Aggregator

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!

3 months 2 weeks ago
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்! மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டவர் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்று தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜேர்மன் பெண் ஒரு சுயேச்சைக் குழுவின் வேட்பாளராக கலேவல பிரதேச சபைக்கு போட்டியிட உள்ளார். வைப்புத்தொகையை செலுத்திய பின்னர், இலங்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் நம்பிக்கையுடன் தான் போட்டியிடுவதாக ஜெர்மன் பெண் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். https://athavannews.com/2025/1425754 @குமாரசாமி, @Kandiah57, @Paanch, @nochchi, @Kavi arunasalam, @shanthy

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!

3 months 2 weeks ago

New-Project-255.jpg?resize=750%2C375&ssl

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டவர் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்று தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜேர்மன் பெண் ஒரு சுயேச்சைக் குழுவின் வேட்பாளராக கலேவல பிரதேச சபைக்கு போட்டியிட உள்ளார்.

வைப்புத்தொகையை செலுத்திய பின்னர், இலங்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் நம்பிக்கையுடன் தான் போட்டியிடுவதாக ஜெர்மன் பெண் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1425754

@குமாரசாமி, @Kandiah57, @Paanch, @nochchi, @Kavi arunasalam, @shanthy

தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு

3 months 2 weeks ago
தேசபந்து தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றில் விசேட அறிக்கை! நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (19) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார். பல நாட்களாக தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக அமைச்சர் அங்கு குறிப்பிட்டார். அத்துடன் நேற்று (18) குற்றப் புலனாய்வு திணைக்கள குழுவொன்று ஹோகந்தர பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபரின் வீட்டை சோதனையிட்டதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும், 214 மது போத்தல்களும், 1009 மதுபான போத்தல்களும் அங்கு காணப்பட்டதாகவும் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது துப்பாக்கிகள் என சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கி ரக ஆயுதம் மற்றும் இரண்டு நவீன கையடக்கத் தொலைபேசிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த கையடக்கத் தொலைபேசிகள் மூலம் பாரியளவிலான தகவல்களை வெளிக்கொணர முடியும். இது தொடர்பில் எதிர்காலத்தில் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார். இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று காலை மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். 2023 ஆம் ஆண்டு வெலிகமாவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோன் தேடப்பட்டு வந்தார். மாத்தறை நீதிவான் நீதிமன்றம் தென்னகோனை கைது செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது, அதன் பிறகு அவர் மாத்தறை நீதிவானின் உத்தரவை இடைநிறுத்த இடைக்கால உத்தரவைக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். பின்னர், குற்றப் புலனாய்வுத் துறையின் கோரிக்கையின் அடிப்படையில், தென்னகோனை உடனடியாகக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்தது. மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவை இரத்து செய்யக் கோரி, இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த ரிட் மனுவை திங்கட்கிழமை (17) மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. https://athavannews.com/2025/1425749

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதாக ப்ளூம்பெர்க் அறிக்கை!

