Aggregator
பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு
மின்சார துண்டிப்பால் மூடப்பட்ட ஹீத்ரோ விமான நிலையம்!
பாம்பு பிடிப்பவர்களே பாம்பு தீண்டி உயிரிழக்க நேரிடுவது ஏன்? அதனை தடுப்பது எப்படி?
பட மூலாதாரம், HANDOUT
படக்குறிப்பு, கோவையில் ஒரு வீட்டில் பாம்பை பிடிக்கும் போது பாம்பு கடித்து உயிரிழந்த சந்தோஷ்
கட்டுரை தகவல்
எழுதியவர், சேவியர் செல்வகுமார்
பதவி, பிபிசி தமிழ்
22 மார்ச் 2025, 06:18 GMT
கோவையில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்புகளை பிடித்துள்ள பாம்பு பிடிக்கும் நபரான சந்தோஷ், பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். பாம்பு பிடிக்கும் போது உருவாகிற சூழ்நிலையும், அவர்களின் அறியாமையுமே இந்த மரணங்களுக்குக் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பாம்பு பிடிப்பதற்கான முறையான பயிற்சி மற்றும் உபகரணங்களை அளித்து, இவர்களை துறையுடன் சேர்த்து ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக வனத்துறையின் தலைவர் சீனிவாச ரெட்டி பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
பாம்பு பிடிப்பவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு
கோவையைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 39) என்ற பாம்பு பிடிக்கும் நபர், கடந்த மார்ச் 17 அன்று, தொண்டாமுத்துார் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் நாகப் பாம்பை பிடிக்கும் போது, பாம்பால் கடிபட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டிருந்தார். மார்ச் 19 இரவு அவர் மரணமடைந்துள்ளார். விஷ முறிவுக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் இதய செயலிழப்பால் உயிரிழந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்துள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் கோவையில் முரளீதரன் என்பவரும், 3 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மல் என்பவரும் பாம்பு பிடிக்கும் முயற்சியில் உயிரிழந்தனர். கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த உமர் அலி, கடந்த ஆண்டு ஏப்ரலில் குடியிருப்புப் பகுதியில் பிடித்த பாம்பை வனப்பகுதியில் விடுவதற்காகச் சென்ற போது அந்த பாம்பு கடித்து பலியானார்.
தற்போது கோவையில் மரணமடைந்த சந்தோஷின் நண்பரும், காட்டுயிர் ஆர்வலருமான ராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''கடந்த 20 ஆண்டுகளில் சந்தோஷ் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்புகளைப் பிடித்து, காட்டுக்குள் கொண்டு விட்டுள்ளார். ஆனால் அவரது மறைவால் இன்றைக்கு அவர் குடும்பம் நிர்க்கதியில் இருக்கிறது. அவருடைய இரண்டு பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை மாற்றுத்திறனாளி. அவருடைய குடும்பத்துக்கு தமிழக அரசு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும்.'' என்று கேட்டுக் கொண்டார்.
'இந்திய கிரிக்கெட் பிதாமகன்' என்று இவரை அழைப்பது ஏன்? பன்முக ஆளுமையின் ஆச்சர்யம் தரும் வாழ்க்கை18 மார்ச் 2025
கேரளாவில் 18 வயது இளம்பெண்ணின் மரணத்திற்கு காரணமான 'அனோரெக்சியா நெர்வோஸா' என்றால் என்ன?17 மார்ச் 2025
பட மூலாதாரம், HANDOUT
பாம்பு பிடிப்பதில் பழங்குடிகளுக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
உலகிலேயே ஆஸ்திரேலியாவில்தான் பாம்புக்கடி அதிகம் என்றாலும், பாம்புக்கடியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை இந்தியாவை விட அங்கே மிகவும் குறைவு என்று என்கிறார் மனோஜ். இவர் கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் உலகளாவிய பாம்புக்கடி கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியும் ஆவார். பாம்புக்கடி குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் (ICMR) இணைந்து ஆராய்ச்சிப் பணிகளைச் செய்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் அந்த பிரச்னையைக் கையாளும் விதமும், விஷமுறிவு மருந்துகளும் மிகச்சிறப்பாக இருப்பதே இதற்குக் காரணம் என்கிறார் மனோஜ்.
