| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 362 online users. » 0 Member(s) | 359 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,221
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,225
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,595
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,278
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,593
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,022
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,412
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,108
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,977
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,236
|
|
|
| புலிகளின் தீர்வுத்திட்டம். |
|
Posted by: yarl - 10-28-2003, 06:22 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (53)
|
 |
புலிகளின் தீர்வுத்திட்டம்
அக்டோபர் 27 2003
thatstamil.com
இடைக்கால நிர்வாகத்தில் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கும் பிரதிநித்துவம்: புலிகள்
கொழும்பு:
வடகிழக்கில் அமையவுள்ள இடைக்கால நிர்வாகத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க விடுதலைப் புலிகள் இயக்கம் முன் வந்துள்ளது. இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இது முக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது.
அதிகாரப் பகிர்வு குறித்த தங்களது புதிய திட்டத்தில் விடுதலைப் புலிகள் இதனைத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
புலிகளின் திட்டத்தில் இதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
வட கிழக்கில் 100 பேர் கொண்ட இடைக்கால நிர்வாகக் குழுவை அமைக்கலாம். அதில்இ வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து தலா 50 பேர் இடம்பெற வேண்டும் .அக்குழுவில் 25 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படவேண்டும்.
மக்கள் தொகை அடிப்படையில்இ அனைத்து இனத்தவருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.
நிர்வாகக் குழுவுக்கு 20 பேர் கொண்ட காபினெட் அமைச்சரவை தலைமை வகிக்க வேண்டும். அதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து தலா 10 பேர் இடம் பெற வேண்டும்.
6 ஆண்டுகளுக்குள் முழுமையானஇ நிரந்தரமான அதிகாரப் பகிர்வுக்கு வழி வகுக்கும் வகையில் புதிய அரசியல் சாசனத்தை இலங்கை அரசு உருவாக்க வேண்டும்.
அதுவரை ஆயுதங்களை நாங்கள் கைவிட மாட்டோம். எங்களது ராணுவப் பிரிவும் கலைக்கப்படாது.
இடைக்கால ஆட்சியில் விடுதலைப் புலிகள்இ கடற்புலிகள் மற்றும் ராணுவம் ஆகியவை எவ்வாறு இயங்க வேண்டும் என்று தனியான விதிமுறைகளை வகுத்துக் கொண்டுஇ அதன்படி செயல்படலாம்.
இவ்வாறு புலிகள் தங்களது புதிய திட்டத்தில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. புலிகளின் கோரிக்கைகள் நியாயமானவையாக இருப்பதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புலிகளின் யோசனைகளை இலங்கை அரசின் தலைமை அமைதிப் பேச்சாளரும் அமைச்சருமான பெரிஸ் பாராட்டியுள்ளார்.
|
|
|
| நெருப்போடு நீச்சலில் பத்தாண்டுகள்.... |
|
Posted by: kuruvikal - 10-27-2003, 11:05 PM - Forum: நூற்றோட்டம்
- No Replies
|
 |
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/10/charlesAnthony_1_18474_435.jpg' border='0' alt='user posted image'>
தமிழீழ விடுதலைப்புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைப்பிரிவின் உருவாக்கமும் அதன் பத்தாண்டுச் செயற்திறனையும் வளர்ச்சியையும் அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லும் நூல் நெருப்போடு நீச்சலில் பத்தாண்டுகள்...ஜெயசுக்குறு....சிறிலங்காவின் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையில் ' செய் அல்லது செத்துமடி' என இலட்சிய வகுப்போடு களம் புகுந்து அமெரிக்க தளபதிகளின் கண்ணில் மண் தூவி வெற்றிகள் குவித்த நெஞ்சுரங்கள் அவர்கள்.....! அவர்களின் குருதி தோய்ந்த பாதையில் தான் இன்று எமது பயணம்...A9......வீதி அல்ல மக்களின் புதல்வர்களின் குருதியால் தோய்ந்த புனித வழியது...விலை மதிக்க முடியாத தமிழினச் சொத்து...!
|
|
|
| எங்களில் சிலருக்கும் பொருந்துமா? |
|
Posted by: சாமி - 10-27-2003, 10:31 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- No Replies
|
 |
அரபு நாடுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து விட்டு, தாயகம் திரும்பியுள்ள என் நண்பர் சொன்ன விவரங்களை அப்படியே தருகிறேன்...
