Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 400 online users.
» 0 Member(s) | 398 Guest(s)
Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,189
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,182
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,577
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,274
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,575
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,003
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,397
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,081
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,970
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,232

 
  PDF Software
Posted by: சாமி - 10-14-2003, 06:28 PM - Forum: கணினி - No Replies

பிடிஎப் பைல்களை உருவாக்க உதவும் இலவச சாப்ட்வேர்கள்

எந்தக் கம்ப்யூட்டர்களிலும் பயன்படுதத வேண்டுமானால் அந்த பைல், டெக்ஸ்ட் பைலாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட டெக்ஸ்ட் பைலை விண்டோஸ், யுனிக்ஸ், லினக்ஸ், மேகின்டோஷ், சோலாரிஸ் என எப்படிப்பட்ட ஆப்ரேடிங் சிஸ்டம் நிறுவப்பட்ட கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்தலாம். ஆனால் எழுத்துக்களை பார்மட் செய்ய முடியாது. படங்களை நுழைக்க முடியாது போன்ற குறைகள் டெக்ஸ்ட் பைல்களுக்கு உண்டு.

ஹெச்டிஎம்எல் பைல்களையும் எல்லா வகை கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்தலாம். ஆனால் வெவ்வேறு பிரவுசர்களில் வெவ்வேறு விதமாக ஹெச்டிஎம்எல் பைல்கள் காட்சியளிக்கும் என்பது இதன் குறையாகும்.


Portable Document Format என்ற பிடிஎப் பைல்களை எல்லா கம்ப்யூட்டரகளிலும் பயன்படுத்த முடியும். எழுத்துக்களை பார்மட் செய்யலாம். படங்களை நுழைக்கலாம். எல்லா கம்ப்யூட்டர்களிலும் ஒரே மாதிரியாகவே காட்சியளிக்கும் என பிடிஎப் பைல்களின் நிறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இன்டர்நெட்டில் இருந்து டவுன்லோடு செய்கிற பல கட்டுரைகள், கதைகள் போன்றவை பிடிஎப் பார்மட்டில்தான் உள்ளன. பிடிஎப் பைல்களைப் படிப்பதற்குத் தேவையான Adobe Acrobat Reader சாப்ட்வேரை அடோப் நிறுவனம் இலவசமாகவேத் தருகிறது. எனவே பிடிஎப் பைல்களில் விபரங்களை பதிந்து தர எல்லோரும் விரும்புகின்றனர்.

பலர், தங்களிடம் உள்ள எம்எஸ் வேர்ட், எக்செல் பைல்களை பிடிஎப் பைல்களாக மாற்ற விரும்புகின்றனர். ஆனால் இப்படி மாற்றவதற்கு Adobe Acrobat என்ற சாப்ட்வேர் தேவை. இது இலவசமாக வருவதில்லை. பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும். அடோபி அக்ரோபேட் சாப்ட்வேருக்குப் பதிலாக இலவச சாப்ட்வேர் ஏதாவது கிடைத்தால் அதைப் பயன்படுத்தி தங்களது பைல்களை பிடிஎப் பைல்களாக மாற்றினால் நன்றாக இருக்குமே என்று பலர் ஏங்குகின்றனர். ஒன்றல்ல பல இலவச சாப்ட்வேர்கள் உள்ளன. அவற்றுள் உங்களுக்குத் தேவையானதைப் பயன்படுத்தலாம். அவை பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

Free PDF

இந்த சாப்ட்வேரை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவினால் புதிய பிடிஎப் பிரின்டர் ஒன்று உங்கள் கம்ப்யூட்டரில் உண்டாகும். எந்த பைலை பிடிஎஃப்பாக மாற்ற விரும்புகிறீர்களோ அந்த பைலை அதற்கான அப்ளிகேஷனில் திறந்து அச்சடிக்க கட்டளை கொடுக்க வேண்டும். பிரின்டராக பிடிஎப் பிரின்டரைத் தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவுதான் அந்த பைல் பிடிஎப் வடிவில் கிடைக்கும்.

விண்டோஸ் 9x, விண்டோஸ் மி, விண்டோஸ் என்டி ஆப்பரேடிங் சிஸ்டங்களில் இயங்குகிற Free PDF சாப்ட்வேரின் அளவு 767 கேபி ஆகும். இதைப் பெற www.webxd.com/zipguy/freepdfobtm தளத்தில் நுழையுங்கள்.

