Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 388 online users.
» 0 Member(s) | 386 Guest(s)
Applebot, Bing

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
Yesterday, 09:07 AM
» Replies: 28
» Views: 10,249
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,597
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,282
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,596
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,027
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,417
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,112
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,017
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,236

 
  தலைப்புச்செய்தியும் காதில் கேட்டகருத்தும்
Posted by: aathipan - 11-04-2003, 04:22 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இன்றைய உதயனில்.....

அமெரிக்க விமானப்படைக்கும், இலங்கை விமானப்படைக்கும் இடை யில் நிபுணத்துவ வளப்பரிமாறல் நட வடிக்கைத் திட்டம்(இலங்கை விமானப்படையிடம்கூட நிறைய நிபுணத்தும் உள்ளதோ அமெரிக்காவிற்கு கொடுத்து உதவ?)

பிரதமர் ரணில்- ஜனாதிபதி புஷ் சந்திப்பு
வெறும் கைகுலுக்கலுக்கான நிகழ்ச்சியல்ல!
இப்படிக் கூறுகிறார் அமைச்சர் மிலிந்த( புஷ்ஷைக்காட்டி புூச்சாண்டியா?)
;
இலங்கைப் பிரிவினருக்கு எதிராக
இந்தியா நடவடிக்கை எடுக்கும்( இதுவரைகாலமும் நீங்கள் செய்யாததா என்ன? அது சரி உங்களுக்கு அருகில் இருக்கிறோம் என்பதற்காக அதிகம் தைலையிடுகிறீர்கள் அனுபவம் எல்லாம் மறந்துவிட்டதோ?)

அதிகாரப்பரவலாக்கலையும் மீறி
அப்பால் செல்கிறது புலிகளின் வரைவு!
இப்படி கூறுகிறார் ஜனாதிபதி ( அதிகாரபரவலாக்கலுக்கு இப்பால் சென்றால் மட்டும் விட்டுவிடுவீhகளோ!)

Print this item

  அதிகமாக காதல் வலையில் விழுவது யார்?
Posted by: AJeevan - 11-04-2003, 01:36 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (34)

<span style='font-size:25pt;line-height:100%'>அதிகமாக காதல் வலையில் விழுவது யார்?</span>

<img src='http://www.vikatan.com/av/2003/nov/02112003/p164.jpg' border='0' alt='user posted image'>

நினைத்த மாத்திரத்தில் அவசரமாக ஒருதலைக் காதலில் விழுபவர்களில் ஆண்கள்தான் அதிகம் என்பது என் கருத்து (நானே பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள்ளாகவே ஏழு பெண்களைக் காதலித்தேன்!). இந்த விஷயத்தில் பெண்கள் நிதானமானவர்கள். ஆனால், அவர்கள் காதலில் ஆழம் அதிகம். 'செக்ஸி'ன் போதுகூட ஆண்களின் ஆர்வம் (உடலுறவுக்குப் பிறகு) அவசரமாகக் குறைந்துவிடுகிறது. எல்லாவற்றுக்கும் 'கெமிஸ்டிரி'தான் அடிப்படை. ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் அவளிடமிருந்து Phermones என்கிற வாசனை கெமிக்கல்கள் உங்கள் மூக்கை வந்தடைகின்றன. முதலில் காதலை உணர்வது மூக்குதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்! அந்த கெமிக்கல்கள் பெண்ணின் தோல் மீது படிந்துள்ள பாக்டீரியாவுடன் கலந்து அதுதான் வாசனையாக மாறுகிறது என்பது (தர்மசங்கடமான) வேறு விஷயம்! பிறகு காதலியைப் பார்க்கும் போதெல்லாம் மூளைக்குள் PEA (பெனைலிதை லெமைன்) என்கிற கெமிக்கல் ஏராளமாக உற்பத்தியாகிறது. ரோலர்கோஸ்டர், பாராசூட் மற்றும் பஞ்சீ ஜம்பிங்போது உற்பத்தியாகிற கெமிக்கல் இது! ஏதோ கூட்டத்தில் திடீரென்று காதலியைப் பார்த்தவுடன் ஜிகுஜிகு என்று உணர்ச்சிகள் கொந்தளிப்பதற்கு இந்த PEA கெமிக்கல்தான் காரணம்! ஒரு ஆச்சரியம் - சாக்லெட் சாப்பிடும் போதும் இந்த கெமிக்கல் கிளர்ச்சியடைகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்!
(காதலி உங்கள் எதிரே சாக்லெட் வாங்கிச் சாப்பிட்டால் அது ஒரு அறிகுறி!)


