![]() |
|
நிழல் யுத்தம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51) +--- Thread: நிழல் யுத்தம் (/showthread.php?tid=7914) Pages:
1
2
|
நிழல் யுத்தம் - Ilango - 10-27-2003 <b>[shadow=gray:9ac9e73a9d]நிழல் யுத்தம் [/shadow:9ac9e73a9d]</b> http://www.suratha.com/shadow_fight.asf வரும் 31ம் திகதி வரை மட்டும் காட்சி இடம்பெறும் - yarl - 10-27-2003 31ம் திகதிக்குப் பிறகு வேறு திரையரங்கில் ஓடுமா?<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->சரி விடுங்கள் . படம் பார்த்தேன் .அஜீவனின் காமிராவை விட அஜீவன் தேர்ந்தெடுக்கும் கதையின் கருவும கதை நகர்த்திச்செல்லும் முறையும் அஜீவனின் ஆளுமையை சொல்லி நிற்கின்றன.அதுவும் முதலில ; காட்டப்படும் தொழிற்சாலை விபரணம் படத்திற்கு மிக வலுவுhட்டும் ஒரு காட்சி.நடிக நடிகையர்கள் இயற்கையாக இயங்குகிறார்கள். அடுத்த படம் எப்போது? - Paranee - 10-28-2003 நன்றி நன்றி புதியதோர் அத்தியாயத்தை நோக்கி புலம்பெயர் தமிழர்கள் முன்னேறிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு திரு.அஜீவன் ஓர் முன்னுதாரணம். வாழ்த்துக்கள் இன்னமும் எதிர்பார்க்கின்றேன். நெருப்பில்லாமல் புகைவதில்லை. உங்களிற்குள்ளே இன்னமும் இருக்கின்றது. வெறும்புகையை மட்டும் எமக்கு காட்டவேண்டாம். உங்கள் உள் எரியும் அந்த தீச்சுவாலையை வெளிக்காட்டுங்கள். தமிழனின் அரிய படைப்புகளை கண்டு எள்ளி நகையாடியோர் கூனிக்குறுகட்டும். அது சரி யாழ் அண்ணா ரிக்கட் எவ்வளவு என்று சொல்லமாட்டன் என்கின்றார்கள். என்ன பிறகு ஓரேயடியாக வேண்டும் எண்ணமோ ? பிறகு சண்டைக்கு வாறேல்லை. - AJeevan - 10-28-2003 நன்றிகள் யாழ், பரணி, கடின உழைப்போடு ஓசியிலும் பார்க்க விரும்பாதவர்கள் இருக்கிறார்கள்.சிலர் பார்த்தாலும் ஓரிரு வார்த்தை எழுதி பாராட்டலாமே என்ற மனசு கூட இல்லாதவர்கள். இவர்கள் பேச்சில்,எழுத்தில் தமிழ் மற்றும் எமது கலாச்சார விழுமியங்களை வளர்ப்பவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள். இவர்களைப் பற்றி எழுதுவதால் நான் திமிர் பிடித்தவன் என்று நினைக்கலாம்.பரவாயில்லை, என்னால் சொல்ல முடியாவிட்டால் எவராலும் இதைச் சொல்ல முடியாது. நல்ல கலைஞர்கள் எம்முள் இருக்கிறார்கள். அவர்கள் வளர்வதற்கு எண்ணியவர்களை விட அவர்களை வளரவிடாமல் தடுப்பதற்கு எண்ணுவோர் அதிகம்.இந்நிலை மாறும் வரை எமது படைப்புகள் வெற்றி பெறவோ,தொடரவோ மாட்டாது. இங்கே முன்னணி வகிப்பபோர் கலைஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும்.......................இப்படி முக்கியமானவர்களாகவும் இருப்பதுதான் வேதனைக்குரியது. எச்சில் போர்வைக்கு வாழ்த்து சொன்ன-சொல்லாத அனைத்து உள்ளங்களுக்கும் அதில் பங்கு கொண்ட அனைவர் சார்பிலும் நன்றிகள்................ நிழல்யுத்தம் பிரான்சில் நடைபெற்ற கலைபண்பாட்டுக் கழக குறும்பட போட்டியில் அனைத்து தரத்திலும் சிறந்த குறும்படமாக 1998ல் தேர்வு செய்யப்பட்டது. 2000ம் ஆண்டில் நிழல்யுத்தம் சுவிசில் நடைபெற்ற SWISS FILM FESTIVAL லில், 1.சிறந்த குறும்படம் 2.சிறந்த ஓளிப்பதிவு 3.சிறந்த தொகுப்பு 4.சிறந்த இயக்கம் 5.பார்வையாளர் விருது ஆகிய 5 விருதுகளை பெற்றது. <img src='http://www.yarl.com/forum/files/aj.camera..jpg' border='0' alt='user posted image'> 2001ம் ஆண்டு Central Swiss Film Festival லில் சிறந்த குறும்படத்துக்கான Diploma சான்றிதழைப் பெற்றதுடன் Swiss மக்களிடம் என்னை இனம் காட்டியது. எமது குறிக்கோள் ஒருநாள் வென்றே தீரும். அது புலம் பெயர் படைப்பொன்று சர்வதேச விழிகளை கொள்ளை கொள்ளும் நாள். அதுவும் ஓர் விதத்தில் நிழல்யுத்தம்தான். <img src='http://www.ajeevan.com/images/award.gif' border='0' alt='user posted image'> அன்புடன், அஜீவன் - தணிக்கை - 10-28-2003 நன்கள் ஜீவன் எனக்கும் படத்திற்கும் சினிமாக்கும் வெகு தூரம் மன்னிக்க வேனும் ஆனால் நானும் பாத்தேன் நன்றாக இருந்தது மனதை உலுப்பியது ஒரு கணம். நன்றிகள் தொடருங்கள் தங்களின் குரல் வானலையில் கேட்டேன் நன்றிகள். - AJeevan - 10-28-2003 தணிக்கை Wrote:நன்கள் ஜீவன் எனக்கும் படத்திற்கும் சினிமாக்கும் வெகு தூரம் மன்னிக்க வேனும் ஆனால் நானும் பாத்தேன் நன்றாக இருந்தது மனதை உலுப்பியது ஒரு கணம். <img src='http://geethavani.homestead.com/files/siva2.jpg' border='0' alt='user posted image'> சிவாந்தியை வாழ்த்துவதற்குரிய இலக்கம் 00442087950040. சிவாந்தியின் சாதனைக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக வானலைக்கு சென்றேன்.யாழ் இணையத்தில் அவரது சாதனை பற்றி பலர் எழுதியிருப்பதும், வாழ்த்தியிருப்பதும் குறித்து மகிழ்வாக குறிப்பிட்டார்.நாம் அவரது சாதனை வெற்றி பெற வாழ்த்துவது எமது கடமையாக வேண்டும். குறிப்பாக பக்கத்திலிருப்போர் கண்டு கொள்ளாமலிருப்பது வேதனைதான். லண்டன் செல்லும் போது ஊடகங்களுக்கு சென்று கலையுறவுகளை சந்திப்பது எனது வழக்கம்.அங்கும் என் நண்பர்கள் இருக்கிறார்கள். நன்றி தணிக்கை............. - Kanani - 10-28-2003 இப்பதான் பார்க்க நேரம் கிடைச்சுது.... நாய்வாலை நிமிர்த்தவா முடியும்..என்று நிமிர்த்திறமாதிரி காட்டியிருக்கிறியள்....பெண்களின் மனநிலையை நன்றாகப் புரிந்து சொல்லியிருக்கிறியள்...இந்தப் படத்தைப் பெண்கள் பார்த்தவைதானே??....ஒன்றுமில்லை பார்த்தவையோ என்று சின்ன டவுட் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அதுதான் கேட்டனான்....
