Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 230 online users.
» 0 Member(s) | 227 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,226
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,595
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,279
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,594
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,024
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,413
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,110
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,014
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,236

 
  கனவுகள்...
Posted by: PATCHI - 11-02-2003, 07:38 PM - Forum: கவிதை/பாடல் - Replies (7)

ஆடி
ஓடி
காய்த்து(க்)
கனிந்து

தேடி
நாடி
வாடி(க்)
குவிந்து

பாடி
சாடி
கூடி(க்)
கலைந்து

மீறிக் களைத்துவிட்டேன்...!

தலை
நிலை
மலை
குலையென்றாகிடினும்

வானம்
மானம்
நாணம்
அதுவுமிலை என்றாகிடினும்

இரணம்
கரணம்
அதனால்
மரணம்
அதுதான் வந்திடினும்

ஈற்றில் வென்றது என் கனவுகளே.!

கனவுகள்...
அவை வாழும் உணர்வுகள்...!



ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ்

Print this item

  Vannakam
Posted by: KANDEEPAN - 11-02-2003, 02:08 AM - Forum: அறிமுகம் - Replies (3)

PLEASE HELPME HOW CAN I WRITE IN TAMIL

Print this item

  Vannakam
Posted by: KANDEEPAN - 11-02-2003, 02:04 AM - Forum: அறிமுகம் - Replies (1)

HALLO EVERYBODY

Print this item

  புலிகள் சமர்ப்பித்த இடைக்கால நிர்வாக சபை
Posted by: சாமி - 11-01-2003, 10:24 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (29)

சட்டத்தின் ஆட்சிக்கான கோட்பாடுகள், மனித உரிமைகள், அனைத்து நபர்களதும் சமத்துவம் மற்றும் மக்களது சுயநிர்ணய உரிமைக்கு அமைவாகவும், இலங்கைத்தீவின் அனைத்து நபர்களுக்கும் நிலையான அமைதியைக் கொண்டு வருவதற்கு உறுதி பூண்டும்,

இத்தீவில் அமைதியைக் கொண்டுவருவதற்கு மாண்புமிகு நோர்வே அரசும் நோர்வே மக்களும் சர்வதேச சமூகமும் ஆற்றும் சேவைகளைப் பாராட்டி ஏற்றுக்கொண்டு, தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையிலான சமாதான நடவடிக்கைகள் சவால்கள் நிறைந்த வரலாறாக அமைந்திருந்தாலும், அமைதி வழியிலான தீர்விற்கு உண்மையான வாய்ப்பு இருப்பதை இனம்கண்டு,

இறுதித் தீர்வை அடைவதற்கான செயல்முறை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்க, சட்டங்களையும் கொள்கைகளையும் வகுத்து, வடக்கு கிழக்கிலே மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, புனரமைப்பு, அபிவிருத்தி ஆகிய பணிகள் அனைத்தையும் செயற்திறனுடன் விரைவாக நிறைவேற்றுவதன் மூலம் வடக்கு கிழக்கு மக்களது உடனடித் தேவைகளை வழங்குவதற்காக வடக்கு கிழக்குப் பிராந்தியத்திற்கு ஓர் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபையை நிறுவுவதற்கு உறுதிபூண்டு, தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான உறவுகள் பற்றிய வரலாறு, வாக்குறுதிகளை மீறிய ஒரு செயல்முறையாக இருந்தமையையும் இலங்கை அரசாங்கத்திற்கும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்களது பிரதிநிதிகளுக்கும் இடையே காத்திரமாகச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களால் ஒருதலைப்பட்சமாக, மதிக்கப்படாது முடிவிற்குக் கொண்டுவந்தமையையும் கவனத்திலெடுத்து,

அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட இன ரீதியான துன்புறுத்தல், பாரபட்சம், அரச வன்முறை மற்றும் அரசுகள் பின்னிருந்து நடாத்திய வன்முறை ஆகியனவற்றை மனதில் நிறுத்தியும்,

1976ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்களுக்கு ஒரு சுதந்திர, இறைமையுள்ள, மதசார்பற்ற அரசை அமைக்குமாறு தமிழ் மக்கள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட தமது பிரதிநிதிளுக்கு ஆணை வழங்கியிருந்தமையைக் கவனத்திலெடுத்தும்,

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக, வன்முறையின்றி அமைதி வழியில் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு வரையறைக்குள் அமைந்த போராட்டம் பயனற்றதென நிரூபிக்கப்பட்டு, முரண்பாட்டை அமைதி வழியில் தீர்ப்பதற்கான மார்க்கங்கள் இல்லாது போன பின்னர்தான், ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவும் தமிழரது சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு வழி முறையாகவுமே தமிழரது ஆயுதப் போராட்டம் தொடங்கியது என்பதை மனதில் நிறுத்தியும்,

முதலில் டிசம்பர் 2000 இலும் பின்னர் டிசம்பர் 2001இலும் ஒரு தலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தைப் பிரகடனப்படுத்தி, நெடுஞ்சாலைகளைத் திறந்து, வர்த்தகத்திற்கும் மக்களது சுதந்திரமான நடமாட்டத்திற்கும் அனுசரணை வழங்கி, இயல்புநிலை திரும்புவதற்கான ஒரு உகந்த சூழலையும் முரண்பாட்டிற்கு ஒரு நீதியான தீர்வையும் காணும் நம்பிக்கையோடு சமாதானப் பேச்சுக்களுக்குள் நேர்மையாக இறங்கி, சமாதானம் நோக்கிய நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகளே முதலில் முன்னெடுத்தார்கள் என்பதை மீள நினைவுபடுத்தியும்,

2001 போர்நிறுத்த அறிவிப்பிற்கு மதிப்பளித்து தற்போதைய இலங்கை அரசாங்கம் தானும் ஓர் போர்நிறுத்தத்தை அறிவித்ததிலுள்ள அரசியல் துணிவைக் கவனத்திற்கொண்டு,

இலங்கைத் தீவிலுள்ள வடக்கு கிழக்குப் பகுதியின் சமூக, பொருளாதார, நிர்வாக மற்றும் பௌதீகக் கட்டுமானங்களுக்கு அழிவை விளைவித்த போர், வடக்கு கிழக்கிற்கே பிரதானமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்ததோடு, வடக்கு கிழக்கே இலங்கைத்தீவில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகத் தொடர்ந்தும் இருக்கிறது என்பதையும் உணர்ந்து,

