3 months 2 weeks ago
வயசு கோளாறு... சொல்வழி கேளாது. 😜 பட்டுத்தான் தெளியவேணும். 😂 அதுவரை... நாம, ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்ப்போம். 🤣
3 months 2 weeks ago
நல்லதற்கல்ல....
3 months 2 weeks ago
நாம சொன்னா யார் கேட்கிறார்கள்???😂
3 months 2 weeks ago
நல்லதொரு கட்டுரை ........... நன்றாக எழுதியிருக்கிறீர்கள் ........... ! 👍
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு. மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ புதிய கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு றிவோரா ஹோட்டலில் கைச்சாத்தானது. நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை தொடர்ந்து உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்குவதற்காக புதிய முயற்சியொன்றை பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கொண்டு ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கடந்த 15 ம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இதனையடுத்து நடக்கவிருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் இணைந்து களமிறங்கியுள்ளனர். இந்த நிலையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானதையடுத்து பிரிந்திருந்த கருணா மற்றும் பிள்ளையான் மீண்டும் இணைந்துள்ளனர். https://athavannews.com/2025/1426117
3 months 2 weeks ago

பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு.
மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ புதிய கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு றிவோரா ஹோட்டலில் கைச்சாத்தானது.
நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை தொடர்ந்து உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்குவதற்காக புதிய முயற்சியொன்றை பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கொண்டு ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கடந்த 15 ம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
இதனையடுத்து நடக்கவிருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் இணைந்து களமிறங்கியுள்ளனர். இந்த நிலையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானதையடுத்து பிரிந்திருந்த கருணா மற்றும் பிள்ளையான் மீண்டும் இணைந்துள்ளனர்.
https://athavannews.com/2025/1426117
3 months 2 weeks ago
நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியம் வேண்டாம் – ஜனாதிபதி. தமக்கு வழங்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியத்தை நீக்குவது தொடர்பில் தாம் நாடாளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் மீதான குழு நிலை வாதத்தின் இறுதி நாள் விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தற்போது 1 மில்லியன் ரூபாயாக காணப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதித் தொகை 250,000 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுமெனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஜனாதிபதியாக இருந்தவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்பட்டது. எனினும் தமக்கு குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியம் வேண்டாம் என எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1426113
3 months 2 weeks ago

நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியம் வேண்டாம் – ஜனாதிபதி.
தமக்கு வழங்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியத்தை நீக்குவது தொடர்பில் தாம் நாடாளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் மீதான குழு நிலை வாதத்தின் இறுதி நாள் விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போது 1 மில்லியன் ரூபாயாக காணப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதித் தொகை 250,000 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுமெனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஜனாதிபதியாக இருந்தவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்பட்டது.
எனினும் தமக்கு குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியம் வேண்டாம் என எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
https://athavannews.com/2025/1426113
3 months 2 weeks ago
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை உறுதிபடுத்தினார் ஜனாதிபதி! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வரவு- செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகளும் ஆரம்பிக்கும் நிகழ்விலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் எனவும் ஜனாதிபதி, கூறியுள்ளார். https://athavannews.com/2025/1426101
3 months 2 weeks ago
நெஞ்சு திக் திக் என்று அடிக்குது, ஏதோ ஏமாற்றம் வருமோ என்று. இருந்த வீட்டை அறாவிலைக்கு குடுத்துப்போட்டு உது தேவையா?
