| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 451 online users. » 0 Member(s) | 447 Guest(s) Applebot, Baidu, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,075
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,083
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,553
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,263
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,548
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,907
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,299
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,898
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,952
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,220
|
|
|
| பேராசிரியரின் மறைவு |
|
Posted by: kuruvikal - 08-10-2003, 08:04 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல்
- Replies (8)
|
 |
கிழக்குப்பல்கலைக்கழக முதலாவது, முன்னாள் துணை வேந்தரும்,பிரபல விலங்கியல் பேராசிரியரும்,பரீட்சைத் திணைக்களத்தில் விலங்கியல் வினாப்பத்திரத்தை ஒழுங்கமைத்தவரும்,பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு உறுப்பினரும், கல்வித் திட்டமிடல் அமுலாக்கல் பிரிவின் துணைத்தலைவருமான <b>K.D அருட்பிரகாசம் </b>அவர்கள் தனது 72வது வயதில் கடந்த வியாழனன்று இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்...!
இவர் கொழும்பு சென் தோமஸ் கல்லூரி,யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் காட்லிக் கல்லாரி பழைய மாணவராவார்.கொழும்புப் பல்கலைக்கழக விலங்கியல் பட்டதாரியான இவர் தனது பட்டப்பின் படிப்புக்களை லண்டன்,பெரிய பிரித்தானியாவில் பயின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது...!
தகவல் தமிழ் நெற்
அன்னாரின் பிரிவால் துயருறும் அவர் தம் குடும்பத்தினருக்கு விலங்கியல் தமிழ் மாணவர்கள் என்ற வகையில் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அவருக்கு எமது கண்ணீர்ப் பூக்களை காணிக்கையாக்கி நிற்கின்றோம்..!
|
|
|
| சிறுநீரக கற்கள். |
|
Posted by: Guest - 08-09-2003, 11:52 AM - Forum: மருத்துவம்
- Replies (7)
|
 |
வணக்கம்
சிறுநீரகங்களில் ஏற்படும் கற்களுக்கு கருணைக்கிழற்கு, வாழைப்பூ போன்றவை குணப்படுத்தும் என்கிறார்கள்.
இதுபற்றி யாராவது தகவல் பரிமாற முடியுமா? வேறு ஏதாவது இயற்கை வழியுண்டா?.
கருணைக்கிழற்கு, வாழைப்பூ சமையல் குறிப்பு இருந்தால் தந்துதவவும்.
நன்றி
|
|
|
| ********* தணிக்கை |
|
Posted by: sethu - 08-08-2003, 12:42 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
http://www.sooriyan.com/latestnews/56.asp
இலங்கைக்குள் இந்திய மீனவர்கள்போண்று வரும் இந்திய இறானுவத்தினர் பிரச்சனைகள் குறித்து சுமூகமான முறையில் பேசித் தீர்த்துக்கொள்ள இரு நாட்டு அரசாங்கங்களும் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ தெரியப்படுத்தியுள்ளார்.
