Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அதிகமாக காதல் வலையில் விழுவது யார்?
#1
<span style='font-size:25pt;line-height:100%'>அதிகமாக காதல் வலையில் விழுவது யார்?</span>

<img src='http://www.vikatan.com/av/2003/nov/02112003/p164.jpg' border='0' alt='user posted image'>

நினைத்த மாத்திரத்தில் அவசரமாக ஒருதலைக் காதலில் விழுபவர்களில் ஆண்கள்தான் அதிகம் என்பது என் கருத்து (நானே பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள்ளாகவே ஏழு பெண்களைக் காதலித்தேன்!). இந்த விஷயத்தில் பெண்கள் நிதானமானவர்கள். ஆனால், அவர்கள் காதலில் ஆழம் அதிகம். 'செக்ஸி'ன் போதுகூட ஆண்களின் ஆர்வம் (உடலுறவுக்குப் பிறகு) அவசரமாகக் குறைந்துவிடுகிறது. எல்லாவற்றுக்கும் 'கெமிஸ்டிரி'தான் அடிப்படை. ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் அவளிடமிருந்து Phermones என்கிற வாசனை கெமிக்கல்கள் உங்கள் மூக்கை வந்தடைகின்றன. முதலில் காதலை உணர்வது மூக்குதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்! அந்த கெமிக்கல்கள் பெண்ணின் தோல் மீது படிந்துள்ள பாக்டீரியாவுடன் கலந்து அதுதான் வாசனையாக மாறுகிறது என்பது (தர்மசங்கடமான) வேறு விஷயம்! பிறகு காதலியைப் பார்க்கும் போதெல்லாம் மூளைக்குள் PEA (பெனைலிதை லெமைன்) என்கிற கெமிக்கல் ஏராளமாக உற்பத்தியாகிறது. ரோலர்கோஸ்டர், பாராசூட் மற்றும் பஞ்சீ ஜம்பிங்போது உற்பத்தியாகிற கெமிக்கல் இது! ஏதோ கூட்டத்தில் திடீரென்று காதலியைப் பார்த்தவுடன் ஜிகுஜிகு என்று உணர்ச்சிகள் கொந்தளிப்பதற்கு இந்த PEA கெமிக்கல்தான் காரணம்! ஒரு ஆச்சரியம் - சாக்லெட் சாப்பிடும் போதும் இந்த கெமிக்கல் கிளர்ச்சியடைகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்!
(காதலி உங்கள் எதிரே சாக்லெட் வாங்கிச் சாப்பிட்டால் அது ஒரு அறிகுறி!)


நன்றி:விகடனில் மதன்

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்................
தொடருங்கள் ,...........................
Reply
#2
அதிகமாக காதல் வலையில் விழுவது பெண்கள்.. காதலில் வீழ்வதும்.. காதலால் வீழ்வதும் அதிகமாக ஆண்கள்தான்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#3
விழுத்துபவர்கள் யார் என கண்டுபிடித்தால் விழுந்தவர்களை அடையாளம் காட்டுவேன்.
[b] ?
Reply
#4
வேலைவெட்டி இல்லாதவர்களுக்குத்தான் காதல் ஒரு அத்தியாவசிய தேவை...அது கவர்ச்சியால் மட்டுமே வரும்....
பகுத்தறிவுள்ள மனிதக்காதல் பெரோமோன் தாண்டிப் புனிதமானது :wink:

எனக்கொரு டவுட் அண்ணை....அப்ப டெலிபோன்..சற் காதலுக்கு என்ன பெரோமோன் காரணம்....சிலவேளை ஸ்பீக்கருக்கால பெரோமோன் வருதோ? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#5
சொல்லேலாதப்பா !
இப்ப கணனியே மணக்குதாம்
[b] ?
Reply
#6
Karavai Paranee Wrote:சொல்லேலாதப்பா !
இப்ப கணனியே மணக்குதாம்
தூசி படிஞ்சிருக்கும்.. அல்லது ஃபான் எரிஞ்சிருக்கும் கழற்றிப் பாருங்கோ பரணி.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#7
பெண்கள் காதல் என்று அல்ல எல்லாவிடயத்திலும் நிதானமாகவே செயல்படுகின்றனர். இது அவர்கள் இயல்பு
என எடுத்துக்கொள்ளலாம்.