3 months 2 weeks ago
இரண்டு அதன்பின் ஒவ்வொரு தடவையும் சந்தர்ப்பம் கிடைக்கும் நேரம் எல்லாம் நாட்டில போய் இருக்கவேணும் என்ற ஆசையை மனிசனுக்குச் சொல்கிறேன். பெரிய ஒரு காணி வாங்க வேணும். விருப்பமான மரங்கள் எல்லாம் நடவேணும். ஒரு தொழில் ஒன்று தொடங்கி ஒரு ஐம்பது பேருக்காவது வேலைவாய்ப்புக் கொடுத்து உதவவேணும் என்றெல்லாம் சொல்ல, அதுக்கு ஒரு பத்து வருடங்களுக்கு முன்னராவது போயிருக்கவேணும். இப்ப போய் உதெல்லாம் சாத்தியமோ என்று வழமைபோல் கணவர் முட்டுக்கட்டை போட்டாலும் என் ஆசையை நான் தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தன். நானும் கணவரும் இன்னொரு மகளும் 2017 இல் ஊருக்குப் போகிறோம். தங்கை வீட்டிலேயே தங்கினாலும் எமக்கு இங்கு ஒரு வீடு இல்லையே என்ற எண்ணம் அரித்துக்கொண்டே இருக்க, ஒரு பெரிய காணியை பார்ப்போமா என்று ஆரம்பிக்க கணவனும் மகளும் தடுக்கிறார்கள். அம்மா நான் ஊர் பார்க்க வந்தது. நீங்கள் காணி பாக்கிறது எண்டால் பாருங்கோ. நான் விட்டுட்டு திரும்பப் போயிடுவன் என்று வெருட்ட, முதல் மூன்று கிழமையும் மட்டக்களப்பு, திருகோணமலை இன்னும் பல கோயில் குளம் என்று சுற்றித் திரிந்துவிட்டு வர ஒரு செய்தித்தாளில் வீடு வளவு, காணி விற்பனை என்று விளம்பரம் பார்த்துவிட்டு போன்செய்து தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி காணிகளை வீடுகளைப் போய்ப் பார்த்தால் ஒன்றும் திருப்தி வரவில்லை. அவசர அவசரமாகப் பல வீடுகள் காணிகள் பார்த்து வெறுத்து இனி எதுவும் பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து நாம் இங்கு வந்து இருப்பது என்று முடிவானால் கணவரின் தோட்டக்காணிக்குள்ளேயே வீட்டைக் கட்டுவோம் என முடிவெடுத்து போன் செய்த புரோக்கர்களுக்கும் நாம் மீண்டும் லண்டன் செல்ல இருக்கிறோம். அடுத்த ஆண்டு மீண்டும் வரும்போது பார்க்கலாம் எனச் சொல்லிவிட்டு நாம் கொண்டுபோகவேண்டிய பொருட்களை வாங்கி அடுக்கத் தொடங்க, ஒரு புரோக்கர் போன் செய்கிறார். ஒரு நல்ல காணி கிடக்கு அக்கா. ஒருக்கா இன்று பார்க்கப் போவமோ? இனி ஒரு காணியும் வேண்டாம். இரண்டு நாளில நாங்கள் வெளிக்கிடுறம் தம்பி. அடுத்த வருடம் பார்ப்பம் நீங்கள் எதிர்பார்த்தபடி பெரிய காணி. 14 பரப்பு. என்ன விலை தம்பி? ஒண்டு சொல்லுறார். நான் குறைச்சு வாங்கித் தாறன் அக்கா. கட்டாயம் உங்களுக்குப் பிடிக்கும். சரி இண்டைக்கு கொஞ்ச வேலை இருக்கு. நாளைக்குப் போவமே?. சரி அக்கா. நாளை காலை 10 மணிக்கு வாறம் எண்டு சொல்லட்டே? சரி நாளை காலை வாறம் என்கிறேன். எனக்கோ அந்தக் காணி எனக்கு ஏற்றதா வரும் என்று நம்பிக்கை இல்லை. எதுக்கும் போய் பார்ப்போம் அம்மா என்கிறாள் மகள். அடுத்தநாள் எழுந்து காலை உணவை உண்டபின் ஒரு ஓட்டோ பிடித்து அவர்கள் சொன்ன இடத்துக்குப் போயாச்சு. வெளி கேற்றைத் திறந்தவுடன் ஒரு 500 மீற்றருக்கு நடைபாதை போய் வளைந்து திரும்ப பாலா மா மரங்களுடன் நடுவே ஒரு வீடு. வீட்டின் பின்னால் வாழைத் தோட்டம். இடதுபுறம் தோட்டம் செய்யக்கூடிய வெற்று நிலம். வளவைச் சுற்றித் தென்னை மரங்கள். என் முகமெல்லாம் பல்லாக புரோக்கருக்கு என் மனநிலை புரிந்துபோகிறது. அக்கா பெடிக்கு