நன்றி:விகடனில் மதன்

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்................
தொடருங்கள் ,...........................

Print this item

  கனவு
Posted by: vasisutha - 11-04-2003, 12:01 AM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

கனவுகள்!

இரவுகளின் தனிமையில்
எப்பொழுதும் நினைப்பது
;நாளை பேசவேண்டும்
என்பது.!.
பல பல விதமாய்
எப்படியெல்லாம் பேசலாம்
ஒரு ஒத்திகையே நடக்கும்!
தலையணை என்னை
பைத்தியக்காரனாய் எண்ணி சிரிக்கும்
முறைத்துப் பார்ப்பேன்.!

அது என்னவோ
உன்னைக் கண்டால் மட்டும்
என் கண்கள் இமைக்க மறுக்கின்றன
கால்கள் நடக்க மறுக்கின்றன
இதயம் துடிக்க மறுக்கிறது!

சாலையை கடக்கும் போது
ஒரு முறை திரும்பி பார்ப்பாய்
பேசமாட்டாயா மடையா என்பது போல்!
இறக்கைகள் பிய்த்து எறியப்பட்ட
பறவையால் மனம் துடிக்கிறது!

மறுபடியும் இரவுகளின் தனிமை
அவளுடன் பேசுவேன்
ஒத்திகை பார்ப்பேன்...
தலையணைக்கு மட்டும் புரிந்த
சைகை மொழியால்!

சினேகன்
UK

Print this item

  ஆ.. சாமி
Posted by: yarl - 11-03-2003, 08:51 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

ஆ சாமி

தினபூமி

அதிகாரப் பகிர்வுக்கான
புலிகளின் திட்டம்: சுப்ரமணியசாமி எதிர்ப்பு

மதுரை, நவ. 3_

இலங்கை அரசுடன் அதிகாரப்பகிர்வு தொடர்பாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள திட்டத்திற்கு ஜனதாகட்சி தலைவர் சுப்ரமணியசாமி கடும் எதிர்ப்பு தெரிவத்துள்ளார்.

இது குறித்து சுப்ரமணியசாமி மதுரையில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:_

இலங்கையில் அமைதிப்பேச்சு என்ற விடுதலைப்புலிகளது திட்டம் இலங்கையின் அழிவு மட்டுமல்லாது இந்தியாவின் தேசபாதுகாப்புக்கே சவாலாக இருக்கும். விடுதலைப்புலிகளது ஆட்சியை பங்கிடும் எந்த முறைக்கும் இந்தியா ஒத்துக் கொள்ள கூடாது.

விடுதலைப்புலிகள் கேட்கும் இடைக்கால அதிகாரம் தீவிரவாத நிலையை ஏற்படுத்துவதோடு நம் தமிழ்நாட்டில் தேசவிரோத சக்தி, தீவிரவாத செயல்கள், போதை மருந்து கடத்தல் மற்றும் மாநிலத்திலுள்ள விடுதலைப் புலிகளிடமிருந்து பணஉதவி பெரும் இயக்கத்துக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். தமிழ்நாட்டில் தேர்தல் அமைப்பு லத்தீன் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா போல் ஆகிவிடும். அதன் பிறகு தமிழ்நாடு மற்றொரு காஷ்மீராக மாறிவிடும்.

விடுதலைப்புலிகளின் இந்த திட்டத்தை இலங்கை ஏற்றுக் கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துமானால் இலங்கை தோல்வியுற்ற தேசமாக ஒத்துக் கொள்ளப்படவேண்டும். இந்நிலையில் தேச நலனை பாதுகாக்க இலங்கையை இந்தியாவுடன் சேர்த்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு சுப்ரமணியசாமி அதில் கூறிஉள்ளார்.

Print this item

  கோயில்கள் இங்கே....
Posted by: சாமி - 11-03-2003, 08:47 PM - Forum: கவிதை/பாடல் - Replies (3)

அத்தனை குலதெய்வங்களுக்கும்
மொத்தமாய் இந்தப்
பெருநகரமெங்கும்
பெருகி வரும் கோயில்கள்!

கோயிலும் மனத்துள்ளே
குளங்களும் மனத்துள்ளே எனும்
சித்தர் தத்துவமெல்லாம்
செத்த தத்துவமாயிற்று

ஈழ மக்கள் நமக்கெல்லாம்
பகுத்தறிவும் பட்டறிவும்
பட்டழிந்து போயிற்று
காலம் மாறியும நம்
கோலம் மாறவில்லை

கருணை நிதி கேட்டால்
கைவிரிக்கும் நம் மக்கள்
கோயில் நிதிக்கென்றால்
கொட்டிக் கொடுக்கின்றார்.

