யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சுனில் நாராயன் இன்னும் மெதுவாக வீசுபவர். அவர் 27 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும் வருண் 43 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும் பெற்றனர். இங்கு மிதமான வேகம்தான் வேலை செய்திருக்கிறது. இப்படியான நேரங்களில் வருண் தனது வேகத்தை மட்டுப்படுத்தி இருக்கலாம். ஆனாலும் கோலி ஆடின ஆட்டத்தினால் RCB எப்பிடியும் வெற்றி பெற்றிருக்கும். அவர்களின் நேரம் அது. அனில் கும்ளேவும் முரளி வார்ன் போன்றோரை விட வேகமாக வீசுபவர். மூவரும் எவ்வாறு ஆட்சி செய்தார்கள் என்று தெரியும். இவர்களைப் போல் வருணும் வருவாரா.