3 months 2 weeks ago
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதாக ப்ளூம்பெர்க் அறிக்கை! கடந்த காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்தது, இது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் வலுவான உள்நாட்டு செயல்பாட்டைக் குறிப்பதாக ப்ளூம்பெர்க் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 2024 டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.4% உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரத் துறை செவ்வாயன்று (19) தெரிவித்துள்ளது. இது ப்ளூம்பெர்க் கணக்கெடுப்பில் பொருளாதார வல்லுநர்களால் கணிக்கப்பட்ட 5.3% விரிவாக்கத்தை விட அதிகமாகும். 2024 ஜூலை-செப்டம்பர் காலத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்கள் முந்தைய 5.5% இலிருந்து 5.3% ஆகக் குறைக்கப்பட்டன. முழு ஆண்டிலும், பொருளாதாரம் 5% விரிவடைந்தது, முந்தைய ஆண்டு 2.3% சுருக்கத்திலிருந்து மீண்டது. 2022 ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடன் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குப் பின்னர், இலங்கை ஒரு திருப்புமுனையைத் தழுவியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி சுமார் 5% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய நாடு இந்த மாதம் IMF கடன்களில் சுமார் $334 மில்லியன் பெற்றுள்ளதால், பொருளாதார மீட்சியை வலுப்படுத்த உதவியது. கடன் வழங்குநரிடமிருந்து தொடர்ந்து நிதியைப் பெற, எரிசக்தி விலைகளை அதிகரித்து நிதி அளவுருக்களை பூர்த்தி செய்ய வேண்டும். டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் தொழில்துறை உற்பத்தி ஒரு வருடம் முன்பு இருந்ததை விட 13.1% வளர்ச்சியடைந்துள்ளது, இது முந்தைய காலாண்டில் 10.1% ஆக இருந்தது. சேவைகள் துறை கடந்த காலாண்டில் 2.5% வளர்ச்சியடைந்தது, அதே நேரத்தில் விவசாய உற்பத்தி இந்த காலகட்டத்தில் 2.2% சுருங்கியது. 2025 ஆம் ஆண்டின் முதல் கொள்கைக் கூட்டத்தில், பணவீக்கம் இலக்கை அடைய உதவும் அதே வேளையில், பொருளாதார மறுமலர்ச்சியை ஆதரிக்கும் வகையில், இலங்கையின் மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை 8% இல் வைத்திருந்தது. அடுத்த கொள்கை முடிவு மார்ச் 26 அன்று எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. https://athavannews.com/2025/1425709

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதாக ப்ளூம்பெர்க் அறிக்கை!

3 months 2 weeks ago

New-Project-249.jpg?resize=750%2C375&ssl

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதாக ப்ளூம்பெர்க் அறிக்கை!

கடந்த காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்தது, இது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் வலுவான உள்நாட்டு செயல்பாட்டைக் குறிப்பதாக ப்ளூம்பெர்க் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

2024 டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.4% உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரத் துறை செவ்வாயன்று (19) தெரிவித்துள்ளது.

இது ப்ளூம்பெர்க் கணக்கெடுப்பில் பொருளாதார வல்லுநர்களால் கணிக்கப்பட்ட 5.3% விரிவாக்கத்தை விட அதிகமாகும்.

2024 ஜூலை-செப்டம்பர் காலத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்கள் முந்தைய 5.5% இலிருந்து 5.3% ஆகக் குறைக்கப்பட்டன.

முழு ஆண்டிலும், பொருளாதாரம் 5% விரிவடைந்தது, முந்தைய ஆண்டு 2.3% சுருக்கத்திலிருந்து மீண்டது.

2022 ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடன் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குப் பின்னர், இலங்கை ஒரு திருப்புமுனையைத் தழுவியுள்ளது.

2025 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி சுமார் 5% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடு இந்த மாதம் IMF கடன்களில் சுமார் $334 மில்லியன் பெற்றுள்ளதால், பொருளாதார மீட்சியை வலுப்படுத்த உதவியது.

கடன் வழங்குநரிடமிருந்து தொடர்ந்து நிதியைப் பெற, எரிசக்தி விலைகளை அதிகரித்து நிதி அளவுருக்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் தொழில்துறை உற்பத்தி ஒரு வருடம் முன்பு இருந்ததை விட 13.1% வளர்ச்சியடைந்துள்ளது, இது முந்தைய காலாண்டில் 10.1% ஆக இருந்தது.

சேவைகள் துறை கடந்த காலாண்டில் 2.5% வளர்ச்சியடைந்தது, அதே நேரத்தில் விவசாய உற்பத்தி இந்த காலகட்டத்தில் 2.2% சுருங்கியது.