Pdf Edit 995

எம்எஸ் வேர்ட், எக்செல் போன்றவற்றில் நீங்கள் தயாரித்த பைல்களை பிடிஎப்பாக மாற்ற இந்த Pdf Edit 995 சாப்ட்வேர் பயன்படும். பல பைல்களை வெவ்வேறு அப்ளிகேஷன்களில் அவை உருவானாலும் சரி அவற்றை இணைத்து ஒரேயொரு பிடிஎப் பைலாக மாற்ற முடியும். பக்கங்களை வெவ்வேறு கோணங்களில் திருப்ப பாண்டுகளைப் புகுத்த, வாட்டர்மார்க்கை நுழைக்க எனப் பல்வேறு வசதிகள் இதில் உண்டு.

எல்லா பதிப்பு விண்டோஸ்களிலும் இயங்குகிற இதன் அளவு வெறும் 366 கேபி என்பது குறிப்படித்தக்கது. www.pdf995.com என்ற தளத்தில் இருந்து இதை டவுன்லோடு செய்யலாம்.

PDF Producer

வெறும் 19 கேபி அளவு கொண்டு இந்த சாப்ட்வேரைக் கொண்டு டெக்ஸ்ட் பைலை பிடிஎப் பைலாக மாற்ற முடியும். பிடிஎப்பாக மாற்றும் பொழுது அதில் பான்டின் அளவு, வடிவம் போன்றவற்றை உங்கள் விருப்பப்படி நிர்ணயிக்க முடியும்.

விண்டோஸ் 9x, விண்டோஸ் மி ஆகியவற்றில் இயங்குகிற இதைப் பெற http://maramcheez.netfirms.com/free.html தளத்தில் நுழையுங்கள்.

Cute PDF Printer

விண்டோஸ் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் இயங்குகிற எந்த அப்ளிகேஷன்களிலும் உள்ள உங்களது பைல்களை பிடிஎப் பைல்களாக மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகிறது. இதை நிறுவிய பின்பு, விண்டோஸ் அப்ளிகேஷனில் இருந்து பிடிஎப் பைலாக மாற்ற விரும்புகிற பைலை அச்சடிக்க கட்டளை கொடுங்கள். பிரின்டராக இந்த Cute PDF Printer என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிடிஎப் பைல் கிடைத்துவிடும்.

எல்லா வகை விண்டோஸ் ஆப்பரேடிங் சிஸ்டங்களிலும் இயங்குகிற இதைப் பெற www.acrosoftware.com/download.htm என்ற தளத்தில் நுழையுங்கள்.

PDF Creater

முந்தையத் தலைப்பில் குறிப்பிடப்பட்ட சாப்ட்வேர் போன்றே இதுவும் செயல்படுகிறது. இதைப் பெற http://sourceforge.net/projects/pdfcreator என்ற தளத்தில் நுழையுங்கள்.

HTML DOC

உங்களிடம் உள்ள ஹெச்டிஎம்எல் பைலை பிடிஎப் மற்றும் போஸ்ட்ஸ்கிரிப்ட் (Postscript) பைல்களாக மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகிறது. ஹெச்டிஎம்எல் 3.2 மற்றும் 4.0 ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளுகிற இந்த சாப்ட்வேரை எளிதாக எல்லோரும் கையாள முடியும்.

1185 கேபி அளவு கொண்ட இந்த சாப்ட்வேர் விண்டோஸ் 9x, என்டி ஆகியவற்றில் செயல்படும். இதை டவுன்லோடு செய்ய www.easysw.com/ nmike/html.doc தளத்தில் நுழையுங்கள்.

மேலே பார்த்த ஆறு சாப்ட்வேர்கள் போக பிடிஎப் பைல்களை உருவாக்குவதற்காக மேலும் பல இலவச சாப்ட்வேர்களும், ஷேர்வேர் புரோகிராம்களும் இன்டர்நெட்டில் உள்ளன.

நன்றி: தினமலர்

இங்குள்ள இணைப்புக்கள் எதனையும் நான் பரீட்சித்துப்பார்க்கவில்லை.

