![]() |
|
வசியக்காரி... பகுதி-2 - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வசியக்காரி... பகுதி-2 (/showthread.php?tid=7917) |
வசியக்காரி... பகுதி-2 - sharish - 10-27-2003 <b><span style='font-size:25pt;line-height:100%'>வசியக்காரி....</b></span> பகுதி-2 தீர்ப்பு எழுதியதும் பேனாவை... உடைத்துவிடுகிறார்களாம்...! ""நான் உன்னைக் காதலிக்கிறேன்"" தீர்மானித்து எழுதிவிட்டு பேனாவை உடைக்கவில்லை தொடர்ந்து.... எழுதிக்கொண்டிருக்கிறேன்..! நீ என்னவள் எனக்கென்றே பிறந்தவள் இனி.... நான் உன் அழகை வர்ணிக்கப்போவதில்லை அது..... என் கவிதைகளை நானே புகழ்பதுபோல் ஆகிவிடும்...! ஒவ்வொரு கவிஞனும் முதலில் ஒரு... காதலனாகத்தான் இருக்கின்றான்...! ஒவ்வொரு காதலியும் காதலனை... கவிஞனாக்கத்தான் பிறக்கின்றாள்...! நானாக எழுதவில்லை என் கவிதைகளை...! நீயேதான் எனக்குள் இருந்து என் எண்ணத்தையும் எழுதுகோலையும் இயக்குகிறாய்..! ஆகவே.... அக்கினியின் மகளே எழுதிய என்... கவிதைக் தொகுப்புக்கு வந்து முன்னுரை எழுது...! கல்லாய் இருந்த அகலிகைக்கு இராமனின் பாதம்பட்டதும் உயிர் வந்ததாம்...! காதல் கயல்விழி... நீயும் கடவுளா...? கல்லாய் இருந்த நானும் உன் பார்வை பட்டதும் அழகான சிலையானேன்..! முள்ளாய் இருந்தவன் மலராய் மாறினேன்...! முகாரி பாடித்திரிந்தவன் இப்போது... மோகன இராகம் பாடத்தொடங்கிவிட்டேன்...! இடைவிடாமல் அடைமழைபொழிய நான் நனைந்துகொண்டே நடந்து செல்கிறேன் திடீரென்று என் உடல் வியற்கிறது...! என்ன வியப்பு...??? அதோ..... தூரத்தில் குடையோடு நீ வருகிறாய்...! நீ அமைதியாய்.... என்னைக் கடந்து செல்கிறாய் ஆற்பரிக்கிறது மனசு... ஒரு மல்லிகைத் தோட்டமே கடந்துபோவதாய் எனக்குள்...! முத்துவிற்கும் வியாபாரிகள் உன் பின்னே வந்துகொண்டே இருக்கிறார்கள் அவர்கள் பாவம்...! அவர்களை அலயவைக்காதே...! ஒரு முறை சிரித்துவிடு முத்துக்களை... அள்ளிக்கொண்டு செல்லட்டும்...! செண்பகப்©வில் செதுக்கிய சிலையே... செல்லும் போது ஏன் திரும்பிப்பார்க்க மறுக்கிறாய்...? உன் பின்னே அழுதுகொண்டுவரும் என் இதையத்தைக்கூட கவனிக்காமல்.....??? காதல் என்றால் கடவுள்போல என்கிறார்கள் கடவுள் இருக்கிறானா இல்லையா என்று நான் ஆராயப்போவதில்லை...! உன்னிடம் என் காதல் இருக்கிறதா இல்லையா என்று ஆராட்சி செய்துகொண்டிருக்கிறேன்...! இப்போதெல்லாம் நான் தூங்குவதில்லை பாறைகள் எப்போதாவது தூங்கியதுண்டா...? கரையாத கல்லால் செதுக்கிய கல்நெஞ்சக்காரி.... கண்ணீரில் நனைந்து ஈரமான இதையம்போல் கனக்கும் என் தலையணையைக் கேட்டுப்பார்... என் காதல் சொல்லும்...! அது ஒன்றும் உன்னிதயம்போல் இரக்கமல்லாததல்ல...! (இன்னும் வரும்...) த.சரீஷ் 26.10.2003 (பாரீஸ்) - Paranee - 10-27-2003 இது ஒன்றே போதும் இன்னமும் வசியம் செய்துகொள்ளுங்கள். Quote:காதல் என்றால் - nalayiny - 10-27-2003 அழகிய கற்பனை வளச்செதுக்கல்களை காணவைக்கிறது இக் கவிதை. கல்லாய் இருந்த நானும் உன் பார்வை பட்டதும் அழகான சிலையானேன்..! முள்ளாய் இருந்தவன் மலராய் மாறினேன்...! முகாரி பாடித்திரிந்தவன் இப்போது... மோகன இராகம் பாடத்தொடங்கிவிட்டேன்...! முத்துவிற்கும் வியாபாரிகள் உன் பின்னே வந்துகொண்டே இருக்கிறார்கள் அவர்கள் பாவம்...! அவர்களை அலயவைக்காதே...! ஒரு முறை சிரித்துவிடு முத்துக்களை... அள்ளிக்கொண்டு செல்லட்டும்...! ஒவ்வொரு கவிஞனும் முதலில் ஒரு... காதலனாகத்தான் இருக்கின்றான்...! ஒவ்வொரு காதலியும் காதலனை... கவிஞனாக்கத்தான் பிறக்கின்றாள் இதில் பிறப்பிக்கிறாள் என வரவேண்டும் என நினைக்கிறேன். - aathipan - 10-27-2003 பாரிஸில் இருந்து ஒருகவிஞன் இத்தனை அழகாய் தமிழில்; கவிதை சொல்கிறானே.... கேட்க கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ்வாழும் யார்சொன்னது தமிழ் மெல்லச்;சாகும் என்று அன்புடன் ஆதி |