Aggregator

கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.

3 months 2 weeks ago
வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் வளர்ச்சி அடையாத நாடுகளிலும் உள்ள மருத்துவத்தின் வளர்ச்சி நிலை தெரியவில்லையா சகோ?

ஊருலா

3 months 2 weeks ago
அது வந்து அவர்கள் வாதடும். வழக்குகளில் திட்டமிடப்பட்ட பொய்சாட்சிகளை பயன்படுத்தி வென்று விடுவார்கள் இந்த விடயம் மனதில் அரித்துக்கொண்டிருக்கும். தண்ணீர் குடித்தால் மறந்து விடுவார்கள் 🤣

கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.

3 months 2 weeks ago
தீய சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வருத்தத்தை எற்படுத்தி கொண்டு இலங்கைக்கு போகாமல் இங்கேயே வாழ்ந்தால் நீண்ட காலம் வாழலாம் என்கிறீர்கள். ஆனால் இங்கேயே மருத்துவம் பெறுகின்ற தமிழர்கள் மருத்துவ செயற்பாட்டில் தங்களுக்கு அநீதி நடத்தபட்டதாக ஆயிரம் குறைகள் சொல்கின்றனரே.

அடிப்படை நிலைப்பாடுகளில் ஈழத் தமிழர் தேசம் சமரசம்செய்ய முடியாது - விசுவநாதன் ருத்ரகுமாரன்.

3 months 2 weeks ago
அந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானமும் வரும்படி அவர்கள் சேர்த்தால் சிறப்பு.

கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.

3 months 2 weeks ago
ஒரு விசயம் தெரியுமோ? அங்கை சில இடங்களிலை 40 வயதிலை தானே கலியாணம் கட்டி ஹனிமூன் அது இது எண்டு வாழ்க்கையை ஆரம்பிக்கினம். 😂

அப்துல் ஹமீத் அவர்கள் எழுதிய "வானலைகளில் ஒரு வழிப்போக்கன் 1

3 months 2 weeks ago
மிகவும் பயனுள்ள புத்தகம் ,பல தகவல்கள் அதில் உள்ளது ...புத்தகம் கிடைத்தால் வாசித்துபபாருங்கள்...தனது அனுபவ‌ பகிர்வை நன்றாக எழுதியுள்ளார்.

கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.

3 months 2 weeks ago
அதனால் தான் அமெரிக்காவில் ஜனநாயக அதிபர் பைடன் தொடங்கி சீன சர்வாதிகாரி சீ ஜின்பிங் வரை முதியவர்களே நாடுகளை ஆண்டு வருகின்றார்கள்.இலங்கையில் இளைஞர்களே தலைதாங்க வேண்டும் என்று குரல் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் இருந்து கேட்பதை காணலாம்.

யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.

3 months 2 weeks ago
உண்மை தான் இவர் கட்டி கொடுத்த வீடுகளை இலங்கை இராணுவம் தங்கள் செய்வதாக அவர்களே கட்டினார்கள். பணம் தியாகி உடையது. முடியாது மிகவும் கடினம். இப்ப செய்யும் வேலைத்திட்டம் கூட செய்ய முடியாது அரசை குற்றம் குறை கூறுவதில்லை

ஊருலா

3 months 2 weeks ago
எனக்கும் மணிக்கட்டில் வந்த நோவு பரவலாக மூட்டுகளிலும் வர தொடங்கியது.வீட்டு டாக்ரர் இது ஆதரடைஸ் போல இருக்கு. அதற்கேற்ற டாக்ரரையும் தந்தா. இப்ப 5-6 வருடமா ஆதரைடிசுக்கு மாத்திரைகள் எடுக்கிறேன்.

