| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 362 online users. » 0 Member(s) | 359 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,221
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,225
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,595
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,278
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,593
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,022
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,412
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,108
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,977
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,236
|
|
|
| நிந்தவுூர் அரிசி ஆலை நீராவி கொள்கலன் வெடித்து சிதறியது?? |
|
Posted by: Mathivathanan - 10-30-2003, 12:20 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
நிந்தவுூர் அரிசி ஆலை நீராவி கொள்கலன் வெடித்துச் சிதறியதில்???????
இருவர் பலி, நால்வர் படுகாயம்.
நிந்தவுூர் 22ம் பிரிவு பிர தான வீதியிலுள்ள தனியார் அரிசி ஆலை ஒன்றில் நெல் அவிப்ப தற்கென நீர் கொதிக்க வைக்கும் ஸ்hPம் பொயிலர் வெடித்துச் சிதறி ஏற்பட்ட அனர்த்தத்தில் அந்த அரிசி ஆலையில் கூலித் தொழில் செய்த தொழிலாளி ஒருவரும், அவரது ஆறுமாத பெண்குழுந்தையும் இறந் ததுடன், மேலும் நான்கு தொழி லாளர்கள் படுகாயங்களுக்குள் ளாகி (எரிகாயங்கள்) வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கி ழமை நிந்தவுூரை பெரும் பரபரப்பி லாழ்த்திய இந்த அனர்த்தத்தில் தொழிலாளியான மட்டக்களப்பு கரவெட்டியைச் சேர்ந்த இ.சாந்தகு மார் எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையும், அவரது ஆறுமாத குழந்தையான தர்சிகா எனும் பெண் குழந்தையுமே இறந்துள் ளனர்.
நேற்றுக்காலை 8.15 மணி யளவில் இடம்பெற்ற இந்த ஸ்hPம் பொயிலர் வெடிப்புச் சம்பவத்தை யடுத்து பாதிக்கப்பட்ட தொழிலாள ர்கள் காரைதீவு விசேட அதிரடிப் படையினராலும், பொதுமக்களா லும் நிந்தவுூர் மாவட்ட வைத்திய சாலைக்கு உடனடியாக விரைந்து கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு வைத்திய அதிகா ரிகளான டாக்டர் ஹபீலுல் இலா ஹி, டாக்டர் எம்.எம்.எம்.றிசா ஆகி யோரும் வைத்தியசாலை தாதியர் களும், ஊழியர்களும் பெரும் பிரய த்தனங்களுடன் சிகிச்சை அளி ப்பதில் ஈடுபட்டுப் பெரும்சேவை யாற்றினர்.
அனர்த்தத்தில் படுகாயங் களுக்குள்ளான அரிசி ஆலைத் தொழிலாளர்களான என்.நிமலன், (சித்தாண்டி,மாவடிவேம்பு), புண்ணி மூத்தி (கரவெட்டி, நாவற்காடு), குமரகுரு ( உன்னிச்சை), எம்.ந வாஸ் (நிந்தவுூர்) ஆகியோருக்கு நிந்தவுூர் மாவட்ட வைத்தியசா லையில் ஆரம்ப சிகிச்சைகள் அளி க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச் சைக்காக அம்பாறை பொது வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.
இவ்வாறு அனுமதிக்கப் பட்டுள்ள தொழிலாளர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் இந்த அனர்த்த த்தில் உயிரிழந்த தொழிலாளி சாந் தகுமாரவினதும், அவரது குழந்தை தர்சிகாவினதும் சடலங்கள் நிந்தவுூர் மாவட்ட வைத்தியசாலை யில் வைக்கப்பட்டிருந்ததுடன் மரண விசாரணைக்கான ஏற்பாடு களும் செய்யப்பட்டிருந்தன.
குறித்த அரிசி ஆலையின் ஸ்hPம் பொயிலர் பொருத்தப்பட்டி ருந்த கட்டிடப் பகுதியும், அருகி லுள்ள சுவர்களும் இடிந்து நொறு ங்கிக் காணப்பட்டதுடன், அதன் ஒரு பகுதி வெகு து}ரத்திலும் வீசப் பட்டுக் காணப்பட்டது.
சம்மாந்துறைப் பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து விசார ணைகளை மேற்கொண்டனர்.
இறந்த தன் குழந்தைக்குப் பால் வாங்குவதற்குப் பணம் இல்லாத நிலையில், கணவரிடம் பணம் பெறவே தான் குழந்தை யுடன் மேற்படி நிந்தவுூர் அரிசி ஆலைக்கு மட்டக்களப்பு கரவெட்டி யிலிருந்து வந்ததாகவும், வந்த இடத்தில் கணவனையும், குழந்தை யையும் இழக்க வேண்டிய நிலை வந்துவிட்டதாகவும் இறந்த சாந்த குமாரின் மனைவி அழுது புலம்பிய வாறு தெரிவித்தார்.
|
|
|
| கால்களையும் கொஞ்சம் கவனியுங்களேன்! |
|
Posted by: சாமி - 10-29-2003, 08:40 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
மனித உறுப்புக்களில் முக்கியமானவற்றில் ஒன்று கால்கள். மொத்தம் 52 எலும்புகளின் ஒத்துழைப்போடு கால்கள் செயல்பட்டு வருகின்றன. 33 மூட்டுக்கள் உள்ளன. 38 தசைநார்கள் கால்களை இயக்க செயல்படுகின்றன. "மனிதனின் கால்கள் இயங்கும் விதம் ஆச்சரியமளிக்கிறது. அது இயற்கையின் ஒரு அற்புதமான படைப்பு' என்று மருத்துவர்கள் கூறுவர்.
