Aggregator

அர்ச்சுனா பேசிய விடயங்களில் தவறுகள் இருந்தால் மன்னிப்புக்கோருகின்றோம் ; சிறிதரன் எம்.பி

3 months 2 weeks ago
21 Mar, 2025 | 10:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக அர்ச்சுனாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை பாராளுமன்றத்தில் முதன் முதலில் வந்துள்ளமை ஆரோக்கியமான விடயமா? பாராளுமன்ற உறுப்பினர் மீதான குற்றம் இன்னும் எத்தனையோ பேருக்கு பாயலாம். இது தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பாகலாம். அர்ச்சுனா பேசிய சில விடயங்களில் தவறுகள் இருந்தால் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாக அதற்கு மன்னிப்பு கேட்கின்றோம். முஸ்லிம் மக்கள் அதனை பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது எமது வினயமான வேண்டுகோளாகும். வரலாறு எம்மை தவறாக குறிப்பிட கூடாது என்பதற்காகவே இதனை சுட்டிக்காட்டுகிறேன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்றத்தில் சபாநாயகரால் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மீதான தடைகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக 8 நாட்களுக்கு அவருடைய பேச்சுகளை ஒளிபரப்பு செய்யப்படாமலும், ஹன்சாட்டில் பதியப்படாமல் இருப்பதற்கான செய்திகளை சபாநாயகர் அறிவித்திருந்தார். அவர் பாராளுமன்றத்திற்கு பொருத்தமில்லாத சொற்களை பயன்படுத்தியிருந்தார் என்று கூறப்பட்டது. இந்த சீருயர் சபையின் பொறுப்பாளர் என்ற வகையில் அவர் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நாங்கள் நடக்கின்றோம். பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக்கொண்டு பெண்கள் மீதான அல்லது பெண்களுக்கு எதிரான வன்மங்களை கொண்டு வருவதையோ அல்லது ஒரு சமயம் சார்ந்து, மார்க்கம் சார்ந்து இருக்கின்ற முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக வன்மங்களை கொட்டுவதையோ நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களுக்கும் முஸ்லிம் சகோததர்களுக்கும் இடையே நீண்ட கால அந்நியோன்ய உறவு உண்டு, கடந்த யுத்த காலத்தில் ஏற்பட்ட மனக் கசப்புகளை மீண்டும் மீண்டும் ஆய்வு செய்வது அல்லது அதை தோண்டிப் பார்ப்பதல்ல இப்போதைய நோக்கம். நாங்கள் தமிழ் பேசும் மக்களாக அவர்களுடைய மார்க்கம், சம்பிரதாயம், கலாச்சாரங்களை மதித்து நடப்பவர்களே. அதற்கு எதிரானவர்களும் அல்ல. பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பேசிய சில விடயங்களில் தவறுகள் இருக்கலாம். அவ்வாறு தவறுகள் இருந்தால் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாக நாங்கள் அதற்காக மன்னிப்பு கேட்கின்றோம். முஸ்லிம் மக்கள் அதனை பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது எமது வினயமான வேண்டுகோளாகும். தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக அர்ச்சுனாவுக்கான தடை இந்த பாராளுமன்றத்தில் முதன் முதலில் வந்துள்ளமை ஆரோக்கியமான விடயமா என்று யோசிக்கின்றேன். நான் நீண்ட நேர ஆய்வுகளின் பின்னர் இந்த பதிவை நான் செய்கின்றேன். பாராளுமன்ற உறுப்பினர் மீதான குற்றம் இன்னும் எத்தனையோ பேருக்கு பாயலாம், இது தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பாகலாம் என்ற வார்த்தைகள் சில தேடல்களை நோக்கி நகர்த்தியது. தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கு தடைகள் விதிக்கப்படும் போது அது தொடர்பில் சக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கவில்லை என்று வரலாறு எம்மை பழிக்க கூடாது என்பதற்காகவே இந்த விடயங்களை குறிப்பிடுகிறேன் என்றார். அர்ச்சுனா பேசிய விடயங்களில் தவறுகள் இருந்தால் மன்னிப்புக்கோருகின்றோம் ; சிறிதரன் எம்.பி | Virakesari.lk

அர்ச்சுனா பேசிய விடயங்களில் தவறுகள் இருந்தால் மன்னிப்புக்கோருகின்றோம் ; சிறிதரன் எம்.பி

3 months 2 weeks ago

21 Mar, 2025 | 10:01 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக அர்ச்சுனாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை பாராளுமன்றத்தில் முதன் முதலில் வந்துள்ளமை ஆரோக்கியமான விடயமா? பாராளுமன்ற உறுப்பினர் மீதான குற்றம் இன்னும் எத்தனையோ பேருக்கு பாயலாம். இது தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பாகலாம். அர்ச்சுனா பேசிய சில விடயங்களில் தவறுகள் இருந்தால் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாக அதற்கு மன்னிப்பு கேட்கின்றோம். முஸ்லிம் மக்கள் அதனை பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது எமது வினயமான வேண்டுகோளாகும். வரலாறு எம்மை தவறாக குறிப்பிட கூடாது என்பதற்காகவே இதனை சுட்டிக்காட்டுகிறேன் என்று  இலங்கைத்  தமிழரசுக் கட்சியின்  யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்றத்தில் சபாநாயகரால் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மீதான தடைகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக 8 நாட்களுக்கு அவருடைய பேச்சுகளை ஒளிபரப்பு செய்யப்படாமலும், ஹன்சாட்டில் பதியப்படாமல் இருப்பதற்கான செய்திகளை சபாநாயகர் அறிவித்திருந்தார்.