- yarl - 10-28-2003 AJeevan Wrote:கடின உழைப்போடு ஓசியிலும் பார்க்க விரும்பாதவர்கள் இருக்கிறார்கள்.சிலர் பார்த்தாலும் ஓரிரு வார்த்தை எழுதி பாராட்டலாமே என்ற மனசு கூட இல்லாதவர்கள். எனது அனுபவத்தில் ஈழத்தமிழர்கள் பாராட்டுவது என்பதில் சற்று கஞ்சத்தனமுள்ளவர்கள். பிழை பிடித்து விவாதிப்பவர்களில் வள்ளல்கள்.விதிவிலக்கு நீங்கள் தமிழகத்தவராகவிருந்தால்... ஒருவர் ஒரு நிகழ்வை பார்த்தும் அது பற்றி எழுதமுடியாமைக்கு பல காரணமிருக்கலாம். ஆனால் எங்கோ எப்போதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர் முhலம் உங்களுக்கான விமர்சனம் ஒரு நண்பருககோ எதிரிககோ வெளியேறும்.இது நான் கண்ட அனுபவம். அதே போல் நண்பர்கள் என்னை ஊக்குவித்ததை விட நண்பர்களபோலிருந்து ஊக்குவித்த எதிரிகளே எனக்கு அதிகம்.அதற்காக அவர்களது படைப்பையோ ஆக்கத்தையோ திறமையையோ நான் பாராட்ட மறுப்பதில்லை. வேறெருவிடயம். ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். இந்தியாவில் பல படப்பிடிப்புகளில் பலசமயம் படப்பிடிப்புக்கே சம்பந்தமில்லாது பல நடிகர்கள நின்றுகொண்டிருப்பார்கள்.அது பற்றி விசாரித்தபோது சொன்னார்கள். தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் கண்ணில் படாவிட்டால் இவர்கள் மறக்கப்பட்டுவிடுவார்கள்.எனவே தமது இருப்பை ஞாபகப்படுத்தி இப்படிகாண்பித்துக்கொள்கிறார்கள் என்றார் ஒரு இயக்குனர். சிந்தித்துப்பார்த்ததில் அது எவ்வளவு உண்மை என தோன்றியது. எமது திறமையான கலைஞர்கள் எல்லாம் எங்கே??..இருப்பை உறுதிப்படுத்தாது மறநது மறைந்துவிட்டார்கள்...உடலளவில் மட்டும் உள்ளார்கள். உதாரணம் இங்கும் சோர்ந்திருந்திருந்தால் நாச்சிமார்கோயிலடி ராஜன் என்ற ஒரு வில்லிசைக்கலைஞன் கூட மறைக்கப்பட்டு மறைந்திருப்பான். எனவே யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் முடிந்தவரை களமாடிக்கொண்டேயிருப்போம். - Ilango - 10-28-2003 நிழல் யுத்தம் படம் இறக்குவதிலோ அல்லது பார்ப்பதிலோ சிரமம் இருப்பின் அறியத்தரவும். ஏனெனில் 100க்கு மேற்பட்டோர் படம் பார்ப்தற்காக சொடுக்கியுள்ளார்கள் ஆனால் மிககுறைந்த எண்ணிக்கையானோர் தான் பார்த்திருப்தாக தகவல் காட்டுகிறது எனவே பிரச்சினை இருப்பின் தயவு செய்து அறியத்தாருங்கள். உதவி செய்ய சித்தமாய் உள்ளோம். - veera - 10-28-2003 சுரதா அவர்கள் இன்னுமொரு தலைப்பில் எழுதியுள்ள றப்பர் ஸ்டாம்ப் தான் ஞாபகத்திற்கு வருகிறது.அருமையான உதாரணம். இவர்கள் திருந்தப்போவதில்லை. கலைஞர்கள் முயற்சியைக் கைவிட வேண்டாம். உங்கள் பயணத்தினைத் தொடருங்கள். கலைஞர்களுக்கு ஸ்டாம்ப் குத்தி அவர்களை ஒதுக்குது இந்த சமுதாயத்தில் ஒன்றும் புதிதல்ல.ஆனால் ஏன் இன்னும் தொடர்கிறார்கள் :?: :oops: - tamilmaravan - 10-28-2003 யாழ்/yarl Wrote:AJeevan Wrote:கடின உழைப்போடு ஓசியிலும் பார்க்க விரும்பாதவர்கள் இருக்கிறார்கள்.