பருத்தித்துறைக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் வைத்து இந்திய இறானுவத்தினர்கள் பத்துப் பேர் பலவந்தமாக பருத்தித்துறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். கரைக்கு கொண்டு வந்தவர்கள் கொழும்பிலுள்ள இந்திய து}துவரக அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனக் கோரினர். பருத்தித்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றில் ; தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர். இத்தகவலை அறிந்த படை அதிகாரிகள் கண்காணிப்புக் குழுவினர் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவினர் அவ்விடத்துக்கு விரைந்தனர். இதனையடுத்து அனைவரும் இப்பிரதேச கிராம சேவை அதிகாரி மூலம் பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
உத்தியோகபுூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு விஞ்ஞான பொருளாதார மறுசீரமைப்புதுறை அமைச்சர் மிலிந்தமொறகொட புதுடில்லி பயணமாகியுள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டஸ், பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிராஜேஸ் மிஸ்ரா உட்படப் பலரைச் சந்தித்து அமைச்சர் மிலிந்த பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
|
|
|
| பெண்,குடும்பம், குழந்தைகள். பிரச்சினைகள் குறித்த ........ |
|
Posted by: Alai - 08-07-2003, 10:39 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (52)
|
 |
<span style='color:#910000'> <b>பெண்,குடும்பம், குழந்தைகள். பிரச்சினைகள் குறித்த
சில அவதானங்கள்</b>
காலத்தோடொத்து இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே மாறிக் கொண்டிருக்கிறது. நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ எமது சூழலும் மாறுகிறது. இந்த மாற்றங்களுக்கேற்ப யாவுமே தம்மை இசைவாக்கிக் கொள்கின்றன. மரம், செடி, கொடியிலிருந்து நுளம்பு கூட இதற்கு விதிவிலக்கல்ல. அப்படி இருக்கும் போது பெண்கள் எப்படி விதிவிலக்கா இருக்க முடியும்?
பெண்களைப் பொறுத்தவரையில் பல ஆண்டுகளாக வீடு, குடும்பம் சார்ந்த உழைப்பில் மட்டும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சமுதாய மாற்றங்களுடன் கால ஓட்டத்தில் அதற்கப்பாலும் பெண்ணின் உழைப்பு தேவைப்பட்டது. புராதன கம்ய10னிஸ சமுதாயத்திலிருந்து நிலப்பிரபுதுவ அமைப்பு மாறிய போதும் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. பெண்களது வாழ்கை முறையிலும் அது மாற்றங்களை ஏற்படுத்தியது.
பெண்கள் சமூக உற்பத்தியில் ஈடுபட்ட போதும் குடும்பம் சார்ந்த உழைப்பையும் அவளே செய்ய வேண்டிய நிலை இருந்தது. வேலைகள் சமனாக பங்கிடப்படாமல் இரட்டைச் சுமையுள் அவள் அழுந்தினாள். அவளது சமூக உற்பத்திக்கான உழைப்பு இரண்டாம் தரமானதாகவே கருதப்பட்டது. மீண்டும் குடும்பத்திற்கான அவளது உழைப்பே வலியுறுத்தப்பட்டது. விரும்பவும் பட்டது. இவ்விரட்டிப்பு வேலைப் பளுவிலிருந்து பெண் விடுபட முனையும் போது அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் போது குடும்பத்திற்கு வெளியே உலகைக் காணவிளையும் போது மீண்டும் மீண்டும் அடக்குமுறைக்குள் பெண்ணைத் தள்ளுவதற்கான எதிர்ப்புக் குரல்கள் உயர்வாக ஒலிப்பது இயல்பானதுதான். [size=18]ஏனெனில், மாற்றங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வசதிகளை அனுபவிக்க விரும்பும் அனைவருமே பெண் விடுதலை பெறுவதை விரும்பமாட்டார்கள்.</span>
பெரும்பாலான மக்கள் மத்தியில் பெண் வேலைக்குப் போவதால்தான் குடும்ப உறவு சீரழிகிறது. பிள்ளைகள் சீரழிந்து போகின்றனர். போதைவஸ்து பாவிக்கின்றனர். தீய பழக்க வழக்கங்களால் அழிந்து போகின்றனர். அவர்களுக்கு அன்பு கிடைப்பதில்லை. குடும்ப உறவு அழிகிறது. சமுதாயம் நலிந்து போகிறது என்ற கருத்துக்கள் பரவலாக மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. பெரும்பாலான மக்கள் உண்மையைத் தரிசிக்க மறுக்கின்றனர். அவர்களது கூற்றுக்களில் உண்மை இல்லாமல் இல்லை. பிரச்சினைகள் எம்முன் உள்ளன. ஆனால், இவர்கள் பெண்களுக்கு முன் வைக்கும் தீர்வுகள் தான் இன்றைய காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. பரிசீலிக்கப்பட வேண்டியவை.