அவர் பாராளுமன்றத்திற்கு பொருத்தமில்லாத சொற்களை பயன்படுத்தியிருந்தார் என்று கூறப்பட்டது. இந்த சீருயர் சபையின் பொறுப்பாளர் என்ற வகையில் அவர் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நாங்கள் நடக்கின்றோம்.

பாராளுமன்ற  சிறப்புரிமையில் இருந்துக்கொண்டு  பெண்கள் மீதான அல்லது பெண்களுக்கு எதிரான வன்மங்களை கொண்டு வருவதையோ அல்லது ஒரு சமயம் சார்ந்து, மார்க்கம் சார்ந்து இருக்கின்ற முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக வன்மங்களை கொட்டுவதையோ நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 

எங்களுக்கும் முஸ்லிம் சகோததர்களுக்கும் இடையே நீண்ட கால அந்நியோன்ய உறவு உண்டு, கடந்த யுத்த காலத்தில் ஏற்பட்ட மனக் கசப்புகளை மீண்டும் மீண்டும் ஆய்வு செய்வது அல்லது அதை தோண்டிப் பார்ப்பதல்ல இப்போதைய நோக்கம்.

நாங்கள் தமிழ் பேசும் மக்களாக அவர்களுடைய மார்க்கம், சம்பிரதாயம்,  கலாச்சாரங்களை மதித்து நடப்பவர்களே. அதற்கு எதிரானவர்களும் அல்ல.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பேசிய சில விடயங்களில் தவறுகள் இருக்கலாம். அவ்வாறு தவறுகள் இருந்தால் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாக நாங்கள் அதற்காக மன்னிப்பு கேட்கின்றோம். 

முஸ்லிம் மக்கள் அதனை பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது எமது வினயமான வேண்டுகோளாகும். தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக அர்ச்சுனாவுக்கான தடை இந்த பாராளுமன்றத்தில் முதன் முதலில் வந்துள்ளமை ஆரோக்கியமான விடயமா என்று யோசிக்கின்றேன். 

நான் நீண்ட நேர ஆய்வுகளின் பின்னர் இந்த பதிவை நான் செய்கின்றேன். பாராளுமன்ற உறுப்பினர் மீதான குற்றம் இன்னும் எத்தனையோ பேருக்கு பாயலாம்,  இது தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பாகலாம் என்ற வார்த்தைகள் சில தேடல்களை நோக்கி நகர்த்தியது.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கு தடைகள் விதிக்கப்படும் போது அது தொடர்பில் சக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கவில்லை என்று வரலாறு எம்மை பழிக்க கூடாது என்பதற்காகவே இந்த விடயங்களை குறிப்பிடுகிறேன் என்றார்.

அர்ச்சுனா பேசிய விடயங்களில் தவறுகள் இருந்தால் மன்னிப்புக்கோருகின்றோம் ; சிறிதரன் எம்.பி | Virakesari.lk

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்

3 months 2 weeks ago
முக்கிய உள்ளூராட்சிமன்றங்களில் பல வேட்புமனுக்கள் நிராகரிப்பு 21 Mar, 2025 | 10:49 AM (எம்.மனோசித்ரா) உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை (20) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. இதன் போது கொழும்பு மாநகரசபை, ஸ்ரீஜயவர்தனபுர கோட்டை, சீதாவாக்கை, தெஹிவளை - கல்கிசை மற்றும் மொரட்டுவை உள்ளிட்ட உள்ளூராட்சிமன்றங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் பல நிராகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய கொழும்பு மாநகரசபைக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களில் 5 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜனநாயக தேசிய கூட்டணியாக இரு அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு மற்றும் 3 சுயாதீன குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும், சீதாவாக்கை பிரதேச சபைக்கான ஐக்கிய தேசிய தேசிய கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஜயவர்தனபுர கோட்டை நகரசபைக்காக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு, ஹோமாகம பிரதேசசபைக்காக சுயாதீன குழு சமர்ப்பித்த வேட்புமனு, தெஹிவளை - கல்கிசை மாநாகரசபைக்காக அகி இலங்கை மக்கள் காங்ரஸ் மற்றும் சுயாதீன குழுவொன்றால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து, மொரட்டுவை மாநாகரசபைக்காக சுயாதீன குழுவொன்றால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு, கடுவலை நகரசபைக்காக சுயாதீன குழு மற்றும் இரண்டாம் பரப்பரை கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள், மஹரகம நகரசபைக்காக பொதுஜன ஐக்கிய முன்னணி சமர்ப்பித்த வேட்புமனு, கெஸ்பேவ நகரசபைக்காக லங்கா மக்கள் கட்சி சமர்ப்பித்த வேட்புமனு, கொட்டிகாவத்த - முல்லேரியா பிரதேசசபைக்காக இரண்டாம் தலைமுறை சமர்ப்பித்த வேட்புமனு என்பன நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முக்கிய உள்ளூராட்சிமன்றங்களில் பல வேட்புமனுக்கள் நிராகரிப்பு | Virakesari.lk

இலங்கை விமானப்படை விமானம் ஒன்று விபத்து.

