| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 388 online users. » 0 Member(s) | 386 Guest(s) Applebot, Bing
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
Yesterday, 09:07 AM
» Replies: 28
» Views: 10,249
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,597
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,282
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,596
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,027
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,417
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,112
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,017
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,236
|
|
|
| இலங்கையில் அவசரகாலச்சட்டம். |
|
Posted by: yarl - 11-05-2003, 08:51 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (43)
|
 |
செய்தி தினமலர்
இலங்கையில் நெருக்கடி நிலை பிரகடனம் : சந்திரிகா உத்தரவு
கொழும்பு : இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து அதன் அதிபர் சந்திரிகா பிரேமதுங்கா இலங்கை முப்படைத் தளபதிகளுடன் அவரச ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்தேகத்தின் பேரில் யாரையும் கைது செய்ய இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு உரிமை உள்ளது.
|
|
|
| உடல் உறுதி பெற |
|
Posted by: nalayiny - 11-04-2003, 10:04 PM - Forum: புலம்
- Replies (1)
|
 |
உங்கள் குழந்தைக்கு நாரிப்பகுதிக்கும் முழங்கால் பகுதிக்கும் இடைப்பட்ட உடல் பாகங்கள் பருத்துக் காணப்படுகிறதா?
அப்படியாயின் உங்கள் குழந்தை
1 ) போதிய அளவு உடற்பயிற்சி செய்வதில்லை.
2) தொடற்சியாக உங்கள் குழந்தை தொலைக்காட்சியை பாற்கின்ற தன்மை.
3) கேம் போய் எனப்படும் விழையாட்டுடன் அதிக நேரத்தை செலவழிக்கிறான்.
4) கணணியோடு அதிக நேரத்தை செலவழிக்கிறான்.
இத்தகைய காரணங்களினால் உங்கள் குழந்தைக்கு நாரிப்பகுதிக்கு கீழேயும் முழங்கால் பகுதிக்கு மேலேயும் பெருத்து காணப்படுவதற்கு காரணங்களாக அமைகிறது.
இதனால் உங்கள் குழந்தையின் கால்கள் அதிக பலமின்றி காணப்படும். இது நன்றன்று. உங்கள் குழந்தையை குறிப்பிட்ட நேரமே இத்தகைய பொழுதுபோக்கில் ஈடுபடுத்துங்கள். அதிக நேரத்தை தற்காலிகமாக உடற்பயிற்சிக்காக ஒதுக்குங்கள். உங்கள் செல்ல மகனோ அல்லது மகளோ உடல் உறுதி குன்றி வளர பெற்றோரோகிய நாம் துணைபோவது நன்றல்ல. குளிர்காலம் ஆரம்பமாகி விட்டது. இனி எம் குழந்தைகள் வீட்டினுள் முடங்கிக்கொள்கின்ற தன்மைகள் தான் அதிகம். அதை தவிற்து அவர்களை வெளியில் அழைத்து செல்வது எமது கடமையாகிறது. இத்தகைய குழந்தைகளிற்கு நீச்சல் நல்லதொரு உடற்பயிற்சியாக அமைகிறது. அடுத்து நாளும் குறிப்பிட்ட தூரத்தை ஓடுதல் நன்று.அடுத்து சயிக்கிள் ஓடுதல். நாரிப்பகுதியும் கால்களும் அதிக உறுதியடைகிறது. உங்கள் குழந்தைகளை இத்தகைய தன்மைகளில் இருந்து காப்பாற்றிக்கொள்வது ஒவ்வொரு பெற்ரோரினதும் கடமையாகிறது.
இந்த காரணங்களிலில்லாத குழந்தைகள் நாரிப்பகுதிக்கு கீழேயும் முழங்கால் பகுதிக்கு மேலேயும் பெருத்து காணப்படுமாயின் அதிக கொழுப்புணவை கொடுக்கிறீர்கள் என்பது பொருளாகிறது.
(மொழிபெயற்பிற்காக போனபோது அறிந்து கொண்டவை.)
நளாயினி தாமரைச்செல்வன்.
|
|
|
| ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்க உதவும் தளம் |
|
Posted by: சாமி - 11-04-2003, 09:26 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
அன்னிய மொழிகளை அந்த நாட்டினர் உச்சரிப்பது போல் உச்சரிப்பதும் பேசுவதும் நடைமுறையில் சிரமமான ஒன்று.