2000ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், வடக்கு கிழக்கிலுள்ள பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமது செயல்கள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தங்கள் அதிகாரபூர்வமான பிரதிநிதிகள் என ஏற்றுக்கொண்டே தங்கள் வாக்கை வழங்கினார்கள் என்பதை இனம்கண்டு,

இலங்கைத் தீவிலுள்ள வடக்கு கிழக்கின் பெரும்பான்மையான பகுதி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டையும் நியாயாதிக்கத்தையும் செயற்திறன் வாய்ந்த முறையில் செயற்படுத்துகின்றமையைக் கருத்திற்கொண்டு, பேச்சுவார்த்தை மூலமான ஒரு இறுதித் தீர்வை அடைவதும் அதனை அமுல்படுத்துவதும் ஒரு நீண்ட காலமெடுக்கும் கருமமாக அமையலாம் என்பதை உணர்ந்து,

அனைத்து அகதிகளும் இடம்பெயர்ந்த நபர்களும் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் திரும்பி செல்வதற்கான அவசியத்தையும், அவர்கள் வடக்கு கிழக்கிலுள்ள தங்கள் வீடுகளுக்குத் தங்கு தடையின்றிச் சென்று, தரையிலும் கடலிலும் தமது வாழ்வாதாரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான அவர்களது உடனடித் தேவையையும் வலியுறுத்தி;,

இலங்கை அரச நிறுவனங்களும் அவை வழங்குகின்ற சேவைகளும் வடக்கு கிழக்கு மக்களது உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமானவையல்ல என உணரப்பட்டுள்ளமையை மனதிற்கொண்டு,

அமைதிப் பேச்சுக்களின் போது அமைக்கப்பட்ட அவசர மனிதாபிமான மற்றும் புனர்வாழ்வுத் தேவைகளுக்கான உப குழுவும் (சிரான்) ஏனைய உப குழுக்களும்; தோல்வியுற்றமையையும், மீண்டும், மீண்டும் செயலற்ற நிலைக்கு இட்டுச்சென்ற இந்த உப குழுக்களது அமைப்புமுறையே அந்தத் தோல்விக்குக் காரணம் என்பதையும் இனங்கண்டு,

இலங்கை அரசாங்கம் தனது 2000ம் ஆண்டுத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவாறு, ஓர் இடைக்கால அதிகார சபைக்கான தேவையை அங்கீகரித்துள்ளமைக்கு மதிப்பளித்து,

சட்டம், ஒழுங்கைப் பேணுவது ஒரு நீதியானதும் சுயாதீனமுமான சமூகத்திற்கு இன்றியமையாத அம்சம் என்பதை உணர்ந்து,

போரினால் சிதைக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் மற்றும் எந்தவொரு ஆட்சியியல் செயற்பாட்டை அங்கு மேற்கொள்வதற்கும் வருமானம் ஈட்;ட வேண்டியது தேவை என்பதை இனம்கண்டு, மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி என்பனவற்றிற்கு, நிலத்தின் மீதான கட்டுப்பாடு முக்கியம் என்பதை இனம்கண்டு,

1972ம் 1978ம் ஆண்டு அரசியலமைப்புக்களது உருவாக்கத்தில் தமிழ் மக்கள் பங்குபற்றவில்லை என்பதையும் அவை பாகுபாடான ஆட்சியியலை நிறுவனமயப்படுத்தி, தீர்மானம் எடுக்கும் செயல்முறையில் காத்திரமான பங்கினைத் தமிழ் மக்களுக்கு வழங்க மறுத்ததையும் மனதிற்கொண்டு,

கடந்த தசாப்தத்தில் இனங்களுக்கு இடையேயான முரண்பாடுகளைத் தீர்க்க புதுமையானதும் பரந்த சிந்தனையுடனுமான நடைமுறைகளுடே சமத்துவத்தின் அடிப்படையில் முரண்பட்ட தரப்புக்களுக்கிடையே உடன்படிக்கையினை ஏற்படுத்துவதன் மூலமாக சர்வதேச மட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட வழக்கத்தைக் கவனத்திற்கொண்டு,

போரிடும் தரப்புக்களுக்கிடையே சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தோடு எட்டப்படும் ஒப்பந்தங்களில் அல்லது உடன்படிக்கைகளில் மாத்திரமிருந்தே பெறப்படும் சட்ட ரீதியான பலத்தைக்கொண்டு போரினால் சிதைந்த நாடுகளில் இடைக்கால அரசாங்க ஒழுங்குகளை நிறுவுவதற்கான முன்னுதாரணங்களில் நம்பிக்கைகொண்டும்,

இலங்கைக் கண்காணிப்புக் குழுவின் (ளுடுஆஆ) பணியை உள்ளடக்கிய போர்நிறுத்த ஒப்பந்தம், ளுஐர்சுN மற்றும் வடக்கு கிழக்கு மீள்கட்டுமான நிதியம் (NERF) அமைக்கப்பட்டமை போன்ற நடைமுறைகள் இத்தகைய ஒழுங்குகளை ஏற்படுத்துவதற்குரிய பெறுமதியான முன்னுதாரணங்களாக அமைகின்றன என்பதைக் கவனத்திற்கொண்டு,

மேலே கூறப்பட்டனவற்றின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தரப்புக்களான தமிழீழ விடுதலைப் புலிகளும் இலங்கை அரசாங்கமும் கீழ்வரும் ஏற்பாடுகளுக்கு இத்தால் இணங்குகின்றன:

1. இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை பேச்சுவார்த்தை மூலமான இறுதித்தீர்வு எட்டப்பட்டு அமுல்ப்படுத்தப்படும் வரை, வடக்கு கிழக்கிலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய எட்டு மாவட்டங்களையும் உள்ளடக்கி ஒரு இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை (Interim Self-Governing Authority-ISGA) நிறுவப்படும். ISGAல் முஸ்லீம் சமூகத்தினது பங்கை உருவாக்கம் செய்வதில் கலந்துகொள்வதற்கு அவர்களது பிரதிநிதிகளுக்கு உரிமை உண்டு.

2. ISGAஇன் அங்கத்துவ அமைப்பு

2.1. இந்த உடன்படிக்கையில் சம்பந்தப்படுகின்ற தரப்புக்களால் தீர்மானிக்கப்படும் எண்ணிக்கையிலான உறுப்பினர்களை ISGAகொண்டிருக்கும்.

