Aggregator

30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை!

3 months 2 weeks ago
யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்! கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிவேகமாக பனிப்பாறைகள் உருகிவருவதாக யுனெஸ்கோ அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பனிப்பாறைகள் உருகுவதன் காரணமாக கடல் மட்டம் அதிவேகமாக உயரும் என்றும் இதன் விளைவாக பலகோடி பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட நேரிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை உலக வானிலை ஆய்வியல் அமைப்பின் இயக்குநர் Stefan Uhlenbrook இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்” ”அன்டார்ட்டிக் மற்றும் கிரீன்லாந்து உட்பட உலகம் முழுவதும் தற்போது 2 லட்சத்து 75 ஆயிரம் பனிப்பரப்புகள் மட்டுமே இருப்பதாகவும், பனிப்பாறைகளை பாதுகாப்பதன் மூலம் உலக சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1426156

"எங்கே எனது ஒளி" & "காளையை அடக்கு கன்னியை மடக்கு "

3 months 2 weeks ago
"எங்கே எனது ஒளி" & "காளையை அடக்கு கன்னியை மடக்கு " "எங்கே எனது ஒளி" எங்கே எனது ஒளி சொல்வாயோ அங்கே எனக்கு இடம் வேண்டும் மங்காத ஒளியாய் வெண் பிரம்பு ஏங்கும் இதயத்துக்கு ஒரு வழிகாட்டி சங்கு ஊதி வழிகாட்டுவது போல தங்கக் கோல் குருடனின் வெளிச்சம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................................. "காளையை அடக்கு கன்னியை மடக்கு " காளையை அடக்கு கன்னியை மடக்கு மாலையை அணிந்து தாலியைக் கட்டு மேளத்தைத் தட்டி ஊர்வலம் செல்லு கோலத்தைப் போட்டு பொங்கலைப் பொங்கு! சிவப்புத் துணியை கையில் ஏந்து மஞ்சள் நிலாவில் மார்பில் சாய கருத்த எருதின் திமிலைப் பிடி வெள்ளை நெற்றியில் திலகம் இட! இடுப்புச் சிறுத்தவளை பரிகாசம் செய்தவளை இறுமாப்பு கொண்ட மண்டை பெருத்தவளை ஏறுதழுவி வெற்றி கண்டு மடக்கு வீறாப்பு விட்டு வந்திடுவாள் உன்னுடன்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

கதாநாயகர்கள், கதாநாயகிகள் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல்? - நிலாந்தன்

3 months 2 weeks ago
கதாநாயகர்கள், கதாநாயகிகள் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல்? கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்திய மக்கள் அமைப்புக்கு புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் ஒரு பல்கலைக்கழக மாணவரை அறிமுகப்படுத்தினார். அவர் பொது வேட்பாளருக்கான அணியுடன் இணைந்து இயங்குவார் என்றும் சொன்னார். அந்த மாணவர் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்குத் துடிப்பாகச் செயல்படவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும் அவர் பொது வேட்பாளருக்கு ஆதரவான நிலைப்பாட்டோடு காணப்பட்டார். இது பழைய கதை. அண்மையில் ஒரு வாட்ஸ் அப் குழுவில் மேற்படி மாணவர் ஒரு காணொளியைப் பகிர்ந்திருந்தார். அனுரவை ஒரு கதாநாயகராகக் கட்டமைக்கும் விதத்தில் கவர்ச்சியாகத் தயாரிக்கப்பட்ட ஒரு காணொளி அது. அவர் ஏன் அதைப் பகிர்ந்திருக்கிறார் என்பதனை அறிவதற்கு பல்கலைக்கழகத்தில் அவருக்கு கற்பித்த ஓர் ஆசிரியரிடம் கேட்டேன். அவர் சொன்னார்,”அந்த மாணவர் இப்பொழுது தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களில் ஒருவர் போலத் தோன்றுகிறார்” என்று. “ஜனாதிபதித் தேர்தலில் அவர் பொது வேட்பாளரின் பக்கம் வந்தாரே?” என்று கேட்டேன். ”அது அப்பொழுது.இப்பொழுது அவர் தேசிய மக்கள் சக்திக்கு வந்து விட்டார். படிக்கும் காலங்களில் அவர் தீவிரமான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை எடுத்து சக மாணவர்களோடு தர்க்கப்படுவார். ஆனால் படித்து முடிந்ததும் அவர் இப்பொழுது தேசிய மக்கள் சக்தியின் பக்கம் நிற்கிறார்” என்றும் அந்த ஆசிரியர் கூறினார். அந்த மாணவர் பகிர்ந்த காணொளியானது அனுரவை தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கதாநாயகராகக் கட்டமைக்கும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்தே அதுபோன்ற சிறிய காணொளித் துண்டுகள் பல வெளிவந்திருக்கின்றன. தேசிய மக்கள் சக்தியின் டிஜிட்டல் ப்ரோமோஷனக்கான அணி வினைத்திறனோடும் படைப்புத்திறனோடும் செயல்படுகின்றது. அனுரவை ஒரு கதாநாயக பிம்பமாகக் கட்டியெழுப்பும் நோக்கத்தோடு திட்டமிட்டு அவ்வாறான காணொளிகளை உருவாக்கி வருகிறது. அவற்றில் காணப்படும் தொழில்சார் திறன், கலை நயம் போன்றன அனுரவைச் சுற்றி ஓர் ஒளிவட்டத்தைக் கட்டமைக்கும் நோக்கமுடையவை. ஒரு கதாநாயகராகக் கட்டியெழுப்பத் தேவையான முகம், உடல்வாகு, உடல் மொழி போன்றன அனுரவுக்கு உண்டு. அவற்றையும் சேர்த்து மாற்றத்தின் அலை ஒன்றுக்குத் தலைமை தாங்கும் கதாநாயக பிம்பமாக அவரைக் கட்டமைத்திருக்கிறார்கள். இந்த இடத்தில் தமிழ் நோக்கு நிலையில் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்கலாம். அனுரவைப் போல ஒரு கதாநாயகராகக் கட்டமைக்கத்தக்க அம்சங்களைக் கொண்ட தமிழ் தலைவர்கள், தலைவிகள் யாருமே இப்பொழுது களத்தில் இல்லையா? அல்லது அவ்வாறு கதாநாயக பிம்பங்களைக் கட்டியெழுப்ப முடியாத ஒரு சமூக,உளவியல்,அரசியற் சூழல் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றதா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளுக்குள் இருக்கிறது தமிழரசியலின் சீரழிவும் சாபக்கேடும். கடந்த 15ஆண்டுகளாக ஈழத்தமிழ் கூட்டு உளவியலானது கொந்தளிப்பானதாகவே காணப்படுகின்றது.கடந்த 15ஆண்டு கால தலைமைத்துவ வெற்றிடத்தில் தன்னைத்தானே தின்னும் ஒரு சமூகமாக; தானே தன்னை நம்பாத; ஒருவர் மற்றவரை சிறுமைப்படுத்துகின்ற; தன் பலம் எதுவென்று தெரியாமல் தூர்ந்து போகும் ஒரு சமூகமாக ஈழத் தமிழ்ச் சமூகம் மாறி வருகின்றதா? உளவியலில் Pistanthrophobia – “பிஸ்டாந்ரோ ஃபோபியா” என்ற ஒர் ஆங்கிலப் பதம் உண்டு. அதன் பொருள், யாரையும் நம்புவதற்கு பயம். இறந்த காலத்தில் ஏற்பட்ட எதிர்மறையான, கசப்பான அனுபவங்களின் விளைவாக மற்றவர்களை நம்பத் தயாரற்ற எரிச்சலுடன் கூடிய பயம். (An irritating fear of trusting others, typically resulting from previous negative experiences) போருக்குப் பின்னரான கூட்டு மனவடுக்களின் போதும் இதுபோன்ற உளவியல் விளைவுகளைக் காண முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு கூட்டுக் காயங்கள்,கூட்டு மன வடுக்களுக்குள் அழுத்திக் கிடக்கும் ஒரு சமூகத்தின் கொந்தளிப்பான கூட்டு உளவியலுக்குத் தலைமை தாங்கும் அரசியலானது ஒரு விதத்தில் கூட்டுச் சிகிச்சையாக அமைய வேண்டும். அதை ஒருவிதத்தில் குணமாக்கல் செயற்பாடு என்று கூடச் செல்லலாம். அவ்வாறு இறந்த காலத்தின் கூட்டுக் காயங்களுக்கும் கூட்டு மனவடுக்களுக்கும் கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல ஒரு அரசியலுக்குத் தலைமை தாங்கும் சக்தி மிக்க தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் இல்லையா? அல்லது இருப்பவர்களை மேலெழ விடாமல் ஒருவர் மற்றவரைக் கடித்துத் தின்னும் அல்லது ஒருவர் மற்றவரை சிறுமைப்படுத்தும் அல்லது மேலெழ முயற்சிப்பவரின் காலைப் பிடித்து இழுத்து விழுத்துகின்ற ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் மாறி வருகின்றதா? அதனால்தான் தமிழ் அரசியலில் கதாநாயக பிம்பங்களைக் கட்டமைக்க முடியவில்லையா? அரசியலில் கதாநாயக பிம்பங்களை கட்டமைப்பது என்பது தனிமனித துதிக்கும் தலைமை வழிபாட்டுக்கும் வழிவகுக்கும் என்ற விமர்சனங்களை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் வாக்கு வேட்டை அரசியலில் ஜனவசியம் மிக்க பிம்பங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. அதுவும் டிஜிட்டல் ப்ரோமோஷனின் காலத்தில் அந்த முக்கியத்துவம் பல மடங்கு அதிகம். அதைவிட முக்கியமாக,சுமார் 15 ஆண்டுகளாக தலைமைத்துவ வெற்றிடத்துள் அழுந்திக் கிடக்கும் ஒரு சமூகத்தை அதன் அடுத்த கட்ட அரசியலுக்கு பண்புரு மாற்றம் செய்வதற்கு அவ்வாறான தலைமைகள் அவசியம். ஆனால் அப்படிப்பட்ட தலைமைகள் மேலெழ முடியாத அளவுக்கு தமிழ்த் தேசிய அரசியலின் கூட்டு உளவியலானது சிதைந்து போய்க் கிடக்கின்றது. ஐக்கியத்துக்காக உழைப்பவர்களை இந்தியாவின் ஏஜென்ட்கள் என்று கூறும் அளவுக்கு பிஸ்டாந்ரோ போபியா ஒரு சமூக அரசியல் நோயாக மாறிவிட்டது. ஐக்கியப்படுமாறு கேட்பவர்களை எதிரியின் ஆட்கள் என்று முத்திரை குத்தும் நோய் ஈழத் தமிழர்கள் மத்தியில் மட்டும்தான் உண்டா? தமிழ்த் தேசிய அரசியலில் வெறுப்பர்களை அதிகம் உற்பத்தி செய்த ஒரு கட்சியாகிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்விகளின் பின் ஞானம் பெற்று கொள்கை வழி ஐக்கிய முயற்சிகளில் இறங்கியிருப்பதை ஒரு திருப்பகரமான மாற்றம் என்றே வர்ணிக்க வேண்டும். ஆனால் கொள்கை எது? ஒரு மக்களை அவர்கள் மத்தியில் இருக்கக்கூடிய பலம், பலவீனங்களோடு ஒரு திரளாகக் கூட்டிக் கட்டுவதுதான் தேசியவாத அரசியல். ஒரு தேசம் என்பது புனிதர்களுக்கு மட்டுமல்ல. ஒரு தேசத்துக்குள் தியாகிகள் மட்டும் இருப்பதில்லை.நல்லவர்கள், கெட்டவர்கள், புனிதர்கள், கபடர்கள், நபுஞ்சகர்கள், மனம் திருந்தியவர்கள், மனம்திருந்தாதவர்கள், விலைபோனவர்கள், ஒத்தோடிகள், எதிர்த்தோடிகள் மறுத்தோடிகள் என்று எல்லா ஓட்டங்களும் ஒரு சமூகத்துக்குள் இருக்கும். அந்த எல்லா ஓட்டங்களையும் ஒரு பொது எதிரிக்கு எதிரான பேரோட்டமாக மாற்றுவதுதான் தமிழ்த் தேசிய அரசியல். கடந்த 15 ஆண்டுகளாக அதைச் செய்யத் தமிழ் தேசியக் கட்சிகளால் முடியவில்லை. அவர்களால் தமது கட்சிகளையும் கட்டியெழுப்ப முடியவில்லை மக்களையும் கட்டியெழுப்ப முடியவில்லை. தங்களைக் கதாநாயகர்களாக அல்லது தியாகிகளாகக் கட்டமைப்பதற்காக தமது அரசியல் எதிரிகளை வில்லன்களாகச் சித்திரிக்கும் ஓர் அரசியல் பாரம்பரியமானது முடிவில் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளில் அநேகம் பேரை சொந்த மக்களே நம்ப முடியாத வில்லன்களாக பார்க்கும் ஒரு பரிதாபதாபகரமான இடத்தில் வந்து நிற்கின்றதா? உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி தலைமைப் போட்டிக்குள் சிக்கி ஏறக்குறைய தூர்ந்து போய்விட்டது. அந்தக் கெட்ட முன்னுதாரணமானது தமிழரசியலின் குறிகாட்டியும் கூட. சுமந்திரன்,சிறீதரன்,சாணக்கியன் போன்றவர்கள் தங்களுக்கென்று டிஜிட்டல் ப்ரோமோஷன் அணிகளை வைத்திருக்கிறார்கள். அவை அவர்களை கதாநாயகர்களாகக் கட்டமைக்கின்றன. ஆனால் கட்சியை நீதிமன்றத்திற்கு வெளியே கொண்டுவர முடியாத தலைவர்களை தமிழ் மக்கள் கதாநாயகர்களாகக் கருத மாட்டார்கள். சில சமயம் வில்லன்கள் ஆகத்தான் பார்ப்பார்கள். விக்னேஸ்வரன் அரசியலுக்கு வந்த புதிதில் ஜனவசியம் மிக்க ஒரு தலைவராகத் தோன்றினார்.தமிழ் மக்கள் பேரவையின் எழுச்சியோடு அவருக்கு இருந்த ஜனக் கவர்ச்சி மேலும் அதிகரித்தது. ஆனால் அவரே அதனைப் போட்டு உடைத்தார். இப்பொழுது அவருடைய ஜனவசிய முகம் பரிதாபகரமான விதத்தில் சுக்குநூறாகிவிட்டது. இது விக்னேஸ்வரனுக்கு மட்டுமல்ல கடந்த 15 ஆண்டுகளில் மேலெழுந்த பெரும்பாலான எல்லா தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பொருந்தும். தமிழ்த் தேசிய அரசியலில் மேல் எழுகின்ற எந்த ஒரு தலைவருமே தன் ஜனவசியத்தை ஏன் தொடர்ந்து தக்க வைக்க முடியவில்லை? ஏனென்றால் யாருமே தாங்கள் முன்வைத்த இலட்சியத்தை நோக்கி தமது கட்சியையும் கட்டியெழுப்ப முடியவில்லை; தமிழ் மக்களையும் கட்டியெழுப்ப முடியவில்லை. தன் பலம் எதுவென்று தெரியாமல், தானே தன்னில் நம்பிக்கை இழந்து, ஒருவர் மற்றவரை நம்பாத, ஒருவர் மற்றவரை சந்தேகிக்கின்ற,ஒருவர் மற்றவரை வெறுக்கின்ற, ஒரு சமூகமானது தன்னை ஒரு தேசம் என்று அழைக்க முடியாது. தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்களையும் ஒரு தேசமாகக் கட்டியெழுப்பத் தவறுகின்றன.தங்களையும் கட்சிகளாகக் கட்டியெழுப்பத் தவறுகின்றன. தமிழ் மக்களுக்கு ஆறுதலாகவும் நம்பிக்கை ஒளியாகவும் முன்னுதாரணமாகவும் நிற்கக்கூடிய தலைவர்கள் எத்தனை பேர் உண்டு? அல்லது அப்படிப்பட்ட தலைவர்கள் மேலெழு முடியாத ஒர் அரசியல் சூழல் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றதா? அதற்குக் கட்சிகள் பொறுப்பில்லையா? இந்த சமூகப் பொருளாதார அரசியல் மற்றும் உளவியல் சூழல் தொடருமாக இருந்தால் அனுரவை நோக்கி ஆர்வத்தோடு பார்க்கின்ற;அவரை கதாநாயகராகக் கொண்டாடுகின்ற இளையவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.அது இனி வரக்கூடிய தேர்தல்களிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும். https://www.nillanthan.com/7232/