கோயில்கள் இங்கே
வரவைப் பெருக்கும்
வளமான ஊற்றுக்கள்
வரிவிலக்குப் பெற்ற
வணிக நிலையங்கள்!

படைத்தவனுக்கே படியளக்கும்
பண்டக சாலைகள்
படித்தவரையும் பாமரனாக்கும்
பரிணாமப் பட்டறைகள்1

அர்த்தமற்ற சடங்குகள்
அரங்கேறும் மண்டபங்கள்!
வரையறையே இல்லாத
விரயத்தின் கொள்ளிடங்கள்!

மூட நம்பிக்கைகளின்
நாற்று மேடைகள்!
கோயில்கள் இப்படியே
பிற்போக்கின் பிறப்பிடமாய்
எப்படித்தானிருந்தாலும்

கோயிலிருக்குமிடத்தில்தான்
குடியிருப்போம் என்கிற
கொள்கைப் பிடிப்பில் மக்கள்
குரங்காய் இருப்பதனால்

கோயில்களின் கொள்கைகளில்
குறி வைத்துப் போராடும்
மறுமலர்ச்சி விழைகின்ற
மக்கள் அணிதோன்றவேண்டும்!

மெய்ஞானத்தை நெய்யும்
விஞ்ஞானத் தறிகளாக
வறுமை வடுக்களை
வருடும் விரல்களாக
மனித அவலங்கட்கு
மருந்திடும் மனைகளாக
குடிசைக்கு நிழல் தரக்
குனியும் கோபுரங்களாக
கோயில்களை மாற்றக்
குறிவைத்துப் போராடும்
மறுமலர்ச்சி விழைகின்ற
மக்கள் அணிதோன்றவேண்டும்!

நெடுந்தீவு எஸ். சண்முகராஜா

நன்றி: முழக்கம்

Print this item

  முஸ்லிம்
Posted by: தணிக்கை - 11-03-2003, 06:35 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (26)

<span style='font-size:25pt;line-height:100%'>முஸ்லிம்களின் ஆயுதப் போராட்டம் சாத்தியமா?</span>
(சாத்வீகன் - மட்டக்களப்பு ~தமிழ்அலை|)


'வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்பட்டால் முஸ்லிம்களும் தமது உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடும் நிலை ஏற்படும்" என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அண்மையில் இலங்கை வந்திருந்த கனேடிய வெளிவிவகார அமைச்சர் பில் கிரஹமிடம் தெரிவித்திருந்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான காலம் முதல், ரவுூப் ஹக்கிம் முதற்கொண்டு பல முஸ்லிம் தலைவர்களும் முஸ்லிம் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பாக கருத்துக்களை அடிக்கடி வெளியிட்டு வருகின்றார்கள்.

அண்மையில் என்னை சந்தித்த ஒரு முஸ்லிம் ஊடகவியலாளரும், அதற்கான சாத்தியத்தை தெரிவித்திருந்தார். ~முஸ்லிம் இளைஞர்கள் மட்டும் ஆயுதப் போராட்டத்தில் குதித்துவிட்டால் அரபு நாடுகள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு ஆயுதங்களையும், இன்னோரன்ன உதவிகளையும் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றன| என்று அந்த அன்பர் குறிப்பிட்டார். ~முஸ்லிம்களுக்கு இயல்பாகவே அவர்களின் மார்க்கத்தில் உள்ள போர் அங்கீகாரமும், ஜிகாத்தை கொண்டு நடத்துவதற்காக அவர்களது மார்க்க நூல்களிலேயே வழங்கப்பட்டிருக்கின்ற அறிவுரைகளும், முஸ்லிம்களுக்கு பாரிய வெற்றியை நிச்சயம் பெற்றுத்தந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை| என்றும் அந்த அன்பர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களின் ஆயுதப் போராட்டம் என்பது அந்த முஸ்லிம் அன்பர் கூறியது போன்று அவ்வளவு இலகுவான ஒரு விடயம் கிடையாது.

