![]() |
|
என் ஒருவழிப்பாதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: என் ஒருவழிப்பாதை (/showthread.php?tid=7869) |
என் ஒருவழிப்பாதை - aathipan - 11-04-2003 <img src='http://www.manchester.gov.uk/leisure/images/parks/avenue.jpg' border='0' alt='user posted image'> <b>என் ஒருவழிப்பாதை</b> நான் வந்த பாதையெல்லாம் ஓருவழிப்பாதை காதல் என்னும் ஒருவழிப்பாதை அவையெல்லாம் உன்னை நோக்கித்தான்..... அங்கே நீ மட்டும் தான்.. நான் உன் காலடித் தடம்பார்த்து தயங்கித்தயங்கி வந்துகொண்டிருந்தேன் நீ மட்டும் வேகமாய் போய்க்கொண்டிருந்தாய் என்னை நீ திரும்பிக்கூட பார்த்திருக்க மாட்டாய் பார்த்தாலும் கண்டுகொண்டிருக்கமாட்டாய்... உனக்கும் எனக்கும் அவ்வளவு தூரம்... நான் வெறும் புள்ளியாய்தான் தெரிந்திருப்பேன் திடீரென என்பாதையில் இருந்த உன் காலடிச்சுவடுகளைக்காணவில்லை. ஒரு நாள்.... இரண்டு நாள்.... மூன்றாம் நாள் மூச்சு விடக்கூட முடியவில்லை தண்ணீரில் அமுக்கிவைத்ததுபோல.. துடிதுடித்தேன்.... உன் வீடுதேடிவந்தேன் கொஞ்சம் என்சுவாசத்தை வாங்கிக்கொள்ள கோளை நான் சுவாசிக்க முடியவில்லை என்றபோதுதானே ஓடோடிவந்தேன்.. நீ நேற்றுதான் போன் செய்தாயாம் சுகமாய் போய் சேர்ந்துவிட்டதாக..... அடுத்தமாதமே கல்யாணமாம் யுூகேயில் சந்தோசமாய் சொன்னார் உன் அன்னை சிரித்தபடி விடைபெற்றேன் இன்றும் நான் சிரித்தபடிதான் .. அன்புடன் ஆதி - Paranee - 11-04-2003 என்றென்றும் சிரித்துக்கொண்டேயிருங்கள். அழுவதற்கில்லை வாழ்வு அருமை நண்பரே தொடருங்கள் குறிப்பு - சிறு திருத்தம் செய்துள்ளேன். தலைப்பு நீங்கள் எழுதும்போது வண்ணங்களையோ தடிப்பையோ எதிர்பார்க்க முடியாது. அதனால் நீங்கள் இணைத்த தலைப்பு இலக்கங்களாக தென்பட்டது. அதை திருத்தியுள்ளேன் ந.பரணீதரன் - aathipan - 11-04-2003 நன்றி அன்பின்பரணிதரன்; மிக்க நன்றி - nalayiny - 11-04-2003 கோழைத்தனத்தால் தான் சிலரின் காதல் ஒருதலைக்காதலாகி தோற்றுபோகிறார்கள். இன்னும் இக்கவிதையை அழகுபடுத்தலாம் என நினைக்கிறேன். முயற்சித்துப்பாருங்களன். - kuruvikal - 11-04-2003 இஞ்ச பாருங்கோ..இப்ப காதலுக்கு ஒரு வழி சரிவராது...அது அந்தக்காலம்...இப்ப எல்லாம் பல வழிதான்...எந்த வழி நல்ல வழியோ அவ்வழியே பயணிக்க வேண்டியதுதான்...இல்லையேல் காதலுக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு தனிவழியில போக வேண்டியதுதான்....அதுதான் வாழ்க்கைக்கு உதவும் போலக் கிடக்கு....! - sOliyAn - 11-04-2003 காதலுக்கு ஓரேவழி.. அதுதான் சொல்வழி.. சொல்வழி கேட்டு கெட்டிக்காரராய் இருக்கவேணும்.. |