பாரம்பரியமாக பாம்பு பிடிக்கும் பழங்குடிகளுக்கும், மற்றவர்களும் பாம்புகளை அணுகும் முறையில் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக அவர் கூறுகிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் இனப் பழங்குடியினரான மாசி சடையன் மற்றும் வடிவேல் ஆகிய இருவரும் அமெரிக்கா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு, அந்த அரசுகளின் அழைப்பின் பேரில் பாம்பு பிடிப்பதற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள், 'பாம்பு பிடிப்பதில் தனித்துவமானவர்கள்' என்று இந்தியாவின் பாம்பு மனிதன் என்று அழைக்கப்படும் ராமுலஸ் விட்டோகர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் இருளர் பாம்பு பிடிக்கும் தொழில் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. அதில் இவர்கள் உட்பட 350க்கும் மேற்பட்ட இருளர்கள் உறுப்பினர்களாகவுள்ளனர். அவர்கள் பழையபெருங்களத்தூர், புதுப்பெருங்களத்தூர், சென்னேரி, மாம்பாக்கம், காயார், வெம்பேடு ஆகிய பகுதிகளில் உள்ள காட்டுப் பகுதிகளில் பாம்புகளைப் பிடித்து விஷத்தைச் சேகரித்து, மீண்டும் காட்டுக்குள் விடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பட மூலாதாரம்,MAANOJ
படக்குறிப்பு,முனைவர் மனோஜ்
"கடித்த பாம்பை மொபைலில் படமெடுப்பது அவசியம்"
பாம்பு பிடிக்கும் போது, அங்குள்ள சூழ்நிலையையும், பாம்பு கடித்துவிட்டால் அந்த நேரத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறையையும் உணர்ந்து பழங்குடிகளைப் போன்று விழிப்புணர்வுடன் செயல்பட்டால், உயிரிழப்புகளைத் தடுத்துவிட முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இந்திய ஊர்வன ஆராய்ச்சி, கல்வி மற்றும் பாதுகாப்பு மையத்தின் நிறுவனரும், ஊர்வனவியலாளருமான ரமேஸ்வரன் மாரியப்பன்.
பாம்பு பிடிக்கும் போது வீடியோ எடுக்கும் ஆர்வத்துடன் பலரும் கூடுவது, பாம்புகளிடம் அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துவதே பாம்பு பிடிப்பவர்களுக்கு ஆபத்தில் முடிவதாகக் கூறுகிறார் அவர். பிபிசி தமிழிடம் பேசிய ரமேஸ்வரன் மாரியப்பன், ''பாம்பைக் காப்பாற்றவே நாம் வந்துள்ளோம் என்பதையும், நம் உயிரும் முக்கியம் என்பதையும் உணர்ந்து பாம்பு பிடிப்பவர்கள் செயல்பட வேண்டும். சிறிய பாம்பு, பெரிய பாம்பு எதுவாயினும் கடித்து விட்டால் தாமதிக்காமல் மருத்துவமனை செல்ல வேண்டும்.'' என்றார்.
மேலும் "பாம்பு பிடி வீரர் என்ற வார்த்தை தவறு. அவர்களை பாம்பு பிடிப்பவர்கள் அல்லது பாம்புகளை பாதுகாப்பவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வீரர் என்ற வார்த்தைதான், பாம்பைப் பற்றி அடிப்படை அறிவும், அனுபவமும் இல்லாதவர்களையும் பாம்புகளைப் பிடிக்கத் துாண்டி வருகிறது.'' என்றார்.
பட மூலாதாரம்,RAMESWARAN MARIAPPAN
படக்குறிப்பு, இந்திய ஊர்வன ஆராய்ச்சி, கல்வி மற்றும் பாதுகாப்பு மையத்தின் நிறுவனர் ரமேஸ்வரன் மாரியப்பன்.