3 months 2 weeks ago
வாரியப்பொலவில் விமானப்படை விமானம் விபத்து : சிறப்பு விசாரணைக் குழு நியமனம் Published By: Digital Desk 3 21 Mar, 2025 | 11:31 AM விபத்துக்குள்ளான விமானப்படையின் விமானம் குறித்து விசாரிக்க விமானப்படைத் தளபதியினால் சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் உள்ள இலங்கை விமானப்படையின் இல 05 தாக்குதல் படைப்பிரிவிற்கு சொந்தமான பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் K-8 விமானம், இன்று வெள்ளிக்கிழமை (21) குருநாகல் வாரியபொல பகுதியில் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. விமானத்தின் இரண்டு விமானிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறி, குருநாகல் மினுவங்கேட் கல்லூரி வளாகத்தில் பாராசூட்களின் உதவியுடன் தரையிறங்கினர். இந்த விமானத்தில் தலைமை பயிற்சி பயிற்றுவிப்பாளர் விமானியும், பயிற்சி விமானி அதிகாரியும் இருந்தனர், மேலும் இந்த அதிகாரிகள் தற்போது குருநாகல் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விமானம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இருந்து காலை 07.27 மணியளவில் புறப்பட்டு, காலை 07.55 மணியளவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தைத் தொடர்ந்து, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க விபத்து குறித்து விசாரிக்க ஏழு பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தார். வாரியப்பொலவில் விமானப்படை விமானம் விபத்து : சிறப்பு விசாரணைக் குழு நியமனம் | Virakesari.lk

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது முறைகேடு இடம்பெறவில்லை - இராமலிங்கம் சந்திரசேகர்

3 months 2 weeks ago
21 Mar, 2025 | 01:02 PM யாழிலுள்ள வேட்புமனுத் தாக்கலின்போது குழறுபடிகள் அல்லது சதி நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 22 கட்சிகள் மற்றும் 13 சுயேட்சை குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேட்பு மனு நிராகரிப்பில் அரசியல் காரணங்கள் இருப்பதாக சில தரப்பினர் குற்றம் சாட்டியமை தொடர்பில் கேட்டபோதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சிலரது குற்றச்சாட்டை பார்க்கிறபோது அவர்களின் வேட்பு மனு தயாரிப்பில் அவர்களின் அலுவலகங்களிற்கு நாங்கள் சென்று ஏதோ திருகு தாள வேலைகளை செய்ததுபோல அவர்களது குற்றச்சாட்டுக்களில் தெரிகிறது. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் என்பது வெற்றுக் கதைகள் மட்டும் தான். ஆகவே வெறும் கதைகளை யாரும் கதைக்க தேவையில்லை. எங்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம். தாங்கள் தவறுகளை இழைத்துவிட்டு எங்கள் மீது குற்றஞ்சாட்டுகிற இந்த மாதிரியான கூற்றுக்களுக்கு நாங்கள் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. இங்குள்ள ஒரு சபை கூட நிராகரிக்கப்படாமல் 17 சபைகளிலும் சரியாக செய்து தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருப்பதென்பதை இவர்களால் பொறுத்துக் கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ முடியவில்லை. அதனாலேயே தேவையில்லாத விமர்சனங்களை செய்கின்றனர். எது எப்படியாயினும் எங்களுடைய வெற்றி உறுதியானது என தெரிவித்தார். யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது முறைகேடு இடம்பெறவில்லை - இராமலிங்கம் சந்திரசேகர் | Virakesari.lk

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது முறைகேடு இடம்பெறவில்லை - இராமலிங்கம் சந்திரசேகர்

3 months 2 weeks ago

21 Mar, 2025 | 01:02 PM

image

யாழிலுள்ள வேட்புமனுத் தாக்கலின்போது குழறுபடிகள் அல்லது சதி நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 22 கட்சிகள் மற்றும் 13 சுயேட்சை குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேட்பு மனு நிராகரிப்பில் அரசியல் காரணங்கள் இருப்பதாக சில தரப்பினர் குற்றம் சாட்டியமை தொடர்பில் கேட்டபோதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சிலரது குற்றச்சாட்டை பார்க்கிறபோது அவர்களின் வேட்பு மனு தயாரிப்பில் அவர்களின் அலுவலகங்களிற்கு நாங்கள் சென்று ஏதோ திருகு தாள வேலைகளை செய்ததுபோல அவர்களது குற்றச்சாட்டுக்களில் தெரிகிறது.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் என்பது வெற்றுக் கதைகள் மட்டும் தான். ஆகவே வெறும் கதைகளை யாரும் கதைக்க தேவையில்லை. எங்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம்.

தாங்கள் தவறுகளை இழைத்துவிட்டு எங்கள் மீது குற்றஞ்சாட்டுகிற இந்த மாதிரியான கூற்றுக்களுக்கு நாங்கள் அலட்டிக் கொள்ளப் போவதில்லை.

இங்குள்ள ஒரு சபை கூட நிராகரிக்கப்படாமல் 17 சபைகளிலும் சரியாக செய்து தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருப்பதென்பதை இவர்களால் பொறுத்துக் கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ முடியவில்லை.

