Aggregator

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா

3 months 2 weeks ago
எல்லாரும் வக்கீல் தொழில் செய்யாமல் விட்டு.... சட்ட திட்டங்களை மறந்து போனார்கள் போலுள்ளது. ஜனாதிபதி வக்கீல் என்ற பட்டம் எடுத்த, சுமந்திரனின் தமிழரசு கட்சியும் கிளிநொச்சியில், "புட்டுக் கொண்டு" போட்டுது. 😂

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா

3 months 2 weeks ago
உண்மையை சொல்லுறன் கோவிக்காதேங்கோ கந்தையா அண்ணை. தங்கத்துக்கு... மேயருக்கு உரிய முகவெட்டு, அறவே இல்லை. ஏணி வைத்தாலும் எட்டாது.

தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு

3 months 2 weeks ago
பாதாள உலக கோஷ்டிகள்... தாம் செய்யும் செயலை கண்டு கொள்ளாமல் இருக்க, 200,300 போத்தல் என்று ரொக்கமாக கொடுத்திருப்பார்கள். இவ்வளவு வீட்டில் இருப்பில் இருந்தது என்றால், குடித்து முடித்தது.... இன்னும் எத்தனை ஆயிரம் போத்தல்களோ. வெட்கக்கேடு. எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய பொலிஸ் மாஅதிபர் செய்யும் வேலையா இது.

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா

3 months 2 weeks ago
சிங்களவரை மோடயா என்று பெருமை கொள்பவர்கள் நாம்.

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா

3 months 2 weeks ago
மணிவண்ணன் கட்சியும் நிராகரிப்பு என்றால் எவ்வளவு அனுபவம் உள்ளவர் சட்டத்தரணி கட்சித் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி. இப்போதும் நம்ப முடியாமல் இருக்கிறது. இவர்களை எல்லாம் நம்பி பணத்தைக் கொட்டி தமது தரப்பு சட்டத்தரணியாக மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களே?

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

3 months 2 weeks ago
மன்னிக்கவும். தவறுதலாக பதியப்பட்ட செய்தி ஒன்றை நீக்கியுள்ளேன்.

இலங்கை விமானப்படை விமானம் ஒன்று விபத்து.

3 months 2 weeks ago
விபத்துக்குள்ளான விமானப்படை விமானம் குறித்து சிறப்பு விசாரணை! இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடத்த விமானப்படை தளபதியினால் விசேட விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்காக 7 பேர் கொண்ட விசேட விசாரணைக் குழுவொன்றை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க நியமித்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. இலங்கை விமானப்படையின் கட்டுநாயக்க தளத்தளத்தில் அமைந்துள்ள விமானப்படை இலக்கம் 05 போர் படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள விமானிகளின் மேம்பட்ட பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் K-8 ரக விமானம் இன்று (21) வாரியபொல பதெனிய பிரதேசத்தில் பயிற்சி அமர்வின் போது விபத்துக்குள்ளானது. எனினும், அந்த விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் விமானத்தை விட்டுவிட்டு பாராசூட் உதவியுடன் பாதுகாப்பாக குருநாகல் பாதெனிய மினுவாங்கேட் வித்தியாலய வளாகத்தில் தரையிறக்கினர். இந்த விமானத்தில் பிரதம பயிற்சி பயிற்றுவிப்பாளர் விமானி மற்றும் பயிற்சி பைலட் அதிகாரி ஆகியோர் பயணித்துள்ளதுடன், அந்த அதிகாரிகள் குருநாகல் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 07.27 மணியளவில் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட குறித்த விமானம் சரியாக 7.55 மணியளவில் விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2025/1426068

குரங்குகள் வராமல் தடுக்க விவசாய நிலங்களுக்கு சிறுத்தை சிறுநீர் தெளிப்பது தொடர்பில் கவனம்..

3 months 2 weeks ago
குரங்குகளை தென்னையில் ஏறாமல் இருக்க தென்னையில் பாம்பு படம் வரைந்து விடுவார்கள் அதுகள் புத்தி சாலிகள் அசைவில்லாமல் படம் மட்டும் இருப்பதை புரிந்து கொண்டு விடும்கள் .

தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு

3 months 2 weeks ago
லஞ்சமாக மதுப்போத்தல்களை கேட்டிருப்பாரோ பதவியில் இருந்தபோது. இவர் பதவியில் இருந்தபோது, பல சமூக விரோதிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளாராம், அதனால்சிறையில், சிறைக்கைதிகளால் அவருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாம் என இவரது சட்டத்தரணி வாதாடியுள்ளார். இவரே ஒரு சமூக விரோதி, சட்டத்தை மதித்து காப்பாற்ற வேண்டியவர் சட்டத்திற்கு தண்ணி காட்டியவர், சட்டத்தை மதிக்கத்தெரியாதவர், இவர் யாருக்கு தண்டனை பெற்றுக்கொடுத்திருப்பார்? மதுப்போத்தல் கொடுக்க மறுத்தவர்களுக்கு? சட்டமா அதிபரின் சொலிசிற்றார் திலீப் சொல்கிறார், இவர் செய்த கர்மா வினைதான் இவரை பிடித்திருக்குதாம். அப்போ நாடுமுழுவதும் கர்மவினை நிறைந்திருக்கு, அவர்களை எப்போ அது பிடிக்கும்?

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி ஒதுக்கீடு எந்த வகையில் நியாயம் - ஞானமுத்து சிறிநேசன்

3 months 2 weeks ago
சிங்களா அரசு ( மக்களும் கூட) சாப்பாடு இல்லா விட்டாலும் . பறவாயில்லை வி. புலிகள் மீண்டும் உருவாக கூடாது என்ற மனோநிலையில் இருந்து செயற்படுகிறார்கள்.

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா

3 months 2 weeks ago
தங்கம் சின்ன பிள்ளை. காலம் இருக்கிறது கவலைப்பட வேண்டாம் எப்படி தங்கம் நல்ல மேயரா??

அவளைத்தொடுவானேன்....???

3 months 2 weeks ago
குப்பையிலே போட்டாலும் குண்டுமணி மங்காதாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் சொன்ன வாழ்க்கைத் தத்துவமும் அதோடு ஒத்துப்போகிறது.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
எனக்கும் ஐ பி எல் தூரம்தான், ஆனால் சும்மா எதனையாவது கிறுக்கி விட்டு பொழுதை போக்கலாம் என இறங்கியுள்ளேன் (அனைத்து போட்டியிலும் அதே நிலைதான்). நான் வெளிநாடு வந்த ஆரம்பத்தில் எனது ஆங்கிலம் மிக மோசம், நான் தங்கியிருந்த வீட்டில் என்னுடன் மற்றும் இருவர் இருந்தார்கள் அவர்கள் நான் வருவதற்கு முன்னரே வந்திருந்தார்கள். அதில் ஒருவருக்கு என்னைப்போலவே ஆங்கிலம் மோசம், மற்றவர்தான் எனக்கு ஆரம்பத்தில் மொழி பெயர்பாளர், ஆனால் ஆங்கிலத்தினை எழுத்துக்கூட்டி வாசித்து அறியும் அளவு சிறிதளவு இருந்தது. அதனால் எனது குடியேற்ற விண்ணப்பங்களை நானே நிரப்புவதுண்டு, அதில் என்னை பற்றிய கேள்விக்கு பதில் அழிப்பதில் சிரமம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை, ஆனால் எனது மொழி பெயர்ப்பாளர் நண்பர் தனது விண்ணப்பங்களை வேறு ஒருவரிடம் கொண்டு சென்று நிரப்புவார். அவரை அனைவரும் மதிக்கும் நிலையில் இருப்பார், அவரது குடும்பமும் அப்போது வந்திருக்கவில்லை அதனால் மற்ற இளைய எனது நண்பர்களுடன் இருந்தார். எனது மொழி பெயர்ப்பாளர் நண்பர் தன்னுடன் என்னையும் கூட்டி போவார் (என்னிடம் கார் இல்லை), அவர் தனது விண்ணப்பத்தினை நிரப்ப போய்விடுவார் நான் அந்த வீட்டில் இருக்கும் மற்ற நணப்ர்களுடன் அரட்டை அடிக்க போய்விடுவேன் (தப்பி தவறி கூட அங்கிளை பார்ப்பதில்லை) , எனது நண்பர் ஒரு நாள் கூறினார் அங்கிள் (அவரை அப்படித்தான் அழைப்பது) உன்னை ஒரு மாதிரியோ என தன்னிடம் கேட்டதாக கூறினார். என்னைப்பற்றிய கேள்விக்கு எனக்கு தெரிந்த பதிலை எந்த கூறுவதற்கு எனக்கு சிரமமாக இருக்கவில்லை என நினைத்து அங்கிளிடம் உதவி கேளாதது பிரச்சினையாகிவிட்டது, இந்த போட்டிகளில் கூட எனக்கு தெரிந்ததை கிறுக்குவதற்கு எனக்கு சிரமமாக இருக்கவில்லை ஆனால் இது ஒரு கலகலப்பான திரி என்பதால் தொடர்ந்திருப்பேன்.