நிறைய விடயங்களைக் கருத்தில் எடுத்துதான் எந்த ஒரு தரப்பும் ஆயுதப் போராட்டத்தில் குதிக்கவேண்டும். இன்றைய கள நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது, முஸ்லிம்களின் ஆயுதப் போராட்டம் ஒன்றிற்கான சாத்தியம் என்பது மிகவும் குறைவாகவே இருக்கின்றது. உணர்ச்சிவசப்பட்ட சில முஸ்லிம் இளைஞர்கள் வேண்டுமானால் ஒரு சில ஆயுதங்களை வைத்துக்கொண்டு வன்முறை நடவடிக்கைகள் சிலவற்றில் ஈடுபடமுடியும். ஒரு சில தாக்குதல்களை மேற்கொள்ள முடியும். ஆனால் தமிழ் சமூகம் போன்று பாரிய ஆயுதப் புரட்சி ஒன்றை நீண்ட காலத்திற்கு முன்னெடுக்கக்கூடிய களச் சாதகம் தற்பொழுது முஸ்லிம்களுக்கு நிச்சயம் கிடையாது என்றே கூறவேண்டும்.

முதலாவதாக முஸ்லிம்கள் ஒரு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு அடிப்படையான தேவைகள் எதுவும் இலங்கையில் கிடையாது. ஆயுதப் போராட்டத்தை எதற்காக மேற்கொள்ளவேண்டும் என்ற குறிக்கோளும் போதுமான அளவிற்கு அவர்களுக்கு கிடையாது. ஆயுதப் போராட்டம் ஒன்றை தொடருவதை அவர்கள் சமூகத்தின் முன்நிலையில் அவர்களால் சரியான முறையில் நியாயப்படுத்தவும் முடியாது. முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர்கள் அரசியல் பேச முடியும். ஆனால் முஸ்லிம் என்ற காரணத்தினால் மட்டுமே உரிமை எதுவும் மறுக்கப்பட்ட எவரும் இங்கு இல்லை என்றுதான் கூறவேண்டும்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகள் விடுதலைப் புலிகளின் தலைமையினால் நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டுள்ள நிலையில், ~தனி முஸ்லிம் அலகு| ~பேச்சுவார்த்தையில் ~சமபங்கு| என்ற கோரிக்கைகளை மட்டுமே முன்வைத்து ஒரு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிப்பதை எவருமே ஏற்கமாட்டார்கள். அது நீண்ட கால நோக்கில் நடைமுறைச் சாத்தியமும் அற்றது. (தமிழ் மக்களின் போராட்டம் அவ்வாறு அல்ல. அவர்கள் தமிழ் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக பலவற்றை இழந்திருந்தார்கள். தமிழ் மொழியை அழித்துவிடும் நடவடிக்கையில் சிங்களப் பேரினவாதிகள் சட்டாPதியாகவே பல காரியங்களைச் செய்தார்கள்.

தமிழ் மக்களை இல்லாதொழிக்கும் பல நடவடிக்கைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. தமிழ் மக்கள் இந்த நாட்டில் வாழ்வதற்கு உரிமையில்லை என்று கூறப்பட்டது. ஆனால் முஸ்லிம்களுக்கு அவ்வாறானதொரு நிலை தமிழ் தரப்பால் ஏற்படவில்லை. யாழ்பாணத்தில் 1990 இல் ஏற்பட்ட நிலை தற்பொழுது முற்றாகவே மாறிவிட்டது. 90 இல் இடம்பெற்ற பள்ளிவாசல் சம்பவம்; போன்றதொரு சம்பவம் அதன் பின்னர் நடைபெறவேயில்லை. இன்று ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தமிழ் பகுதிகளில், குறிப்பாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் விவசாயம் மற்றும் வியாபாரம் செய்து வரும் நிலையில், முஸ்லிம்கள் மதத்தின் அடிப்படையில் எந்தவித ஒடுக்குமுறைக்கும் உள்ளாகாத நிலையில், முஸ்லிம் தரப்பினால் தொடரப்பட இருப்பதாகக் கூறப்படும் ஆயுதப் போராட்டம் என்பது எந்தவித அடிப்படை நோக்கத்தையும் கொண்டதாக இருக்கமாட்டாது. அதானால் அது நின்று நிலைக்கவும் சந்தர்ப்பம் இல்லை.)