ஆண்கள் இதற்கு எதிர்மறை எதிலும் அவசரம்.

பெண்கள் காதலில் வீழ்ந்துவிட்டாலும் காட்டிகொள்வது இல்லை சிந்தித்தே முடிவெடுக்கின்றனர். தமக்கு பாதுகாப்பு குறைந்தது 75ச தவீதமேனும் கிடைக்கும் என்பதை உறுதி செய்தபின்பே காதலுக்கு பச்சைக்கொடிகாட்டுகின்றனர். இதனால் ஆண்கள் இவர்களை பெரும் சுயநலவாதிகள் என்று எண்ணுகின்றனர்.

பெண்கள் ஒருபோதும் தாமாக சென்று காதலைச்சொல்வதில்லை. ஒருதலைக்காதல் பெண்களிடத்தில் இருந்தாலும் வெளியே தெரிவது இல்லை.

எது எப்படி இருந்தாலும்
திருமணத்திற்கு முன் ஆண்கள் ஏமாற்றப்படுகிறார்கள்
திருமணத்திற்குப்பின் பெண்கள் ஏமாற்றப்படுகின்றார்கள்.
Reply
#8
<img src='http://www.vikatan.com/av/2003/nov/02112003/p164.jpg' border='0' alt='user posted image'>
வண்ணம் கண்டேன் உந்தன் விழியில்.
எண்ணம் கொண்டேன் எந்தன் மனசில்.

நளாயினி

வீழ்வதும் எழுவதும் இருபாலாரிடமும் உண்டு என்றே நினைக்கின்றேன். என்ன ஆண்கள் தைரியமாக கூறிக்கொள்வார்கள் பெண்களில் பலர் மூச்சுக்காட்டுவதில்லை. ஆனாலும் சில பெண்கள் தைரியமாக சொல்லிக்கொள்வதையும் காணக் கூடியதாக உள்ளது. ஆனாலும் அருமை.

இந்த இடத்தில் ஒரு பாடல் ஞாபகத்திற்கு வருகிறது.

காதல் இல்லாமல் வாழ்வதும் ஒரு வாழ்வா....[/img]
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#9
நல் மனம் இருந்தால் திரு மணங்கள் என்றுமே இன்பம்தான்
எப்போதும் எங்கேயும் நல்லவர்கள் ஏமாற்றியுதும் இல்லை ஏமாற்றப்பட்டதும் இல்லை.


தும்மலைப்போன்றது காதல் என்று சொல்லிக்கொள்பவர்கள் ஆண்கள்தான். பெண்கள் அடைமுட்டை போல தமக்குள்ளேயே ஆசையை காதலை அடைகட்டி வைத்திருப்பாள். காலம் வரும்போது தானாகவே திறந்துகொள்வாள். இது அனுபவம் மற்றும் அறிந்தது

<img src='http://www.funbun.com/imgs/page_imgs/images/rose01.gif' border='0' alt='user posted image'>
[b] ?
Reply
#10
இப்ப விளங்கிட்டுது காதலும் கத்தரிக்காயும் ஏன் வந்ததெண்டு...கத்தரிக்காயை வெட்டினால்தான் தெரியும் சூத்தை....அது போலத்தான் பெண்ணும் காதலும் போல...எல்லாம் சூத்தை....சூத்தை பெருகினால் மணக்கும் தானே....அழுகல் மணம்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
ஆமாம் குருவிகளே !