கதாநாயகர்கள், கதாநாயகிகள் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல்? - நிலாந்தன்

3 months 2 weeks ago

கதாநாயகர்கள், கதாநாயகிகள் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல்?

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்திய மக்கள் அமைப்புக்கு புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் ஒரு பல்கலைக்கழக மாணவரை அறிமுகப்படுத்தினார். அவர் பொது வேட்பாளருக்கான அணியுடன் இணைந்து இயங்குவார் என்றும் சொன்னார். அந்த மாணவர் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்குத் துடிப்பாகச் செயல்படவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும் அவர் பொது வேட்பாளருக்கு ஆதரவான நிலைப்பாட்டோடு காணப்பட்டார்.

இது பழைய கதை. அண்மையில் ஒரு வாட்ஸ் அப் குழுவில் மேற்படி மாணவர் ஒரு காணொளியைப் பகிர்ந்திருந்தார். அனுரவை ஒரு கதாநாயகராகக் கட்டமைக்கும் விதத்தில் கவர்ச்சியாகத் தயாரிக்கப்பட்ட ஒரு  காணொளி அது. அவர் ஏன் அதைப் பகிர்ந்திருக்கிறார் என்பதனை அறிவதற்கு பல்கலைக்கழகத்தில் அவருக்கு கற்பித்த ஓர் ஆசிரியரிடம் கேட்டேன். அவர் சொன்னார்,”அந்த மாணவர் இப்பொழுது தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களில் ஒருவர் போலத் தோன்றுகிறார்” என்று. “ஜனாதிபதித் தேர்தலில் அவர் பொது வேட்பாளரின் பக்கம் வந்தாரே?” என்று கேட்டேன். ”அது அப்பொழுது.இப்பொழுது அவர் தேசிய மக்கள் சக்திக்கு வந்து விட்டார். படிக்கும் காலங்களில் அவர் தீவிரமான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை எடுத்து சக மாணவர்களோடு தர்க்கப்படுவார். ஆனால் படித்து முடிந்ததும் அவர் இப்பொழுது தேசிய மக்கள் சக்தியின் பக்கம் நிற்கிறார்” என்றும் அந்த ஆசிரியர் கூறினார்.

அந்த மாணவர் பகிர்ந்த காணொளியானது அனுரவை தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கதாநாயகராகக் கட்டமைக்கும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்தே அதுபோன்ற சிறிய காணொளித் துண்டுகள் பல வெளிவந்திருக்கின்றன. தேசிய மக்கள் சக்தியின் டிஜிட்டல் ப்ரோமோஷனக்கான அணி வினைத்திறனோடும் படைப்புத்திறனோடும் செயல்படுகின்றது. அனுரவை ஒரு கதாநாயக பிம்பமாகக் கட்டியெழுப்பும் நோக்கத்தோடு திட்டமிட்டு அவ்வாறான காணொளிகளை உருவாக்கி வருகிறது. அவற்றில் காணப்படும் தொழில்சார் திறன், கலை நயம் போன்றன அனுரவைச் சுற்றி ஓர் ஒளிவட்டத்தைக் கட்டமைக்கும் நோக்கமுடையவை.

ஒரு கதாநாயகராகக் கட்டியெழுப்பத் தேவையான முகம், உடல்வாகு, உடல் மொழி போன்றன அனுரவுக்கு உண்டு. அவற்றையும் சேர்த்து மாற்றத்தின் அலை ஒன்றுக்குத் தலைமை தாங்கும் கதாநாயக பிம்பமாக அவரைக் கட்டமைத்திருக்கிறார்கள்.

