![]() |
|
பெண்,குடும்பம், குழந்தைகள். பிரச்சினைகள் குறித்த ........ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: பெண்,குடும்பம், குழந்தைகள். பிரச்சினைகள் குறித்த ........ (/showthread.php?tid=8244) |
பெண்,குடும்பம், குழந்த - Alai - 08-07-2003 <span style='color:#910000'> <b>பெண்,குடும்பம், குழந்தைகள். பிரச்சினைகள் குறித்த சில அவதானங்கள்</b> காலத்தோடொத்து இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே மாறிக் கொண்டிருக்கிறது. நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ எமது சூழலும் மாறுகிறது. இந்த மாற்றங்களுக்கேற்ப யாவுமே தம்மை இசைவாக்கிக் கொள்கின்றன. மரம், செடி, கொடியிலிருந்து நுளம்பு கூட இதற்கு விதிவிலக்கல்ல. அப்படி இருக்கும் போது பெண்கள் எப்படி விதிவிலக்கா இருக்க முடியும்? பெண்களைப் பொறுத்தவரையில் பல ஆண்டுகளாக வீடு, குடும்பம் சார்ந்த உழைப்பில் மட்டும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சமுதாய மாற்றங்களுடன் கால ஓட்டத்தில் அதற்கப்பாலும் பெண்ணின் உழைப்பு தேவைப்பட்டது. புராதன கம்ய10னிஸ சமுதாயத்திலிருந்து நிலப்பிரபுதுவ அமைப்பு மாறிய போதும் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. பெண்களது வாழ்கை முறையிலும் அது மாற்றங்களை ஏற்படுத்தியது. பெண்கள் சமூக உற்பத்தியில் ஈடுபட்ட போதும் குடும்பம் சார்ந்த உழைப்பையும் அவளே செய்ய வேண்டிய நிலை இருந்தது. வேலைகள் சமனாக பங்கிடப்படாமல் இரட்டைச் சுமையுள் அவள் அழுந்தினாள். அவளது சமூக உற்பத்திக்கான உழைப்பு இரண்டாம் தரமானதாகவே கருதப்பட்டது. மீண்டும் குடும்பத்திற்கான அவளது உழைப்பே வலியுறுத்தப்பட்டது. விரும்பவும் பட்டது. இவ்விரட்டிப்பு வேலைப் பளுவிலிருந்து பெண் விடுபட முனையும் போது அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் போது குடும்பத்திற்கு வெளியே உலகைக் காணவிளையும் போது மீண்டும் மீண்டும் அடக்குமுறைக்குள் பெண்ணைத் தள்ளுவதற்கான எதிர்ப்புக் குரல்கள் உயர்வாக ஒலிப்பது இயல்பானதுதான். [size=18]ஏனெனில், மாற்றங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வசதிகளை அனுபவிக்க விரும்பும் அனைவருமே பெண் விடுதலை பெறுவதை விரும்பமாட்டார்கள்.</span> பெரும்பாலான மக்கள் மத்தியில் பெண் வேலைக்குப் போவதால்தான் குடும்ப உறவு சீரழிகிறது. பிள்ளைகள் சீரழிந்து போகின்றனர். போதைவஸ்து பாவிக்கின்றனர். தீய பழக்க வழக்கங்களால் அழிந்து போகின்றனர். அவர்களுக்கு அன்பு கிடைப்பதில்லை. குடும்ப உறவு அழிகிறது. சமுதாயம் நலிந்து போகிறது என்ற கருத்துக்கள் பரவலாக மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. பெரும்பாலான மக்கள் உண்மையைத் தரிசிக்க மறுக்கின்றனர். அவர்களது கூற்றுக்களில் உண்மை இல்லாமல் இல்லை. பிரச்சினைகள் எம்முன் உள்ளன. ஆனால், இவர்கள் பெண்களுக்கு முன் வைக்கும் தீர்வுகள் தான் இன்றைய காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. பரிசீலிக்கப்பட வேண்டியவை. பல ஆண்டுகளாக குடும்பம் சார்ந்த வேலைகளையே தனது கடமைகளாக செய்து வந்த பெண், சம அந்தஸ்துடன் குடும்பத்திற்கு அப்பால் உள்ள உலகத்திலுள்ளும் தனது பங்களிப்பை செய்யவிழையும் போது குடும்பம் பல பிரச்சினைகள் எதிர்நோக்கும். கால காலமாக பெண்களது கைகளில் இருந்த சமையறை, குடும்பம் என்பன மற்றவர்களுக்கும் பங்கிடப்படும் போது அவ்வேலைகளில் குறைபாடும், நேர்த்தியின்மையும் ஏற்படுவது தவிர்க்க முடியாது. அதுவே நிரந்தரமானதல்ல. அதற்கான தீர்வுகள் வைக்கப்பட்டு நடைமுறைக்கு வரும்போது பிரச்சினைகளும் மறைந்து போகும். <span style='color:#910000'>இப்பிரச்சினை ஒரு சமுதாயப் பிரச்சினை. தனிப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தின் பிரச்சினையாக கருத முடியாது. குடும்ப அமைப்புகளை பேணுவதற்கு பெண்களை மீண்டும் வீட்டில் மட்டும் உழைப்பை வழங்குவதற்காக அதாவது தனது குடும்பத்தைக் காக்கும் பணி பெண்ணினது அதற்காக அவள் வீட்டுக்குள் போயிருந்து வேலையைக் கவனிப்பதுதான் வழி என்ற கருத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. உதாரணமக தற்காலக் குழந்தைகள் பால் குடித்து வளர்வதில்லை. தாய்மார் வேலைக்குப் போவதால் பால் கொடுப்பதில்லை. இதனால் பிள்ளைகள் நலிந்து போகின்றன. எனவே, பெண்கள் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்து பிள்ளை வளர்க்க வேண்டும் என்று 'புத்திஜீவி\" ஒருவர் பிரச்சினையையும் அதற்கான தீர்வையும் கூறியிருக்கின்றார். இதில் கூறப்பட்ட பிரச்சினையைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அதற்காக அவர் கூறும் தீர்வை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. [size=18]பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையென்றால் அது ஒரு தனிப் பெண்ணின் பிரச்சினை அல்ல. சமுதாயத்தின் பிரச்சினை. இதற்கான தீர்வை பரந்த மனத்துடன் ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். <b>பால் ஒரு பிள்ளைக்கு எவ்வளவு காலம் கொடுப்பது சிறந்தது என்பது அறியப்பட்டு அந்நாட்களை தாய்மாருக்கு விடுமுறையாக வழங்க வேண்டும்.