2.2. ISGAன் அங்கத்துவ அமைப்பு கீழ்வருமாறு அமையும்:

2.2.a. தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்படுகின்ற உறுப்பினர்கள்

2.2.b. இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்படுகின்ற உறுப்பினர்கள், மற்றும்

2.2.c. வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லீம் சமூகத்தால் நியமிக்கப்படுகின்ற உறுப்பினர்கள்

2.3. கீழ்வருவனவற்றை உறுதி செய்யக்கூடிய விதத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்:

2.3.a. ISGAல் தமிழீழ விடுதலைப் புலிகளின் நியமனதாரிகளே அறுதிப் பெரும்பான்மையினராக இருப்பர்.

2.3. b. மேலுள்ள உப விதி (ய) இற்கு பங்கம் ஏற்படாத வகையில் வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லீம் மற்றும் சிங்கள சமூகங்கள் ISGAல் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும்.

2.4. தலைவர் (ஊhயiசிநசளழn) ISGAஇலுள்ள பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு ISGAஇன் பிரதான நிறைவேற்று அதிகாரியாகச் செயற்படுவார்.

2.5. வடக்கு கிழக்கிற்கான பிரதான செயலாட்சியரையும் அவரது கடமைகளை ஆற்றுவதில் உதவுவதற்கு தேவைப்படக்கூடிய ஏனைய அதிகாரிகளையும் தலைவர் நியமிப்பார். இந்த நியமனம் ஏதேனையும் இடைநிறுத்துவதற்கு அல்லது முடிவுக்குக்கொண்டு வருவதற்கான அதிகாரங்களையும் தலைவர் கொண்டிருப்பார்.

3. தேர்தல்கள்

சரத்துக்கள் 2.2 மற்றும் 2.3இன் ஏற்பாடுகள், ISGAஇற்கான தேர்தல்கள் நடாத்தப்படும் வரை தொடரும். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து ஐந்தாண்டின் முடிவில் இறுதித் தீர்வு எதுவும் எட்டப்படாமலும் அமுல்படுத்தப்படாமலும் விட்டால், இந்த ஐந்தாண்டு காலப்பகுதி முடிவடைகையில் தேர்தல்கள் நடாத்தப்படும். ISGAஆல் நியமிக்கப்படும் ஒரு சுயாதீனமான தேர்தல் ஆணைக்குழு, சுதந்திரமானதும் நேரடியானதுமான தேர்தல்களை சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் சர்வதேச ஜனநாயகக் கோட்பாடுகள் மற்றும் நியமங்களுக்கு அமைவாக நடாத்தும்.

4. மனித உரிமைகள்

சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளவாறு அனைத்து உரிமைகளும் வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கு வழங்கப்படும். ISGA இயற்றும் சட்டம், ஒழுங்குமுறை, தீர்ப்பு, கட்டளை, தீர்மானம் எல்லாம் மனித உரிமைகள் பாதுகாப்பிற்கென சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களுக்கு அமைவாக இருத்தல் வேண்டும். ISGA ஆல் நியமிக்கப்படும் ஓர் சுயாதீனமான ஆணைக்குழு இந்த மனித உரிமைகளுக்கான கடப்பாடுகள் எல்லாம் பேணப்படுவதை உறுதிசெய்யும். மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஒரு காத்திரமான ஒழுங்கமைப்பை நிறுவுவதற்கு இந்த ஆணைக்குழு சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் உதவியை நாடும். இந்த ஆணைக்குழு எந்தவொரு தனிநபரிடமிருந்தும் முறைப்பாடுகளை ஏற்று விசாரணை செய்து, பாதிக்கப்பட்ட எந்தவொரு நபருக்கும் வழங்கவேண்டிய நட்ட ஈட்டைப் பரிந்துரைத்து, அந்த நபரின் உரிமைகள் மீள நிலைநிறுத்தப்படுவதை உறுதிசெய்யும்.

5. மதச்சார்பின்மை

வடக்கு கிழக்கில் எந்தவொரு மதத்திற்கும் விசேட இடம் வழங்கப்படமாட்டாது.

6. பாகுபாட்டிற்கெதிரான தடை

வடக்கு கிழக்கில் மதம், இனம், சாதி, தேசியம் அல்லது பிராந்தியம், வயது அல்லது ஆண், பெண் என்பவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படாதிருப்பதை ISGA உறுதி செய்யும்.

7. இலஞ்ச ஊழலைத் தடுத்தல்

ISGA தனது நிர்வாகத்தில் அல்லது தனது நிர்வாகத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் எதுவும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்யும்.

8. அனைத்து சமூகங்களினதும் பாதுகாப்பு

கலாச்சாரம் அல்லது மதம் தொடர்பாக, ஒரு சமூகத்திற்கு வழங்காத தனிச்சலுகைகளை அல்லது அவர்கள் மீது திணிக்காத அசௌகரியங்களை இன்னொரு சமூகத்திற்கு வழங்கும் அல்லது திணிக்கும் சட்டம், ஒழுங்குமுறை, விதி, கட்டளை அல்லது தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது.

9. ISGAஇன் நியாயாதிக்கம்

9.1. மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் தற்போதுள்ள சேவைகளையும் வசதிகளையும் மேம்படுத்தி உயர்த்துதல் உள்ளடங்கலான அபிவிருத்தி (இதன் பின்னால் சுசுசுனு எனக் குறிப்பிடப்படுகின்றது), வரி விதித்தல் உள்ளடங்கலான வருவாய் ஈட்டல், வருமானம், தீர்வையும் சுங்கவரியும், சட்டமும் ஒழுங்கும் மற்றும் காணி தொடர்பான அதிகாரங்கள் உள்ளடங்கலாக வடக்கு கிழக்கை ஆளுகை செய்வதற்கு வேண்டிய அனைத்து அதிகாரங்களையும் ISGA கொண்டிருக்கும்.

இந்த அதிகாரங்களுக்குள், வடக்கு கிழக்கிலும், வடக்கு கிழக்கிற்காகவும் பிராந்திய நிர்வாகம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் அனைத்து அதிகாரங்களும் செயற்பாடுகளும் உள்ளடங்கும்.

9.2. இவ்வாறான அதிகாரங்களைப் பிரயோகிப்பதற்கும் செயற்பாடுகளைச் செயற்படுத்துவதற்குமான விரிவான வழிமுறைகள் இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட தரப்புக்களால் மேலும் பேசி முடிவெடுக்கப்படும்.