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் தங்கியிருந்த 9 மாதங்களில் என்ன செய்தார்?19 மார்ச் 2025
ஆதவி: பொம்மைகளுடன் விளையாடும் வயதில் 'கார்பன் நியூட்ரல்' அங்கீகாரம் பெற்ற குழந்தை18 மார்ச் 2025
பாம்பு கடித்துவிட்டால், அது எந்த வகைப் பாம்பு என்று அறிவதற்கு, அதனை உடனே போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறும் விஞ்ஞானி மனோஜ், கட்டு வரியனைத் தவிர மற்ற பாம்புகள் கடித்தால் அந்த இடத்தில் வலி, வீக்கம், நிறம் மாற்றம் ஏற்படும் என்றார். எந்த பாம்பு கடித்தாலும் பதற்றமடைந்தால் ரத்தத்தில் விஷம் வேகமாகப் பரவும் என்பதால், பயம், பதற்றம் இல்லாமல் விரைவாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்பதை மீண்டும் அவர் வலியுறுத்துகிறார்.
பாம்பு பிடிக்கும் இடங்களில் இப்போது கூட்டம் எளிதாகச் சேர்ந்து விடுவதால், பாம்பு பிடிப்பவர்கள் செல்வதற்குள் அந்த பாம்பு ஒரு வித அச்சத்துக்கும் கோபத்துக்கும் உள்ளாகியிருக்குமென்பதால், அதைக் கையாள்வதில் மிகமிகக் கவனமாக இருக்க வேண்டுமென்கிறார் ரமேஸ்வரன் மாரியப்பன்.
''கோவை போன்ற மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள பகுதிகளில் ராஜநாகங்கள் அதிகமுள்ளன. அது தீண்டினால் உயிர் பிழைப்பது மிகவும் கடினம். நாகப் பாம்பு கடித்துவிட்டால் ஒரு மணி நேரத்துக்குள் உரிய சிகிச்சையை எடுத்தால் மட்டுமே பிழைக்க முடியும்.'' என்கிறார் விஞ்ஞானி மனோஜ்.
ஔரங்கசீப் இந்துக்களை வெறுத்தாரா? வரலாற்று உண்மை என்ன?21 மார்ச் 2025
சீன இளைஞர்கள் சொந்தக் கவலைகளை டீப்சீக் செயலியிடம் புலம்பித் தள்ளுவது ஏன்?21 மார்ச் 2025
பாம்பு பிடிப்பவர்களுக்கு அரசே காப்பீடு வழங்க கோரிக்கை
கோவையைச் சேர்ந்த அமீன், கடந்த 27 ஆண்டுகளாக பாம்பு பிடித்து வருகிறார். "இதுவரை பிடித்துள்ள பாம்புகளைக் கணக்கில் வைத்துக் கொண்டதும் இல்லை; எதையுமே சமூக ஊடகங்களிலும் பகிர்ந்ததில்லை" என்கிறார். சமூக ஊடகங்களில் பகிர விரும்பி கண்மூடித்தனமான துணிச்சலில் பாம்பு பிடிக்க பலரும் முயற்சி செய்வதைத் தடுக்க வேண்டியது வனத்துறையின் பொறுப்பு என்கிறார் அமீன்.
''நான் ஒரே நாளில் 4 பாம்புகளை பிடித்துள்ளேன். 27 ஆண்டுகளுக்கு முன், முதல்முறை பாம்பு பிடித்த போது இருந்த அதே அச்சத்துடனும், விழிப்புடனும் இப்போதும் பிடிக்கிறேன். எங்களைப் போன்று தொழில் முறையில் பாம்பு பிடிப்பவர்களுக்கு வனத்துறை அடையாள அட்டை, மேலைநாடுகளில் பாம்பு பிடிக்க பயன்படுத்தப்படும் உபகரணம் (TONG) போன்றவற்றை வழங்க வேண்டும். வனத்துறையால் அனுமதிக்கப்பட்டவர் மட்டுமே பாம்பு பிடிக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.'' என்கிறார் அமீன்.
பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா?
பாம்பு கடித்தால் என்ன செய்யக் கூடாது? பாம்புகளை மீட்கும் இந்தப் பெண் கூறுவது என்ன?
பாம்புகளின் இனப்பெருக்கம் பற்றிய புரிதலை மாற்றுமா புதிய கண்டுபிடிப்பு?
