Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எங்களில் சிலருக்கும் பொருந்துமா?
#1
அரபு நாடுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து விட்டு, தாயகம் திரும்பியுள்ள என் நண்பர் சொன்ன விவரங்களை அப்படியே தருகிறேன்...

அரபு நாடுகளில் உள்ள "ஷேக்'குகள் நேர்மையானவர்களாகவும், நாணயமானவர்களாகவும் தான் இருந்து வந்தனர். தொழிலாளர்களுக்கு தாராளமாக ஊதியம் வழங்கிக் கொண்டு தான் இருந்தனர்.

நம் நாட்டிலிருந்து அங்கு பிழைப்பு தேடிச் சென்று, அங்கு நிர்வாகப் பொறுப்பில் அமர்ந்த புல்லுருவிகள்

õன், ஷேக்குகளுக்கு தில்லுமுல்லு செய்யவும், ஊழல்

புரியவும், தொழிலாளர்கள் வயிற்றில் அடித்துச் சுரண்டவும் கற்றுக் கொடுத்தனர். சம்பளமே தராமல் வேலை வாங்கிக் கொண்டு விரட்டி விடவும் தயாராயினர்.

இவ்வாறு தொழிலாளர்களுக்கு சம்பளம் தராமல் ஏமாற்றும் கம்பெனியின் பெயரை கறுப்புப்புள்ளி பட்டியலில் நமது துõதரகம் சேர்த்துவிடும். கறுப்புப்புள்ளி பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்ட பிறகு அந்த கம்பெனிக்கு இந்தியாவிலிருந்து பணியாட்கள் எவரையும் அனுப்ப அரசாங்கம் (துõதரகம்) அனுமதி தராது.

நமது தில்லுமுல்லு கதாநாயகர்கள் அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர்.

ஒரு குறிப்பிட்ட ஷேக்கின் "அ' என்ற பெயருள்ள கம்பெனி கறுப்புப்புள்ளி பட்டியலில் இடம் பெற்றால், அந்த ஷேக் "ஆ' என்ற பெயரில் புது கம்பெனி துவக்கி, ஆட்களை இறக்குமதி செய்து ஊதியம் தராமல் தில்லுமுல்லு செய்யத் துவங்குவார். "ஆ' கம்பெனி கறுப்புப்புள்ளி பட்டியலில் இடம் பெற்றால், அடுத்து புதிதாக "இ' கம்பெனி.

நம் நாட்டிலிருந்து பிழைக்கச் சென்ற ஊழல் பெருச்சாளிகள் கற்றுக் கொடுத்த கலையில் இப்போது "ஷேக்'குகள் ரொம்பவே தேறி படு புத்திசாலிகளாகி விட்டனர்; தொழிலாளர்கள் தான் சிக்கலில்.

நன்றி: தினமலர்
[i][b]
!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)