கால்களை பொறுத்தவரையில் மொத்தம் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் வியர்வை சுரப்பிகள் செயல்படுகின்றன. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் முறை அடி எடுத்து வைத்து நடப்பதாக ஆய்வுகள் கூறி ஆச்சரியப்படுத்துகின்றன. தன் ஆயுள் காலத்தில் கால்களை பயன்படுத்தி ஒருவர் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கி.மீ., துõரத்தை கடக்கிறார் என்பதும் கூடுதல் செய்தி.
மனித உறுப்புகளிலேயே கால்கள் தான் அதிகமான எடையை எப்போதும் தாங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. மனிதன் சுமக்கும் கூடுதல் எடைகளையும் கால்கள் மட்டுமே தாங்கிக் கொள்கின்றன. அதுமட்டுமல்லாமல், ஒரு மனிதனின் உடலில் ஏற்படும் நீரிழிவு, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், ரத்த ஓட்டத்தில் குறைபாடு போன்றவைகளுக்கு கால்களும் ஒரு காரணமாகவே உள்ளன.
இப்படி பல்வேறு வகைகளில் முக்கியமான கால்களில் பிரச்னை ஏற்படுவது பொதுவானது. ஆனால், அவை பெரும்பாலான மக்களால் அலட்சியப்படுத்தப்படுகின்றன. கால்களை சரிவர பராமரிக்காவிட்டால் அது உடலில் பல்வேறு பாகங்களை பாதிக்கும் என்று மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. குறிப்பாக நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்குத் தான் பாதிப்பு அதிகம்.
"உங்களுடைய கால்கள் ரணமானால், உங்களுடைய உடம்பும் ரணமாகும்' என்பது ஒரு மருத்துவ பழமொழி. எனவே, கால்களை பராமரிக்க வேண்டியது மிக அவசியம். பொதுவாக, கால்களில் வெடிப்பு, பூஞ்சாள பாதிப்பு, ஆணி, தட்டைக்கால், கொப்புளங்கள், உலர்ந்த தோல் போன்ற பாதிப்புக்கள்தான் அதிகமாக தென்படுகின்றன.
ஈரப்பதம் குறைவாகும் காரணத்தால் கால்களில் உள்ள தோல் பகுதியில் வறட்சி ஏற்படுகிறது. பாதங்களில் ஏற்படும் வெடிப்பு காரணமாக, பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும், வெடிப்பு காரணமாக தாங்க முடியாத வலியும் ஏற்படும்.
கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது. அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தை தருகிறது. இந்த கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் "அல்சராக' மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.
ஒவ்வொருவரும் மற்ற உறுப்பு களைப் போலவே கால்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். கால்களை பராமரிப்பதற்காக டாக்டர் ஸ்கூல்ஸ் என்ற வெளிநாட்டு நிபுணர் கூறிய சில "டிப்ஸ்' இதோ:
கால்களில் வலி ஏற்பட்டால் அது மற்ற நோய்க்கு அறிகுறி என்பதால் அதை அலட்சியப்படுத்தாதீர். உடனே மருத்துவரை பாருங்கள். தினமும் கால்களை வெதுவெதுப்பான நீரில் சோப் மூலம் சுத்தம் செய்யுங்கள். இந்த முறையில் கால்களை நீரில் மூழ்க வைக்காதீர். அது வறட்சியை ஏற்படுத்திவிடும். ஈரமான கால்களை துடைக்கும் போது மறக்காமல் கால் விரல்களுக்கு இடையில் உள்ள பாகத்தையும் சுத்தப்படுத்துங்கள். அப்போதுதான் பூஞ்ச காளான் பாதிப்பில் இருந்து கால்கள் தப்பிக்கும்.
துடைத்த பின்னர் விரல் இடுக்குகளை தவிர மற்ற இடங்கள் அனைத்திலும் ஈரப்பதம் தரும் கிரீம்களை தடவுங்கள். இது வெடிப்புக்கள், தோல் உலர்ந்து போதல் போன்ற பாதிப்புக்களை தடுக்கும்.
கால்களில் காய்ந்த பகுதிகள் ஏதேனும் தென்பட்டால் அதை பக்குவமாக அகற்றி விடுங்கள். கால் ஆணி, கால் கட்டி போன்றவை தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி அவற்றை அகற்றி விடுங்கள். நீங்களாகவே இவற்றை அகற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்; அது வேறு உபாதைகளுக்கு வழிவகுக்கும்.