</b></span> நோர்வே, கனடா, டென்மார்க், சுவீடன் போன்ற நாடுகளில் பாலுட்டும் தாய்மார்களுக்கு, பாலுட்டும் நேரங்கள் என குறுகிய நேர விடுமுறைகள் அமுலில் உள்ளன. இப்பிரச்சினைக்கு மாற்றுத் திட்டங்களைப் பற்றி நாமும் யோசிப்பது அவசியம். பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு அதற்கான தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும். அதை விடுத்து கேலியாகவும் கிண்டலாகவும் குடும்பத்தைச் சீரழிக்கும் பாவிகளாகவும் பெண் சித்திரிக்கப்படுவது ஆணாதிக்கச் சிந்தனை முறையின் மேலாட்சியைக் காட்டுகிறது. இன்றைய காலம் குடும்ப அமைப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது. கணவன், மனைவி, குழந்தைகள் என்ற குடும்ப அலகே பெண்களின் அடிமைத்தனத்துக்கும் அடக்குமுறைக்கும் காரணம் என்று தீவிரப் பெண்ணியவாதிகள் கருதுகின்றனர். சமுதாய உற்பத்தி முறைமை அதன் உறவுகள், கலாசார விழுமியங்கள். என்பவற்றிற்கேற்ப குடும்ப அமைப்பு காலத்துக்கு காலம் மாறி வந்துள்ளது. எமது இன்றைய சமூக முறைமை ஜம்பது அறுபதுகளில் இருந்ததைவிடவும் எவ்வளவோ மாறிவிட்டது. பெண்கள் சமுதாய வேலைகளில் பங்களிப்பதால் குடும்பம் சிதைவுறுவதாக கூறுவதானது மிகவும் தவறான கருத்தியல்பு ஆகும். குடும்பம் பற்றிய கோட்பாடுகள் முன்னைய சமூக வாழ்வு முறைக்கேற்ப இயல்பாக்கம் அடைந்தாக இருப்பதால் இன்றை வாழ்வு முறைக்கேற்ப அவை தம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. தகவமைத்துக் கொள்ளும் வரையான காலத்தில் குடும்பம் சீரழிந்ததாகப்படுகிறது. இவை சிதைவுகளல்ல. மாறாக அமைப்பு புதிய நிலைக்கு ஏற்ப மாற்றுருப் பெரும் போக்கில் ஏற்படும் உடைவுகள் அல்ல, வளர்ச்சிகள் என்றே கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் வளர்ச்சியைக்கூட ஒரு பயன் விளைவுள்ள வளர்ச்சியாக மாற்றுவதில் எமது பங்களிப்பை வழங்க முடியும். இன்றைய குடும்ப அமைப்பின் போக்கை விமர்சித்து, மாறாக வேறு வழிகளில் உருவாகி வருகின்றன. குடும்பம் இன்றைய ஜனநாயக சமூக அமைப்பினுள் உள்ள ஒரு வடிவம் என்பதால் குடும்பத்தில் கணவன், மனைவி குழந்தைகளுக்கிடையிலான உறவினையும் ஒரு ஜனநாயகப் பிரச்சினையாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்று மாக்ஸியப் பெண்ணிலைவாதிகள் ஒரு பிரிவினர் கருதுகின்றனர். 'புதிய ஜனநாயகத்தை" சீனாவில் அறிமுகப்படுத்துகையில் குடும்ப வேலைப் பிரிவினை மற்றும் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான உறவில் சமத்துவம் என்பவற்றைப் பேணுவது பற்றிக் குறிப்பி;ட்டார். 'ஜனநாயக ப10ர்வமான" அடிப்படையில் குடும்பம் அமைதி காணமுடியும் என்று அவர்கள் கருதுகின்றனர் இன்னொரு சாரார் குடும்பம் என்னும் வழமையான முறைகளை மீறி, ஆணும் பெண்ணும் தம்மால் சேர்ந்து வாழ முடியும் என்று விரும்பும்போது எத்தகையா சம்பிரதாய பூர்வமான திருமண முறைகளுமற்ற புரிந்துணர்வு, சமத்துவம் என்ற அடிப்படையில் 'சேர்ந்து வாழல்" (Living to gether) என்ற முறைமையினை மாற்றதாக் கருதுகின்றனர். எவ்வாறாயினும் சமூகத்தில் பெண்களின் சம உரிமை, சம அந்தஸ்து என்ற விடயங்கள் அக்கறை இன்றி பெண்ணிலைவாதம் பற்றித் திறந்த மனதுடன் ஆராய யார் மறுத்தாலும் குடும்பம் பற்றிய கேள்விகள் எழுதப்பட்டுத்தான் வருகின்றன. காலச் சக்கரம் தனது பாதையில் நகர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அதைத் தடுப்பது என்பது சூரியனை கைகளால் பொத்த நினைப்பது போலத்தான்!. எனவே இவ்வாறான மாற்று அமைப்புகள் அல்லது மாற்று வழிமுறைகள் பற்றிய கணிப்பீட்டை நிதானமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆகவே, சமுதாயம் தொடர்பான புதிய சிந்தனைகளுக்கு வழிகோலும், வாழ்வுக்கும் அர்த்தம் சேர்ப்பதாக அமையும். நன்றி தினக்குரல். பலவீனமாகக் கருதப் பட் - Chandravathanaa - 08-18-2003 <span style='color:#7f0000'>பலவீனமாகக் கருதப் பட்ட பலங்கள் [size=9]வைத்திய கலாநிதி எழுமதி </span> அந்தக் காலத்தில் இருந்து 90 ஆண்டு காலப்பகுதிவரை பெண்ணியம் பற்றிய ஆய்வு நூல்களும், பொதுவான அபிப்பிராயங்களும் பெண்களுக்கு இரண்டாம் இடத்தையே ஒதுக்கியுள்ளன. ஆண்கள் வேலை செய்பவர்களாகவும், பெண்கள் வெறுமனே சமைப்பதும், படுக்கையப்பகிர்வதும்தான் என்ற ரீதியில் தொடர்ந்து சித்திரிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் இந்த நிலைப்பாடு இன்று மாறத் தொடங்கியுள்ளது. கணிசமான அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. இன்று பெண்கள் விமானம் ஓட்டுகின்றனர். விண்வெளிக்குச் செல்லுகின்றனர். களத்தில் ஆண்களுக்குச் சரிக்குச் சமனாக