இந்த இடத்தில் தமிழ் நோக்கு நிலையில் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்கலாம். அனுரவைப் போல ஒரு கதாநாயகராகக் கட்டமைக்கத்தக்க அம்சங்களைக் கொண்ட தமிழ் தலைவர்கள், தலைவிகள் யாருமே இப்பொழுது களத்தில் இல்லையா? அல்லது அவ்வாறு கதாநாயக பிம்பங்களைக் கட்டியெழுப்ப முடியாத ஒரு சமூக,உளவியல்,அரசியற் சூழல் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றதா?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளுக்குள் இருக்கிறது தமிழரசியலின் சீரழிவும் சாபக்கேடும்.

கடந்த 15ஆண்டுகளாக ஈழத்தமிழ் கூட்டு உளவியலானது கொந்தளிப்பானதாகவே காணப்படுகின்றது.கடந்த 15ஆண்டு கால தலைமைத்துவ வெற்றிடத்தில் தன்னைத்தானே தின்னும் ஒரு சமூகமாக; தானே தன்னை நம்பாத; ஒருவர் மற்றவரை சிறுமைப்படுத்துகின்ற; தன் பலம் எதுவென்று தெரியாமல் தூர்ந்து போகும் ஒரு சமூகமாக ஈழத் தமிழ்ச் சமூகம் மாறி வருகின்றதா?

உளவியலில் Pistanthrophobia – “பிஸ்டாந்ரோ ஃபோபியா” என்ற ஒர் ஆங்கிலப் பதம் உண்டு. அதன் பொருள், யாரையும் நம்புவதற்கு பயம். இறந்த காலத்தில் ஏற்பட்ட எதிர்மறையான, கசப்பான அனுபவங்களின் விளைவாக மற்றவர்களை நம்பத் தயாரற்ற எரிச்சலுடன் கூடிய பயம். (An irritating fear of trusting others, typically resulting from previous negative experiences) போருக்குப் பின்னரான கூட்டு மனவடுக்களின் போதும் இதுபோன்ற உளவியல் விளைவுகளைக் காண முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

421931823_122125375670138407_73558661184

இவ்வாறு கூட்டுக் காயங்கள்,கூட்டு மன வடுக்களுக்குள் அழுத்திக் கிடக்கும் ஒரு சமூகத்தின் கொந்தளிப்பான கூட்டு உளவியலுக்குத் தலைமை தாங்கும் அரசியலானது ஒரு விதத்தில் கூட்டுச் சிகிச்சையாக அமைய வேண்டும். அதை ஒருவிதத்தில் குணமாக்கல்  செயற்பாடு என்று கூடச் செல்லலாம். அவ்வாறு இறந்த காலத்தின் கூட்டுக் காயங்களுக்கும் கூட்டு மனவடுக்களுக்கும் கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல ஒரு அரசியலுக்குத் தலைமை தாங்கும் சக்தி மிக்க தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் இல்லையா? அல்லது இருப்பவர்களை மேலெழ விடாமல் ஒருவர் மற்றவரைக் கடித்துத்  தின்னும் அல்லது ஒருவர் மற்றவரை சிறுமைப்படுத்தும் அல்லது மேலெழ முயற்சிப்பவரின் காலைப் பிடித்து இழுத்து விழுத்துகின்ற ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் மாறி வருகின்றதா? அதனால்தான் தமிழ் அரசியலில் கதாநாயக பிம்பங்களைக் கட்டமைக்க முடியவில்லையா?

அரசியலில் கதாநாயக பிம்பங்களை கட்டமைப்பது என்பது தனிமனித துதிக்கும் தலைமை வழிபாட்டுக்கும் வழிவகுக்கும் என்ற விமர்சனங்களை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் வாக்கு வேட்டை அரசியலில் ஜனவசியம் மிக்க பிம்பங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. அதுவும் டிஜிட்டல் ப்ரோமோஷனின் காலத்தில் அந்த முக்கியத்துவம் பல மடங்கு அதிகம். அதைவிட முக்கியமாக,சுமார் 15 ஆண்டுகளாக தலைமைத்துவ வெற்றிடத்துள் அழுந்திக் கிடக்கும் ஒரு சமூகத்தை அதன் அடுத்த கட்ட அரசியலுக்கு பண்புரு மாற்றம் செய்வதற்கு அவ்வாறான தலைமைகள் அவசியம். ஆனால் அப்படிப்பட்ட தலைமைகள் மேலெழ முடியாத அளவுக்கு தமிழ்த் தேசிய அரசியலின் கூட்டு உளவியலானது சிதைந்து போய்க் கிடக்கின்றது.

ஐக்கியத்துக்காக உழைப்பவர்களை இந்தியாவின் ஏஜென்ட்கள் என்று கூறும் அளவுக்கு பிஸ்டாந்ரோ போபியா ஒரு சமூக அரசியல் நோயாக மாறிவிட்டது. ஐக்கியப்படுமாறு கேட்பவர்களை எதிரியின் ஆட்கள் என்று முத்திரை குத்தும் நோய் ஈழத் தமிழர்கள் மத்தியில் மட்டும்தான் உண்டா?

தமிழ்த் தேசிய அரசியலில் வெறுப்பர்களை அதிகம் உற்பத்தி செய்த ஒரு கட்சியாகிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்விகளின் பின் ஞானம் பெற்று கொள்கை வழி ஐக்கிய முயற்சிகளில் இறங்கியிருப்பதை ஒரு திருப்பகரமான மாற்றம் என்றே வர்ணிக்க வேண்டும்.

ஆனால் கொள்கை எது? ஒரு மக்களை அவர்கள் மத்தியில் இருக்கக்கூடிய பலம், பலவீனங்களோடு ஒரு திரளாகக் கூட்டிக் கட்டுவதுதான் தேசியவாத அரசியல். ஒரு தேசம் என்பது புனிதர்களுக்கு மட்டுமல்ல. ஒரு தேசத்துக்குள் தியாகிகள் மட்டும் இருப்பதில்லை.நல்லவர்கள், கெட்டவர்கள், புனிதர்கள், கபடர்கள், நபுஞ்சகர்கள், மனம் திருந்தியவர்கள், மனம்திருந்தாதவர்கள், விலைபோனவர்கள், ஒத்தோடிகள், எதிர்த்தோடிகள் மறுத்தோடிகள் என்று எல்லா ஓட்டங்களும் ஒரு சமூகத்துக்குள் இருக்கும். அந்த எல்லா ஓட்டங்களையும் ஒரு பொது எதிரிக்கு எதிரான பேரோட்டமாக மாற்றுவதுதான் தமிழ்த் தேசிய அரசியல். கடந்த 15 ஆண்டுகளாக அதைச் செய்யத் தமிழ் தேசியக் கட்சிகளால் முடியவில்லை. அவர்களால் தமது கட்சிகளையும் கட்டியெழுப்ப முடியவில்லை மக்களையும் கட்டியெழுப்ப முடியவில்லை.

தங்களைக் கதாநாயகர்களாக அல்லது தியாகிகளாகக் கட்டமைப்பதற்காக தமது அரசியல் எதிரிகளை வில்லன்களாகச் சித்திரிக்கும் ஓர் அரசியல் பாரம்பரியமானது முடிவில் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளில் அநேகம் பேரை சொந்த மக்களே நம்ப முடியாத வில்லன்களாக பார்க்கும் ஒரு பரிதாபதாபகரமான இடத்தில் வந்து நிற்கின்றதா?

உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி தலைமைப் போட்டிக்குள் சிக்கி ஏறக்குறைய தூர்ந்து போய்விட்டது. அந்தக் கெட்ட முன்னுதாரணமானது தமிழரசியலின் குறிகாட்டியும் கூட. சுமந்திரன்,சிறீதரன்,சாணக்கியன் போன்றவர்கள் தங்களுக்கென்று டிஜிட்டல் ப்ரோமோஷன் அணிகளை வைத்திருக்கிறார்கள். அவை அவர்களை கதாநாயகர்களாகக் கட்டமைக்கின்றன. ஆனால் கட்சியை நீதிமன்றத்திற்கு வெளியே கொண்டுவர முடியாத தலைவர்களை தமிழ் மக்கள் கதாநாயகர்களாகக் கருத மாட்டார்கள். சில சமயம் வில்லன்கள் ஆகத்தான் பார்ப்பார்கள்.

விக்னேஸ்வரன் அரசியலுக்கு வந்த புதிதில் ஜனவசியம் மிக்க ஒரு தலைவராகத் தோன்றினார்.தமிழ் மக்கள் பேரவையின் எழுச்சியோடு அவருக்கு இருந்த ஜனக் கவர்ச்சி மேலும் அதிகரித்தது. ஆனால் அவரே அதனைப் போட்டு உடைத்தார். இப்பொழுது அவருடைய ஜனவசிய முகம் பரிதாபகரமான விதத்தில் சுக்குநூறாகிவிட்டது. இது விக்னேஸ்வரனுக்கு மட்டுமல்ல கடந்த 15 ஆண்டுகளில் மேலெழுந்த பெரும்பாலான எல்லா தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பொருந்தும். தமிழ்த் தேசிய அரசியலில் மேல் எழுகின்ற எந்த ஒரு தலைவருமே தன் ஜனவசியத்தை ஏன் தொடர்ந்து தக்க வைக்க முடியவில்லை?

ஏனென்றால் யாருமே தாங்கள் முன்வைத்த இலட்சியத்தை நோக்கி தமது கட்சியையும் கட்டியெழுப்ப முடியவில்லை; தமிழ் மக்களையும் கட்டியெழுப்ப முடியவில்லை. தன் பலம் எதுவென்று தெரியாமல், தானே தன்னில் நம்பிக்கை இழந்து, ஒருவர் மற்றவரை நம்பாத, ஒருவர் மற்றவரை சந்தேகிக்கின்ற,ஒருவர் மற்றவரை வெறுக்கின்ற, ஒரு சமூகமானது தன்னை ஒரு தேசம் என்று அழைக்க முடியாது. தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்களையும் ஒரு தேசமாகக் கட்டியெழுப்பத் தவறுகின்றன.தங்களையும் கட்சிகளாகக் கட்டியெழுப்பத் தவறுகின்றன.