ஊருலா

3 months 2 weeks ago
சில காலமாக எனது வலது கை மணிக்கட்டில் ஒரு நோ இருக்கிறது. முதுமை ஒரு காரணமா? அல்லது வேறு ஏதாவதாக இருக்கலாமா? என்று எனது குடும்ப வைத்தியரை அணுகிய போது, என்னிடம் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “இளமை விடை பெறும் போது உடலில் அங்கங்கே ஏதாவது பிரச்சனைகள் வருவது இயற்கை. நீங்கள் இரத்த அழுத்தத்துக்கு உட்கொள்ளும் வில்லையின் எதிர்தாக்குதலாகவும் இருக்கலாம். கணினியைப் பாவிக்கும் போது நீங்கள் உங்கள் கையை வைத்திருக்கும் நிலையால் கூட மணிக்கட்டுப் பிரச்சனை வரலாம். கணினியில் படம் வரைவதை நிறுத்துங்கள். இல்லாவிட்டால் குறைத்துக் கொள்ளுங்கள். அதிகளவு பாரமான வேலைகளையும் தவிருங்கள்” என பல ஆலோசனைகளைத் தந்திருந்தார். இப்பொழுது சிறீலங்காப் பயணத்தின் போது 23 கிலோ சூட்கேசை ஏற்றி இறக்கியதில் மணிக்கட்டில் மறைந்திருந்த நோ மீண்டும் எட்டிப் பார்த்தது கூடவே சிறு வீக்கமும் வந்து விட்டது. அங்கே இருக்கும் போது கூடுதலான வரையில் வலது கையைப் பாவிப்பதைத் தவிர்க்கத் தொடங்கினேன். இதை அவதானித்த மணியன், “உன் வலது கைக்கு என்ன நடந்தது?” என்று கேட்டான். விடயத்தைச் சொன்னேன். “காரில் ஏறு” என்றான். ஏறிக் கொண்டேன். எங்கே போகிறோம் என்று மணியன் சொல்லவில்லை. இரவு நேரம். மழை பெய்து கொண்டிருந்தது. “ முந்தி இப்பிடி இல்லை. இப்பத்தான். இந்த நேரத்திலை வழக்கமா வடக்கு கிழக்கிலைதான் மழை இருக்கும். எல்லாம் இப்ப இஞ்சை மாறிப் போச்சு” என்று மணியன் சலித்துக் கொண்டான். “இங்கை மட்டுமில்லை. உலகம் முழுக்க இப்படித்தான் நிலமை” என்று அவனுக்குப் பதில் தந்தேன். கார், காலி வீதியில் ஒரு சிறிய தனியார் வைத்தியசாலைக்கு முன்னால் நின்றது. வைத்தியசாலையில் கார் நிறுத்த கட்டணம் வாங்கிக் கொண்டார்கள். “மச்சான். நல்ல ஒத்தப்பேடி. களுபோவில ஹொஸ்பிற்றலிலை வேலை செய்கிறார். அங்கை வேலை முடிஞ்சு இரவு எட்டு எட்டரைக்குத்தான் இஞ்சை வருவார். உன்ரை கையை ஒருக்கால் அவருக்கு காட்டு” மணியனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவன் பின்னால் போனேன். நம்பர் எடுத்துக் கொண்டு வந்து கையில் தந்தான். “காசு குடுக்க வேணுமெல்லோ?” என்று மணியனைக் கேட்டதற்கு, “அதை நான் கட்டிட்டேன்” என்றான். நேரம் போய்க் கொண்டிருந்தது. டொக்டர் வரவேயில்லை. நான் சலிப்படைவது மணியனுக்குப் புரிந்து விட்டது. “இன்னும் ஒரு பிரைவேட் ஹொஸ்பிற்றல் அதுவும் வெள்ளவத்தையிலை பக்கத்திலைதான் இருக்கு, டொக்டர் அங்கையும் ஆக்களைப் பாக்கிறவர். வருவார். பொறுமையாக இரு” என்று சொன்னான். பத்து மணியளவில் டொக்டர் வந்தார். கடைசி ஆளாக அவர் அறைக்கு நான் போனேன். மணியனும் கூட வந்தான். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “ப்ளட் ரெஸ்ற் செய்யோணும். பெயின் கில்லரும் கிறீமும் எழுதித் தாறன். மாறாட்டில் வாங்கோ” டொக்டரின் அறிவுரையை வேதவாக்கா மணியன் எடுத்துக் கொண்டு இரத்த பரிசோதனைக்கு என்னை அழைத்துச் சென்றான். அங்கும் கட்டணம் செலுத்த வேண்டும். அதையும் மணியனே கட்டினான். வீட்டுக்குத் திரும்பும் போது மணியனைக் கேட்டேன், “நான்தானே கடைசி ஆள் எதுக்குடா நம்பர் எடுத்தாய்?” என்று. “பழக்கதோசம் “ என்று பதில் வந்தது. அடுத்தநாள் முதல் வேலையாக வைத்தியசாலைக்குப் போய் எனது இரத்தப் பரிசோதனை முடிவையும் பார்மஸியில் டொக்டர் எழுதிய மருந்தையும் மணியன் எடுத்து வந்தான். “இரத்தத்தில் பிரச்சினை இல்லை” என்று சொன்னான். அன்று மாலை அவனது நண்பர் ஒருவர் மணியனைக் காண வந்தார். வந்தவரது இடது கையில் கட்டுப்போட்டிருந்தது. வெள்ளைக் கொடியை கையில் ஏந்திக் காட்டுவது போல கையை தூக்கி வைத்துக் கொண்டிருந்தார். “கையிலை என்ன பிரச்சனை?" என்று அவரை மணியன் கேட்க, “கன காலமா ஊருக்குப் போகேல்லை. புத்தூரிலை இருந்த காணியை கொஞ்சம் துப்பரவாக்கி நல்ல விலைக்குக் குடுக்கலாம் எண்டு போனால், காணிக்குள்ளை இருந்த பள்ளத்திலை விழுந்து கையிலை எலும்பு முறிஞ்சு போச்சு. அப்பிடியே எல்லாத்தையும் போட்டிட்டு வந்திட்டன்” என்று அவர் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். அவர் தன் கதையை விரிவாக்கு முன்னரே மணியன் என் கையின் கதையைச் சொல்லிவிட்டான். “நான் ஒத்தப்பேடியிட்டை எல்லாம் போகேல்லை. இஞ்சை வெள்ளவத்தை மாக்கெற்றுக்குப் பக்கத்திலே (Manning place) மனிங் பிளேஸிலே ஒரு ஆயுர்வேத கவர்ன்மென்ற் ஹொஸ்பிற்றல் இருக்கு. ஒண்டவிட்ட ஒருநாள் போகோணும். எண்ணை பூசி மசாஜ் செய்து பத்தும் போட்டு விடுவினம். இப்ப கையிலை நல்ல முன்னேற்றம்” அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மணியன் என்னைப் பார்த்தான். நாளை நான் ஆயுர்வேத ஹொஸ்பிற்றலுக்குப் போக வேண்டிய வேலை இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். “காலமை ஏழு மணிக்குப் போய் நம்பர் எடுத்திட்டால் வெள்ளெணவா வேலை முடிஞ்சிடும். எட்டரைக்கு டொக்டேர்ஸ் வந்திடுவினம். இரண்டு பேர்தான் டொக்டேர்ஸ். அதிலை லேடி டொக்டர் தமிழ். நானும் நாளைக்குப் பத்துப் போடணும். நீங்கள் நாளைக்கு ஏழு மணிக்கு வாங்கோ. நான் அங்கை நிப்பன். உங்களுக்கு எண்ணைதான் தருவினம் எண்டு நினைக்கிறன். எதுக்கும் வரக்கை ஒரு போத்தலையும் கொண்டு வாங்கோ. பத்துப் போடுறதெண்டால் பஞ்சும், பன்டேஜ்ஜும் பார்மஸியிலை வேண்டிக் குடுக்க வேணும். ஏழு மணிக்கு பார்மஸி திறக்க மாட்டாங்கள். எதுக்கும் நீங்கள் வாங்கோவன்” என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். காலை 6:45க்கே ஆயுர்வேத வைத்தியசாலைக்குப் போய் விட்டேன். அங்கே இருந்த கதிரைகளில் எல்லாம் தமிழ், சிங்களம் கலந்த (என்னைப் போன்ற) முதியவர்கள் இருந்தார்கள். இருப்பதற்கு இடம் இல்லாததால் மணியனின் நண்பனுக்காக காத்திருந்தேன். 