பல ஆண்டுகளாக குடும்பம் சார்ந்த வேலைகளையே தனது கடமைகளாக செய்து வந்த பெண், சம அந்தஸ்துடன் குடும்பத்திற்கு அப்பால் உள்ள உலகத்திலுள்ளும் தனது பங்களிப்பை செய்யவிழையும் போது குடும்பம் பல பிரச்சினைகள் எதிர்நோக்கும். கால காலமாக பெண்களது கைகளில் இருந்த சமையறை, குடும்பம் என்பன மற்றவர்களுக்கும் பங்கிடப்படும் போது அவ்வேலைகளில் குறைபாடும், நேர்த்தியின்மையும் ஏற்படுவது தவிர்க்க முடியாது. அதுவே நிரந்தரமானதல்ல. அதற்கான தீர்வுகள் வைக்கப்பட்டு நடைமுறைக்கு வரும்போது பிரச்சினைகளும் மறைந்து போகும்.
<span style='color:#910000'>இப்பிரச்சினை ஒரு சமுதாயப் பிரச்சினை. தனிப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தின் பிரச்சினையாக கருத முடியாது. குடும்ப அமைப்புகளை பேணுவதற்கு பெண்களை மீண்டும் வீட்டில் மட்டும் உழைப்பை வழங்குவதற்காக அதாவது தனது குடும்பத்தைக் காக்கும் பணி பெண்ணினது அதற்காக அவள் வீட்டுக்குள் போயிருந்து வேலையைக் கவனிப்பதுதான் வழி என்ற கருத்தை ஒருபோதும் ஏற்க முடியாது.
உதாரணமக தற்காலக் குழந்தைகள் பால் குடித்து வளர்வதில்லை. தாய்மார் வேலைக்குப் போவதால் பால் கொடுப்பதில்லை. இதனால் பிள்ளைகள் நலிந்து போகின்றன. எனவே, பெண்கள் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்து பிள்ளை வளர்க்க வேண்டும் என்று 'புத்திஜீவி\" ஒருவர் பிரச்சினையையும் அதற்கான தீர்வையும் கூறியிருக்கின்றார்.
இதில் கூறப்பட்ட பிரச்சினையைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அதற்காக அவர் கூறும் தீர்வை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. [size=18]பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையென்றால் அது ஒரு தனிப் பெண்ணின் பிரச்சினை அல்ல. சமுதாயத்தின் பிரச்சினை. இதற்கான தீர்வை பரந்த மனத்துடன் ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். <b>பால் ஒரு பிள்ளைக்கு எவ்வளவு காலம் கொடுப்பது சிறந்தது என்பது அறியப்பட்டு அந்நாட்களை தாய்மாருக்கு விடுமுறையாக வழங்க வேண்டும்.</b></span>
நோர்வே, கனடா, டென்மார்க், சுவீடன் போன்ற நாடுகளில் பாலுட்டும் தாய்மார்களுக்கு, பாலுட்டும் நேரங்கள் என குறுகிய நேர விடுமுறைகள் அமுலில் உள்ளன. இப்பிரச்சினைக்கு மாற்றுத் திட்டங்களைப் பற்றி நாமும் யோசிப்பது அவசியம். பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு அதற்கான தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும். அதை விடுத்து கேலியாகவும் கிண்டலாகவும் குடும்பத்தைச் சீரழிக்கும் பாவிகளாகவும் பெண் சித்திரிக்கப்படுவது ஆணாதிக்கச் சிந்தனை முறையின் மேலாட்சியைக் காட்டுகிறது.
இன்றைய காலம் குடும்ப அமைப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது. கணவன், மனைவி, குழந்தைகள் என்ற குடும்ப அலகே பெண்களின் அடிமைத்தனத்துக்கும் அடக்குமுறைக்கும் காரணம் என்று தீவிரப் பெண்ணியவாதிகள் கருதுகின்றனர்.