ஒரு அவசரம். ஒரு பத்து நாளில காசு ஒழுங்கு பண்ண ஏலுமே என்கிறார். உன் கைப் பையில எவ்வளவு வச்சிருக்கிறாய் என்கிறார் மனிசன். ஒரு பத்தாயிரம் இருக்கு என்கிறேன். வாங்கோ தம்பி கூப்பிடுங்கோ பெடியனை என்று சொன்னபடி என்னிடம் இருந்த பத்தாயிரத்தை வாங்குகிறார் மனிசன். கொஞ்சம் தள்ளிப் போய் புரோக்கரும் மனிசனும் ஏதோ குசுகுசுக்கின்றனர். பின்னர் அந்த வீட்டுக்காரப் பெடியிடம் கதைத்துவிட்டுக் காசைக் கொடுத்து நிச்சயம் செய்கின்றனர். கணவர் திரும்பி வந்தபோது என்னப்பா கதைச்சியள் என்கிறேன். நீங்கள் வாடகைக்கு விடுறதெண்டால் தாங்களே இந்த வீட்டிலேயே இருக்க விடச் சொல்லிக் கேட்கிறார். நானும் ஓம் என்று சொல்லீற்றன் என்கிறார். என்னைக் கேட்காமல் ஏன் ஓம் எண்டு சொன்னியள்? நாங்கள் வந்து இருக்கிறதெண்டால் எப்பிடி? நீ என்ன உடனையா வந்து இருக்கப் போறாய்? எப்பிடியும் மூண்டுநாலு வருசம் பிடிக்கும். சிலவேளை அவையே வேறை வீடு வாங்கிக்கொண்டு போவினம். நீ ஏன் சும்மா அவசரப் படுறாய். லோயரை வச்சு எழுதிப்போட்டே குடுப்பம் என்று சொல்ல நான் தலையாட்டுகிறேன்.
3 months 2 weeks ago
நல்லது தெரிஞ்ச ஆட்கள் கொஞ்சப் பேர் நாட்டில வந்து இருந்தாலே பொழுதுபோயிடும். அதுவும் உண்மைதான். வரவுக்கு நன்றி.
3 months 2 weeks ago
கனகராசா சரவணன் மட்டக்களப்பு – சந்திவெளியில் 2017 ம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி .ரி.ஜே.பிரபாகரன் இன்று வெள்ளிக்கிழமை மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 18ம் திகதி சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவர் ரி. 56 ரக துப்பாக்கியால் அந்த பகுதியில் இயங்கிவந்த ஆயுதக்குழு ஒன்றைச் சேர்ந்தவர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக சந்திவெளி மற்றும் கிரான் பிரதேசங்களைச் சேர்ந்த தி.கிருஸ்ணரூபன், வ.திருச்செல்வம், கு.பாஸ்கரன், க. மகேந்திரன் ஆகிய 4 பேரை ஏறாவூர் பொலிசார் கைது செய்து அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். குறித்த வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை மேல் நீதிமன்ற நீதிபதி ரி. ஜே.பிரபாகரன் குறித்த 4 பேரும் குற்றவாளிகள் என கண்டுகொண்டதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். https://thinakkural.lk/article/316338
3 months 2 weeks ago
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு – சந்திவெளியில் 2017 ம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி .ரி.ஜே.பிரபாகரன் இன்று வெள்ளிக்கிழமை மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
2007ம் ஆண்டு மார்ச் மாதம் 18ம் திகதி சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவர் ரி. 56 ரக துப்பாக்கியால் அந்த பகுதியில் இயங்கிவந்த ஆயுதக்குழு ஒன்றைச் சேர்ந்தவர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பாக சந்திவெளி மற்றும் கிரான் பிரதேசங்களைச் சேர்ந்த தி.கிருஸ்ணரூபன், வ.திருச்செல்வம், கு.பாஸ்கரன், க. மகேந்திரன் ஆகிய 4 பேரை ஏறாவூர் பொலிசார் கைது செய்து அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.
