![]() |
|
புலிகளின் தீர்வுத்திட்டம். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: புலிகளின் தீர்வுத்திட்டம். (/showthread.php?tid=7911) |
புலிகளின் தீர்வுத்தி - yarl - 10-28-2003 புலிகளின் தீர்வுத்திட்டம் அக்டோபர் 27 2003 thatstamil.com இடைக்கால நிர்வாகத்தில் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கும் பிரதிநித்துவம்: புலிகள் கொழும்பு: வடகிழக்கில் அமையவுள்ள இடைக்கால நிர்வாகத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க விடுதலைப் புலிகள் இயக்கம் முன் வந்துள்ளது. இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இது முக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது. அதிகாரப் பகிர்வு குறித்த தங்களது புதிய திட்டத்தில் விடுதலைப் புலிகள் இதனைத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. புலிகளின் திட்டத்தில் இதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: வட கிழக்கில் 100 பேர் கொண்ட இடைக்கால நிர்வாகக் குழுவை அமைக்கலாம். அதில்இ வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து தலா 50 பேர் இடம்பெற வேண்டும் .அக்குழுவில் 25 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படவேண்டும். மக்கள் தொகை அடிப்படையில்இ அனைத்து இனத்தவருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். நிர்வாகக் குழுவுக்கு 20 பேர் கொண்ட காபினெட் அமைச்சரவை தலைமை வகிக்க வேண்டும். அதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து தலா 10 பேர் இடம் பெற வேண்டும். 6 ஆண்டுகளுக்குள் முழுமையானஇ நிரந்தரமான அதிகாரப் பகிர்வுக்கு வழி வகுக்கும் வகையில் புதிய அரசியல் சாசனத்தை இலங்கை அரசு உருவாக்க வேண்டும். அதுவரை ஆயுதங்களை நாங்கள் கைவிட மாட்டோம். எங்களது ராணுவப் பிரிவும் கலைக்கப்படாது. இடைக்கால ஆட்சியில் விடுதலைப் புலிகள்இ கடற்புலிகள் மற்றும் ராணுவம் ஆகியவை எவ்வாறு இயங்க வேண்டும் என்று தனியான விதிமுறைகளை வகுத்துக் கொண்டுஇ அதன்படி செயல்படலாம். இவ்வாறு புலிகள் தங்களது புதிய திட்டத்தில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. புலிகளின் கோரிக்கைகள் நியாயமானவையாக இருப்பதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புலிகளின் யோசனைகளை இலங்கை அரசின் தலைமை அமைதிப் பேச்சாளரும் அமைச்சருமான பெரிஸ் பாராட்டியுள்ளார். - Paranee - 10-28-2003 பீரிஸ் பாராட்டியுள்ளார் உண்மைதான். அருமையானதொரு திட்டம். இத்தனைநாள் போராட்டத்தின் வெற்றிரகசியம் என்றும் சொல்லலாம். ஆனாலும் அம்மாவின் பக்கம்தான் இன்னும் மௌனம். ஏன் ? வெள்ளிக்கிழமைக்குபின் புயல் வருமா ? புூகம்பமா ? பொறுத்திருந்து பார்ப்போம். - தணிக்கை - 10-28-2003 எதிர்வரும் ஒரு வருட காலத்திற்குள் யுத்தம் வரும் என்பது எனது கருத்து. - yarl - 10-28-2003 இதில் முக்கிய செய்தி பெண்களுக்கு 25 வீத ஒதுக்கீடு. யுத்தம் இப்போது நடக்கிறதுதானே..நீங்கள் என்ன பேச்சுவார்த்தை எனவா நினைத்தீர்கள்? இது இரத்தம் சிந்தாத யுத்தம்.