Yarl Forum
கனவுகள்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கனவுகள்... (/showthread.php?tid=7881)



கனவுகள்... - PATCHI - 11-02-2003

ஆடி
ஓடி
காய்த்து(க்)
கனிந்து

தேடி
நாடி
வாடி(க்)
குவிந்து

பாடி
சாடி
கூடி(க்)
கலைந்து

மீறிக் களைத்துவிட்டேன்...!

தலை
நிலை
மலை
குலையென்றாகிடினும்

வானம்
மானம்
நாணம்
அதுவுமிலை என்றாகிடினும்

இரணம்
கரணம்
அதனால்
மரணம்
அதுதான் வந்திடினும்

ஈற்றில் வென்றது என் கனவுகளே.!

கனவுகள்...
அவை வாழும் உணர்வுகள்...!



ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ்


- aathipan - 11-08-2003

வாழ்க உங்கள் கவியாற்றல்

பட்சியாக் பறந்துவிடவேண்டாம்
இன்னும் இன்னும் கவிதைகள் கொடுங்கள்
கவிதைளை நேசிக்கும் பட்சிகள் நாங்கள்


- இளைஞன் - 11-12-2003

Quote:ஆடி
ஓடி
காய்த்து(க்)
கனிந்து

தேடி
நாடி
வாடி(க்)
குவிந்து

பாடி
சாடி
கூடி(க்)
கலைந்து

மீறிக் களைத்துவிட்டேன்...!

வாசிக்கும் பொழுது ஒரு உணர்வு தோன்றுகிறது.
யோசிக்கும் பொழுது ஒரு உண்மை
தோன்றுகிறது.
நன்றி பட்சி. பகிர்க இன்னும்!


- veera - 11-17-2003

அநுபவங்கள் தான் சிறந்த பாடங்கள்.
உங்கள் அநுபவங்கள் சிறந்த வழிகாட்டல்கள்.

இன்னும் அதிகமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள் அருமைப் பட்சியே

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
கவிதைளை நேசிக்கும் பட்சிகள் நாங்கள்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- shanmuhi - 11-17-2003

பட்சியை இப்போது அதிகம் காணமுடியவில்லையே
எங்கே பறந்து விட்டது.


Re: கனவுகள்... - AJeevan - 11-17-2003

<!--QuoteBegin-PATCHI+-->QUOTE(PATCHI)<!--QuoteEBegin-->
கலைந்து
மீறிக் களைத்துவிட்டேன்...!
[Image: birdgirl.jpg]
ஈட்டில் வென்றது என் கனவுகளே.!
கனவுகள்...
அவை வாழும் உணர்வுகள்...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கனவுகள் நனவாகும்............


- PATCHI - 11-18-2003

கனவு
நினைவு
வரவு - இதனால்
நேரச் செலவு..

அதற்கும்
இறைவன்
வைத்தான்
வரவு

அதுதான்
நண்பர்கள்
தரும்
தரவு..

கவிதைகளை இரசிக்கும் பட்சிகளுக்கெல்லாம் கவிதை உலகத்தின் நன்றிகள் உரித்தாகட்டும்.

சண்முகி அவர்களே நலம்தானா?யாழின் முற்றப்பக்கம் வாருங்கள்!பெரும் பெரும் எழுத்தாளர்களின் படைப்புகள் அங்கிருக்கின்றது.ஒரு மூலையில் இந்தச் சிறியவனின் கிறுக்கல்களும் இருக்கின்றது..வாருங்கள்.!

நன்றிகள்.

ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ்


- shanmuhi - 11-20-2003

வணக்கம் பட்சி,

தங்களின் <b>இரை தேடிய இரவுகள்.... 2 </b> கதை வாசித்து எனது கருத்தை எழுதியுள்ளேன். ஆனால்.... பெயர் மாறிவிட்டது.
முதன்முதலாக அங்கே எழுதியது... சரியாக வாசிக்காததால் ஏற்பட்டது.

இனிமேல் திருத்திக் கொள்வேன்.