எந்த ஒரு ஆயுதப் போராட்டத்திற்கும் இரகசியமானதும், பாதுகாப்பானதுமான ஒரு தளம் இருப்பது அவசியம். ஆயுதப் பயிற்சி பெறுவதற்கும், அந்த ஆயுதப் போராட்டத்தின் தலைமை பாதுகாப்பாகத் தங்கியிருந்து போராட்டத்தை நெறிப்படுத்துவதற்கும், ஆயுதப் போராட்டத்திற்கான வளங்கல்களை தடையில்லாமல் வளங்கிக்கொண்டே இருப்பதற்கும் பாதுகாப்பானதும், இரகசியமானதுமான ஒரு நிரந்தரத் தளம் நிச்சயம் அவசியம். விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் இந்தியாவை தமது தளமாக பயன்படுத்தினார்கள். பின்னர் ஓரளவு வளர்ச்சி அடைந்ததும், யாழ்ப்பாணத்தை தமது தளமாக பயன்படுத்தி வந்தார்கள். அதன் பின்னர் முல்லைக் காடுகளையும், வன்னிப் பெருநிலப்பரப்பையும் தமது தளங்களாகப் பயன்படுத்தி வருகின்றார்கள்.

முஸ்லிம்கள் தமது ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு ஒரு பாதுகாப்பான தளத்தை தக்க வைத்திருப்பது இலங்கையைப் பொறுத்தவரையில் சாத்தியம் இல்லை. வடக்கு கிழக்கில் காடுகள் அனைத்துமே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஊரருக்குள், மக்கள் மத்தியில் தளம் அமைத்துப் போராடும் வசதி நீண்ட கால நோக்கில் நிச்சயம் முஸ்லிம் இளைஞர்களுக்கு கிடைக்கச் சாத்தியமில்லை.

முக்கியமாக முஸ்லிம்களின் ஆயுதப் போராட்டம் என்பது சர்வதேச சமுகத்தை எதிர்கொள்ளவது என்ற விடயத்தில் பாரிய பின்னடைவைச் சந்தித்துவிடும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இன்று பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா தலைமையில் கோதாவில் குதித்துள்ள சர்வதேச சமூகம், உண்மையிலேயே முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு போரைத்தான் நடாத்திக்கொண்டிருக்கின்றது. ஆயுத பலமுள்ள முஸ்லிம்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையைத்தான் அவை மேற்கொண்டும் வருகின்றன. அவர்களது பட்டியலில் ஆயுத பலமுள்ள முஸ்லிம் நாடுகள் கூட, பயங்கரவாதிகளாகத்தான் தென்படுகின்றார்கள். அப்படி இருக்கையில் புதிதாக ஒரு முஸ்லிம் குழு இலங்கையில் ஆயுதப் போராட்டத்தில் குதிப்பதற்கு அவர்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.

தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த போது சிறீலங்கா இராணுவத்தின் மொத்தப் படையினரின் எண்ணிக்கை வெறும் 5000 மட்டுமே. தமிழீழப் போராட்டம் ஆரம்பமான காலப்பகுதியில் சிறீலங்காப் படையினர் அணிவகுப்பு மரியாதையை மேற்கொள்ளும் ஒரு இராணுவ அமைப்பாக மட்டுமே இருந்தது. ஏ.கே 47 ரகத் துப்பாக்கியைக் கூட முதன்முதலில் தமிழ் போரளிகளே இலங்கையில் அறிமுகப்படுத்தும் அளவிற்கு போராட்டத்தின் ஆரம்பகட்டத்தில் சிறீலங்கா இராணுவம் பலவீனமான ஒரு நிலையிலேயே இருந்தது. ஆனால் இன்று சிறீலங்கா இராணுவத்தின் பலம் என்பது பாரியது.

அதேபோன்று விடுதலைப் புலிகளின் படைப்பலமோ இன்று சிறீலங்கா இராணுவத்தை விட பலமடங்கு பாரியது. குறிப்பாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் திறமை என்பது வல்லரசுகளின் புலனாய்வுக் கட்டமைப்புக்களுடன் ஒப்பிடும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அப்படி இருக்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளுவது என்பது நிச்சயம் படுதோல்வியையே அவர்களுக்குப் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆயுத அமைப்புக்கள் உருவாகி சிறிது காலத்திலேயே அவை முற்றாக அழிக்கப்பட்டுவிடும் சாத்தியங்கள் அதிகம் காணப்படுகின்றன.