2025 ஆம் ஆண்டின் முதல் கொள்கைக் கூட்டத்தில், பணவீக்கம் இலக்கை அடைய உதவும் அதே வேளையில், பொருளாதார மறுமலர்ச்சியை ஆதரிக்கும் வகையில், இலங்கையின் மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை 8% இல் வைத்திருந்தது.

அடுத்த கொள்கை முடிவு மார்ச் 26 அன்று எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

https://athavannews.com/2025/1425709

வீதி விபத்தில் நெதர்லாந்து பெண் மரணம்!

3 months 2 weeks ago
வீதி விபத்தில் நெதர்லாந்து பெண் மரணம்! அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியின் பல்வெஹெர பகுதியில் முச்சக்கர வண்டியொன்று லொறியுடன் மோதியதில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தம்புள்ளையிலிருந்து ஹபரணை நோக்கிச் சென்ற கார் ஒன்று கடை ஒன்றின் முன் நிறுத்துவதற்காக வீதியில் இடதுபுறமாகத் திரும்பிய போது அதே திசையில் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று காரின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும் அதே திசையில் பயணித்த மற்றுமொரு முச்சக்கரவண்டி மேற்படி வாகனங்கள் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென வீதியின் வலது பக்கம் திரும்பி எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 02 வெளிநாட்டு ஆண்களும் 02 பெண்களும் படுகாயமடைந்ததுடன் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 54 வயதுடைய நெதர்லாந்து பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய லொறி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1425701

தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு

3 months 2 weeks ago
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் சரண்! பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று மாத்தறை நீதிமன்றில் சரணடைந்துள்ளார். இதேவேளை உயர் நீதிமன்றத்தால் தற்காலிகமாக சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனை உடனடியாக கைது செய்யுமாறு அனைத்து பொலிஸ் பொறுப்பதிகாரிகளும், பிரிவு அதிகாரிகளும் மற்றும் துணைப் போலீஸ் அதிகாரிகளும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அறிவுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1425695

அர்ச்சுனா எம்பிக்கு புள்ளி வைத்த அரச தரப்பு: சபையில் வெடித்தது புதிய சர்ச்சை!

3 months 2 weeks ago
இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்றில் தடை விதிப்பு! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரைகள் காரணமாக நாளை (20) முதல் மே 8 வரை நடைபெறும் நாடாளுமன்ற அமர்வுகளில் அர்ச்சுனாவின் உரைகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கப்படும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். மேலும், அவர் அவ்வப்போது தெரிவிக்கும் நாடாளுமன்றத்தை அவமதிக்கும், அநாகரீகமான கருத்துக்கள் ஹன்சாட் பதிவுகளிலிருந்து நீக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1425719

போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது!

3 months 2 weeks ago

newproject-2024-09-24t073344-516-1727143

போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது!

பணிக்கு வருகை தராமல்  வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையிலேயே தமிழக அரசு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அத்துடன் மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, ஏனைய விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது என்றும், காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களை சேகரிக்குமாறும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1425746

அமெரிக்காவை எதிர்க்க அவுஸ்திரேலியாவுடன் கை கோர்த்த கனடா!

3 months 2 weeks ago

skynews-donald-trump-trump_6857115.jpg?r

அமெரிக்காவை எதிர்க்க அவுஸ்திரேலியாவுடன் கை கோர்த்த கனடா!

ஆர்க்டிக் பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் விதமாக கனடா அரசு பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அவுஸ்திரேலிய அரசிடம் ரேடார் தொழில் நுட்ப சாதனங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் குறித்த திட்டத்தின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலியாவுடன் இணைந்து இராணுவ ரேடார் தொழில் நுட்ப அமைப்பை  உருவாக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்க்டிக் பகுதிகளில் அமெரிக்க அரசு  தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் நிலையில், கனடா அரசு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1425726

எலோன் மஸ்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குறிவைக்கப்படும் டெஸ்லா வாகனங்கள்!

