Yarl Forum
நில்லாமல் வா நிலாவே...! பகுதி-06 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: நில்லாமல் வா நிலாவே...! பகுதி-06 (/showthread.php?tid=7889)



நில்லாமல் வா நிலாவே...! - sharish - 11-01-2003

[b]<span style='font-size:25pt;line-height:100%'>நில்லாமல் வா
நிலாவே...!</span>

பகுதி-06

நான் நினைக்கின்றேன்
அவள்
என்னைக் கனவில்த்தான்
கண்டிருப்பாள்...!
கனவில்க் கண்டதால்த்தான்
ஞாபகம் இல்லாமல்
ஏங்கேயோ
கண்டேன் என்கிறாள்...!

நானும் அவளை
நேரில் காணுமுன்னம்
கனவில்த்தான் கண்டேன்..!
என்னைப்போலவே
ஏன்
அவளும் கனவில்
என்னைக்
கண்டிருக்கக் கூடாது...?
ஏன் இது
சாத்தியமாகாது...?

ஒவ்வொரு உயிரினங்களும்
இரண்டு உலகங்களில்
வாழ்ந்துகொண்டிருக்கிறது...!
ஒன்று நிஜவுலகம்...!
மற்றயது
கனவுலகம்...!

கனவில்த்தான் மனிதன்
தன்னில் ஒட்டப்பட்ட
கறைபடிந்த ஆடைகளை
அவிழ்த்தெறிந்துவிட்டு...
சுகந்திரமாக
உலாவருகின்றான்..!

நிஜவுலகில்...
திருடன் என்ற
பெயரோடு
அல்லது...
கொலைகாரன் என்ற
பெயரோடு
அல்லது...
பொறாமைக்காரன் என்ற
பெயரோடு
அல்லது...
வஞ்சகன்
கஞ்சன்
கிறுக்கன்
பித்தன்
இப்படியாக
மனிதன் புனைப்பெயர்கள்
நீழ்கிறது..!

நிஜவுலகில்...
மனிதன்
தன் சொந்தப் பெயரோடு
நடமாடுவது
மிகவும் குறைவு...!

கனவில்த்தான் மனிதன்
மனிதனாக நடமாடுகிறான்...!

ஆகவே...
அன்புக்குரியவர்களே...
தூக்கத்தின் வழியே
கனவுலகில் இருப்பவர்களை
தட்டி எழுப்பாதீர்கள்...!
அவர்கள் பாவம்...!

ஏனெனில்..
ஒன்று
அவனின் நின்மதியான
நித்திரை கலைந்துவிடும்
இரண்டு....
அவன் கண்ட
கனவு என்ற சொற்கம்
தொலைந்துவிடும்..!

கலைந்துபோன தூக்கத்தை
மீண்டும்
முயற்சிசெய்து வரவைக்கலாம்...!
ஆனால்..
அறுந்துபோன கனவை
அதன்
முதல்ப்பாதியிலிருந்து
தொடர முடியுமா...?

நடுக்கடலில்
தூய்மையான காற்றை
சுவாசிப்பதுபோல்...

நிலத்துக்கு அடியில்
தூய்மையான நெருப்பு
இருப்பதுபோல்தான்
மனிதனின் கனவுலகும்
தூய்மையானது.....!

அடிக்கடி
நாம்
சொற்கத்துக்கு சென்று
திரும்புவது
இந்த தூய்மையான
சொற்பனத்தில்த்தான்...!

இப்படியாக
மனிதன் இன்னும் ஒரு
உலகமான
கனவுலகில் தினம் தினம்
வாழ்ந்துவிட்டுத்
திரும்பும் போது...
அவள் மட்டும்
ஏன் விதிவிலக்கு...???

எங்கேயோ
கண்டேன் என்று
என்னவள்
என்னோடு
எதையெதையோ எல்லாம்
விசாரித்துக்கொண்டிருக்க
எங்கிருந்தோ
சிவ©சையில்
கரடிவந்ததுபோல்
வந்தார்கள் எனக்கு
ஏற்கனவே நன்கு பழக்கமான
இரண்டு நண்பர்களும்
ஒரு நண்பியும்..!

அவர்கள்
வருவதைக்கண்டு...
ஏனோ தெரியவில்லை
என் நிலா
என்னைவிட்டு
சொல்லாமல் செல்கிறாள்...!

அவள் போவதைக்கண்ட
நண்பன்...
""என்னமச்சான் அதுவும்
எங்களமாதிரி
""சோறு"" போலகிடக்கு...???""

அவன் பேசியது
அவள் காதுகளுக்கு
கேட்டதோ
இல்லையோ
எனக்குத்தெரியாது
ஆனால்...
அவள்
அவனைநோக்கி
அனல்வீசும் பார்வையை
வீசிச்சென்றது என்
கண்களுக்கு
தெளிவாகத்தெரிந்தது...!


(நிலவு வரும்...)

த.சரீஷ்
01.11.2003 (பாரீஸ்)


- aathipan - 11-01-2003

அற்புதம்.......அருமை.... இன்னும் வேண்டும்..........


- Paranee - 11-02-2003

ஆஹா
அருமை நண்பா !
வாழ்த்துக்கள்

யாழ் இணையத்தின் காதல் கவி என்றதற்கு உகந்தவர் நீங்கள்தான்
தொடருங்கள்

நிலாவை நானும் ரசிக்கின்றேன்

நட்புடன்
ந.பரணீதரன்