10. அதிகாரங்களை வகை பிரித்தல் வடக்கு கிழக்கில் நீதியை நிர்வகிப்பதற்கான தனியான அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு, அந்த அமைப்புக்களுக்கு நீதி அதிகாரங்கள் உரித்தாக்கப்படும். நீதிபதிகளது சுயாதீனத்தை உறுதி செய்வதற்கு ISGA பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும்.

இந்த ஒப்பந்தத்தின் சரத்து 4 (மனித உரிமைகள்) மற்றும் 22இற்கு (பிணக்குத் தீர்த்தல்) பங்கம் ஏற்படாதவாறு, இந்த சரத்தின் கீழ் உருவாக்கப்படும் அமைப்புக்களே, இந்த உடன்படிக்கையை அர்த்தப்படுத்தி அமுல்படுத்துவதில் எழும் அனைத்துப் பிணக்குகளையும், இந்த உடன்படிக்கையில் அல்லது இந்த உடன்படிக்கையின் கீழ் அல்லது இந்த உடன்படிக்கையின் ஏதேனும் ஏற்பாட்டில் எழும் ஏதேனும் பிணக்குகளையும் தீர்ப்பதற்கு தனியானதும் தனித்துவமானதுமான நியாயாதிக்கத்தைக் கொண்டிருக்கும்.

11. நிதி

ISGA, ஓர் வருடாந்த வரவு-செலவு அறிக்கையைத் தயாரிக்கும்.

ISGAஆல் நியமிக்கப்படும் அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு நிதி ஆணைக்குழு அமைக்கப்படும். இந்த அங்கத்தவர்கள் நிதி, நிர்வாகம், அல்லது வாணிபம் போன்ற துறைகளில் உயர் பதவி வகித்தவர்களாகவோ அல்லது இத்துறைகளில் சிறப்புத்தேர்ச்சி பெற்றவர்கள் என இனம் காணப்பட்டவர்களாகவோ இருக்க வேண்டும். இலங்கை அரசாங்கத்தின் ஒன்று திரட்டிய நிதியத்திலிருந்து (உழளெழடனையவநன கரனெ) வடக்கு கிழக்கிற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியின் அளவை இந்த ஆணைக்குழு பரிந்துரைக்கும். இப்பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம்; தனது நல்லெண்ண முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

சமவிகிதத்தில் பகிர்ந்தளிப்பதற்கு உரிய கவனம் செலுத்தி, ISGA தன்வசமுள்ள நிதிகளை எப்படிப் பயன்படுத்துவதெனத் தீர்மானிக்கும். ISGA வசமுள்ள நிதிகளுள் வடக்கு கிழக்குப் பொதுநிதியம், வடக்கு கிழக்கு மீள்கட்டுமான நிதியம், விசேட நிதியம் ஆகியன உள்ளடங்கியிருக்கும்.

வடக்கு கிழக்கில் அல்லது வடக்கு கிழக்கிற்காக இலங்கை அரசு செய்யும் அனைத்துச் செலவுகளும் ISGAஇன் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது என்பதை இலங்கை அரசு ஏற்றுக்கொள்கிறது.

5 11.1. வடக்கு கிழக்குப் பொதுநிதியம்

வடக்கு-கிழக்கு பொது நிதியம் ISGAஇன் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதோடு பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கும்:

11.1. a. இலங்கை அரசாங்கம் ஏதேனும் குறித்த நோக்கங்களுக்காக வழங்கும் அனைத்து உதவிகளிலிருந்தும்; கடன்களிலிருந்தும் கிடைக்கும் பணம் மற்றும் ISGA இற்கு வழங்கப்படும் ஏனைய பிற கடன்கள் மூலம் பெறப்படும் பணம்,

11.1.b. அரசுகளுடனோ, நிறுவனங்களுடனோ ஏனைய அமைப்புக்களுடனோ ஏற்படுத்திக்கொள்ளும் ஒப்பந்தங்களின் அடிப்படையில் வடக்கு கிழக்கிற்கென சிறிலங்கா அரசாங்கத்தினால் குறித்தொதுக்கப்படும் நிதிகள்

11.1. c. கீழே குறிப்பிடப்படும் நிதியங்கள் தவிர்ந்த, ISGAக்கு கிடைக்கும் ஏனைய வரவுகள்.

11.2. வடக்கு கிழக்கு மீள்கட்டுமான நிதியம்

NERF அமைப்பு, கட்டுப்பாடு ISGAஇற்கு மாற்றப்படுவது தவிர, ஏனைய அம்சங்களில் அதன் தற்போதைய வடிவத்திலேயே தொடர்ந்தும் இருக்கும்.

வடக்கு கிழக்கு மீள்கட்டுமானத்திற்காகக் கொடுக்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளும் NERF இற்கூடாகப் பெறப்படும்.

NERF நிதியத்திலிருந்து பெறப்படும் வளங்களை பயன்படுத்துவது தொடர்பாக ISGA நேரடியாக முடிவுகளை எடுத்துக் கண்காணிக்கும்.

11.3. விசேட நிதியம்

மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, மீள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றிற்கென்றே வரும் கடன்களும் கொடுப்பனவுகளும், NERF நிதியத்தினு}டாக உள்வரமுடியாதவிடத்து, இந்த விசேட நிதியத்திற்குள் உள்வாங்கப்படும். ஏனைய நிதியங்களைப் போலவே இந்த விசேட நிதியமும் ISGA இன் கட்டுப்பாட்டில் இருக்கும்.

12. கடன் பெறுவதற்கும் உதவி பெறுவதற்கும் வர்த்தகத்திற்குமான அதிகாரங்கள் உள்ளுரிலும் வெளியூரிலும் கடன் பெறுதல், உத்தரவாதங்களையும் இழப்பீடுகளையும் வழங்குதல், நேரடியாக உதவிகளைப் பெறுதல், உள்ளுர் மற்றும் வெளியூர் வர்த்தகத்தில் ஈடுபடுதல் அல்லது அதனை ஒழுங்கமைத்தல் போன்றனவற்றிற்கான அதிகாரங்களை ISGA கொண்டிருக்கும்.

