![]() |
|
அந்நாள் எங்கே? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: அந்நாள் எங்கே? (/showthread.php?tid=7906) |
அந்நாள் எங்கே? - சாமி - 10-28-2003 ஆக்கம்: கவிஞர் காசி ஆனந்தன் முடியோடு முன்னாளில் மூவேந்தர் புகழோடு முரசினோடு கொடியோடு மாற்றார்முன் குனியாத மார்போடு கொற்றத் தோடு படையோடு தனியான பண்போடு பிறநாடு பார்த்துப் போற்றும் நடையோடு பாராண்ட தமிழா! உன் நாடெங்கே? புகழேடெங்கே? தரணிக்கோ உன்நாடு தாய்நாடு! நீயோ பார் பட்டாய் பாடு! தெருவுக்கு வந்தாய் பார்! தேகத்தை விற்றே தின் றாய் சாப்பாடு! மரபுக்கு மாறாக மாற்றான் கால் ஏற்றாய்பார்! கெட்டாய் கேடு! பரணிக்குப் பொருள்தந்த தமிழா! பாழடித்தாய் பார் வரலாற்றேடு! வஞ்சத்தால் தமிழ் மண்ணின் வாழ்வுக்குத் தீ வைத்த வருவோர் தம்மை நஞ்சுண்ட கைவேலின் நாவுக்குப் பலியாக்கி நாடு காத்த நெஞ்சங்கள் இன்றெங்கே? தமிழ்மான நெற்காட்டில் நெருஞ்சிப் பூண்டை அஞ்சாமல் நட்டதார்? தமிழா! உன் போர்வீரம் அழிந்த தோடா? வாள் தொட்ட கையெல்லாம் வலிகுன்றிப் புகழ்குன்றி மானம் குன்றிக் கால்தொட்டு வாழ்கின்ற கன்றாவிக் காலத்தைக் கண்ணால் கண்டோம்.... பாழ்பட்ட இந்நாட்கள் பலநாட்கள் ஆகாமல் பார்த்துக் கொள்வோம்! தோள்தட்டி மானத்தில் தோய்கின்ற போராட்ட நன்றி: முழக்கம் - nalayiny - 10-28-2003 போர்க்குணம் கூடியதால் நாயினும் கேடானோம்.மனித நேயத்தோடு எம் வருங்கால சந்ததியை வளற்தெடுப்போம்.புலம் வந்ததால் புத்தி பெற்றோம். புகழுடை மாந்தராய் தரணியாளட்டும் எம் வருங்காலம். |