Kanani Wrote:இப்பதான் பார்க்க நேரம் கிடைச்சுது....
நாய்வாலை நிமிர்த்தவா முடியும்..என்று நிமிர்த்திறமாதிரி காட்டியிருக்கிறியள்....பெண்களின் மனநிலையை நன்றாகப் புரிந்து சொல்லியிருக்கிறியள்...இந்தப் படத்தைப் பெண்கள் பார்த்தவைதானே??....ஒன்றுமில்லை பார்த்தவையோ என்று சின்ன டவுட் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அதுதான் கேட்டனான்....
<span style='font-size:25pt;line-height:100%'>பார்த்தவை</span>
ஆரம்பத்தில் இக்குறும்படம் 26 நிமிடங்கள் நீளமானது.
இங்கே மூவரைச் சுற்றி மட்டுமே கதை நகர்கிறது.
பழைய Long Version னில்
1.ஒரு வயதான பெண்,
கதாநாயகிக்கு
" கவனம்,இவங்கள் செய்யிறதெல்லாம் செய்து போட்டு நல்லவங்க போல நடிப்பாங்க.............."என சுவிசுக்கு வந்த கதாநாயகிக்கு தவறான விதையொன்றை துாவுவது போன்ற காட்சியும்..............
2.இளைஞர்கள் சேர்ந்து பியர் குடித்துக் கொண்டு கதாநாயகனுக்கு:
" வரப் போறது ஐசுவரியாவா ,அர்ச்சனாவா............"
"நாங்களும் இருக்கிறம்,எங்கட வீட்டில காசுதான் கேட்கிறார்களே தவிர, எங்களப்பத்தி யோசிக்க மாட்டாங்க..............."
போன்ற இளைவர் மனநிலையை காட்டுவது போன்ற காட்சியகளும்....................
3.உழைத்தவற்றை ஊருக்கு கொடுத்து விட்டு , வயதாகி , மொட்டைத் தலையுடன் வானத்தையே வெறித்தபடி பார்த்துக் கொண்டிருக்கும் மனநலம் குன்றிப் போன யதார்த்தமாக நாம் காணும் பலரில் ஓருவரையும் காட்டியிருந்தேன்.
(சந்திரவதனாவுக்கும் ,முல்லைக்கும் இச் சந்தேகங்கள் விமர்சனங்களில் எழுந்திருந்தன.)
பின்னர் SWISS FILM FESTIVAL க்காக 13 நிமிடங்களாக edit செய்தேன்.
காரணம் ஏகப்பட்ட நடிகர்கள் காட்டப்பட்டால் மொழி விளங்காதவர்களுக்கு,
எப்படி நாம் சீனரைப் பார்த்தால் எல்யோரும் ஒரேமாதிரி இருப்பது போல் தோன்றுகிறதோ அதே போல் ஆகி விடும் என்று கருதி நீளத்தைக் குறைத்தேன்.
முதல் முறை Festivalலில் படம் தேர்வான போது உலகத்தில் வாழும் அனைவருக்கும் பொதுவான பிரச்சனை நிழல்யுத்தம். ஆனால் பாத்திரங்கள் என்ன பேசுகிறது என்று புரிந்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்தை சினிமா இயக்குனர் Roand Agini (Film Festival President) மேடையில் சொன்னார்.
அத்தோடு நின்றுவிடாது Roand Agini என்ற அந்த இயக்குனர் என்னை அழைத்து , தனது கலையத்திலேயே German subtitleயை இலவசமாக செய்து அடுத்த festvalக்கு அனுப்பி வைத்தார்.
அன்புடன்
AJeevan