13. நிதிக் கணக்கீடும் கணக்காய்வும்

13.1. ISGA ஓர் கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கும்.

13.2. இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிதியங்களும் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீடு மற்றும் கணக்காய்வு நியமங்களுக்கு அமைவாகச் செயற்படுத்தப்பட்டு, பேணப்பட்டு, கணக்கீடு செய்யப்படும். இந்தக் கணக்குகள் கணக்காய்வாளர் நாயகத்தால் ஆய்வுnசெய்யப்படும். சர்வதேச மூலங்களிலிருந்து பெறப்படும் அனைத்து நிதிகளது கணக்காய்வும், ISGAஆல் நியமிக்கப்படும் சர்வதேசப் புகழ்பெற்ற நிறுவனத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும்.

6 14.1. தனது சட்டவாக்க மற்றும் நிறைவேற்று அதிகாரங்களைக் காத்திரமாகச் செயற்படுத்துகையில், மாவட்டங்களில் நிர்வாகத்தினை மேற்கொள்வதற்காக ISGAஇ மாவட்டக்குழுக்களை உருவாக்கி, இந்தக் குழுக்களுக்கு தான் தீர்மானிக்கின்ற அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கலாம்.

ISGAஇற்கும் குழுக்களுக்கும் இடையிலான ஒரு இணைப்பாளராகச் சேவையாற்றக்கூடியவாறு, ISGAஇன் உறுப்பினர்கள் மத்தியிலிருந்து ISGAஆல் இந்தக் குழுக்களது தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

14.2. குழுவின் ஏனைய உறுப்பினர்களும் ISGAஆல் நியமிக்கப்படுவதோடு இந்த நியமனங்கள் எதனையும் இடைநிறுத்துவதற்கு அல்லது முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அதிகாரங்களையும் ISGA கொண்டிருக்கும். இந்த உறுப்பினர்களை நியமிக்கையில், அனைத்து சமூகங்களதும் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கு உரிய கவனம் செலுத்தப்படும்.

14. மாவட்டக் குழுக்கள்

14.3. இந்தக் குழுக்கள் ISGAஇன் கீழ் நேரடியாகச் செயற்படும்.

14.4. ISGAஇன் பிரதான செயலாட்சியாளர் மாவட்டங்களில் பிரதான நிறைவேற்று அதிகாரிகளை நியமிப்பதோடு இந்தப் பிரதான நிறைவேற்று அதிகாரிகள், குழுக்களுக்குச் செயலாளர்களாகவும் செயற்படுவார்கள். இந்த நியமனங்கள் எதனையும் இடை நிறுத்துவதற்கு அல்லது முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அதிகாரங்களை பிரதான செயலாட்சியாளர் கொண்டிருப்பார்.

14.5. குழுக்களது அனைத்து நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் அந்தந்தக் குழுக்களது செயலாளர்கள் ஊடாக ஒருங்கிணைக்கப்படும்.

14.6. நிர்வாகத்திற்கு உதவியாக இருப்பதற்காக உப குழுக்களும் நியமிக்கப்படலாம்.

15. நிர்வாகம்

தனது நிறைவேற்று அதிகாரங்களைச் செயற்படுத்துவதன் ஒரு பகுதியாக, இந்த ஒப்பந்தத்தின் சரத்து 9இல் குறிப்பிடப்பட்ட அதிகாரங்களுடன் தொடர்புபட்ட வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து நிர்வாக அமைப்புக்களும் ஆளணியும் ISGAஇன் கட்டுப்பாட்டிலும் நெறிப்படுத்தலின் கீழும் அமையும்.

ISGA தற்றுணிவுடன், தேவையான துறைகளில் நிபுணர்களது ஆலோசனைக் குழுக்களை உருவாக்கலாம். இந்த ஆலோசனைக் குழுக்கள் பொருளாதார விவகாரங்கள், நிதி விவகாரங்கள், நீதி விவகாரங்கள், மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு விவகாரங்கள், அடிப்படைக்கட்டுமானங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகள் ஆகியனவற்றிற்கும் இவற்றிற்கென மட்டுப்படுத்தப்படாமல் இன்னும் தேவையான துறைகளுக்கும் அமைக்கப்படலாம்.

16. காணி நிர்வாகம்

சரத்து 9இல் (ISGAஇன் நியாயாதிக்கம்) குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயற்படுத்துவதற்குக் காணி முக்கியம் என்பதால், வடக்கு கிழக்கிலுள்ள தனியாருக்குச் சொந்தமானவை தவிர்ந்த எல்லாக் காணிகளையும் பகிர்ந்தளிப்பதற்கும் மற்றும் பொருத்தமான தேவைகளுக்குப் பயன்படுத்துவதைத் தீர்மானிப்பதற்குமான அதிகாரத்தை ISGA கொண்டிருக்கும்.

காணிகளிலிருந்து விரட்டப்பட்ட மக்களது காணிகளின் உரிமை, அத்துமீறிக் குடியேறியோர் வசிக்கும் காணிகளின் உரிமை போன்றவற்றை, காலம் எவ்வளவு கடந்திருந்தாலும் கூட, விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென காணி நிர்வாகம் தொடர்பான ஒரு விசேட ஆணைக்குழுவை ISGA நியமிக்கும்.

விசேட ஆணைக்குழு செயற்படுகின்ற காலவரையறையை ISGA தீர்மானிக்கும்.

17. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் மீள்குடியமர்வு

இலங்கை அரசாங்கத்தின் ஆயுதப் படைகளால் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையும் இத்தகைய காணிகளுக்கு உரித்துடைய பொதுமக்கள் தங்குதடையின்றிச் செல்வதற்கான உரிமையை மறுப்பதும் சர்வதேசச் சட்ட நியமங்களை மீறும் செயலாகும். இந்த காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட்டு, அவற்றின் உரிமை முன்னைய உரித்தாளர்களுக்கு மீளளிக்கப்படவேண்டும். சொந்தக்காரர்களிடமிருந்து அவர்களது காணிகளைக் கடந்த காலங்களில் பறித்து வைத்திருந்தமைக்காக, இலங்கை அரசாங்கம் அவர்களுக்குக் கட்டாயம் நட்டஈடு செலுத்தவேண்டும்.இந்த காணிகளில் இடம்பெயர்ந்த மக்களையும் அகதிகளையும் மீளக்குடியமர்த்திப் புனர்வாழ்வு அளிப்பதற்கு ISGA பொறுப்பாக இருக்கும்.