நின்று எதிரியை எதிர்த்துச் சமராடுகின்றனர். பெரிய தொழில் நிறுவனங்களை நிர்வகிக்கின்றனர். கல்லூரி முதல்வர்களாகவும், வைத்திய நிபுணர்களாகவும், கட்டிட பொறியிலாளர்களாகவும் திகழ்கின்றனர். மேலும் வயலில் ஆண்களுடன் சேர்ந்து வேலையைப் பங்கு போட்டுச் செய்கின்றனர். உடலைமப்புரீதியாகவும், உடற்றொழில்ரீதியாகவும் ஒரே வயதுடைய ஆண்பெண் இருபாலாரையும் ஒப்பிட்டுப்பார்க்கும் இடத்தில் உயரம், நிறை, பலம் ஆகியவற்றில், ஆண்கள் பெண்களைவிட கூடியவர்களாகவே உள்ளனர். மேலும் பெண்ணின் வாழ்க்கையில் பிரத்தியேகமாக ஏற்படுகின்ற உடற்றொழிலியல் மாற்றங்களான மாதவிடாய் வருதல், மகப்பேறு அடைதல் ஆகிய விடயங்களையும் பெண்களின் பலவீனங்களாகப் பார்க்கின்றனர். மேற்குறிப்பிட்ட இரண்டு காரணங்களையும் மனதில் நிறுத்திப் பெண்களை 2ம் இடத்தில் நிறுத்தியுள்ளனர். ஆனால் இக்காரணங்கள் அனைத்தும் பெண்களின் பலவீனம் அல்ல. அவை பலம் என்று வாதிடும் காலம் வந்துவிட்டது.. 1995ம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தில் ஓர் பரீட்சார்த்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் முன்பு பயிற்சி எதிலும் ஈடுபடாத 41 பெண்கள் (இதில் மாணவிகள், வழக்கறிஞர்கள், வியாபாரநிலைய ஊழியர்கள், ஆறுமாதகாலத்திற்கு முன்பு, மகப்பேறு அடைந்த தாய்மார்கள் போன்றோர் அடங்குகின்றனர்) யாவரும் ஐந்திலிருந்து ஆறுமாதகாலப் பயிற்சியில் 34 கிலோ கிராம் பாரத்தினை தோளில் சுமந்தபடி 3 கிலோமீற்றர் தூரம் ஓடுவதற்கும், 45 கிலோகிராம் எடையைச் சுமந்தபடி நிலத்தில் இருந்து எழும்புவதற்கும் கற்றுக் கொண்டனர். ஆனால் அவர்களைப் போன்ற தரத்தில் உள்ள ஆண்களினால் அப்படி முன்னேற முடியவில்லை என்பதனையும் அப்பாPட்சார்த்த ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும் 1964 தொடக்கம் 1995 வரையான காலப்பகுதியில் மரதன் ஓட்டத்தில் பெண்களின் சாதனை விகித உயர்வு 32 வீதமாகவும், ஆண்களின் விகித உயர்வு 4.5 வீதமாகவும் காணப்பட்டது. இதுவும் பெண்களின் பரிணாம வளர்ச்சியின் மாற்றத்தினை எடுத்துக் காட்டும் ஒரு சான்றாகும். இவ வாறு ஆய்வுகளும் பரீட்சார்த்த செயற்பாடுகளும், பெண்களின் பலத்தினை வெளிக்கொண்டு வந்திருக்கும் இவ வேளையில் பெண்களும் பல பரிணாம வளர்ச்சிகளைத் தம் செயற்பாடுகளுடாகக் காட்டிவருகின்றனர். எனினும் இன்றும்கூட எம் மத்தியில் பெண்களைப் பலவீனமானவர்களாகவும், இரண்டாந்தர நிலையிலுள்ளவர்களாகவும் பார்க்கின்ற நிலை காணப்படுகின்றது. இந்த நிலைமாற வேண்டுமாயின் முதலில் பெண்கள் தம்பலத்தினை அறிந்து வைத்திருக்க வேண்டும். அடுத்ததாக என்னென்ன விடயங்களை வைத்துப் பெண்களைப் பலவீனமாக எடை போடுகின்றனர் என்று அறிந்து அவை, ஏன் பலவீனமான விடயங்களாகக் கருதப்பட்டு வந்தன என்பதையும் நோக்க வேண்டும். மேலும் இவ விடயங்கள் யாவும், இன்று பலமானவையாகச் செயற்படுகின்றன என்ற விஞ்ஞானாரீதியான ஆய்வு உண்மையையும் அறிந்திருக்க வேண்டும். முதலாவதாக மதக் கோட்பாடுகள் பெரும்பாலும் பெண்ணை ஆணுக்குக் கீழ்ப்பட்டவள் என்றும் ஆணுக்கு அடிமையானவள் என்றும் சித்தரிக்கின்றன. சிவன், பிரம்மா, விஸ்ணு, முருகன், யேசு, அல்லா, புத்தர் எனக் கூறப்படும் தெய்வங்கள், மதத்தலைவர்கள், மதப்போதகர்கள் அனைவருமே ஆண்கள். ஆண்கள் தலையெடுத்த சமூக அமைப்பில் முதன்மையான தெய்வத்தையும், ஆண்களாகவே படைக்க முடிந்தது. இதனால் பெண்களின் மனதிலும் நினைவிலும் கருத்தியல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் நாம் தரம் குறைந்தவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்த முடிந்தது. இன்றும் மக்களிடையே பெரும் ஆதிக்கத்தைப் பெற்றுள்ள புராண இதிகாசக் கதைகளும் பெண்களை ஆண்களின் அடிமைகளாகவே படைக்கின்றன. உதாரணமாக பஞ்சபாண்டவர்கள் திரௌபதியைத் தம் மனைவியாகக் கொண்டிருந்தனர். ஆனால் அவளுக்கு அவர்களில் ஒருவரை மட்டும் கணவனாக ஏற்றுக் கொள்ளும் உரிமை கிடையாது. குழந்தைப்பருவத்தில் ஆணும் பெண்ணும், சரிசமமாக வளர்கின்றனர், வளர்க்கப்படுகின்றனர். ஆனால் பெண்கள் பூப்பெய்துகின்றபோது உடல், உள ரீதியாக பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை வருவதனால் சமூகம் அவளின் செய்ற்பாடுகளை சுதந்திரத்தினை மட்டுப்படுத்துகின்றது. இதன் ஒரு அங்கமாகவே அந்தக் காலத்தில் பெண் பூப்பெய்தினால் வீட்டை விட்டு சுதந்திரமாக நடமாட முடியாமல் தடுக்கப்பட்டிருக்கிறாள். அதன் உச்சக்கட்டமாக மாதவிடாய்க் காலத்தின்போது அவள் வாழும் வீட்டில் இருந்துகூட தூரத் தள்ளிவைக்கப்படுகின்றாள். எதுவித பணியுமின்றி வீட்டின் ஒரு மூலையில் கைதிபோல் அடைக்கப்பட்டிருக்கிறாள். இதற்கு குற்றம், துடக்கு என்ற சாட்டுக்களும், இரத்தப் போக்கு இருப்பதனால் ஓய்வு தேவை என்ற காரணமும் காட்டப்படுகின்றது. ஆனால் இன்று பெண்கள் மாதவிடாயின்போது நாளாந்தம் செய்து கொண்டு வந்த சகல பணிகளையும் இடைநிறுத்தாது, செய்கின்ற