7:30க்கு வந்து சேர்ந்தார். “வெள்ளனவே வந்திட்டீங்கள் போல. ஏன், இருக்கிறதுக்கு இடம் கிடைக்கேல்லையே? கடைசி ஆள் இருக்கிற கதிரைக்குப் பக்கத்திலை நிண்டிருக்கலாமே?” என்று தன் ஆதங்கத்தைச் சொன்னார். 7:45க்கு ஊழியர்கள் வரத் தொடங்கினார்கள். கதவுகளைத் திறந்த பின்னர் இருக்கை இல்லாமல் இருந்தவர்களுக்கு, உள்ளே இருந்து கதிரைகளை எடுத்து வந்து போட்டு அமரச் சொன்னார்கள். கூட்டிப் பெருக்கி, புத்தரை வணங்கிய பின்னர் இலக்கங்களைத் தந்தார்கள். வரிசையில் நின்று அங்கிருந்த யன்னலூடாக இலக்கத்தைக் கொடுத்து மற்றவர்கள் போல் நானும் பதிவு செய்து கொண்டேன். தமிழ் ‘லேடி டொக்டர்’ முகக் கவசம் போட்டிருந்ததார். “உங்களுக்குப் பத்து போட்டால் நல்லது. அது நீங்கள் இங்கே இருக்கிறவரைதான் சாத்தியம். எண்ணை தரலாம். இலவசம் என்றபடியால் ஒரு அவுன்ஸுக்கு மேலே ஹொஸ்பிற்றலிலை தரமாட்டினம். வெள்ளவத்தை மாக்கெற்றில் இருந்து தெஹிவலப் பக்கமாகப் போறவழியிலே பஸ்ஸல் லேனுக்கு முன்னுக்கு உள்ள பில்டிங்கிலே முதலாவது மாடியிலே ஒரு ஆயுர்வேதக் கடை இருக்கு. யேர்மனிக்கு நீங்கள் எண்ணை கொண்டு போறதெண்டால் தேவையானதை அங்கை வாங்கலாம். இரண்டு வகையான எண்ணை எழுதித்தாறன். ஒண்டு வீக்கத்துக்கும் குணமாகிறதுக்கும். மற்றது நோ இருந்தால் பூசுறதுக்கு. நீங்கள் இரண்டையும் சேர்த்தும் பாவிக்கலாம்” என்று அன்போடு சொன்னார். வைத்தியாசாலையில் தந்த ஒரு அவுன்ஸ் எண்ணையுடன் வைத்தியர் சொன்ன ஆயுர்வேத மருந்துக்கடையிலும் இருக்கட்டுமே என்று சில அவுன்ஸ் எண்ணெய் வாங்கிக் கொண்டேன். விலை மலிவாக இருந்தது. ஒரு அவுன்ஸ் எண்ணெய்க்கு ரூபா 200/- தான் கொடுக்க வேண்டி இருந்தது. “இப்பிடி ஒரு கடை இருக்குது, எண்ணை வாங்கலாம் எண்டது எனக்குத் தெரியாமல் போட்டுது” என்று மணியனின் நண்பர் சொன்னார். அவர் சொன்னதிலும் உண்மை இருந்தது. அந்த ஆயுர்வேத மருந்துக் கடை ஒரு பழைய கட்டிடத்தின் மேல்மாடியில் மறைவாக இருந்தது. மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள் கட்டிடத்தின் வெளிப் பக்கத்தில் இல்லாததும், கடை இருப்பதற்கான அறிவிப்புப் பலகை வெளியில் தெரியாமல் இருந்ததும் அப்படி ஒரு ஆயுர்வேத மருந்துக் கடை இருப்பது பலருக்குத் தெரிய வாய்ப்பில்லைத்தான். நான் மறந்தாலும், “கைக்கு எண்ணை பூசினியோ?” என்று மணியன் நினைவு படுத்திக் கொண்டே இருந்தான். கொழும்பில் இருக்கும் போது கைக்கு எண்ணை பூசிக் கொண்டேன். வீக்கம் குறைந்து மணிக்கட்டில் நோ போய்விட்டது. கைக்கு அதிக அழுத்தங்கள் கொடுக்காததாலா? பாரங்கள் அதிகம் தூக்காததாலா? அல்லது எண்ணை பூசிக் கொண்டதாலா? என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் எண்ணையை யேர்மனிக்கு கொண்டு போவதற்காக சூட்கேசில் பத்திரமாக எடுத்த வைத்துக் கொண்டேன்