இலங்கையில் உள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் வியாபாரிகள். இலாபத்தை அடிப்படையாகக் கொண்டே அவர்களின் பெரும்பாலான நகர்வுகள் இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அரசியலும், போராட்டமும் கூட அப்படித்தான் இருக்கும். இவ்வாறு வியாபார நோக்கில் ஊறிப்போயுள்ள ஒரு சமூகத்தின் மத்தியில், அவர்களின் வியாபாரத்தை முற்றாகவே சிதைத்துவிடும்படியான ஒரு ஆயுதப் போராட்டத்தை நீண்ட காலத்திற்கு நடாத்த அச்சமூகம் நிச்சயம் அனுமதிக்காது. இழப்புக்கள் ஏற்பட ஏற்பட, போராட்ட அமைப்புக்கள் காட்டிக்கொடுக்கப்பட்டுவிடும் சூழ்நிலை படிப்படியாக உருவாகும்.

முஸ்லிம்கள் மத்தியில் உருவாகும் ஆயுதக் குழுக்களில் உள்வாங்கப்படும் இளைஞர்கள், மார்க்க சிந்தனையில் ஊறிப்போனவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் திருக்குரானை அடிப்படையாக் கொண்டு இறுக்கமான கட்டுப்பாடுகளை முஸ்லிம் சமூகம் கடைப்பிடிக்கவேண்டும் என்று வற்புறுத்தும் நிலை நிச்சயம் ஏற்படவே செய்யும். அவற்றை மீறுவோருக்கு எதிராக மார்க்கத்தில் கூறப்பட்டபடி கடுமையான தண்டனைகளையும் வழங்க ஆரம்பிப்பார்கள். இதுபோன்ற அவர்களது செயற்பாடுகள் வெகு விரைவில் அவர்களை சமூகத்திலிருந்து அந்நியப்பட வைத்துவிடும். .

தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு சிறீலங்கா அரசு உதவிகள் புரியும் என்று ஒரு சிலர் கூறுகின்றார்கள். இது நடைமுறைச் சாத்தியமற்றது. முஸ்லிம் ஆயுத அமைப்புக்கள் உருவானால், அதனால் மட்டக்களப்பை விட மாவனல்லையும், மாளிகாவத்தையும்தான் அதிகம் பாதிப்புக்குள்ளாகும். இது சிறீலங்கா அரசுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவர்கள் முஸ்லிம் ஆயுதக் குழுக்களை ஒரு அளவிற்கு அதிகமாக ஊக்குவிக்கமாட்டார்கள். முஸ்லிம் இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தி சிறீலங்காப் படைகளில்; அவர்களை இணைத்து பயன்படுத்திக்கொள்ளவே அவர்கள் முயல்வார்களே தவிர, முஸ்லிம்களை ஆயுதபாணிகளாக்கி தன் தலையிலேயே மண் அள்ளிப்போட ஒரு போதும் அவர்கள் விழையமாட்டார்கள்.

சிறீலங்கா அரசு முஸ்லிம் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக செய்திகள் வெளியாகிய மறு கணமே, சிறீலங்கா அரசு சர்வதேச சமூகத்தின் பாரிய எதிர்ப்பினை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதனால் சிறீலங்கா அரசு ஒரு வரையறைக்கு அப்பால் முஸ்லிம்களை ஆயுதபாணிகளாக்க முன்வராது

இவை அனைத்தையும் விட, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஆயுதக் குழுக்கள் உருவாகுவதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்கள். முஸ்லிம் இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தி தமது அரசியலைக் கொண்டு நடத்த வேண்டுமானால் அவர்கள் முயற்சிப்பார்களே தவிர, தமது கைகளை விட்டு முஸ்லிம் இளைஞர்கள் தொலைதூரம் செல்வதற்கு நிச்சயம் அனுமதிக்கமாட்டார்கள். ஆயுதப் போராட்டங்களை ஊக்குவித்த தமிழ் அரசியல்தலைமைகளுக்கு நேர்ந்த கதியை அவர்கள் நிச்சயம் மறந்திருக்கமாட்டார்கள்.

அடுத்ததாக, முஸ்லிம்கள் வன்முறையில் இறங்கிவிட்டால் எந்த ஒரு தீர்வையும் பெறமுடியாத அளவிற்கு நிலமை படு மோசமாக மாறிவிடும் என்பது புத்திஜீவி முஸ்லிம்களுக்கு நன்றாகவே தெரியும். முஸ்லிம்களின் உரிமைகள் மறுப்பதற்கு, முஸ்லிம்கள் ஆயுதப் போராட்டம் மேற்கொள்ளும் ஒரு காரணம் மட்டுமே போதுமானது என்பது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே விளங்கும்.

எனவே மொத்தத்தில் முஸ்லிம்களின் ஆயுதப் போராட்டம் என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் எந்தவகையிலும் சாத்தியமற்ற ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை.

முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக சில முஸ்லிம் அரசியல்வாதிகள் அடிக்கடி பம்மாத்துக் காண்பிப்பது, ஒரு மிரட்டலே தவிர வேறு ஒன்றும் இல்லை. அது சாத்தியம் இல்லை என்பது அவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

இன்றைய காலட்டத்தில் தமிழ் தரப்பைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கினால் மட்டுமே தமிழ் தரப்பால் முஸ்லிம்களை இலகுவாக வெற்றிகொள்ள முடியும். இதுதான் களமுனை யதார்த்தம்.

நன்றி: மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் ~தமிழ்அலை| 02-11-03

Print this item

  ரசிகனுக்காய் மகனான விஜய்....
Posted by: kuruvikal - 11-03-2003, 05:33 PM - Forum: சினிமா - Replies (9)

ரசிகனுக்காய் மகனான விஜய்....

இது படத்தில் அல்ல நிஜத்தில்...இதற்காக விஜயை மனிதாபிமானத்தின் பெயரால் பாராட்டலாம்...வாக்குறுதி காப்பாற்றப்பட்டால் மட்டுமே....!
.......................................
<img src='http://thatstamil.com/images15/cinema/vijay-n2-330.jpg' border='0' alt='user posted image'>

கொல்லப்பட்ட ரசிகர் குடும்பத்துக்கு விஜய் உதவி

தனது ரசிகர்கள் மோதலில் கொலை செய்யப்பட்ட ரசிகரின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறினார். ரூ. 50,000 நிதியுதவியும் வழங்கினார்.

தீபாவளியன்று வெளியான விஜய்யின் திருமலை படத்துக்கு காரைக்குடி தியேட்டர் ஒன்றில் போஸ்டர் ஒட்டுவதில் ரசிகர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.

ஒரு தரப்பு ரசிகர்கள் தங்களது ஜாதிப் பெயரையும் சேர்த்து போஸ்டர் அடிக்க, அதை இன்னொரு தரப்பினர் எதிர்த்துள்ளனர்.

இதில் நடந்த மோதலில் சுரேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் விஜய் காரைக்குடிக்கு வந்தார். சுரேஷின் வீட்டுக்குச் சென்ற விஜய்யை கட்டிப்பிடித்து அவரது தந்தை ஆறுமுகம், தாயார் லட்சுமி ஆகியோர் கதறியழுதனர்.

கணகலங்கிய விஜய் அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு சுரேஷின் படத்துக்கு மாலை அணிவித்தார். பின்னர் ரூ. 50,000 வழங்கிய விஜய், சுரஷைப் போல நானும் உங்கள் மகன்தான். உங்களுக்கு எல்லா உதவிகளும் செய்வேன் என்று உறுதியளித்த விஜய், பின்னர் அங்கிருந்து கிளம்பினார்.

விஜய் வந்துள்ளதை அறிந்து அப் பகுதியில் ஏராளமானோர் கூடினர். ஆனால், வழக்கமான தன் உற்சாகத்தை இழந்திருந்த விஜய் அமைதியாய் அவர்களை நோக்கி கும்பிட்டுவிட்டுச் சென்றார்.

Our Thanks to Thatstamil.com

Print this item

  உதயனின் பொய்
Posted by: தணிக்கை - 11-03-2003, 01:43 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (25)