அதனாலேயே தேவையில்லாத விமர்சனங்களை செய்கின்றனர். எது எப்படியாயினும் எங்களுடைய வெற்றி உறுதியானது என தெரிவித்தார்.

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது முறைகேடு இடம்பெறவில்லை - இராமலிங்கம் சந்திரசேகர் | Virakesari.lk

ஹிம்புல்கொட காணி மோசடியுடன் சிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்பு ; விசாரணைகளுக்கு கோரிக்கை

3 months 2 weeks ago
21 Mar, 2025 | 03:41 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) ஹிம்புல்கொட பகுதியில் இடம்பெறும் காணி அபகரிப்பு மற்றும் காணி மோசடி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்துகிறேன். இந்த காணி கொள்வனவு விவகாரத்தில் தங்காலை கால்டன் ஹவுஸ் முகவரியை வதிவிடமாக கொண்டுள்ள சிரந்தி ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதென தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ஹிம்புல்கொட பகுதியில் உள்ள விகாரைக்குள் பலவந்தமான முறையில் நுழைவதற்கு நான் முயற்சித்ததாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின. இந்த காணிக்கான உறுதிப்பத்திரத்தை முழுமையாக பெற்றுக்கொண்டுள்ளேன். இந்த காணி விகாரைக்கு சொந்தமானது என்று உறுதிப்பத்திரத்தில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஹிம்புல்கொட இஹல்யாகொட கே.டி.பராக்ரம என்பவருக்கு சொந்தமான காணி கைப்பற்றப்பட்டு ஹோமாகம தியகம மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த காணி 10 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 2012.03.02 ஆம் திகதி கே.டி தமித் பிரேமலால், என். கே. சுவர்ணலதா ஆகியோருக்கு சொந்தமான காணிகள் தங்காலை வீதி கால்டன் ஹவுஸ் இல.19 என்ற முகவரியில் வசிக்கும் சிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ என்பவரின் பெயருக்கு எழுதப்பட்டுள்ளது. இந்த பத்திரத்தில் 535253314 வி என்ற தேசிய அடையாள அட்டை இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காணிகள் 5 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இந்த காணிகள் 2023.10.10 ஆம் திகதியன்று அமில கொடிகார என்பவருக்கு 120 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இடம்பெறும் காணி அபகரிப்பு தொடர்பில் இப்பிரதேச மக்கள் முறைப்பாடளித்தார்கள் .அதனால் தான் அங்கு சென்றேன். இந்த காணி உரித்து பத்திரத்தில் இந்த காணிகள் விகாரைக்கோ அல்லது விகாராதிபதிக்கோ சொந்தமானது என்று எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. விகாரைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஆகவே இந்த பகுதியில் இடம்பெறும் காணி அபகரிப்பு மற்றும் காணி மோசடி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்துகிறேன் என்றார். ஹிம்புல்கொட காணி மோசடியுடன் சிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்பு ; விசாரணைகளுக்கு கோரிக்கை | Virakesari.lk

ஹிம்புல்கொட காணி மோசடியுடன் சிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்பு ; விசாரணைகளுக்கு கோரிக்கை

3 months 2 weeks ago

21 Mar, 2025 | 03:41 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

ஹிம்புல்கொட பகுதியில் இடம்பெறும் காணி அபகரிப்பு மற்றும் காணி மோசடி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா  அதிபரிடம் வலியுறுத்துகிறேன். இந்த காணி கொள்வனவு விவகாரத்தில் தங்காலை கால்டன் ஹவுஸ் முகவரியை வதிவிடமாக கொண்டுள்ள  சிரந்தி ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதென தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற அமர்வின் போது  விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

ஹிம்புல்கொட பகுதியில் உள்ள விகாரைக்குள் பலவந்தமான முறையில் நுழைவதற்கு   நான் முயற்சித்ததாக கடந்த மாதம்  செய்திகள் வெளியாகின. இந்த காணிக்கான உறுதிப்பத்திரத்தை முழுமையாக பெற்றுக்கொண்டுள்ளேன். இந்த காணி விகாரைக்கு சொந்தமானது என்று உறுதிப்பத்திரத்தில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

ஹிம்புல்கொட  இஹல்யாகொட கே.டி.பராக்ரம என்பவருக்கு சொந்தமான   காணி கைப்பற்றப்பட்டு  ஹோமாகம  தியகம மஹிந்த  ராஜபக்ஷ மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த காணி 10 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல்  2012.03.02 ஆம் திகதி  கே.டி  தமித் பிரேமலால், என். கே. சுவர்ணலதா ஆகியோருக்கு சொந்தமான காணிகள்  தங்காலை  வீதி கால்டன் ஹவுஸ்   இல.19  என்ற முகவரியில் வசிக்கும் சிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ என்பவரின் பெயருக்கு எழுதப்பட்டுள்ளது.

இந்த பத்திரத்தில்  535253314   வி என்ற  தேசிய அடையாள அட்டை  இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த  காணிகள்  5 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இந்த காணிகள் 2023.10.10 ஆம் திகதியன்று  அமில கொடிகார என்பவருக்கு 120 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இடம்பெறும் காணி அபகரிப்பு  தொடர்பில் இப்பிரதேச மக்கள் முறைப்பாடளித்தார்கள் .அதனால் தான் அங்கு சென்றேன்.