ஒவ்வொரு மொழியிலும் உள்ள வார்த்தைகளை அதன் ஒலி மாறாமல் உச்சரிப்பதில்தான் மொழியின் நாகரிகம் வெளிப்படும்.
இந்தியா போன்ற பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட நாட்டில் மொழிகள் அந்தந்த வட்டார வழக்குக்கு ஏற்ப மாறிவிட்டன. அதில் ஆங்கிலமும் சேர்ந்து அதன் இயல்பை மாற்றிக் கொண்டது.
ஒரு குக்கிராமத்தில் இருந்து கூட சர்வதேச வேலைகளுக்கு செல்பவர்களை நாம் காண்கிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாம் சென்று வரும் சூழ்நிலையும் அதிகரித்து வருவதை பார்க்க முடியும்.
இதனால் ஆங்கில சொற்களை சரியாக உச்சரிக்கும் போதுதான் நாம் அந்த மொழியை சரியாக பயன்படுத்துகிறோம் என்பது வெளிப்படும்.
சில நேரங்களில் இந்த வார்த்தையை எப்படி உச்சரிப்பது என்று எல்லோருக்குமே குழப்பம் வருகிறது. அந்த குழப்பதை தீர்க்க ஒரு வெப்சைட் உதவுகிறது. முகவரி: http://pronunciation.englishclub.com/
இந்த தளத்தில் ஒரே மாதிரியான வார்த்தைகளை உச்சரிப்பில் காட்ட வேண்டிய வித்தியாசம், ஒரு சொற்றொடரை பேசுவது எப்படி, "த' எங்கு வரவேண்டும் "தி' எங்கு வரவேண்டும் உள்ளிட்ட ஏராளமான டிப்ஸ் என்று மாணவர்கள், ஆசிரியர்கள், போட்டித் தேர்வு எழுதுபவர்கள், இன்டர்வியூக்கு செல்பவர்கள், பணியில் உள்ளவர்கள் என்று அனைவருக்கும் பயன்படும்படி இத்தளம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட வார்த்தையைக் கொடுத்து அதன் உச்சரிப்பு ஒலியை கேட்க உதவும் தளம்: http://dictionary.reference.com/
இந்த தளத்தில் வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க இலவசம். ஆனால் உச்சரிப்புகளை பெற தனி கட்டணம் செலுத்த வேண்டும்.
நன்றி: தினமலர்
|
|
|
| நீதி(க்கதைகள்) |
|
Posted by: சாமி - 11-04-2003, 09:16 PM - Forum: தத்துவம் (மெய்யியல்)
- Replies (15)
|
 |
மிக அழகாக குயில் ஒன்று பாடிக் கொண்டிருந்தது. அவ்வழியே மேலே பறந்து சென்ற பருந்து, இந்த கானத்தைக் கேட்டு 'சரேல்' என்று டைவ் அடித்தது, மரக்கிளைக்கு. குயிலை தன் கால்களில் பற்றிக்கொண்டு மலை உச்சிக்குச் சென்று, நகங்களையும் அலகையும் தீட்டிக்கொண்டு சாப்பிடத் தயாராகியது.
அப்போது குயில், ''பருந்தாரே! நான் ஒரு சிறிய பறவை. என்னைச் சாப்பிடுவதால் உம் பசி ஆறப்போவதில்லை. உங்கள் வலிமைக்கும், பறக்கும் திறமைக்கும் மிகப் பெரிய பறவைகளை..., ஏன் ஒரு முயல் குட்டி, மான் குட்டியையே கவர்ந்துகொண்டு வந்து சாப்பிட முடியும். சிறு பறவை, என்னை விட்டுவிடும்'' என்றது.
பருந்து யோசித்தது. ''நீ சொல்வது சரிதான்! ஆனால், உன் பேச்சைக் கேட்டுவிட்டு கைவசம் இருக்கும் சிறிய உணவை கைவிட நான் தயாராக இல்லை'' என்றது.
''என் பாட்டு நன்றாக இல்லையா?'' என்றது குயில்.
''உன் பாட்டு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இது பசிவேளை'' என்ற பருந்து அந்தக் குயிலைச் சாப்பிட்டது.
நீதி : காட்டு நியாயத்தில் செவிக்குணவு முக்கியமல்ல.