சமுதாய உற்பத்தி முறைமை அதன் உறவுகள், கலாசார விழுமியங்கள். என்பவற்றிற்கேற்ப குடும்ப அமைப்பு காலத்துக்கு காலம் மாறி வந்துள்ளது. எமது இன்றைய சமூக முறைமை ஜம்பது அறுபதுகளில் இருந்ததைவிடவும் எவ்வளவோ மாறிவிட்டது. பெண்கள் சமுதாய வேலைகளில் பங்களிப்பதால் குடும்பம் சிதைவுறுவதாக கூறுவதானது மிகவும் தவறான கருத்தியல்பு ஆகும். குடும்பம் பற்றிய கோட்பாடுகள் முன்னைய சமூக வாழ்வு முறைக்கேற்ப இயல்பாக்கம் அடைந்தாக இருப்பதால் இன்றை வாழ்வு முறைக்கேற்ப அவை தம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. தகவமைத்துக் கொள்ளும் வரையான காலத்தில் குடும்பம் சீரழிந்ததாகப்படுகிறது. இவை சிதைவுகளல்ல. மாறாக அமைப்பு புதிய நிலைக்கு ஏற்ப மாற்றுருப் பெரும் போக்கில் ஏற்படும் உடைவுகள் அல்ல, வளர்ச்சிகள் என்றே கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் வளர்ச்சியைக்கூட ஒரு பயன் விளைவுள்ள வளர்ச்சியாக மாற்றுவதில் எமது பங்களிப்பை வழங்க முடியும்.
இன்றைய குடும்ப அமைப்பின் போக்கை விமர்சித்து, மாறாக வேறு வழிகளில் உருவாகி வருகின்றன. குடும்பம் இன்றைய ஜனநாயக சமூக அமைப்பினுள் உள்ள ஒரு வடிவம் என்பதால் குடும்பத்தில் கணவன், மனைவி குழந்தைகளுக்கிடையிலான உறவினையும் ஒரு ஜனநாயகப் பிரச்சினையாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்று மாக்ஸியப் பெண்ணிலைவாதிகள் ஒரு பிரிவினர் கருதுகின்றனர். 'புதிய ஜனநாயகத்தை" சீனாவில் அறிமுகப்படுத்துகையில் குடும்ப வேலைப் பிரிவினை மற்றும் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான உறவில் சமத்துவம் என்பவற்றைப் பேணுவது பற்றிக் குறிப்பி;ட்டார். 'ஜனநாயக ப10ர்வமான" அடிப்படையில் குடும்பம் அமைதி காணமுடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்
இன்னொரு சாரார் குடும்பம் என்னும் வழமையான முறைகளை மீறி, ஆணும் பெண்ணும் தம்மால் சேர்ந்து வாழ முடியும் என்று விரும்பும்போது எத்தகையா சம்பிரதாய பூர்வமான திருமண முறைகளுமற்ற புரிந்துணர்வு, சமத்துவம் என்ற அடிப்படையில் 'சேர்ந்து வாழல்" (Living to gether) என்ற முறைமையினை மாற்றதாக் கருதுகின்றனர்.
எவ்வாறாயினும் சமூகத்தில் பெண்களின் சம உரிமை, சம அந்தஸ்து என்ற விடயங்கள் அக்கறை இன்றி பெண்ணிலைவாதம் பற்றித் திறந்த மனதுடன் ஆராய யார் மறுத்தாலும் குடும்பம் பற்றிய கேள்விகள் எழுதப்பட்டுத்தான் வருகின்றன. காலச் சக்கரம் தனது பாதையில் நகர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அதைத் தடுப்பது என்பது சூரியனை கைகளால் பொத்த நினைப்பது போலத்தான்!. எனவே இவ்வாறான மாற்று அமைப்புகள் அல்லது மாற்று வழிமுறைகள் பற்றிய கணிப்பீட்டை நிதானமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆகவே, சமுதாயம் தொடர்பான புதிய சிந்தனைகளுக்கு வழிகோலும், வாழ்வுக்கும் அர்த்தம் சேர்ப்பதாக அமையும்.