Print this item

  இன்டர்நெட்டில் நூலகர்களின் பணி
Posted by: சாமி - 10-14-2003, 06:14 PM - Forum: கணினி - No Replies

நூலகங்களில் மட்டுமே பணிபுரிந்த நூலகர்கள் இப்போது இன்டர்நெட்டிலும் தீவிரமாக உழைக்கத் தொடங்கிவிட்டனர். நூலகர்களை ஒன்றிணைப்பதாக இப்போது இன்டர்நெட் விளங்குகிறது.

பொது விஷயங்கள் முதல் நூலகர்களின் சொந்ததுறை தொடர்பான தகவல்களைக்க கூடப் பெற்றுக் கொள்ள உதவும் தளம்:

http://www.librararyhq.com இந்த தளத்தில் அனுபவப் பூர்வ தகவல்கள் கிடைக்கின்றன.

ஒவ்வொரு பாடத்துக்குமான வழிகாட்டிகளை நூலகர்கள் தயாரித்து அதற்குரிய வெப்சைட்டுகளுக்கு அவர்கள் விமர்சனம் செய்து வைத்துள்ள தளத்தன் முகவரி:

http://www.lii.org/

டிஜிட்டல் ரெபரன்ஸ் சேவை அளிக்கும் நிறுவனங்கள், அமைந்துள்ள நாடு, நூலக அமைப்பு, சாப்ட்வேர் உள்ளிட்ட தகவல்களைத் தரும் அற்புதமான தளம்:

http://www.teachinglibrarian.org

தகவல்களை தேடித் தேடி அலுத்துப் போனவர்களுக்கு முயற்சி செய்ய உதவும் தளம்:

http://www.itcompany.com/inforetriever

இந்த தளத்தில் உடனடியாக தகவல்கள் கிடைப்பது சிறப்பு அம்சம். நூலகர்கள் கண்டிப்பாக இந்த வெப்சைட்டுக்கு செல்லவேண்டும்.

நூலகர்களுக்கான வேலைவாய்ப்புகள், துறையில் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் வளர்ச்சிகள், முக்கிய பிரச்னைகள், நூலகம் மற்றும் அறிவியல் தகவல் கல்வி என்று ஏராளமான தகவல்களை அளிக்கும் தளத்தின் முகவரி: http://www.syr.edu/21stcenlib/index.html

காலாண்டுக்கு ஒரு முறை மின்னணு இதழுக்கான தளம்: http://www.teachinglibrarian.org

இந்த தளத்தில் புத்தகமதிப்புரைகள், வெப்சைட் விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன.

நூலகர்களுக்கு ஏற்ற வெப்சைட் தகவல்களைத் தரும் பயனுள்ள தளம்:

http://www.digital-librarian.com

நூலகர்கள் இப்போது நூலகங்களில் உள்ள புத்தகங்களை மட்டுமல்லாது இன்டர்நெட்டில் உள்ள தகவல்ளையும்படிக்க வேண்டும் என்பதையே இத்தளங்கள் உணர்த்துகின்றன.

நன்றி: தினமலர்

Print this item

  வீரகேசரி
Posted by: yarl - 10-14-2003, 06:16 AM - Forum: உர?வல?ம? ஊட?ர?வல?ம? - Replies (9)

எப்படி வாசிப்பது?

Print this item

  20 வருடங்களுக்கு பின்னர்..........
Posted by: AJeevan - 10-13-2003, 02:59 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

<span style='color:green'>Flucht aus Sri Lanka 20 jahre spaeter............
இலங்கையிலிருந்து வந்து 20 வருடங்களுக்கு பின்னர்...........[/color]
<img src='http://www.yarl.com/forum/files/yoga.jpg' border='0' alt='user posted image'>

பெரிய அண்ணன் சுவிசின் லங்கன்தாளில் , தம்பி யாழ்பாணத்தில்............... என்ற வாசகத்தோடு ஒரு விவரணப்படம் சுவிசின் தேசிய தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட இருக்கிறது.