குறித்த வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை மேல் நீதிமன்ற நீதிபதி ரி. ஜே.பிரபாகரன் குறித்த 4 பேரும் குற்றவாளிகள் என கண்டுகொண்டதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
https://thinakkural.lk/article/316338
3 months 2 weeks ago
இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி; இந்திய அரசுடன் இணைந்து சம்பூரில் மின்நிலையம் அமைக்க தீர்மானம் - ஜனாதிபதி Published By: VISHNU 21 MAR, 2025 | 08:22 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகைத் தருவார் இதன்போது சம்பூர் மின்நிலைய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். பொருளாதார ஸ்தீரத்தன்மைக்கான உறுதிப்பாட்டை வழங்கியுள்ளோம். மன்னாரில் 50 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யப்படும் காற்றாலை திட்டம் ஆரம்பிக்கப்படும். இந்திய அரசாங்கத்துடன் கூட்டிணைந்து சாம்பூர் பகுதியில் மின்நிலையத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனத்துக்கும், மின்சார சபைக்கும் 50: 50 என்ற வகையில் உரிமத்தை கொண்டதாக கூட்டு நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது. அனைத்து சுமைகளையும் தோளில் சுமந்துக்கொண்டு செல்கிறோம். அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரச சேவையாளர்கள் வினைத்திறனான முறையில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவை இரத்துச் செய்வேன். ஓய்வுப்பெற்ற ஜனாதிபதிகளின் சிறப்பு சலுகைகயை இரத்துச் செய்யும் சட்டமூலம் வெகுவிரைவில் சமர்ப்பிக்கப்படும். எவருடனும் எனக்கு தனிப்பட்ட பகைமை கிடையாது. ஆகவே நாட்டுக்காக எம்முடன் ஒன்றிணையுங்கள் என எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, ஒருசிலரின் உரையில் வேதனை மற்றும் அச்சம் வெளிப்பட்டுள்ளதை கண்டு நாங்கள் குழப்பமடையவில்லை. இவர்களின் வேதனை மற்றும் கோபத்தை விளங்கிக்கொள்ள முடிகிறது. சிறந்ததை ஏற்றுக் கொள்ளவும், விமர்சனங்களை புறக்கணிப்பதற்கும் தயாராகவுள்ளோம். நாட்டு மக்களுக்கும், நாட்டுக்கும் பயனுடையதான வகையில் பொருளாதாரத்தை செயற்படுத்துவோம். உத்தியோகபூர்வமாக வங்குரோத்து நிலையடைந்த நாட்டையே பொறுப்பேற்றோம். இந்த ஆண்டு 4990 பில்லியன் ரூபா அரச வருவாய் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், கடன்களுக்கான வட்டி செலுத்தலுக்கு 2950 பில்லியன் ரூபாய், அரச சேவையாளர்களுக்கு சம்பள ஒதுக்கீடு 1352 பில்லியன் ரூபாய், ஓய்வுதிய கொடுப்பனவுக்கான ஒதுக்கீடு 4042 பில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் காணப்படுகிறது. மிகுதி 256 பில்லியன் ரூபாய் இதுவே தற்போதைய பொருளாதார நிலைமை. ஆகவே அவசரமடைய கூடிய நிலையில் பொருளாதாரம் இல்லை என்பதை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள். அரச நிறுவனங்களின் கடன் மற்றும் நட்டம் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ளன. வருடாந்தம் இந்த நிலைமையே காணப்படுகிறது. ஈட்டிக் கொள்ளும் வருமானத்தை காட்டிலும் செலவுகள் அதிகளவில் காணப்பட்டுள்ளது. பொருளாதாரத்துக்கு இயைவானதாக செயற்படும் நிறுவனங்களுக்கு இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது. பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் எம்மிடம் பல கேள்விகள் காணப்பட்டன. ஆட்சி பொறுப்பினை ஏற்கும் போதே நாணய நிதியத்தின் செயற்திட்ட யோசனை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டில் இருந்து விலகுவோம் என்றே ஒரு தரப்பினர் எதிர்பார்த்தார்கள். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். முழுமையான அரசாங்கத்தை நான்கு மாதங்களுக்கு முன்னரே அமைத்தோம். பொருளாதார ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்தினோம். கடந்த டிசெம்பர் மாதம் 21 ஆம் திகதி வங்குரோத்து நிலையில் இருந்து வெளியேறினோம். பிரதான கடன் வழங்குநர்களுடன் இணக்கமான தீர்மானத்துக்கு வந்துள்ளோம். வங்குரோத்து நிலையடைந்ததால் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டோம். கடவத்தை - மீரிகம அபிவிருத்திக்கு சீன எக்சிம் வங்கி கடன் வழங்கியது. வங்குரோத்து என்று அறிவித்ததன் பின்னர் சீன வங்கி கடன் வழங்கலை இடைநிறுத்தியது. இந்த அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்பட்டதால் நிர்மாணிப்பு கம்பனிக்கு 46 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. இது ஒரு எடுத்துக்காட்டு மாத்திரமே. வங்குரோத்து நிலையில் இருந்து வெளியேறியதன் பின்னர் ஜப்பான் அரசாங்கத்தின் 11 கருத்திட்டங்களும், சீனாவின் 76 கருத்திட்டங்களும் மீள ஆரம்பிக்க இணனக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதுவே பொருளாதாரத்தில் ஸ்திர நிலைமை, சிறந்த எடுத்துக்காட்டு. இந்திய அரசாங்கத்துடன் கூட்டிணைந்து சம்பூர் பகுதியில் மின்நிலையத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனத்துக்கும், மின்சார சபைக்கும் 50: 50 என்ற வகையில் உரிமத்தை கொண்டதாக கூட்டு நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்படும். இதனூடாக சம்பூர் பகுதியில் 120 மெகாவோட் மின்னுற்பத்தி நிலையம் ஸ்தாபிக்கப்படும். மின்சார சபை இதனை கொள்வனவு செய்யும். குறைந்தளவான விலையில் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகைத் தருவார் இதன்போது சம்பூர் மின்நிலைய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். பொருளாதார ஸ்தீரத்தன்மைக்கான உறுதிப்பாட்டை வழங்கியுள்ளோம். மன்னாரில் 50 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யப்படும் காற்றாலை திட்டம் ஆரம்பிக்கப்படும். பொருளாதார ரீதியில் தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் மற்றும் கடன் வழங்நர்களுக்கும் நம்பிக்கையளித்துள்ளோம். டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியை உறுதிப்படுத்தியுள்ளோம். வங்கிக் கட்டமைப்பின் மீதான சர்வதேச நாணய நிதியத்தின் நம்பிக்கையை வெற்றிக்கொண்டுள்ளோம். வங்கி வட்டி வீதத்தை ஒற்றை இலக்கத்துக்கு கொண்டு வந்துள்ளோம். வரி வருமானத்தை அதிகளவில் ஈட்டிக் கொள்ளும் அரச நிறுவனங்களின் கட்டமைப்பை மாற்றியமைத்துள்ளோம். இந்த மூன்று மாத காலங்களில் இறைவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றின் வருமானம் எதிர்பார்த்த நிலைமை காட்டிலும் அதிகரித்துள்ளது. இந்த சாதக நிலையை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்வோம். தனிப்பட்ட முயற்சியாளர்கள் பொருளாதாரத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையின்மையை இல்லாது நம்பிக்கை கொள்ளும் சூழலை ஏற்படுத்தியுள்ளோம். தரவுகளை அடிப்படையாக்க கொண்டு பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளாந்தம் மீளாய்வு பணிகளை முன்னெடுத்துள்ளோம். அவதான நிலையில் இருந்துக் கொண்டு தான் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளோம். பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் வகையிலான பொய்யை மக்கள் மத்தியில் குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இதனை தவிர்த்து வேண்டிய அளவில் அரசியல் செய்துக் கொள்ளுங்கள். பொருளாதார ஸ்திரப்படுத்தல் என்பது அரசாங்கத்தின் பொறுப்பு மாத்திரமல்ல, ஒட்டுமொத்த மக்களினதும், மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பாகும். ஆகவே பொருளாதாரம் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க வேண்டாம். பொருளாதார ரீதியில் ஏதேனும் சந்தேகம் காணப்பட்டால் எம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள். சந்தேகத்துடனான விடயங்களை மக்கள் மத்தியில் குறிப்பிட வேண்டாம். பொருளாதார ரீதியிலான விடயங்களுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவுள்ளேன். பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஆட்சிக்கு வந்தவுடன் முன்னெடுத்தேன். நெற்பயிர்ச்செய்கைக்கான நிவாரண கொடுப்பனவை 15 ஆயிரம் ரூபாவாக அதிகரித்தேன். அஸ்வெசுன நலன்புரித் திட்டத்தின் சகல கொடுப்பனவுகளையும் அதிகரித்துள்ளோம். நலன்புரி கொடுப்பனவு திட்டத்தில் இருந்து நீக்கப்படும் பட்டியலில் இருந்த 8 இலட்ச பயனாளர்களை மீண்டும் திட்டத்துக்குள் உள்வாங்கியுள்ளோம். நெருக்கடியான நிலையில் எவரையும் புறக்கணிக்கவில்லை. 