சிரேஷ்ட அமைச்சர் நால்வர்
புலித்தேவனை சந்தித்துப் பேச்சு
அரசின் சிரே~;ட அமைச்சர்கள் நால்வர், புலிகளின் சமாதான செய லகப் பணிப்பாளர் புலித்தேவன் தலை மையிலான பிரதிநிதிகளை வவுனி யாவில் நேற்று சந்தித்து புலிகள் சமர்ப் பித்த இடைக்கால நிர்வாக வரைவு தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடி யுள்ளார்கள்.
இந்தச் சந்திப்பில் அமைச்சர் களான ராஜித சேனாரத்ன, ரவி கருணா நாயக்க, எஸ்.பி.திஸாநாயக்க, பந்துல குணவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பதில் வரைவு தமது சர்வதேச - சட்ட வல்லு நர்களின் ஆலோசனைகளுடன் மிக வும் நுணுக்கமாக ஆராயப்பட்டுத் தயா ரிக்கப்பட்டது என்றும் -
இந்த வரைவை அரசு நிச்சயம் ஏற்றுகொள்ளும் என்றும் -சந்திப்பில் கலந்துகொண்ட புலி களின் பிரதிநிதிகள் நம்பிக்கை தெரி வித்தனர்.இந்த யோசனைகள் தொடர்பாக இரு தரப்பினரும் விரிவாகப் பேச்சு நடத்த முடியும் என்றும் -
பேச்சு நடபெறும் போது பலதரப் பட்ட கருத்துக்கள் வெளிவரலாம். அவை தவிர்க்க முடியாதவை என்றும் அவர்கள் கூறினர்.
இதற்குப் பதிலளித்துப் பேசுகை யில் -
புலிகள் முன்வைத்துள்ள யோச னைகள் பல நல்லவை| சில குறித்து எதிர்காலத்தில் பேசலாம்| இன்னும் சில விடயங்கள் திருத்தப்படவேண்டியவை| சிலவற்றை முற்றாகவே ஏற்றுக்கொள்ள முடியாது என்று தாங்கள் கூறினர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரி வித்தார்.எனினும், இந்த யோசனைகள் குறித்துத் தெளிவாகப் பேச்சுநடத்தி னோம். முடிவுகளை எட்டுவதற்கு எவ் வளவு காலம் செல்லும் என்று தற் போது கூற முடியாது என்பதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளோம் என்றும் அமைச்சர் கூறினார்.
புலிகளின் வரைவு தொடர்பாக உயர்மட்டப் பேச்சுக்கள் ஒருபுறம் நடை பெறும் அதேவேளை, தங்கள் மட்டத் தில் தாம் புலிகளின் பிரதிநிதிகளு டன் பிரத்தியேக பேச்சுக்களை தொடர்ந்து நடத்தவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
தமது இயக்கம் மீண்டும் யுத்தத் திற்குச் செல்லாது என்றும் தனி நாட் டுக் கோரிக்கைகளையும் தமது அமைப்பு கைவிட்டுவிட்டது என்றும் - புலிகள் இச்சந்திப்பில் கூறினார்கள் என்றும் - அமைச்சர் மேலும் குறிப் பிட்டார்.

Print this item

  ஏமாந்த என் காதல்
Posted by: aathipan - 11-03-2003, 05:47 AM - Forum: கவிதை/பாடல் - Replies (7)


<span style='color:#ff00da'><b>ஏமாந்த என் காதல்</b>

என்றோ எழுதியகவிதை
பழையபாடப் புத்தக்த்தில்
முத்தாய் சிரித்தது
அன்றைய நினைவை அழைத்து வந்தது

பதினாறு வயதில்
பருவக்கோளாறில் அன்று கிறுக்கியது

மனதைத்தொட்டவளை
வர்ணித்து
இரவில் எழுதியது
இன்று சிரிக்கிறது
இதயம் கனக்கிறது

அது ஏமாற்றத்தின் எதிரொலிதான்
அழி;ந்துவிட்ட நினைவுகளை
மீட்டுவந்துவிட்டது

இல்லை

மறைத்துவைத்த நினைவுகளை
வெளிச்;சம் போட்டுவிட்டது

கண்களில் கண்ணீர்

.........ஆனாலும்
கவிதையின் நயம்
என்னை மெய்சிலிர்க்க வைத்தது

மகிழ்ந்தேன்.....

என் எழுத்துக்கு தனி அழகு கொடுத்த
அந்தக் காதலை எண்ணி.......</span>


அன்புடன்
ஆதி

Print this item

  விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்-இலங்கை போலீசார் கைது செய்தனர்
Posted by: yarl - 11-02-2003, 08:58 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

செய்தி நம்பும்படியாகவிருக்கிறதா? செய்தி தினபூமி

சென்னை விமான நிலையத்துக்கு வந்ததும் அவரை கைது செய்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசு இந்திய குடியுரிமை அதிகாரிகளை கேட்டுக்கொண்டது.

கடந்த 12_ம் தேதி சென்னை வந்து சேர்ந்த வீரசிங் இங்கிருந்து விமானம் மூலம் கொழும்பு சென்று விட்டார். அங்கே அவரை இலங்கை போலீசார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து நாங்கள் தகவல் கொடுத்த பிறகும். வீரசிங்கை தப்ப விட்டது ஏன்? அவர் தப்பிச் செல்ல ஒரு குடியுரிமை அதிகாரி உதவி செய்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று இலங்கை அரசு இந்திய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தது.

இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் சென்னை விமான நிலையத்தில் பணிபுரிந்த குடியுரிமை அதிகாரி தீபன் குமார், வீரசிங்கை தப்ப விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவர் மீது இலாகா பூர்வ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Print this item