நிலையினைக் காண்கிறோம். இது எப்படி சாத்தியமானது என்பதனை விஞ்ஞானாரீதியாகப் பார்ப்போம். மாதவிடாய் மாதம் ஒரு முறை ஏற்படுகின்றபோது நான்கு அல்லது ஐந்து நாட்களிற்கு இரத்தப் போக்குக் காணப்படும். இது காயத்தின்போது ஏற்படுகின்ற குருதி இழப்புப் போல சடுதியாக ஏற்படுகின்ற குருதி இழப்பு அல்ல. ஓமோன்களின் செயற்பாட்டால் ஒரு மாதகாலமாகப் பருமன் தடித்து வழமைக்கு அதிகமாக குருதி விநியோகத்தைப் பெற்றிருந்த கருப்பை உட்சுவர் உடைந்து உதிர்வதனாலேயே இரத்தப் பெருக்கு ஏற்படுகின்றது. இதன்போது ஐந்து நாட்களுக்கும் சேர்த்து ஆகக் கூடுதலாக 300 மில்லிலீற்றர் இரத்தமே வெளியேறுகின்றது. எந்த ஒரு பெண்ணும் 18 வயதிற்கு மேல் 500 மில்லி லீற்றர் இரத்தத்தை உடலில் எதுவித பாதிப்பும் இன்றி இழக்கலாம் என்பது ஆதாரபூர்வமான உண்மையாகும். இந்த அடிப்படையில்தான் இரத்ததானம் மேற்கொள்ளப்படுகின்றது. இவ வாறு இரத்ததானம் செய்யப்படுகின்றபோது, உடலில் பல நன்மைகள் ஏற்படுகின்றன. இவ விழப்பிற்கு ஈடாக, புதிய இரத்தம் இரு கிழமைகளில் உருவாகி விடுகின்றது. இதனால் இரத்தத்தில் புதிய அணுக்கள் சேருகின்றன. இதேபோல் பெண்களும், மாதாமாதம் இரத்தத்தை வெளியேற்றுகின்றபோது அவ விரத்தம் இருகிழமைகளில் ஈடு செய்யப்பட்டுக் கொண்டே வருகின்றது. இதனால் உடல் புதுத்தெம்பு பெறுகின்றது. ஆகவே பெண்கள் மாதவிடாய் காலத்தின்போது ஓய்வெடுக்காமல் வேலை செய்யக்கூடிய உடல் உளபலம் உண்டு என்பதே உண்மையாகும். அடுத்ததாக மகப்பேற்றினை எடுத்துக் கொள்வோம். இங்கு பெண்ணானவள் ஒரு புதிய உயிரை பத்துமாதங்கள் தன்னகத்தே சுமந்து பிரசவ வேதனையைத் தாங்கி அவ வுயிரை வெளிக் கொணர்ந்து உலகிற்குத் தருகின்றாள். பின் இக்குழந்தையின் வளர்ப்புக்காக சிறுகாலம் தன் கடமையில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இக்காலத்தில்தான் ஆண் கடமையில் முன்சென்று உயருகின்றாhன். ஓர் உயிரைப் பிரசவிப்பது என்பது பெரிய கடமை. ஆண்களிற்குக் கிடைக்காத பெரும் பாக்கியம் பெண்களுக்குக் கிடைக்கின்றது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு பலவீனமாகப் பார்க்காது, பலமாகப் பார்க்க வேண்டும். மேலும் மாதவிடாய் நிற்றலையும் பெண்ணின் ஓர் பலவீனமான அறிகுறியாகப் பார்த்து வந்துள்ளனர். ஏனென்றால் மாதவிடாய் நிற்கின்றபோது ஓமோன்களின் சுரப்பு குறைவதனால் உடல் உள நோய்கள் ஏற்படுவதனால் அவர்கள் வேலை செய்வதற்குத் தகுதி இல்லாதவர்கள் என்று காரணம் காட்டி ஓய்வில் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆனால் இன்றைய உலகில் இதனைப் பல பெண்கள் பொய்யாக்கி உள்ளனர். மேலும் மாதவிடாய் நிறுத்தத்தின் பின்பு பெண்களின் ஆற்றல் பல மடங்காக அதிகரித்து உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதவர்க்கவியல் நிபுணர்களான அற்றின்சீல்மான், நான்சீரானர் ஆகியோர் 1970இல் பழ ங்குடி மக்கள் மத்தியில் மேற்கொண்ட பல ஆய்வுத்தரவுகளின்படி அங்கு அவர்களின் நாளாந்த உணவில் 70 வீதமான உணவினைப் பெண்கள் சேகரித்து வருகின்ற தாவர உணவும், 30 வீதமானது ஆண்கள் வேட்டையாடி வரும் மாமிச உணவும் பூர்த்தி செய்கின்றன என்று தெரியவந்துள்ளது. ஆனால் ஆண்கள் வேட்டைக்காரர்களாகவும், பெண் குகையில் இருந்து ஆண்களுக்கு அடிமை வேலை செய்வதாகவும், ஆதி மனித வரலாறுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதனை இன்றைய ஆய்வாளர்கள் நிராகரிக்கின்றனர். அவுஸ்திரேலியாவின் திவி இன பழங்குடி மக்களில் பெண்கள்தான் வேட்டைக்குச் செல்கின்றனர். அதேபோல் கொங்கோவில் அடர்ந்த காடுகளில் வசிக்கும் பழங்குடிமக்கள், தங்கள் வேட்டைப்பணியில் முழுக்குடும்பத்தினையும் ஈடுபடுத்துவதாக கிறிஸ்நைற் என்ற ஆய்வாளர் தெரிவிக்கின்றார். மேற்குலகச் சம்பிரதாயங்களின்படி வேட்டைக்குரிய தெய்வங்கள் யாவரும் பெண்களாகவே இருக்கின்றனர். இறுதியாக பெண்ணில் ஏற்படுகின்ற சில தவிர்க்க முடியாத உடற் தொழில் மாற்றங்களினால் அவள் கடமையில் பின்தங்கும்போது அதனைப் பலவீனமாகப் பார்க்கும் நிலைதான் அன்று இருந்துள்ளது. இன்று இதனைப் பலமாகப்பார்க்கும் காலம் தொடங்கிவிட்டது. இதற்குப் பெண்கள் அனைவரும் தம்மிடம் உள்ள பிற்போக்குச் சிந்தனைகளைக் களைந்து தம் ஆற்றல் திறனையும் முற்போக்குச் சிந்தனையையும் வளர்க்க வேண்டும். அத்துடன் அறிவியல்hPதியாகவும் சிந்தித்துச் செயற்பட வேண்டும். இவ வாறு செயற்படும் போது பெண்கள் ஆண்களிற்குச் சரிசமனான பலமுள்ளவர்களாகத் திகழ்வார்கள் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. நன்றி - எரிமலை - kuruvikal - 08-18-2003 பெண்களில் இமினோகிளோபின் அளவு கூடுதலாம்....அதென்ன இமினோகுளோபின்....மனிதனில் அதன் தொழில் என்ன,,,மயோகுளோபின்...கீமோகுளோபின் உண்டு அவை சக்தி உற்பத்திக்குத் தேவையான ஒட்சிசனை உடற்கலங்களை நோக்கி கொண்டு செல்கின்றன.....அதெனால் தான் ஆண்கள் என்றும் பலசாலிகளாக இருக்கின்றனர்...