தமிழ் மக்களுக்கு ஆறுதலாகவும் நம்பிக்கை ஒளியாகவும் முன்னுதாரணமாகவும் நிற்கக்கூடிய தலைவர்கள் எத்தனை பேர் உண்டு? அல்லது அப்படிப்பட்ட தலைவர்கள் மேலெழு முடியாத ஒர் அரசியல் சூழல் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றதா? அதற்குக் கட்சிகள் பொறுப்பில்லையா?

இந்த சமூகப் பொருளாதார அரசியல் மற்றும் உளவியல் சூழல் தொடருமாக இருந்தால் அனுரவை நோக்கி ஆர்வத்தோடு பார்க்கின்ற;அவரை கதாநாயகராகக் கொண்டாடுகின்ற இளையவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.அது இனி வரக்கூடிய தேர்தல்களிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும்.

https://www.nillanthan.com/7232/

பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு

3 months 2 weeks ago
அரசியல் சக்தியாக எழுந்து நிற்போம் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்ற அமைப்பையும் பலப்படுத்திக் கொண்டு அரசியல் ரீதியாக நிரூபிக்கக் கூடிய சக்தியாக எழுந்து நிற்பதே எங்கள் நோக்கமாக இருக்கின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ என்னும் புதிய கூட்டணி கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இணைந்து கொண்டதுடன் அதற்கான கனவான் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டக்களப்பில் கைச்சாத்திடப்பட்டது. இதனை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பில் பிள்ளையான் மற்றும் கருணா ஆகியோர் கருத்து தெரிவித்தனர். இதன்போது கருத்து தெரிவித்த பிள்ளையான், “இற்றைக்கு 21 ஆண்டுகளுக்கு முன்னர் இதே மார்ச் மாதம் அளவில் என்று நினைக்கின்றேன் வன்னிக் காடுகள் அதிர்கின்ற அளவிலே எங்கள் தளபதி ஒரு அறிவிப்பைச் செய்கின்றார். அனைவருக்கும் தெரியும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலே வடக்குத் தலைமைகளால் கிழக்கு மாகாணம் வஞ்சிக்கப்பட்டு வருவதை எதிர்த்துக் குரல் எழுப்பினார். அவருடைய கருத்தை ஏற்று நான் உட்பட சுமார் ஆறாயிரத்துக்கும் அதிகமான போராளிகள் போர்க்கொடி தூக்கினோம். ஆனாலும் சிறிலங்கா அரசுடன் கூட பேச்சுவார்த்தை நடத்திய விடுதலைப் புலிகளின் வடக்குத் தலைமை ஆயிரம் ஆயிரம் மாவீரர்களைக் கொடுத்த எம்முடன் பேசமறுத்தமை கசப்பான விடயங்கள். இந்த நிலையில் நாங்கள் அங்கிருந்து வெளியேறி ஆயுத இயக்கமாக ஒன்றும் சாதித்து விட முடியாது என்பதை உணர்ந்து ஒரு ஜனநாயக இயக்கமாக நாங்கள் ஒன்றிணைந்து செயலாற்ற முனைந்தோம். கட்சியாக நாங்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை உருவாக்கினாலும் நானும் கருணா அம்மானும் ஒன்றாக இணைந்து பயணிக்க முடியாத சில துரதிர்ஷ்டவச நிகழ்வுகள் நடந்தன. இருப்பினும் அரசியல் ரீதியில் அவர் அவரால் இயன்ற மக்கள் சேவையை ஆற்றியிருக்கின்றார். மறுபுறத்தில் நாங்களும் ஆற்றியிருக்கின்றோம். தற்போது பல்லின மக்கள் வாழும் இந்த மாகாணத்திலே தமிழ் மக்களினுடைய எதிர்காலம் அவர்களின் அரசியல் அதிகாரத்தினைத் தக்க வைப்பது, கல்வி பொருளாதார சுகாதார உட்கட்டுமான மேம்பாடு, மாகாணசபையின் அதிகாரம் என்பவற்றைப் பார்க்கும் போது நாங்கள் தொடர்ந்தும் பிரிந்து செயற்பட்டுக் கொண்டிருப்பது இந்த மக்களுக்கும் இந்த மாகாணத்திற்கும் பின்னடைவை ஏற்படுத்தும். ஏனெனில் எமது சமூகம் தொடர்ந்து பின்தள்ளப்படுகின்ற அபாயம் ஏற்பட்டிருப்பதை நாங்கள் உணர்கின்றோம். கடந்த கால கசப்புகளை மறந்த் எதிர்காலத்தில் ஒரு உறுதியான கிழக்கு மாகாண அரசியற் தளத்தை நிறுவ வேண்டும் என்ற பகிரங்க பிரயத்தனத்தின் காரணமாகவும் எமது கட்சியின் சிரேஸ்ட தலைவரின் முயற்சியின் காரணமாகவும் நாங்கள் கருணா அம்மானுடன் ஒப்பந்தத்தைச் செய்திருக்கின்றோம். இதனூடாக நாங்கள் எமது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கும், சிறந்த ஒரு அரசியற் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கின்றோம். நாங்கள் அண்மையில் உருவாக்கியுள்ள கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்ற அமைப்பையும் பலப்படுத்திக் கொண்டு அரசியல் ரீதியாக நிரூபிக்கக் கூடிய சக்தியாக எழுந்து நிற்பதே எங்கள் நோக்கமாக இருக்கின்றது. எனவே எமது கிழக்கு மாகாண மக்களே நாங்கள் முன்னமே கூறிய 21 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற வஞ்சிப்பு போலவே 70, 80 ஆண்டு காலமாக நாங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றோம், வஞ்சிக்கப்பட்டிருக்கின்றோம், பல கஸ்டமான சம்பவங்களைக் கடந்து வந்திருக்கின்றோம். 2008ம் ஆண்டின் பின் ஓரளவு எமது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திய சமூகமாக நாம் நின்றிருக்கின்றோம். இப்போது அந்த நிலைமை சற்று மாறுபட்டிருக்கின்றது. அதேபோன்று ஏனைய தேசிய மட்ட அரசியல் சக்திகளுக்குச் சமமாக நாங்கள் எழுந்து நிற்க வேண்டிய அவசியம் கருதியும், எங்களது போராட்டத்திற்கு நாங்கள் கொடுத்த விலைகளை நாங்கள் உயிர்வாழுகின்ற போதே எமது மக்களைத் தூக்கி நிறுத்தி அவர்களை முடியுமானவரை அபிவிருத்தி செய்துவிட வேண்டும் என உறுதியான எண்ணப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம். இந்த கட்டமைப்பு இனி ஒருபோதும் சிதைவடையாமல் கருத்து பேதங்கள் இல்லாமல் உறுதியாக இருப்பதற்கான விட்டுக்கொடுப்புகளைச் செய்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்த இணைவை இயற்கையும் ஏற்றுக் கொள்ளும் அதேபோன்று எமது மாகாணத் தமிழ் மக்களும் ஏற்றுக் கொண்டு எம்முடன் கைகோர்த்துச் செயற்பட வேண்டும் என கோருகிறேன்” என்றார். https://akkinikkunchu.com/?p=317365

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர்

3 months 2 weeks ago
இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் March 23, 2025 10:53 am இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அவ்வாறு நாடு திரும்புவர்களுக்கான உதவிகளை வழங்குவதுடன், ஈழ அகதிகள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கும் உரிய தரப்புக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று சனிக்கிழமை (22.03.2025) விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் ஒபர் சிலோன் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக இது ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரவேண்டும் என போர் முடிந்ததிலிருந்து சொல்லப்பட்டு வருகின்றது என்பதையும், அவர்கள் மீண்டும் இங்குவரவேண்டும் என்பதே இங்குள்ள எல்லோரது விருப்பம் என்பதையும் ஆளுநர் குறிப்பிட்டார். அத்துடன் கடந்த காலங்களில் இவ்வாறு இந்தியாவிலிருந்து வந்த ஒவ்வொருவர் தொடர்பான விவரங்களையும் பெற்று அவர்களுக்கு எத்தகைய தேவைப்பாடுகள் இன்னமும் இருக்கின்றன என்பதை அறிந்து அதனை உடனடியாக பூர்த்திசெய்யவேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்தார். ஒபர் சிலோன் நிறுவனத்தின் திட்டத் தலைவர் சின்னதம்பி சூரியகுமாரி, தமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும், எதிர்பார்ப்புத் தொடர்பிலும் விவரித்தார். இலங்கையிலிருந்து 4 கட்டங்களாக இந்தியாவுக்கு 334,797 பேர் அகதிகளாகச் சென்றுள்ளனர் என்றும் தற்போது தமிழகத்தில் 103 முகாம்களில் 58,104 பேர் இருக்கின்றனர் என்ற தரவுகளையும் ஒபர் சிலோன் நிறுவனத்தினர் தெரியப்படுத்தினர். தற்போது தமிழகத்தில் முகாம்களிலுள்ள 58,104 பேரில், 50,620 பேர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டனர். 2009ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வடக்கு மாகாணத்துக்கு 14,531பேர் வருகை தந்துள்ளனர் என்றும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர். தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் நாடு திரும்புவதற்கு நிலையான கட்டமைப்பு பொறிமுறை உருவாக்கப்படவேண்டும் என்றும், இலங்கை, இந்திய அரசாங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை தேவை என்றும், இலங்கையில் அரசியல் உறுதிபாடு அவசியம் எனவும் ஒபர் சிலோன் நிறுவனத்தினர் குறிப்பிட்டனர். மேலும் தமிழகத்திலுள்ள ஈழ அகதிகளுக்கு இலங்கை மற்றும் வடக்கு மாகாணம் தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட அல்லது போலியான தகவல்கள் வழங்கப்படுகின்றமையும் அவர்கள் நாடு திரும்புவதற்கு சவாலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடந்த காலங்களில் நாடு திரும்பிய ஈழ அகதிகள் இலங்கைக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் சவால்களை எதிர்கொள்கின்றனர் என்றும், இலங்கைக்கு நாடு திரும்புவர்கள் இங்கிருந்து சென்றவர்களின் இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறையினர் என்பதால், இலங்கையில் அவர்களது பூர்வீக பிரதேசத்தை அடையாளம் காண்பதிலும், அவர்களின் காணிகளைக் கண்டறிவதிலும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்ற விடயமும் ஆளுநரின் கவனத்துக்கு ஒபர் சிலோன் நிறுவனத்தால் கொண்டு வரப்பட்டது. கொள்கை ரீதியான ஆவணம் ஒன்றை ஒபர் சிலோன் நிறுவனம் தயாரித்து வழங்கிய பின்னர் அதனை அடிப்படையாக வைத்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதாக ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார். நாடு திரும்ப விருப்பமானவர்களின் பட்டியலை ஒபர் சிலோன் நிறுவனம், வடக்கின் 5 மாவட்டச் செயலர்களுக்கு வழங்கிய பின்னர் அவர்களுக்கான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்டச் செயலர்கள் மேற்கொள்வார்கள் என ஆளுநர் குறிப்பிட்டார். அதேவேளை, தமிழகத்திலுள்ள ஈழ அகதிகளில் பலர் தாதியர் கற்கைநெறியை முடித்தவர்கள் எனவும், விளையாட்டுத்துறையில் சாதித்தவர்கள் எனவும் சுட்டிக்காட்டிய ஒபர் சிலோன் நிறுவனத்தினர், வடக்கு மாகாணத்தின் சொத்தான அவர்களை இழக்கக் கூடாது எனவும் கோரிக்கை முன்வைத்தனர். தமிழகத்திலிருப்பவர்களை வலுக்கட்டாயமாக நாட்டுக்கு அழைத்துவரமுடியாது எனக் குறிப்பிட்ட ஆளுநர், வரவுள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கத் திட்டமிடுமாறும் அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்தக் கலந்துரையாடலில் ஒபர் சிலோன் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மேலதிக மாவட்டச் செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், சமுர்த்திப் பணிப்பாளர்கள், மாவட்டப் பதிவாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். https://oruvan.com/eelam-refugees-staying-in-india-should-return-to-sri-lanka-northern-province-governor/