சிலர் பார்த்தாலும் ஓரிரு வார்த்தை எழுதி பாராட்டலாமே என்ற மனசு கூட இல்லாதவர்கள். இக்களத்தில் நல்ல விமர்சகர்கள் என என்காதுபட நான் அறிந்தவர்கள் சுரதாவும் சந்திரவதனா செல்வக்குமாரனுமாகத்தான் இருக்கிறார்கள். சரி தப்பு எதையுமே கண்ணியமான முறையில் முன்வைப்பதில் திறமை மிக்கவர்கள்: அந்த வகையில் அஐPவனுக்கு கிடைத்த இந்த விமர்சனங்கள் நிச்சயமாக இன்னும் பலதை எமக்காய் தருவதற்கு நல்லதொரு உந்து சக்தியைக்கொடுக்கும் என்பதே நனாறிந்த உண்மை. திறமை உடைய ஒருவனை யாருமே ஒன்றும் செய்து விடமுடியாது. விமர்சனங்கள் ஒரு படைப்பாளியை பண்படுத்தும். அந்த வகையில் இஐPவனுக்கு இந்த களத்தினூடாக கிடைத்த பலதரப்பட்டு விமர்சனங்களும் அடுத்த படைப்பிற்கான திட்டமிடலை தரும் என நினைக்கிறேன்: குறும்படதயாரிப்பில் எல்லாராலும் பேசப்படுபவர்களாக அஐPவன் குழு வர எமது வாழ்த்துக்கள். - AJeevan - 10-28-2003 எச்சில் போர்வை பற்றி................ shidinesh Wrote:good film ajeevan... நன்றி:கீதம் - Chandravathanaa - 10-28-2003 <b>ஏற்கெனவே இங்கேயே தரப் பட்டதுதான். ஆனாலும் குறும்படமே களத்துக்கு வந்ததால் மீண்டும் தருகிறேன். [b]அஜீவனின் நிழல்யுத்தம் குறும்படம் எனது பார்வையில்... சூரிய உதயத்தையோ, அல்லது அஸ்தமனத்தையோ காண முடியாமல் பல புலம் பெயர் தமிழர்களின் வாழ்வ தொழிற்சாலைகளுக்குள்ளும், உணவு விடுதிகளுக்குள்ளும் கரைந்து கொண்டிருப்பது மனதைப் பிசையும் உண்மை. நிழல்யுத்தம் குறும்படம் தொடங்கிய போது எந்த வித ரம்மியமான சூழ்நிலையும் இல்லாத இயந்திரங்களின் நடுவே வேலை செய்யும் எம்மவர் ஒருவரைப் பார்த்ததும் மெல்லிய சோகத்தனம் மனத்தில் தோன்றத்தான் செய்தது. ஆனால் எதிர்பார்த்த மாதிரி இல்லாமல் கதை சற்று வேறு கோணத்தில் திரும்பியது. ராதிகா வானொலியில் பாட்டைப் போட்டு விட்டுச் சமைக்கும் விதமும், கறியை கையில் ஊற்றி சுவை பார்க்கும் விதமும் மிகவும் யதார்த்தமாகவும், ராதிகாவின் முகம் ஏதோ ஒன்றை இழந்த அதிருப்தியான தன்மையைக் காட்டுவதாகவும் அமைந்திருந்தன. [b]குடும்பத்தில் வரும் குழப்பங்களுக்கு சிறு பொறியொன்றே போதும். இங்கு அது நண்பனின் வடிவில் பஞ்சாபியாக வந்திருந்தது. ஆனாலும் ஒரே ஒருநாள் வரும் பஞ்சாபி மட்டும் மனதை அந்தகாரத்துக்குள் தொலைத்து விட்டுக் குமுறி, கறியை எரிய விடுமளவுக்கு பாரதூரமானதாக இருக்காது. அந்த ஒரு சம்பவம் ஏற்கெனவே அங்கு சந்தேகம் வெறும் பொறியாக இல்லாமல் தீப்பிடிக்கவே தொடங்கியிருப்பதற்கு ஆதாரமாக அமைந்திருந்தது.</b> புரிந்துணர்வு என்ற ஒன்றுக்கு வருவதற்கான புரிதல் நிலைக்கே அவகாசம் இல்லாமல், அவர்களையும் தாண்டிய குடும்பச் சூழ்நிலைகளால் பணம் என்ற ஒன்றைத் தேடி வேலை வேலை என்று ஆண் திரியும் போது, ராஜவாழ்க்கை, காதல் கணவன்... என்ற கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு வந்து தனிமையே துணையாகி, அதனால் ஏற்படும் விரக்தியில் பெண் வாடிக் கொண்டிருப்பது.. புலத்தில் இன்று நேற்றல்ல. இது தொடர்கதையாய்.. தொடர்கிறது. அதன் ஒரு பதிவுதான் நிழல்யுத்தம். [url=http://www.yarl.com/articles.php?articleId=279][b]தொடர்ச்சி - tamilmaravan - 10-28-2003 veera Wrote:சுரதா அவர்கள் இன்னுமொரு தலைப்பில் எழுதியுள்ள றப்பர் ஸ்டாம்ப் தான் ஞாபகத்திற்கு வருகிறது.