அதை எந்த பரிணாம வளர்சியும் பாதிக்க முடியாது....! ஒரு இனத்துள் பால் பிரிவுகளுக்குள் அதிக பரினாம வளர்ச்சி ஏற்பட அதிக வாய்ப்பு எந்த இனத்திலும் இல்லை....குறிப்பிட்ட ஆய்வாளர் எதை ஆதாரமாகக் கொண்டு இந்த முடிவைத்தந்தார்...அதை தயவு செய்து குறிப்பிடுங்கள்....! மூளையை எடுத்துக் கொண்டால் அதிக அளவு மூளைக் கனவளவும் நரம்புக்கலங்கள் (நியூரோன்கள்) என்பனவும் ஆண்களில் தான் அதிகம் இருப்பினும் ஒவ்வொருவருக்கும் ஆட்சியான பகுதியில் கலங்களின் எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வுகள் உண்டு....ஒட்டு மொத்தமாகக் கண்டால் ஆண்களில் தான் நரம்புக் கலங்கள் அதிகம்....! இன்னும் போனால் மனித உயிரியலையே மாற்றி எழுதுவீர்கள் போல் தெரிகிறது...தயவு செய்து விஞ்ஞானறீதியாகத் தகவல்கள், கட்டுரைகளை எழுதும் போது ஊகத்தை விட்டு ஆதாரத்துடன் எழுதவும்...நாம் எழுதியதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே களத்தில் தரப்பட்டுள்ளது....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- kuruvikal - 08-18-2003 பெண்கள் ஆண்களுக்கு சரி நிகர் பலமுள்ளவர்களாக வருவதென்பது உயிரியல் சாத்தியமற்ற ஏட்டுச் சுரக்காய் வாதம் என்பது மட்டும் யதார்த்தம்...உண்மை...! வேண்டுமென்றால் நீங்களும் ஆண்களில் உள்ள தனித்துவமான ஜீன்களை குளோனிங் செய்யுங்கள் விகாரப்பிறவிகளாகி சில சமயங்களில் அதை செய்யலாம்.....! நன்றி...! - kuruvikal - 08-18-2003 உலகில் குருதிச்சோகை நோய்க்கு ஆளகுபவர்கள் யார்...ஏன்....பெண்கள்...அதிக இரத்த இழப்பும் இரும்பு போன்ற கனியுப்புக்களின் உள்ளெடுத்தல் குறைவும்.....! இப்படியே உங்கள் ஊகங்களுக்குள் பல முரண்பாடுகளை தெளிவாகக் காட்ட முடியும்....தயவு செய்துபெண்கள் என்றும் எண்ணுவது போல் பொய்கள் புழுகுகளால் எதையும் சாதிக்கலாம் என்பதை மறந்து விடுங்கள் அது சிலவேளைகளில் உங்களுக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்தை வாங்கித்தரக் கூடும்....! - kuruvikal - 08-18-2003 மேலே எழுதியவற்றிற்கான திருத்தங்கள்... அதெனால்---அதனால் பரினாம--பரிணாம ஆளகுபவர்கள்--ஆளாகுபவர்கள் விஞ்ஞானறீதியான--விஞ்ஞானரீதியான மேலும் எழுத்துப் பிழைகள் காணப்படின் திருத்தி வாசிக்கவும் தவறுகளுக்கு வருதுகிறோம்! - Kanani - 08-18-2003 Quote:நன்றி - எரிமலை தாத்தா பெண் விடுதலைபற்றி சும்மா சொல்லுறார் என்று நினைச்சன்... தா தா தாத்தாாா.... - Mathivathanan - 08-18-2003 என்னடாப்பா.. என்ன நானேன் உதுக்குள்ளை.. முக்கியமானதொண்டு.. உங்களுக்கு பாரமானது து}க்க ஏலாதப்பா.. வலிமை காணாது.. துர்க்கக்கூடியவையிட்டை விட்டிடுங்கோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 08-18-2003 தாத்தா என்ன சொன்னனியள் பாக்கிறதுக்க ஒன்றையும் காணவில்லை.....ஏதாவது ஏடோகூடமாச் சொல்லுப் போட்டியளோ....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
- Chandravathanaa - 08-24-2003 விமர்சகர் <b>சுசீந்திரனும்</b> <span style='font-size:25pt;line-height:100%'>பெண் மொழியும் </span> - திலகபாமா - பாரதி இலக்கிய சங்கத்தில் (சிவகாசி) நடை பெற்ற இலக்கிய சந்திப்பில் ஜெர்மனியை சேர்ந்த இலக்கிய விமரிசகரான ந..சுசீந்திரன் அவர்கள் பெண் மொழி பற்றி ஆற்றிய உரையின் பதிவு. பெண் மீதான அடக்கு முறை ஒழிக்கப் பட வேண்டும் என்ற ஒரு கருத்தோட்டம் அல்லது விடயம் மேலெழுந்ததிற்குப் பின்னர் பெண்களுடைய , பெண் மொழியினுடைய தேவை உணரப் பட்டிருக்கலாம் அல்லது உணர்த்த வேண்டிய தேவை அறியப் பட்டிருக்கலாம் என்று நான் கருதுகின்றேன். <b>பெண் விடுதலை என்பது என்ன? பெண் விடுதலை ஏன் அவசியமா? அதை நாங்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும். எங்களுடைய ஆசிய சமூகங்களில் பெண்களின் நிலை எப்படி இருக்கின்றது. இப்படியான கேள்விகள் இருக்கின்றன.</b> முதலாவதாக சமூக அறிஞர்கள் எங்கள் சமூகத்தை நில பிரபுத்துவ சமூகங்கள் என்றும் , பின் தங்கிய சமூகம் என்றும் சொல்வார்கள். இப்படி பல்வேறு விசயங்கள் இருக்கின்றன . ஆனால் ஆணாதிக்க, ஆண்களுடைய , ஆண்கள் சொல்வது தான் மேடையேறக்கூடியதும் , தாரக மந்திரமாகவும், ஆண்கள் சொல்வது தான் நிறைவேற்றப் படக்கூடியதாகவும் இவ்வாறே இந்த உலகத்தினுடைய ஆதி சமூகங்கள் பொதுவாக உருவாகியிருக்கின்றன. அனைத்து விடயங்களையும் தீர்மானிப்பவராக ஆண்தான் இருக்கின்றான்.. அல்லது ஆண் வழிச் சிந்தனைதான் இருக்கிறது. இந்த கருத்தோட்டத்தில் எந்த வித மாறுபாடும் இருக்க முடியாது.. அப்படியானால் ஒரு சக ஜீவியாக இருக்கக் கூடிய பெண் ஏன் வித்தியாசப் படுத்தி, வித்தியாசங்களை பெரிது படுத்திப் பார்க்கனும். எங்களுக்கு தெரிந்த காலம் தொடக்கமே ஆணும் பெண்ணும் பிரிந்தார்களா? கருப்பு வெள்ளையாகவும், நாடுகளாகவும், தேசங்களாகவும், மொழிகளாகவும் பிரிந்தது போல் தான் ஆணும், பெண்ணும் பிரிந்தார்களா? பிரிந்த