அப்துல் ஹமீத் அவர்கள் எழுதிய "வானலைகளில் ஒரு வழிப்போக்கன் 1

3 months 2 weeks ago
அப்துல் ஹமீத் அவர்கள் எழுதிய "வானலைகளில் ஒரு வழிப்போக்கன்" என்ற புத்தகத்தை வாசிக்கும் பொழுது அடியேன் அறிந்து கொண்ட ஒரு சில விடயங்களில் சிலவற்றை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன் அந்த வகையில் 1.தென்கிழக்காசியாவின் முதல் வானோலி இலங்கை வானோலி 2.இங்கிலாந்தில் மார்க்கோனி ஆரம்பித்த முன்றாண்டுகளுக்குள் இலங்கையில் வானொலி ஆரம்பமனது. 3.முதலாவது உலக மகாயுத்தம் (ஜூலை 28, 1914‍_ நவம்பர் 11,1918)முடிவடைந்த் பின்னர்,யுத்த காலத்தில் தரை தட்டியிருந்த ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பலில் சிதிலமடைந்திருந்த வயர்லஸ் ரேடிஜோக் கருவியின் பாகங்களை ஒன்றிணைத்து முதலாவது பரீட்சார்த்த ஒலிபரப்பு 1923 ஆண்டிலயே கொழும்பு தந்தித் திணைக்களத்தில் நடைபெற்றது. 4.ஏட்வேர்ட் கார்பர் என்பவரின் தலமையில் உள்ளூர் பொறியியலாளர்கள் ஒன்றிணைந்த் அதை சாதித்தனர். 5.அந்த வெற்றியை தொடர்ந்து அடுத்து வந்த மூன்று ஆண்டுகளும் தந்தித் திணைக்களப் பொறியாளர்களின் தொடர்ந்த அயராத முயற்சியால் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 திகதி முறையான வானோலி ஒலிபரப்பு இலங்கையில் ஆரம்பமானது 6.தந்தி திணைக்களத்தின் ஒர் பகுதியாக இயங்கிய இந்த ஒலிபரபுச் சேவையில் ஆரம்பத்தில் ஆங்கில சேவையே கோலாச்சி செய்தது . 7.சிறுது காலத்தின் பின் இடையிடையே இசைத்தடுக்களின் உதவியோடு தமிழ் மற்றும் சிங்கள இசையும் சிறிய அறிவுப்புக்களும் இடம் பெற்றன. 8.இந்த பணியை அங்கு பணி புரிந்த பொறிய‌ளார்களும் எழுது விளைஞர்களும் தான் செய்து வந்தனர். 9.தந்தி திணக்களத்தில் இருந்த ஓர் அறை கலையகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. 10.1933 ஆண்டு முதல் மும்மொழிகளிலும் கிரமமாக செய்ய தீர்மானிக்கபட்ட பொழுது தமிழ் மொழி அறிவிப்பாளராக வினாயகமூர்த்தி நியமிக்கப்பட்டார்.இவர் தந்தி திணக்களத்தில் எழுது விளஞராக கடமை புரிந்து கொண்டே வானொலி அறிவிப்பு பணிகளை செய்து வந்தார்.

ஊருலா

3 months 2 weeks ago
அப்படிச் சொல்லிவிட முடியாது. எதையும் அளந்து போடுபவர். நான் அங்கிருந்த போது நிறையவே எனக்கு செலவழித்திருக்கிறார். ஆனாலும் நான் பார்த்த சட்டத்தரணிகள் (மணியம் உட்பட) தண்ணி போடுபவர்களாகவே இருக்கிறார்கள். அதுதான் ஏன் என்று தெரியவில்லை.

நாகபட்டினம் - காங்கேசன்துறை சரக்குக் கப்பற்சேவை விரைவில்!

3 months 2 weeks ago
நல்ல முடியுடன்(தலைமயிருடன்) வந்த பலர் இப்ப முடி இழந்து வழுக்கை மண்டையுடன் இருக்கினம் ...போய் வழுக்கை ஆற்றில ஒடும் பாலையும் தேனையும் தடவலாம்...

பில் கிளின்டன் முதல் இளவரசர் ஆண்ட்ரூ வரை - பாலியல் விவகாரத்தில் அடிபடும் பிரபலங்கள்!