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர்

3 months 2 weeks ago

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர்

March 23, 2025 10:53 am

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர்

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

அவ்வாறு நாடு திரும்புவர்களுக்கான உதவிகளை வழங்குவதுடன், ஈழ அகதிகள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கும் உரிய தரப்புக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று சனிக்கிழமை (22.03.2025) விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் ஒபர் சிலோன் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக இது ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரவேண்டும் என போர் முடிந்ததிலிருந்து சொல்லப்பட்டு வருகின்றது என்பதையும், அவர்கள் மீண்டும் இங்குவரவேண்டும் என்பதே இங்குள்ள எல்லோரது விருப்பம் என்பதையும் ஆளுநர் குறிப்பிட்டார்.

அத்துடன் கடந்த காலங்களில் இவ்வாறு இந்தியாவிலிருந்து வந்த ஒவ்வொருவர் தொடர்பான விவரங்களையும் பெற்று அவர்களுக்கு எத்தகைய தேவைப்பாடுகள் இன்னமும் இருக்கின்றன என்பதை அறிந்து அதனை உடனடியாக பூர்த்திசெய்யவேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

ஒபர் சிலோன் நிறுவனத்தின் திட்டத் தலைவர் சின்னதம்பி சூரியகுமாரி, தமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும், எதிர்பார்ப்புத் தொடர்பிலும் விவரித்தார்.

இலங்கையிலிருந்து 4 கட்டங்களாக இந்தியாவுக்கு 334,797 பேர் அகதிகளாகச் சென்றுள்ளனர் என்றும் தற்போது தமிழகத்தில் 103 முகாம்களில் 58,104 பேர் இருக்கின்றனர் என்ற தரவுகளையும் ஒபர் சிலோன் நிறுவனத்தினர் தெரியப்படுத்தினர்.

தற்போது தமிழகத்தில் முகாம்களிலுள்ள 58,104 பேரில், 50,620 பேர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டனர். 2009ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வடக்கு மாகாணத்துக்கு 14,531பேர் வருகை தந்துள்ளனர் என்றும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர்.

தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் நாடு திரும்புவதற்கு நிலையான கட்டமைப்பு பொறிமுறை உருவாக்கப்படவேண்டும் என்றும், இலங்கை, இந்திய அரசாங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை தேவை என்றும், இலங்கையில் அரசியல் உறுதிபாடு அவசியம் எனவும் ஒபர் சிலோன் நிறுவனத்தினர் குறிப்பிட்டனர்.

மேலும் தமிழகத்திலுள்ள ஈழ அகதிகளுக்கு இலங்கை மற்றும் வடக்கு மாகாணம் தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட அல்லது போலியான தகவல்கள் வழங்கப்படுகின்றமையும் அவர்கள் நாடு திரும்புவதற்கு சவாலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் நாடு திரும்பிய ஈழ அகதிகள் இலங்கைக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் சவால்களை எதிர்கொள்கின்றனர் என்றும், இலங்கைக்கு நாடு திரும்புவர்கள் இங்கிருந்து சென்றவர்களின் இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறையினர் என்பதால், இலங்கையில் அவர்களது பூர்வீக பிரதேசத்தை அடையாளம் காண்பதிலும், அவர்களின் காணிகளைக் கண்டறிவதிலும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்ற விடயமும் ஆளுநரின் கவனத்துக்கு ஒபர் சிலோன் நிறுவனத்தால் கொண்டு வரப்பட்டது.

கொள்கை ரீதியான ஆவணம் ஒன்றை ஒபர் சிலோன் நிறுவனம் தயாரித்து வழங்கிய பின்னர் அதனை அடிப்படையாக வைத்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதாக ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.

நாடு திரும்ப விருப்பமானவர்களின் பட்டியலை ஒபர் சிலோன் நிறுவனம், வடக்கின் 5 மாவட்டச் செயலர்களுக்கு வழங்கிய பின்னர் அவர்களுக்கான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்டச் செயலர்கள் மேற்கொள்வார்கள் என ஆளுநர் குறிப்பிட்டார்.

அதேவேளை, தமிழகத்திலுள்ள ஈழ அகதிகளில் பலர் தாதியர் கற்கைநெறியை முடித்தவர்கள் எனவும், விளையாட்டுத்துறையில் சாதித்தவர்கள் எனவும் சுட்டிக்காட்டிய ஒபர் சிலோன் நிறுவனத்தினர், வடக்கு மாகாணத்தின் சொத்தான அவர்களை இழக்கக் கூடாது எனவும் கோரிக்கை முன்வைத்தனர்.

தமிழகத்திலிருப்பவர்களை வலுக்கட்டாயமாக நாட்டுக்கு அழைத்துவரமுடியாது எனக் குறிப்பிட்ட ஆளுநர், வரவுள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கத் திட்டமிடுமாறும் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் ஒபர் சிலோன் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மேலதிக மாவட்டச் செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், சமுர்த்திப் பணிப்பாளர்கள், மாவட்டப் பதிவாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

https://oruvan.com/eelam-refugees-staying-in-india-should-return-to-sri-lanka-northern-province-governor/

இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் - ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு!

3 months 2 weeks ago
இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் - ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு! தெற்கு காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடங்கி நடத்தி வருகிறது. ஜனவரி மாதம் ஆரம்பமான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாகப் பாலஸ்தீன சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் அலுவலகத்தில் உறுப்பினராக இருக்கும் பர்தவீலுடன் சேர்ந்து அவரது மனைவியும் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே செய்தியை ஹமாஸ் ஆதரவு ஊடகங்களும் வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. https://www.hirunews.lk/tamil/400821/இஸ்ரேலின்-வான்வழி-தாக்குதல்-ஹமாஸ்-அரசியல்-தலைவர்-உயிரிழப்பு

இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் - ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு!

3 months 2 weeks ago

இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் - ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு!

%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21+

தெற்கு காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

காசா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடங்கி நடத்தி வருகிறது. 

ஜனவரி மாதம் ஆரம்பமான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. 

இஸ்ரேல் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாகப் பாலஸ்தீன சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் அலுவலகத்தில் உறுப்பினராக இருக்கும் பர்தவீலுடன் சேர்ந்து அவரது மனைவியும் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதே செய்தியை ஹமாஸ் ஆதரவு ஊடகங்களும் வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

https://www.hirunews.lk/tamil/400821/இஸ்ரேலின்-வான்வழி-தாக்குதல்-ஹமாஸ்-அரசியல்-தலைவர்-உயிரிழப்பு

மாணவர்கள் பச்சை குத்தினால் பாடசாலைக்கு செல்ல முடியாது என்ற விழிப்புணர்வு செயல்பாட்டை தெளிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடல்

3 months 2 weeks ago
ஒரு பிள்ளைக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் எவ்வளவு முக்கியமானது என்று தெரியாத தமிழ் பெற்றோரும் 21’ம் நூற்றாண்டில் வாழ்கின்றார்களா.