16 இலட்ச மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக 6000 ரூபா வழங்கியுள்ளோம். அதேபோல் நீரிழிவு நோயாளர்கள், சிரேஷட பிரஜைகளுகள், விசேட தேவையுடையவர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்துள்ளோம். புலமை பரிசில் மற்றும் மாஹபொல கொடுப்பனவுகளை சடுதியாக அதிகரித்துள்ளோம். பெற்றோர் இல்லாத பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அவர்களுக்கும் வி சேட கொடுப்பனவுகளை வழங்கும் முன்மொழிகளை முன்வைத்துள்ளோம். அநாதை இல்லங்களில் வாழும் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே எவரையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை மறக்கவில்லை. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரச சேவையாளர்களும், மூளைசாலிகளும் நாட்டை விட்டு வெளியேறும் நிலையே காணப்பட்டது. நெருக்கடியான நிலையில் அரச சேவையாளர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தை அரச சேவைக்குள் உள்ளடக்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அரச சேவையாளர்களின் அடிப்படை சம்பளம், மேலதிக கொடுப்பனவு மற்றும் இதர கொடுப்பனவுகள் அனைத்தும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பள அதிகரிப்பு எதிர்வரும் மாதம் முழுமையாக கிடைக்கப்பெறும். உழைக்கும் போது செலுத்தும் வரி திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே வினைத்திறனான சேவையை எதிர்பார்க்கிறோம். பாராளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதிய கொடுப்பனவு வேண்டாம் என்று கடிதம் வழங்கியுள்ளேன். மாற்றத்தை என்னில் இருந்தே ஆரம்பிப்பேன். கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினருமான ஓய்வூதிய கொடுப்பனவையும், ஜனாதிபதிக்கான கொடுப்பனவையு; பெற்றுக்கொண்டு பலர் திருட்டு பூனை போல் இருந்துள்ளார்கள். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சரானதன் பின்னர், உறுப்பினருக்கான கொடுப்பனவும் கிடைக்கப்பெறும், அமைச்சருக்கான கொடுப்பனவும் வழங்கப்படும். கரண்டி கையில் உள்ளதால் இவர்கள் தமக்கு வேண்டியதை போன்று பரிமாற்றிக் கொண்டார்கள். என் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அமைச்சு, பிரதி அமைச்சு பதவிகளுக்கான கொடுப்பனவுகளை மாத்திரமே பெறுகிறார்கள். இந்த நாட்டை திருத்துவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். மக்களின் வரிப்பணத்தை சிறந்த முறையில் பயன்படுத்துகிறேன். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கும், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை வரையறுப்பதற்கும் உரிய சட்டமூலம் வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். அனைவரும் கையுயர்த்த தயாராக இருங்கள். 10 இலட்சமாக காணப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதி கொடுப்பனவு 250000 ரூபாவாக குறைக்கப்படும். கோவப்பட வேண்டாம் எவருக்கும் வாகன இறக்குமதிக்கான அனுமதிபத்திரம் கிடையாது. நாட்டை கட்டியெழுப்ப அரசியல்வாதிகள் அர்ப்பணிப்பு செய்வார்களாயின், அரச சேவையாளர்களும் ஒத்துழைப்பு வழங்குவார்கள். வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு சிறந்த முறையில் தீர்வு காணப்படும். 35 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும். தகுதிகளின் அடிப்படையில் தான் அனைவருக்கும் நியமனங்கள் வழங்கப்படும். முறையற்ற வகையில் நியமனங்களை வழங்க முடியாது. கடந்த கால அரசாங்கங்கள் முறையற்ற வகையில் அரச சேவைகளுக்கு நியமனங்களை வழங்கியதால் தான் அரச சேவை கட்டமைப்பு இன்று நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. ஆகவே இதனை மாற்றியமைக்க வேண்டும். அரசியலுக்காக இவ்விடயத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். அரச நிறுவனங்கள் மறுசீரமைப்பு தொடர்பில் உபகுழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. குறித்த அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வெகுவிரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிறந்த மாற்றததை எதிர்பார்த்துள்ளோம். அனைவரும் முறையாக வரி செலுத்த வேண்டும். வரி மோசடி செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். செலுத்தப்படும் வரியின் ஒவ்வொரு ரூபாவும் சிறந்தமுறையில் பயன்படுத்தப்படும் என்று வரிச் செலுத்துவோருக்கு உறுதியளிக்கிறேன். வரி செலுத்துங்கள். நாங்கள் அதனை பாதுகாக்கிறோம். வரி செலுத்துவோருக்கு விசேட சலுகை பொதிகள் வழங்கப்படும். வரி செலுத்தும் வர்த்தகர் வீதியில் வாகனத்தை நிறுத்தி வைத்து காத்துக் கொண்டிருக்கிறார். வரியை செலவிடுபவர்கள் சுகபோகமாக செல்கிறார்கள். இவ்வாறான நிலையில் எவ்வாறு வர்த்தகர்கள் வரி செலுத்துவார்கள். இந்த நிலையை மாற்றியமைப்போம். மக்களின் வரி சிறந்த முறையில் பயன்படுத்தப்படுமாயின் வரி செலுத்துவோர் முறையாக வரி செலுத்துவார்கள். இதற்கான சூழலை உறுதிப்படுத்துவோம். சுங்கம் மற்றும் இறைவரித் திணைக்களத்தில் இருந்து இதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே அனைவரும் சிறந்த முறையில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். ஊழல் முழுமையாக இல்லாதொழிக்கப்படும். ஊழல் என்பது பொருளாதார குற்றம். ஆகவே ஊழல் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுப்போம். ஆகவே அரச ஊழியர்கள் அனைவரும் தயவு செய்து பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஊழல் இருந்தால் வேலையில்லை, வீடு செல்ல வேண்டும். மன்னார் காற்றாலை மின்திட்ட உற்பத்திக்கு குறைவான விலையில் ஒப்புதலளிக்கப்பட்டுள்ளது. மக்களின் சுமைகளை தோளில் சுமந்துக் கொண்டு தொங்கு பாலத்தில் செல்கிறோம். ஒரு ரூபா கூட மோசடி செய்வதற்கு எவருக்கும் இடமளிக்க போவதில்லை. இதனை எவ்வாறு ஒன்றும் செய்யவில்லை என்று குறிப்பிடுவீர்கள். இது குடும்ப அரசாங்கமோ அல்லது நண்பர்களின் அரசாங்கமோ இல்லை. மக்களின் அரசாங்கம். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி எதிர்கால இலக்கு நோக்கி பயணிக்கிறோம்.இதில் என்ன தவறுள்ளது. ஏன் இதனை மாற்றியமைக்க வேண்டும். தற்போதைய முன்னேற்றத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடியும். எம்மை ஆசிர்வதிப்பதும், ஏற்றுக்கொள்வதும் தவிர வேறொன்றும் எதிர்க்கட்சிகளுக்கு கிடையாது. ஊடகங்கள் அரசியல் செய்த காலம் முடிவடைந்துள்ளது. அதனால் தான் நான் ஜனாதிபதிபதியாகியுள்ளேன். ஊடக அரசியல் தோல்வியடைந்துள்ளது. மக்களுடனான எமது அரசியல் தான் வெற்றிப்பெற்றுள்ளது. எவருடனும் எனக்கு தனிப்பட்ட பகைமை கிடையாது. ஆகவே தயவு செய்து மாற்றமடையுங்கள். நாட்டை கட்டியெழுப்பும் அரிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வோம். சுதந்திரத்துக்கு பின்னர் கிடைத்த அனைத்து வாய்ப்புக்களையும் தவறவிட்டோம். பெருந்தோட்ட மக்கள் மற்றும் வடக்கு மக்களை இணைத்துக் கொண்டு பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 1948 ஆம் ஆண்டு கிடைத்த சிறந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொண்டிருந்தால் முன்னேற்றமடைந்திருக்கலாம். ஆகவே தற்போதைய அரிய வாய்ப்பை ஒருபோதும் பலவீனமடைய போவதில்லை. நாட்டை முன்னேற்றும் இலக்கினை வெற்றிக்கொள்வோம். இந்த சிறந்த வாய்ப்பில் எதிர்க்கட்சிகளும் பங்குதாரர்களாக வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். https://www.virakesari.lk/article/209876
3 months 2 weeks ago
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம் Published By: VISHNU 21 MAR, 2025 | 08:05 PM 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு திருத்தங்களுடன் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டன. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 114 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. https://www.virakesari.lk/article/209875
3 months 2 weeks ago
வருவேன், சந்திப்பம்.