சுவிசில் பிரபல்யமான ஒரு நாடகவல்லுணரும்,கருத்தரங்க -மேடைப் பேச்சாளரும்,குறும்பட இயக்குனர் மற்றும் திரைகதை ஆசிரியரும்,விமர்சகரும்,.....................இப்படியாக சொல்லிக் கொண்டே போகக்கூடிய ஒரு பிறவிக் கலைஞரான யோகா மாஸ்டர் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு.யோகராஜா அவர்களை பின்னணியாக வைத்து இவ் விவரணப்படம் தயாராகியுள்ளது.
<b>
53.36</b> நிமிடங்கள் ஓடக்கூடிய இவ் விவரணப்படம் 13.10.2003 மற்றும் 19.10.2003 ஆகிய தினங்களில் SF.1 மற்றும் SF.2 ஆகிய சுவிசின் தேசிய German தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

சுவிசில் வாழ்வோரும் , சுவிசுக்கு அண்மையில் வாழும் நாடுகளில் வாழ்வோரும் இவ் விவரணப்படத்தைப் பார்க்கலாம்.


விபரங்கள்:
[size=15]SF1 13.10.2003 22.20hrs (Swisstime)
SF2 19.10.2003 10.30hrs. (Swisstime)

[size=14]film by: Marianne Pletscher
Camera: Werner Schneider
Sound :Jorg Ziegler u.a.,
Editing: Pamela Myson
Duration: 53.36 min</span>

Print this item

  «È¢×Á¾¢Â¢ý ''«Ïò¾¢Á¢÷ «¼ìÌ&quot;
Posted by: þ.þº¡ì - 10-13-2003, 02:32 PM - Forum: கவிதை/பாடல் - Replies (4)

ÐÀ¡Â¢ø ¦ÅǢ¢¼Å¢ÎìÌõ
þÄðº¢Âì¸Å¢ ¢ý
[b]''«Ïò¾¢Á¢÷ «¼ìÌ'' þÃñ¼¡õ À¾¢ôÀ¢ý
«ð¨¼ôÀ¼õ þÐ

¸Å¢¨¾¸û Å¢¨ÃÅ¢ø

Print this item

  சங்க விவகாரம்
Posted by: yarl - 10-13-2003, 10:03 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (63)

