வளவாளராகக் கலந்துகொண்டார்.
ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - திட்டமிடல் எம்.கிருபாசுதன், பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் - பொறியியல் சேவைகள் எந்திரி ந.சுதாகரன், வடக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் சர்வானந்தா ஆகியோர் பங்கேற்றனர்.
ஆளுநரின் செயலாளர், இந்தப் பயிற்சிக் கருத்தரங்கை ஆளுநர் ஒழுங்கு செய்திருப்பதன் நோக்கத்தை தெளிவுபடுத்தினார். வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - திட்டமிடல் எம்.கிருபாசுதன் மாகாணத்தின் ஒட்டுமொத்த நிலைமை தொடர்பில் சுருக்க விளக்கத்தை முன்வைத்தார். அதன் பின்னர் வளவாளர் கலாநிதி வி.நவநீதன் அவர்களால் பயிற்சிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
வடக்கு மாகாணத்தின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் அபிவிருத்தி மற்றும் திட்டமிடலுடன் தொடர்புடையதாகப் பணியாற்றும் திணைக்களத் தலைவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இதில் பங்கேற்றனர்.
வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் தொடர்பில் கருத்தரங்கு | Virakesari.lk