வுடனே அடக்கு முறை தொடங்கி விட்டதா? பலமற்றவர்கள் என்று சொல்லுகின்ற விவாதங்கள் இருக்கின்றன இதுவே தொடர்ச்சியாக பேணப் படுவதற்கு இதுவரைக்குமான தத்துவங்களை , விடயங்களை இந்த சமூகம் கையகப் படுத்திக் கொண்டுள்ளது. விடுதலை பெற வேண்டும் . என வந்தவர்கள் இதை முறியடிக்க வேண்டும் <b>ஆண் ஆதிக்கம் கோலோச்சும் அமைப்பை மாற்றிப் போட வேண்டும் முறியடிக்க வேண்டும். என்று வெளிக்கிளம்பி வருவது நியாயமான போராட்டம். ஆணாதிக்க சிந்தனையென்பது எங்களுக்குள்ளும் ஆழமாக புதைந்திருக்கின்றது. பெண்களுடைய விடுதலை ஆண்களுடைய விடுதலையாக கருதப் படவேண்டும் </b>என்பதுமே என்னுடைய அபிப்பிராயம். <b>ஒரு நேசம் என்பது ஆதிக்க மனோபாவம் உள்ளவன் அடிமை மீது செலுத்துகிற நேசம் நேசம் தானா? </b>உலகத்தில் உள்ள வித்தியாசங்களைப் பார்க்கும் போது ஒவ்வொன்றையும் பிரித்துக் கொண்டே போகலாம்.. அப்படி ஒரு பிரிப்பு அவசியமில்லை. ஆனால் அப்படி ஒரு பிரிப்பு உருவாகிப் பெண்கள் மீது சித்தரிக்கப் பட்டிருக்கிறது. . <b>பெண் விடுதலை பற்றி பேசுகின்ற போது சில வேளைகளில் எங்களுடைய பாரம்பரியம், மொழி, கலாசாரம் மதம் எல்லாம் ஆணாதிக்கத்தை காப்பாற்றுவதாக இருப்பதாக இருக்கின்றது. அவ்வாறு தான் சில வேளைகளில் மொழியில் எங்கள் உணர்வை பிரதி பலிக்கும் சொற்கள் போதைமையாக உள்ளது. அல்லது சொற்களை சொல்வதற்கு ஒரு கூச்சமிருக்கும்</b>.. ஏன் சொல்ல முடிவதில்லை என்ற கேள்வி வருகின்றது.. <b>தங்களுடைய நியாயமான, வெளிச்சொல்ல வேண்டிய வெளித் தெரிய வேண்டிய , தாங்கள் சொல்வது போலவே உணரப் பட வேண்டிய விடயங்கள் மொழியில் சொல்ல முடியாது இருந்தால், சொல்வதற்கு பஞ்சப்பாடு இருந்தால் புதிய மொழியை உருவாக்க வேண்டிய தேவை வருகின்றது. அதைத்தான் நாங்கள் பெண் மொழி என்கிறோம். பெண் மொழி எப்படி இருக்க வேண்டுமென்றால் , நவீன யுகத்தில் பல்வேறு விசயங்கள் இருபாலாருக்கும் சமபங்கு பெற வேண்டியிருந்தும் பெற்றுக் கொள்ள முடியாததாயிருக்கிறது.. கலாச்சாரம், பண் பாடு நடை முறை , மரபு எங்களுக்கு பதாகைகளாக காட்டி பெண்கள் தங்கள் உணர்வுகளை இப்படித்தான் சொல்ல வேண்டும் , உன் எல்லை இதுதான் என்ற கண்ணுக்குத் தெரியாது விதி ஒன்று இருக்கின்றது. இதை மீறுகின்ற சொற்கள் பெண் மொழியாக கருதுகின்றேன்.</b> என்று கூறி பெண் மொழி பற்றிய தனது கருத்துக்களை முன் வைத்து, அமர்ந்தார். தொடர்ந்து அவர் கூறிய கருத்துக்களிலிருந்து விவாதம் நடை பெற்றது பெண் மொழி உருவாக்கம் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள் என்ன எனும் கேள்விக்கு <b>பெண் தான் நினைப்பதை எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் சொல்லவும் செய்யவும் இயலாததாயிருக்கிறது</b>. இலக்கியம் சில வேளைகளில் எங்களை தயார் படுத்தும் புரட்சியை ஏற்படுத்துவதற்கு. சமூகத்தினுடைய சிந்தனை மாற்றங்கள் தான் எங்களுடைய முக்கிய குறிக்கோள்.. சமூக மாற்றம் அல்லாது புரட்சி வராத போது , மொழியுனூடாக ஏற்படும் மாற்றங்களால் வருகின்ற ஆபத்து என்னவென்றால் எதை முறியடிக்க வேண்டும் என்று புறப்படுகின்றதோ அது வேறு ஒரு வடிவம் பெற்று விடுவதற்கான ஆபத்து வந்து விடுகின்றது, மிக மலிவான புரிதல்களும் நிகழ்ந்து விடுவதுமுண்டு. பெண் என்பவள் போகப் பொருளாகவும் இரண்டாம் தர பிரஜையாகவும், கருதப் படுவது மிகத் துல்லியமாக தெரிகின்ற விசயம். ஆகவே பெண் மொழியின் அவசியத்தை அவர்கள் சொல்கிறார்கள். எந்த திசை நோக்கி அதன் பயணம் இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கப் படவேண்டும். நிலையானதும் நிரந்தரமானதுமான அன்பு ஒன்றுதான் எல்லா பேதங்களையும் அழிக்கும் என்று தொடர்ந்து நடந்த விவாதங்களின் போது பதிலுரைத்தார். அவரது உரை மிக மெல்லியதும், உணரக் கூடியதுமான சலனத்தை வந்திருந்தோர் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது நன்றி - பதிவுகள் - Chandravathanaa - 08-27-2003 [b]சூரியன்.கொம் இலிருந்து [b]மனைவியிடம் எஜமான விசுவாசத்தைப் பெற ஆண்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கின்றனர். எந்தப் பெண்ணையும் சீராகச் சிந்திக்க விடுவதில், நம் ஆண்களுக்கென்னவோ, அவ்வளவாக பிடித்தமே இல்லை. பெண்ணை அடக்கி ஆளவே பழகிய விதம், ஆண்களை ஆட்டிப் படைக்கிறது. பெண்கள் படும் அவதியும், வேதனையும் அவர்களை விவகாரத்து தீக்குளிப்பு, தற்கொலை, கருக்கலைப்பு, வேறு மனைநாடுதல் என்ற அசாதராண செயல்கள் குறித்து யோசிக்கத் தூண்டுகிறது. செயற்பட வைக்கிறது. கொடுமைகளையும், ஆணாதிக்கத்தையும் அனுபவிக்கும் பெண்களில் இனப்பாகுபாடு, பணப்பாகுபாடு கிடையவே கிடையாது. இந்த வேதனை, அடக்குமுறையைப் பொறுத்தவரையில், இது பெண்களுக்கே உரிய பொதுவான சொத்து. டில்லியில் தொழிலதிபாராக இருக்கும் தன்னுடைய கணவர் கொடுமைப்படுத்துவதாகக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் மருமகள் விவாகரத்துக் கோரி