உதயன்

ஊடக விருது வழங்கும் விழாவில் மகேஸ்வரன்
உதயன் மீது அபாண்டமான குற்றச்சாட்டு
உதயன் - சுடரொளி பத்திரிகை கள் மீதும் அதன் நிர்வாகி மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருக்கிறார் அமைச்சர் தி.மகேஸ் வரன்.
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் விருதுவழங்கும் விழா நேற்றுமாலை கொழும்பு வெள்ள வத்தை சிறீ இராமகிரு~;ண மிசன் மண்டபத்தில் நடைபெற்றது. அதில், பிரதம அதிதிகளில் ஒருவராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அந்த மேடையை உதயன் - சுடரொளி நிறுவனங்களையும், அதன் நிர்வாக இயக்குநரையும் பெயர் குறிப்பிடா மல் - அபாண்டமான பொய்களைக் கூறி - விமர்சிப்பதற்குப் பயன்படுத் தினார் அமைச்சர் மகேஸ்வரன்.
அவ்வாறு அவர் சுமத்திய குற்றச் சாட்டுக்கள் வருமாறு:-
1. ஒருசில பத்திரிகை நிறுவனங் கள் தங்கள் நிறுவனங்களில் பணி புரியும் பத்திரிகையாளர்களை ஊடக வியலாளர் சங்கங்களில் இணைய விடாது அடக்கிவருகின்றன. அவர் களுக்கும் சுதந்திரம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
2. இருபது மாதங்களாக இந்து சமய விவகார அமைச்சராகவிருக் கும் நான், நல்லு}ர் திருவிழாக் காலத் தில் ஆலய சுற்றாடலில் காரில் பவனி போனேன் என்றும் அதனால் பக்தர் கள் விசனமடைந்தனர் என்றும் சாரப் பட அந்த நிறுவனம் செய்தி வெளியிட் டிருக்கிறது.
3. யாழ்ப்பாணத்தில் கைதுசெய் யப்பட்ட இந்துசமய நிறுவன உயர் அலுவலர் ஒருவரை தமிழகத்தில் பாலியல் விவகாரங்கள் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக் கும் பிரேமானந்தா சுவாமியுடன் ஒப் பிட்டு இப்பத்திரிகை விமர்சித்திருந் தது. ஆனால், அந்தப் பத்திரிகை நிறு வனத்தின் நிர்வாகி தனது மனைவி சகிதம் பிரேமானந்தா சுவாமியின் காலில் வீழ்ந்து வணங்கும் படம் ஒன்றை ஓர் அன்பர் அடுத்தவாரம் எனக்கு அனுப்பிவைத்திருந்தார். அந் தப் படத்தை வேறு ஏதேனும் ஒரு பத் திரிகையில் பிரசுரித்து உண் மையை அம்பலப்படுத்தும்படி அந்த அன்பர் என்னைக் கேட்டுக்கொண்டார்.
- இதுவே அமைச்சர் மகேஸ் வரன் திருவாய் மலர்ந்து குறிப்பிட்ட அபாண்ட பொய்கள்.
அமைச்சர் மகேஸ்வரனின் இத்த கைய சவடல்தனமான பொய்ப் பேச்சுக் களை மக்கள் கண்டுகொள்ளாவிட்டா லும்கூட சிலவற்றை அம்பலப்படுத்து வது கட்டாயமானது. எனவே, உத யன் பின்வருவனவற்றைத் தெரிவு படுத்த விரும்புகிறான்.
1. தனது பத்திரிகையாளர்கள் எவ ரையும் எந்த ஊடகவியலாளர் சங் கத்திலும் சேரும்படியோ அல்லது சேரக் கூடாது என்றோ ஷஉதயன்| நிர்வாகம் வற்புறுத்தவும் இல்லை. அதில் தலை
யிடவும் இல்லை. ஆனால், உதயனில் பணிபுரியும் பெரும்பாலான பத்திரிகை யாளர்கள் தங்களின் சுயாதீன நிலை கருதி எந்த ஊடகவியலாளர் சங் கத்திலும் அங்கத்துவம் பெறாமல் இருக்கிறார்கள் என்பது உண்மையே. எண்பதுகளின் மத்தியில் இயக்கங் களின் பின்னணியோடு ஊடகவிய லாளர் சங்கங்கள் உருவாக்கப்பட்டு அவற்றில் இணையும்படி வற்புறுத் தப்பட்ட போதும்கூட ஷஉதயன்| அலுவ லக பத்திரிகையாளர்கள் மசிந்து கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
எனினும், வடக்கில் தற்போது சுயா தீனமாக இயங்கும் இரண்டு ஊடக வியலாளர் சங்கங்களினதும் பொது வான நடவடிக்கைகளிலும் செயற்பாடு களிலும் அங்கத்துவம் பெறாமலேயே அவர்கள் தவறாது பங்குபற்றி வரு வது வழமை. நேற்றுக் காலை நல்லு} ரில் கண்காணிப்புக்குழுவின் அலுவல கம் முன்னால் யாழ்ப்பாணம் ஊடக வியலாளர் சங்கம் நடத்திய பத்தி ரிகையாளர்களின் மறியல் போராட்டத் தில் ஷஉதயன்| ஆசிரியர் உட்பட பெரும் பாலான ஆசிரியர் பீட உறுப்பினர் கள் பங்குபற்றினர். அதேபோன்று நேற்று மாலை இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கொழும் பில் நடத்திய விருதுவழங்கும் விழாவில் சிறப்பு அதிதியாக அழைக் கப்பட்டிருந்த ஷஉதயன்| ஆசிரியரும் மற்றும் சுடர்ஒளி செய்தியாளர்களும் பங்குபற்றினர். நேற்றைய விருது வழங்கும் விழாவில் பிரதேச hPதி யாக பாராட்டப்பட்டவர்களில் ஒருவர் உதயனின் செய்தியாளர். அவர் ஊட கவியலாளர் சங்கங்களில் இணைந்து செயற்படுபவர். அவருக்கு விருது கிடைத்ததையொட்டி ஷஉதயன்| நிர் வாகம் அவருக்கு விசேட பாராட் டுகளை அனுப்பிவைத்திருந்தது.
1. ஒரு பத்திரிகை நிறுவனம் மீதும் அதன் நிர்வாகிகள் மீதும் அபாண்ட மான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்துப் பேசு வதற்கு அமைச்சர் மகேஸ்வரன் போன் றவர்களுக்குத் தங்கள் மேடையில் இடம்கொடுத்து அத்தகையோரை வளர்க்கும் ஊடகவியலாளர் சங்கங் களில் அந்த நிறுவனத்தின் பத்திரிகை யாளர்கள் எவரும் இணைந்து செயற் பட முன்வருவார்களா என்பது கேள் வியே.
2. நல்லு}ர் திருவிழாக் காலத்தில் அமைச்சர் மகேஸ்வரன் ஆலய சுற் றாடலில் பக்தர்களுக்கு இடையூறாக தனது வாகனத்தில் பவனிவந்தார் என்ற செய்தி உதயனில் வெளியாகியிருந் தமை உண்மையே. எனினும், அமைச் சர் மகேஸ்வரன் தான் அவ்வாறு நடந்துகொண்டதை இதுவரை மறுக்க வில்லை. அந்தச் செய்தி வெளியா கிய காலத்தில்கூட அதற்கான மறுப்பு எதனையும் அவர் உதயனுக்கு அனுப்பிவைக்கவில்லை. எனவே, அந்தச் செய்தியில் கூறப்பட்ட தகவல் உண்மையானது என்று உதயன் - இப்போதும் உறுதியாகக் கூறுகின் றான்.
3. யாழ்ப்பாணத்தில் கைதுசெய் யப்பட்ட இந்துசமய நிறுவன அலுவ லர்கள் எவரையும் கீழ்த்தரமாக விமர் சிக்கும் செய்தியையோ, கருத்தையோ ~உதயன்| எப்போதும் பிரசுரித்ததில்லை. இந்தியாவில் பாலியல் குற்றச்சாட் டுச் சுமத்தப்பட்ட பிரேமானந்தா சுவாமி களை ~உதயன்| நிர்வாகிகள் எவ ரும் நேரில்கூடக் கண்டதில்லை.
உதயன் நிர்வாகி தனது மனைவி சகிதம் பிரேமானந்தா சுவாமிகளின் காலில் வீழ்ந்து வணங்கும் படம் என்று தானே கூறிக்கொள்ளும் அந்தப் புகைப் படத்தை வெளியிட அமைச்சர் மகேஸ் வரன் முன்வருவாரா என பகிரங்கமாக அவருக்கு சவால் விடுகின்றான் உதயன்.

