Yarl Forum
ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்க உதவும் தளம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்க உதவும் தளம் (/showthread.php?tid=7864)



ஆங்கில வார்த்தைகளை உச - சாமி - 11-04-2003

அன்னிய மொழிகளை அந்த நாட்டினர் உச்சரிப்பது போல் உச்சரிப்பதும் பேசுவதும் நடைமுறையில் சிரமமான ஒன்று.

ஒவ்வொரு மொழியிலும் உள்ள வார்த்தைகளை அதன் ஒலி மாறாமல் உச்சரிப்பதில்தான் மொழியின் நாகரிகம் வெளிப்படும்.

இந்தியா போன்ற பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட நாட்டில் மொழிகள் அந்தந்த வட்டார வழக்குக்கு ஏற்ப மாறிவிட்டன. அதில் ஆங்கிலமும் சேர்ந்து அதன் இயல்பை மாற்றிக் கொண்டது.

ஒரு குக்கிராமத்தில் இருந்து கூட சர்வதேச வேலைகளுக்கு செல்பவர்களை நாம் காண்கிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாம் சென்று வரும் சூழ்நிலையும் அதிகரித்து வருவதை பார்க்க முடியும்.

இதனால் ஆங்கில சொற்களை சரியாக உச்சரிக்கும் போதுதான் நாம் அந்த மொழியை சரியாக பயன்படுத்துகிறோம் என்பது வெளிப்படும்.

சில நேரங்களில் இந்த வார்த்தையை எப்படி உச்சரிப்பது என்று எல்லோருக்குமே குழப்பம் வருகிறது. அந்த குழப்பதை தீர்க்க ஒரு வெப்சைட் உதவுகிறது. முகவரி: http://pronunciation.englishclub.com/

இந்த தளத்தில் ஒரே மாதிரியான வார்த்தைகளை உச்சரிப்பில் காட்ட வேண்டிய வித்தியாசம், ஒரு சொற்றொடரை பேசுவது எப்படி, "த' எங்கு வரவேண்டும் "தி' எங்கு வரவேண்டும் உள்ளிட்ட ஏராளமான டிப்ஸ் என்று மாணவர்கள், ஆசிரியர்கள், போட்டித் தேர்வு எழுதுபவர்கள், இன்டர்வியூக்கு செல்பவர்கள், பணியில் உள்ளவர்கள் என்று அனைவருக்கும் பயன்படும்படி இத்தளம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட வார்த்தையைக் கொடுத்து அதன் உச்சரிப்பு ஒலியை கேட்க உதவும் தளம்: http://dictionary.reference.com/

இந்த தளத்தில் வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க இலவசம். ஆனால் உச்சரிப்புகளை பெற தனி கட்டணம் செலுத்த வேண்டும்.

நன்றி: தினமலர்