18. கடல் மற்றும் கரையோர வளங்கள்

வடக்கு கிழக்கு நிலப்பிரதேசத்தை அண்டிய கடல் மற்றும் கரையோர வளங்கள் மீது ISGA கட்டுப்பாட்டை கொண்டிருப்பதோடு இந்த வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாகத் தேவைப்படும் கட்டுப்பாடுகளை ஒழுங்கமைப்பதற்கான அதிகாரங்களையும் கொண்டிருக்கும்.

19. இயற்கை வளங்கள்

வடக்கு கிழக்கிலுள்ள இயற்கை வளங்கள் மீது ISGA கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும். அத்தகைய இயற்கை வளங்கள் தொடர்பாக ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும். அத்தகைய ஒப்பந்தங்களின் கீழ் வரவேண்டிய பணம் அனைத்தும் ISGA இற்கு செலுத்தப்படுவதை இலங்கை அரசு உறுதிசெய்யும். நடைமுறையிலிருக்கும் அத்தகைய ஒப்பந்தங்களில் எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் யாவும் ISGAஇன் சம்மதத்துடனேயே செய்யப்பட வேண்டும். எதிர்காலத்தில் இவற்றிற்கான ஒப்பந்தகள் ISGA உடன் செய்யப்பட வேண்டும்.

20. நீர்ப் பயன்பாடு

ஆறுகளின் கீழ்ப்பகுதியில் நீர் பெறுவோருக்கு நீதியாகவும் நியாயமாகவும் சம அளவிலும் நீர் கிடைப்பதை உறுதி செய்யவேண்டிய கடப்பாடு ஆறுகளின் தோற்று வாய்ப்பகுதிகளில் நீர் பெறுவோருக்கு உண்டு. இலங்கை அரசாங்கமும் ISGAஉம் நீர்வளப் பாவனையில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இந்தக் கோட்பாடு பின்பற்றப்படுவதை உறுதி செய்யவேண்டும்.

21. ஒப்பந்தங்களும் குத்தகைகளும்

ISGAஇன் நியாயாதிக்கத்தின் கீழ் வரும் விடயங்கள் தொடர்பாக எதிர்காலத்தில் எய்தப்படும் ஒப்பந்தங்கள் அனைத்தும் ISGA உடன் மேற்கொள்ளப்பட வேண்டும். நடைமுறையிலிருக்கும் ஒப்பந்தங்கள் அப்படியே தொடரும், ஆனால், இந்த ஒப்பந்தங்களின் கீழ் கிடைக்கும் அனைத்து வருமானங்களும் ISGAஇற்கு கொடுக்கப்படுவதை இலங்கை அரசு உறுதிசெய்ய வேண்டும். அத்தகைய ஒப்பந்தங்களில் ஏதேனும் மாற்றம் செய்வதாயின் ISGAஇன் சம்மதத்துடனேயே மேற்கொள்ளப்படவேண்டும்.

22. பிணக்குத் தீர்த்தல்

இந்த ஒப்பந்தச் சரத்துக்களுக்கு அர்த்தம் கற்பிப்பதிலோ நடைமுறைப்படுத்துவதிலோ இரு தரப்பினரிடையேயும் பிணக்கு ஏதேனும் ஏற்பட்டு, அப்பிணக்கு நோர்வே அரசின் நல்லிணக்கம் உட்பட இரு தரப்பினருக்கும் ஏற்புடைத்தான வேறு ஏதாவது வழியில் தீர்க்கப்பட முடியாவிட்டால் மூன்று அங்கத்தவர்கள் - இதில் இருவர், தரப்பிற்கு ஒருவர் என்ற ரீதியில் இரு தரப்பினராலும் நியமிக்கப்படுவர் - கொண்ட ஓர் இணக்கமன்றின் முன் விசாரிக்கப்படும். இரு தரப்பினராலும் கூட்டாக நியமிக்கப்படும் மூன்றாவது அங்கத்தவர் மன்றின் தலைவராகச் செயற்படுவார். தலைவர் நியமனத்தில் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்படுமிடத்து, மன்றின் தலைவரை நியமிக்குமாறு சர்வதேச நீதிமன்றின் தலைவரை (President of the International Court of Justice) இரு தரப்பினரும் கோருவர்.

எந்தவொரு தகராறு பற்றியும் தீர்மானம் எடுக்கையில், பிணக்குத் தீர்ப்பவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளதும் இலங்கை அரசாங்கத்தினதும் சமத்துவமான நிலையை உறுதி செய்வதோடு, இந்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளை மாத்திரமே உசாத்துணையாகக் கொண்டு பிணக்குகளைத் தீர்ப்பர். பிணக்கு தீர்ப்பவர்களது தீர்மானம் இறுதியானதாகவும் முடிவானதாகவும் இருப்பதோடு, பிணக்கில் சம்பந்தப்பட்ட தரப்புக்களையும் கட்டுப்படுத்தும்.

23. செயற்படும் காலம்

பேச்சுவார்த்தை மூலமான நிரந்தரத் தீர்வொன்றின் விளைவாக வடக்கு கிழக்கிற்கென ஓர் புதிய அரசாங்கம் நிறுவப்படும்வரை, இந்த ஒப்பந்தம் தொடந்து நடைமுறையிலிருக்கும். அத்தகைய ஒரு தீர்வை எவ்வளவு விரைவாக அடைய முடியுமோ அவ்வளவு விரைவாக அடைவதற்கு இரு தரப்பும் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்.

இருப்பினும்கூட, இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கிடையே நான்கு வருடங்களின் முடிவில் இறுதி உடன்படிக்கை எதுவும் எட்டப்படாவிட்டால், ஒப்பந்தத்தின் விதிகளை மேலும் அதிகரித்து, தெளிவுபடுத்தி, வலுப்படுத்தும் நோக்கத்தில் இரு தரப்பும் நல்லெண்ணத்தோடு பேச்சுக்களில் ஈடுபடும்.

நன்றி: புதினம்.கொம்

Print this item

  உலகின் சொர்க்கம்
Posted by: சாமி - 11-01-2003, 10:23 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

உலகின் சொர்க்கம் எது என்றால் தாயின் மடி என்பார்கள் கவிஞர்கள். ஆனால் ஐ.நா., பூலோக சொர்க்கமாக நார்வே நாட்டை குறிப்பிடுகிறது.

அங்கு வாழ்வதற்கான வசதிகள் குறித்தும் ஐ.நா., வியப்பு தெரிவித்துள்ளது.