பட மூலாதாரம்,HANDOUT
கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில், பாம்புகளைப் பிடிப்பதற்கு அங்குள்ள வனத்துறைகளின் சார்பில், மொபைல் ஆப்கள் உருவாக்கப்பட்டு, அதைக் கொண்டு பாம்பு பிடிப்பவர்களும் பொதுமக்களும் ஒன்றிணைக்கப்படுகின்றனர். அதேபோன்று தமிழகத்திலும் பாம்பு பிடிக்கும் பணியை வனத்துறை ஒருங்கிணைக்கவும் காட்டுயிர் ஆய்வாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இது குறித்து தமிழக வனத்துறைத் தலைவரும், முதன்மை தலைமை வனப் பாதுகாவலருமான சீனிவாச ரெட்டியிடம் பிபிசி தமிழ் கேட்ட போது, ''பாம்பு பிடிப்பதை ஒருங்கிணைப்பதற்கான எல்லாப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவில் 'சர்ப்பா' என்ற இணையதளம் மற்றும் மொபைல் ஆப் (SARPA) உருவாக்கப்பட்டது போல, இங்கும் ஒரு மொபைல் ஆப் உருவாக்கப்படவுள்ளது. அதேபோன்று பாம்பு பிடிப்பவர்களுக்கு பயிற்சி வழங்கவும். அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் நிறைவு பெற சற்று கால அவகாசமாகும். அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது பாம்புகள், மனிதர்கள் என இரு தரப்புக்கும் பாதுகாப்பு கிடைக்கும்'' என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
பாம்பு பிடிப்பவர்களே பாம்பு தீண்டி உயிரிழக்க நேரிடுவது ஏன்? அதனை தடுப்பது எப்படி?
சிரிக்கலாம் வாங்க
மகிந்த, ரணில் அரசை விட அநுர அரசின் செலவு தொடர்பில் வெளியான அறிவிப்பு
மகிந்த, ரணில் அரசை விட அநுர அரசின் செலவு தொடர்பில் வெளியான அறிவிப்பு
மகிந்த, ரணில் அரசை விட அநுர அரசு தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) மற்றும் ரணில் விக்ரமசிங்கவின்(ranil wickremesinghe) அரசாங்கங்களை விட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்(anura kumara dissanayake) அரசாங்கத்தின் செலவு நூறு மில்லியன் ரூபாய்கள் அதிகம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க(champika ranawaka) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
சில அரசியல்வாதிகளின் போலியான சிக்கனம்
பெரிய வாகன அணிவகுப்புகள் இருக்காது என்றும், நாடாளுமன்றத்திலிருந்து உணவு எடுத்துக்கொள்ள மாட்டோம் என்றும் அவர்கள் கூறினாலும், சில அரசியல்வாதிகளின் போலியான சிக்கனத்தைப் பராமரிக்க முன்பை விட அதிக செலவுகள் செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அநுரவின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறை
ஜனாதிபதி சமீபத்தில் கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு விஜயம் செய்தபோது, அவருடன் ஒரே ஒரு துணை வாகனம் மட்டுமே சென்றதாக ஊடகங்கள் காட்டியதாகவும், ஆனால் அவரது பாதுகாப்பிற்காக சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளும் நூற்றுக்கணக்கான பாதுகாப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
https://ibctamil.com/article/anura-government-s-expenditure-is-high-1742648815
நானும் ஊர்க் காணியும்
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பாலஸ்தீன மக்களின் விடுதலையானது, அனைத்து மக்களினது விடுதலையுடனும் ஒன்றிப்பிணைந்துள்ளது - சுவஸ்திகா அருளிங்கம்
பாலஸ்தீன மக்களின் விடுதலையானது, அனைத்து மக்களினது விடுதலையுடனும் ஒன்றிப்பிணைந்துள்ளது - சுவஸ்திகா அருளிங்கம்
பாலஸ்தீன மக்களின் விடுதலையானது, மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற நமது அனைத்து மக்களினது விடுதலையுடனும், ஒன்றிப்பிணைந்துள்ளது - சுவஸ்திகா அருளிங்கம்
Published By: RAJEEBAN 22 MAR, 2025 | 01:06 PM
பாலஸ்தீன மக்களின் விடுதலையானது, மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற நமது அனைத்து மக்களினது விடுதலையுடனும், ஒன்றிப்பிணைந்துள்ளது எனவே அதனை நாங்கள் வேறாக பார்க்க முடியாது என சட்டத்தரணியும் சமூக அரசியல் செயற்பாட்டாளருமா சுவஸ்திகா அருளிங்கம் தெரிவித்தார்.