இந்த காணி உரித்து பத்திரத்தில் இந்த காணிகள்  விகாரைக்கோ அல்லது விகாராதிபதிக்கோ சொந்தமானது என்று எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. விகாரைக்குள்   சட்டவிரோதமான முறையில் நுழைய வேண்டிய அவசியம் எனக்கில்லை.

ஆகவே இந்த பகுதியில் இடம்பெறும் காணி அபகரிப்பு மற்றும் காணி   மோசடி தொடர்பில்  முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்துகிறேன் என்றார்.

 ஹிம்புல்கொட காணி மோசடியுடன் சிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்பு ; விசாரணைகளுக்கு கோரிக்கை | Virakesari.lk

நிராகரிக்கப்பட்ட வேட்புமனு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் சர்ச்சை.

3 months 2 weeks ago

வவுனியா மாவட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் (சங்கு) வேட்புமனு முதலில் நிராகரிக்கப்பட்டதாகவும் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்தமையானது குழப்ப நிலையை தோற்றுவித்துள்ளது.

முதலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்புமனு  நிராகரிக்கப்பட்டதாக கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தில் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரால் கூறப்பட்டது. பின்னர் ஊடக சந்திப்பிலும் அது உறுதிப்படுத்தப்பட்டது.

ஊடகசந்திப்பு முடிவடைந்து சில நிமிடங்களில் மீள ஊடக சந்திப்பு நடைபெற்றுள்ளது.

வேட்பு மனுத் தாக்கல்

இதன்போது குறித்த வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் பீ.ஏ.சரத்சந்திரவால் அறவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நிராகரிக்கப்பட்ட வேட்புமனு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் சர்ச்சை | Rejected Nomination Later Accepted

வவுனியா மாவட்டத்தில் நேற்று மதியம் 12 மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவு பெற்ற பின்னர் 1 மணிக்கு கட்சி முகவர்கள், சுயேட்சைகுழு முகவர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பெண் பிரதிதித்துவம் தொடர்பில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமை காரணமாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி வேட்புமனு வவுனியா வடக்கில் நிராகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்போது குறித்த கட்சி பிரதிநிதிகளும் அமைதியாக இருந்துள்ளனர். அதன்பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலும் வவுனியா வடக்கில் 09 கட்சிகளும், 2 சுயேட்சை குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்தாகவும் அதில் ஒரு கட்சி, 2 சுயேட்சை நிராகரிக்கப்பட்டதாகவும் மாலை 4 மணிக்கு கூறப்பட்டது.

ஊடக சந்திப்பு 

இருப்பினும் ஊடக சந்திப்பு நிறைவடைந்து பல ஊடகவியலாளர்கள் வெளியேறிய பின் மீண்டும் அழைத்து வவுனியா வடக்கில் 9 கட்சிகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், 2 சுயேட்சைக் குழுக்கள் மாத்திரம் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

நிராகரிக்கப்பட்ட வேட்புமனு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் சர்ச்சை | Rejected Nomination Later Accepted

இதற்கு தொழில் நுட்ப கோளாறு காரணம் எனவும் கூறப்பட்டது.

அப்படியெனில் நிராகரிக்கப்பட்ட ஏனைய கட்சிகளுக்கும் தொழில் நுட்ப கோளாறு தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நிராகரிக்கபட்ட ஜனநாயக தேசிய கூட்டணி (தபால் பெட்டி) கட்சி வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களம் எடுத்த முடிவு தவறு என உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு தேர்தலில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Tamilwin
No image previewநிராகரிக்கப்பட்ட வேட்புமனு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டதால்...
வவுனியா மாவட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜனநாயக தமிழ் தேச...

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை எதிர்க்கின்றேன் ; தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள் - பேட்டியில் ரணில்

3 months 2 weeks ago

21 Mar, 2025 | 02:03 PM

image

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை  எப்போதும் எதிர்த்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடன்  இணைந்து செயற்படுவது சுலபமானதாக காணப்பட்டது அவர் அனைத்தையும் புரிந்துகொண்டார் என தெரிவித்துள்ளார்

பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கிய நாடுகளிற்கு அளித்த வாக்குறுதியை வழங்குங்கள். தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள். மாகாணசபைகளிற்கு அதிகாரங்களை வழங்குங்கள். யார் குற்றவாளி என்றாலும் தண்டியுங்கள் என தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

 இலங்கையை இந்த விவகாரங்களிற்காக சர்வதேச  நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை நான் எப்போதும் எதிர்த்து வந்துள்ளேன்.

நான் எப்போதும் அதனை எதிர்த்து வந்துள்ளேன்.

நான் என்ன தெரிவித்து வருகின்றேன் என்றால் சொன்னதை செய்யுங்கள். அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள் - இதனை செய்யக்கூடாது. செய்யவேண்டாம் என நான் ஒருபோதும் தெரிவித்ததில்லை.

இதன் காரணமாகவே நான் தேர்தல்களில் தோற்றேன்.

நான் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக குற்றம்சாட்டினார்கள்.அது முடிவடைந்ததும் ராஜபக்சாக்களிற்கு ஆதரவளித்ததாக  குற்றம்சாட்டினார்கள்.

அதனை விடுவோம்

ஆனால் நான் மேற்குலகில் நான் சமீபத்தில் பார்த்தது என்னவென்றால் இரண்டு விதமான நிலைப்பாடுகள்.