நன்றி தினக்குரல்.
|
|
|
| போராளி |
|
Posted by: sethu - 08-07-2003, 12:48 PM - Forum: தமிழீழம்
- Replies (20)
|
 |
<img src='http://www.tamilaustralian.com/eelamurasu/news/09_444/evtu_ltcolappaiyaa.gif' border='0' alt='user posted image'>
|
|
|
| சலன்ஞ்... ஏலுமெண்டால் சொல்லிப் பாருங்கோ..?! |
|
Posted by: sOliyAn - 08-05-2003, 05:29 PM - Forum: புலம்
- Replies (33)
|
 |
ஏதோ தமிழன் உலகை ஆண்டானாம்.. தமிழன் ஒருகாலத்திலை நாகரீகத்திலை சிறந்து விளங்கேக்கை.. வெள்ளைக்காரன் தேம்ஸ் நதியோரத்திலை உயிரோடை மீனைப் பிடிச்சு திண்டானாம்.. கேக்க என்னவோ நல்லாத்தானிருக்கு... இப்ப தமிழன் என்ன செய்கிறான்.. ஒவ்வொரு நாட்டுகாரனும் சாப்பாட்டு விசயத்திலைகூட புதுசு புதுசா கண்டுபிடிக்க.. இங்கை இடியப்பமும் புட்டும் தோசையும்தான்.. எதை எடுத்தாலும் ஒவ்வாருநாளும் ஒவ்வொருவிதமாய் மாறுது... ஆனால் தமிழினத்தில்.. மற்றவங்களை உல்டா செய்யுறதுமட்டுந்தான் வேகமாய் வளருது.. மற்றும்படி தானாக எதையாவது சாதித்து சாதனை படைத்தானா.. அப்படி எங்காவது நடந்திருந்தால் கூறமுடியுமா? சாலன்ஞ்!!!!!!!!!
|
|
|
| NEWS |
|
Posted by: sethu - 08-04-2003, 06:24 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (26)
|
 |
சிங்கள அரசியல் வாதிகள் எங்கள் குருதி மேல் நாடகமா? எங்கள் ஆயுதங்களை தெற்குக்கு எதிராக திருப்புவோம்
முதுகெலும்பில்லாத சிங்கள அரசியல் வாதிகள் இன்னும் எங்கள் குருதியின் மேல் நாடகம் நடித்துக் கொண்டிருந்தால் எமது ஆயுதங்களை தெற்கு எதிராகத் திரும்புவோம். இவ்வாறு கோரும் துண்டுப்பிரசுரம் ஒன்றை 'இலங்கை இராணுவ வீரர்களின் குரல்" என்னும் அமைப்பு சகல சிறிலங்கா படை முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் அனுப்பிவைத்துள்ளது.
'நாங்கள் இன்னும் என்ன இங்கு செய்து கொண்டிருக்கிறோம்" எனும் தலைப்பில் சிங்கள் மொழியில் அச்சிடப்பட்ட இத்துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
நாங்கள் யார்? இன்னும் என்ன செய்கின்றோம்? எங்கள் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த திகதியிலிருந்து தமிழினப் பிரச்சினை தொடர்ந்து கொண்டுடிருப்பதை சரித்திரம் கூறுகிறது. ஆனால் அன்றிலிருந்து எமது நாட்டை ஆளும் சிங்கள இனத்தவர் இந்த இனப்பிரச்சினைக்கு கொடுத்த பரிகாரம் என்ன? அந்த அளவிற்கு புத்தி ஜீவிகள் எமது ஆட்சியில் இல்லாமல் போனர்கள். அவர்கள் வாய்வழியாகப் பேசிய இனவாதம் ஒன்றைத்தான்.