அருமையான உதாரணம். உற்று அவதானித்தீர்களேயானால் றப்பர் ஸ்டாம்ப் குத்தப்பட்டவர்களுள் அதிகமானவர்கள் பிரகாசமாக இன்று உள்ளார்கள் என்பது புரியும். - veera - 10-28-2003 Quote:உற்று அவதானித்தீர்களேயானால் றப்பர் ஸ்டாம்ப் குத்தப்பட்டவர்களுள் அதிகமானவர்கள் பிரகாசமாக இன்று உள்ளார்கள் என்பது புரியும். எந்த வகையில்? - tamilmaravan - 10-28-2003 சக் சிக் இது இயலாமை. இயலாமைதான் எம்மினத்தை இன்னும் அல்லலுறவைத்துக்கொண்டிருக்கிறது. இது எமக்கும் எம் சந்ததிக்கும் கிடைத்த அரும்பெரும் சாபக்கேடு. இனி இதை விடுத்து நிழல் யுத்தம் பற்றி பேசுவோம். - AJeevan - 10-28-2003 Kanani Wrote:இப்பதான் பார்க்க நேரம் கிடைச்சுது....<span style='font-size:25pt;line-height:100%'>பார்த்தவை</span> ஆரம்பத்தில் இக்குறும்படம் 26 நிமிடங்கள் நீளமானது. இங்கே மூவரைச் சுற்றி மட்டுமே கதை நகர்கிறது. பழைய Long Version னில் 1.ஒரு வயதான பெண், கதாநாயகிக்கு " கவனம்,இவங்கள் செய்யிறதெல்லாம் செய்து போட்டு நல்லவங்க போல நடிப்பாங்க.............."என சுவிசுக்கு வந்த கதாநாயகிக்கு தவறான விதையொன்றை துாவுவது போன்ற காட்சியும்.............. 2.இளைஞர்கள் சேர்ந்து பியர் குடித்துக் கொண்டு கதாநாயகனுக்கு: " வரப் போறது ஐசுவரியாவா ,அர்ச்சனாவா............" "நாங்களும் இருக்கிறம்,எங்கட வீட்டில காசுதான் கேட்கிறார்களே தவிர, எங்களப்பத்தி யோசிக்க மாட்டாங்க..............." போன்ற இளைவர் மனநிலையை காட்டுவது போன்ற காட்சியகளும்.................... 3.உழைத்தவற்றை ஊருக்கு கொடுத்து விட்டு , வயதாகி , மொட்டைத் தலையுடன் வானத்தையே வெறித்தபடி பார்த்துக் கொண்டிருக்கும் மனநலம் குன்றிப் போன யதார்த்தமாக நாம் காணும் பலரில் ஓருவரையும் காட்டியிருந்தேன். (சந்திரவதனாவுக்கும் ,முல்லைக்கும் இச் சந்தேகங்கள் விமர்சனங்களில் எழுந்திருந்தன.) பின்னர் SWISS FILM FESTIVAL க்காக 13 நிமிடங்களாக edit செய்தேன். காரணம் ஏகப்பட்ட நடிகர்கள் காட்டப்பட்டால் மொழி விளங்காதவர்களுக்கு, எப்படி நாம் சீனரைப் பார்த்தால் எல்யோரும் ஒரேமாதிரி இருப்பது போல் தோன்றுகிறதோ அதே போல் ஆகி விடும் என்று கருதி நீளத்தைக் குறைத்தேன். முதல் முறை Festivalலில் படம் தேர்வான போது உலகத்தில் வாழும் அனைவருக்கும் பொதுவான பிரச்சனை நிழல்யுத்தம். ஆனால் பாத்திரங்கள் என்ன பேசுகிறது என்று புரிந்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்தை சினிமா இயக்குனர் Roand Agini (Film Festival President) மேடையில் சொன்னார். அத்தோடு நின்றுவிடாது Roand Agini என்ற அந்த இயக்குனர் என்னை அழைத்து , தனது கலையத்திலேயே German subtitleயை இலவசமாக செய்து அடுத்த festvalக்கு அனுப்பி வைத்தார். அன்புடன் AJeevan - Shan - 10-28-2003 அற்புதம்!