ஆபத்து கூடிய யுத்தம். - Paranee - 10-28-2003 இதில் இன்னொரு விடயத்தையும் குறிப்பிடவேண்டும் என நினைக்கின்றேன். முஸ்லிம்களிற்கும் ஒரு வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது அல்லவா ? ஏனெனில் செய்தியில் கேட்டபோது அப்படித்தான் இருந்தது. Quote:இதில் முக்கிய செய்தி பெண்களுக்கு 25 வீத ஒதுக்கீடு - தணிக்கை - 10-28-2003 நம்பகரமாக தெரிகிறது யுத்தம் ஒன்று உருவாகும். - Paranee - 10-28-2003 விருப்பங்கள்தான் சிலவேளை வெளிப்படையாக வார்த்தைவடிவில் வந்துவீழும். என்னவோ ஏன் தணிக்கை யுத்தம் வரவேண்டுமா ? பல்லாயிரம் உயிர்கள் அழவேண்டுமா ? இன்னமும் பிணவாடை வீசவேண்டுமா ? அப்படி அந்த வாடையில்தான் உங்கள் விடியல் வேண்டுமெனில் தாராளமாக தொடங்கிக்கொள்ளலாம். ஆனால் புலிகள் தரப்பிலிருந்து யுத்தம் தற்போதைக்கு இல்லை என்றல்லவா அறிக்கை தருகின்றார்கள். - தணிக்கை - 10-28-2003 எனது கனிப்பீடு எனது மட்டுமல்ல பல முக்கயமான நோக்குனர்களுடன் கலந்தாலோசித்தோம் தமிழர்களை பல கோணத்தில் ஏமாற்ற நடவடிக்கை நடக்கிறது. எங்கள் தலைவர் என்றோ ஒருநாள் ஆயுதத்தை மீன்டும் தூக்கும் நிலை ஏற்படும். உங்களுக்கு தெரியுமா போர் நிறுத்த உடன்படிக்கை சட்டரீதியாக செல்லுபடியற்றதாக்க உயர் நீதிமன்றில் வழக்குப்போட்டு அது முடியும் தறுவாயில் இருக்கு. அந்த முடிவு வந்தால் அம்போகெதிதான் இவை எல்லாம். அதுமட்டுமோ இதுவரை பல புலிகள் கைது செய்யப்பட்டு இன்னும் விடுதலைசெய்யப்படாமல் இளுத்தடிக்கப்படுகிறது. ஒன்றுகள் பத்துகளாகி பத்துகள் நூறுகளாக மாறும் காலம் தூரத்தில் இல்லை போல தெரிகிறது. - Mathivathanan - 10-28-2003 பரணீ ஆயுததாரிக்கு ஆயுதத்தினால்தான் சாவு.. இங்கு என்ன கொடுமையென்றால்.. தமிழீழம் தமிழ்மண் என்ற பதங்களுக்குள் தமிழீழ மக்களே தமிழீழத்திலிருந்து விரட்டியடிக்கப்படுவதுதான்.. ஆரம்பக்களத்தில் சொல்லியதையே மீண்டும் சொல்கிறேன்.. யுத்தம் ஆரம்பித்தால் முடிவான முடிவுதான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- mohamed - 10-28-2003 தீர்வுத்திட்டம் ஒரு பதிய நம்பிக்கையை தந்தாலும் தற்போதைய அரசியல் நிலவரம் கொஞ்சம் நம்மை பயப்படவைக்கிறது. அண்மையில் வெளிவந்த சீலங்கா சம்பந்தப்பட்ட பொருளாதார முடிவுகள் சிறீலங்காவின் தற்போதைய அரசை மீண்டும் போருக்கு இட்டுச்செல்லுமா என்பது சந்தேகமே. அனால் பதவி இழுபறியில் தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்த நினைக்கும் ஆம்மையார் நிச்சயம் பேரை திரும்ப கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். முப்படை தளபதிகள் அரசிற்கும் அதிகாரத்திற்கும் (அம்மையாருக்கும்) இடையில் சிக்கி தவிக்கிறார். விடுதலைப்புலிகள் மீண்டும் ஒரு யுத்தத்தை தாமாக தொடங்கப்பேவதில்லை. அதில் அவர்கள் மிகவும் அக்கறையாக உள்ளார்கள். ஆனால் அதற்காகக எவ்வளவு து} ரம் தமது தரப்பு இளப்புகளை சகித்துக்கொள்வாரகள்? யுத்தம் வருகுதோ இல்லையோ அம்மையார் தன ஸ்ரண்டுகளை மட்டும் நிறுதத மாட்டார். ஆனால் யுத்தம் ஒன்று வெடித்தால் அதற்கான முழுப்பொறுப்பும் அம்மையார் தலையில்தான் போய் முடியும். இதை அவர் விரும்புவாரா? அரசியலி; இது அவருக்கு எவ்வளவு பாதிப்பை கொண்டுவரும் என்பதை அவர் அறியாதவர் அல்ல. எல்லாம் ஒரு அரசியல் ஸ்ரண்ட்தான் ஆனால் முடிவு விபரீதமாக மாறினால்????? - Kanani - 10-28-2003 தனி நாடுதான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- P.S.Seelan - 10-28-2003 தீர்வுத திட்டம் நல்ல பல அம்சங்களைக் கொண்டிருக்கின்றது. ஆனால் பேரினவாதிகள் ஒப்புக் கொள்வார்களா? அரச படைகள் ஆயத்த நிலையில் இருப்பதாக செய்தி எனினும் இனியும் பேரினத்திற்கு நிதி உதவிகள் கிடைக்குமா என்பது சந்தேகம். அப்படியோரு யுத்தம் வந்தால் நிச்சயமாய் அது தமிழீழத்திற்கான கடைசி யுத்தமாகத்தானிருக்கும். அத்தனை தமிழர்களும் கொதித்துப் போயுள்ளார்கள். இனியும் ஏமாற்றப்பட்டால் அவர்களின் உணர்வுகளை அணை போட்டுத் தடுக்க முடியாது. ஆச்சி யுத்தம் சரணம் கச்சாமி பாடிக் கொண்டு தான் திரிகின்றார். மறுபடியும் வாங்சிக் கட்டுவது திண்மம். அடுத்த வருட வரவு செலவில் சிறீலங்காவிற்கு துண்டு விழும் தொகை 32 கோடியைத் தாண்டிவிட்டது. இனி அரசு எதை விற்று போர் நடத்தப் போகின்றது. தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டது காட்டிக் கொடுத்தவர்களைத் தான். அன்புடன் சீலன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தணிக்கை - 10-28-2003 தீர்வுத்திட்டம் இன்னும் வெளியாகவில்லையே? - kuruvikal - 10-28-2003 Mathivathanan Wrote:பரணீ ஆயுததாரிக்கு ஆயுதத்தினால்தான் சாவு.. இங்கு என்ன கொடுமையென்றால்.. தமிழீழம் தமிழ்மண் என்ற பதங்களுக்குள் தமிழீழ மக்களே தமிழீழத்திலிருந்து விரட்டியடிக்கப்படுவதுதான்.. ஆரம்பக்களத்தில் சொல்லியதையே மீண்டும் சொல்கிறேன்.. யுத்தம் ஆரம்பித்தால் முடிவான முடிவுதான். உலகின் கொடும் பயங்கரவாதி ஆயுததாரி அமெரிகாவுக்கும் அதே கதியே...அது எப்ப பாருங்கோ நடக்கும்....! ஏன் பாருங்கோ ஈராக்கைவிட்டு விரட்டினது ஆப்கானிஸ்தானைவிட்டு விரட்டினது இப்படி பல நாடுகளில் இருந்தும் சனத்தை விரட்டி 'லோலோ' என்று அலையவிட்டு அவர்களின் தேசியத்தை வாழ்வுரிமைகளை நசுக்கிக் கொண்டு மற்றவர்களுக்கு அரசியல் வேதமோதுங்கோ....! தமிழ் மக்களின் மனங்களை வெற்றி கொண்டால்தான் யுத்தத்தில் புலிகளை வெல்லலாம் என்று புறப்பட்ட சிங்கள அம்மையாருக்கு உள்ள சின்னப்புத்தி கூட இந்தத்தாத்தாவுக்கு.....????????????! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- P.S.Seelan - 10-28-2003 சேறு புூசவென்றே முளைச்சலைவை செய்து அனுப்பப்பட்ட ஜென்மம். செஞ்சோற்றுக் கடன். திருந்தமாட்டார்கள். அன்புடன் சீலன் - தணிக்கை - 10-28-2003 அன்னை சீலன் இன்னும் அந்த தீர்வத்திட்டம் வெளியாகவில்லை என்பதை ஏற்றக்கொள்ளுங்கள் ஊடகங்கள் விடும் ஊகங்கள் ஒரு போதும் உன்மையாக முடியாது. விடுதலைப்புலிகளின் இரகசியத்தன்மை இலகுவில் ஊடகங்களால் கன்டறியக்கூடிய ஒன்றல்ல. ஆகவே யதார்த்தத்திற்கு சற்று முன்னுரிமை கொடுங்கள். - mohamed - 10-28-2003 தீர்வுத்திட்டம் பற்றிய சில தகவல்கள் சில பத்திரிகைகள் வெளியாகியபோதும் அதில் எவ்வளவு உண்மை என்று தெரியாத போதும் புலிகள் வைக்க இருக்கும் இடைக்கால தீர்வுத்திட்டம் நிச்சயம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனகை;கு நிரந்தர தீர்வை தரக் கூடிய ஒரு தீர்வாகவே இருக்கும். ஆனால் சில விடயங்களை நாம் முன்கூட்டியே எதிர்பார்கிறோம். சில பத்திரிகைகள் வெளியிடும் செய்திகள் கூட வேண்டமென்றே வெளி வரும். நாடி பிடித்துப்பார்க்க அது உதவும்! ஆனால் தீர்வு திட்டம் வருகுதோ இல்லையோ தெற்கில் அரசியல்வாதிகள் நல்ல ஆயத்தமாத்தான் இருக்கின். தீர்வுத்திட்டம் அதாவது இடைக்கால தீரவுத்திட்டம் வந்த பிறகு பாருங்கோவன்... - Mathivathanan - 10-28-2003 kuruvikal Wrote:உலகின் கொடும் பயங்கரவாதி ஆயுததாரி அமெரிகாவுக்கும் அதே கதியே...