மணக்கும்தான்
நல்லதிலும் ஒரு மணம் இருக்கத்தானே செய்யும்
[b] ?
Reply
#12
எங்கேயோ படித்த ஞாபகம்

குடிகாரரிடம் பேசிப்பாருங்கள். ஆமாம் நான் குடிப்பவன்தான் என்பான். ஆனால் ரகசியக்குடிகாரனிடம் கேட்டுப்பாருங்கள். குடியா ! குடிப்பவன் எல்லாம் மனிதர்களா ? அவர்கள் ஏன் பிறந்தார்கள் என்பதையே புரிய மறந்துநிற்கின்றார்கள் என்பார்கள்.

ஆனால் இப்படிச்சொல்பவர்கள்தான் பயங்கர கிரிமினல்கள். இரகசியக்குடிகாhரர்கள். ஏதோ தான் வெள்ளையன் என்றும் தனக்கும் குடிக்கும் வெகுது}ரம் என்று சொல்லிக்கொள்வார்கள்.
[b] ?
Reply
#13
kuruvikal Wrote:இப்ப விளங்கிட்டுது காதலும் கத்தரிக்காயும் ஏன் வந்ததெண்டு...கத்தரிக்காயை வெட்டினால்தான் தெரியும் சூத்தை....அது போலத்தான் பெண்ணும் காதலும் போல...எல்லாம் சூத்தை....சூத்தை பெருகினால் மணக்கும் தானே....அழுகல் மணம்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

இங்கு மனிதரின் காதல் பற்றிப்பேசுகிறார்கள் குருவிகள். நீங்க மாமிசக்காதலில் நிக்கிறீங்கள். அதுதான் அழுகல் , சூத்தையெல்லாத்தையும் கிழறிப்பாக்கிறீங்கள். நல்ல கத்தரிக்காயைத் தேர்ந்தெடுக்காமல் விட்டது உங்கடை பிழை.

எட்டாப்பழம் புழிக்குமாம். என்னேயிறது குருவிகள் உங்களுக்குப் புழிப்பாப்போச்சு. நாங்களெல்லாரும் அதுக்காக துயர் பகிர்ந்து கொள்கிறோம் குருவியளே.

அழுகலும் நாத்தமும்
பெண் காதல்.
'எல்லாம் சூத்தையே
எல்லாம் நாறலே"
பெண்காதலின் இலக்கணம்
சொல்கின்ற பித்தனே !

கருவில் உனைக்காத்த கருவறையென்ன
பன்னிர் விரிப்பா ?
அதுவும் அழுகலா , சூத்தையா ?
ஏனின்னும் ஆராய்ச்சி செய்யாமல்
அடுத்தவள் காதலில்
ஏன் ஓட்டை காண்கிறாய் ?

அட சண்டாளப்பயலே
உன் நாக்கிலென்னடா
நாகபாணமா இல்லை
நஞ்சின் குடியிருப்பா ?

வார்த்தையைக் கழுவிவா
நல்வாசம் பரவும்
நீ து}ய்மையாவாய்
காதலின் பொருள் உணர்வாய்.

அழகாவது , அழுகுவதும - உன்
நுகர்வைப்பொறுத்தது.
நல்லதை நுகர்ந்து பார்
நானில வாழ்வு இனிக்கும்.

பிற்குறிப்பு - குருவிகளுக்கான கவிதையிது. தயவுசெய்து யாரும் கோபிக்க வேண்டாம்.
Reply
#14
யாரும் தவறான ஒரு கருத்தை சொல்லி இருந்தால் தவறை சுட்டிக்காட்டி உணர்த்துங்கள். இங்கே எல்லோரும் நாகரிகமானவர்கள்தான். நிச்சயம் உணர்ந்து கொள்வார்கள். அவர்கள் எல்லாம் உங்கள் நண்பர்கள.