உக்ரைன்தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுகின்றனர்.

 எனது தலைவர்கள் நண்பர்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது சுதந்திரமான நீதியான தேர்தல்களை நடத்துவதற்கான முயற்சியின் போது அவர்கள் கொல்லப்பட்டனர்.

ஆனால் உக்ரைனிற்கு வழங்குகின்ற  சாதக தன்மையை மேற்குலகம் எங்களிற்கு வழங்காது.

ஆனால் உக்ரைன் ஜனாதிபதிக்கு அனைத்தையும் மாற்றுவதற்கான அனுமதியை அவர்கள் வழங்குகின்றார்கள்.

இதன் காரணமாகவே ஜனாதிபதி டிரம்ப் ஜெலென்ஸ்கியை பார்த்து நீங்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவில்லை என்றார்.

அவர்களால் ஜனாதிபதி டிரம்பின் மீது பாயமுடியுமென்றால்  எங்களின்நிலைமை  என்ன?

ஆகவே எங்களால் என்ன செய்ய முடியுமென்றால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே.

அவர்களுடன் பேசுங்கள்  மாகாணசபைகளிற்கு மேலதிக பொறுப்புளை வழங்குங்கள்.

குற்றவாளிகள் யார் என்றாலும் தண்டியுங்கள்நான் பல நடவடிக்கைகளை ஆரம்பித்தேன்.

ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இரட்டை நிலைப்பாட்டை பின்பற்ற விரும்பினால் .இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அது அமைந்திருக்க கூடாது.

நான் எவருக்கும்  எதிரானவன் அல்லமனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின்  ஆசிய கிளையின் செயற்பாடுகள் குறித்து விசாரணை  இடம்பெற்றால்  நாங்கள் தொடர்ந்தும் நீடிக்கலாம்.

நவிபிள்ளையுடன் செயற்படுவது சுலபமாகயிருந்தது  அவர் அனைத்தையும் புரிந்துகொண்டார். அவர்  எங்களது நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால்  அவர் அனைத்தையும் புரிந்துகொண்டார்.அவருடன் பேசமுடியும்.

ஆனால் தற்போதுள்ளவர்கள் எங்களை நோக்கி சத்தமிடுகின்றனர்.எங்களால் தான் அவர்கள் அங்கிருக்கின்றார்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும்.

நாங்களே இரண்டாம் உலக யுத்தத்தில் போரிட்டோம் நாங்களே ஐரோப்பாவை விடுதலை செய்தோம்.

எத்தனை ஐரோப்பியர்கள் ஹிட்லருக்கு எதிராக போரிட்டார்கள். இரண்டரை மில்லியன் இந்தியர்கள் போரிட்டார்கள்.இலங்கையர்கள் போரிட்டார்கள்ஆபிரிக்கர்கள் போரிட்டனர்.

நாங்கள் போரிட்டு ஹிட்லரை தோற்கடித்திருக்காவிட்டால் உங்களால் மனித உரிமை சாசனம் ஒன்றை உருவாக்க முடியாமல் போயிருக்கும்.

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை எதிர்க்கின்றேன் ; தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள் ; யார் குற்றவாளி என்றாலும் தண்டியுங்கள் ; பேட்டியில் ரணில் தெரிவிப்பு ; நவநீதம் பிள்ளைக்கு பாராட்டு | Virakesari.lk

சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?

3 months 2 weeks ago
காலமை மனிசி எனக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தது , (வெள்ளிக்கிழமையில் அவவுக்கு வேலை கூட ) அந்நேரத்தில் இதுவேற கண்ணில் பட்டுது ......... வேறமாதிரி எழுதத் தோணவில்லை கந்தையா ............! 😁

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

3 months 2 weeks ago
21 Mar, 2025 | 04:45 PM 161ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல் தின நிகழ்வு பம்பலப்பிட்டி பொலிஸ் சிரேஷ்ட படையணி தலைமையகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுச் சின்னத்திற்கு முன்பாக, பதில் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் நடைபெற்றது. நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி, இரத்தம் சிந்தி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் உச்சபட்ச தியாகத்தை நினைவு கூரும் வகையில் பொலிஸ் மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் வெள்ளிக்கிழமை (21) பொலிஸ் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. பொலிஸ் மாவீரர் நினைவுச்சின்னத்திற்கு மரியாதை செலுத்தும் அணிவகுப்பைத் தொடர்ந்து, பதில் பொலிஸ்மா அதிபர் மாவீரர் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். போர் மற்றும் சட்டம் ஒழுங்கு கடமைகளில் ஈடுபட்டிருந்த போது நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த 30 பொலிஸ் அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் அங்கவீனமுற்ற 20 பொலிஸ் அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும், பதில் பொலிஸ்மா அதிபர் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். மேலும் இந்நிகழ்வின்போது ஓய்வு பெற்ற பொலிஸ் மா அதிபர்கள், அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தனர். 161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல் | Virakesari.lk

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

3 months 2 weeks ago

21 Mar, 2025 | 04:45 PM

image

161ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல் தின நிகழ்வு பம்பலப்பிட்டி பொலிஸ் சிரேஷ்ட படையணி தலைமையகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுச் சின்னத்திற்கு முன்பாக, பதில் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் நடைபெற்றது.

நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி, இரத்தம் சிந்தி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் உச்சபட்ச தியாகத்தை நினைவு கூரும் வகையில் பொலிஸ் மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இதையொட்டி நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் வெள்ளிக்கிழமை (21) பொலிஸ் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. பொலிஸ் மாவீரர் நினைவுச்சின்னத்திற்கு மரியாதை செலுத்தும் அணிவகுப்பைத் தொடர்ந்து, பதில் பொலிஸ்மா அதிபர் மாவீரர் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

போர் மற்றும் சட்டம் ஒழுங்கு கடமைகளில் ஈடுபட்டிருந்த போது நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த 30 பொலிஸ் அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் அங்கவீனமுற்ற 20 பொலிஸ் அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும், பதில் பொலிஸ்மா அதிபர் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

மேலும் இந்நிகழ்வின்போது ஓய்வு பெற்ற பொலிஸ் மா அதிபர்கள், அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

WhatsApp_Image_2025-03-21_at_11.48.50_AM

WhatsApp_Image_2025-03-21_at_11.48.53_AM


161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல் | Virakesari.lk

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது - அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ

3 months 2 weeks ago
21 Mar, 2025 | 05:05 PM சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். இது உடனடி கவனத்தைக் கோரும் மூலோபாய சவால்களை உருவாக்குகிறது. அதனால் தான் ஜனநாயக கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது அவசியமாகும் என அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி (INDOPACOM) அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ தெரிவித்தார். அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி (INDOPACOM) அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ வியாழக்கிழமை (20) தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு விஜயம் செய்தார். அட்மிரல் பபாரோ தனது விஜயத்தின் போது, இலங்கையின் மூத்த அரச அதிகாரிகள் மற்றும் இராணுவத் தளபதிகளுடன் இணைந்து, நீடித்த அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும் இந்தோ-பசிபிக் பகுதியில் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் தொலைநோக்குப் பார்வை குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இந்தோ-பசிபிக் பகுதியில் பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்கும் அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை, தளபதி பபாரோவின் வருகை அடிக்கோட்டிட்டு காட்டியது. இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ, “நமது சவால்களைப் பற்றி நேரடியாகப் பேசுவோம். நாடுகளின் உறுதியான நடத்தை பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச விதிமுறைகளை அச்சுறுத்துகிறது, வர்த்தகத்திற்கு அவசியமான வழிசெலுத்தல் சுதந்திரத்தை நேரடியாகப் பாதிக்கிறது. சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். இது உடனடி கவனத்தை கோரும் மூலோபாய சவால்களை உருவாக்குகிறது. அதனால் தான் ஜனநாயக கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது அவசியமாகும். பயங்கரவாதம், ஆயுதப் பெருக்கம், கடத்தல், கடற்கொள்ளை போன்ற நாடுகடந்த அச்சுறுத்தல்கள் தினமும் பாதுகாப்பையும் செழிப்பையும் பாதிக்கின்றன. இவை பெரும்பாலும் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவதில்லை. இன்னும், தொழில்நுட்ப புரட்சி கடல்சார் பாதுகாப்பை மாற்றியமைத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு, விரைவில் குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் ஹைப்பர்சோனிக் ஆகியவை கடலில் செயல்பாடுகளை அடிப்படையில் மாற்றியமைக்கின்றதாக அமையும். இந்த தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்காலத்தை வடிவமைப்பார்கள்” என தெரிவித்தார். “உண்மையில், இந்தியப் பெருங்கடலின் குருக்கே இலங்கையானது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. இந்த கடற்கரைகள் பசுபிக் பெருங்கடலை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் முக்கிய கடல் பாதைகளை எல்லையாகக் கொண்டுள்ளன. மேலும் இலங்கை முழு பசுபிக் பெருங்கடலுக்கும் முக்கியமான கடல்சார் நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்த அனுமதிக்கிறது. மேலும், சர்வதேச பாதுகாப்புக்கு இலங்கை அளித்த சிறந்த பங்களிப்புகளை நான் அங்கீகரிக்கிறேன். அமைதி காக்கும் பணிகள், தொழில்முறையை வெளிப்படுத்துதல், ஒருங்கிணைந்த பணிக்குழு, தலைமைத்துவம், இது எனக்கு மிகவும் பெருமைக்குரிய விடயமாகும். இந்தத் தலைமைத்துவம் இலங்கையை ஒரு அத்தியாவசிய பங்காளியாக மாற்றும் மதிப்புகள் மற்றும் திறன்களைக் காட்டுகிறது. உங்கள் தலைமைத்துவம் முக்கியமானது, உங்கள் குரல் முக்கியமானது, உங்கள் தொழில்முறைத் திறனும் முக்கியமானது, மேலும் எங்கள் கூட்டாண்மை முழு பிராந்தியத்தின் எதிர்காலத்திற்கும் முக்கியமானதாகும்” என்றார். சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது - அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ | Virakesari.lk

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது - அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ

3 months 2 weeks ago

21 Mar, 2025 | 05:05 PM

image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். இது உடனடி கவனத்தைக் கோரும் மூலோபாய சவால்களை உருவாக்குகிறது. அதனால் தான் ஜனநாயக கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது அவசியமாகும் என அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி (INDOPACOM) அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ தெரிவித்தார்.

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி (INDOPACOM) அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ வியாழக்கிழமை (20) தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு விஜயம் செய்தார்.