3 months 2 weeks ago
நியூயார்க்: ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’, ஜெஃப்ரி எப்ஸ்டீன்... உலகம் முழுவதும் பரபரப்பான பேசுபொருளாக இவை மாறியுள்ளன. யார் இந்த ஜெஃப்ரி எஸ்டீன்? அது என்ன ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’ என்ற ஆவல் பலர் மத்தியிலும் பரவியுள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் அமெரிக்காவில் பல பாலியல் குற்றச்சாட்டுகளில் பரபரப்பாக அடிபட்ட நபர். அவர் மீதான வழக்குகள் நிலுவையில் இருந்தபோது சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். அதன்பின்னர் அந்த வழக்குகள் கைவிடப்பட்டன. அவர் தொடர்பான விசாரணையில் நீதிமன்றம் அறிந்துகொண்ட தகவல்களும் சீலிடப்பட்டு வைக்கப்பட்டன. அந்த வழக்கில் பெரும் புள்ளிகளின் பெயர்கள் அடிப்பட்டது அதற்கு ஒரு காரணம். ஆனால், அண்மையில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாண நீதிபதியான லொரட்டா ப்ரெஸ்கே ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். “இனியும் அந்த வழக்கு விசாரணையில் இடம்பெற்ற முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் தொடர்பாக ரகசியம் காக்க வேண்டிய அவசியமில்லை. ஜனவரி 1-க்குப் பின்னர் படிப்படியாக விசாரணை விவரங்களை வெளியிடலாம்” என்றார். ஏனெனில், இந்த விசாரணை விவரத்தில் பிரின்ஸ் ஆண்ட்ரூ முதல் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் வரை பலரது பெயர்களும் இடம்பெற்றுள்ளதால் ‘ஜெஃப்ரி லீக்ஸ்’ பரபரப்பாகப் பேசப்படுகிறது. பிரச்சினையின் பின்னணி: கடந்த 2015-ஆம் ஆண்டு வர்ஜீனியா கிஃபர் என்ற அமெரிக்க பெண், பிரிட்டனைச் சேர்ந்த கிஷ்லெய்ன் மேக்ஸ்வெல் என்பவர் மீது ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பாலியல் தொழில் இடைத்தரகருடன் சேர்ந்து கிஷ்லெய்ன் பாலியல் தொழிலுக்காக ஆள் கடத்தலில் ஈடுபட்டார் என்று கூறியிருந்தார். தானும் அவ்வாறாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், 1999 முதல் 2022 வரை பாலுறவில் ஈடுபடும் வயதை எட்டாத தன்னை பலருடனும் கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபட வைத்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்து எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார் அவர் மீதான வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபோது 2019 ஆகஸ்டில் அவர் நியூயார்க் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். அத்துடன் எல்லாம் முடிந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், தற்போது இந்நாள், முன்னாள் பிரபலங்களை கலக்கம் கொள்ளச் செய்யும் வகையில் நீதிபதி உத்தரவு லீக்காகும் தகவல்களும் அமைந்துள்ளன. எப்ஸ்டீன் - பில் கிளின்டன் தொடர்பு: நீதிமன்ற ஆவணங்களில் பில் கிளின்டன் "Doe 36" என்று ரகசிய குறியீட்டுடன் குறிப்பிடப்பட்டுள்ளார். அந்த ரகசியக் குறியீடு 50 முறை ஆவணத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. வழக்கு தொடர்ந்த வர்ஜினியா, தான் பில் கிளின்டனை ஒரு தீவில் இரண்டு முறை பார்த்திருப்பதாகவும் அப்போது அவருடன் இளம் பெண்கள் இருந்ததாகவும் கூறியுள்ளார். அந்தத் தீவு எப்ஸ்டீனுக்கு சொந்தமானது என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டை முன்னரே கிளின்டன் தரப்பு பலமுறை மறுத்துள்ளது. அது தொடர்பாக நடந்த விசாரணையில் பில் கிளின்டனின் விமானப் பயண ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. அப்போது, அவர் எப்ஸ்டீனின் விமானத்தைப் பயன்படுத்தி