வழக்குத் தொடுக்கிறார். மும்பையில் முன்னணி நட்சத்திர நடிகை ஒருவர், தான் கர்ப்பிணியாக இருக்கும்போது கணவர் எட்டி உதைத்தார் என்று கூறி விவகாரத்து கோருகிறார். கொல்கத்தாவில் தன்னுடன் சேர்ந்து தண்ணி அடிக்கவில்லை என்று கணவர் அடிப்பதாக மனைவி விவகாரத்து கோருகிறார். சென்னையில் குழந்தை இல்லையென்ற ஒரு காரணத்திற்காக அதிகார வர்க்கத்தில் இருக்கும் கணவனிடம் நீண்ட நாட்கள் மனதளவிலும், உடலளவிலும் வேதனைப்பட்ட மனைவி விவகாரத்து கோருகிறார். இப்படி நாட்டில் பெண்களுக்கெதிரான கொடுமைகள் ஜாதி, மத பேதம் இல்லாமல் பண்பாட்டையும், அன்பையும் கடந்து பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. வாழ்கையில் இவர்களுக்கு ஏற்படும் கொடுமைகள் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது. [b]சர்வதேச தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் நெட்வேர்க் உடன் இணைந்து சர்வதேச பெண்கள் ஆராய்ச்சி மையம் (ஜ.சி.ஆர்,டபிள்ய10) 2000 ஆவது ஆண்டு ஆய்வு மேற்கொண்டது. இதற்கு நாட்டின் ஏழு நகரங்களில் பத்தாயிரம் பெண்கள் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன. நாட்டில் 45 சதவீதப் பெண்கள் கணவன்மார்களால் அடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு, அறையப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறன்றனர். 75 சதவீதப் பெண்கள் கணவர்மார்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதால் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர் என்பது தெரிய வந்தது. கடந்த 2002 இல் நாட்டின் நான்கு நகரங்களில் ஜ.சி.ஆர். டபிள்ய10 ஆய்வு மேற்கொண்டது. இதில் ஆண்கள் இயற்கையாகவே மூர்க்கத்தனமாக இருப்பதில்லை என்று தெரிய வந்துள்ளது.ஒருவர் ஆணாக இருந்தால் மூர்க்கத்தனமாக மாற வேண்டும் என்பது இல்லை. [b]ஆண்களை எப்போதுமே - சுபீரியர் செக்ஸ் - என்று போதித்து வந்துவிட்டோம் இதுதான் மனைவிகளைக் கட்டுப்படுத்த அவர்களைத் தூண்டுகிறது. எப்போது மனைவியை கணவன் அடிக்கலாம்? என்ற வழிகாட்டுதல்களுடன் சிறு குறிப்புப் புத்தகங்கள் டில்லி போன்ற நகரங்களில் கிடைக்கின்றன. இப்புத்தகத்தின் விற்பனை எந்தளவிற்கு இப்புத்தகம் படிக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. மனைவி ஒழுக்கம் இல்லாதவராக இருந்தால் அடிக்கலாம் என்று இப்புத்தகம் வழிகாட்டுகிறது. என்கிறார் அனைத்துப் பெண்கள் அமைப்பின் இயங்குநர் ஜோத்சனா சாட்டர்ஜி. [b]கணவனுக்கு மனைவி மரியாதை கொடுக்காமல் இருப்பதுதான் அந்த ஆணை மூர்க்கத்தனமாக மாற்றுகிறது| என்பது ஜ.ஆர்.சி.டபிள்ய10. ஆய்வில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தான், தமிழ்நாடு, பஞ்சாப், டில்லி போன்ற நகரங்களில் ஆண்களிடம் எடுக்ப்பட்ட மதிப்பீட்டில், தங்களது பேச்சை மனைவி கேட்காவிட்டால் ஆண்மைத்தன்மைக்கே இது அச்சுறுத்தலாக இருப்பதாக 77 சதவீத கணவர்கள் கூறியுள்ளனர். தங்களது ஆண்மையைக் காப்பாற்றிக் கொள்ள மனைவியிடம் மூர்க்கத்தனமாக நடந்துகொள்கின்றனர்.அதிகார கலாச்சாரத்தில் ஊறிப் போயிருக்கும் ஆணின் தேவைகளில், ஏதாவது ஒன்று ப10ர்த்தியாகாமல் போனால், அது அந்த ஆணை மூர்க்கத்தனமாக்குகிறது. பெண்களை தங்களுக்கு இணையானவர்களாகக் கருதுவதில்லை.எந்த சந்தர்ப்பத்தில் ஒரு ஆண் மூர்க்கத்தனமாக மாறுகிறார் என்பதை நாம் கண்டறிய வேண்டும். என்கிறார் டில்லி கல்லூரி பேராசிரியை ஒருவர். ஆண்மைக்குரியவர் என்பதுடன் வயது, ஜாதி, சழூக அந்தஸ்து, முக்கியமாக கல்வி ஆகியவையும் சேர்ந்து கொள்கின்றன.பாலியல் ரீதியாகவும் கணவனால் மனைவி கொடுமைப்படுத்தப்படுகிறார். மனைவியிடம் இருந்து எஜமான விசுவாசத்தைப் பெற மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதாக 79 சதவீத ஆண்கள் தெரிவித்துள்ளனர். அதிகாரத்திற்கு அடிபணிய மறுப்பது, கணவருக்கு கீழ்படிய மறுப்பது, உரிமையை விட்டுக் கொடுக்காதது மற்றும் பாலியல் தேவையை திருப்தி செய்து கொள்ள முயற்சிப்பது போனறவையும் ஒரு ஆணை மூர்க்கத்தனமாக மாற்றுகிறது.மூர்க்கத்தனம், சமூக, பொருளாதார அந்தஸ்து மற்றும் கல்வி ஆகியவை ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. [/color] [b]பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தும் ஆண்களில் படிக்காதவர்களை விட படித்தவர்களே முதலிடத்தில் உள்ளனர். பாலியல் கொடுமையில் ஒரு ஆண்டு கூட படிக்காத 32 சதவீத ஆண்களும், ஒன்று முதல் ஜந்தாம் வகுப்பு வரை படித்த ஆண்கள் 42 சதவீதமும் ஈடுபடுகின்றனர். படித்த ஆண்கள் 42 சதவீதமும் ஈடுபடுகின்றனர். இது ஆறு முதல் பத்தாண்டுகள் படித்தவர்களில் 57 சதவீதமாக இருக்கிறது. இதே சதவீதம் மேல்நிலைப் படிப்பு மற்றும் உயர்கல்வி படித்தவர்களிடமும் காணப்படுகிறது.