அது எப்ப பாருங்கோ நடக்கும்....! ஏன் பாருங்கோ ஈராக்கைவிட்டு விரட்டினது ஆப்கானிஸ்தானைவிட்டு விரட்டினது இப்படி பல நாடுகளில் இருந்தும் சனத்தை விரட்டி 'லோலோ' என்று அலையவிட்டு அவர்களின் தேசியத்தை வாழ்வுரிமைகளை நசுக்கிக் கொண்டு மற்றவர்களுக்கு அரசியல் வேதமோதுங்கோ....!ஐயா குருவிகாள் ஆப்கானிஸ்தானிலிருந்தும் ஈராக்கிலிருந்தும் யுத்தத்திற்கு முதல்தான் மக்கள் வெளியேறி மேலைநாடுகளில் தஞ்சம் கோரினார்களே தவிர யுத்தத்தின்போதோ அல்லது யுத்தத்தின் பின்னோ அல்ல.. ஈராக்கிய யுத்தத்தின்போது அகதிகள் வருவார்கள் எனப்போடப்பட்ட கூடாரங்கள் அத்தனையும் சவுூதிசரி.. சிரியா சரி.. யோர்டான் சரி எல்லாமே வெறுமனேதான் இருந்தன.. யுத்தம் தொல்வி கண்டபின் வெளியேறிய சதாமின் பெரிய புள்ளிகள்.. பணத்துடன் கைப்பற்றப்பட்டதும்.. தெரிந்ததே.. உலகின் கொடும் பயங்கரவாதி ஆயுததாரி அமெரிகாவுக்கும் அதே கதியே...அது எப்ப பாருங்கோ நடக்கும்....! உங்கள் இந்தக்கேள்விக்குச் சரியான விடை.. அவர்களது ஆயுதத்தை கோடி கோடியாகக்கொட்டி வாங்குகிறார்களே.. அதை வாங்குபவர்கள் எப்போது நிறுத்துகிறார்களோ அப்போது தானாகவே நிற்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- தணிக்கை - 10-28-2003 தம்பி சீலன் இன்று உனருங்கள் தமிழ் செல்வன் ஊடகங்களில் தமது இடைக்கால நிர்வாகசபை தொடர்பாக வெளியான கருத்துக்கள் ஊகங்கள் என தெரிவித்துள்ளார். ஆதாரம் பாடுமீன். - Kanakkayanaar - 10-29-2003 புலிகளின் இடைக்காலத் தீர்வுத்திட்டம் பற்றி ஓரளவுதான் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இத்திங்கள் இறுதியில் தான் முழுவிபரமும் தெரியவரும். ஊடகங்களில் வந்ததின் படி அவர்களின் இடைக்காலத் தீர்வுத்திட்டம் சிறந்ததே! இருப்பினும் இரணிலின் அரசு இதில் திருத்தங்கள் செய்யாமல் ஏற்குமா என்பது கேள்விக்குறியே! அதோடு சிங்கள பேரினவாளர்களும் சந்திரிகாவும் எத்தகைய இடர்களைக் கொணர்வரோ தெரியவில்லை. அடுத்து, எமது மக்கள் ஏதோ சிங்கள பேரினவாளர்களும் (யே.வி.பி, சிகள உறுமய, புத்த பிக்குகள் போன்றவர்களால் மட்டுமே அமைதிக்கு ஊறு வரும் என எண்ணுகின்றனர். ஆனால் இரணிலால் தான் பெரிய சிக்கல்கள் வரும் என நான் எண்ணுகிறேன். இதில் வியப்பதற்க்கு ஒன்றுமில்லை. அவரினதும் அவர் கீழ்ப் பணியாற்றும் அமைசர்களினதும் செயல்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன. இரணில் ஏன் சீன இழுவைப் படகுகளை வட கடற்பகுதியில் அனுமதித்து, திருமலை எண்ணைக்குதங்களை இந்தியாவுக்கு விட்டது, இந்திய கரி தூய்மைப்படுத்தும் நிறுவனந்தை தி.மலையில் கொணர்ந்தது, அண்மையில் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்ததம் போட்டது, இவாண்டைவிட அடுத்த ஆண்டு பாதுகாபுச்செலவை உயர்த்தியது எனப் பட்டியலிடலாம். |