அன்றிலிருந்து இன்று வரை இருந்த ஆட்சியாளர்கள் செய்ததது தமிழ் மக்கள் சிங்கள இனத்தினருக்கு எதிராக வைராக்கியத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுமல்லாமல் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கெதிராக மற்றைய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இனத்துஷேத்தைத் து}ண்டும் கோஷங்களையும் மக்களைத் து}ண்டிவிடும் அவர்களின் முயற்சிகளை குழி தோண்டியும் புதைத்தனர்.
அதன் பிரதி பலன் இன்று இனப்பிரச்சினைக்கு எதிரான யுத்தத்தை தமிழ் இளைஞர்கள் ஆரம்பித்து 20 வருடங்களாகின்றன. அன்றிலிருந்து இன்றுவரை அவர்களின் உரிமைகளுக்காக இரத்தம் சிந்தியுள்ளனர். அதேபோல் நாமும் அக்காலப் பகுதியில் எமது முதுகெலும்பற்ற ஆட்சியாளர்களின் ஆட்சிப் பீடங்களைக் கைப்பற்றி அவர்களின் ஆட்சியை நிரந்தரமாக்குவதற்கு இரத்தம் சிந்தி எமது இளமைகளைத் தொலைத்து விட்டோம். தமிழ் இளைஞனோ அல்லது சிங்கள இளைஞரோ எந்த அப்பாவி இளைஞர்களின் குருதியைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. அவர்களுக்குத் தேவை எமது குருதியில் நடந்து நடமாடுவதற்கும், சொர்க்க, சுகபோகத்தை அனுபவிப்பதற்குமாகும்.
எமது ஆட்சியாளர்களிடம் இருந்து அவர்கள் எதிர்பார்த்த உரிமைகள் கிடைக்காததால் மீளவும் ஒரு யுத்தத்தை ஆரம்பித்து மீண்டும் குருதியாறு ஓடச் செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 'நாங்கள் இப்போது அவர்களிடம் கூறுகின்றோம் ஆயுதத்தை கைவிடுங்கள் நீங்கள் கேட்பதை தருகிறோம்" என்று ஆனால் அவர்கள் கூறுகின்றார்கள் 'நாங்கள் கேட்பதைத் தாருங்கள் ஆயுதத்தை கைவிடுகிறோம"; என்று ஆரம்ப பிழை விட்டவர்கள் சிங்களத் தலைவர்கள் தான். ஆகையால் இனி எந்தப் பிரச்சினை சரியானது முதலாவதாக யுத்தத்தை தொடங்கியவர் யார்? என்ற கேல்விகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தாக்கிவிட்டது. இனியாவது வன்முறைகள், இனத்துஷேம், பாதையால் நடமாடும் பாதசாரிகளுக்கு இடையுூறு விளைவித்தல், இனத்துவேசமான நடவடிக்கைகள், பதவியாசை இவைகளை எதிர்கால எமது குழந்தைச் சமுதாயத்திற்கும் புகட்டி தங்களுடைய பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள இருக்கும் எமது முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகளுக்கு இன்னும் எங்கள் குருதியின் மேல் நாடகம் நடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களின் பதவிகளைக் காப்பாற்றுதவற்கு துணைபோவதா? இல்லாவிடின் இவ்வளவு காலமும் வடக்கிற்கெதிராக திரும்பியிருந்த எமது ஆயுதங்களை தெற்குக்கு எதிராக திரும்பி இப்பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு காண்பதா? என்ற ஒரு திர்மானம் எடுக்கும் நிலைக்கு நாங்கள் வந்திருக்கின்றோம்.
இன்னும் இன்னும் இவர்கள் எம்மை பைத்தியக்காரர்கள் ஆக்கினால் எமது ஆயுதங்களைத் தெற்குக்கு எதிராகத் திருப்புவோம். இதிலிருக்கும் 10 பிரதிகளையும் பத்துப் பேருக்கும் கொடுக்கவும் .
|
|
|
|