கொழும்பில் அமெரிக்க தூதரகத்தின் முன்பாக சுதந்திர பலஸ்தீன இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
யுத்த நிறுத்த உடன்பாட்டினை மீறி இஸ்ரேல் மீண்டும் தனது இனப்படுகொலையை ஆரம்பித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இஸ்ரேலின் வன்முறையையும் காசாவிற்கு எதிரான கூட்டு தண்டனையை நிறுத்தக்கோரியும், இனவெறி மற்றும் இனச்சுத்திகரிப்பு ஆகியவற்றிற்கு அமெரிக்கா நிதி வழங்குவது மற்றும் அதனுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளதை அம்பலப்படுத்தும் நோக்கத்துடனும் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுவஸ்திகா அருளிங்கம் மேலும் தெரிவித்ததாவது.
பலஸ்தீனிய தேசத்திற்கும் மக்களிற்கும் ஆதரவாகவும் நாங்கள் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.
அதற்கு காரணம், போர் நிறுத்த உடன்படிக்கையொன்று ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் இந்த பயங்கரவாத இஸ்ரேலிய அரசு, பலஸ்தீனிய மக்கள் மீதும் நாட்டின் மீதும் இன்னமும் வன்முறையையும், இன ஒழிப்பையும் நடத்திக்கொண்டிருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரியும்.
எனவே அதனை கண்டிப்பதற்கும் மேலும் மேலும் பலஸ்தீனிய மக்கள் மீது வன்முறையை செலுத்தவேண்டாம் எனவும் போரை நிறுத்தவேண்டும் எனவும், பாலஸ்தீன மக்களிற்கு உரித்தான நிலங்களை விடுவிக்குமாறும் கோரி நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம்.
பாலஸ்தீன மக்களின் விடுதலையானது, மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற நமது அனைத்து மக்களினது விடுதலையுடனும், ஒன்றிப்பிணைந்துள்ளது எனவே அதனை நாங்கள் வேறாக பார்க்க முடியாது.
அதனால்தான் பாலஸ்தீன நாட்டு மக்களிற்கு எதிராக நடத்தப்படுகின்ற, இனக்குற்றங்களிற்கு எதிராகவும், போர்குற்றங்களிற்கு எதிராகவும், கைதுகளிற்கு எதிராகவும், அவர்களுடைய காணிகளை கைப்பற்றுவதற்கு எதிராகவும் நாங்கள் இன்று இலங்கையிலிருந்து எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.
இஸ்ரேலிற்கும் அந்த நாட்டிற்கு ஆயுதங்களை வழங்கிக்கொண்டிருக்கின்ற, முற்றுமுழுதாக உதவிகளை செய்துகொண்டிருக்கின்ற அமெரிக்காவிற்கு எதிராகவும், இந்த ஆர்ப்பாட்டத்தை நடாத்திக்கொண்டிருக்கின்றோம் என தெரிவித்தார்.
ஹிட்லர் படையின் ராக்கெட் தொழில்நுட்பம் மூலம் அமெரிக்கா நிலவில் கால் பதிக்க வித்திட்ட விஞ்ஞானி
பட மூலாதாரம்,GETTY IMAGES
கட்டுரை தகவல்
எழுதியவர், சாரதா வி
பதவி, பிபிசி தமிழ்
22 மார்ச் 2025, 01:31 GMT
புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்
ஹிட்லரின் ராணுவத்திற்கு ராக்கெட் செய்து கொடுத்த விஞ்ஞானிதான், நிலவில் கால் பதித்த அமெரிக்காவின் சாதனைக்கு பின்னால் இருந்தவர்.
அவரின் பெயர் வார்னர் வான் ப்ரான். ஹிட்லரின் ஜெர்மனியில், ராக்கெட் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்தவராக இருந்த அவரின் ஆராய்ச்சியில்தான் வி2 என்ற ஏவுகணை உருவானது. இந்த ஏவுகணையை பயன்படுத்திய ஹிட்லரின் படை, இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கர்களையும் சோவியத் படைகளையும் கதி கலங்க செய்தது.
இந்த விஞ்ஞானி போருக்கு பின் அமெரிக்காவில் தஞ்சமடைந்தார். அவரின் வாழ்க்கை பல வியத்தகு சாதனைகளை உள்ளடக்கியது.