நன்றி: அம்பலம்
|
|
|
| மாற்று |
|
Posted by: Ilango - 11-04-2003, 04:59 PM - Forum: குறும்படங்கள்
- Replies (49)
|
 |
[shadow=gray:803bd523dd]மிகவிரைவில் யாழ் இணையத்தினூடாக உங்கள் பார்வைக்கு வரவுள்ளது.[/shadow:803bd523dd]
<img src='http://www.yarl.com/forum/files/3.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/4.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| kakka kakka |
|
Posted by: aathipan - 11-04-2003, 01:29 PM - Forum: சினிமா
- Replies (1)
|
 |
<img src='http://nowrunning.com/comingsoon/kakkakakka/05.jpg' border='0' alt='user posted image'>
காலதாமதமாக இதை எழுதுகிறேன் என்று நன்றாகத்தெரிகிறது. ஆனால் ஒரு வித்தயாசமான வேகம் நிறைந்த இந்தப்படத்தைப்பற்றி பேசாமல் விடுவது நல்லதல்ல... எல்லோரும் பார்க்கவேண்டிய படம். நிச்சயமாக சினிமாத்தியட்டரில் பார்த்தால் தான் அந்த திரில் கிடைக்கும்.
படம் பார்த்து சுமார் ஒருவாரம் மனதில் நின்றபடம். பாடல்கள் வித்தயாசம். என்னைக்கொஞ்சம் மாற்றி பாடலில் கமரா சுழன்று சுழன்று படமாக்கியவிதம் அற்புதம். நான் மட்டும் சொல்வதைவிட நிங்களும் எழுதுங்கள்
|
|
|
| என் ஒருவழிப்பாதை |
|
Posted by: aathipan - 11-04-2003, 06:20 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (5)
|
 |
<img src='http://www.manchester.gov.uk/leisure/images/parks/avenue.jpg' border='0' alt='user posted image'>
<b>என் ஒருவழிப்பாதை</b>
நான் வந்த பாதையெல்லாம்
ஓருவழிப்பாதை
காதல் என்னும் ஒருவழிப்பாதை
அவையெல்லாம்
உன்னை நோக்கித்தான்.....
அங்கே நீ மட்டும் தான்..
நான் உன் காலடித் தடம்பார்த்து
தயங்கித்தயங்கி வந்துகொண்டிருந்தேன்
நீ மட்டும் வேகமாய் போய்க்கொண்டிருந்தாய்
என்னை நீ திரும்பிக்கூட பார்த்திருக்க மாட்டாய்
பார்த்தாலும் கண்டுகொண்டிருக்கமாட்டாய்...
உனக்கும் எனக்கும் அவ்வளவு தூரம்...
நான் வெறும் புள்ளியாய்தான் தெரிந்திருப்பேன்
திடீரென என்பாதையில் இருந்த
உன் காலடிச்சுவடுகளைக்காணவில்லை.
ஒரு நாள்....
இரண்டு நாள்....
மூன்றாம் நாள்
மூச்சு விடக்கூட முடியவில்லை
தண்ணீரில் அமுக்கிவைத்ததுபோல..
துடிதுடித்தேன்....
உன் வீடுதேடிவந்தேன்
கொஞ்சம் என்சுவாசத்தை வாங்கிக்கொள்ள
கோளை நான்
சுவாசிக்க முடியவில்லை என்றபோதுதானே
ஓடோடிவந்தேன்..
நீ நேற்றுதான் போன் செய்தாயாம்
சுகமாய் போய் சேர்ந்துவிட்டதாக.....
அடுத்தமாதமே கல்யாணமாம் யுூகேயில்
சந்தோசமாய் சொன்னார் உன் அன்னை
சிரித்தபடி விடைபெற்றேன்
இன்றும் நான் சிரித்தபடிதான் ..
அன்புடன்
ஆதி
|
|
|
| நரேந்திரபிரசாத் |
|
Posted by: Paranee - 11-04-2003, 05:56 AM - Forum: சினிமா
- No Replies
|
 |
மலையாள சினிமாவின் சிறந்த கௌரவ நடிகரும் புரொபஸருமான நரேந்திரபிரசாத் அவர்கள் நேற்று காலமானார்.
கேரள சினிமாவின் சிறந்த ஒரு நடிகர். வில்லன் காட்சகளில் அவரின் நடிப்பு எமக்கே பயத்தையும் ஒரு வித ஆத்திரத்தையும உண்டுபண்ணும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்
|
|
|
|