பாரிஸ், பாங்காக், ப்ரூனே ஆகிய இடங்களுக்குச் சென்றது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பயணங்களை அதிபர் பதவிக்காலத்துக்குப் பின்னர் கிளின்டன் மேற்கொண்டுள்ளார். நீதிமன்ற ஆவணங்களின்படி ஜொஹான ஸ்ஜோபெர்க் என்ற பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணும் கிளின்டன் சர்ச்சையை உறுதிப்படுத்தும் வகையில் சாட்சியம் கூறியுள்ளார். எப்ஸ்டீன் என்னிடம், “கிளின்டனுக்கு உங்களைப் போன்ற இளம் பெண்களையே பிடிக்கும் என்று கூறினார்” என சாட்சியம் கூறியிருக்கிறார். கிளின்டன் அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையைச் சேர்ந்த 22 வயது பணிப் பெண்ணுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொண்டதாக சர்ச்சையில் சிக்கியது நினைவுகூரத்தக்கது. ஸ்டீபன் ஹாக்கிங் - ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பு: 2015-ல் வர்ஜினியா கிஃபரின் வழக்கையடுத்து எப்ஸ்டீன் அனுப்பிய மின்னஞ்சல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கிஷ்லெயின் மேக்ஸ்வெல்லுக்கு எப்ஸ்டீன் அனுப்பிய அந்த மின்னஞ்சலில், “ஸ்டீபன் ஹாக்கிங் பாலுறவுக்கான வயதை எட்டாத பெண்களுடன் உறவு கொண்டார் என்று வெர்ஜினியா கூறுவது பொய் என்று சொல்ல முன்வரும் அவரது நண்பர்கள், குடும்பத்தினர், தெரிந்தவர்கள் என யாராக இருந்தாலும் அவர்களுக்கு பெரும் தொகையை சன்மானமாக வழங்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. இளவரசர் ஆண்ட்ரூவும்.. - இந்த பாலியல் குற்றச்சாட்டு வரிசையில் இடம்பெற்றுள்ள இன்னொரு பெரும்புள்ளி இளவரசர் ஆண்ட்ரூ. ராணி எலிச்பெத்தின் மகன்களில் ஒருவரான இளவரசர் ஆண்ட்ரூ, சட்டரீதியான வயதுக்கு கீழே இருந்த அமெரிக்கப் பெண் வர்ஜீனியாவுடன் பலவந்தமாக பாலியல் உறவு வைத்துக்கொண்டார் என்று நீதிமன்ற ஆவணங்களில் உள்ளது. இளவரசர் முறையற்ற வகையில் நடந்து கொண்டார் எனக் கூறும் வகையிலான இந்தக் கூற்றுகள் முற்றாக உண்மைக்கு புறம்பானவை என்று நீண்ட காலமாக பக்கிங்ஹாம் அரண்மனையும் மறுத்து வருகிறது. இருப்பினும், இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் நன்பர் ஜெஃப்ரி எப்ஸ்டைன் என்பது கவனிக்கத்தக்கது. எப்ஸ்டைனால், அவருடன் இருந்த இளவரசர் ஆண்ட்ரூ உட்பட பலருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளுமாறு தான் நிர்பந்திக்கப்பட்டதாக வர்ஜீனியா கூறியிருக்கிறார். இவர்களைத் தவிர ஆல்ஃபபெட் இங்க் (Alphabet Inc) என்ற கூகுள் நிறுவனத்தின் தாய்க்கழகத்தின் இணை நிறுவருமான லாரி பேஜ் மீதும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பு பற்றி நீதிமன்ற ஆவணங்களில் இருக்கிறது. நோபல் பரிசு புகழ் லாரன்ஸ் க்ராஸ், மறைந்த பாப் கிங் மைக்கேல் ஜாக்சன், மேஜிக் கலைஞர் டேவிட் காப்பர்ஃபீல்டு, காமெடி நடிகர் கிறிஸ் டக்கர், நடிகர் கெவின் ஸ்பேசி ஆகியோரும் ஜெஃப்ரியின் வர்ஜின் தீவுகளில் நடந்த பாலியல் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. எப்ஸ்டீனின் வர்ஜின் தீவுகளில் நடந்த சிறுமிகள், இளம் பெண்களுடனான பார்ட்டி கொண்டாட்டங்களில் பில் கிளின்டன், ஸ்டீபன் ஹாக்கிங் உள்பட இத்தனை பெரும்புள்ளிகளும் ஈடுபட்டனரா என்ற வாத விவாதங்கள் இந்த ‘ஜெஃப்ரி லீக்ஸ்’ ஆவணங்களால் வலுத்துள்ளது. Epstein Files | பில் கிளின்டன் முதல் இளவரசர் ஆண்ட்ரூ வரை - பாலியல் விவகாரத்தில் அடிபடும் பிரபலங்கள்! | Bill Clinton, Donald Trump, Stephen Hawking: Who Are Named In Epstein Files - hindutamil.in