அட்மிரல் பபாரோ தனது விஜயத்தின் போது, இலங்கையின் மூத்த அரச அதிகாரிகள் மற்றும் இராணுவத் தளபதிகளுடன் இணைந்து, நீடித்த அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மேலும் இந்தோ-பசிபிக் பகுதியில் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் தொலைநோக்குப் பார்வை குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இந்தோ-பசிபிக் பகுதியில் பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்கும் அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை, தளபதி பபாரோவின் வருகை அடிக்கோட்டிட்டு காட்டியது.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ, 

“நமது சவால்களைப் பற்றி நேரடியாகப் பேசுவோம். நாடுகளின் உறுதியான நடத்தை பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச விதிமுறைகளை அச்சுறுத்துகிறது, வர்த்தகத்திற்கு அவசியமான வழிசெலுத்தல் சுதந்திரத்தை நேரடியாகப் பாதிக்கிறது. சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். இது உடனடி கவனத்தை கோரும் மூலோபாய சவால்களை உருவாக்குகிறது. அதனால் தான் ஜனநாயக கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது அவசியமாகும்.

பயங்கரவாதம், ஆயுதப் பெருக்கம், கடத்தல், கடற்கொள்ளை போன்ற நாடுகடந்த அச்சுறுத்தல்கள் தினமும் பாதுகாப்பையும் செழிப்பையும் பாதிக்கின்றன. இவை பெரும்பாலும் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவதில்லை. இன்னும், தொழில்நுட்ப புரட்சி கடல்சார் பாதுகாப்பை மாற்றியமைத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு, விரைவில் குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் ஹைப்பர்சோனிக் ஆகியவை கடலில் செயல்பாடுகளை அடிப்படையில் மாற்றியமைக்கின்றதாக அமையும். இந்த தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்காலத்தை வடிவமைப்பார்கள்” என தெரிவித்தார்.

“உண்மையில், இந்தியப் பெருங்கடலின் குருக்கே இலங்கையானது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. இந்த கடற்கரைகள் பசுபிக் பெருங்கடலை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் முக்கிய கடல் பாதைகளை எல்லையாகக் கொண்டுள்ளன. மேலும் இலங்கை முழு பசுபிக் பெருங்கடலுக்கும் முக்கியமான கடல்சார் நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்த அனுமதிக்கிறது.

மேலும், சர்வதேச பாதுகாப்புக்கு இலங்கை அளித்த சிறந்த பங்களிப்புகளை நான் அங்கீகரிக்கிறேன். அமைதி காக்கும் பணிகள், தொழில்முறையை வெளிப்படுத்துதல், ஒருங்கிணைந்த பணிக்குழு, தலைமைத்துவம், இது எனக்கு மிகவும் பெருமைக்குரிய விடயமாகும். இந்தத் தலைமைத்துவம் இலங்கையை ஒரு அத்தியாவசிய பங்காளியாக மாற்றும் மதிப்புகள் மற்றும் திறன்களைக் காட்டுகிறது.

உங்கள் தலைமைத்துவம் முக்கியமானது, உங்கள் குரல் முக்கியமானது, உங்கள் தொழில்முறைத் திறனும் முக்கியமானது, மேலும் எங்கள் கூட்டாண்மை முழு பிராந்தியத்தின் எதிர்காலத்திற்கும் முக்கியமானதாகும்” என்றார்.

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது - அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ | Virakesari.lk

இரசித்த.... புகைப்படங்கள்.

3 months 2 weeks ago
"போட்டோ சொப்" செய்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? 🤣 பிள்ளையை இடிக்கப் போகுது. அந்த ரயிலை பிடித்து... தண்டவாளத்தில் விடுங்கப்பா. 😂 அப்பாடா.... ரயிலை, வேறை பக்கத்தாலை அனுப்பியாச்சு. 😂 🤣

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

3 months 2 weeks ago
21 Mar, 2025 | 04:42 PM சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்ட சீன சொக்லேட் வகைகளை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு 64 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட, மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் கி.அஜந்தன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, அனுமதியற்ற வகையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டு, உரிய ஆவணங்கள் இன்றி சீன சொக்லேட் வகைகளை விற்பனைக்கு வைத்திருந்தமையை கண்டறிந்தனர். அவற்றினை சான்று பொருட்களாக கைப்பற்றிய சுகாதார பரிசோதகர் , கடை உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். குறித்த வழக்கு வியாழக்கிழமை (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை , கடை உரிமையாளர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம் 64 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம் | Virakesari.lk

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

3 months 2 weeks ago

21 Mar, 2025 | 04:42 PM

image

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்ட சீன சொக்லேட் வகைகளை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு 64 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட, மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் கி.அஜந்தன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, அனுமதியற்ற வகையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டு, உரிய ஆவணங்கள் இன்றி சீன சொக்லேட் வகைகளை விற்பனைக்கு வைத்திருந்தமையை கண்டறிந்தனர்.

அவற்றினை சான்று பொருட்களாக கைப்பற்றிய சுகாதார பரிசோதகர் , கடை உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். 

குறித்த வழக்கு  வியாழக்கிழமை (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை , கடை உரிமையாளர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம் 64 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.

blur_1.jpg


யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம் | Virakesari.lk