Print this item

  «È¢Ó¸ Žì¸õ _/\_
Posted by: e_roy123 - 10-12-2003, 03:04 PM - Forum: அறிமுகம் - Replies (16)

முகம்தெரியா இவ் ஊடக உலகில் உறவுகளுடன் உறவாட வந்தவனின் முதல் வணக்கங்கள்.


என்றும் தமிழுடன்,
வாழ்க வளமுடன்,
அன்புடன்,
e_roy123

Print this item

  கலாமுக்கு ஒரு சலாம்
Posted by: yarl - 10-12-2003, 07:47 AM - Forum: தத்துவம் (மெய்யியல்) - Replies (11)

thatstamil.com

சொன்னாங்க..சொன்னாங்க..
''இறைவா.. தமது சிந்தனைகளில் இருந்து மாறுபடும் சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் மதிக்கும் மனப்பாங்கை எமது மக்களுக்கு தருவாயாக.. அவ்வாறு கொள்கைகளில் வேறுபடும் பிறரையும், அவரது அமைப்புகளையும், மற்ற நாடுகளையும் விரோத மனப்பான்மையுடன் பார்க்காத நல்ல மனதை எம் மக்களுக்குத் தருவாயாக..'' (ராஜிவ் காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி கலாம் நடத்திய பிரார்த்தனை)

Print this item

  சிவாந்தியின் சாதனை முயற்சி
Posted by: ganesh - 10-11-2003, 01:29 PM - Forum: புலம் - Replies (11)

சிவாந்தியின் சாதனை முயற்சி

முன்னால் ஐபிசி ரிபிசி லண்டன் ரைம்
அறிவிப்பாளர் சிவாந்தி அவர்கள்
மிகவிரைவில் வருகிற 25-10-2003 முதல்
31-10-2003 வரை ஒலிபரப்புத்துறையில் சாதனை ஒன்றை நிலைநாட்டும் முயற்சியில்
ஈடுபடவுள்ளார் இது சம்பந்தமாக உங்கள்
கருத்துக்களை எழுதுங்கள்