மாணவர்கள் பச்சை குத்தினால் பாடசாலைக்கு செல்ல முடியாது என்ற விழிப்புணர்வு செயல்பாட்டை தெளிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடல்

3 months 2 weeks ago
23 MAR, 2025 | 11:26 AM மாணவர்கள் பச்சை குத்தினால் பாடசாலைக்கு செல்ல முடியாது என்ற விழிப்புணர்வு செயல்பாட்டை மீண்டும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து சிறுவர் அபிவிருத்திக் குழுவின் முதலாம் காலாண்டு குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. யாழ். மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவின் முதலாம் காலாண்டு குழுக் கூட்டமானது பதில் அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தலைமையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (21) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது, அரசாங்கத்தால் ஓர் தாயின் கருவில் குழந்தை கருவுற்றதிலிருந்து அக்குழந்தை முதியவராகும்வரை அவர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக பிரதேச செயலகங்களில் முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முதல் முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் வரையான பல்வேறு தரப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தம் பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். எனினும், அவர்கள் மேலும் வினைத்திறனாக செயல்பட பிரதேச செயலாளர்கள் வழிப்படுத்த வேண்டும் என பதில் அரச அதிபர் கேட்டுக் கொண்டார். மேலும், மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் யூன் மாதம் 18 ஆம் திகதி பிறப்புப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கான நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாவும் அதற்கு முன்பாக பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணி ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக பிறப்புப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கான நடமாடும் சேவையை மே மாதம் 16ஆம் திகதி பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு பதில் அரச அதிபரால் அறிவுறுத்தப்பட்டது. பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண்டு 9 மற்றும் ஆண்டு 9 இற்கு கீழும் உள்ள பிள்ளைகளுக்கான அறநெறி வகுப்புகள், இணைப் பாடவிதானச் செயல்பாடுகள் மற்றும் ஒய்வுகளைக் கருதி தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விச் செயல்பாடுகளை நிறுத்திவைத்தல் என்ற தீர்மானத்துக்கு அமைய, பெற்றோர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்களின் ஒத்துழைப்புடன் சீரான கட்டுப்பாட்டில் பேணுவதற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கண்காணிப்பு அவசியம் பிரதீபன் வலியுறுத்தினார். ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பெண்கள் சிறுவர் பிரிவு இயங்காமல் உள்ளதாகவும், அதற்கான சேவைகள் முறைப்பாட்டுப் பிரிவுடன் இயங்குவதாகவும் கூட்டத்தில் பிரதேச செயலாளரால் சுட்டிக்காட்டப்பட்டதற்கு அமைய, உடனடியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருடன் தொடர்பு கொண்ட பதில் அரச அதிபர், ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலிருந்து செயல்பட நடவடிக்கை எடுப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்ததாகவும் அதன் முன்னேற்றத்தை பிரதேச செயலாளர் அறிக்கையிடுமாறும் பதில் அரச அதிபர் கேட்டுக் கொண்டார். மாணவர்கள் பச்சை குத்தினால் பாடசாலைக்கு செல்ல முடியாது என்ற விழிப்புணர்வு செயல்பாட்டை மீண்டும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வலயக் கல்விப் பணிப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதில் அரச அதிபர் தெரிவித்தார். தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் நகர்ப்புற பாடசாலை மாணவர்கள், பரீட்சை நிறைவடைந்து வெளிவரும் போது அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் தனியார் கல்வி நிறுவனங்கள் துண்டுப் பிரசுரங்களை திணிப்பதாகவும், யாழ்ப்பாணம், நல்லூர், மல்லாகம் மற்றும் பருத்தித்துறை ஆகிய பிரதேசத்தில் உள்ள சில தனியார் கல்வி நிறுவனங்களுக்கு முன்பாக பெற்றோர்கள் கூடுதலாக தரித்து நிற்பதால் பொது மக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதற்கு அமைய, போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கைக்காக ஆவன செய்வதாக பதில் அரச அதிபரால் தெரிவிக்கப்பட்டது. தாய், தந்தையை இழந்து பிள்ளைகளை பராமரிப்போருக்கு மாதாந்தக் கொடுப்பனவு மாகாணத்தால் 3000 ரூபாய் வழங்கப்படுவதாகவும், தொண்டு நிறுவனங்கள் 5000 ரூபாய் வழங்குவதாகவும் தெரிவித்த மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர், பராமரிப்பாளர்கள் இக் கொடுப்பனவை பெறுவதற்கு நீதிமன்றக் கட்டளை பெறவேண்டும் எனவும் கூறினார். இதேவேளை, சிறுவர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்திக்கு உறுதுணையாகவிருக்கும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமக்குரிய சேவையை வினைத்திறனாக வழங்குவதன் ஊடக தமது வாழ்க்கையிலும் சிறப்படைய முடியும் என பதில் அரச அதிபர் தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலில், மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர், உதவி மாவட்ட செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/209968

மாணவர்கள் பச்சை குத்தினால் பாடசாலைக்கு செல்ல முடியாது என்ற விழிப்புணர்வு செயல்பாட்டை தெளிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடல்

3 months 2 weeks ago

23 MAR, 2025 | 11:26 AM

image

மாணவர்கள் பச்சை குத்தினால் பாடசாலைக்கு செல்ல முடியாது என்ற விழிப்புணர்வு செயல்பாட்டை மீண்டும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து சிறுவர் அபிவிருத்திக் குழுவின் முதலாம் காலாண்டு குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

யாழ். மாவட்ட  சிறுவர் அபிவிருத்திக் குழுவின் முதலாம் காலாண்டு குழுக் கூட்டமானது பதில் அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தலைமையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (21) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது, அரசாங்கத்தால் ஓர் தாயின் கருவில் குழந்தை கருவுற்றதிலிருந்து அக்குழந்தை முதியவராகும்வரை அவர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக பிரதேச செயலகங்களில் முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முதல் முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் வரையான பல்வேறு தரப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தம் பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். எனினும், அவர்கள் மேலும் வினைத்திறனாக செயல்பட பிரதேச செயலாளர்கள் வழிப்படுத்த வேண்டும் என பதில் அரச அதிபர் கேட்டுக் கொண்டார்.

மேலும், மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் யூன் மாதம் 18 ஆம் திகதி பிறப்புப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கான நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாவும் அதற்கு முன்பாக பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணி ஆகிய  பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக பிறப்புப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கான நடமாடும் சேவையை மே மாதம் 16ஆம் திகதி பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு பதில் அரச அதிபரால் அறிவுறுத்தப்பட்டது.

பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண்டு 9 மற்றும் ஆண்டு 9 இற்கு கீழும் உள்ள பிள்ளைகளுக்கான அறநெறி வகுப்புகள், இணைப் பாடவிதானச் செயல்பாடுகள் மற்றும் ஒய்வுகளைக் கருதி தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விச் செயல்பாடுகளை நிறுத்திவைத்தல் என்ற தீர்மானத்துக்கு அமைய, பெற்றோர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்களின் ஒத்துழைப்புடன் சீரான கட்டுப்பாட்டில் பேணுவதற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கண்காணிப்பு அவசியம் பிரதீபன் வலியுறுத்தினார்.

ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பெண்கள் சிறுவர் பிரிவு இயங்காமல் உள்ளதாகவும், அதற்கான சேவைகள் முறைப்பாட்டுப் பிரிவுடன் இயங்குவதாகவும் கூட்டத்தில் பிரதேச செயலாளரால் சுட்டிக்காட்டப்பட்டதற்கு அமைய, உடனடியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருடன் தொடர்பு கொண்ட பதில் அரச அதிபர், ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலிருந்து செயல்பட நடவடிக்கை எடுப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்ததாகவும் அதன் முன்னேற்றத்தை பிரதேச செயலாளர் அறிக்கையிடுமாறும் பதில் அரச அதிபர் கேட்டுக் கொண்டார்.

மாணவர்கள் பச்சை குத்தினால் பாடசாலைக்கு செல்ல முடியாது என்ற விழிப்புணர்வு செயல்பாட்டை மீண்டும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வலயக் கல்விப் பணிப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதில் அரச அதிபர் தெரிவித்தார்.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் நகர்ப்புற பாடசாலை மாணவர்கள், பரீட்சை நிறைவடைந்து வெளிவரும் போது அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் தனியார் கல்வி நிறுவனங்கள் துண்டுப் பிரசுரங்களை திணிப்பதாகவும், யாழ்ப்பாணம், நல்லூர், மல்லாகம் மற்றும் பருத்தித்துறை ஆகிய பிரதேசத்தில் உள்ள சில தனியார் கல்வி நிறுவனங்களுக்கு முன்பாக பெற்றோர்கள் கூடுதலாக தரித்து நிற்பதால் பொது மக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதற்கு அமைய, போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கைக்காக ஆவன செய்வதாக பதில் அரச அதிபரால் தெரிவிக்கப்பட்டது.

தாய், தந்தையை இழந்து பிள்ளைகளை பராமரிப்போருக்கு மாதாந்தக் கொடுப்பனவு மாகாணத்தால் 3000 ரூபாய் வழங்கப்படுவதாகவும், தொண்டு நிறுவனங்கள் 5000  ரூபாய் வழங்குவதாகவும் தெரிவித்த மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர், பராமரிப்பாளர்கள் இக் கொடுப்பனவை பெறுவதற்கு நீதிமன்றக் கட்டளை பெறவேண்டும் எனவும் கூறினார். இதேவேளை, சிறுவர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்திக்கு உறுதுணையாகவிருக்கும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமக்குரிய சேவையை வினைத்திறனாக வழங்குவதன் ஊடக தமது வாழ்க்கையிலும் சிறப்படைய முடியும் என பதில் அரச அதிபர் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில், மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர், உதவி மாவட்ட செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/209968

சீனத் தூதுவரின் இல்லத்தில் ரணிலுக்கு இராப்போசனம்

3 months 2 weeks ago
23 MAR, 2025 | 09:13 AM கொழும்பில் உள்ள சீனத் தூதுவரின் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சீனத் தூதுவர் இராப்போசனம் வழங்கியுள்ளார். நாளை திங்கட்கிழமை (24) ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு இவ்வாறு இராப்போசனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது ரணில் விக்கிரமசிங்கவின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/209957

சீனத் தூதுவரின் இல்லத்தில் ரணிலுக்கு இராப்போசனம்

3 months 2 weeks ago

23 MAR, 2025 | 09:13 AM

image

கொழும்பில் உள்ள சீனத் தூதுவரின் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சீனத் தூதுவர் இராப்போசனம் வழங்கியுள்ளார்.