3 months 2 weeks ago
இவர் ஒருபக்கம், சுமந்திரன் மறுபக்கம் வெல்வோமென சொல்லிக்கொள்கின்றனர். நிராகரிக்கப்பட்ட கட்சிகள் நீதிமன்றம் போய் நிஞாயம் கேட்ப்போம் என்கின்றனர். யாரென்றாலும் மக்களின் நிலையறிந்து அவர்களின் தேவைகளுக்காய், விடுதலைக்காய் உழைக்கின்ற உண்மையானவர்கள் வென்றால் மக்களுக்கு நலம்.
3 months 2 weeks ago
பட்டலந்த விசாரணையை கேட்டால், தமிழர் பிரச்சனையை தூக்கி தப்புவது, தமிழர் இனப்படுகொலை விசாரணை கேட்டால், பட்டலந்த விசாரணையால் மறைப்பது இனிமேல் எடுபடுமா என்பது தெரியவில்லை? எல்லாமே மனிதப்படுகொலை, அவர்கள் வாழ்வதற்கான உரிமையை பலாத்காரமாக பறித்த கொடூரம். காலம் பொறுத்திருந்து சுற்றிவளைக்கும். இன்று ரணில் சொல்லியிருக்கிறார் அதாவது, "தமிழ் மக்களுக்கு நீதி வழங்குங்கள், சம்பந்தப்பட்டவர் யாரென்றாலும் தண்டியுங்கள், சர்வதேச பொறிமுறையை வெறுக்கிறேன், காரணம் அவர்களின் இரட்டைபொறிமுறை பலஸ்தீனத்துக்கு ஒரு முறை, உக்ரேனுக்கு வேறு ஒரு முறை, இதற்குள் நாம் அகப்பட விரும்பவில்லை, உள்நாட்டுக்குள் விசாரணை நடத்தி தமிழ் மக்களுக்கு நீதி வழங்குங்கள்." என்கிறார். யாரை யார் தண்டிப்பது? பலமுறை நாட்டின் தலைவராக, எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் ஏன் அதை செய்யவில்லை? அந்த மக்களை பாதுகாக்க ஏதாவது சட்டங்களை கொண்டு வரவில்லை? இப்போ ஏன் இந்த கரிசனை? யார் செய்ய வேண்டுமென்கிறார்? தன்னை காப்பாற்றவா? இனி நினைத்தாலும் நடந்து முடிந்ததை மறுபடியும் போய் திருத்த முடியாது. எழுதியது எழுதியதுதான் உங்கள் விதியை. இளமை, அதிகாரம் இருக்கும்போது மற்றவர்களின் உரிமையை பறித்து ரசித்தீர்கள். இப்போ, உங்களை காப்பாற்ற நாடகம். அப்போ நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள்? எவற்றை மக்களுக்கு வழிகாட்டினீர்கள்? அதையே அவர்களும் தொடர்வார்கள். நீங்கள் எதுவும் சொல்லத்தேவையில்லை. உங்களுக்கு தரப்பட்ட காலம் முடிந்தாயிற்று.