அரபு நாடுகளில் உள்ள "ஷேக்'குகள் நேர்மையானவர்களாகவும், நாணயமானவர்களாகவும் தான் இருந்து வந்தனர். தொழிலாளர்களுக்கு தாராளமாக ஊதியம் வழங்கிக் கொண்டு தான் இருந்தனர்.
நம் நாட்டிலிருந்து அங்கு பிழைப்பு தேடிச் சென்று, அங்கு நிர்வாகப் பொறுப்பில் அமர்ந்த புல்லுருவிகள்
õன், ஷேக்குகளுக்கு தில்லுமுல்லு செய்யவும், ஊழல்
புரியவும், தொழிலாளர்கள் வயிற்றில் அடித்துச் சுரண்டவும் கற்றுக் கொடுத்தனர். சம்பளமே தராமல் வேலை வாங்கிக் கொண்டு விரட்டி விடவும் தயாராயினர்.
இவ்வாறு தொழிலாளர்களுக்கு சம்பளம் தராமல் ஏமாற்றும் கம்பெனியின் பெயரை கறுப்புப்புள்ளி பட்டியலில் நமது துõதரகம் சேர்த்துவிடும். கறுப்புப்புள்ளி பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்ட பிறகு அந்த கம்பெனிக்கு இந்தியாவிலிருந்து பணியாட்கள் எவரையும் அனுப்ப அரசாங்கம் (துõதரகம்) அனுமதி தராது.
நமது தில்லுமுல்லு கதாநாயகர்கள் அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர்.
ஒரு குறிப்பிட்ட ஷேக்கின் "அ' என்ற பெயருள்ள கம்பெனி கறுப்புப்புள்ளி பட்டியலில் இடம் பெற்றால், அந்த ஷேக் "ஆ' என்ற பெயரில் புது கம்பெனி துவக்கி, ஆட்களை இறக்குமதி செய்து ஊதியம் தராமல் தில்லுமுல்லு செய்யத் துவங்குவார். "ஆ' கம்பெனி கறுப்புப்புள்ளி பட்டியலில் இடம் பெற்றால், அடுத்து புதிதாக "இ' கம்பெனி.
நம் நாட்டிலிருந்து பிழைக்கச் சென்ற ஊழல் பெருச்சாளிகள் கற்றுக் கொடுத்த கலையில் இப்போது "ஷேக்'குகள் ரொம்பவே தேறி படு புத்திசாலிகளாகி விட்டனர்; தொழிலாளர்கள் தான் சிக்கலில்.
நன்றி: தினமலர்
|
|
|
| வேதனையான உண்மை |
|
Posted by: Paranee - 10-27-2003, 01:11 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (121)
|
 |
வேதனையான உண்மை
தாயகத்தில் இரவுக்கொள்ளையர்களின் அட்டகாசம் கடந்த சில மாதங்களாக வாரங்களாக நாட்களாக அதிகரித்திருந்தன. இந்த தொல்லைகளிற்கு எனது உறவினர்களும் ஆளாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திருட்டுத்தொழிலில் ஈடுபடுபவர்களை பிடித்துக்கொள்வதற்காக இரகசியமான முறையில் இளைஞர்குழவொன்று நியமிக்கப்பட்டு அவர்கள் ரோந்தில் ஈடுபட்டபோது ஓரு கும்பல் அகப்பட்டது. முகமூடிகள் கத்திகள் பொல்லுகள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் சகிதம் பிடிபட்ட அவர்களின் முகத்திரை கிழிக்க்பட்ட போது எல்லோரிற்கும் அதிர்ச்சி. ஏனென்றால் ஜரோப்பிய தேசத்தில் இருந்து விடுமுறையில் வந்துநின்ற சில ஊர் இளைஞர்களே இந்த திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். (அவர்களின் பெயர் விபரங்கள் சிலகாரணங்களினால் தரமுடியவில்லை.) அந்த முகமூடித்திருடர்கள் அனைவரும் ஊரவர்கள் என அறிந்தபோது ஊரே அதிர்ச்சியில் இருக்கின்றது.
|
|
|
| பாலம் ஒன்றுதேவை |
|
Posted by: aathipan - 10-27-2003, 09:29 AM - Forum: புலம்
- Replies (6)
|
 |
இந்தியத் தமிழர்களின் அதரவு ஈழத்து தமிழர்களுக்கு நிச்சம் தேவை என நினைக்கின்றேன்.