நாளை திங்கட்கிழமை (24) ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு இவ்வாறு இராப்போசனம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது ரணில் விக்கிரமசிங்கவின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/209957

ஐபிஎல் டி20 செய்திகள் - 2025

3 months 2 weeks ago
சுனில் நரைன் பேட்டால் ஸ்டம்பை உரசியும் கூட அவுட் கொடுக்கப்படாதது ஏன்? முதல் ஆட்டத்திலேயே சர்ச்சை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆர்சிபி அணி. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. ஆர்சிபி அணி 22 பந்துகள் மீதமிருக்கையில் 177 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆர்பிசி அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் ஹேசல்வுட், க்ருணால் பாண்டியா, சூயஸ் சர்மா மூவரையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும், இவர்கள் 3 பேரும் எடுத்த விக்கெட் ஆட்டத்தையே புரட்டிப்போட்டது. பேட்டிங்கில் அதிரடி வீரர் பில் சால்ட்(56), விராட் கோலி(59), பட்டிதார்(34) ஆகியோரின் ஆட்டம் வெற்றியை எளிதாக்கியது. இந்த ஆட்டத்தில் சுனில் நரைன் தனது பேட்டால் ஸ்டம்பை உரசிய போதிலும் கூட நடுவர்கள் அவுட் கொடுக்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்சிபி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக பதிவிட்டு வருகின்றனர். சுனில் நரைன் - ரஹானே அதிரடி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு டீகாக் ஆட்டமிழந்தபின் புதிய கேப்டன் ரஹானே, சுனில் நரைன் இருவரும் சேர்ந்து அதிரடியாக ஆடினர். ரஹானே திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிஎஸ்கேயில் இருந்தபோது எந்தமாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினாரோ அதை போன்ற ஆக்ரோஷம் நேற்றும் இருந்தது. ரஹானே, நரைன் இருக்கும் வரை பவர்ப்ளேயில் கொல்கத்தா ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்தது, 9.3 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. ரஹானே 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். சுனில் நரைனும் தனது பங்குக்கு சிக்ஸர், பவுண்டரி என ஆர்சிபி பந்துவீச்சை சிதறவிட்டார். 10 ஓவர்கள் வரை ஆட்டம் கொல்கத்தாவின் கைகளில்தான் இருந்தது. ஆனால், 10-வது ஓவரில் சுனில் நரேன், 11வது ஓவரில் ரஹானே ஆட்டமிழந்தபின் ஆட்டமே தலைகீழாகத் திரும்பியது. இருவரும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தனர். இந்த பார்ட்னர்ஷிப்பைத் தவிர்த்து வேறு எந்த பார்ட்னர்ஷிப்பும் கொல்கத்தாவில் அமையவில்லை. 107 ரன்களுக்கு ஒரு விக்கெட் என வலுவாக இருந்த கொல்கத்தா அணி, அடுத்த 67 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. 10-வது ஓவரில் இருந்து 16-வது ஓவர் வரை ஓவருக்கு ஒரு விக்கெட் வீதம் கொல்கத்தா இழந்தது தோல்விக்கு மிகப்பெரிய காரணம். அதிலும் நடுவரிசையில் வெங்கடேஷ் அய்யர்(6), ரிங்குசிங்(12), ரஸல்(4) என 3 முக்கிய பேட்டர்களும் ஏமாற்றியது, கொல்கத்தாவை தோல்வியில் தள்ளியது. ரஹானே, நரைன் இருந்தபோது, ஸ்கோர் 200 ரன்களைக் கடக்கும் என கணிக்கப்பட்டது, ஆனால், 174 ரன்களில் ஆட்டம் முடிந்தது. ரகுவன்ஷி 30 ரன்களை சேர்த்தார். ஹேசல்வுட் அபார பந்துவீச்சு ஹேசல்வுட் மீது நம்பிக்கை வைத்து ஆர்சிபி வாங்கியதற்கு அவர் கைங்கர்யம் செய்துவிட்டார். பேட்டர்கள் ஆட முடியாத பவுன்ஸ், லைன் லெத்தில் மாறாத பந்துவீச்சு என திக்கமுக்காட செய்தார். ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்ட ஹேசல்வுட், பவுன்சர்களை வீசி கொல்கத்தா பேட்டர்களை திணறவிட்டார். ஹேசல்வுட் தனது 4 ஓவர்களில் 16 டாட் பந்துகளை வீசியதுடன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். முதல் ஓவரிலேயே குயின்டன் டீகாக் தூக்கி, கடைசி ஓவரில் ஹர்சித் ராணா விக்கெட்டையும் ஹேசல்வுட் வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பேட்டர்கள் ஆடமுடியாத பவுன்ஸ், லைன் லெத்தில் மாறாத பந்துவீச்சு என திக்கமுக்காட செய்தார் ஹேசல்வுட் நரைன் பேட்டால் ஸ்டம்பை உரசிய போதும் அவுட் இல்லை என்று அறிவிக்கப்பட்டது ஏன்? சுனில் நரைன் - ரஹானே ஜோடி அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த வேளையில், 8-வது ஓவரை ராசிக் சலாம் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை ஆஃப் சைடுக்கு வெளியே, அதிக உயரத்தில் செல்ல அந்த பந்தை கள நடுவர் 'வைட்' என்று அறிவித்தார். அதேநேரத்தில், சுனில் நரைனின் பேட்டானது ஸ்டம்ப் மீது லேசாக உரசியதில் பெய்ல்ஸ்கள் கீழே விழுந்தன. இதையடுத்து, ஹிட் விக்கெட் முறையில் நரைனுக்கு ஆர்சிபி அணி அவுட் கேட்டது. ஆனால், அதனை நடுவர் நிராகரித்துவிட்டார். இதனால் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் அதிருப்தி அடைந்ததை அவரது முகம் வெளிக்காட்டியது. ஸ்டம்புகளை பேட்டால் உரசி பெய்ல்ஸ் கீழே விழுந்தும் கூட சுனில் நரைன் அவுட் இல்லை என்று நடுவர்கள் அறிவித்தது ஏன்? எம்சிசி விதி 35.1.1-ன் படி, ஒரு பவுலர் அந்த பந்தை வீசத் தொடங்கிய பிறகோ அல்லது பந்தை எதிர்கொள்ளும் போதோ பேட்டர் தனது உடலாலோ, பேட்டாலோ ஸ்டம்பை உரசி பெய்ல்ஸ் கீழே விழுமானால் அவர் ஹிட் விக்கெட் முறையில் அவுட் என்று அறிவிக்கப்படுவார். சுனில் நரைனைப் பொருத்தவரை, பந்து வைட் என்று அறிவிக்கப்பட்டு விட்டதால் அதனை விளையாடுவதற்குரிய சரியான பந்தாக கணக்கில் கொள்ள முடியாது. ஆகவே, ஹிட் விக்கெட் முறையில் அவுட் என்ற விதி இதற்குப் பொருந்தாது. பட மூலாதாரம்,GETTY IMAGES கொல்கத்தா தவறவிட்ட பில்சால்ட் தொடக்க ஆட்டக்காரர் பில்சால்ட்டை ஏலத்தில் தக்கவைக்க தவறிவிட்டோம் என்று கொல்கத்தா நிர்வாகம் நேற்று இவரின் அதிரடியைப் பார்த்த பின் உணர்ந்திருக்கும். கொல்கத்தா அணி கடந்த சீசனில் கோப்பையை வெல்ல பில்சால்ட் காரணமாக இருந்தார் என்று நம்பப்படும்போது, எப்படி இவரை ஏலத்தில் தக்கவைக்காமல் இருந்தது எனத் தெரியவில்லை. கொல்கத்தா அணியில் இருந்தபோது சால்ட்டின் ஸ்ட்ரைக் ரேட் 185, அவரின் சராசரி 58 ஆக இருந்தது. இப்படிப்பட்ட வீரரை கொல்கத்தா தக்கவைக்காமல் தவறுசெய்துவிட்டதாக பலரும் கருதுகின்றனர். கொல்கத்தாவின் பந்துவீச்சை முதல் பந்திலிருந்து பில் சால்ட் வெளுத்து வாங்கினார். வேகப்பந்துவீச்சை துவம்சம் செய்கிறார் என வருண் சக்ரவர்த்தியை கொண்டு வந்தால் முதல் ஓவரிலேயே சிக்ஸர், பவுண்டரி என 20 ரன்களை விளாசி வருணை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். விராட் கோலியும் சிக்ஸர், பவுண்டரி என துவம்சம் செய்யவே பவர்ப்ளேயில் ஆர்சிபி அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் சேர்த்தது, 3.4 ஓவர்களில் 50 ரன்களையும் எட்டியது. அரோரா, ஜான்ஸன், ராணா என ஒருவரின் பந்துவீச்சையும் சால்ட் விடவில்லை. அதிரடியாகஆடிய சால்ட் 25 பந்துகளில் அரைசதம் எட்டினார். 36 பந்துகளில் 56 ரன்கள் (9பவுண்டரி, 2 சிக்ஸர்) சேர்த்திருந்த சால்ட், வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு கோலி, சால்ட் கூட்டணி 95 ரன்கள் சேர்த்தனர். தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட சென்னை கூட்டத்தில் தீர்மானம் ஏன்? - முந்தைய நிலைப்பாட்டில் மாற்றமா?22 மார்ச் 2025 சுனிதா வில்லியம்ஸுக்கு 5$ தானா? - ஓவர் டைம் தொகை குறித்து டிரம்ப் கூறியது என்ன?22 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES விராட் விளாசல் விராட் கோலி கடந்த இரு ஐபிஎல் சீசன்களிலும் 500 ரன்களுக்கு மேல் குவித்து சிறப்பாக ஆடினாலும் அவரின் ஸ்ட்ரைக் ரேட் மீது தொடர்ந்து விமர்சனம் இருந்தது. அடித்து ஆட வேண்டிய இடத்தில் ஆடாமல், மெதுவாக பேட் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது, ஸ்ட்ரைக் ரேட்டும் கடந்த இரு சீசன்களில் பெரிதாக இல்லை. ஆனால், இந்த சீசனுக்கு கோலி தீர்மானத்துடனே களத்துக்கு வந்துள்ளார் எனத் தெரிந்தது. வைவப் அரோரா வீசிய ஓவரில் கோலி சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார். அதன்பின் ஸ்பென்சர் ஜான்ஸன் வீசிய ஓவரில் ஸ்ட்ரைட் திசையிலும், லாங்ஆனிலும் இரு சிக்ஸர்களை கோலி பறக்கவிட்ட போது, கோலி ஏதோ தீர்மானத்துடன் வந்துவீட்டார் எனத் தெரிந்தது. அது மட்டுமல்லாமல் வருண் சக்ரவர்த்தி, நரேன் பந்துவீ்ச்சில் இரு ஸ்வீப் ஷாட்களில் பவுண்டரியும், ஒரு சிக்ஸரையும் கோலி விளாசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES "சேஸிங் மாஸ்டர்" என்று கோலியை அழைப்பதுண்டு அதற்கு ஏற்றார்போல் நேற்று ஆர்சிபி அணியை வழிநடத்தினார். இந்த முறையாவது ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல வைக்க வேண்டும் என்ற தீர்மானம் கோலியின் ஆட்டத்தில் தெரிந்தது, 30 பந்துகளில் அரைசதம் அடித்த கோலி, 36 பந்துகளில் 56 ரன்களுடன்(4 பவுண்டரி, 3 சிக்ஸர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் 163 ஸ்ட்ரைக் ரேட்டுடன் களத்தில் இருந்தார். கொல்கத்தா அணியைப் பொருத்தவரை, பந்துவீச்சில் நரைன், வருண் பந்துவீச்சுக்கு ஏற்றபடி எதிரணி பேட்டர்கள் நன்கு வியூகம் அமைத்து வந்ததை கொல்கத்தா அணி எதிர்பார்க்கவில்லை. ஆந்த்ரே ரஸலுக்கு கேப்டன் ரஹானே ஒரு ஓவர் கூட வழங்கவில்லை. வைவப் அரோரா, ஜான்ஸன் இருவரும் சேர்ந்து 5 ஓவர்கள் வீசி 73 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினர் ஒவருக்கு 13 ரன்கள் வீதம் வாரி வழங்கினர். கோவையில் அடுத்தடுத்து 2 சட்டவிரோத குழந்தை தத்து சம்பவங்கள் - 15 பேர் கைது; என்ன நடந்தது?22 மார்ச் 2025 தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஸ்டாலின் நடத்திய கூட்டம் - தலைவர்கள் பேசியது என்ன?22 மார்ச் 2025 திருப்புமுனை நாயகன் இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகன் விருது க்ருணால் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது. 4 ஓவர்கள் 29 ரன்கள் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை க்ருணால் பாண்டியா வீழ்த்தினார். முதல் ஓவரில் 15 ரன்கள் வழங்கிய க்ருணால் பாண்டியா மனம் தளரவில்லை, நெருக்கடியாகப் பந்துவீசி அடுத்த 3 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்த 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா். கொல்கத்தா நடுவரிசையில் வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ரஹானே என முக்கியமான 3 விக்கெட்டுகளை வெளியேற்றி திருப்புமுனை ஆளித்தது க்ருணால் பாண்டியாதான். க்ருணால் பாண்டியா எடுத்துக் கொடுத்த இந்த 3 விக்கெட் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் ஆர்சிபியின் கரங்களில் ஒப்படைத்தது.11வது ஓவரில் ரஹானே, 13-வது ஓவரில் வெங்கடேஷ், 15-வது ஓவரில் ரிங்கு சிங் என க்ருணால் பாண்டியா தனது கடைசி ஒவ்வொரு ஓவரிலும் ஒரு விக்கெட்டைச் சாய்த்து திருப்புமுனை ஏற்படுத்தினார். ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 107 ரன்களுக்கு ஒரு விக்கெட் என வலுவாக இருந்து, 200 ரன்களுக்கு மேல் ஸ்கோரை எட்டும் எனக் எதிர்பார்க்கப்பட்டது. ரஹானேவும், சுனில் நரைனும் சேர்ந்து ஆர்சிபி பந்துவீச்சை வறுத்து எடுத்தனர். முதல் 10 ஓவர்கள்வரை கொல்கத்தா கையில் இருந்த ஆட்டம் கடைசி 10 ஓவர்களில் தலைகீழாக மாறியது. க்ருணால் பாண்டியாவின் பந்துவீச்சில் கொல்கத்தா சிக்கியதையடுத்து, ஆட்டம் மொத்தமும் ஆர்சிபியின் பக்கம் சென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆட்டநாயகன் விருது க்ருணால் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது க்ருணால் பாண்டியா ஐபிஎல் டி20 தொடரில் "அன்டர்ரேட்டட்" பந்துவீச்சாளராகவே பார்க்கப்பட்டுள்ளார். இடதுகை சுழற்பந்துவீச்சாளரான க்ருணால் பாண்டியா பந்துவீச்சில் பெரிதாக டர்ன் இருக்காது என்பது உண்மைதான், ஆனால், பேட்டர்களை எவ்வாறு விளையாட விடாமல் செய்து பந்துவீசுவது என்பதை க்ருணால் நன்கு தெரிந்தவர். இவரின் பந்துவீச்சை கிராஸ்பேட் போட்டு அடிப்பது, இறங்கி வந்து தூக்கி அடிப்பதை பேட்டர்கள் செய்வது ஆபத்தானது. ஏனென்றால் க்ருணால் பாண்டியா பந்துகள் பெரும்பாலும் ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் என பிளாட்டாகவே வரும். இதில் சிறிய தவறு பேட்டர்கள் செய்தால்கூட விக்கெட்டை இழக்க நேரிடும். இந்த ஆட்டத்திலும் ரூ.23 கோடி வீரர் வெங்கடேஷ், ரூ.13 கோடி வீரர் ரிங்கு சிங் இருவரும் பந்தை இன்கட் செய்ய முயன்று போல்டாயினர். க்ருணால் பாண்டியாவை ரூ.5.75 கோடிக்கு வாங்கியது தகும் என நிரூபித்துவிட்டார். சூயஷ் சர்மா தொடக்கத்தில் ரன்களை வாரி வழங்கினாலும் அவருக்கு ஓவர் மறுக்கப்படவில்லை. ஆனால், இக்கட்டான நேரத்தில் லெக் ஸ்பின் மூலம் ரஸல் விக்கெட்டை வீழ்த்தி கொல்கத்தா அணியின் நம்பிக்கையை உடைத்தார் சூயஸ் ஷர்மா. பட்டிதாருக்கு முதல் வெற்றி ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல்முறையாக கேப்டன் பொறுப்பேற்ற பட்டிதாருக்கு அணியின் வீரர்கள் சேர்ந்து முதல் வெற்றியை பரிசளித்துள்ளார்கள் என்றுதான் கூற வேண்டும். புதிய கேப்டன்ஷி, புதிய வீரர்கள் சேர்ந்து வெற்றியை எளிதாக்கினர். மும்பை இந்தியன்சுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸின் துருப்புச்சீட்டு யார்? ஐபிஎல்: பந்தில் எச்சில் தடவ தடை நீக்கப்பட்டதை பவுலர்கள் வரவேற்பது ஏன்? சிஎஸ்கே ஆட்டங்கள் எப்போது? கேப்டன்கள், புதிய விதிகள் உள்பட ஐபிஎல் பற்றிய முழு விவரம் 4 தலைமைகளுடன் களமிறங்கும் மும்பை அணி - பல கேப்டன்கள் பலமா? ஹர்திக் பாண்ட்யாவுக்கு சிக்கலா? பட மூலாதாரம்,GETTY IMAGES பேட்டிங்கில் கேப்டனாக தன்னுடைய பணியை சிறப்பாகச் செய்தார் பட்டிதார். 16 பந்துகளில் 5 பவுண்டரி, ஒருசிக்ஸர் என 36 ரன்களில் சிறிய கேமியோ ஆடி வெற்றியை நெருங்கவைத்துவிட்டு சென்றார். விராட் கோலியுடன் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்து பட்டிதார் பிரிந்தார். 'வெற்றிக்கு காரணம் இவர்கள்தான்' முதல் வெற்றிக்குப் பின் ஆர்சிபி கேப்டன் ரஜப் பட்டிதார் கூறுகையில் " எனக்கு முதல் போட்டி என்பதால் அழுத்தம் இருந்தது ஆனால், சிறந்த நாளாக முடிந்தது. இதேபோல அடுத்தடுத்து இருக்கும் என நம்புகிறேன். சூயாஷ் குமார் ரன்கள் கொடுத்தாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்தோம். அந்த நம்பிக்கையை காப்பாற்றினார். க்ருணால் பந்துவீச்சு ஆட்டத்தை திருப்பிவிட்டது. இருவருக்கும்தான் வெற்றிக்கு முழுப்பங்கு இருக்கிறது. கேப்டன் கோலி எனக்கு தொடர்ந்து களத்தில் ஆதரவு அளித்தார் ஆலோசனை வழங்கினார் அவரிடம் இருந்த கற்று வருகிறேன்" எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx20znedp30o

தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற வளாகத்திற்குள் புதிய கட்டிடம்; - இன்று திறப்பதற்கு ஏற்பாடு

3 months 2 weeks ago
Published By: RAJEEBAN 23 MAR, 2025 | 10:27 AM தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற அந்த வளாகத்திற்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிட திறப்பு நடைபெறவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/209966

தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற வளாகத்திற்குள் புதிய கட்டிடம்; - இன்று திறப்பதற்கு ஏற்பாடு

3 months 2 weeks ago

Published By: RAJEEBAN

23 MAR, 2025 | 10:27 AM

image

தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற அந்த வளாகத்திற்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிட திறப்பு நடைபெறவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/209966

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
பார்த்தா, இப்ப ஒரு நாலஞ்சு பேர்தான் இதுக்குள்ள குதிரை ஓடுறம். எங்க மிச்ச எல்லோரும். எல்லாரையும் இதுக்குள்ள இறக்கினாத்தான் பம்பல் கூடும். பல வருடங்களாக இப்பிடியான அணியுடன்தான் அவர்கள் விளையாடுகிறார்கள். இதனால்தான் கோப்பையை அடிக்க கஷ்டப் படுகினமோ. இம்முறையாவது, நடக்குமா. பாவம் கோலி. அணி விசுவாசத்தினால், இதுக்குள்ளேயே மாட்டுப்பட்டு இருக்கிறார்.