3 months 2 weeks ago

New-Project-251.jpg?resize=750%2C375&ssl

எலோன் மஸ்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குறிவைக்கப்படும் டெஸ்லா வாகனங்கள்!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் எலோன் மஸ்க்கின் சர்ச்சைக்குரிய பங்கு குறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்ததால், அமெரிக்காவில் உள்ள ஒரு சேவை மையத்தில் பல டெஸ்லா வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

அதே நேரத்தில் கார் உரிமையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் ஒரு டாக்ஸிங் வலைத்தளத்தில் கசிந்தன.

லாஸ் வேகாஸில் அமைந்துள்ள டெஸ்லா சேவை மையத்தில் பல டெஸ்லா வாகனங்கள் செவ்வாய்க்கிழமை (18) தீக்கிரையாக்கப்பட்டன.

இது தவிர கன்சாஸில் மேலும் பல டெஸ்லா வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்த சம்பவத்தை பயங்கரவாதச் செயலாக அமெரிக்க புலனாய்வுப் பிரிவி விசாரித்து வருகிறது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

“இது டெஸ்லா வசதியின் மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்” என்று லாஸ் வேகாஸ் காவல்துறையை மேற்கோள் காட்டி CNN செய்தி வெளியிட்டுள்ளது.

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், தீப்பிடித்த வாகனங்கள் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, சம்பவத்தை “பயங்கரவாதம்” என்று அழைத்தார்.

அரசாங்கத்தின் செயல்திறனை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய துறைகளில் வேலை வெட்டுக்களுக்கு எலோன் மஸ்க் அழுத்தம் கொடுத்ததற்காக அவர் எதிர்விளைவை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த சம்பவங்கள் வந்துள்ளன.

இந்த சம்பவங்கள் டெஸ்லாவின் நிதி நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளன, நிறுவனம் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக விற்பனை சரிவை எதிர்கொள்கிறது.

கடந்த வாரம், எலோன் மாஸ்க்கிற்கு ஆதரவளிக்கும் விதமாக ட்ரம்ப் ஒரு டெஸ்லா வாகனத்தை வாங்கினார்.

இதற்கிடையில், டெஸ்லாவின் துயரங்களை மேலும் அதிகரிக்கும் வகையில், ‘Dogequest’ என்ற டாக்ஸிங் வலைத்தளம், டெஸ்லா உரிமையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கசியவிட்டதாக நியூயோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இந்த தளம் அமெரிக்காவில் உள்ள டெஸ்லா உரிமையாளர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களை வெளிப்படுத்துகிறது.

https://athavannews.com/2025/1425732

மற்றுமொரு கோர விமான விபத்து: 12 பேர் உயிரிழப்பு

3 months 2 weeks ago

honduras-plane-crash.jpg?resize=750%2C37

மற்றுமொரு கோர விமான விபத்து: 12 பேர் உயிரிழப்பு.

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில், (Honduras) 18 சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த சிறிய ரக  விமானமொன்று நேற்றைய தினம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர்  உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இவ்விபத்தில் ஐந்து பேர் உயிர் தப்பியுள்ளனர் எனவும்  ஒருவர் மாயமாகியுள்ளார் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://athavannews.com/2025/1425697

போதை  மாபியாக்களை அழிக்க புதிய சட்டங்கள்: ஜனாதிபதி அநுர உறுதி!

3 months 2 weeks ago
போதை மாபியாக்களை அழிக்க புதிய சட்டங்கள்: ஜனாதிபதி அநுர உறுதி! குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும், புதிய சட்டங்களை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பொலிஸ் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார இவ்வாறு தெரிவித்தார். சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதே பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பு. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டாமல் இலங்கையில் நேர்மையான சமூகத்தை உருவாக்க முடியாது. எனவே, அதை உணர்ந்து பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். பொலிஸாருக்குத் தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்கும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/போதை_%C2%A0மாபியாக்களை_அழிக்க_புதிய_சட்டங்கள்:_ஜனாதிபதி_அநுர_உறுதி!