அங்கு மக்கள் பெற்றுள்ள பொருளாதார வசதி, வாழ்க்கை வசதிகள் அடிப்படையில் ஐ.நா., இதை தெரிவித்துள்ளது.

"நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு' என்று பெயர் பெற்ற நார்வே உலகளவில் அந்தஸ்தில் முதலிடம் பெற்று வருகிறது.

நார்வே குறித்து நீங்கள் அறிந்து கொள்ள செல்ல வேண்டிய தளம்: http://www.visitnorway.com/

நார்வேக்கு செல்வது எப்படி, அங்கு பார்க்க வேண்டிய விஷயங்கள், தங்கும் வசதி, பிசினஸ் டூர், பொழுது போக்கு அம்சங்கள் என்று ஏராளமான தகவல்களை இத்தளம் கொண்டுள்ளது.

நார்வேக்குள் எப்படி பயணம் செய்வது, கார் வாடகை, விமானப் பயணம் என்று பயனுள்ள தகவல்களைத் தரும் தளம் :

http://www.alltravelnorway.com/

நார்வேயில் என்ன என்ன தொழில்கள் இருக்கின்றன என்பதைப் பற்றி அறிய பார்க்க வேண்டிய டைரக்டரியைப் பெற நீங்கள் செல்லவேண்டிய தளம் :http://www.norway.com/

நார்வே செய்திகளைப் படிக்க நீங்கள் செல்ல வேண்டிய தளம் : http://www.aftenposten.no/english

நார்வேயின் நிலப்பரப்பு, சுற்றுலாப் பயணிகளுக்கான முக்கிய தகவல்கள், வரலாறு, கலாச்சாரம், வரைபடங்கள் என்று ஏராளமானதகவல்களைக் கொண்டுள்ள தளம் : http://www.lonelyplanet.com/destinations/europe/norway

நன்றி: தினமலர்

Print this item

  கை வைத்தியம்
Posted by: shanmuhi - 11-01-2003, 10:16 PM - Forum: மருத்துவம் - Replies (12)

<b>தொண்டை நோவுக்கு கை வைத்தியம் ஏதும் தெரிந்தால்........... தெரிவிப்பீர்களா ? ? ?

நன்றி.</b>

Print this item

  vanakam
Posted by: nilla - 11-01-2003, 08:10 PM - Forum: அறிமுகம் - Replies (13)

Hallo everybody
நானும் உள்ளே வரலாமா?

Print this item

  Introduction
Posted by: suppiah suthanthararajah - 11-01-2003, 06:33 PM - Forum: அறிமுகம் - Replies (37)

vanakkam! En vanakkam konjam sunakkam.Illai pinakkam;Yes inakkam.Neengal ennodu inakkam I am Suthanthiraraja. I am quite enthusiastic of selfdetermination of Tamils and liberty of the tamil community.Totally dawn of Tamileelam is my anxiety. Suthanthiraraja is really proud to say that he is a Tamilan and a tamilan from Tamileelam. Professonally I am a teacher at present.My hobbies are writting poems,stories and dramas.
I am a poet,an author,a teacher,a clerk and a cleaner.Yes!I am jack of all trades;Master of none.The name of my beter part is Laitha. I have two sons named Ilankumaran and Ilavarasan. They are studying as engineers. East or west home is the best. I lost my best. Yes! I Iive in Sweden at present.I am really intressted to write sometyhing in tamil.Next time i will write in tamil.thanks
suthanthiran

Print this item

  நில்லாமல் வா நிலாவே...! பகுதி-06
Posted by: sharish - 11-01-2003, 06:00 PM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

[b]<span style='font-size:25pt;line-height:100%'>நில்லாமல் வா
நிலாவே...!</span>

பகுதி-06

நான் நினைக்கின்றேன்
அவள்
என்னைக் கனவில்த்தான்
கண்டிருப்பாள்...!
கனவில்க் கண்டதால்த்தான்
ஞாபகம் இல்லாமல்
ஏங்கேயோ
கண்டேன் என்கிறாள்...!

நானும் அவளை
நேரில் காணுமுன்னம்
கனவில்த்தான் கண்டேன்..!
என்னைப்போலவே
ஏன்
அவளும் கனவில்
என்னைக்
கண்டிருக்கக் கூடாது...?
ஏன் இது
சாத்தியமாகாது...?

ஒவ்வொரு உயிரினங்களும்
இரண்டு உலகங்களில்
வாழ்ந்துகொண்டிருக்கிறது...!
ஒன்று நிஜவுலகம்...!
மற்றயது
கனவுலகம்...!

கனவில்த்தான் மனிதன்
தன்னில் ஒட்டப்பட்ட
கறைபடிந்த ஆடைகளை
அவிழ்த்தெறிந்துவிட்டு...
சுகந்திரமாக
உலாவருகின்றான்..!

நிஜவுலகில்...
திருடன் என்ற
பெயரோடு
அல்லது...
கொலைகாரன் என்ற
பெயரோடு
அல்லது...
பொறாமைக்காரன் என்ற
பெயரோடு
அல்லது...
வஞ்சகன்
கஞ்சன்
கிறுக்கன்
பித்தன்
இப்படியாக
மனிதன் புனைப்பெயர்கள்
நீழ்கிறது..!

நிஜவுலகில்...
மனிதன்
தன் சொந்தப் பெயரோடு
நடமாடுவது
மிகவும் குறைவு...!

கனவில்த்தான் மனிதன்
மனிதனாக நடமாடுகிறான்...!

ஆகவே...
அன்புக்குரியவர்களே...
தூக்கத்தின் வழியே
கனவுலகில் இருப்பவர்களை
தட்டி எழுப்பாதீர்கள்...!
அவர்கள் பாவம்...!

ஏனெனில்..
ஒன்று
அவனின் நின்மதியான
நித்திரை கலைந்துவிடும்
இரண்டு....
அவன் கண்ட
கனவு என்ற சொற்கம்
தொலைந்துவிடும்..!

கலைந்துபோன தூக்கத்தை
மீண்டும்
முயற்சிசெய்து வரவைக்கலாம்...!
ஆனால்..
அறுந்துபோன கனவை
அதன்
முதல்ப்பாதியிலிருந்து
தொடர முடியுமா...?

நடுக்கடலில்
தூய்மையான காற்றை
சுவாசிப்பதுபோல்...