அரசியல் வாதிகளை விட்டுவிடுங்கள். அவர்கள் வோட்டு வேட்டைக்காக எம்மை பகடைகளாக பயன்படுத்துகின்றவர்கள். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் குறிப்பாக கிராமத்து தமிழர்கள் எம்மை இன்றும் நேசிக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் அவர்களுக்கு இந்திய பத்திரிகைகள் தவறான செய்தியை கொடுத்து எமது பெயரை கெடுத்து வைத்துள்ளன.
இன்று இலங்கைத்தமிழன் என்றால் கஞ்சா கடத்துபவன் என்ற அவப்பெயர் வந்துவிட்டது. எமது மக்களின் சுதந்திர போராட்ங்கள் கொள்கைகள் இங்கே திரித்து எம் போராளிகள் சர்வதேச கடத்தல்காரர்கள் என்று எண்ணும் அளவிற்கு மக்களிடையே தவறான ஒரு கண்ணோட்டம் வந்துவிட்டது. இதைகண்டு அடிக்கடி இந்தியாவிற்கு வருகைதரும் இலங்கை அரசியல்வாதிகள் யாரும் கவலைப்படுவதாக தெரியவில்iலை. இந்தியாவில் இருக்கின்ற இலங்கைத் தமிழ் அகதிகளின் பிரதிநிதிகளும் கண்டுகொள்வதில்லை.
எமக்கமாக பேசிய வைக்கோ இன்று சிறையில். இராமதஸ் அவர்களும் வாயை மூடிவிட்டார். இவர்களைபற்றிகூடு கவலையில்லை. இங்கே இருக்கின்ற இந்து நிறுவனத்தின் ஒரு பத்திரிகையாளர் கல்லூரியில் எமது போராட்டம் பற்றி தவறான எண்ணம் இளம் பத்திரிகையாளர் மத்தியில் விதைக்கப்படுகிறது. விரிவுரையாளராக இலங்கையில் இருந்து லக்ஸ்மன் கதிர்காமர் தான் வருகிறார். இல்லையேல் சிங்கள பத்திரிகையாளர்கள் வருகின்றனர். இவர்கள் எம் போராட்டம் பற்றிதவறான் பல கருத்துகளை இங்கே விதைத்துவிட்டு செல்கின்;றனர்.எமது போராட்டம் பற்றி இவர்களுக்கும் தெளிவு இல்லை. எமது தரப்பில் எமது கருத்துக்களை இங்கே தெளிவுபடுத்த அடிக்கடி எம் நாட்டில் இருந்து படித்த பெரியவாகள் தலைவர்கள் இங்கு வரவேண்டும். அவர்கள் இந்த அரசியல் வாதிகளின் வலையிpல் விழுந்து விடாமல் எமது தரப்பு நியாயங்களை எடுத்துவைக்ககவேண்டும். பத்திரிகையாளர்களை கூட்டி எம் நியாயங்களை சொல்லவேண்டும்.
முன்பு ஒருகாலத்தில் தொண்டமான் ஒரு பாலமாக திகழ்ந்தார். யார் இப்பணியை தொடர்ந்து செய்யப்போவது. அவர் அரசியல் வாதியாக தான் இருக்கவேண்டும் என்பதில்லை.
பக்கத்து வீட்டுக்காரனுக்கே எங்கள் பிரச்னைகளை நாம் தெளிவு படுத்து முடியாவிடில் எப்படி மூன்றாம் தரப்பு நாடுளுக்கு விளக்க முடியும்
சம்பந்தபட்டவாகள் நடவாடிக்கை எடுக்க வேண்டும்..
அன்பு
ஆதி
|
|
|
| வசியக்காரி... பகுதி-2 |
|
Posted by: sharish - 10-27-2003, 09:17 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
<b><span style='font-size:25pt;line-height:100%'>வசியக்காரி....</b></span>
பகுதி-2
தீர்ப்பு எழுதியதும்
பேனாவை...
உடைத்துவிடுகிறார்களாம்...!
""நான் உன்னைக் காதலிக்கிறேன்""
தீர்மானித்து எழுதிவிட்டு
பேனாவை
உடைக்கவில்லை
தொடர்ந்து....
எழுதிக்கொண்டிருக்கிறேன்..!
நீ என்னவள்
எனக்கென்றே பிறந்தவள்
இனி....
நான் உன் அழகை
வர்ணிக்கப்போவதில்லை
அது.....
என் கவிதைகளை
நானே
புகழ்பதுபோல் ஆகிவிடும்...!
ஒவ்வொரு கவிஞனும்
முதலில் ஒரு...
காதலனாகத்தான் இருக்கின்றான்...!