வார்னர் வான் ப்ரான், மனித குலம் ஒரு நாள் நட்சத்திரங்களை அடையும் என்று உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால், நடைமுறையில் அவர் போருக்கான ராக்கெட் தயாரிக்க தொழில்நுட்பம் வகுத்துக் கொடுத்தார். நாஜி ஜெர்மனியிலிருந்து நாசா வரையிலான அவரது வாழ்க்கைப் பயணம் இலக்கும், அறநெறியும், புவிசார் அரசியலும் சந்திக்கும் முரண்பாட்டின் வெளிப்பாடாகும்.
நாஜி பொறியாளர்
ஜெர்மனியின் விர்சிட்ஸ் நகரில் 1912 ஆம் ஆண்டு பிறந்த வான் ப்ரானுக்கு விண்வெளி மீதான ஆர்வம் சிறு வயதிலிருந்தே தொடங்கியது.
"ஒரு புத்திசாலி இளைஞராக இருந்த அவர் கவனம் சிதறியதால் கணிதத்திலும், இயற்பியலிலும் தோல்வியடைந்தார். அதனால் உறைவிடப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். தனது பதின்ம வயதுகளில் விண்வெளி ராக்கெட்டுகள் குறித்து கனவு காண தொடங்கினார். 22 வயதில் இயந்திரவியல், வானூர்தி பொறியியலில் பட்டங்களையும், இயற்பியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வருவதற்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அந்த நாட்டின் ராணுவத்தின் ராக்கெட் திட்டத்தின் சிவிலியன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். 25 வயதில் அவர் பால்டிக் கடற்கரையில் உள்ள பீனெமுண்டே ராக்கெட் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தளத்தின் சிவிலியன் தொழில்நுட்ப இயக்குனராக இருந்தார்" என்று ப்ரானின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிய பாப் வார்ட் குறிப்பிடுகிறார்.
1928-ல், அவர் ஜெர்மனியின் விண்வெளி பயண சமூகத்தில் இணைந்தார். விரைவில் ஜெர்மன் ராணுவத்தில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். இரண்டாம் உலகப்போரில் பல நாடுகளை மிரட்டிய வி2 என்ற ஏவுகணையை இவரே உருவாக்கினார். இந்த வி2 ஏவுகணை உலகின் முதல் நீண்ட தூர வழிகாட்டப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். வி2 என்றால் அது 'vergeltungswaffen' (பழிவாங்கும் ஆயுதம்) என்ற பொருள் ஆகும்.
பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY
படக்குறிப்பு,வி2 ஏவுகணை உலகின் முதல் நீண்ட தூர வழிகாட்டப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.
V2 ராக்கெட் தொழில்நுட்பம்
இரண்டாம் உலகப் போரில் லண்டன், அண்ட்வெர்ப், பாரிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை தாக்குவதற்கு, V2 ராக்கெட்டை நாஜி ஜெர்மனி பயன்படுத்தியது.
ஒவ்வொரு V2 ராக்கெட்டும் 14 மீட்டர் உயரம் கொண்டது ஆகும். அவை கிட்டத்தட்ட ஒரு டன் வெடிபொருள்களை சுமந்து சென்றன. 1944-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி லண்டன் மீது முதல் தாக்குதல் நடத்தப்பட்டதில் 10 மீட்டர் பரப்பளவில் ஒரு பள்ளத்தை ஏற்படுத்தி மூன்று பேரை கொன்று 22 பேரை அது காயப்படுத்தியது.
இவை ஹிட்லரின் வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன.
V2 ராக்கெட் திரவ எத்தனால் மற்றும் ஆக்சிஜனால் உந்தப்படும். சுமார் 190 கி.மீ எறிபாதையில், பூமிக்கு மேலே 80 கி.மீ உயரத்தில் செல்லக் கூடிய V2 , உலகின் முதல் நீண்ட தூர பாலிஸ்டிக் ராக்கெட் ஆகும். அதுவரை உலகம் இதைப் போன்று வேறு எதையும் பார்த்ததில்லை.