அருமையான படைப்பு! அஜீவனின் படைப்புகள் சல பார்த்திருக்றேன்! அனால் இதை இன்னும் அதிகமானவர்கள் பாரக்கவேண்டும். நம்மவர் கலைகளை எடுக்கும் போது ஏற்பட்ட கஸ்டங்களை விட, அதைப் பாரக்க வைக்க அதைவிட உழைக்கவேண்டும். ஒரு சிறந்த கலைஞனின் படைப்பு ஒருபோதும் வீண் போகாது. அதற்கு அஜீவனின் படைப்புகள் காலம் வரும்போது நிச்சயம் பதில் சொல்லும். அஜீவன் உங்களிடம் இன்னமும் எதிர்பாரக்கிறோம். புலம் பெயர்ந்த நாட்டு மக்களின் வாழ்வியலை நன்கே வெளிக்கொணர்ந்த உங்களால் நிச்சயம் ஒரு முழு நீள படத்தை வெகுவிரைவில் தருவீர்கள் என நம்பிக்கையுடன் எதிர்பாரக்கிறோம். காரணம் 14 நிமிடம் யானைப்பசிக்கு சோளப்பொரி போட்டது போல் உள்ளது. ஆனால் அந்தச் சின்ன பொரியே இவ்வளவு சுவையாக இருந்தால் முழுத்தீனி எவ்வளவு சுவையாக இருக்கும். என்றும் உங்கள் வெற்றிக்கு - சண். - veera - 10-28-2003 புலம் பெயர் திரைப்படத்துறையில் ஒரு தயாரிப்பாளர்? இன்னுமொரு இயக்குனரைப் பார்த்து பாராட்டும் சம்பவத்தைக் காண நெகிழ்ந்து போகிறேன். கதையை விடுவோம்.அஜீவனின் திறமைகளைப் புரிந்து கொண்டிருக்கும் நீங்கள் அடுத்து எடுக்கப் போகும் படத்திற்காக இந்த இயக்குனரின் திறமைக்குரிய ஊதியத்தினை வழங்கி லண்டனுக்கு வரவழைத்து,உங்கள் படத்தினை இயக்கலாமே? அல்லது அஜீவனின் அடுத்த கதையைப் பிரசவிக்க நீங்கள் தயாரிப்பாளராக இணைந்து கொள்ளலாமே? <b>நீங்கள் தயாரிப்பாளர் என்று சொன்னதனால் தான் உங்களிடம் இந்த பணிவான வேண்டுகோளை ஒரு கலா ரசிகனாக முன் வைக்கிறேன்.</b> - AJeevan - 10-28-2003 Shan Wrote:அற்புதம்!அருமையான படைப்பு! அஜீவனின் படைப்புகள் சல பார்த்திருக்றேன்! அனால் இதை இன்னும் அதிகமானவர்கள் பாரக்கவேண்டும். நம்மவர் கலைகளை எடுக்கும் போது ஏற்பட்ட கஸ்டங்களை விட, அதைப் பாரக்க வைக்க அதைவிட உழைக்கவேண்டும். ஒரு சிறந்த கலைஞனின் படைப்பு ஒருபோதும் வீண் போகாது. அதற்கு அஜீவனின் படைப்புகள் காலம் வரும்போது நிச்சயம் பதில் சொல்லும். அஜீவன் உங்களிடம் இன்னமும் எதிர்பாரக்கிறோம். புலம் பெயர்ந்த நாட்டு மக்களின் வாழ்வியலை நன்கே வெளிக்கொணர்ந்த உங்களால் நிச்சயம் ஒரு முழு நீள படத்தை வெகுவிரைவில் தருவீர்கள் என நம்பிக்கையுடன் எதிர்பாரக்கிறோம். காரணம் 14 நிமிடம் யானைப்பசிக்கு சோளப்பொரி போட்டது போல் உள்ளது. ஆனால் அந்தச் சின்ன பொரியே இவ்வளவு சுவையாக இருந்தால் முழுத்தீனி எவ்வளவு சுவையாக இருக்கும். என்றும் உங்கள் வெற்றிக்கு - சண். நன்றி சண், கூடிய விரைவில் முழுத்தீனி தருவேன். தருவது கொஞ்சமாவது சுவையாக வேண்டும் என்பதால் என்னுள் ஒரு பய உணர்வு................... அன்புடன் அஜீவன் |