ஒவ்வொரு காதலியும்
காதலனை...
கவிஞனாக்கத்தான் பிறக்கின்றாள்...!
நானாக எழுதவில்லை
என் கவிதைகளை...!
நீயேதான் எனக்குள் இருந்து
என் எண்ணத்தையும்
எழுதுகோலையும்
இயக்குகிறாய்..!
ஆகவே....
அக்கினியின் மகளே
எழுதிய என்...
கவிதைக் தொகுப்புக்கு வந்து
முன்னுரை எழுது...!
கல்லாய் இருந்த
அகலிகைக்கு
இராமனின் பாதம்பட்டதும்
உயிர் வந்ததாம்...!
காதல் கயல்விழி...
நீயும் கடவுளா...?
கல்லாய் இருந்த நானும்
உன் பார்வை பட்டதும்
அழகான
சிலையானேன்..!
முள்ளாய் இருந்தவன்
மலராய் மாறினேன்...!
முகாரி பாடித்திரிந்தவன்
இப்போது...
மோகன இராகம்
பாடத்தொடங்கிவிட்டேன்...!
இடைவிடாமல்
அடைமழைபொழிய
நான் நனைந்துகொண்டே
நடந்து செல்கிறேன்
திடீரென்று
என் உடல் வியற்கிறது...!
என்ன வியப்பு...???
அதோ.....
தூரத்தில்
குடையோடு நீ வருகிறாய்...!
நீ அமைதியாய்....
என்னைக் கடந்து செல்கிறாய்
ஆற்பரிக்கிறது மனசு...
ஒரு மல்லிகைத் தோட்டமே
கடந்துபோவதாய் எனக்குள்...!
முத்துவிற்கும் வியாபாரிகள்
உன் பின்னே
வந்துகொண்டே இருக்கிறார்கள்
அவர்கள் பாவம்...!
அவர்களை அலயவைக்காதே...!
ஒரு முறை சிரித்துவிடு
முத்துக்களை...
அள்ளிக்கொண்டு செல்லட்டும்...!
செண்பகப்©வில்
செதுக்கிய சிலையே...
செல்லும் போது ஏன்
திரும்பிப்பார்க்க மறுக்கிறாய்...?
உன் பின்னே
அழுதுகொண்டுவரும்
என் இதையத்தைக்கூட
கவனிக்காமல்.....???
காதல் என்றால்
கடவுள்போல என்கிறார்கள்
கடவுள் இருக்கிறானா
இல்லையா என்று
நான்
ஆராயப்போவதில்லை...!
உன்னிடம் என் காதல்
இருக்கிறதா
இல்லையா என்று
ஆராட்சி செய்துகொண்டிருக்கிறேன்...!
இப்போதெல்லாம் நான்
தூங்குவதில்லை
பாறைகள் எப்போதாவது
தூங்கியதுண்டா...?
கரையாத
கல்லால் செதுக்கிய
கல்நெஞ்சக்காரி....
கண்ணீரில் நனைந்து
ஈரமான இதையம்போல்
கனக்கும் என்
தலையணையைக் கேட்டுப்பார்...
என் காதல் சொல்லும்...!
அது ஒன்றும்
உன்னிதயம்போல்
இரக்கமல்லாததல்ல...!
(இன்னும் வரும்...)
த.சரீஷ்
26.10.2003 (பாரீஸ்)
|
|
|
| நில்லாமல் வா நிலாவே...! பகுதி-05 |
|
Posted by: sharish - 10-27-2003, 09:10 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'><b>நில்லாமல் வா
நிலாவே...!</b></span>
பகுதி-05
மதுவுக்கு மயங்கிப்போகும்
ஆண்கள் சிலபேர்தான்
ஆனால்
இந்த மாதுவுக்கு
மயங்குபவர்கள் பலர்..!
ஏன் இந்த மயக்கம்...?
இது எதனால் உருவாகிறது..?
எங்கிருந்து ஆரம்பமாகிறது..?
இந்தப் பிரபஞ்சம்
எந்தப் புள்ளிகளால்
உருவாக்கப்பட்டு
எந்தக் கயிற்றினால்
பின்னப்பட்டுள்ளதோ
அதனாலேயே
ஆணுக்கும் பெண்ணுக்கும்
இடையிலான
இந்த அ©ர்வமான
அற்புத உறவும்
பின்னப்பட்டுள்ளது..!!!
ஆண்மை...
பெண்மைக்கு இடையிலான
உறவு மட்டும் அல்ல
உண்மையில்...