அன்பே சிவம்.
Reply
#15
இஞ்ச பாருங்கோ சாந்தியக்கா...
பெண்கள் காதலைச் லேசில வெளியில சொல்லமாட்டினம் எண்டு ஒரு கருத்து வந்திச்சுத்தானே...அப்ப காதல் எண்டு ஆடவன் போய் மண்டியிட்டால் தான் சொல்லுவினம் போல.... கலியாணத்துக்குப் பிறகு காதல் அழுகி நாறும்...பேச்சு வார்த்தையே அநாகரிகமாக இருக்குமாமே...அது போலத்தான் கத்தரிக்காயும்...வேண்டைக்க அழகா வடிவா இருக்கும்...வீட்ட வந்து வெட்டிப்பாத்தால் புழு நெளியும்....அது போலத்தான் பெண்ணும் காதலும்...அதுசரி கத்தரிக்காய் எப்படி மாமிசம் ஆனது...எங்களுக்கு விளங்கேல்ல....????!

அடுத்தது இன்னொரு சந்தேகம் பெரோமோன் பெண்களில் மட்டுமல்ல ஆண்களிலும் சுரக்குது...அப்ப ஏன் பெண்களை அது கிலுகிலுப் பூட்டாதோ....காதல் பிறக்கச் செய்யாதோ...அப்ப றோட்டில நாய்கள் செய்யுறது காதலே....ஆக பெண்களின் பெரோமோன் மட்டும்தான் ஆண்களை கவருமோ.....?! அங்கையும் பெண்ணிலைவாதமோ....கெமிக்கலுக்கும் தெரியுது ஆணை மட்டும் தான் அடிமை கொள்ள வேண்டும் எண்டு...காதல் என்ற போர்வையில் அழகு காட்டி கவர்ச்சிவலை விரித்து பெண்கள் போடும் நாடகம் தான் ஆண்-பெண் காமக் காதல்....அதில் எவர் எப்போதும் விழலாம்....????!
மனவலிமையானவன் மண நுகர்ச்சிக்கு அடிமையாக மாட்டான்...மனிதன் பகுத்தறிவாளன்...விட்டில் பூச்சியல்ல...! கண்டமட்டில் மயங்குவது மனிதக் குணமுமல்ல...!

உடலால் பணத்தால் தகுதியால் உடையால் அன்றி உள்ளுணர்வால் நோக்கற்று எழும் அன்பு பாசம் நேசம் கருணை சகிப்பு நிறை உணர்வே காதல்... உண்மைக் காதல்... அது இப்பிறப்பில் அல்ல எழு பிறப்பும் சோடிகளை இணைத்தே வைக்கும்.....அது உலகில் சாத்தியமா....?! காமத்துக்கு மறுபெயர் காதலாவது வேடிக்கை...... வேண்டாம் எம்மோடு இந்த மாயாஜாலம்.....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
shanthy Wrote:
kuruvikal Wrote:இப்ப விளங்கிட்டுது காதலும் கத்தரிக்காயும் ஏன் வந்ததெண்டு...கத்தரிக்காயை வெட்டினால்தான் தெரியும் சூத்தை....அது போலத்தான் பெண்ணும் காதலும் போல...எல்லாம் சூத்தை....சூத்தை பெருகினால் மணக்கும் தானே....அழுகல் மணம்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

அழுகலும் நாத்தமும்
பெண் காதல்.
'எல்லாம் சூத்தையே
எல்லாம் நாறலே\"
பெண்காதலின் இலக்கணம்
சொல்கின்ற பித்தனே !

கருவில் உனைக்காத்த கருவறையென்ன
பன்னிர் விரிப்பா ?
அதுவும் அழுகலா , சூத்தையா ?
ஏனின்னும் ஆராய்ச்சி செய்யாமல்
அடுத்தவள் காதலில்
ஏன் ஓட்டை காண்கிறாய் ?

அட சண்டாளப்பயலே
உன் நாக்கிலென்னடா
நாகபாணமா இல்லை
நஞ்சின் குடியிருப்பா ?