குறிப்பிட்ட நாட்களில் கால் விரல் நகங்களை அகற்றுங்கள். இதற்காக பிளேடு, கத்தி போன்றவற்றை பயன்படுத்தாமல், "நெய்ல்கட்டர்'களை மட்டுமே பயன்படுத்துங்கள். வெறும் காலில் நடப்பதை தவிருங்கள். புதிய காலணிகளை குறிப்பாக ஷýக்களை வாங்கும் போது உங்கள் கால் அளவை விட கொஞ்சம் பெரியவையாக வாங்கி பயன்படுத்துங்கள்.
இறுக்கமான காலணிகள் அணிவதை தவிருங்கள். காட்டன் "சாக்ஸ்'களை மட்டுமே பயன்படுத்துங்கள். ஹீல்ஸ் காலணிகள் எப்போதும் ஏற்புடையதல்ல.
இதை பின்பற்றினாலே போதும், கால்களால் எந்த பிரச்னையும் வராது.
எழுதியவர்: எஸ்.உமாபதி
நன்றி: தினமணி
|
|
|
| பத்திரிகைத் தர்மம் |
|
Posted by: சாமி - 10-29-2003, 08:24 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
பத்திரிகைத் தர்மம என்பது சுடுவதா?
<img src='http://www.yarl.com/forum/files/oslovoice.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/tamilalai.gif' border='0' alt='user posted image'>
|
|
|
| பிதாமகன் |
|
Posted by: aathipan - 10-29-2003, 07:04 PM - Forum: சினிமா
- Replies (20)
|
 |
பிதாமகன்
ஒரு அற்புதமான படைப்பு....
ஓரு குறுநாவல் பாடித்த உணர்வு...
சினிமாத்தனம் எதுவும்; இல்லை...
வெட்டியான் பாத்திரத்தில் விக்கிரம்...
போக்கிரியாக சூர்pயா....
இவர்கள் நடுவில் மலரும் நட்பு....
இதற்கு மேல் இப்போது வேண்டாம்
நீங்கள் படம் பார்;த்;துவிட்டு வாருங்;கள் பேசுவோம்
|
|
|
| சிங்கள அதிதீவிரவாதிகள் தாக்குதல் |
|
Posted by: kolumban - 10-29-2003, 03:37 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
சிங்கள அதிதீவிரவாதிகள் தாக்குதல்
Mob attack Sinhala-Tamil Cultural Festival in Colombo
[url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=10278http://www.tamilnet.com/art.html?catid=13&...00fff5][/url]
|
|
|
| அந்நாள் எங்கே? |
|
Posted by: சாமி - 10-28-2003, 08:37 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (1)
|
 |
ஆக்கம்: கவிஞர் காசி ஆனந்தன்
முடியோடு முன்னாளில்
மூவேந்தர் புகழோடு
முரசினோடு
கொடியோடு மாற்றார்முன்
குனியாத மார்போடு
கொற்றத் தோடு
படையோடு தனியான
பண்போடு பிறநாடு
பார்த்துப் போற்றும்
நடையோடு பாராண்ட
தமிழா! உன் நாடெங்கே?
புகழேடெங்கே?
தரணிக்கோ உன்நாடு
தாய்நாடு! நீயோ பார்
பட்டாய் பாடு!
தெருவுக்கு வந்தாய் பார்!
தேகத்தை விற்றே தின்
றாய் சாப்பாடு!
மரபுக்கு மாறாக
மாற்றான் கால் ஏற்றாய்பார்!
கெட்டாய் கேடு!
பரணிக்குப் பொருள்தந்த
தமிழா! பாழடித்தாய் பார்
வரலாற்றேடு!
வஞ்சத்தால் தமிழ் மண்ணின்
வாழ்வுக்குத் தீ வைத்த
வருவோர் தம்மை
நஞ்சுண்ட கைவேலின்
நாவுக்குப் பலியாக்கி
நாடு காத்த
நெஞ்சங்கள் இன்றெங்கே?
தமிழ்மான நெற்காட்டில்
நெருஞ்சிப் பூண்டை
அஞ்சாமல் நட்டதார்?
தமிழா! உன் போர்வீரம்
அழிந்த தோடா?
வாள் தொட்ட கையெல்லாம்
வலிகுன்றிப் புகழ்குன்றி
மானம் குன்றிக்
கால்தொட்டு வாழ்கின்ற
கன்றாவிக் காலத்தைக்
கண்ணால் கண்டோம்....
பாழ்பட்ட இந்நாட்கள்
பலநாட்கள் ஆகாமல்
பார்த்துக் கொள்வோம்!
தோள்தட்டி மானத்தில்
தோய்கின்ற போராட்ட
நன்றி: முழக்கம்
|
|
|
| உன் நினைவு |
|
Posted by: Paranee - 10-28-2003, 09:35 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
உன் நினைவு
சிறகொடிந்தும் பறவை
சிறகடிக்கத்துடிப்பதுபோல்
உனை இழந்தும் என்மனம்
உன்னையே எண்ணுகின்றதே !
ந.பரணீதரன்
|
|
|
|