இந்தப் ©மியில்
நான் காணும் காட்சிகள்
எல்லாவற்றுக்கும்
இன்னும் ஏதோ ஒன்றோடு...
தீராத மோகம்
ஏதோ ஒன்றோடு
முடிவில்லாத மயக்கம்....!
விண்ணோடு காதல்
முகிலுக்கு..!
முகிலோடு பாசம்
நிலவிற்கு...!
நிலவோடு நேசம்
மண்ணிற்கு..!
மண்ணோடு ஈர்ப்பு
மழைக்கு..!
மழையோடு மோகம்
மலருக்கு...!
மலரோடு மயக்கம்
பெண்ணுக்கு..!
பெண்ணோடு காதல்
ஆணுக்கு...!!!
காதல்
அன்பு
தேடல்
ஈர்ப்பு
மோகம்
மயக்கம்
என்பவற்றால் உருவாக்கப்பட்ட
கண்ணுக்குத்தெரியாத
மின்சாரக் கயிறுகள்
எமக்கே தெரியாமல்
எம்மைச் சுற்றியுள்ளன
அதைத்தேடி...
நாங்கள் ஏங்குகிறோம்..!
அதுவும்...
எமக்கே தெரியாமலே....!!!
அவளிடம் இருந்த
ஏதோ ஒன்று
என்னை அவள்பால்
ஈர்த்துள்ளது...
எனக்குத் தெரியாமலே...!
எனக்குள் இருந்து
ஏதோ ஒன்று
அவளை
ஒவ்வொரு வினாடியும்
தேடிக்கொண்டே
இருக்கிறது
அதுவும்
எனக்குத் தெரியாமலே...!
அதுதான் என்னவென
அறிந்துகொள்ளும் ஆவலுடன்
இதயத்திடம்....
விசாரித்துக்கொண்டிருக்க
எதிர்பாராத விதமாக வந்து
"கலோ" சொல்லிக் கைகுலுக்கியதால்
ஆனந்தம் தாங்கமுடியவில்லை
இதுவும் ஒருவகை
மது மயக்கம்போல்...!
ஒரு.....
மாது மயக்கம்...!!!
சின்னக் குயில்போல்
ஆங்கிலத்தில் கூவியவள்
கண்களைச் சிமிட்டிக்கொண்டு
நெற்றிப் புருவத்தை
மெல்ல உயர்த்திக்கொண்டு
முகத்தில் எதையோ
அறிந்துகொள்ளும்
ஆவலோடு...
இப்போது
தாய்தொழியில் தொடர்ந்தாள்...!
""நீங்கள் தமிழா...?""
அதுவரைக்கும்
ஏதோ....
தூக்கத்தில் இருந்தபோது
யாரோ வந்து அவசரமாய்த்
தட்டியொழுப்ப
தடக்குப்பட்டு எழும்புபவன்போல்
நானும்....
மாதுமயக்கத்தில் இருந்து
சுய நினைவுக்கு வந்தபின்....
வாயே திறக்காமல்
பதில்சொன்னேன்
""ம்""" என்று...!
சொல்லிக்கொண்டே
தலையை அசைத்துக்கொண்டு...
அவளை நோக்கி
மெல்லிய சிரிப்புடன்...
காற்சட்டைப் பைகளில்
என் குளிர்ந்த கைகளை
புதைத்துக்கொண்டு
அவள் கண்களை நோக்கி
ஒரு சின்னப் பார்வை
பார்த்துக்கொண்டே
தென்இந்திய...
சினிமா கதானாயகன்போல்...
மெதுவாக வழிந்தேன்...!
மதனநிலா
மீண்டும் மழைலைத்தமிழில்
பொழிந்தது...
""உங்களை எங்கேயோ
பார்த்தமாதிரி இருக்கே...??""
அவளைக் கண்டதாலும்
அவளோடு கைகுலுக்கியதாலும்
அவளோடு பேசியதாலும்
அவசர அவசரமாக
எதையோ தேடி...
ஓடுபவன்போல்
பதட்டத்தோடு
துடித்துக்கொண்டிருந்த
இன் இதையம்
தீடீரென்று நின்றது....!
சிறிது யோசித்தது...!
எங்கேயோ கண்டேன்
என்கிறாள்...
இவளும் என்னைப்போல்
கனவில் கண்டிருப்பாளோ...????
(நிலவு வரும்...)
த.சரீஷ்
26.10.2003 (பாரீஸ்)
|
|
|
|