சீன இளைஞர்கள் சொந்தக் கவலைகளை டீப்சீக் செயலியிடம் புலம்பித் தள்ளுவது ஏன்?21 மார்ச் 2025
ஆங்கிலேயே தொல்லியலாளர் ஜான் மார்ஷலுக்கு தமிழ்நாட்டில் சிலை வைக்கப்பட்டது ஏன்?22 மார்ச் 2025
பட மூலாதாரம்,SPL
'ஆபரேஷன் பேப்பர்கிளிப்'
இரண்டாம் உலகப் போரின் முடிவில், V2 தொழில்நுட்பத்தை வசப்படுத்த அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகள் போட்டி போட்டன.
1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியை தழுவியது. அதன் பின்னர் ப்ரான் அமெரிக்காவிடம் சரணடைந்தார்.
" ஸ்டாலினுக்கு வேலை செய்ய விருப்பம் கொள்ளாத வான் ப்ரான் அமெரிக்கர்களிடம் சரணடைவது என்ற முடிவை எடுத்தார். அதேநேரம், ரஷ்யர்கள் V2 தொழிற்சாலையை கைப்பற்றினர்" என்று பிபிசியின் செய்தியாளர் ரிச்சர்ட் ஹாலிங்மன் தெரிவிக்கிறார்.
சோவியத்துக்கு எதிராக நாஜி விஞ்ஞானிகளின் திறனை பயன்படுத்தும் அமெரிக்காவின் 'ஆப்பரேஷன் பேபர்கிளிப்' திட்டத்தில் வான் ப்ரானுடன் சேர்ந்து 125 நாஜி விஞ்ஞானிகள் அமெரிக்காவிடம் சரணடைந்தனர்.
நாசா விஞ்ஞானியாக
அமெரிக்காவில் ப்ரானுக்கு வாய்ப்புகள் ஏராளமாக இருந்தன. அவரது குழு அமெரிக்காவின் முதல் பாலிஸ்டிக் ஏவுகணையான ரெட்ஸ்டோனை உருவாக்கியது. இந்த ஏவுகணை ஒரு அணு ஆயுதத்தை 250 மைல்கள் வரை வீசக்கூடியது ஆகும். ரெட்ஸ்டோனின் மாற்றியமைக்கப்பட்ட புதிய பதிப்பான ஜூபிடர்-சி, 1958 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் முதல் செயற்கைக்கோளான எக்ஸ்ப்ளோரர் 1-ஐ விண்ணில் ஏவியது.
அவர் 1960-ல் நாசாவில் மார்ஷல் விண்வெளி பயண மையத்தின் இயக்குநராக பொறுப்பேற்றார். அங்கே, அமெரிக்காவின் விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு உந்திச் சென்ற சாட்டர்ன் V (Saturn V) ராக்கெட் அவரது தலைமையில் உருவாக்கப்பட்டது.
1950 களில் வால்ட் டிஸ்னியுடன் இணைந்து விண்வெளிப் பயணத்தை பிரபலப்படுத்திய Man in Space (விண்வெளியில் மனிதன்) என்ற தொலைக்காட்சி தொடரில் பணியாற்றினார். "மனிதன் எங்கு செல்ல விரும்புகிறானோ அங்கெல்லாம் அவன் சொந்தமாகிறான்" என்று ப்ரான் கூறுவார். பனிப்போர் கால விண்வெளிப் போட்டியின் போது அவரது இந்த நம்பிக்கை அமெரிக்காவை உற்சாகப்படுத்தியது.
1969-ல் அமெரிக்காவின் அப்பல்லோ 11 நிலவில் தரையிறங்கியது. இந்த நிகழ்வு வரலாற்றின் மிகச் சிறந்த ராக்கெட் பொறியாளர்களில் ஒருவராக ப்ரானை நிலை நிறுத்தியது. அப்போதும் அவரது கடந்த காலம் குறித்த கேள்விகள் நீடித்தன. "இயற்கை அழிவை அறியவில்லை; அதற்குத் தெரிந்ததெல்லாம் உருமாற்றம்" என்று கூறிய ப்ரான் இந்த சந்தேகங்களை மறைமுகமாக ஒப்புக் கொண்டார் என்றே கூறலாம்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
பிரமாண்ட விண்வெளி கண்ணாடி மூலம் இரவை பகலாக்க முடியுமா? ரஷ்யாவின் இந்த திட்டத்தின் நோக்கம் என்ன?
பிரபஞ்சத்தின் மிகப்பெரிய, பிரமாண்ட கட்டமைப்பு கண்டுபிடிப்பு - உள்ளே என்ன இருக்கிறது?