வார்த்தையைக் கழுவிவா
நல்வாசம் பரவும்
நீ து}ய்மையாவாய்
காதலின் பொருள் உணர்வாய்.

அழகாவது , அழுகுவதும - உன்
நுகர்வைப்பொறுத்தது.
நல்லதை நுகர்ந்து பார்
நானில வாழ்வு இனிக்கும்.

பிற்குறிப்பு - குருவிகளுக்கான கவிதையிது. தயவுசெய்து யாரும் கோபிக்க வேண்டாம்.

அழகும் அகங்காரமும்
பணம் கண்டு பாய்வதும்
தகுதி கண்டு ஒடுவதும்
காதலல்ல
தேவை.....!
பாவம் அவள்-தன்
எதிர்காலம் நோக்கி
சிறப்புச் சிந்தனைவிரிக்க.....
அவளைச் சிந்தித்தே
சித்தம் சிதைந்தவன்
சிலையாக நிற்பது தெரியவில்லையோ.....?!
சேற்றில் இறங்குதல் தகுமோ
அதுக்கு விளக்கம் வேறு...?!

அழுகல் என்று தெரிந்தும்
அரவணைத்தவன் இருக்க
ஆரேன் ஒருத்தன்
வெள்ளையாய் மிடுக்காய்
காரும் வீடும்
காட்டி வந்தால்
பாவையவள் காதல்
கண நேரத்தில்
கட்சி மாறும்...!
அது அழுகல் இல்லையோ.....?!

தோப்பும் சாலையும்
அலைபுரள் கடற்கரையும்
கற்றுக் கொடுத்ததென்ன
கண்ட நேரத்தில் கழுத்தறு என்றுதானா.....?!

சரி காதல் என்று
கரம் பிடித்தால்
காரம் கொண்டு
கத்தியழுகிறாள்
பார்.... அவனை இவனை என்று
அக்கம்பக்கம் உதாரணம் காட்டுறாள்
இப்படிப்பட்டவள் காதலியாய்.....?!
எப்படி....!
அழுகல் நாறும் தானே...!
இன்னும் கிளறவும் வேண்டுமோ....?!

இது....
எங்கள் கூட்டில் அல்ல
மனிதனில்
காமத்தால் பிறந்த காதல் வீட்டில்...!
உண்மை என்றும் கசப்புத்தான்
ஆனால் உணர்ந்தால்
பாதுகாப்புத்தான்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
காதலைப் பெண்கள் இலகுவில் சொல்லமாட்டார்கள் என்றால் பிறகு எதுக்கு காதலிக்கினம்? காதலைச் சொல்லாமல் காதலும் கைகூடாமல் திருமணம் முடிந்ததும் அடுத்தவனைக் காதலிக்க விரைவில் தயாராகிவிடுவார்கள்..இதற்குப் பெயர்தான் கத்தரிக்காய்க் காதலோ? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
Reply
#18
கத்தரிக்காய் இறக்குமதி செய்யும் கடைக்காரர்கள் கவனிக்க வேண்டியவை! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
#19
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/07/pod_kasthoorimanchal.jpg' border='0' alt='user posted image'>

இது கஸ்தூரி மஞ்சள் பூ...இது காலத்தோடு நிறம் மாறும்....பெண்களும் அவர்களின் காதலும் போல.....! பெண்ணைப் பூ என்பது இதுதானோ...இப்ப எல்லாம் விளங்குது...முந்தி ஆண்கள் விளங்கினதுதான் பிழை....!
----------------------------
image from tamilnet.
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#20
ம்..........

புூக்கள் அப்படியேதான் இருக்கின்றன
வண்டுகள்தான் இந்த புூவை விட்டு அந்த புூவிற்கு பிறகு அந்தப்புூவை விட்டு வேறு புூவிற்கும் தாவிக்கொண்டிருக்கின்றன........
[b] ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)