சமூக, பொருளாதார, அந்தஸ்து படைத்தவர்களிடத்தில் அதிக வருமானம் பெறும் ஆண்கள், மனைவியை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துகின்றனர். இவர்களிடம் 61 சதவீதம் காணப்படுகிறது. இது அந்தஸ்து குறைந்த ஆண் வர்க்கத்தில் 35 சதவீதமாக இருக்கிறது. உயர்ந்த படிப்பு, சமூக, பொருளாதார அந்தஸ்தில் உயர்ந்த பெரும்பாலான ஆண்கள் தான் மூர்க்கத்தனமாக மாறுகின்றனர். நன்கு படித்த, சமூக அந்தஸ்து உடைய ஆண்களிடம் மூர்க்கத்தனம் இருக்காது என்று வெளியுலகம் நம்பிக் கொண்டிருப்பது ஒரு மாயைதான். தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளிலிருந்து வெளியே வரபெண்கள்தான் முன்வரவேண்டும். திருமண வாழ்;க்கையில் இதெல்லாம் சகஜம். தவிர்க்க முடியாதது. |கணவனே கண் கண்ட தெய்வம்| என்று பெரும்பாலான பெண்கள் நினைத்துக் கொள்வது பொறுத்துக் கொள்ளமுடியாது. இன்றும் 55 சதவீதப் பெண்கள் இந்த கொடுமைகள் எல்லாhம் வாழ்க்கையின் ஒரு அங்கம் தான் இது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதைத் தவிர்க்க பாடசாலைகளில் இருந்தே ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் நடத்தப்படவேண்டும். இருவருக்கும் சமுதாயத்தில் சம அந்தஸ்து உள்ளது என்பதைப் புரிய வைக்க வேண்டும். அப்பொழுதான், ஒரு பட்ச சார்பான மூர்க்கத்தனத்தை ஒழிக்க முடியும். நன்றி தினக்குரல். (27 -08 -2003) [b]சூரியன்.கொம் இலிருந்து - Chandravathanaa - 08-27-2003 [b]மேலுள்ள கட்டுரைக்கான தலைப்பு [size=18][b]மனைவியிடம் எஜமான விசுவாசத்தைப் பெற ஆண்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கின்றனர். - Kanani - 08-27-2003 ஆபிரிக்காவில் நோய் வருகிறது என்று அமெரிக்காவில் மருந்தெடுக்கிறியள்....இப்படி ஈழத்தில் இருப்பதாக கேள்விப்படவில்லை....இது ஈழப் பெண்விடுதலைக் கட்டுரையா? அலலது தமிழகக் கட்டுரையா? - Mathivathanan - 08-27-2003 Kanani Wrote:ஆபிரிக்காவில் நோய் வருகிறது என்று அமெரிக்காவில் மருந்தெடுக்கிறியள்....இப்படி ஈழத்தில் இருப்பதாக கேள்விப்படவில்லை....இது ஈழப் பெண்விடுதலைக் கட்டுரையா? அலலது தமிழகக் கட்டுரையா?போடுறதை வாசிக்கிறதைவிட்டிட்டு உதென்ன குறுக்குக் கேள்வி..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 08-27-2003 அதுசரி ஆண்கள் கொடுமைப்படுத்துவதாக ஒரு கணக்கெடுப்பு செய்துள்ளீர்கள்...பெண்கள் கொடுமைபடுத்தும் ஆண்கள் பற்றி எப்போ கணக்கெடுப்பு எடுக்கப் போகிறீர்கள்...ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன எவர் மீதும் தேவைக்கு அப்பாற்பட்ட வன்முறைகள் திணிபுக்கள் கட்டாயம் தடுக்கப்பட வேண்டும் அதுவே ஒட்டு மொத்த மனித சமூகத்தின் அபிவிருத்திக்கும் நன்மை பயக்கும்....அதற்கான மாற்றங்கள் மனதளவில் அன்பின் பால் ஒழுக்கத்தின் பால் சமூக விழுமியங்களின் பால் கட்டி எழுப்பப்படவேண்டுமே தவிர ஆண் உனக்கு எதிரி அல்லது பெண் உனக்கு எதிரி என்பது போன்ற விதண்டாவாதங்களால் அல்ல.....! விவாகரத்தும் கருக்கலைப்பும் தீக்குளிப்பும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் அல்ல...மன அமைதி மனக்கட்டுப்பாடு சமூகப் பண்பாடுகளை உறுதியுடன் கடைப்பிடித்தல் சமூக ஒழுக்கங்களில் நம்பிக்கையும் ஸ்திரமான கடைப்பிடித்தல் ஒழுங்கை காண்பிக்கும் விருப்பை வளர்த்துக் கொள்ளல்...இப்படி பல ஆரோக்கியமான மாற்றங்களே இன்று அவசியமே தவிர வெறும் கணக்கெடுப்பு அறிக்கைகள் அல்ல.....வெறும் ஆண் எதிர்ப்புவாத பரப்புரைகள் அல்ல.....! சில ஆண்களைப் போல பல பெண் கொடுமை வாதிகளும் சமூகத்தில் உளர் என்பதும் உண்மையே.....! - குயில் - 08-27-2003 [b]துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று சொல்லி வைத்தான் வள்ளுவனும் சரிங்க பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உடல் துடிக்கையில் புருசன் வந்து உதைக்கையில்.............சிரிங்க - குயில் - 08-27-2003 <b>kuruvikal' Wrote:http://thatstamil.com/news/2003/08/27/kumbh.html [quote][b]Kanani</b>[/color] [b]இது ஈழத்து இந்துக்கள் கட்டுரையா? இந்திய இந்துக்கள் கட்டுரையா? - Kanani - 08-27-2003 ஈழத்து இந்துக்கள் இந்திய இந்துக்களைப் பின்பற்றுபவர்தானே...இல்லாவிட்டால் எதற்கு விளங்காமொழிப் பூசை, விளங்காமொழிக் குருக்கள்மார். ஆனால் ஈழத்து ஆண்கள் இந்திய ஆண்களைப் பின்பற்றுபவர் அல்லர் என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ளவும் குயில் மாமி! - kuruvikal - 08-27-2003 அது சரி Mr/s குயில் நீங்கள் ஏன் ஆட்டுக்குள் மாட்டையும் மாட்டுக்குள் ஆட்டையும் கலக்கிறீர்கள்.....! அது மட்டுமல்ல இந்து மதம் என்பது இந்திய மண்ணின் அடிப்படை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் ஆனால் சமூக வாழ்வியல் முறைகள் என்பது அவர்களுக்கும் எமக்குமிடையே வேறுபாடுகளைக் காண்பிக்கிறது என்பதும் உண்மையே....! - TMR - 09-15-2003 Quote:Kanani wrote:தனக்கொரு சட்டம் மற்றவைக்கு ஒண்டு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|