பனாமா: கடலுக்கு அடியில் 11 மீட்டர் ஆழத்தில் வீடு கட்டி 120 நாட்கள் வாழ்ந்த மனிதர்
புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் துளிர் விட்ட தட்டைப்பயறு - இஸ்ரோ சாதித்தது எப்படி?
கடந்த காலம் அவரை விடவில்லை
ப்ரான் ஆராய்ச்சியில் உருவான V-2 பொறியியல் அதிசயமாக இருந்தது, ஆனால் ஒரு இருண்ட வரலாற்றையே கொண்டிருந்தது. வதை முகாம்களில் இருந்து கட்டாய உழைப்பைப் பயன்படுத்திக் கொண்டு மிட்டல்வெர்க் ஆலையில் தயாரிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் - முன்னேற்றத்தையும், மனிதத் துயரத்தையும் ஒருசேர அடையாளப்படுத்தியது.
"வான் ப்ரான் இந்த கொடூரங்களை அரிதாகவே எதிர்த்தார்" என்று குறிப்பிடுகிறார் வான் ப்ரான்: ட்ரீமர் ஆஃப் ஸ்பேஸ், இன்ஜினியர் ஆஃப் வார் என்ற புத்தகத்தின் ஆசிரியரான மைக்கேல் நியூஃபெல்ட்.
அவர் நிலவுக்கு அப்பால் செல்வதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த 1964ஆம் ஆண்டில், அவர் சமர்ப்பித்த மாநாட்டு அறிக்கை ஒன்று என்னிடம் உள்ளது. இந்த அறிக்கையில் அவர் நிலவில் மனிதனை தரையிறக்குவதற்கான ஜெமினி திட்டத்திற்கு முன்பே, அவர் தனது சகாக்களிடம் செவ்வாய்க்கு பயணம் செய்வதற்கான திட்டமிடலை தொடங்க வேண்டும் என கூறியதை உள்ளடக்கியிருந்தது," என்று, மார்ஷல் விண்வெளி மையத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுனரான ஜான்சன் குறிப்பிடுகிறார்.
"இன்று நாம் செய்யும் முயற்சிகளுடன் ஒப்பிடும் போது, 1964ஆம் ஆண்டிலேயே இன்று நாம் தீர்க்க முயற்சிக்கும் பல பிரச்னைகளை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்" என்று அவர் கூறினார்.
வரலாற்று ஆசிரியரும், வான் ப்ரான் குறித்து நூல்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ள மைக்கேல் நியூஃபெல்ட், "வான் ப்ரான் முழுவதுமாக வில்லனும் இல்லை, முழுவதுமாக ஹீரோவும் இல்லை. அவர் லட்சியமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட மனிதர்" என தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
ஹிட்லர் படையின் ராக்கெட் தொழில்நுட்பம் மூலம் அமெரிக்கா நிலவில் கால் பதிக்க வித்திட்ட விஞ்ஞானி
எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
நானும் ஊர்க் காணியும்
யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!
யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!
22 Mar, 2025 | 05:04 AM
யாழ். சேந்தாங்குளம் கடலில் வெள்ளிக்கிழமை (21) நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோவில் வாசல், காங்கேசன்துறை வீதி, இணுவில் என்ற முகவரியைச் சேர்ந்த பி.சாருஜன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் அவரது நண்பர்கள் 14 பேருடன் குளிப்பதற்காக இன்று மதியம் இளவாலை - சேந்தாங்குளம் கடலுக்கு சென்றனர். கடலில் குளித்துக்கெண்டு இருந்தவேளை திடீரென கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் குறித்த இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பின்னர் இளைஞனின் சடலம் கரை ஒதுங்கியது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
குறித்த கடல் பகுதியானது பாரிய அலை எழும் பகுதியாக காணப்படுகிறது. இருப்பினும் எந்தவிதமான எச்சரிக்கை அறிவிப்புகளும் காட்சிப்படுத்தப்படவில்லை. இதற்கு முன்னரும் இவ்வாறு மரணம் இதே பகுதியில் சம்பவித்துள்ளன. எனவே உரிய எச்சரிக்கை சமிக்ஞைகளை காட்சிப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு! | Virakesari.lk