Print this item

  அன்னை சோனியாவும் சகோதரி பிரியங்காவும்...!
Posted by: kuruvikal - 10-11-2003, 08:49 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (11)

ராஜீவ் காந்தி நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு தனது கணவரின் பிரிவு தாங்காது சோனியாவும் தந்தையின் பிரிவு தாங்காது பிரியங்காவும் அழுது கண்ணீர் மழை பொழிந்து உரை நிகழ்த்தியுள்ளனர்....இது செய்தி...காரணம்...சோனியா அரசியல் குடும்பப் பிரமுகர் பிரியங்கா அவரது மகள்......ஈழத்தில் இதே ராஜீவ் காந்தி என்ற மனிதர் அனுப்பிய படைகளால் கொன்றொழிக்கப்பட்ட எத்தனை ராஜீவ் காந்திகளின் மனைவிகளும் மக்களும் அழுகின்றனர்...அதை யார் செய்தியாய் தருகின்றீர்...அவர்கள் வீழ்ந்த இடத்தை யார் நாட்டுக்கு அல்லது உலகிற்கு அடையாளப்படுத்துகின்றீர்....! ஆக ராஜீவ் என்ற அரசியல் பிரபல்யம் மட்டும் மனிதர் மற்றவரெல்லாம் மாக்களோ..மனிதரல்லவோ....ராஜீவ் என்பவரை மனிதராகக் கண்டால் அவரது இழப்பு எமக்குத் தரும் துயரத்தை ஒப்ப அவரது படைகளால் துப்பாக்கி ரவைகளால் புளூத்தண்டர்களால் தாங்கிகளால் செல்களால் அழிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்களின் இழப்பும் எமக்கு எவ்வளவு மடங்கு துயரத்தைத் தருகின்றன என்பதையும் குறிப்பிட்ட செய்தியாளர்கள் தெரிவிப்பதுதான் மனித தர்மம்....! செய்வீர்களா....!...செய்வார்களா...???????????!
------------------------------------------------------

ராஜிவ் நினைவிடத்தில்.. ராஜிவ் நினைவுகளில் சோனியா குடும்பம்

சென்னை:

ராஜிவ் காந்தி நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சோனியா காந்தி தனது கணவரின் நினைவுகளில் ஆழ்ந்தார். துயரம் தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார். பிரியங்கா தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அடிக்கடி கண்ணீர் விட்டு அழுதார். அவரை சகோதரர் ராகுல் காந்தி ஆறுதல் படுத்தினார்.

நிகழ்ச்சியில் யாரும் பேசுவதாக திட்டமில்லை. இருப்பினும், மரபுகளை மீறி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிரார்த்தனை ஒன்றை நடத்தினார். முதலில் தமிழிலும், பின்னர் ஆங்கிலத்திலும் அவர் பிரார்த்தனை நடத்தியது கூடியிருந்தவர்களிடையே பெரும் உருக்கத்தையும் கண்ணீரையும் வரவழைத்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா, இந்த இடத்துக்கு வரும்போதெல்லாம் ராஜிவ் என்னுடன் இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டுவிடுகிறது என்றார் கண்ணீரை அடக்கியபடி. பிரியங்கா பேசுகையில், இன்னும் எனக்கு என் தந்தை கொல்லப்பட்ட அந்த தினம் தான் நினைவுக்கு வருகிறது என்றார்.

7 மாநில காங்கிரஸ் முதல்வர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் கலந்து கொண்டார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடைசி நேரத்தில் அழைப்பு சென்றது. ஒப்புக்கு அனுப்பப்பட்ட இந்த அழைப்பைப் புறக்கணித்த ஜெயலலிதா அமைச்சர் மில்லரை அனுப்பி வைத்தார்.

நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தியின் பதிவு செய்யப்பட்ட பேச்சு ஒலிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு டி.ஆர். பாலுவின் திடீர் வருகை அரசியல் புருவங்களை உயரச் செய்துள்ளது.

Our Thanks to thatstamil.com..and.. suratha's pongku tamil converter

Print this item