நிலத்துக்கு அடியில்
தூய்மையான நெருப்பு
இருப்பதுபோல்தான்
மனிதனின் கனவுலகும்
தூய்மையானது.....!

அடிக்கடி
நாம்
சொற்கத்துக்கு சென்று
திரும்புவது
இந்த தூய்மையான
சொற்பனத்தில்த்தான்...!

இப்படியாக
மனிதன் இன்னும் ஒரு
உலகமான
கனவுலகில் தினம் தினம்
வாழ்ந்துவிட்டுத்
திரும்பும் போது...
அவள் மட்டும்
ஏன் விதிவிலக்கு...???

எங்கேயோ
கண்டேன் என்று
என்னவள்
என்னோடு
எதையெதையோ எல்லாம்
விசாரித்துக்கொண்டிருக்க
எங்கிருந்தோ
சிவ©சையில்
கரடிவந்ததுபோல்
வந்தார்கள் எனக்கு
ஏற்கனவே நன்கு பழக்கமான
இரண்டு நண்பர்களும்
ஒரு நண்பியும்..!

அவர்கள்
வருவதைக்கண்டு...
ஏனோ தெரியவில்லை
என் நிலா
என்னைவிட்டு
சொல்லாமல் செல்கிறாள்...!

அவள் போவதைக்கண்ட
நண்பன்...
""என்னமச்சான் அதுவும்
எங்களமாதிரி
""சோறு"" போலகிடக்கு...???""

அவன் பேசியது
அவள் காதுகளுக்கு
கேட்டதோ
இல்லையோ
எனக்குத்தெரியாது
ஆனால்...
அவள்
அவனைநோக்கி
அனல்வீசும் பார்வையை
வீசிச்சென்றது என்
கண்களுக்கு
தெளிவாகத்தெரிந்தது...!


(நிலவு வரும்...)

த.சரீஷ்
01.11.2003 (பாரீஸ்)

Print this item

  வசியக்காரி.... பகுதி-3
Posted by: sharish - 11-01-2003, 05:56 PM - Forum: கவிதை/பாடல் - Replies (3)

[b][size=24]வசியக்காரி.... பகுதி-3

மல்லிகைமேனி
முல்லை ரணி...
நீ
மலர்வாசம்..!
உன்னுள்த்தான் என்
மனவாசம்...!

©க்கள்
பொறாமைப் படுகிறது
வண்டுகள்
உன்னைத்தேடி வருவதனால்..!

தங்கத்தடாகத்தில்
©த்த கமலா....!
அல்லி உந்தன் அன்னை
மல்லி உந்தன் தங்கை
முல்லை உந்தன் மாமி
றோஜா...
செவ்வந்தியெல்லம்
உனக்கு...
சித்தியும் பெரியம்மாவும்...!


இருள்
பயந்தோடி பதுங்குகிறது
உன்
கூந்தல் என்ற...
இருண்ட தேசத்தைக்கண்டு...!


உன் கொலுசுகள்
பாதத்தை தழுவும்...
ஏதாவது
திருவிழா என்னால்த்தான்
அப்போதெல்லாம்
என் காதுகளுக்கு...
திருவிழா அல்ல
பெருவிழா...!


நீ
சேலைகட்டி சாலையில்
நடந்துசெல்கிறாய்
கொலுசும்...
பாதத்தில் தாளம்தட்டி
பாடிக்கொண்டு செல்கிறது
தீப்பிடித்து எரிகிறது
என் இதயம்...!


காதுகளுக்கு
விருந்துபடைக்கும்
வேணுகானமே...
நீ
பேசினால் ©பாளம்
சிரித்தால் சிவரஞ்சினி
பாடினால் மோகனம்...!


என் மனதுக்குள்
மிருதங்கச்சத்தம்
அப்போது நீ...
நடந்துசெல்லும் நேரம்...!
என் இதயத்தில்
ஜலதங்கச்சத்தம்
அப்போது நீ...
நடனமாடும் நேரம்...!

ஒருதடவையல்ல
ஒன்றுக்குப் பலதடவை
உன் அசைவுகளையும்
நெழிவுகளையும்
ஆலாபனை செய்துகொண்டே
ஒவ்வொரு வினாடியும்
நகர்கிறது...!


அலைகள்
எப்போது ஓய்ந்தது..?
உன்
நினைவுகள்
எப்போது அழிந்தது..?


மனசு
தவிக்கிறது
நுரையீரல்
புகைக்கிறது
உள்ளுக்குள்
ஏதோ ஒன்று
கொடிய முள்ளாய்
குத்திக்கொண்டிருக்க
உணர்வையெல்லாம்
கவிதையாக
வெளியேற்றவென்று
எழுதத்தொடங்கினேன்....
உன்
பெயரை மட்டும்...!
இதைவிட
நல்ல கவிதையெழுத...
என்னால் முடியவில்லை...!


மொழிவடிவில் சொல்லமுடியாது
என் உணர்வுகளை...!
அதற்கு அத்தகைய
சக்தி இல்லையே என்று
மிகவும் வருந்துகிறேன்
பிறகு...
எப்படி சொல்வது
நான்
உன்னைப்பற்றி
சிந்திப்பதை....?
அதையும்...
சிந்தித்துக்கொண்டே
இருக்கிறேன்...!!!


நல்லவேளை நீ
இராமாயாண காலத்தில்
பிறக்கவில்லை...!
இல்லையேல்...
இதிகாசத்தில் ஒன்று
இல்லாமலே போயிருக்கும்...!
இராவணன்
சீதைக்குப் பதிலாய்
உன்னைத்தான்
கடத்திச் சென்றிருப்பான்...!


சக்தியில்லையேல்
சிவமில்லை
ஆண்பாதி
பெண்பாதி என்றெல்லாம்
ஏதேதோ சொல்கிறார்கள்..!
ஆனால்...
நானும் நீயும்
அப்படியல்ல...
உன் சிரிப்புக்கு
சதவீதம் அதிகம்...!
நான் கால்ப்பாதிதான்...!!!


நான் உன்னிடம்
தோற்றுவிட்டேன்...!
தோல்வியை
ஒப்புக்கொள்கிறேன்..!
வா.......
வந்து என்னை
கைதுசெய்து உந்தன்
மனக்கூண்டில் அடைத்துவிடு...!
.........................................


(இன்னும் வரும்...)

த.சரீஷ்
01.11.2003 (பாரீஸ்)

Print this item